ஜோதிடத்தின் பிரம்மாண்டம்
நமிதாவின் புதுப்படத்தைப் போட்டுக் காட்டியபோது, என்இனிய தமிழ் மக்களே என்று படத்திற்குப் படம் அன்பொழுக அழைக்கும் இயக்குனர் சொன்னாராம்:
"படத்தில் நமீதா மட்டுமே பிரம்மாண்டமாக இருக்கிறார்"
அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று பிரம்மாண்டமாகத் தோன்றும்.
ஆனால் இறைவனின் படைப்பில் பிரபஞ்சம் மட்டுமே என்றைக்கும் பிரமாண்டமானது
அதன் ஒவ்வொரு பகுதியும் பிரம்மாண்டமானது!
இங்கே கோவையிலிருந்து யானைக்கட்டி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தூரம் சென்று, தடாகம் முருகன் கோவிலுக்கு அந்தச் சாலை பிரியும் இடத்தில் நின்று கொண்டு சுற்றிலும் உள்ள மலைகளையும், அதற்குப் பின்புறம் சில்லவுட்டில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்தால்தான், இறைவனின் படைப்பு எவ்வளவு
பிரம்மாண்டம் என்று தெரியும்.
அதுபோல ஜோதிடத்தின் அடிப்படை விதிகளைப் படித்து விட்டு, அதன்அடுத்த பகுதிக்குச் செல்பவனுக்கு அதன் பிரம்மாண்டம் தெரியும்.
கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாக ஜோதிடத்தின் இரண்டு நிலைகளை இன்று உங்களுக்குச் சொல்கிறேன். அப்போதாவது உணருங்கள் அது எத்தனை பிரம்மாண்டமானது என்று!
முடியாதவர்களும், விரும்பாதவர்களும் நமீதாவின் படத்தோடு கழன்று கொள்வது நல்லது!:-)))
----------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள்.உங்கள் ஜாதகம் போலவே இன்னொருவருக்கு அமைய வேண்டும் என்றால் எத்தனை நாட்களாகும்?
ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள்.
என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்: "அறுபது வருடங்களில் அதே போன்ற ஜாதகம் கிடைக்கும்.அதனால் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்!
எவ்வளவு அறியாமை ?
அப்போ அறுபது வயதில் அவரைப் போலவே இன்னொருவர் பிறப்பாரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு இந்திராகாந்தி பிறப்பரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கலைஞர் மு.க. பிறப்பரா?
இல்லை! அது அறிவின்மை!
----------------------------------------------------------------------------------------
இப்பொது சொல்லுங்கள் உங்கள் ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
யோசித்துப் பாருங்கள்
குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்
இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும் ஆண்டுகள்
= 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.
அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும் அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும் பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்
இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான்.இன்னும் லக்கினமும் வேண்டு மென்றால், மறுபடியும் to be multiplied by 12
விடை ஒரு யுகம் ஆகும்.ஒரு யுகத்திற்கு உங்களுடையதைப் போன்ற ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.
நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!
தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
------------------------------------------------------
12 ராசிக் கட்டங்களை வைத்து ஜாதகங்களை எழுதுகிறோம், அதில் லக்கினமும் ஒன்பது கோள்களும் இருக்கும் இடங்கள் (டிகிரியுடன்) குறிப்பிடப்பட்டிருக்கும்
அதை மாதிரியாக வைத்துக் கொண்டு விதம்விதமான ஜாதகங்களை உருவாக்கிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், உங்களால்
எத்தனை ஜாதகங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும்?
சட்டென்று உங்களால் விடை சொல்ல முடியாது!
இப்போது சொல்லித்தருகிறேன். நினைவில் வைத்துக் கொண்டு யாரும் கேட்டால் பொட்டென்று அடியுங்கள் (வாயால்)
ஒரு லக்கினம் + ஒன்பது கோள்கள் = 10 X 12 ராசிகள் = Ten to the power of Twelve = One followed by Twelve zeros = 100,000,00,00,000 - permutation combination
பாதிப்பேர்கள் பொறியாளர்கள்தானே? கணக்கிட்டுப்பாருங்கள்
ஒருலட்சம்கோடிஜாதகங்களைஎழுதலாம்! இன்றையஉலகஜனத்தொகைவெறும் 700 கோடிகள்தான்!-)))
எல்லாம் கணக்கு அய்யா, கணக்கு!
கிளியை வைத்து அறுபது அட்டைகள் என்ற கணக்கில்லை
முழுவதும் தெரிந்தால் உங்களைப் பிரம்மிக்க வைக்கும் கணக்கு!
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
awesome
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteawesome/////
ஆமாம் அற்புதம்தான்.
நன்றி கிருஷ்ணன் சார்!!!
