மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.12.09

பண்பு இல்லாத சில பதிவர்கள்.


+++++++++++++++++++++++++++++++++++++++++
"எவன் தன் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ
அவனுக்கு வெப்பமும், குளிர்ச்சியும் ஒன்றுதான்.
இன்பமும், துன்பமும் ஒன்றுதான்.
பெருமையும், சிறுமையும் ஒன்றுதான்.
வறுமையும், செழுமையும் ஒன்றுதான்
நல்லதும் கெட்டதும் ஒன்றுதான்!."
- பரந்தாமன்.
------------------------------------------------------------

பண்பு இல்லாத சில பதிவர்கள்.

பண்பு என்பது அடிப்படைக் குணம்.

அது இல்லாதவர்களை என்ன செய்வது?

நாம் ஒன்றும் செய்ய முடியாது!

அதோடு அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை.அது நம் வேலையும் அல்ல! அவர்கள் திருந்தாமல் அப்படியே இருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. நாட்டிற்கு நல்லது. கலியுகத்திற்கு நல்லது!

அடிப்படைப் பண்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை இணையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அடிப்படைப் பண்பு இல்லாதவர்களிடம் நாம் என்ன சொன்னாலும் எடுபடாது.

வகுப்பறைக்கும், கழிப்பறைக்கும் என்ன வித்தியாசம் என்று அவர்களூக்குப் பாடம் நடத்த முடியுமா என்ன?

9.12.2009 ஆம் தேதிப் பதிவில் அவர்கள் 33 பின்னூட்டங்களை இட்டார்கள். அவற்றை நீக்கி விட்டு, இது உங்களுக்கான இடமல்ல என்று எச்சரித்தேன். நேற்றையப் பதிவில் அவர்கள் மீண்டும் வந்து பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு நீக்காமல் வைத்திருக்கிறேன்

பார்க்காதவர்கள் சென்று பாருங்கள்.

பதிவு ஒன்று 9.12.2009
பதிவு இரண்டு 14.12.2009
----------------------------------------------------
இதற்குத் தீர்வு என்ன?

கூகுள் ஆண்டவரிடம் சொல்லி வகுப்பறைக்குக் காவல் போட்டிருக்கிறேன். அதுதான் தீர்வு!
அவர்களை மறந்து விட்டு, நாம் நமது வேலையைப் பார்ப்போம்.
++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

34 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    இந்த நேரத்தில் ஔவையை மட்டுமே நினைவில் கொள்கிறேன்.

    நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
    நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
    தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
    குலத்து அளவே ஆகுமாம் குணம்

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. தாங்கள் சொல்வது உண்மை. திருந்தாத ஜென்மங்களை திருத்துவது நம் வேலையல்ல. அதீத பொறுமைசாலியான நானே நேற்று சற்று பொறுமை இழந்து விட்டேன். என்ன இருந்தாலும் நமது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா.

    ReplyDelete
  3. when we find cockroaches in our house what do we do, we use baygon and just go ahead, treat bloggers the same, Sir you are nearing 2000 Followers, this is all very common so- we should get going.

    ReplyDelete
  4. ஐயா,
    ஈமெயில் பாடம் என்னும் வரல்லை :)

    ReplyDelete
  5. True words பண்ப்பில்லாதவர்கள் உடன் சேர்தலும், கதைச்சாலும், அவர்களை நினைச்சாலும், it will be only be bad for us, they are not worth to think about!!!

    Thanks
    Thanuja

    ReplyDelete
  6. Good morning sir,

    I studied today article.

    Those guys are not having any thing.....

    God is there, he will take care of everything.

    Don’t think any comments like that.

    Don't answer the questions of silly peoples.

    Really I am telling you, one day they will know about their bad things.

    Then they will come back.

    We need your lessons.

    Continue yours beautiful journey…..

    ReplyDelete
  7. அய்யா இனிய காலை வணக்கம்,
    நவில்தொரும் நூல்நயம் போலும் பயில்தொரும் பண்பு உடையாளர் தொடர்பு

    என்றார் திருக்குறள் ஆசிரியர் அந்த பண்பு இல்லாத சிலர் நம் பண்பை ,கேலி ,கிண்டல் செயும் போது
    போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் வாழ்க அந்த வசவாளர் என்ற அண்ணாவின் மொழிகள் நம் நெஞ்ங்களில் நிழலாடுகின்றன ...

