Astrology: ஜோதிடப் புதிர்: நோய் வந்த காரணம் என்ன கண்ணம்மா?
கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி. ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள்.
சரியான விடை 24-2-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி. ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள்.
சரியான விடை 24-2-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Mars dasa is running...mars for 6 th house responsibility sits in enemy house 12 th house...Saturn also looks mars by his 7 th sight....
ReplyDeleteசெவ்வாய் மஹா தசை நிம்மதியை குலைக்க காரணமாயிற்று.
ReplyDeleteசெவ்வாய் 6ம் அதிபதியாகி, விரயத்தில் நின்று அவரது வீட்டில் பகை பெற்று அமர்ந்தது உள்ள 8ம் அதிபதி சனியுடன் நேருக்கு நேர் பார்வையில் உள்ளார்.
6, 8, 12 இடங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் பெற்று 6ம் அதிபதியின் தசையில் கவலை கொள்ளும் வகையில் ரோகம் அளித்தது.
வணக்கம். 31 மார்ச் மாதம் 1957, காலை 11.54:00, உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசி அமாவாசை திதி (இடம்: சென்னை)
ReplyDelete1. மிதுன லக்கினம். லக்கினாதிபதி புதன் (4 பரல்) உச்சமான சுக்கிரனுனும், சந்திரனுடனும் சேர்ந்து குருவின் 7ம் பார்வையில் 10ம் வீட்டில் அமர்ந்து உள்ளார். எதையும் தாங்கும் தைரியம் இருக்கும்.
2. 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் (5 பரல்) 12ல் அமர்ந்தால் வாழ்க்கை தொல்லைகள், துயரங்கள் நிறைந்ததாக இருக்கும். ஒழுக்கமில்லாமல் இருப்பார்.
3. 6ம் வீட்டில் சனி (2 பரல்) அமர்ந்து 7ம் பார்வையால் 12ல் அமர்ந்துள்ள 6ம் வீட்டு அதிபதி செவ்வாயை தன்னுடைய நேர் பார்வையில் வைத்துள்ளார். ஆரோக்கியம் இல்லாதவர். 6ல் சனி இருந்தால் அடி வயிறு சமந்தமான நோய் உண்டாகும்.
4. 2018 முதல் ஜாதகருக்கு செவ்வாய் தசை ஆரம்பம். 62 வயதில் (2019-2020) 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் மகா தசையில் ராகு புக்தியில் கொடிய நோய் ஆரம்பமானது.
இந்த கால கட்டத்தில் கோள் சாரத்தில் 12ல் செவ்வாய் அமர்ந்து 8ம் பார்வையால் சனியை பார்ப்பதால் தீவிரமான நோய் ஏற்பட்டது . லக்கினத்தில் ராகுவும் 7ல் கேதுவும் சனியும் சேர்ந்து கொடிய நோய் உண்டாக்கினார்கள்.
அடுத்து வந்த செவ்வாய்-குரு தசையில் குருவின் 9ம் பார்வை 12ம் வீட்டில் உள்ள செவ்வாய் மீது இருப்பதால் நோயிலிருந்து நிவாரணம் அளிப்பார்
5. 5ல் ராகுவினால் புத்திர தோஷம் ஏற்பட்டது. 5ம் வீட்டில் (20 பரல்) குருவின் பார்வையில்லாமல் 5ம் வீடு பலவீனமானது. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம். குருவின் 7ம் பார்வையால் தோஷம் இல்லாமல் செய்து விட்டார்.
சந்திரசேகரன் சூர்யநாராயணன்
ஐயா,
ReplyDelete22-02-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் மிதுன லக்ன ஜாதகம்.
62 வயதில் ஜாதகருக்கு செவ்வாய் தசை ஆரம்பமாகும். செவ்வாய் ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதியாவார். அவர் விரய ஸ்தானத்திலிருந்து, தன் வீடான ஆறாம் வீட்டை பார்க்கிறார். ஆறாம் வீட்டில் இன்னொரு பாவியான சனி இருக்கிறார். எனவே, ஜாதகருக்கு அந்த வயதில் புற்று நோய் வந்தது.
அ.நடராஜன்
சிதம்பரம்.
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஇந்த ஜாதக அலசல் தங்களால் கடந்த 2012ம் ஆண்டு கீழ்க்கண்ட இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
http://classroom2007.blogspot.com/2012/04/astrology_23.html
அதனால் நான் என்னுடைய அலசல் பதிலை எழுதவில்லை.
அதை படிக்கும் போது தங்கள் தங்கை கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2010 பிப்ரவரி திங்கள் 17ல் அமரராகி விட்டது தெரிய வந்தது. ஆழ்ந்த இரங்கல்கள்.
