மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.2.19

Astrology: Jothidam: Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ? ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?


Astrology: Jothidam: Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ? ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு அவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலுமே பிரச்சினைகள், தொல்லைகள், துன்பங்கள், உறவு, நட்பு வட்டாரங்கள், குடும்பம், நிதிநிலை, வேலை என்று அனைத்திலுமே துன்பம். ஒன்று என்றால் பரவாயில்லை. பத்து என்றால் மனிதர் எப்படித் தாங்குவார்? நொந்து போய் விட்டார்.

கேள்வி இதுதான். அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 17-2-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. செவ்வாய் (1,8), பாதக ஸ்தானத்தில், பாதகாதிபதி சனி 8இல், இருவரும் பரிவர்த்தனை யோகத்தில்.... செவ்வாய் 8 க்கு நான்கில், லக்னத்திற்கு பாதகத்தில் ( செவ்வாய் தசை அட்டமாதிபத்யம் மற்றும் பாதகமே செய்யும் - 38 வயதிலிருந்து)... செவ்வாய் சனி இருவரும் பகை வீட்டில்... 8இல் இராகு வேறு, சனி சாரத்துடன்.... கேது சாரமும் சனி பார்வையும் 6 ஆமிடத்திலும் நின்ற குரு பார்வைக்கு பலமில்லை... அவமானம், துரோகம், பிணி, கடன் அனைத்தும் தலைவிரித்து ஆடும் நிலை... சிறுநீரக மற்றும் பாலுறுப்பு சம்பந்தமான, ரத்த சோகை போன்ற பிரச்சனைகளும் வரலாம்....

    ReplyDelete
  2. சுக்கிர தசை, சூரிய தசை, சந்திர தசை கொடுத்த சாதக நிலைமையினை, லக்கினாதிபதியின் தசை கொடுக்க மறுத்ததன் காரணம்...
    செவ்வாய் அட்டமாதிபதியாகி சனியுடன் பரிவர்த்தனை பெற்றது மட்டுமலல்ல, சனி 10ம் அதிபதியாகவும் உள்ளது நிதிநிலை வேலைத் துன்பங்களை அளித்தது.
    மேலும் இவ்விருவர் பார்வையும் குடும்ப ஸ்தானத்தில் விழுவது குடும்பம் உறவு மற்றும் துன்ப நிலையினையும், செவ்வாய் 8ம் பார்வையினால் 6ம் வீட்டையினையும் சனி ராகுவுடன் கூட்டுச் சேர்ந்து 10ம் பார்வையினால் குருவை பார்ப்பதும் தொல்லையை அளிக்கக் கூடிய அமைப்பு என கருத முடிகின்றது.
    கேது சகிதம் மாந்தி அமர்ந்து பிரச்சனம் வேறு பண்ணுகின்றார். மொத்தத்தில் செவ்வாய் தசை தொடங்கியபின்னர்(சுய தசை என்ன செய்தது ,,???) கஷ்டத்தில் உழன்றார் என்பது சாராம்சம்.

    ReplyDelete
  3. வணக்கம்

    என்ன நினைத்து என்னை படைத்தாயோ கேள்விக்கான பதில்

    பத்து வித கஷ்டத்திற்கான காரணங்கள்

    1. லக்கின அதிபதி செவ்வாய் மற்றும் ராசி அதிபதி குரு நவாம்சத்தில் பன்னிரண்டில் மறைவு . விரய வாழ்க்கை .

    2. ராசி கட்டத்தில் குடும்ப ஸ்தானத்தில் மற்றும் எட்டாம் இடத்தில் கேட்டு மற்றும் ராகு , மேலும் ராகு உடன் சனியின் கூட்டு .
    இது பலவித கஷ்டங்களை கொடுத்தது .

    3. ஏழாம் இடத்து அதிபதி சுக்கிரன் நவாம்ச கட்டத்தில் ராகு உடன் சொந்த வீட்டில் கூட்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவு அமையவில்லை

    4. லக்கின கட்டத்தில் இரண்டாம் இடத்தில் மாந்தி குடும்ப வாழ்வை மேலும் காலி செய்தது .

    5. லக்கின கட்டத்தில் லக்கின அதிபதி செவ்வாய் ராகு வின் நட்சத்திரத்தில் அமர்ந்து பலன் அளிக்க தவறியது .

    6. ஐந்தாம் இடத்து அதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைவு . பூர்வ புண்ணியத்தையும் காலி செய்தது.

    7. நவாம்ச கட்டத்தில் லக்கினத்தில் சனி சந்திரன் இணைவு புனர்பூ தோஷத்தை உண்டாக்கி குடும்ப வாழ்வை பிரித்தது.

    8. நான்காம் இடத்து அதிபதி நான்கிற்கு ஆறில் அமர்ந்து சுகத்தை கெடுத்தது .

