வேதவாக்கு என்பது மதிக்கத் தகுந்த வாக்கு அல்லது சொல் என்று பொருள்படும்!
மனதை வருடிக்கொடுக்கும் தன்மை இந்த வேதவாக்குகளுக்கு உண்டு.
அது அதை உணர்பவர்களுக்கு மட்டுமே புரியும்!
சிலருக்கு அந்த உணர்வு இளம் வயதிலேயே வந்து விடும். பலருக்கு ரத்தம்
சுண்டி மருத்துவமனையில் படுக்கும்போதுதான் வரும்.
அது அவனவன் வாங்கி வந்த வரம்!
அல்லல்களில் இருந்து விடுபட்டு, மனம் அமைதிபெற எனக்குத் தெரிந்த
மூன்று வேதவாக்குகளைச் சொல்லியுள்ளேன்.
எதிர்க்கேள்வி கேட்பதற்கு வழியில்லை.
சரி என்று நினைப்பவர்கள் கடைப் பிடிக்கலாம்.
இல்லையென்று நினைப்பவர்கள் தங்கள் வழியில் போய்விடலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேதவாக்கு ஒன்று
காலையிளங் காற்று, பாடிவரும் பாட்டு எதிலும் அவன்குரலே!
- கவியரசர் கண்ணதாசன்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஒரு வரிக்குள் அடக்கிய
கவியரசரின் இந்த வைர வரிகள்தான் முதல் வேதவாக்கு. எல்லாம் இறைவன் சித்தமே
என்று இருங்கள். மனது கவலைப் படுவதை நிறுத்திவிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வேதவாக்கு இரண்டு
மண்னைப் படைத்தான்
மலையைப் படைத்தான்
விண்ணைப் படைத்தான்
ஒளியைப் படைத்தான்
காற்றைப் படைத்தான்
நீரைப் படைத்தான்
பலஜீவராசிகளையும் படைத்தான்
மனிதனையும் படைத்தான்
எல்லா ஜீவராசிகளும் படைத்தவனின்
விதிப்படியே இயங்குகின்றன.
மனிதன்மட்டும் மீறிநடக்க முயல்கின்றான்
ஆனால்
நடப்பதென்னவோ
ஆண்டவன் கட்டளைப்படிதான்!
- ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தின் டைட்டில் கார்டில் வரும்
அற்புதமான வரிகள் இவை.எழுதியவர் அத்திரைப்படத்தின்
கதை வசனகர்த்தா திரு. ஜாவர் சீதாராமன்.M.A. B.L.
ஆமாம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் க்ளைமாக்ஸில் வந்து,
“இந்த மண் கோட்டையை வைத்துக்கொண்டா கட்டபொம்மன் மனக்கோட்டை
கட்டுகிறான். இன்று மாலைக்குள் இதைத் தரைமட்டமாக்குகிறேன் பாருங்கள்”
என்று வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே
அதே சீதாராமன்தான் அவர்.
"Path of duty is the way to glory!" (கடமைதான் வெற்றிக்கு வழி) என்ற
பொன்மொழி மேஜை மீது காட்சியளிக்க, கதாநாயகன் சிவாஜி அதன் எதிரில்
அமர்ந்திருக்க அந்தப்படம் அற்புதமாகத் துவங்கும்!
வாழ்க்கையில் சிலவற்றை மறக்கமுடியாது என்பதற்கு அந்தப் படமும் ஒரு சான்று!
இன்னும் ஒன்று சொல்லட்டுமா? 1964ல் குமுதம் இதழில், ”உடல், பொருள் ஆனந்தி”
என்ற அற்புதமான தொடர்கதையை எழுதினாரே அதே ஜாவர் சீதாராமன்தான் அவர்!
ஆக ஜாவர் சீதாராமன் எழுதியபடி நடப்பது எல்லாம் ஆண்டவன் கட்டளைப்படி
என்று இருங்கள். மனது பரிதவிப்பதை விட்டுவிடும். அமைதியான மனநிலை கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேதவாக்கு மூன்று
உன் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய எதனிடத்தும் நீ எச்சரிக்கையாய் இரு!
