அன்பில் உருகுவது எப்படி?
அந்த காலத்திலேயே திரு மாணிக்க வாசகர் தனக்கு விருப்பமானதை எப்படி அழகாக நெறிப்படுத்தி எழுதியுள்ளார் பாருங்கள், படியுங்கள் !!!
ஈசனே நேரில் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்கிறார்! அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள்!
வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்டல் முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ
வேண்டியா என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள்செய்தாய்!
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டெனில்,
அதுவும் உந்தன் விருப்பமன்றோ!
"எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்! எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்!
எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பம் தான் என்று மணிவாசகர் ஈசனை நோக்கி உருகி பாடுகிறார்!
"ஆனாலும் சிவபெருமான் மாணிக்கவாசக பெருமானை விடுவதாக இல்லை! மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள்! என்று! மீண்டும் மாணிக்கவாசகர் பாடுகிறார்!
உற்றாரை யான் வேண்டேன்! ஊர் வேண்டேன் ! பேர் வேண்டேன்!
கற்றாரை யான் வேண்டேன்! கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
"சொந்தங்கள் எனக்கு வேண்டாம்!, ஊரும் வேண்டாம்!, நல்ல பெயர் வேண்டாம்!, நல்ல படிப்பு அறிவு வேண்டாம்! உன் அருள் இருந்தால் இது வெல்லாம் தானாகவே கிடைத்து விடும் தானே!
"குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே! நான் உன் திருவடிகளைத் தேடி, தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும்!. பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்!
-----------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================================
Very nice Sir.
ReplyDeleteதமிழ் அமுது. அருமை.
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery nice Sir./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteதமிழ் அமுது. அருமை.//////
நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!
இதுவே மெய் ஞான அமுது. இதைப் பெற்றவர் பெரும் பாக்கியசாலிகள்.இந்த நிலையை பெறுவதே மாந்தரின் இலக்காக அமைய வேண்டும்.
ReplyDeleteமுருகன் ஜெயராமன்
புதுச்சேரி
//////Blogger வகுப்பறை said...
ReplyDeleteஇதுவே மெய் ஞான அமுது. இதைப் பெற்றவர் பெரும் பாக்கியசாலிகள்.இந்த நிலையை பெறுவதே மாந்தரின் இலக்காக அமைய வேண்டும்.
முருகன் ஜெயராமன்
புதுச்சேரி///////
நல்லது. நன்றி நண்பரே!!!!
வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
ReplyDeleteவேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.
அருமை ஐயா,
என்றும் அன்பும் நன்றியும்.
அன்புடன்
விக்னசாயி
=====================