ஜகதீஸ்வரன்,கானாடுகாத்தான்: வணக்கம் அய்யா. ஒரு காலத்தில் ஜோதிடத்தை கிண்டல் செய்தவர்களில் நானும் ஒருவன்.ஆனால் கடந்த 5 வருடங்களாக ஜோதிடத்தின் அடிப்படையைக் கற்று ஜாதகம் எழுதவும் பலன்கள் ஓரளவுக்கு சொல்லவும் வளர்ந்துள்ளேன். நேரிடையாக யாரிடமும் நான் ஜோதிடம் கற்றுக் கொள்ளவில்லை. எல்லாம் இன்டர்நெட் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன். ஜோதிடம் என்னைப் பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteஜகதீஸ்வரன்,கானாடுகாத்தான்: வணக்கம் அய்யா. எனக்கு துலாம் லக்கினம் துலாம் ராசி. லக்கினம் சுவாதி. சந்திரன் விசாகம். தனுசில் கேது சுயசாரம். கும்பத்தில் சனி வக்ரம் சதயத்தில். குரு மேஷத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில். சுக்கிரன் செவ்வாய் ரிஷபத்தில் மிருகசீரிஷம். ராகு மிதுனத்தில் சுய சாரம். சூரியன் கடகத்தில் புனர்பூசம். புதன் கடகத்தில் சுய சாரம். 2013ல் ஆரம்பித்த கேது தசை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. நானும் பல ஜோதிடர்களைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பலன் சொன்னார்கள். அப்படி என்னதான் ஜோதிடத்தில் இருக்கிறது என்று ஆராய முற்பட்டு ஒரு அளவுக்கு முன்னேறியுள்ளேன். என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஜாதகம் பார்க்கவும் எழுதிக் கொடுக்கவும் செய்கிறேன். சரியாக பலன் சொல்லும் ஜோதிடர்கள் மிகமிகக் குறைவு என்பதை உணர்ந்து கொண்டேன். ஜோதிடம் பொய்யல்ல. அது மிகப்பெரிய கடல்.
ReplyDeleteபாரதி ராஜா சொன்னது - அரங்கங்கள் (செட்) பிரமாண்டம் என்று எதிர்பார்த்து வந்தால் இங்கே அங்கங்கள் பிரமாண்டம்
ReplyDeleteஐயா, வணக்கம், ஒரு சந்தேகம், இரட்டையர்களாக பிறப்பவர்களுக்கு ஒரே மாதிரி கிரக அமைப்பு இருக்கும் அல்லவா... இருந்தும் இவருக்கு ஒரே போல் வாழ்க்கை அமையுமா?
ReplyDelete9 th Feb is your birth day Sir. Many happy returns of the day.
ReplyDelete//////Blogger Unknown said...
ReplyDeleteஜகதீஸ்வரன்,கானாடுகாத்தான்: வணக்கம் அய்யா. ஒரு காலத்தில் ஜோதிடத்தை கிண்டல் செய்தவர்களில் நானும் ஒருவன்.ஆனால் கடந்த 5 வருடங்களாக ஜோதிடத்தின் அடிப்படையைக் கற்று ஜாதகம் எழுதவும் பலன்கள் ஓரளவுக்கு சொல்லவும் வளர்ந்துள்ளேன். நேரிடையாக யாரிடமும் நான் ஜோதிடம் கற்றுக் கொள்ளவில்லை. எல்லாம் இன்டர்நெட் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன். ஜோதிடம் என்னைப் பிரமிக்க வைக்கிறது.//////
நன்றி ஜகதீஸ்வரன்!
/////Blogger Unknown said...
ReplyDeleteஜகதீஸ்வரன்,கானாடுகாத்தான்: வணக்கம் அய்யா. எனக்கு துலாம் லக்கினம் துலாம் ராசி. லக்கினம் சுவாதி. சந்திரன் விசாகம். தனுசில் கேது சுயசாரம். கும்பத்தில் சனி வக்ரம் சதயத்தில். குரு மேஷத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில். சுக்கிரன் செவ்வாய் ரிஷபத்தில் மிருகசீரிஷம். ராகு மிதுனத்தில் சுய சாரம். சூரியன் கடகத்தில் புனர்பூசம். புதன் கடகத்தில் சுய சாரம். 2013ல் ஆரம்பித்த கேது தசை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. நானும் பல ஜோதிடர்களைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பலன் சொன்னார்கள். அப்படி என்னதான் ஜோதிடத்தில் இருக்கிறது என்று ஆராய முற்பட்டு ஒரு அளவுக்கு முன்னேறியுள்ளேன். என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஜாதகம் பார்க்கவும் எழுதிக் கொடுக்கவும் செய்கிறேன். சரியாக பலன் சொல்லும் ஜோதிடர்கள் மிகமிகக் குறைவு என்பதை உணர்ந்து கொண்டேன். ஜோதிடம் பொய்யல்ல. அது மிகப்பெரிய கடல்.//////
உங்களுடைய விரிவான விளக்கத்திற்கு நன்றி ஜகதீஸ்வரன்
/////Blogger Sridhar said...
ReplyDeleteபாரதி ராஜா சொன்னது - அரங்கங்கள் (செட்) பிரமாண்டம் என்று எதிர்பார்த்து வந்தால் இங்கே அங்கங்கள் பிரமாண்டம்/////
தகவலுக்கு நன்றி நண்பரே!!!!
/////Blogger Navaneethan said...
ReplyDeleteஐயா, வணக்கம், ஒரு சந்தேகம், இரட்டையர்களாக பிறப்பவர்களுக்கு ஒரே மாதிரி கிரக அமைப்பு இருக்கும் அல்லவா... இருந்தும் இவருக்கு ஒரே போல் வாழ்க்கை அமையுமா?/////
ராசிக் கட்டங்கள் மட்டும் ஒரே மாதிரி இருக்கும். மற்ற உட்கட்டங்கள் எல்லாம் மாறிவிடும்!!!! எனது கேள்வி பதில் பகுதியைப் படியுங்கள். அதில் விவரமாக எழுதியுள்ளேன்
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete9 th Feb is your birth day Sir. Many happy returns of the day./////
நல்லது. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!