(Beware of everything that takes away your freedom)
- சுவாமி விவேகானந்தா
சுதந்திரமாக இருக்கும் உணர்வுதான் மனதை எப்போதும் உற்சாகமாக
வைத்திருக்கும். ஆகவே இதுதான் மூன்றாவது வேதவாக்கு!.
--------------------------------------------------------------------------------
(இந்த மூன்றும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வேதவாக்குகளாகும்!)
படிக்கவேண்டிய மூன்று நூல்கள்
1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது
அதெல்லாம் என்ன என்கிறீர்களா?
Scroll down செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது - பகவத் கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருப்புகழ்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள்
தனக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்துத் திருப்புகழைப் பாடவைத்த வடிவேலனுடன் அருணகிரியார் இருக்கும் காட்சி
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
இன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !
ReplyDeleteஇன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !
ReplyDeleteஆஹா! வகுப்பறையிலும் பூஜை போட்டாச்சு!
ReplyDeleteஎல்லாருக்கும் பொரி கடலை, இனிப்பு ஜிப் பண்ணி மெயிலில் அனுப்பப்படும்!
வாத்தியார் ஐயாவோட பிரம்புக்கு பொட்டு வெச்சி பூஜைல வெச்சாச்சு! இன்னும் ஒரு வாரம் (மறு பூஜை போடும் வரை) கையில எடுக்க மாட்டார்!
ஆஹா! வகுப்பறையிலும் பூஜை போட்டாச்சு!
ReplyDeleteஎல்லாருக்கும் பொரி கடலை, இனிப்பு ஜிப் பண்ணி மெயிலில் அனுப்பப்படும்!
வாத்தியார் ஐயாவோட பிரம்புக்கு பொட்டு வெச்சி பூஜைல வெச்சாச்சு! இன்னும் ஒரு வாரம் (மறு பூஜை போடும் வரை) கையில எடுக்க மாட்டார்!
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் அய்யா..
ReplyDeleteஅருமையான பதிவு .
அனைவருக்கும் இனிய தசரா வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
ஜீ கே
பெங்களூரு..
...யாஐ ன்ளேள்உ
ReplyDeleteவழக்கமா விஜயதசமி அன்னிக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்!
ReplyDeleteஇன்னிக்கு நான் கொல்லிமலைச் சாரல் ஜே.கே அவர்களை அழைத்து வந்துள்ளேன்!
இன்று முதல் அவரும் மாணவராகச் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்!
தம்பி! முதல் பெஞ்சுக்குப் போயி சமர்த்தா கூடுதுறையார் பக்கம் உக்காந்துக்கப்பா!
பொறுப்பாப் பாடத்தைக் கவனிக்கனும் என்ன!
//...யாஐ ன்ளேள்உ//
ReplyDeleteஎங்கியொ வெளியில் சென்று விட்டுத் திரும்பி வந்திருப்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள் கோவி.கண்ணன்!
//////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDeleteஇன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !//////
படிக்கும்போது கிடைத்த அமைதி. கடைப்பிடித்தால் பல மடங்காகக் கிடைக்கும் பாஸ்கர்!
//////நாமக்கல் சிபி said...
ReplyDeleteஆஹா! வகுப்பறையிலும் பூஜை போட்டாச்சு!
எல்லாருக்கும் பொரி கடலை, இனிப்பு ஜிப் பண்ணி மெயிலில் அனுப்பப்படும்!
வாத்தியார் ஐயாவோட பிரம்புக்கு பொட்டு வெச்சி பூஜைல வெச்சாச்சு! இன்னும் ஒரு வாரம் (மறு பூஜை போடும் வரை) கையில் எடுக்க மாட்டார்!////
பூஜை போடுகிறேன் என்று சொல்லி பிரம்பை லவட்டிக்கொண்டு போகாமல் இருந்தால் சரி!
////////Geekay said...
ReplyDeleteவணக்கம் அய்யா..
அருமையான பதிவு .
அனைவருக்கும் இனிய தசரா வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
ஜீ கே
பெங்களூரு..////
நன்றி! உங்களுக்கும் தசரா வாழ்த்துக்கள் ஜீ.கே!
