மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.10.08

கரடிக்கு உண்டா இறை நம்பிக்கை?

சத்தியமங்கலத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்தக்
கிராமம். மொத்தம் நூறு வீடுகளே இருக்கும். ஒரு சிறு வனபத்ரகாளி அம்மன்
கோவிலும், ஆரம்பப் பள்ளிக்கூடமும் உபரியாக இருந்தன. மற்றபடி ஒன்றும்
கிடையாது.

அத்தனை பேருக்கும் விவசாயம்தான் தொழில்.

கிராமத்தின் வடக்குப் பகுதியில் பெரிய மலைகளுடன் கூடிய வனாந்திரக் காடு.

அன்பரசன் மட்டும் 50 மாடுகளைக் கொண்ட பால் பண்ணை வைத்திருந்தான்.
ஆள் வாட்ட சாட்டமாக இருப்பான். பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தான்.
அவனுக்கு வயது முப்பது. இறை நம்பிக்கையில்லதவன். தன்னைப் போலவே
இறைநம்பிக்கை இல்லாத பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்பதில்
அவன் உறுதியாக இருந்தான்.

அப்படி எண்ணம்கொண்ட பெண் இதுவரை கிடைக்கவில்லை. அவனது திருமணமும்
தள்ளிக்கொண்டே சென்றது.

அந்தக் கிராமத்தில் எல்லா இளைஞர்களுக்கும் 21 அல்லது 22 வயதிலேயே
அவர்களுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஆனால்
அன்பரசனின் கொள்கையால் அவனுக்கு ஏற்ற பெண் இதுவரை கிடைக்கவில்லை.

அந்தக் கவலையிலேயே அன்பரசனின் தாய்க்கும் நோய்வந்து இறந்து போய் விட்டாள்.

அன்பரசனின் இயற்பெயர் முருகைய்யன். சின்ன வயதிலேயே இறைநம்பிக்கை
இல்லாததால், பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது அவன் தன் பெயரை அன்பரசன்
என்று மாற்றி வைத்துக்கொண்டு விட்டான்.

அவனுக்கு ஏன் இறைநம்பிக்கை இல்லாமல் போனது என்று விவரித்தால் பத்து
பக்கங்கள் எழுத வேண்டியதிருக்கும். அதோடு கதைக்கு அது அவசியமும் இல்லை.
ஆகவே எழுதவில்லை!

கிராமத்தில் வருடத்திற்கு நான்கு முறை கோவிலில் திருவிழா நடக்கும். அன்பரசன்
அந்த விழாக்களைப் புறக்கணித்து விடுவான். ஊரிலுள்ள பெரிசுகளுக்கும் அவன்
குணம் தெரிந்ததால் கண்டு கொள்ள மாட்டார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்படியே கதை போய்க் கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்?
ஆகவே இப்போது எல்லாவற்றையும் தாண்டி கதையின் முக்கிய பகுதிக்கு
வருகிறேன்!
==========================================================
ஒரு நாள் அதிகாலை, அன்பரசனின் பண்ணையில் இருந்து கறவைமாடு ஒன்று
கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடி விட்டது. தினமும் பத்து லிட்டருக்குக் குறையாமல்
பால் கொடுக்கும் மாடு அது.

எங்கே போய்விடப்போகிறது? பக்கத்துத் தோட்டங்கள் ஏதாவது ஒன்றில்தான் மாடு
நின்றுகொண்டிருக்கும், பிடித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தோடு
அன்பரசன் புறப்பட்டான்.

ஒரு மணி நேரம் சுற்றியும் மாடு தென்படவில்லை.

அப்போதுதான் அது நடந்தது.

வனத்தின் முன்பகுதியில் கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு அந்தச்
சுமையோடு, கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். அவள்
அன்பரசனைப் பார்த்து விட்டு, அவன் கேட்காமலேயே சொன்னாள்,'' காட்டுப்
பாதைக்குள்ள ஒரு ஒத்தைமாடு ஓடிக் கிட்டிருக்கு, பிடிச்சு நிறுத்தலாம்னு பார்த்தேன்
முடியல்லை. ஒம்புட்டு மாடுதானா அது?"

