இதைப் படியுங்கள் உங்களுக்கு மிகுந்த தைரியம் வரும்!!!!!
*படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.*
இறைவன் படைப்பில் நீ எதற்காக பூலோகத்திற்கு வந்தாயோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உனக்கு மரணம் சம்பவிக்காது !
பயம் கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள் !
கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும் ! படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட உன்னை காப்பாற்ற முடியாது !
கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட MGR & ராதா இருவருமே சாகவில்லை !
ஆனால் கட்டுமஸ்தான உடல் பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார் !
புராணங்களிலும் இதற்கான உதாரணம் உண்டு ! பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி உயிரிழந்தார் !
அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மைக் கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் ! பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும் !
தென்னமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, திண்ணையிலிருந்து விழுந்து போனவனும் உண்டு.
அமைதியும் ஆனந்தமும் பெற்று வாழ்க! இறைவா நன்றி .
====================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Good morning sir excellent motivational message thanks sir vazhga valamudan
ReplyDeleteஆசானே
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.
ஒரு சிறு திருத்தம். அது பரிட்சித் மகாராஜா இல்லை என்று நினைக்கிறேன்.
பரிட்சித் மகாராஜா அந்த ஏழு நாட்களில் முக்திக்கு வழி தேடி மகன் ஜனமஜேயனிடம் ஆட்சியை ஒப்படைத்து, சுகமுனிவரிடம் பாகவதத்தை கேட்டறிந்தார். ஏழாம் நாள் தட்சன் எனும் நாகத்தினால் தீண்டப்பட்டு முக்தியடைந்தார். அவர் மரணத்திலிருந்து தப்பிக்க முயலவில்லை.
ஆனால் தாங்கள் சொன்ன நிகழ்வு இருக்கிறது. அந்த அரசன் பரிடசித் அல்ல.
இந்த நிகழ்வு ஜாதகத்தின் சரியான நேரக்கணிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த கூறப்படுவதுண்டு.
அன்பர் சண்முகசுந்தரம் மற்றும் ரவி இருவருக்கும் நன்றி!
ReplyDelete