மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.10.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. சுவாதி நட்சத்திம். ரிஷப லக்கினக்காரர். ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் ஜாதகியின் முதல் கல்யாணம் நிலைக்காது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இரண்டாவது திருமணம் தான் நிலைக்கும் என்று சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது, ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 11-10-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Dear Sir,

    The given horoscope's 7th lord mars in 12th.
    2. Saturn aspect 7th.
    3. Lagna lord in 12th.

    Since 7th lord in 12th and saturn's aspect, the person's first marriage was affected.

    Thanking you,

    ReplyDelete
  2. 7ம் இடத்துகாரன் 6,8,12 வீட்டுக்காரனுடன் தொடர்பு கொண்டால் , இரண்டாம் திருமணம் உண்டு. இந்த ஜாதகத்தில் 7ம் இடத்துக்காரன் 6ம் இடத்துக்காரனுடன் இணைந்து பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறது.

    ReplyDelete
  3. ஐயா ,
    கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி விரயத்தில் விரயாதிபதி செவ்வாயுடன்
    2 . குடும்பஸ்தானதிபதி புதன் நீசமாகியுள்ளார்
    செவ்வாயின் பார்வை ஏழாம் வீட்டின் மீது இந்த காரணங்களினால்
    ஜாதகிக்கு முதல் திருமணம் நிலைக்க வாய்ப்பில்லை
    3. ஐந்தாம் வீட்டில் யோககாரகன் சனியுடன் லாபாதிபதி குரு அமர்ந்து இரண்டாம் அதிபதி புதனை தன் பார்வையால் மேம்படுத்தி இரண்டாம் திருமணத்தை நிலைக்க வைத்துள்ளார் தங்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
  4. வணக்கம்

    தாங்கள் கேட்டு இருந்த ஜாதகியின் முதல் திருமண முறிவிற்கான காரணங்கள்

    ஸ்வாதி நக்ஷத்திர ரிஷப லக்கின துலா ராசி ஜாதகியின் திருமண வாழ்விற்கு ஜாதகியின் இரண்டாம் இடம், ஏழாம் இடம், மற்றும் லக்கின அதிபதியின் நிலையை பார்க்க வேண்டும்.

    இவரின் இரண்டாம் இடத்து அதிபதி புதன் வர்கோத்தமாக ஜாதகியின் பதினொன்றாம் வீட்டில் நீசம் அடைந்து உள்ளார்... மேலும் ஏழாம் இடத்து அதிபதி செவ்வாய் பனிரெண்டில் லக்கின அதிபதி சுக்கிரனோடு அமர்ந்து திருமண விரயத்தை செய்தார்..

    இவரின் முதல் திருமணம் பாக்கிய அதிபதி சனியின் தசையில் சுக்கிரன் புக்தியில் நடந்தது. பின்னர் வந்த ஆறாம் இடத்தில் ராகுவின் நக்ஷத்திரத்தில் ( சாரத்தில் ) அமர்ந்த மூன்றாம் அதிபதி சந்திரனின் புக்தியில் திருமண முறிவு உண்டானது.

    பின்னர் வந்த சனி தசை யின் குரு புக்தியில் இரண்டாம் திருமணம் நடந்தது. ஏனென்றால் ஜாதகியின் இரண்டாம் இடத்து அதிபதி புதன் வர்கோத்தமமாக பதினொன்றில் நீசமாக இருந்தாலும் ஐந்தில் அமர்ந்த குருவின் பார்வை பெற்று இரண்டாம் திருமணத்தால் சுப வாழ்வு அமைய செய்தார். ஏனென்றால் ஜாதகியின் இரண்டாம் இடத்து அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகியின் இரண்டாம் திருமணத்தை நடக்க செய்தார்.

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  5. வணக்கம்

  6. வணக்கம்.
    ரிஷப லக்னம், துலாம் ராசி ஜாதகி.

    ஜாதகியின் முதல் கல்யாணம் நிலைக்காது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இரண்டாவது திருமணம் தான் நிலைக்கும் என்று சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது, ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

    1) இலக்கினாதிபதியும், களத்திர காரகனுமான சுக்கிரன் 12ல் மறைந்து வலுவிழந்துள்ளார்.
    2) களத்திராதிபதி செவ்வாயும் 12ல் மறைவு.செவ்வாயின் 8ம் பார்வை களத்தின் ஸ்தானத்தில் விழுகிறது.
    3) தவிர,ஜாதகியின் முதல் திருமணம் அட்டமாதிபதி குரு தசையில் நடந்தது.
    மேற்கண்ட காரணங்களால் ஜாதியின் முதல் திருமணம் நிலைக்கவில்லை.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,
    லக்கின அதிபதி சுக்கிரன் மற்றும் 7 ஆம் அதிபதி 12ல் மறைவு ஆகவே இந்த நிலை என்று நினைக்கிறேன்... நவம்சம் ல் லக்னம் 2,7 ஆம் வீடுகள் நல்ல நிலையில் இருப்பதால் இரண்டாவது திருமணம் அமைந்தது..

    ReplyDelete
  8. அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்
    ஜாதகர் 20-04-1981 பிறந்துள்ளார்.
    அவரது களஸ்திரகாரனும், களஸ்திரானதிபதியும் 12ல் மறைந்து விட்டார்கள். ஆகவேதான் முதலாம் திருமணம் உடைந்துவிட்டது.
    இரண்டாம் திருமணத்திற்கு காரணம் 11ம் வீட்டிற்காரனான குரு கன்னியில் அமர்ந்து தனது வீட்டைப்பார்க்கின்றார். ஆகவே 11ம் வீடு வலுவாக உள்ளது. இதுதான் இரண்டாம் திருமணத்திற்கு காரணமாகும்.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com