அந்த இணைப்பில் "என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று எழுதியுள்ளீர்.
அதற்கான சமயம் வந்து விட்டது என நினைக்கிறேன். தங்களின் அறிவிப்பை விரைவில் எதிர் நோக்கும்,
இரா. வெங்கடேஷ்.
பொதுவாக ராகு, செவ் மற்றும், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயைக்கான காரணங்கள் .
ReplyDeleteஇந்த உபய லக்கின ஜாதகர்,. ஆறாம் வீட்டதிபதி செவ்வாய் பன்னிரெண்டில் இருந்து ஏழாம் பார்வையாக தன் வீட்டை பார்க்கிறார்
மற்றும் ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம்.
ஆறாம் வீடு என்பது பிணியை பற்றி கூறுவது
பாதகாதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் செவ்வையை (ஆறாம் அதிபதியை) பார்க்கிறார்.
வணக்கம் ஐயா,1)6ம் அதிபதி செவ்வாய்,12ல் அமர்ந்து 6ம் வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார்.சொந்த வீட்டை பார்த்தாலும்,விரையத்தில் அமர்ந்து பார்பதால் தீமையே.மேலும் அவர் வர்கோத்தமம்.6ல் சனி பகவான் அமர்வு.அவர் லக்கின சுபரானாலும்,6ல் மறைந்து செவ்வாய்
ReplyDeleteஆதிக்கத்தில்.எனவே 6ம் அதிபதி செவ்வாய் தசாவில் சனி சம்மந்தபட்ட புற்று நோயை கொடுத்தார்.நன்றி.
வணக்கம்
ReplyDeleteதங்கள் புதிருக்கான பதில்
புற்று நோய் 62 இந்த மனிதரை தாக்க காரணங்கள்
பொதுவாக நோய் வர ஆறாம் இடத்து கிரகமும் ஆறாம் இடத்து அதிபதி தான் காரணம், இதில் ஆறாம் இடத்தில் சனி அமர்ந்து ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய் யை பார்ப்பதால் ஜாதகரை புற்று நோய் தாக்கியது .
மேலும் ஆறாம் இடத்து அதிபதியின் தசை யான செவ்வாய் தசை சனி புக்தி யில் புற்று நோய் தாக்கியது .
மேலும் சுக ஸ்தான அதிபதி புதன் நேச பங்கம் பெற்று அஸ்தங்கதம் ஆனதும் , எட்டாம் இடத்து அதிபதியின் புக்தி ஆறாம் இடத்து அதிபதியின் தசை இரண்டும் புற்று வந்ததின் கான முக்கிய காரணமாக உள்ளது .
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
தொண்டையில் வந்த புற்று நோயா?
ReplyDeleteமிதுன லக்கணத்துக்கு பாவியான செவ்வாய் தசையில் அவருக்கு புத்து
ReplyDeleteநோய் வந்துவிட்டது அவர் 6 ஆம் அதிபதி 12 இல் இருக்குது அப்பறம் சந்தரன் சுகுரான் கூட இருக்குது செவ்வாய் சனி பார்வையில் அவர் 8 அதிபதி அவர் செவ்வாய் வீட்டில் இருந்து பார்க்கிறார் மேலும் சனியை செவ்வாய் பார்க்கிறார் விரய அதிபதி தசையில் புத்து நோய் வந்துவிட்டது
நோய் வீடான 6-க்கு அதிபதி செவ்வாய் வர்கோத்தம பலம் பெற்று, 12-ல் மறைந்து தன் ஆறாம் வீட்டை பார்க்கிறார்.
ReplyDeleteஆறாமதிபதியும் பாவருமான செவ்வாயும், அஷ்டமாதிபதியும் பாபருமான சனியும், ஒருவரை ஒருவர் சமசப்தம நிலையில் பார்க்கிறார்கள்.
ஆறாம் வீட்டில் 8-ம் அதிபதி, 12-ல் ஆறாம் அதிபதி, ஆறாம் அதிபதி பார்வை 6-ல், 8-ம் அதிபதி பார்வை 12-ல் என்று, மறைவிடங்களும், மறைவிட அதிபதிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது நல்லதல்ல.
லக்னாதிபதி புதன், ராசி (சந்திரன்), இருவருக்கும் வீடு கொடுத்த குரு ஆகிய மூவரும் அம்சத்தில் நீசம்.
::: ஐ எஸ் ஃபெர்னாண்டோ
6 th disease house occupied by 8 th house lord Saturn. Both 6 th snd 8 th house lords Mars and Saturn look at each other directly. 6 th housr lord hidden 22 th house. So most probably the disrase affected in 6 th house lord' s dasa that is Mars dasa.
ReplyDelete