மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.6.18

எது வரம்?


எது வரம்?

எழுதியது  யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

 தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய்  சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் 
கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம்  வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால்  எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர்  சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது  அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்”  என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி  அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என்  அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு  இருந்துச்சுப்பாஅது சரிதானேன்னு தோணுச்சு அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களில் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். 
அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா  வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி  அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார். உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை 
வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா நீதான என் சொத்து அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? 
பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப்  பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

 *தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம்  நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்*  - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர்  வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது  கடலில் கொட்டிய பெருங்காயமே*.

 தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று  போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று  போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌  *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌  *ஆகவே தோற்று போ,* தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..
-------------------------------------------------------
படித்தத்தில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir very useful information and excellent thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    கண்கள் குளமாயின, வாத்தியாரே!
    என்னவொரு மனம் படைத்த வள்ளல்
    அந்தத் தந்தை! இப்படிப்பட்டவரையா
    அந்தப் பையன் ஏமாற்றி மாதா மாதம் பணம் வாங்கி செலவழித்தான்!? மனம்
    புண்படுகிறதே படிக்கும் போதே?
    எப்படியய்யா இப்படி ஒரு மகன்?!
    இதை எழுதிய கைகளுக்கு என்
    கண்ணீர்த் துளிகள்!
    உங்கள் மனம் எப்படி இருந்நதையா?

    ReplyDelete
  3. இதை எழுதியது திராவிட மாயை சுப்பு என்று நினைக்கிறேன்.அல்லது தினமணி வமு முரளி.

    ReplyDelete
  4. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information and excellent thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  5. ////Blogger Subathra Suba said...
    Good morning sir super/////

    நல்லது. நன்றி சகோதரி!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கண்கள் குளமாயின, வாத்தியாரே!
    என்னவொரு மனம் படைத்த வள்ளல்
    அந்தத் தந்தை! இப்படிப்பட்டவரையா
    அந்தப் பையன் ஏமாற்றி மாதா மாதம் பணம் வாங்கி செலவழித்தான்!? மனம்
    புண்படுகிறதே படிக்கும் போதே?
    எப்படியய்யா இப்படி ஒரு மகன்?!
    இதை எழுதிய கைகளுக்கு என்
    கண்ணீர்த் துளிகள்!
    உங்கள் மனம் எப்படி இருந்நதையா?/////

    நினைவுகூர்ந்து அதை வெளிப்படையாக எழுதிய மேன்மைக்கு அவரைப் பாராட்டுவோம்!!!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    இதை எழுதியது திராவிட மாயை சுப்பு என்று நினைக்கிறேன்.அல்லது தினமணி வமு முரளி.//////

    இருக்கலாம். யாராக இருந்தாலும் அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம் கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com