மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.20

ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய பாண்டுரங்கன்!!!!


ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய பாண்டுரங்கன்!!!!

ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் இருந்தான்.
அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை 
அந்தக் காலத்தில் நடந்தே செல்ல வேண்டும். 
ஆகையால்  பயணச் செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான்
இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
திருமண செலவுக்கு  உண்டியல் பணம் உதவியது
பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல, உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்
அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான்
மறுபடியும் உண்டியல் உதவியது
பிறகு ஒரு பிள்ளை அதற்கும் அதே உண்டியல்
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, திருமணம் பேரன், பேத்தி இப்படியே காலம் கழிந்தது
தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார்
ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து, பத்ரிநாத் வந்தடைந்தார்

அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது
பட்டரோ இனி ஆறு மாதங்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் என கூற, முதியவர் அதிர்ந்தார்
பட்டரின் கால்களைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார், முதியவர் அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது
ஒரு முறை அவனை சேவித்து விடுகிறேன் தாங்கள் நடை திறந்தால் என கண்ணீர் விட்டு அழுதார்
பட்டரோ அசைவதாக இல்லை மூடிய நடை திறக்கப்படாது என கூறி நகர்ந்தார்
இவரோ தன் தலை விதி எண்ணி வருந்தினார்
இனி மேல் எந்த காலத்தில் நான் மீண்டும் நடந்து வந்து, இந்த பத்ரிநாதனை சேவிக்க என அழுது கொண்டு புலம்பினார்
பட்டரோ அய்யா மலையை விட்டு அனைவரும் இறங்கப் போகிறோம், வாரும் எனக் கூற கிழவனோ, நீங்க போங்க நான் சிறிது நேரம் அமர்ந்து விட்டாவது வருகிறேன் எனக் கூறினார்

சரி என அனைவரும் இறங்க சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கியது
அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான்
அவன் அந்த முதியவரிடம்,
'ஏ தாத்தா! இங்க என்ன தனிமையில் அமர்ந்து உள்ளீர்' எனக் கேட்க அவரோ அந்த சிறுவனிடம் தன் வயிற்றெறிச் சலைக் கூறி அழுகிறார்
இதைக் கேட்ட சிறுவனோ சரி வாரும் அருகில்தான் நான் தங்கியுள்ள குகை உள்ளது அங்கு வந்து உணவருந்தி பிறகு பேசிக் கொள்ளலாம் என கூறி அவரை அழைத்து சென்றான்
அவருக்கு உணவளித்து தாத்தா உறங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் எனக் கூறிச் சென்றான்
முதியவரும் நாரயணா கோவிந்தான்னு பக்தியோடு நாமஸ்மரணம் செய்து விட்டு உறங்கினார்

பொழுது விடிந்தது
கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தால், கோவில் திறந்துள்ளது.........
கூட்டமோ ஏராளம்........ கிழவனுக்கோ அதிர்ச்சி என்னடா இது! பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார்
நடை திறக்கப்பட்டு உள்ளதே என நேராக பட்டரிடம் சென்று, 'ஏ சாமி கோவில் திறக்கப்படாது என சொன்னீங்க
இப்ப மறுநாளே திறந்து இருக்கீங்கன்னு கேட்க, பட்டரோ யோசித்தார்

இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரம் அல்லவா வந்தவர் என நினைத்து, சரி அய்யா முதலில் நாரயணனை வணங்கி விட்டு வா எனக் கூற இவரும் உள்ளே சென்றார் அங்கே நாரயணன் அந்த சிறுவனாக தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது

ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளலே அடியார் பொருட்டு நீ ஆடாத நாடகம்தான் என்னவோ எம் வேந்தே இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி!!!!!
ஆன்மீக வழியில்
பி சரவணன் சண்முகவள்ளி
------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் ஐயா பழனியப்பனின் மாமன் நாராயணணின் லீலைகள் அருமை ஆனந்தம்.ஓம் நமோ நாராயணா

    ReplyDelete
  2. நெகிழ்ச்சி அளிக்கும் பதிவு

    ReplyDelete
  3. //////Blogger Shanmugasundaram said...
    வணக்கம் ஐயா பழனியப்பனின் மாமன் நாராயணணின் லீலைகள் அருமை ஆனந்தம்.ஓம் நமோ நாராயணா/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    நெகிழ்ச்சி அளிக்கும் பதிவு/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  5. ஒரு காலத்தில் துபாய் கண்ண‌ன் என்ரொரு மாண‌வர், பழனிக்கு பாத யாத்திரைப் பற்றி எழுதினார், இப்பொழுது பி சரவணன் சண்முகவள்ளி அவர்கள் நாராயணனை பற்றி எழுதியுள்ளார். இரைவன் லீலையில் எனக்கு மட்டும் கதவும் திறக்கப்படவில்லை, தரிசனமும் கிட்டவில்லை.. எல்லோருக்கும் நன்மை கொடுக்கும் அந்த ஆண்டவன் பார்வை அடியேன் மேல் என்று படுமோ?..

    ReplyDelete
  6. //////Blogger Th.Sabharinaathan said...
    ஒரு காலத்தில் துபாய் கண்ண‌ன் என்ரொரு மாண‌வர், பழனிக்கு பாத யாத்திரைப் பற்றி எழுதினார், இப்பொழுது பி சரவணன் சண்முகவள்ளி அவர்கள் நாராயணனை பற்றி எழுதியுள்ளார். இரைவன் லீலையில் எனக்கு மட்டும் கதவும் திறக்கப்படவில்லை, தரிசனமும் கிட்டவில்லை.. எல்லோருக்கும் நன்மை கொடுக்கும் அந்த ஆண்டவன் பார்வை அடியேன் மேல் என்று படுமோ?..//////

    படாமல் போகாது. பொறுத்திருங்கள் நண்பரே!!!!

    ReplyDelete
  7. /////Blogger Unknown said...
    Arumai arputham abaaram////////////

    நல்லது. நன்றி!
    உங்கள் பெயரைக் குறிப்பிடவில்லையே சாமி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com