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  8. இந்த மாதிரி ஒழுக்கம் கெட்ட மனிதர்களை என்ன செய்வது??? ஐயாவின் கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.பசியில் மிகவும் வாடி ஒரு பெரும் பணக்காரனிடம் யாசகம் வேண்டிய ஒரு துறவியை தூற்றினான் அந்த பணக்காரன்.அப்போது துறவி அவனை வாழ்த்தினார் கடவுள் உனக்கு மேலும் மேலும் பொருள் சேர அருள் புரிய வேண்டும் என்று.சீடன் கேட்டான்.குருவே அவனை சபிக்காமல் ஆசிர்வதித்ததின் அர்த்தம் புரியவில்லை...அதற்கு அவர், இந்த நிலைக்கே இவன் இவ்வளவு பாவம் செய்கிறானே இன்னும் பொருள் சேர்ந்தால் என்னென்ன பாவம் செய்வான்.கடவுள் பார்த்துக் கொள்வார் என்றார்.

    இவர்களை அவர் பார்வைக்கு விட்டு விட்டு நம் பணி தொடர்வோம்.இவர்களுக்கும் கேது,சனி,ராகு ஆகியோரின் தசை,புக்தி வரும்.

    ReplyDelete
  9. ஐயா,

    மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  10. வலைபதிப்புகளின் தனித்தன்மை கருத்து சுதந்திரம். அதை அறியாமையால் தவறாக உபயோகித்து
    தேவையில்லாத இடத்தில் தங்களுக்கு பிடிககாதவற்றை படித்து கண்டபடி எழுதுவது பகுத்தறிவு அல்ல.இதுபோன்ற பதிவர்களால் வலைபதிப்புகள் ஒரு காலத்தில் சுஜாதா அவர்கள் சொன்னது போல் நான் படிப்பதில்லை என்று ஆகிவிடும்.மாடரேஷன் வேண்டும். வரவேற்கிறேன்.

    ReplyDelete
  11. Dear Sir,

    I read those unnecessary comments by them. I really felt bad about them. We don't have to bother about them. Last week I was not able to come to the class, Was travelling from US and busy with functions.

    Will read all your lessons which is left.

    yours
    Saravana
    (Came to Coimbatore)

    ReplyDelete
  12. நானும் மத நம்பிக்கையோ சோதிட நம்பிக்கையோ இல்லாதவனாக இருந்தாலும், வலையுலகில் இத்தகைய தரமற்ற செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    பதிவுகளில் ஆரோக்கியமான விவாதங்கள் என்றில்லாமல், காழ்ப்புணர்ச்சி மிக்க இத்தகைய பின்னூட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.

    // இறைவன்மீதும், ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், இங்கே வர வேண்டாம்.//
    எனது கருத்தை பதிவு செய்யவே வந்தேன். தவறாக இருத்தால் இந்த கருத்தை பிரசுரிக்க வேண்டாம்.

    நன்றி.

    ReplyDelete
  13. ஐயா,
    பழுத்த மரம் தான் கல்லடி படும்
    நான் எப்போதும் உங்களை வாசிப்பவன் மட்டுமே, ஆனால இப்படி நடந்த பின் உங்கள் துணை நிற்கவே இந்த பின்னூட்டம்.
    அவர்களை எந்த கிரகம் பிடித்து ஆட்டுகிறதோ தெரியவில்லை

