ஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தான முதல்வர்!
காமராஜர் முதல்வராக இருந்த சமயம் பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார்.
சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார்.
முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர்
அறையிலேயே இருப்பார். ’
ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’
என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா
வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர்.
மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.
அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது
புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது.
பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய
சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா
தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே.
எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர்
ஆபிசுக்கு போன் போடுடா.கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம்
கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு
என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா
இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல்
‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா
இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு
பேச்சில்லை....
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்?
என்றார்கள்.
நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்.
உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான்
நாம் பேசியிருப்பது முதல்வர் காமராசர் என புரிகிறது.
முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா
நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள
முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார்
காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.
நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா.
நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.
அவரை வா...வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார்.
காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு
நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் ரிஞ்சுகிட்டேன்..
எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு
உத்தரவு போட்டிருக்ககூடாது.
‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான்
செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை.
அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி
’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான்
தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழை
மக்களுக்காகவே இருந்தார்....
இனி இதுபோல முதல்வர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தோடு...
--------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very excellent article about karma Veerer Kamaraj iyya thanks sir vazhga valamudan
ReplyDeleteஐயா! நான் காமராஜர் மேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் உள்ளவன்.இந்த
ReplyDeleteஎன் பின்னூட்டம் தவறாகப் பொருள் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் அவருடைய தியாகத்தையும் சேவைகளையும் குறைத்து மதிப்பிடவில்லை என்பதைப் பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன்.குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்ற் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க இதனை எழுதுகிறேன்.
ஒரு சமுதாயம் காமராஜரை தூக்கிப்பிடிப்பதற்காக சில சமயம் புனைக் கதைகளை எழுதி வெளியிடுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும் செய்தி எந்த மூலத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும் அந்த மூலம் சரியானதுதானா என்பதை ஆராய வேண்டும். முன்னர் ஒருமுறை நேருவுடன் பயணம் செய்த போது வயக்காட்டில் வேலை செய்துகொண்டிருந்த தாயாரை களத்து மேட்டில் நின்று அழைத்து அறிமுகப்படுத்தியதாக அவிழ்த்து விட்டார்கள்.அது நடந்த ஆண்டையாவது சொல்லுங்கள், அந்தச் சமயம் நேரு விருதுநகருக்கு வந்தாரா என்பதை உறுதி செய்கிறேன் என்று கேட்டேன். பதில் இல்லை.
காமராஜர் ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்த வேண்டிய தலைவர் அல்ல. அவரும் எல்லாரையும் போல ஒரு சாதாரண அரசியல்வாதிதான்.ஓட்டுக்காக எதுவும் செய்யும் ஓர் அரசியல் தலைவர்தான்.வேண்டுமானால் 1967க்குப்பின்னர் நமக்கு வாய்த்த தலைவர்களை விடச் சிறப்பானவர் என்று சொல்லலாம்.அவ்வளவுதான்.
திரு டி என் சேஷன் தன்னுடைய சுய வரலாற்ற்றை எழுதியுள்ளார். அதில் எப்படி காமராஜர் நிர்வாகத்தில் தலையிட்டு கட்சியில் பிரபலமானவர்களுக்குச் சலுகை காட்டினார் என்பதை எழுதியுள்ளார். பணியாத அவரை எப்ப்டி சினந்து, பயணத்தின் போது குக்கிராமத்தில் இறக்கி விட்டுவிட்டுப் போனார் என்பதை எழுதியுள்ளார்.
எந்தத் தொகுதியில் எந்த சாதிக்காரர்ரகள் பெரும்பான்மை என்பதை ஆய்ந்து அறிந்து அந்த சாதிக்காரர்களை தேர்தலில் நிறுத்தும் வழக்கததினை அறிமுகப்படுத்தியவர்.அதனை கம்யூனிஸ்டுகள் கூட இப்போது பின்பற்றுகின்றனர்.இந்த வழக்கத்தினால் நல்லவர்கள் திறமைசாலிகள் நேர்மையாளர்கள் ஓரம் கட்டப்படும் சூழலுக்குக் காரணமானவர்.
காந்தி காங்கிரசில் தியாகம் செய்தவர்களை அலட்சியப்படுத்தி, சுதந்திரத்திற்குப் பின்னர் கதர்சட்டை மாட்டிக்கொண்ட புதுக்காங்கிரஸ் காரகளான ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தவர்.
"தேர்தலில் எவ்வளவு செலவு செய்வாய்?" என்ற கேள்வியை கேட்டு அதிகம் செலவு செய்யும் பணக்கர்ரகளை தேர்வு செய்யும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர்.