அன்பரசனுக்குப் பதட்டமாகி விட்டது. அந்தக் காட்டைப் பற்றி அவன் நிறையக்
கேள்விப்பட்டிருக்கிறான். கொடிய வனாந்திரக்காடு அது. கிராம மக்கள் யாரும்
உள்ளே போக மாட்டார்கள். விலங்குகள் ஏராளமாகத் திரியும் காடு அது.

தகுந்த துணை கிடைக்காததால் அன்பரசனும் இதுவரை ஒருமுறைகூடக் காட்டிற்குள்
போய்ப் பார்த்ததில்லை.

மாட்டைப் பறிகொடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலும், இயற்கையாகவே உள்ள
மனத்திடத்தாலும் துணிந்து காட்டிற்குள் நுழைந்தான்.

துவக்கத்தில் ஒரு ஒத்தயடிப்பாதை இருந்தது. மாடு ஒன்று பயணித்த தடயமும் அதில்
இருந்தது.

உள்ளே நுழைந்தவன் ஒரு இரண்டு கல் தூரம் வந்துவிட்டான். மாடு கண்ணில் தென்
படவில்லை.

காடு அடர்ந்த மரம் செடி, கொடிகளுடன் பார்க்க ரம்மியமாக இருந்தது. அந்த
இயற்கை அழகில் அன்பரசன் தன்னையே மறந்துவிட்டான்.

குறுக்கிட்ட சிறு காட்டாறு ஒன்றின் அருகே பாதை முடிந்துவிட்டது. ஆற்றுத்
தண்ணீர் படு சுத்தமாகத் தெளிவாக இருந்தது.

ஆற்றில் இறங்கி, கால் முகத்தைக் கழுவிக்கொண்டு தன்னுடைய இரு கரங்களாலும்
தண்ணீரை அள்ளிப் பருகினான்.

தனக்குப் பின்னால் ஆற்றங்கரையில் கிடந்த சருகளில் யாரோ நடந்துவரும் ஓசை
கேட்க அவசரமாகத் திரும்பிப்பார்த்தான்.

அவனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது!

சுமார் ஆறடி உயரம் உள்ள கரடி ஒன்று அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

யோசிப்பதற்கு நேரமில்லை. இதனிடமிருந்து தப்பித்தாக வேண்டும்.

அன்பரசன் தம் பிடித்து ஓட ஆரம்பித்தான்.

அவன் வேகமாக ஓட, கரடியும் துரத்த ஆரம்பித்தது.

ஐந்து நிமிட ஓட்டம்கூட நிறைந்திருக்காது. அதைத்தான் கெட்ட நேரம் என்பார்கள்.

பாதையில் குறுக்கிட்ட மரத்தின் வேர் ஒன்று தட்டிவிட, அன்பரசன், தடால் என்று
கீழே விழுந்து விட்டான். சுதாகரித்துப் புரண்டு நிமிர்வதற்குள், அவன் மார்பின் மீது
வந்து கரடி அமர்ந்து கொண்டு, அவன் கழுத்தைப் பிடிக்க ஆரம்பித்தது.

தான் இருக்கும் அபாய நிலையை உணர்ந்த அன்பரசன், முதன் முறையாக
அடிவயிற்றில் இருந்து குரல் கொடுத்துக் கத்தினான்:

"கடவுளே!"

காடு முழுவதும் அவன் குரல் எதிரொலித்தது.

அப்போதுதான் அது நடந்தது.

வானத்தில் இருந்து, சர்க்கஸ் லைட்டை போன்ற வட்ட ஒளி அவனைச் சுற்றி விழுந்தது.

அத்தனை இயக்கமும் நின்று போய் விட்டது. கரடி தன் கைகளைத் தூக்கிக்கொண்டு
விட்டது. அதோடு எந்தவித இயக்கமும் இன்றி உறைந்து விட்டதைப் போல் இருந்தது.
காட்டில் மரம் செடி, கொடி எதுவும் அசைவின்றி இருந்தன.

அன்பரசன் அனைத்தையும் ஆதங்கத்துடன் பார்த்தான்.

வானத்தில் இருந்து அசரீரி ஒலித்தது.

"என்ன வேண்டும் உனக்கு?"

"இந்தக் கரடியிடமிருந்து நான் தப்பிக்க வேண்டும். அதற்கு நீ உதவி செய்வாயா?"

"படைப்பின் இலக்கணத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே நான் உதவி செய்வேன்"

"படைப்பின் இலக்கணத்தை எப்படி அறிந்து கொள்வது?"