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,

    சுட்டாலும் சங்கு வெண்மை தரும் .நம் வகுப்பறையும் அது போன்றதுதான். பண்பற்ற பதிவர்களைப் பற்றிக் கவலைப் படாமல்,தங்கள் சேவையை தொடர வேண்டுகிறோம்.மேலும் வகுப்பறை மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் ஒரு விஷயம்.ஆறு மாதங்களுக்கு முன்பே வகுப்பறையில் சேர்ந்த நான் கிரகம் பற்றிய பாடங்களில் (24.12.08) "செவ்வாய்" பலவீனத்தால் திருமணம் மற்றும் காரியத் தடையால் அவதிப்படும் மாணவர்களுக்கு பரிகாரமாக செவ்வாய் கிழமை விரத‌த்தை பரிந்துரை செய்திருப்பதைப் படித்தேன்.மேலும் தங்கள் உறவினர் ஒருவரின் அனுபவத்தையும் வெளியிட்டு இருந்தீர்கள்.பண்பற்ற பதிவர்களைப் போல்,பண்பற்ற பெண்ணால் அல்லல்களை அனுபவித்து விவாகரத்துப் பெற்றிருந்த எனக்குப் பண்பான குடும்பப் பெண்ணாகத் தேடி அலைந்து திருமணம் தள்ளிப் போயிருந்ததால் தாங்கள் குறிப்பிட்டபடியே ஒன்பது வாரம் செவ்வாய் கிழமை மேற்கொண்டதன் பலனாக,15 வது வாரமே தேடிய படியே எளிய குடும்பத்து வரன் அமைந்துள்ளது(ஐந்து பைசா கூட வரதட்சணை வாங்க மறுத்து விட்டோம்).வரன் பிடித்த பிறகு ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்,பெண்ணிற்கும் தோஷம் உள்ளது.இரண்டாம் தாரமாக்த்தான் வாழ்க்கைப் படும் அமைப்புதான் எனவே இரண்டும் அருமையாகப் பொருந்தும் எனவும் கூறி விட்டார். வ‌ரும் தை மாதத்தில் செவ்வாயின் நாயகன் செந்திலாண்டவர் சன்னிதானத்தில்(திருச்செந்தூரில்) திருமணம் நிச்சியிக்கப் பட்டுள்ளது.வாத்தியாருக்கும்,வகுப்பறைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என் போன்ற பலரின் வாழ்வில் கலங்கரை விளக்கமாக திகழும் வகுப்பறையை ஒரு சிலர் களங்கப்படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  15. Dear Sir!!!!!!!!!!!!!!

    Goodafternoon Sir!!!!!!!

    ReplyDelete
  16. நல்ல முடிவு வாத்தியாரே..!

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா,

    பண்பில்லாதவர்களை ஒதுக்குதலும், ஒதுங்குதலும் நற்பண்பே....

    நன்றி ஐயா...


    கதிரவன்

    ReplyDelete
  18. wishes radhakrishnan! so happy to see such a post.

    ayya , let us ignore them and continue in our path. ignorance is the best way to deal comments filled with profanities.

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்

    பின்னூட்டம் இட்டு வெகு நாட்களாகிவிட்டது. இந்த நேரத்தில் ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன்.

    ஜோதிடத்தை இழிவாக பேசுபவர்களுக்கு:-

    நேரம் நன்றாக இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். ஒருவரும் வந்து ஒன்றும் செய்யப்போவது இல்லை. நேரம் நன்றாக இருக்கும் போது பெரிய குற்றங்கள் செய்தவர்கள் கூட தப்பித்து கொள்வார்கள். ஆனால் அதே நேரம் (கண்டிப்பாக) கெட்டு போகும்போது சிறிய தவறுகள் கூட பெரிய தண்டனைக்கு ஆளாக்கிவிடும். ஆகவே நல்ல நேரம் கேட்ட நேரம் பார்க்காமல் எப்போதும் எந்த ஒரு தீய செயலும் செய்யாமல் அடுத்தவர் மனது புண்படாமல் வாழ பழக வேண்டும். அதுதான் வாழ்க்கை. இது தெரிந்தவர்கள் யாரும் யார் மனதையும் புண்படுத்த மாட்டார்கள்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. Mani said... ///பதில் வேண்டுமாளால் என்னை தொடர்புகொள்ளுங்கள் (0065‍82669257). ////
    Mani
    அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
    எனக்கு என் privacy ஐ இழக்க எக்காரணம் கொண்டும் விருப்பமில்லை.ஆனால் துணிந்து உங்கள் தொலைபேசி எண்ணை ப்ளொக்லே உலாவவிட்டமை ஆச்சரியம்தான்.ஆனால் சீண்டலை ஆரம்பிக்கும் மக்கள்தங்களின் அலுவலக முகவரி,தொலைபேசி எண் என தங்கள் சுய விவரங்களை அளித்துவிட்டு சீண்ட தொடங்குவார்களேயானால் அவர்களின் தைரியம் வெளிப்படும்.
    இந்த வகையில் தங்களுக்கு ஒரு hats off .

    ReplyDelete
  21. ஐயா,
    உங்களது கட்டுரைகளும்,ஜோதிடப்பாடங்களும் மிகவும் அருமை மனதிற்கு
    புத்துணர்ச்சியும் தருகின்றன.

