Astrology: Quiz: புதிர்: அரசியல்வாதியின் ஜாதகம்!
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஹஸ்த நட்சத்திரம் விருச்சிக லக்கினம் கன்னி ராசி. இது ஒரு அரசியல்வாதியின் ஜாதகம். அரசியலில் நுழைந்தவர் பெயரெடுத்து பிரபலமாக இருந்தார். ஜாதகப்படி அவரின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 12-7-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
=======================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஜகதீஸ்வரன்,கானாடுகாத்தான்: லக்னம் வர்கோத்தமம். லக்னாதிபதி செவ்வாய் 11ல் வளர்பிறை சந்திரன் மற்றும் சுக்கிரனுடன்.சுக்கிரன் வர்கோத்தமம் மற்றும் நீச்ச பங்கம். குரு வர்கோத்தமம்.9 மற்றும் 11ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. அரசாங்க கிரகம் சூரியன் 10ல் ஆட்சி.சனி 11 ஆம் அதிபதியுடன் மற்றும் அம்சத்தில் குருவுடன் இணைந்து உச்சம். குரு தசையில் இவருக்கு நல்ல வளர்ச்சி.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteThis horoscope native is having Kalasarpa yogam.
1. 10th lord sun is in 10th own plance. Kendra lord in kendra. Sun is good for political leader, placed in 10th, karmathipathi yoga.
2. Lagna is vargotama and lagna lord in 11th, lucky place.
Thank you,
Yours sincerely,
C. Jeevanantham.
10th house lord(Sun implying politics and leadership) in 10th house(house of profession)
ReplyDelete9th house lord(Moon implying politics and leadership) in 11th house(house of profit)
At the same time 11th house lord(Mercury implying business) in 9th house(house of gifts)
Lord of 3rd house(house of victory) Saturn in 9th house(house of gifts) aspecting 3rd house
Lagna Lord(Mars) too in 11th house could have helped
மூன்று காரணங்களை சொல்லலாம்
ReplyDelete1) லக்னதிபதி 11ல் சசி மங்கள யோகத்தில் இருப்பது
2) 10ல் ராஜ கிரஹம் சூரியன் ஆட்சி
3) 9 & 11 அதிபதி - சந்திரன்/புதன் பரிவர்த்தனை
வெ நாராயணன்
புதுச்சேரி
வணக்கம்
ReplyDeleteதாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
1. விருச்சிக லக்கின ஹஸ்த நக்ஷத்திர கன்னி ராசி ஜாதகரின் லக்கினமே வர்கோத்தமாக உள்ளது. ஆதலால் நினைத்ததை விடா பிடியாக எட்டி பிடிக்கும் மன திடம் கொண்ட ஜாதகர் ஆவார். இவரின் பூர்வ புண்ணிய அதிபதியான குரு பனிரெண்டாம் வீட்டில் வர்கோத்தமமாக இருந்து இவரின் வாழ்க்கையை சமூகத்திற்காக அர்ப்பணிக்க வைத்தது.
2. மேலும் பத்தாம் வீடு அதிபதி சூரியன் தன சொந்த வீட்டிலேயே திக் பலமாக அமர்ந்து அரசியலில் சாதிக்க வைத்தார் மேலும் லக்கின அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சந்திரனுடன் அமர்ந்து சந்திரா மங்கள யோகத்தை செய்து வெற்றி அடைய செய்தது. ஏனென்றால் சந்திரன் சமூக சேவையில் நாட்டம் உண்டாக்கும் கிரகமாகும். அதனால் அரசியல் மூலம் சமூக தொண்டு ஆற்றினார்.
3. இவரின் அணைத்து கிரகங்களும் ராகு கேது பிடியில் கால சர்ப்ப யோகத்தில் இருந்ததால் இளமையில் பல கடினங்களை அனுபவித்து , குரு தசையில் இருந்து அது யோகமாக மாறி அணைத்து வெற்றிகளையும் அரசியலில் தந்தது.
4.நவாம்சத்தில் பனிரெண்டில் உச்சமாக அமர்ந்த சனி குருவுடன் சேர்ந்து அதனை அரசியல் மூலம் செய்ய செய்தது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399

ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 . லக்கினாதிபதி லாபஸ்தானத்தில் பாக்கியாதிபதி சந்திரனுடன்
2 .பத்திற்குரிய சூரியன் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார் அவரே அரசியல்
வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார் (அரசு தொடர்பு)
3 .வாக்குஸ்தானத்தின் மேல் லக்கினாதிபதியின் பார்வை பேச்சு திறமையை கொடுத்துள்ளது
4 .குடும்பஸ்தானதிபதி குரு விரயத்தில் அமர்ந்ததால் ஜாதகர் குடும்ப வாழ்க்கையை துறந்து பொது வாழ்வில் ஈடு பட்டுள்ளார்
5 .லக்கினத்தில் அமர்ந்த கேது ஞானத்தை வழங்கியுள்ளது
6 .லாபாதிபதி புதனும் பாக்கியாதிபதி சந்திரனும் பரிவர்த்தனையில்
7 .வெற்றிக்கான மூன்றாம் இடத்தின் மேல் அதன் அதிபதி சனி, புதனின் பார்வை
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
வணக்கம் ஐயா. 10 7.20 புதிருக்கு பதில். விருச்சிக லக்னம்.லக்னாதிபதியும் பூமிகாரகனுமாகிய செவ்வாய் லாபத்தில் இருக்கிறார். அரச கிரகமான அரசியலுக்குரிய சூரியனார் ஆட்சி திக்பலம் அடைந்ததும் பாக்கியாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை ஆனதும்.விருச்சிக லக்னத்திற்கு பூர்வ புண்ணியாதிபதியும்
ReplyDeleteயோகருமாகிய குரு பகவான் வர்கோத்தமம் பெற்றதும் தைர்ய வீர்ய ஸ்தானாதிபதி சனி பகவான் அம்சத்தில் உச்சபலம் பெற்று தன் வீட்டை பார்த்து பலப்படுத்தியதும் சுக்ரன் நீச பங்கம் பெற்றதும் வர்கோத்தமம் ஆனதும் அடுத்தடுத்து யோக திசைகள் வந்ததும் அரசியலில் ஜாதகர் புகழ் பெறக்காரணமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் லக்னாதிபதி ஸ்தானாதிபதி பாக்கியாதிபதி பார்வை பெற்றதும் ஒரு காரணமாகும். நன்றி வணக்கம்.