நேரு அரசின் கொள்கையான பெர்மிட் லைசன்ஸ் கோட்டா முறையைப் பயன் படுத்தி அதிகம் கட்சி நிதி அளிப்பவர்களுக்கு/ கம்பனிகளுக்கு சலுகை காட்டும் போக்கை ஆதரித்தவர். இப்போது அது சொந்த சொத்து சேர்க்கும் ஊழலாக வடிவெடுத்துவிட்டது. ஆரம்பித்துவைத்தவ்ர் காமராஜர்தான்.
எனக்குத் தெரிந்த ஒரு தியாகி காந்திய வழியில் கைப்தொழில் செய்து 30 பேருக்கு வேலை கொடுத்து வந்தார். காமராஜருக்கு மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக துன்பம் கொடுத்து பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளபட்டார்.
அவருடை சிறப்புத் திட்டமான 'கல்விக்கண் திறப்பு'பற்றியும் பல விமர்சனக்கள் எனக்கு உண்டு. அதைப் போலவே மதிய உணவுத்திட்டம் மீதும் விமர்சனம் உண்டு.
உயிருடன் இருக்கும் போதே தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டவர்!உலகில் எங்குமே இல்லாத அதிசயம் அது!
காமராஜர் ஒரு சாதாரண அரசியல்வாதிதான். தெய்வ நிலைக்கு உயர்த்த வேண்டியது இல்லை.
வணக்கம் ஐயா,
ReplyDeleteதிரு காமராஜர் அவர்களின் பெருமையை எடுத்துரைக்க இதை விட வேறு பதிவு தேவை இருக்காது. படிக்கும் போது கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. மிக மிக நல்ல மனம் படைத்த ஒரு மாமனிதர் இனிமேல் நாம் பார்க்க முடியுமா அல்லது இந்த மாதிரியான செயல்களை கேட்கத்தான் முடியுமா. இந்த செய்தியை அறிய தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
அன்புடன்
விசுவநாதன் N
Respected Sir,
ReplyDeleteHappy morning... Great personality...
Thanks for sharing...
With regards,
Ravi-avn
இது போன்று இன்னொருவர் வர இன்னும் ஒரு யுகம் காத்திருக்க வேண்டும்.
ReplyDeleteஏற்கனவே படித்த செய்திதான் என்றாலும் ஒவ்வொரு முறை படிக்கையிலும் கண்களில் நீர் பனிக்கிறது. எப்பேர்பட்ட மாமனிதர் நமக்கு தலைவராக இருந்திருக்கிறார். அய்யாவிற்கு சந்தேகமே வேண்டாம். இப்படி ஒருவர் நமக்கு மறுபடியும் தலைவராக வரமாட்டார். இப்பேர்பட்ட மாமனிதர்களை இறைவன் படைத்தாலும் நமது இன்றைய மக்களாட்சி அவர்களை தலைவர்களாக விடாது. எல்லாம் நாம் செய்த பாவம். வேறு என்ன சொல்ல.
ReplyDelete//Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very excellent article about karma Veerer Kamaraj iyya thanks sir vazhga valamudan/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஐயா! நான் காமராஜர் மேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் உள்ளவன்.இந்த
என் பின்னூட்டம் தவறாகப் பொருள் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் அவருடைய தியாகத்தையும் சேவைகளையும் குறைத்து மதிப்பிடவில்லை என்பதைப் பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன்.குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்ற் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க இதனை எழுதுகிறேன்.
ஒரு சமுதாயம் காமராஜரை தூக்கிப்பிடிப்பதற்காக சில சமயம் புனைக் கதைகளை எழுதி வெளியிடுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும் செய்தி எந்த மூலத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும் அந்த மூலம் சரியானதுதானா என்பதை ஆராய வேண்டும். முன்னர் ஒருமுறை நேருவுடன் பயணம் செய்த போது வயக்காட்டில் வேலை செய்துகொண்டிருந்த தாயாரை களத்து மேட்டில் நின்று அழைத்து அறிமுகப்படுத்தியதாக அவிழ்த்து விட்டார்கள்.அது நடந்த ஆண்டையாவது சொல்லுங்கள், அந்தச் சமயம் நேரு விருதுநகருக்கு வந்தாரா என்பதை உறுதி செய்கிறேன் என்று கேட்டேன். பதில் இல்லை.
காமராஜர் ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்த வேண்டிய தலைவர் அல்ல. அவரும் எல்லாரையும் போல ஒரு சாதாரண அரசியல்வாதிதான்.ஓட்டுக்காக எதுவும் செய்யும் ஓர் அரசியல் தலைவர்தான்.வேண்டுமானால் 1967க்குப்பின்னர் நமக்கு வாய்த்த தலைவர்களை விடச் சிறப்பானவர் என்று சொல்லலாம்.அவ்வளவுதான்.
திரு டி என் சேஷன் தன்னுடைய சுய வரலாற்ற்றை எழுதியுள்ளார். அதில் எப்படி காமராஜர் நிர்வாகத்தில் தலையிட்டு கட்சியில் பிரபலமானவர்களுக்குச் சலுகை காட்டினார் என்பதை எழுதியுள்ளார். பணியாத அவரை எப்ப்டி சினந்து, பயணத்தின் போது குக்கிராமத்தில் இறக்கி விட்டுவிட்டுப் போனார் என்பதை எழுதியுள்ளார்.