    ReplyDelete
  22. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லத் தெரியாத வால்களுக்கும்,அந்த வால்களின் வால்களுக்கும் நாம் பதில் அளிப்பது வெட்டிவேலை.அவர்களை
    அலட்சியப்படுத்துவோம்.யானை கன கம்பீரமாகத் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தது. ஒரு தவளை தன் குட்டிக் கால்களை நீட்டி, "ஏய்! என்ன தைரியம் உன்க்கு! என்னையே தாண்டிக்கொண்டு செல்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்!" என்றதாம்.யானைக்குத் தன் மணி ஓசையில் தவளையின் குரல் கேட்கவே இல்லை.தன் பாட்டுக்கு போய்க்கொண்டு இருந்ததாம். "Let the barking dogs bark. Let the caravan make its onward journey"

    "அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்
    பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெல்லாம் உன்
    அருளிலே நாட்டம் இவை எனக்கு அருள்வாய்
    குறி குணம் இலாத தனிப்பெரும் பொருளே"

    ReplyDelete
  23. Dear Sir.
    My comments are not published here....


    Rathinavel.C

    ReplyDelete
  24. minorwall said...

    //அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
    எனக்கு என் privacy ஐ இழக்க எக்காரணம் கொண்டும் விருப்பமில்லை.ஆனால் துணிந்து உங்கள் தொலைபேசி எண்ணை ப்ளொக்லே உலாவவிட்டமை ஆச்சரியம்தான்.ஆனால் சீண்டலை ஆரம்பிக்கும் மக்கள்தங்களின் அலுவலக முகவரி,தொலைபேசி எண் என தங்கள் சுய விவரங்களை அளித்துவிட்டு சீண்ட தொடங்குவார்களேயானால் அவர்களின் தைரியம் வெளிப்படும்.
    இந்த வகையில் தங்களுக்கு ஒரு hats off .//

    ராஜன் மற்றும் வால்பையனின் தைரியத்தை சோதிப்பதற்காக என் தொலைபேசி எண்ணை கொடுக்கவில்லை. அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் நமக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்துகொள்ளலாம். நானும் இளமைக்காலங்களில் ஜோதிடத்தை நம்பியதில்லை. ஆனால் பல கெட்டவிசயங்கள் நடந்தது எல்லாம் கெட்ட நேரத்தில்தான் என்பதை நமது வாத்தியாரின் ஜோதிடப்பாடங்களை படித்தபின் உணர்ந்தேன். அதை இவர்கள் உடன் பகிர்ந்துகொள்ளலாமே! இவர்களுக்கு email கூட அனுப்பியுள்ளேன். இவர்களுடைய வயது எந்த நல்ல விசயங்களையும் ஏற்காது என்பது புரிகிறது. ஆனால் இவர்களுடைய திமிறுத்தனம் எனக்கு பிடக்கவில்லை. வாழ்க்கையில் அடிபட்டால் நம் வாத்தியார் காலில் வந்து விழும் நிலை கூட‌ ஏற்படும் யார் கண்டது.
    இன்று நாத்திகம் பேசும் பெரிய மனிதர்கள் (பெயரை குறிப்பிட விரும்பவில்லை) ஜோதிடரை அனுகுவதும், ஜோதிடர்கள் கூறிய கெட்ட நேரங்களை சமாளிக்க ஆன்மிகவாதிகளை நாடி இரவு வேளைகளில் தன் மனைவி மக்களை அனுப்பி, அறிவுரை கேட்பதும் பின்பு அவர்கள் அறிவுரைப்படி பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வதும். இவர்கள் அறியாதவை. இவர்கள் மட்டுமல்ல பல கோடிப்பேர் அறியாதவை. அவர்கள் பேச்சில் மயங்கி மக்கள் ஆன்மிகப்பாதையை விட்டு விலகி விட்டார்கள். அது மட்டும் காரணம் அல்ல. இன்று போலிகள் அதிகமாகிவிட்டதால் ஆன்மிகத்திற்கு மதிப்பு குறைந்துவிட்டது. மக்களுக்கும் பொறுமையில்லை. இன்று உண்மையான ஆன்மிகவாதிகளை அடையாலாம் காண்பது அறிது. உண்மையான ஆன்மிகவாதிகள், தன்னை சுலபமாக‌ வெளிக்காட்ட மாட்டார்கள். யாருக்கு அந்த பாக்கியம் உள்ளதோ அவர்களுக்கு தன்னை வெளிக்காட்டுவார்கள்.