    நன்றி

    அன்புடன்
    சந்திரசேகர ஆசாத்
    MOB. 8879885399

    ReplyDelete
  4. வணக்கம் சார்
    மேஷ லக்கணத்துக்கு சுகுரா தசை சுகம் தராது 2 மாந்தி கேது இருக்குது 2 இல் சனி பார்வை 8 இல் சனி நீண்ட ஆயில் இதுசுகத்துக்கு சந்தோசத்துக்கும் ஏற்றது இல்லை 7 ஆம் அதிபதி சுகுரான் பாப்பா கத்திரி தோஷம் அடைந்தார் அவர் 2 ஆம் அதிபதி கூட 8 இல் ராகு மனைவி நல்லாவா இல்லை செவ்வாய் சனி பரிவர்த்தனை ஆனது எல்லாரும் சொல்லுகின்றார் கல் மேஷ லக்கணத்துக்கு செவ்வாய் நல்லது செய்யாது
    மேஷ லக்கணத்துக்கு லக்கினாதிபதி செவ்வாய் நல்லது செய்யாது கரணம் 8 ஆம் அதிபதி செவ்வாய் தசை ரக்து தசை நல்ல இருக்காது புதன் பாவியாகி விட்டார் பாக்கிய அதிபதி குரு சனி பார்வை பெற்றது குரு புத்திர தன கிரகம் லக்கின புத்திர கரண் சூரியன் அந்த வீட்டுக்கு 12 இல்

    ReplyDelete
  5. - லக்கினாதிபதி பாதக ஸ்தானத்தில்
    - பாதகாதிபதி எட்டாமிடத்தில்
    - அவர்கள் இருவரும் பரிவர்த்தனை
    - செவ்வாய் தசை தொந்தரவை ஆரம்பித்தது
    - அதன் பின் எட்டில் உள்ள ராகுவின் தசை பிரெச்சனையை தொடர்ந்தது அல்லது பெரிதாக்கியது
    - இரண்டில் உள்ள கேது அந்த வீட்டை ஆப் செய்து விட்டது மேலும் மாந்தி தொடர்பு சில விபத்துக்களையும் அல்லது இழப்புகளையும் காட்டுகிறது
    - சந்திரன் கத்திரி யோகத்தில் (ஒரு புறம் சனி ராகு மறுபுறம் செவ்வாய்)

    இவை அனைத்தும் பிரச்னை தொடர வழி வகுத்தது

    ReplyDelete
  6. ஐயா கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி பதினொன்றில் சிறுவயதிற்கு காரகர்
    2 .பின் வந்த நீச கேது தசை இளம் சிறுவயதில்

    3 .அதன் பிறகு வந்த சுக்ர சூரிய சந்த்ர தசை அதிபர்கள் கேந்திரத்தில்
    4. எட்டாம் அதிபதி செவ்வாய் திசை ராகு புத்தியில் பிரச்சனைகள் ஆரம்பமாகி இருக்கலாம்
    நன்றி,
    தங்களின் விடையை ஆவலுடன் எதிநோக்கி

    ReplyDelete
  7. dear sir,
    jadagar may be in chandra dasa and elarai sani (jenma sani) period.
    thanks&rgds

    ReplyDelete
  8. Good morning sir the person was born on 21/07/1956 12.05am place Coimbatore. Due to Dainya parivarthanai between Mars and saturn becomes misery, suffering in horoscope it is inauspicious yoga and this happens during Mars dasa saturn bukthi.But later he will overcome all problem due to powerful yogas in horoscope

    ReplyDelete
  9. ஆசிரியருக்கு வணக்கம்.

    "Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ? ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?"
    மேஷ லக்கினம், தனுர் ராசி ஜாதகர்.
    அவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம்?
    1) கர்மாதிபதி சனி 8ல் ராகுவுடன் சேர்ந்து மறைவு. 8, 11 அதிபதிகள் செவ்வாய் மற்றும் சனி தைன்ய‌ பரிவர்த்தனையில் உள்ளனர். ஜாதகரின் 38ம் வயதில் வந்த செவ்வாய் தசை, ராகு புத்தியில் கஷ்டங்கள் துவங்கின.இருந்த வேலையும் போயிற்று.
    2) தனஸ்தானத்தில் கேது, மாந்தி கூட்டணி நிதி நிலைமையை மோசமாக்கியது. தனாதிபதி மூன்றில் கத்திரியின் பிடியில் சிக்கி ஜாதகரின் கஷ்டங்களை அதிகபடுத்தினார்.
    3)அடுத்து வந்த ராகு தசை ஜாதகரை புரட்டி போட்டது. குடும்பம், உறவு மற்றும் நண்பர்கள் ஜாதகரை விட்டு விலகினர்.
    4) பின் வந்த குரு தசை நிலமையை ஓரளவு சீராக்கியிருக்கும். (லக்கினாதிபதி செவ்வாய் குருவின் பார்வையுடன்).
    வாத்தியாரின் அலசல் பதிலுக்கு காத்திருக்கும்,

    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete
  10. வணக்கம். 21 ஜூலை மாதம் 1956, காலை 00.14:00, மூல நட்சத்திரம் மேஷ ராசி (இடம்: சென்னை)
    1. மேஷ லக்கினம் லக்கினாதிபதி செவ்வாய் கும்ப ராசியில் 11ம் வீட்டில் குருவின் 7ம் பார்வையில் உள்ளார். 8ம் வீட்டிற்கும் அவரே அதிபதி.8ம் வீட்டு அதிபதியின் பார்வை குருவின் மீது உள்ளது

    2. அதிகமான கஷ்டத்தை கொடுக்க கூடியது 8ம் வீடு . 8ம் வீட்டில் சனியும் , ராகுவும் ஒன்று சேர்ந்து இருந்தால் கொடிய நோய் உண்டாகும் .

    If Saturn occupies the 8th, the native will suffer from leprosy and fistula in the anus, or pudendum and will fail in his undertakings - Saravali

    3. 38 வயதில், 1994ல் செவ்வாய் -குரு புக்தியில் கஷ்டம் ஆரம்பித்தது . அந்த நேரத்தில், கோச்சாரத்தில் குருவும், ராகுவும் 6ம் வீட்டில் இருப்பதால் நோய் ஆரம்பமானது. ஜாதகத்தில் 8ம் வீட்டின் அதிபதி 7ம் பார்வை குருவின் மீது இருப்பதால் கஷ்டங்கள் அதிகமானது


    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com