Astrology: Quiz: புதிர்: முதிர் கன்னியின் ஜாதகம்!
ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. பூராட நட்சத்திரம் துலா லக்கினம் தனுசு ராசி. அழகு, கல்வி , வேலை என்று எல்லா அமைப்புக்களும் ஒரு சேரப் பெற்றவர். 40 வயதாகியும் திருமணம் கூடிவராமல் போய் விட்டது. அவருக்கு தோதான வரன் அமையவில்லை. வெறுத்துப்போய் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன்படி கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளாமல் முதிர் கண்ணியாகவே காலத்தைக் கழித்துவிட்டார். ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 19-7-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஜகதீஸ்வரன், கானாடுகாத்தான்: 2 7 8 ஆம் இடங்கள் பாதிப்பு. 7ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 8ல். 2ம் இடத்திற்கு பாபத்துவமான சனியின் பார்வை. 8ஆம் வீட்டுக்கு செவ்வாய் பார்வை. ராசிக்கு 2ஆம் அதிபதி சூரியன் மற்றும் கேதுவுடன் அஸ்தங்கம் மற்றும் கிரகணம். ராசிக்கு 7ஆம் வீட்டுக்கு சனி மற்றும் செவ்வாய் பார்வை.ராசிக்கு 8ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 6ல். 5ல் குரு கார்கோ பால் நாஸ்தி. 5 ஆம் அதிபதி சனி தன் வீட்டுக்கு 8ல் சூரியன் மற்றும் கேதுவுடன். கிரகணம் மற்றும் அஸ்தங்கம். ராசிக்கு 5ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 8ல். கடுமையான களத்திர மற்றும் புத்திர தோஷம்.
ReplyDeleteவணக்கம்..
ReplyDeleteதாங்கள் கேட்டு இருந்த முதிர் கன்னியின் திருமணம் நிகழா அமைப்பிற்கான காரணங்கள்
துலா லக்கின ( வர்கோத்தம லக்கின ) பூராட நக்ஷத்திர தனுசு ராசி ஜாதகியின் திருமணத்திற்கு இரண்டாம் இடம், ஏழாம் இடம், ஒன்பதாம் இடம் போன்றவற்றை பார்க்க வேண்டும்.
இந்த அமைப்பின் படி ஜாதகியின் இரண்டாம் இடத்து அதிபதி மற்றும் ஏழாம் இடத்து அதிபதி செவ்வாய் இரண்டிலேயே சொந்த வீட்டில் அமர்ந்து இருந்தாலும் மாந்தியுடன் கூடியதால் மாசாகி விட்டார் அல்லது கெட்டு விட்டார். மேலும் இரண்டாம் இடத்து செவ்வாய் யை சனி தனது மூன்றாம் பார்வையால் பார்த்து திருமண அமைப்பை மேலும் பலமில்லாமல் செய்கிறார்.
மேலும் ஒன்பதாம் இடத்து அதிபதியும். பாக்கிய அதிபதியான புதன் பாதக அதிபதியின் வீட்டில் அதாவது சிம்மத்தில் சூரியனின் வீட்டில் அமர்ந்து , ஆறாம் அதிபதி குருவின் நேரடி பார்வையில் உள்ளதால் திருமணம் கைகூடி வரவில்லை. மேலும் சுக்கிர தசையும் இவரின் இளமை காலத்திலேயே முடிந்து விட்டதால் திருமண அமைப்பிற்கான தசையும் நேரமும் கை கூடி வரவில்லை. நவாம்சத்திலும் சுக்கிரன் பனிரெண்டில் அமர்ந்து உள்ளார்.
மேலும் இவரின் இருபத்தியேழு வயதில் வந்த செவ்வாய் தசையும் , அதற்கு பின்னர் வந்த ராகு தசையும் திருமண பந்தத்தை ஏற்படுத்த வில்லை . ஏனென்றால் துலா லக்கினத்திற்கு உரிய சுப கிரக தசை களான சுக்கிரன் ( பத்து வயதிலேயே முடிந்து விட்டது ) , சனி தசை அவரின் அறுபத்தி எட்டு வயதிற்கு பிறகு தான் வரும். புதன் தசையும் அவரின் திருமண வயதில் வர வில்லை
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .குடும்ப வாழ்க்கைக்கான இரண்டாம் இடத்தில செவ்வாயும் மாந்தியும்
திருமணத்திற்கு எதிரான அமைப்பு
2 .செவ்வாயின் எட்டாம் பார்வை மாங்கல்யஸ்தந்தின் மேல்
3 .ஆறாம் அதிபதி குருவின் நேரடி பார்வையில் எட்டாம் வீடும் எட்டு மற்றும் பனிரெண்டுக்குரிய புதன் லக்கினாதிபதி ,எட்டாம் அதிபதி சுக்கிரனின் மீது 4 .லௌகீக வீடான பனிரெண்டில் மேல் சனியும் கேதுவும்
,ஆகவே ஜாதகிக்கு திருமணம் மறுக்க பட்டுள்ளது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
vanakkam sir,
ReplyDelete7th house owner mars in 2nd house with mandhi mandhi spoiled her family life due to 2nd house family house then mars is getting sani vision lagana sukuran combination with mercury mercury is 12th house owner that is why like this unmarried status sir.she is most beautiful person
thula lagana and pooradam sukura star.