    ஆன்மிகம் என்பது கடிணமான துறை. அதில் கரைகாண்பது எளிதல்ல. தியணத்தால் அடைய முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் எத்தனை பேர் தியாணம் பழக ஆசைப்படுகிறார்கள் (என்னையும் சேர்த்துத்தான்). உடனே பலன் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பொறுமைவேண்டும், விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம். ஆன்மிக கல்வி வகுப்பறையில் ஆரம்பிக்கப்படவெண்டும். கடவுளைப்பற்றிப் பேசினால் தான் பிரச்சணை வரும். தியாணமும் யோகமும் வகுப்பறையில் கற்பிக்கப்படலாம். இது போன்ற மாற்றங்கள் வந்தால், ராஜன் மற்றும் வால்பையன் போன்றவர்கள் உருவாக மாட்டார்கள். தங்கத்தை தெரு கடையில் போட்டு இலவசமாக கொடுதால் போகிறவன் போலி என்று நினைப்பான். அதற்காக தங்கம் போலியாகிவிடுமா. போலி என்று நினைத்தவனுக்கு நஷ்டம். தங்கத்தை இலவசமாக கொடுத்தவருக்கல்ல. மரம் வளர்க்கிற போது களைகளும் கூடவே வளரும். மரம் வளர்ந்த போது களைகள் அழிந்து மரத்திற்கு உரமாகிவிடும்.
    ஏதாவது அதிகமாக எழுதியிருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன் வாதியார் ஐயா. உங்கள் பணியை தொடருங்கள். இது ஒரு நல்ல சேவை.

    ReplyDelete
  25. விளக்கத்துக்கு நன்றி.மணி அவர்களே.
    எனக்குத் தனிமனிதரை விமர்சனம் செய்வது பிடிக்காதது.அதனை இவ்வளவு பகிரங்கமாக செய்ய அவர்களுக்குரிய காரணம் என்ன என்று தெரியவில்லை.அதுவும் நூற்றுக்கணக்கான பதிவுகளை கடந்து இந்த ஜோதிட வகுப்பறை என்னும் சகாப்தத்தை ஆசிரியர் அவர்கள் இலவசமாக என்று சேவை மனப்பான்மையில் தொடர்ந்து கொண்டு வரும்போது. இவர்களின் கமெண்டுகள் சிரிப்பை வரவழைத்து ரசிக்கும்படியாக இருந்தாலும் மனித முயற்சிக்கு என்று உள்ள limitation பற்றி இன்னும் அறியாமலே பேசுகிறார்களோ இந்த நவீன அறிவியல் விஞ்ஞானிகள் என்று எண்ணத் தோன்றுகிறது?
    உயிரை இறப்பில்லாமல் இந்த விஞ்ஞானத்தால் செய்ய முடியுமா?இல்லை வாழும்போதுதான் 10மீட்டர் அளவுக்கு மனிதன் எந்த செயற்கை எந்திர உதவியும் இன்றி உயரே பறக்க வைக்கத்தான் முடியுமா?
    இதுவரை மனிதன் தன் விஞ்ஞான வளர்ச்சியால் சாதித்தது அனைத்தும் இயற்கையை பார்த்து copy அடித்து செயற்கையாக செய்ததே ரோபோட்டுககள்..மற்றும் எல்லா கண்டுபிடிப்புகளுமே இயற்கையின் தன்மையை ஆய்ந்தறிந்து அதனை இயற்கையின் போக்கிலே ஒத்திசைந்து கண்டுபிடிக்கப்பட்டவைதான் இதுவரை நாம் உபயோகப்படுத்தும் அனைத்து மின்சாரமும் மின்சாதன பொருட்களும் ...
    நம்மை மீறிய இயற்கை சக்தி உண்டு என்பதை யோகாவிலே தன்னிலையிலிருந்து உயரே எழும்பி சாதனை படைக்கிறார்கள்.ஹிப்னோடிசம், மெஸ்மரிசம், டெலிபதி, ESP என்று எத்தினையோ அறிவியலால் விளக்கமுடியாத ஆச்சரியங்கள் இயற்கைலே நிரம்பிக் கிடக்கின்றன.(இவை மட்டும்தான் தன்னையறிதலின் வெளிப்பாடாகத் திகழ்பவை.)
    அந்த வகையிலே இந்த பழைய ஜோதிஷமும் அதன் நுணுக்கங்களும் கூட. கால வெள்ளத்தில் மறைந்து பட்டுப்போகாமல் அடுத்த டிஜிட்டல் தலைமுறைக்கு கொண்டுசெல்லும் பணியை ஏதோ ஒரு ஆர்வத்தில் தளராது செய்து வரும் ஆசிரியரை பாராட்டுவோம்.