வணக்கம். முயற்சி செய்கிறேன்.
ReplyDelete1) சூரியன் இந்த ஜாதகரின் 10க்கு அதிபதி (அதிகாரம்/அரசியலுக்கு உகந்த இடத்தில் உள்ளது)
2) ராகு ரிக்ஷபத்தில் உச்சம்
3) செவ்வாய் பார்வை லக்னத்திற்கு 2ம் இடத்திற்கு (4ம் பார்வை / வாக்கு ஸ்தானம் அரசியலுக்கு உகந்தது)
நன்றி
ஜாதகர் 29 ஆகஸ்டு 1946 ல் மதியம் 12.30 மணி போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.தொழிலுக்குண்டான 10ம் இடத்துக்காரன் சூரியன் 10 லேயே அமர்ந்து ஆட்சி பெற்றார். ராஜ கிரகம் ஆட்சி பெற்று தன் வீட்டிலேயெ அமர்ந்தது அவருக்கு அரசியலில் பெரிய வெற்றியைத்தந்தது.
ReplyDeleteராசி நவாம்சம் இரண்டிலும் லக்கினமும் குருவும் வர்கோத்தமம் பெற்று வலுவானார்கள்.லக்கினாதிபதி செவ்வாய் ராசிக்கட்டத்தில் சர்வலாபமான 11ல் அமர்ந்தார். நவாம்சத்தில் குரு பார்வை பெற்றார். எனவே இது அதிகாரப்பதவியைக்கொடுத்தது.
நவாம்சத்தில் தொழில்காரகனான சனி உச்சம் பெற்று 3ம் இடமான வெற்றி சஹாயஸ்தானமான தன் வீட்டையே பார்த்தது.ராசியிலும் வெற்றி சஹாயஸ்தானத்திற்கு சனியின் பார்வை 9ல் அமர்ந்து.
கால சர்ப தோஷ ஜாதகம் ராகு கொடி பிடித்து முன் செல்லும் கால சர்ப தோஷம். 33 வயது வரை ராகு தசா. 28 வயது முடிந்தவுடன் ராகு தோஷத்தை யோகமாக மாற்றி நற்பலன் கொடுக்கத் துவங்கிவிட்டார்.அடுத்துவந்த குரு தசா தனம் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியின் தசா. ஆகவே அந்த தசாவும் நல்ல பலன் கொடுத்து அவரை அரசியலில் தூக்கிவிட்டது.
பத்தாம் இடத்தில் சூரியன் தன்னுடைய ஆட்சி வீட்டில்
ReplyDeleteலக்கினாதிபதி மற்றும் ஆருக்குண்டான செவ்வாய் பதினொன்றாமிடமாகிய லாபஸ்தானத்தில். கூடவே பாக்கியாதிபதி சந்திரன் மற்றும் ஏழுக்குடையோன் சுக்கிரன் சேர்க்கை.
சுக்கிரன் மற்றும் லக்கினம் வர்கோத்தமம்.
தொழிலுக்குண்டான பத்தாம் வீடும் லாபஸ்தானமான பதினோராம் வீடும் மிக வலுவாக உள்ளது.
இவையே காரணங்கள்
K. ரவி

vannakkam sir,
ReplyDelete10th house sun and 11th hous sukuran chevvai and moon that is why he gets like that political chance sir.
விருச்சிக லக்கினம், கன்யா ராசி ஜாதகர்.
ReplyDeleteகேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம்.
ஜாதகத்தில் ராகு, கேது உச்சம் பெற்றுள்ளன. லக்கினாதிபதி 11மிடத்தில் அமர்ந்துள்ளார்.
10மிட அதிபதி சூரியன் தன் சொந்த ராசியான சிம்மத்தில் இருப்பதனால் தொழில் அரசாங்கம், அரசியலைக் குறிக்கிறது. 11மிடஅதிபதி புதன் மற்றும் 9மிட பாக்கியாதிபதி சந்திரனும் பரிவர்த்தனை யோகத்திலுள்ளனர்.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகர் அரசியலில் நுழைந்து பெயரெடுத்து பிரபலமாக இருந்தார்.
பத்தாம் இடத்தில் சூரியன், சொந்த வீட்டில்
ReplyDeleteசந்திரனும் புதனும் பரிவர்த்தனை
ராகு த்ரிகொணம் மற்றும் சனி கேந்திரத்தில்
குரு மற்றும் சுக்ரன் வர்கோதமம்
குருவின் பார்வை 6ஆம் இடத்தின் மீது. சத்ரு நாசம் மற்றும் மக்கள் செல்வாக்கு
லாப ஸ்தானத்தில் சுக்ரன் மற்றும் செவ்வாய்
இப்படி பல கிரகங்களின் அனுகூல அமைப்பால் ஜாதகர் அரசியலில் பிரபலமாக இருந்தார்