//////கோவி.கண்ணன் said...
ReplyDelete...யாஐ ன்ளேள்உ/////
!ரேபண்ந றின்ந
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteவழக்கமா விஜயதசமி அன்னிக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்!
இன்னிக்கு நான் கொல்லிமலைச் சாரல் ஜே.கே அவர்களை அழைத்து வந்துள்ளேன்!
இன்று முதல் அவரும் மாணவராகச் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்!
தம்பி! முதல் பெஞ்சுக்குப் போயி சமர்த்தா கூடுதுறையார் பக்கம் உக்காந்துக்கப்பா!
பொறுப்பாப் பாடத்தைக் கவனிக்கனும் என்ன!//////
ஜே.கே என்பது பெரிய பெயர் (J.K Papers & Boards, Raymonds)
அவராகவே சமர்த்தாகப் படிப்பார்.
நீங்கள் சேட்டைகளைச் சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் போதும்!
///////நாமக்கல் சிபி said...
ReplyDelete//...யாஐ ன்ளேள்உ//
எங்கியொ வெளியில் சென்று விட்டுத் திரும்பி வந்திருப்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள் கோவி.கண்ணன்!////
ஒகோ இதுதான் அழகாகச் சொல்வதா? இதுநாள்வரை தெரியாமல் போய்விட்டது!
//பூஜை போடுகிறேன் என்று சொல்லி பிரம்பை லவட்டிக்கொண்டு போகாமல் இருந்தால் சரி!
ReplyDelete//
அதை லவட்டிக் கொண்டு போய் நான் என்ன செய்யப் போகிறேன்!
அப்படிச் செய்ய முடிவெடுத்துவிட்டால் வகுப்பறையையே லவட்டிக் கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம் என்று தெரியாதா என்ன?
//பூஜை போடுகிறேன் என்று சொல்லி பிரம்பை லவட்டிக்கொண்டு போகாமல் இருந்தால் சரி!
ReplyDelete//
அதை லவட்டிக் கொண்டு போய் நான் என்ன செய்யப் போகிறேன்!
அப்படிச் செய்ய முடிவெடுத்துவிட்டால் வகுப்பறையையே லவட்டிக் கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம் என்று தெரியாதா என்ன?
///////நாமக்கல் சிபி said...
ReplyDelete//பூஜை போடுகிறேன் என்று சொல்லி பிரம்பை லவட்டிக்கொண்டு போகாமல் இருந்தால் சரி!
// அதை லவட்டிக் கொண்டு போய் நான் என்ன செய்யப் போகிறேன்!
அப்படிச் செய்ய முடிவெடுத்துவிட்டால் வகுப்பறையையே லவட்டிக் கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம் என்று தெரியாதா என்ன?/////
வலைப்பதிவின் டெம்ப்ளேட்டில் உள்ள இந்த வாசகங்களை என்றாவது படித்ததுண்டா?
பிரம்பில்லாமல், கண்டிப்பும் இல்லாமல், கனிவை மட்டும் மனதில் கொண்டு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை!
அனைவருக்கும் பூஜைத்திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteDear Sir,
ReplyDeleteSuper lesson...I really enjoyed reading and will keep trying to follow it up. Thanks.
Wish you all Happy Dasara!
-Shankar
ஆஹா... வகுப்பறை பூஜைக்கு நான் லேட்டோ....
ReplyDeleteகடலை பொரி, சுண்டல் எதாவது மிச்சம் இருக்கா?
இல்லை கடைசி பெஞ்சுக்காரர்களே எல்லாத்தையும் லவட்டிக்கொண்டு போய்விட்டார்களா?
மூன்றாம் வேத வாக்கு எனக்கு பிடித்து இருக்கிறது
ReplyDelete/////தங்ஸ் said...
ReplyDeleteஅனைவருக்கும் பூஜைத்திருநாள் வாழ்த்துக்கள்!////
உங்களுக்கும் பூஜா வாழ்த்துக்கள்!
/////hotcat said...
ReplyDeleteDear Sir,
Super lesson...I really enjoyed reading and will keep trying to follow it up. Thanks.
Wish you all Happy Dasara!
