ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். 30 வயது வரை அவர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார், முறையான கல்வியும் இல்லை. முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் 31 வயதிற்கு மேல் எல்லாம் சரியானது. அது வேற கதை. ஆனால் இளம் வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!
ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். 13 வயது முதல் 31 வயது வரை அவருக்கு ராகு மகா திசை நடந்தது. அந்த தசா காலத்தில் ஸ்திரமான வாழக்கை இருக்காதே சாமி. லக்கினத்திலும் 7ம் வீட்டிலும் ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்.
தறுதலையான மனப் பாங்கிற்கும் ஒரு வேலையிலும் நிலைத்து நில்லாமல் போனதற்கும் இது தான் காரணம்,
ஆனால் அடுத்து 32வது வயதில் துவங்கிய குரு மகா திசை அவருக்கு நல்ல வேலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் ரிப்பேராக இருந்த அவருடைய பெயரையும் பழுது பார்த்துக்கொடுத்தது. 3ம் வீட்டில் குரு பகவானும் 10ம் அதிபதி சுக்கிரனும் ஒன்றாக இருப்பதைப் பாருங்கள். அவரை நல்வழிப் படுத்தியதில் இந்த இருவருக்குமே சம பங்கு உண்டு.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
================================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com