"முதலில் அதற்கு இறை நம்பிக்கை வேண்டும்! ஒரே நொடியில் உனக்கு இறை
நம்பிக்கையை என்னால் உண்டாக்க முடியும். உண்டாக்கட்டுமா?"

மின்னல் வேகத்தில் அவன் யோசித்தான். இத்தனை நாட்கள் இருந்தாகிவிட்டது.
திடீரென்று இறைவனை ஏற்றுக் கொள்ள அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆகவே வழக்கம்போல இடக்காகக் கேட்டான்:

"இந்தக் கரடிக்கு இறை நம்பிக்கை உண்டா?"

"கிடையாது!"

"அதற்கு இறை நம்பிக்கையை உண்டாக்க முடியுமா?"

"முடியும்!"

கரடிக்கு இறை நம்பிக்கை வந்துவிட்டால், அது தன்னை விட்டுவிடும் என்று நம்பிய
அவன் உடனே சட்டென்று சொன்னான்:

"அப்படியென்றால், இந்தக் கரடிக்கு இறை நம்பிக்கையை உண்டாக்கு!"

"நல்லது. அப்படியே செய்கிறேன்!" என்று அசரீரீ சொன்னவுடன், ஒளி வட்டம்
கரடி மீது முழுதாக விழுந்தது. அத்துடன் அடுத்த நொடியில் அது மறைந்தது.

எல்லாம் பழையபடி சகஜ நிலைமைக்குத் திரும்பியது.

இப்போது கரடி அவன் மீது அமர்ந்த நிலையிலேயே, தன் கைகள் இரண்டையும்
கூப்பி வணங்கிவிட்டுச் சொன்னது."இறைவா உனக்குக் கோடி நன்றி. எனக்கு
நெடு நாட்கள் கழித்து நல்ல உணவாகக் கொடுத்திருக்கிறாய். இவனை வைத்து,
இவன் உடலை வைத்து என்னுடைய இரண்டு நாள் பசியைப் போக்கிக்
கொள்வேன். மீண்டும் உனக்கு எனது நன்றி!"

வாழ்க வளமுடன்!

41 comments:

  1. Good Story...Wish you and all the readers a happy diwali....

    ReplyDelete
  2. சார்,

    இந்த கதையில் ஒரு லாஜிக் பிழை இருக்கிறது :)

    ReplyDelete
  3. ஐயா... சூப்பர் ரிப்பிட்...

    அற்புதம்.

    தாங்கள் பதிவில் சொல்லவில்லை. நான் சொல்லிவிடுகிறேன்.

    இந்தப்பதிவு கோவி.கண்ணனுக்காக எழுதப்படவில்லை...

    ReplyDelete
  4. /////Ragu Sivanmalai said...
    Good Story...Wish you and all the readers a happy diwali....////

    நன்றி சிவன்மலையாரே!

    ReplyDelete
  5. /////புருனோ Bruno said...
    சார்,
    இந்த கதையில் ஒரு லாஜிக் பிழை இருக்கிறது :)////


    என்ன லாஜிக் பிழை என்று சொல்லுங்கள் டாக்டர். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்!
    (கரடி தன் மொழியில் பேசியது)

    ReplyDelete
  6. //////sivam said...
    அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்./////

    நன்றி சிவம். சமர்ப்பித்துவிட்டேன்!

    ReplyDelete
  7. ////கூடுதுறை said...
    ஐயா... சூப்பர் ரிப்பிட்...
    அற்புதம்.
    தாங்கள் பதிவில் சொல்லவில்லை. நான் சொல்லிவிடுகிறேன்.
    இந்தப்பதிவு கோவி.கண்ணனுக்காக எழுதப்படவில்லை...//////

    இல்லை கூடுதுறையாரே நான் யாருக்காகவும் இதை எழுதவில்லை!
    எனக்கு யாரும் போட்டியாக முடியாது.
    பழநி அப்பன் உடன் இருக்கிறான் [அசாத்திய நம்பிக்கை:-))) ]
    வழக்கமான பாடங்களில் ஒன்று அவ்வளவுதான்!
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  8. Sir,

    Nice effort for stories.

    Wishing everyone Happy Deepavali!!!

    -Shankar

    ReplyDelete
  9. /////hotcat said...
    Sir,
    Nice effort for stories.
    Wishing everyone Happy Deepavali!!!
    -Shankar///

    Thanks Shankar!