-Shankar////
நன்றி சங்கர்!
//////கூடுதுறை said...
ReplyDeleteஆஹா... வகுப்பறை பூஜைக்கு நான் லேட்டோ....
கடலை பொரி, சுண்டல் எதாவது மிச்சம் இருக்கா?
இல்லை கடைசி பெஞ்சுக்காரர்களே எல்லாத்தையும் லவட்டிக்கொண்டு போய்விட்டார்களா?/////
இணைய வகுப்பில் சுண்டல் ஏது? கிண்டல் மட்டும் உண்டு!
/////கூடுதுறை said...
ReplyDeleteமூன்றாம் வேத வாக்கு எனக்கு பிடித்து இருக்கிறது////
அது அனைவருக்கும் பொதுவான வேதவாக்கு - அதனால் பிடித்துவிடும்!
//வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே அதே சீதாராமன்தான் அவர்.//
ReplyDeleteபட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் ஜீபூம்பா பூதமாக நடித்தவரும் அவர்தானே அய்யா ?
///////லதா said...
ReplyDelete//வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே அதே சீதாராமன்தான் அவர்.//
பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் ஜீபூம்பா பூதமாக நடித்தவரும் அவர்தானே அய்யா ?////
கரெக்ட்! அவரேதான் சகோதரி!
நல்ல கருத்துக்கள் அய்யா. எல்லாம் அவன் செயல்.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
ஐயா வணக்கம்,
ReplyDeleteஇன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்.
இன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !//
ReplyDeleteyes
/////Rajagopal said...
ReplyDeleteநல்ல கருத்துக்கள் அய்யா. எல்லாம் அவன் செயல்.
அன்புடன்
இராசகோபால்/////
நன்றி ராசகோபால்!
/////ஜே கே | J K said...
ReplyDeleteஐயா வணக்கம்,
இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்./////
ஆகா வாருங்கள்! முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்துகொள்ளுங்கள். இதுவரை நடத்திய பாடங்களை எல்லாம் படியுங்கள்
//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஇன்றைய பாடம் மனதிற்கு மிகவும் அமைதியை கொடுத்தது !//
yes/////
அமைதியைக் கொடுத்ததாகச் சொன்னதற்கு நன்றி!
//SP.VR. SUBBIAH said...
ReplyDelete/////ஜே கே | J K said...
ஐயா வணக்கம்,
இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்./////
ஆகா வாருங்கள்! முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்துகொள்ளுங்கள். இதுவரை நடத்திய பாடங்களை எல்லாம் படியுங்கள்//
சரிங்க ஐயா.
ஒரு சின்ன கேள்வி அய்யா,
இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?
//இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?
ReplyDelete//
டொண்டொட்டொண்ட டொண்டடொய்
டொண்டொட்டொண்ட டொண்டடொய்
நாயகன் ஸ்டைல்ல வாத்தியாரை ஃபீல் பண்ண வெச்சிட்டீங்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........!
//உன் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய எதனிடத்தும் நீ எச்சரிக்கையாய் இரு!
ReplyDelete(Beware of everything that takes away your freedom)
- சுவாமி விவேகானந்தா//
ஆஹா! இனிமேல் சின்ன மருத்துவர் ஐயாவிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியதுதான்!
//ங்கள் சேட்டைகளைச் சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் போதும்//
ReplyDeleteஹிஹி. போகப் போகப் பாருங்கள்! யார் யாருக்கு சேட்டைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று!
பத்தாமிடத்தைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி எப்போது?
ReplyDelete//////ஜே கே | J K said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
/////ஜே கே | J K said...
ஐயா வணக்கம்,
இன்றிலிருந்து நானும் வகுப்புக்கு வருகிறேன்./////
ஆகா வாருங்கள்! முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்துகொள்ளுங்கள். இதுவரை நடத்திய பாடங்களை எல்லாம் படியுங்கள்//
சரிங்க ஐயா.
ஒரு சின்ன கேள்வி அய்யா,
இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?//////
இரண்டு மாதங்கள் பொறுத்திருந்தால், உங்களுக்கே தெரியவரும். அதற்குள் என்ன அவசரம்?