ஜாதகி 20 செப்டம்பர் 1950ல் காலை 8 மணியளவில் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ReplyDeleteராசிக்கட்டத்தில் லக்கினத்திற்கு 7ம் இடத்திற்குரிய செவ்வாய் இரண்டாம் இடத்தில் மாந்தியுடன் அமர்ந்தார். எனவே குடும்பம் அமைவதில் சிக்கல் இருந்தது.7ம் அதிபதி தன் வீட்டிற்கு 8ல் மறைந்தார். அது சொந்த வீடாயினும் 8ம் வீடு என்பது திருமணத்தடை ஏற்படுத்தியது.மேலும் சனியின் பார்வை 7ம் வீட்டுக்காரனான் செவ்வாய் மீது விழுந்தது.
ஜாதகிக்குக் குழந்தை பாக்கியமே கிடையாது 5ல் காரகன் குரு. 5ம் வீட்டுக்காரன் சனி 12ல் மறைந்தான் பகைவனுடன் கூட்டு.கேதுவுடனும் கூட்டு. எனவே படுக்கை சுகம் மறுக்கப்பட்டது. திருமணமும் இல்லை குழந்தையும் இல்லை.
நவாம்சத்தில் 7க்குடைய செவ்வாய் 10ல் நீசம் அடைந்து சனி, மாந்தியின் பார்வையால் பாதிக்கப்பட்டார்.திருமணகாரகன் சுக்ரன் நீசம் பெற்று 12ல் மறைந்தார் எனவே படுக்கை சுகம் இல்லை
இக்காரணங்களால் ஜாதகி முதிர்கன்னியாகவே நின்றார்.
ஐயா வணக்கம்
ReplyDelete**லக்கின அதிபதி 12 ஆம் அதிபதி கூட்டு
**7 ஆம் அதிபதி அந்த இடத்திற்கு 8 ல் மாந்தி வுடன் கூட்டு
***2 ல் மான்தி குடும்ப ஸ்தானம் பாதிப்பு
**சுக்கிரன் ___12 ஆம் அதிபர் உடன் கூட்டு__ மேலும் பகை ஸ்தானத்தில்.
வழு இழந்து விட்டார்.
**7 ஆம் அதிபதி, 2 ஆம் அதிபதி செவ்வாய யை சனி பார்வையால்
மேலும் வழு இழக்கிறது.
நவாம்சத்தில்....
7 ஆம் அதிபதி. நீசம்
ஆகிய காரணத்தால் திருமணதடை
ஆகிறது
நன்றி ஐயா
கண்ணன்
1. 7th lord Mars in 2nd house along with Mandi and has 3rd aspect of Sani
ReplyDelete2. Same Mars in Navamsa is in Debilitated house and also has 7th aspect of Sani / Mandi, Sani is strong in own house in Navamsa
3. both ways Mars got weak so marriage got postponed
4. Kalatra karaka / lagna lord Venus in enemy house in Rasi and debilitated house in navamsa
Think Jupiter go char gave guru's grace very late and now he is crossing Moon sign, probably that too brought late marriage.
other notes: The native will be blessed by Guru, will Earn high income from high expertise on luxurious fields. lagna lord Venus and Mercury in 11, getting Gurus aspect from 5th house.
DOB : 20/09/1950 8:30 AM
ReplyDeleteகாரணங்கள்:
1. செவ்வாய் தோக்ஷம் (2ம் இடத்தில் செவ்வாய்)
2. சனி பார்வை 2ம் இடத்திற்கு (3ம் பார்வை)
3. கிரக தோக்ஷம் (சூரியன்/ சந்திரன் உடன் ராகு/கேது இணைவு) 12ம் இடத்தில் சூரியன் / கேது
4. குடும்ப ஸ்தானாதிபதி/7ம் அதிபதி - செவ்வாய் அம்சத்தில் நீசம்
5. லக்னாதிபதி/மாங்கல்ய ஸ்தானாதிபதி - சுக்கிரன் அம்சத்தில் நீசம் மேலும் அம்ச லக்னத்திற்கு 12ம் இடத்தில் உள்ளது
6. குரு பார்வை சுக்கிரன் மேல் உள்ளதால் ஜாதகர் அழகு. ஆனால் குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் புத்ர பாக்யம் குறைவு.