    ReplyDelete
  10. //புருனோ Bruno said... சார், இந்த கதையில் ஒரு லாஜிக் பிழை இருக்கிறது :)//
    கரடிகளில் முக்கால்வாசி சாகபட்சிணிகள்... அதுவா??

    கதை நன்றாக இருந்தது; புரிய வேண்டியவர்களுக்கு புரிவதற்குள் பரலோகம்:‍-)

    ReplyDelete
  11. நல்ல சுவாரசியமான கதை
    அதிலும் கடைசியில் உள்ள
    ட்விஸ்ட் செமையா இருக்கு
    வாத்தியார் அய்யா,நன்றி!

    ReplyDelete
  12. பல்சுவையில் பல சுவையையும் பாங்குடனே தந்து 550 பதிவுகளை படைத்திட்ட ஆசிரியர் சுப்பைய்யா அவர்களுக்கும் மற்றும் அன்பர்கள்,நண்பர்கள்,பண்பாளர்கள்
    அனைவருக்கும்

    "தீபாவளி வாழ்த்துக்கள்"

    ReplyDelete
  13. கடவுளை நினை
    கடவுளை நம்பு
    கடவுளை வணங்கு
    கடவுளை போற்று
    கடவுளை துதி
    கடவுளை பாடு
    கடவுளை பாராட்டு
    கடவுளை மதி

    கடவுளே எல்லாம்
    கடவுள் நம்பிக்கையை போற்றுவோம்

    ReplyDelete
  14. karadi only eats fresh eat, doesn't store hunted food for 2 days and eat, is that it?

    ReplyDelete
  15. கரடிக்கு இறை நம்பிக்கை இருக்கோ இல்லையோ இரை நம்பிக்கை நிச்சயம் இருக்கு!

    ReplyDelete
  16. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    //புருனோ Bruno said... சார், இந்த கதையில் ஒரு லாஜிக் பிழை இருக்கிறது :)//
    கரடிகளில் முக்கால்வாசி சாகபட்சிணிகள்... அதுவா??
    கதை நன்றாக இருந்தது; புரிய வேண்டியவர்களுக்கு புரிவதற்குள் பரலோகம்:‍-)//////

    அதெல்லாம் இல்லை சகோதரி. ஒரு நிமிடவாவது இறைவனை உணரவைத்து விட்டுத்தான் கர்மகாரகன் சனி மேலே அனுப்பி வைப்பான். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை!

    ReplyDelete
  17. /////தமாம் பாலா (dammam bala) said...
    நல்ல சுவாரசியமான கதை
    அதிலும் கடைசியில் உள்ள
    ட்விஸ்ட் செமையா இருக்கு
    வாத்தியார் அய்யா,நன்றி!////

    நன்றி பாலா!

    ReplyDelete
  18. //////பொதிகைத் தென்றல் said...
    பல்சுவையில் பல சுவையையும் பாங்குடனே தந்து 550 பதிவுகளை படைத்திட்ட ஆசிரியர் சுப்பைய்யா அவர்களுக்கும் மற்றும் அன்பர்கள்,நண்பர்கள்,பண்பாளர்கள்
    அனைவருக்கும் "தீபாவளி வாழ்த்துக்கள்"//////

    நன்றி பொதிகையாரே!

    ReplyDelete
  19. //////thenkasi said...
    கடவுளை நினை
    கடவுளை நம்பு
    கடவுளை வணங்கு
    கடவுளை போற்று
    கடவுளை துதி
    கடவுளை பாடு
    கடவுளை பாராட்டு
    கடவுளை மதி
    கடவுளே எல்லாம்
    கடவுள் நம்பிக்கையை போற்றுவோம்////

    நன்றி தென்காசி!

    ReplyDelete
  20. /////Sri said...
    karadi only eats fresh eat, doesn't store hunted food for 2 days and eat, is that it?/////

    கதையின் கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே!
    கரடியின் பழக்கங்கள் எனக்குத்தெரியாது:-)))
    (bears eat reindeer, small rodents, seabirds, waterfowl, fish, eggs, vegetation (including kelp), berries, and human garbage.)

    ReplyDelete
  21. /////திவா said...
    கரடிக்கு இறை நம்பிக்கை இருக்கோ இல்லையோ இரை நம்பிக்கை நிச்சயம் இருக்கு!///

    நன்றி திவா!