//////லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா said...
ReplyDelete//இந்த கடைசி பெஞ்ச் பசங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா?
// டொண்டொட்டொண்ட டொண்டடொய்
டொண்டொட்டொண்ட டொண்டடொய்
நாயகன் ஸ்டைல்ல வாத்தியாரை ஃபீல் பண்ண வெச்சிட்டீங்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........!///////
இதில் ஃபீல் பண்ண என்ன உள்ளது? கடைசி பெஞ்சில் அனைவருமே அப்பாவிகள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாத அளவிற்கு அப்பாவிகள். அவர்கள் எல்லோருக்குமே லக்கினத்தில் சனி!
//////நாமக்கல் சிபி said...
ReplyDelete//ங்கள் சேட்டைகளைச் சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் போதும்//
ஹிஹி. போகப் போகப் பாருங்கள்! யார் யாருக்கு சேட்டைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று!//////
நல்லாயிருங்க சாமிகளா! (வேறென்னத்தைச் சொல்வது?)
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteபத்தாமிடத்தைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி எப்போது?/////
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்வெட்டு. என்ன செய்வது?
எப்படியும் திங்களன்று (13.10.2008) அடுத்தபாடம் (பத்தாமிடத்தைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி)
என்னடா பொல்லாத வாழ்க்கை ... இதுக்கு போயி அலடிக்கலமா ... முடிஞ்சா ஆடுரவரைகும் ஆடு ....இல்லே ஓடுறவரைக்கும் ஓடு ...இதுக்கு போயி அலடிகலமா
ReplyDelete/////IlayaDhasan said...
ReplyDeleteஎன்னடா பொல்லாத வாழ்க்கை ... இதுக்கு போயி அலடிக்கலமா ... முடிஞ்சா ஆடுரவரைகும் ஆடு ....இல்லே ஓடுறவரைக்கும் ஓடு ...இதுக்கு போயி அலடிகலமா////
அதெப்படி அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்?
ஒன்றாம் தேதியானால் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும் அல்லது ஹவுஸிங் லோனுக்குப் பணம் கட்ட வேண்டும்.
டிபார்ட்மென்ட் ஸ்டோர் பில், கிரிடிட் கார்டு ஃபேமென்ட், டெலிஃபோன் பில் என்று வருகிற பணம் பற்றவில்லையே சுவாமி?
எப்படி அலட்டிக்கொள்ளாமல் இருக்க முடியும்?
நீங்கள் என்ன மாமானார் வீட்டுச் சொத்தில் குஷியாக இருக்கிற ஆசாமியா?
இந்த வேத வாக்குகள் கரண்ட் பில் கட்டுமா ..இல்லை கிரெடிட் கார்ட் பில் தான் கட்டுமா எனக்கு புரியவில்லை ...மீண்டும் பாடல் வரிகளை படிக்கவும் ... முடிந்தால் ஆடுற வரைக்கும் ஆடு ...
ReplyDeleteகடவுள் கடவுளுக்கு சொன்னது - பிரணவத்தின் பொருள்
ReplyDelete/////IlayaDhasan said...
ReplyDeleteஇந்த வேத வாக்குகள் கரண்ட் பில் கட்டுமா ..இல்லை கிரெடிட் கார்ட் பில் தான் கட்டுமா எனக்கு புரியவில்லை ...மீண்டும் பாடல் வரிகளை படிக்கவும் ... முடிந்தால் ஆடுற வரைக்கும் ஆடு .../////
புரிகிறவர்களுக்குப் புரியும். புரிந்து கொள்ள விரும்பதவர்களுக்குப் புரியாது!
இந்த வேத வாக்குகள் நீங்கள் தேடி அலைகின்ற பணத்தை தராது.
பணத் தேடலில் தவறுகள் செய்து, மனிதன் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுவதில் இருந்து அவனைக்காக்கும்!
////Swami Vivekananda Educatioanl Movement said...
ReplyDeleteகடவுள் கடவுளுக்கு சொன்னது - பிரணவத்தின் பொருள்////
ஆமாம், சுவாமி மலையில் அரங்கேறிய உண்மை!