Dear Sir,
ReplyDeleteThe given horoscope 7th lord mars is in 2nd along with maandhi. 2nd lord and 7th lord both are same. Since saturn aspects from 12th place to 2nd place, the 2nd bhava is spoiled.
Maandhi also with mars spoiled the 2nd bhava.
7th lord is spoiled with maandhi. Also sani's 3rd aspect spoiled the 2nd bhava.
Lagna is in papakarthari yogam.
However, lagna lord is in 11th place helped the native for living. So she lived alone and spend her life.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
ஐயா,
ReplyDeleteநான் உங்கள் பழய மாணவன்
அந்த பெண்னின் பிறந்த நேரம் தேதி நேரம் ஊர் கொடுத்தாள் முயற்ச்சி செய்யலாம்
நன்றி
jawahar .p
வணக்கம்.
ReplyDeleteரிசப லக்கினம், தனுசு ராசி ஜாதகி.
1) லக்னாதிபதியும்,களத்திர காரகனுமான சுக்கிரன், நவாம்சத்தில் நீசம் பெற்று 11மிடமான சிம்மத்தில் அமர்ந்து 12ம் அதிபதி வக்கிர புதனுடன் கூட்டணியிலுள்ளார். அவர் மேல் ஆறாமதிபதி வக்கிர குருவின் பார்வையுள்ளது. லக்கினம் வர்கோத்தமம் பெற்றிருந்தாலும், கத்திரியின் பிடியில் வலுவிழந்துள்ளது.
2) குடும்பாதிபதியும், களத்திராதிபதியுமான செவ்வாயும் நவாம்சத்தில் நீசமடைந்து இரண்டில் அமர்ந்துள்ளார். அவருடன் மாந்தியின் கூட்டு வேறு. செவ்வாயின் மேல் 12ல் அமர்ந்துள்ள சனி பகவானின் 3ம் தனிப்பார்வையுமுள்ளது.
3) சயன சுக ஸ்தானமான 12ல் சனி+கேது+சூரியனின் கூட்டணி. ஏழாமிடத்திற்கும், அதன் அதிபதி செவ்வாய்க்கும் வேறு நல்ல கிரகத்தின் பார்வையுமில்லை.
மேற்கண்ட காரணங்களால், அவருக்கு 40 வயதாகியும் திருமணம் கூடிவராமல் போய் விட்டது.கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளாமல் முதிர் கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார்.
Dear sir, My reply is under
ReplyDelete1.Seventh lord is sitting in 8th place from seventh place.
2. Non of planets viewing 7th house.
3.lagna lord is in enemy`s place even though it is in 11 th house.
hence no marriage
Respected Sir,
ReplyDeleteHappy afternoon,
My answer for today's quiz:
The native of the horoscope has not married due to the following reasons:-
1. 7th lord is in 8th place as well as Saturn having aspects over 7th house from 12th house.
2. 7th house or 7th house lord hasn't any good planet aspects.
3. SATURN AND SUN ASSOCIATED IN 12TH HOUSE. SO SHE HAS NOT BLESSED CONJUGAL PLEASURE.
4. DASA IS NOT SUPPORTED FOR HER (RAGHU DASA)
5. IN NAVAMSA, 7TH HOUSE LORD IS DEBILITATED.
Thanking you,
With regards,
Ravi-avn
ஐயா
ReplyDeleteரிஷப லக்கின ஜாதகம் என்கிறீர்கள். ஆனால் இது துலா லக்கின ஜாதகம்.
ஜாதகம் மாறவில்லை என நினைக்கிறேன். எழுத்து பிழையாக யிருக்கலாம்
இந்த துலா லக்கின ஜாதகத்தை அலசுகையில்
ஏழாம் வீட்டிற்குரிய செவ்வாய் இரண்டில் மாந்தியுடன் சேர்க்கை
ஏழாம் வீடும் இரண்டாம் வீடும் கேட்டிருக்கிறது
களத்திர காரகன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் அனால் பகை வீட்டில்
திருமண வயதில் வந்த திசைகளும் கைகொடுக்கவில்லை.
எனவே திருமணம் மறுக்கப்பட்டிருக்கலாம்
K. Ravi
குருவிற்க்கு வணக்கம்,
ReplyDeleteஇந்த ஜதகத்தில் சனி 12ல் அமர்ந்து கடுமையான பாபத்துவம் பெற்று 2ம் வீட்டையும், அதன் அதிபதியையும் பார்கிறார், 7ம் அதிபதி அதற்க்கு 8ல் மறைவு, சுக்கிரன் பாதக இடதில். இளைமையில் நடைபெற்ற தசை அனைதும் அவ யொக சூரிய, சந்திர, செவ்வாய், ராகு. ஆகவே திருமனம் இல்லை. நன்றி.