    ReplyDelete
  22. ஐயா... சூப்பர் கதை.

    அனைவருக்கும்

    "தீபாவளி வாழ்த்துக்கள்"

    ReplyDelete
  23. சார்,
    அருமையான கதை.
    "தீபாவளி வாழ்த்துக்கள்"

    நன்றி!

    ReplyDelete
  24. //////கனிமொழி said...
    ஐயா... சூப்பர் கதை.
    அனைவருக்கும்
    "தீபாவளி வாழ்த்துக்கள்"////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. //////கனிமொழி said...
    ஐயா... சூப்பர் கதை.
    அனைவருக்கும்
    "தீபாவளி வாழ்த்துக்கள்"////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. //////Geekay said...
    சார்,
    அருமையான கதை.
    "தீபாவளி வாழ்த்துக்கள்"
    நன்றி!/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  27. சின்னக் கோடம்பாக்கம் சின்ன ரஜினி கிரி சொல்கிறார், 'டி ராஜேந்தருக்கு' இறை நம்பிக்கை உண்டாம் !
    :)

    ReplyDelete
  28. இது ஸ்டாக் மார்க்கேட் கரடி பத்திய கதை தானே .... அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. /////கோவி.கண்ணன் said...
    சின்னக் கோடம்பாக்கம் சின்ன ரஜினி கிரி சொல்கிறார்,
    'டி ராஜேந்தருக்கு' இறை நம்பிக்கை உண்டாம் ! :)////

    எனக்குத் தெரிந்தது ஒரே கோடம்பாக்கம்தான்!

    ReplyDelete
  30. //////இம்சை said...
    இது ஸ்டாக் மார்க்கேட் கரடி பத்திய கதை தானே
    .... அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்/////

    ஸ்டாக் மார்க்கெட் கரடி உயிரில்லாத கரடி; மற்றவர்களின் உயிரை எடுக்கும் கரடி!
    கதை அதைப்பற்றியது அல்ல நண்பரே!

    ReplyDelete
  31. These times BEARS are ruling stock market!! and the story is also about a BEAR !! What a co-incidence

    ReplyDelete
  32. எனக்குப் புரிஞ்சிடுச்சே! எனக்குப் புரிஞ்சிடுச்சே!

    (சின்னத் தம்பி ஸ்டைலில் படிக்கக் கூடாது)

    ReplyDelete
  33. Blogger நாமக்கல் சிபி said...
    //எனக்குப் புரிஞ்சிடுச்சே! எனக்குப் புரிஞ்சிடுச்சே!

    (சின்னத் தம்பி ஸ்டைலில் படிக்கக் கூடாது)

    ////////

    கௌரவ மாணவர் கடைசியா வாராரே .. ஆச்சர்ய குறி

    (இதை பார்த்திபன் ஸ்டைலில் படிக்கவும் )

    ReplyDelete
  34. /////Dhamodharan said...
    These times BEARS are ruling stock market!! and
    the story is also about a BEAR !! What a co-incidence/////

    கதை இறை நம்பிக்கையைப் பற்றியது!

    ReplyDelete
  35. /////நாமக்கல் சிபி said...
    உள்ளேன் ஐயா!/////

    நன்றி சிபி!

    ReplyDelete
  36. //////நாமக்கல் சிபி said...
    எனக்குப் புரிஞ்சிடுச்சே! எனக்குப் புரிஞ்சிடுச்சே!
    (சின்னத் தம்பி ஸ்டைலில் படிக்கக் கூடாது)////

    தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  37. /////Ragu Sivanmalai said...
    Blogger நாமக்கல் சிபி said...
    //எனக்குப் புரிஞ்சிடுச்சே! எனக்குப் புரிஞ்சிடுச்சே!
    (சின்னத் தம்பி ஸ்டைலில் படிக்கக் கூடாது)
    ////////
    கௌரவ மாணவர் கடைசியா வாராரே .. ஆச்சர்ய குறி
    (இதை பார்த்திபன் ஸ்டைலில் படிக்கவும் )//////

    எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். அதுதான் கௌரவ மாணவர்களின் அடையாளம்!/சலுகை

    ReplyDelete
  38. கருத்துள்ள் கதை!!

    ReplyDelete
  39. /////மிஸ்டர் அரட்டை said...
    கருத்துள்ள கதை!!////

    நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com