    ReplyDelete
  26. வணக்கம்,
    இது போன்ற வலையுலக சைக்கோ களை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நமக்கு நல்லது !

    ReplyDelete
  27. இந்தப் பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மன்னிப்போம்
    மறப்போம்
    நமது வேலையைப் பார்ப்போம்!
    அன்புடன்,
    நட்புடன்,
    வாத்தியார்

    ReplyDelete
  28. இந்தப் பிணக்குகளை ஆரம்பத்திலிருந்து கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் சொல்வதற்கு ஒன்டே ஒன்று இருக்கிறது ஐயா! அதுவும், உங்களுடைய முத்தாய்ப்பாகக் கடைசியில் வந்திருக்கிற வார்த்தைகளில் இருந்து...

    எப்படி உலகத்தைத் திருத்துவதற்காக நாம் பிறக்கவில்லை என்று பதிவின் ஆரம்பத்தில் சொன்னீர்களோ, அதே மாதிரி, மன்னிக்கிற அளவுக்கும் நாம் பெரியவர்கள் அல்ல என்பதுமே என்னுடைய கருத்து.

    பின்னூட்டங்களை மட்டுறுத்துவதிலேயே, இந்தப் பிரச்சினையை வளர விடாமல் செய்திருக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருந்தது. அதுவும் போக, பதிலாக இந்த மாதிரித் தொடர் பின்னூட்டங்களை விரும்பவில்லைஎந்பதைத் தெளிவுபடுத்தியிருந்தாலே, அங்கேயே நின்றுபோயிருக்க வேண்டியதை இந்த அளவுக்கு வளர்த்திருக்க வேண்டாம் என்று எனக்குப் படுகிறது ஐயா!

    இது உங்களுடைய பதிவு! தவிர, புத்திமதி சொல்லக் கூடிய அளவுக்குப் பெரிய ஆளோ, அறிமுகமோ இல்லாதவன் என்றாலுமே, நல்லதென்று படுவதைச் சொல்ல வேண்டியிருக்கிறதே!

    ReplyDelete
  29. /////கிருஷ்ணமூர்த்தி said...
    இந்தப் பிணக்குகளை ஆரம்பத்திலிருந்து கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் சொல்வதற்கு ஒன்டே ஒன்று இருக்கிறது ஐயா! அதுவும், உங்களுடைய முத்தாய்ப்பாகக் கடைசியில் வந்திருக்கிற வார்த்தைகளில் இருந்து...
    எப்படி உலகத்தைத் திருத்துவதற்காக நாம் பிறக்கவில்லை என்று பதிவின் ஆரம்பத்தில் சொன்னீர்களோ, அதே மாதிரி, மன்னிக்கிற அளவுக்கும் நாம் பெரியவர்கள் அல்ல என்பதுமே என்னுடைய கருத்து.
    பின்னூட்டங்களை மட்டுறுத்துவதிலேயே, இந்தப் பிரச்சினையை வளர விடாமல் செய்திருக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருந்தது. அதுவும் போக, பதிலாக இந்த மாதிரித் தொடர் பின்னூட்டங்களை விரும்பவில்லைஎந்பதைத் தெளிவுபடுத்தியிருந்தாலே, அங்கேயே நின்றுபோயிருக்க வேண்டியதை இந்த அளவுக்கு வளர்த்திருக்க வேண்டாம் என்று எனக்குப் படுகிறது ஐயா!
    இது உங்களுடைய பதிவு! தவிர, புத்திமதி சொல்லக் கூடிய அளவுக்குப் பெரிய ஆளோ, அறிமுகமோ இல்லாதவன் என்றாலுமே, நல்லதென்று படுவதைச் சொல்ல வேண்டியிருக்கிறதே!////

    நல்லதை யார் வேண்டுமென்றாலும் சொல்லலாம். உங்களுக்கு நன்றி உரித்தாகுக!
    என்னுடைய பதிவிற்கு வருகிறவர்களுக்குப் பின்னூட்ட சுதந்திரம் கொடுத்திருந்தேன். அதை இப்போது நீக்கி விட்டேன். இனி பிணக்குகளுக்கு வழியில்லை!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com