Cinema: அதிகமாக பேசப்பெற்ற திரைப்பட நாயகி!!!
அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.
இன்றைய நாயகிகள் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, என நம்பர் ஒன் நடிகைகள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஒரே உருவெடுத்து கதாநாயகியாக இன்று நடிக்க வந்தாலும் ஒருவரைப் பற்றி பிரமிக்காமல் இருக்க முடியாது.அவர் தான் கன்னடத்துப் பெண்மணி, அபிநய சரஸ்வதி என்று அன்புடன் எல்லோராலும் அழைக்கப்படும் பைரப்பா சரோஜாதேவி.
காதல் நாயகனிடம் ஒரு கெஞ்சல் மொழி,
பாசத்துக்குரிய தந்தையிடம் ஒரு கொஞ்சல் மொழி,
அன்பானவர்களிடம் ஒரு கிள்ளை மொழி என தத்தைக் கிளிக்கே வித்தை கற்றுத் தந்தவர் இவர். எந்தக் கோணத்திலும் இவர் பார்வைக்கு மிகவும் அழகானவர். பெரும்பாலான டைரக்டர்கள் கேமராவை இவருக்குப் பின் வைத்து முன்னால் நடந்து போகச் சொல்வார்கள். ஆனால் இவருடைய ஒப்பனைதான் சற்று
ஒவராக இருக்கும்.
திரையில் இவருக்கு கிடைத்த பாடல்கள் - காதல் பாடல்களாகட்டும் சரி, அல்லது சோலோ பாடல்களாகட்டும் இவருடைய சாதனை வீச்சை அதிகரிக்கவே செய்தன.
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்,
உன்னை ஒன்று கேட்பேன்,
லவ் பேர்ட்ஸ் என்று பட்டியலிட ஆரம்பித்தால், நூறு பாடல்களுக்கு மேல் இவர் பெயரைச் சொல்லி வரிசைகட்டி நிற்கும்.
திரை உலகில் கதாநாயகனாக ஜொலித்த அன்றைய ஜாம்பவான்கள் பலர் இவருடைய கடைக்கண் காதல் பார்வைக்கு சொக்கித்தான் போனார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நடிகர்கள் தான் இப்படி எனில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என இவருக்கு காதல் விசிறிகளாக இருந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.
இவர் காலத்தில் நடிகை சாவித்திரி மார்க்கெட் கொடிகட்டிப் பறந்தாலும், மயிரிழையில் அவரை ஓவர்டேக் செய்து விட்டார் அபிநய சரஸ்வதி. சாவித்திரி பல சிக்கல்களை சந்தித்து சிரமத்திற்குள்ளாகி தவறான முடிவுகளால் பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டதால் சரோஜாதேவி அவரை ஓவர்டேக் செய்தார்.
மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு நாடோடி மன்னன் தொடங்கி அரச கட்டளை படம் வரை எல்லோரையும் விட கச்சிதமாகப் பொருந்தியது சரோஜாதேவி மட்டுமே. எம் ஜி ஆர் அவர்கள் தனது நாடோடி மன்னன் படத்திற்காக சாதாரண நடிகையாக இருந்த அவரை ஒப்பந்தம் செய்ததும், எம்ஜிஆருடன் இவர் நடிக்கிறார் என்ற செய்தி மின்னல் வேகத்தில் பரவி, ஒவர் நைட்டில் ஒன்றல்ல இரண்டல்ல ,முப்பது படங்களில் ஒப்பந்தமானார் சரோஜாதேவி.
அதுதான் எம் ஜி ஆரின் முகராசி, கைராசி. அது போல் நடிகர் திலகத்திற்கு பாகப்பிரிவினை தொடங்கி ஆலயமணி, புதிய பறவை, பாலும் பழமும் என எத்தனை படங்கள்.ஜெமினியோடு கல்யாணப் பரிசு முதல் பணமா பாசமா வரை பல படங்கள். எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு,இப்படி ஒரு ஸ்ட்ராங் பவுண்டேஷன் இவரைத் தவிர வேறு எந்த நடிகைகளுக்கும் கிடைக்கவில்லை.
இதனால் பல நடிகைகளுக்கு இவர் மீது பொறாமை கூட இருந்தது. சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா போன்ற தமிழ் திரை உலகில் நடிகைகளான இவர்கள் நடனம் அவ்வளவாக தெரியாவிட்டாலும், அப்போது கொடி கட்டிப் பறந்த நாட்டியப் போராளி பத்மினியையே தங்களுடைய நளினமான பாவனைகளாலும், நடிப்பாலும் மிரட்டியவர்கள்.
அறுபதுகளை தமிழ்த் திரை உலகை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டவர் சரோஜாதேவி. இரண்டு மகன்கள் இருந்தும் எந்த டி.வி. பேட்டியிலும் அவர்களைக் காட்டியதே இல்லை. ஒரு காலத்தில் இவருடைய கால்ஷீட்டிற்காக வரிசை கட்டி நின்ற படாதிபதிகள் ஏராளம். அந்த மகத்தான பெருமை நடிகை சரோஜாதேவிக்குப் பின் வேறு யாருக்கும் எந்த நடிகைக்கும் இவர் அளவு மேடை கிடைத்ததில்லை.
ஹொன்னப்ப பாகவதரால் அடையாளம் காணப்பட்டு தன் சிறந்த பங்களிப்பை தமிழ் திரை உலகிற்கு அளித்த அந்த மகத்தான நடிகை சரோஜாதேவி இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்.
-----------------------------------------
7-1-1938 ல் பெங்களூரில் பிறந்தவர் திருமதி சரோஜா தேவி (தற்போது 80 வயது நிறைவு பெற்றவர்)
Saroja Devi was born in Bangalore, Her father Bhairappa worked for the police department, and her mother Rudramma was a homemaker.She was their fourth daughter. Her grandfather, Mayanna Gowda wanted her to be given away for adoption, but her father refused to do so. Bhairappa asked her to learn dancing, and encouraged her to take up acting as a career. A young Saroja Devi was accompanied often by her father to studios and he would patiently tie on her salangais and massage her swollen feet after her dancing stints. Her mother gave her a strict dress code: no swimsuits and no sleeveless blouses, which she followed for rest of her career.She was first spotted by BR Krishnamurthy when she was singing at a function at the age of 13 but she declined the film offer.
---------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very good info about Sarojadevi mam thanks sir vazhga valamudan
ReplyDelete////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very good info about Sarojadevi mam thanks sir vazhga valamudan///
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
பழமை என்றும் போற்றத்தக்கது!
ReplyDeleteதமிழ் சினிமா செய்திகள்
Dear sir,
ReplyDeleteIt is very informative.