எந்தத் தொகுதியில் எந்த சாதிக்காரர்ரகள் பெரும்பான்மை என்பதை ஆய்ந்து அறிந்து அந்த சாதிக்காரர்களை தேர்தலில் நிறுத்தும் வழக்கததினை அறிமுகப்படுத்தியவர்.அதனை கம்யூனிஸ்டுகள் கூட இப்போது பின்பற்றுகின்றனர்.இந்த வழக்கத்தினால் நல்லவர்கள் திறமைசாலிகள் நேர்மையாளர்கள் ஓரம் கட்டப்படும் சூழலுக்குக் காரணமானவர்.
காந்தி காங்கிரசில் தியாகம் செய்தவர்களை அலட்சியப்படுத்தி, சுதந்திரத்திற்குப் பின்னர் கதர்சட்டை மாட்டிக்கொண்ட புதுக்காங்கிரஸ் காரகளான ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தவர்.
"தேர்தலில் எவ்வளவு செலவு செய்வாய்?" என்ற கேள்வியை கேட்டு அதிகம் செலவு செய்யும் பணக்கர்ரகளை தேர்வு செய்யும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர்.
நேரு அரசின் கொள்கையான பெர்மிட் லைசன்ஸ் கோட்டா முறையைப் பயன் படுத்தி அதிகம் கட்சி நிதி அளிப்பவர்களுக்கு/ கம்பனிகளுக்கு சலுகை காட்டும் போக்கை ஆதரித்தவர். இப்போது அது சொந்த சொத்து சேர்க்கும் ஊழலாக வடிவெடுத்துவிட்டது. ஆரம்பித்துவைத்தவ்ர் காமராஜர்தான்.
எனக்குத் தெரிந்த ஒரு தியாகி காந்திய வழியில் கைப்தொழில் செய்து 30 பேருக்கு வேலை கொடுத்து வந்தார். காமராஜருக்கு மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக துன்பம் கொடுத்து பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளபட்டார்.
அவருடை சிறப்புத் திட்டமான 'கல்விக்கண் திறப்பு'பற்றியும் பல விமர்சனக்கள் எனக்கு உண்டு. அதைப் போலவே மதிய உணவுத்திட்டம் மீதும் விமர்சனம் உண்டு.
உயிருடன் இருக்கும் போதே தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டவர்!உலகில் எங்குமே இல்லாத அதிசயம் அது!
காமராஜர் ஒரு சாதாரண அரசியல்வாதிதான். தெய்வ நிலைக்கு உயர்த்த வேண்டியது இல்லை.////
உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி பதிவிட்டேன். அவ்வளவுதான்! செய்தியின் உண்மைத் தன்மைகளை ஆராயவெல்லாம் எனக்கு நேரமில்லை. மன்னிக்கவும்!
இந்தப் பக்கத்தில் உள்ள தோழர் பாண்டியரின் பின்னூட்டத்தைப் படிக்க வேண்டுகிறேன்!!!
/////Blogger Visvanathan N said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
திரு காமராஜர் அவர்களின் பெருமையை எடுத்துரைக்க இதை விட வேறு பதிவு தேவை இருக்காது. படிக்கும் போது கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. மிக மிக நல்ல மனம் படைத்த ஒரு மாமனிதர் இனிமேல் நாம் பார்க்க முடியுமா அல்லது இந்த மாதிரியான செயல்களை கேட்கத்தான் முடியுமா. இந்த செய்தியை அறிய தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
அன்புடன்
விசுவநாதன் N//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Great personality...
Thanks for sharing...
With regards,
Ravi-avn/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!
////Blogger SELVARAJ said...
ReplyDeleteஇது போன்று இன்னொருவர் வர இன்னும் ஒரு யுகம் காத்திருக்க வேண்டும்.////
உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!
////Blogger thozhar pandian said...
ReplyDeleteஏற்கனவே படித்த செய்திதான் என்றாலும் ஒவ்வொரு முறை படிக்கையிலும் கண்களில் நீர் பனிக்கிறது. எப்பேர்பட்ட மாமனிதர் நமக்கு தலைவராக இருந்திருக்கிறார். அய்யாவிற்கு சந்தேகமே வேண்டாம். இப்படி ஒருவர் நமக்கு மறுபடியும் தலைவராக வரமாட்டார். இப்பேர்பட்ட மாமனிதர்களை இறைவன் படைத்தாலும் நமது இன்றைய மக்களாட்சி அவர்களை தலைவர்களாக விடாது. எல்லாம் நாம் செய்த பாவம். வேறு என்ன சொல்ல./////
உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தொழரே!!!!
pray for tamilians to receive a ruler with such qulifications.
ReplyDelete