மீராவைக் கொண்டாடும் அவர்கள் ஏன் ஆண்டாளைக் கொண்டாடுவதில்லை?
மீரட் புரட்சி நடக்கும் முன்பே வேலூர் புரட்சியை நிகழத்தியர்கள் நாங்கள்..நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள்.
ஆங்கிலேயரை வெற்றிக்கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்..நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்..
வங்கத்தேசத்திற்கு முன்பே மொழிப்போரை நிகழ்த்தி மொழிக்காக அதிக உயிர் தியாகம் செய்தவர்கள் நாங்கள்.
நீங்கள் வங்க தேசத்தினருக்காகவே தாய்மொழி தினத்தை நினைவு கூறுகின்றீர்கள்..
வடக்கே ஒருத்தி (மீரா) வடமொழியில் கடவுளை கணவனாக அடைய பாடி கடைசி வரை காத்திருந்தபோது..
தெற்கே ஒருத்தி தமிழில் திருப்பாவை பாடி சூடி தந்த சுடர்கொடியாய் (ஜோதியாக மாறி மரணம் இல்லாத பெருவாழ்வு பெற்ற ஆண்டாள்) அதே கடவுளை கணவனாக அடைந்தாள்..
நீங்கள் வடமொழியை தேவபாசை என்றும் உலகில் முதலில் தோன்றிய மூத்த மொழியாம் தமிழ்மொழியை நீசபாசை என்றீர்கள்..
நாங்கள் அவ்வையார், வள்ளுவர், கம்பன், வள்ளலார், பாரதியை என பலரை தந்தோம்.. நீங்கள் தாகூரை மட்டும் கொண்டாடினீர்கள்..
நாங்கள் கணவனுக்கு கற்பை நீருபிக்க வேண்டி தீயில் மூழ்கி வந்த உங்கள் சீதையையும் வணங்குகிறோம்..(நீங்கள் கற்புடன் அனுப்பிய இராவணனை அரக்கனான கதைகட்டி புராணத்தை மாற்றி காட்டுறீங்க)
கணவனுக்காக மரணத்திற்கான நீதி வேண்டி பாண்டிய அரசனை எதிர்த்து தனியாக போராடி வென்ற கற்பு தெய்வமே எங்கள் கண்ணகி தாய் மதுரை நகரை தீயிட்டு எரித்த கற்புகரசி கண்ணகியை நீங்கள் யாரென்றே இன்னும் அறிவதில்லை..
உங்களது ரிஷிகளை பற்றி எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்..
எங்களது சித்தர்களை பற்றி நீங்கள் கற்பதில்லை..
நாங்கள் குப்தர்களை பற்றி படிக்கும் அளவுக்கு நீங்கள் சோழப்பேரரசை சேர, பாண்டியர் பற்றி நீங்கள் அறிவதில்லை..
கலிங்கம் வென்ற அசோகரை நாங்கள் புகழ்கிறோம்..
கல்லணை கட்டிய கரிகால் சோழனை நீங்கள் பேசுவதில்லை..
இராமகிருஷ்ணரும், சீரடி சாய் பாபாவும் எங்கள் தமிழ் நாட்டில் வழிபாட்டு கடவுளாக விளங்குவது உங்களுக்கு தெரியுமா?
கருணை இல்லாத ஆட்சி கடிந்து ஒழிக! என ஆங்கிலேயர் ஆட்சியில் முழங்கியவர் அனைத்து உயிர்களும் ஒருமைப்பாடு உணர்வுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டிவர் ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடித்து மரணம் இல்லாத பெரும் வாழ்வு பெற்ற மகான் இராமலிங்க அடிகள் என்கிற வள்ளலார் பற்றி வட (மட) நாட்டு மக்களுக்கு தெரியுமா?
தமிழக முதல்வராக விளங்கி ஓமந்தூரார் பதவி துறந்து எளிமையாக வடலூர் சென்று கடைசி காலம் வரை திரு இராமலிங்க அடிகளார் அவர்கள் திருப்பணி செய்து வாழ்ந்தது போல் முதல்வர் அங்கே யாராவது உண்டா?
தமக்கு வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு விட்டுகொடுத்து உலகறியச் செய்தவர் இராமநாதபுர சேதுபதி மன்னர் அவரை நீங்கள் அறிந்துகொள்ள நினைத்தது உண்டா?.
நேதாஜி படைகட்டியபோது தமிழர்களிடத்தில் அதிக அளவு ஆதரவை திரட்டி தந்தவர் வள்ளலார் வழிவந்த எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பதை நீங்க எத்தனை பேர் அறிவீர்
தமிழகத்தின் தெருக்கள் தோறும், வீடுகள் தோறும் நேதாஜிகளும், காந்திகளும், அம்பேத்கர்களும் உண்டு.
எத்தனை வீர பாண்டிய கட்டபெம்மண் வ.உ.சிக்கள்,புதுமை பாரதிகள், ஈ.வே.ரா பெரியார்கள், இராஜதந்திர இராஜாஜிகள், காமராசர்கள், பசும்பொன் தேவர்கள், கக்கன்கள், அறிஞர் அண்ணாகள், கலாம்கள் உங்களிடத்தில் உண்டு..?
கல்விக்கான தங்கள் சொத்துகள் அனைத்தும் வழங்கிய கல்வி வள்ளல்கள் பச்சையப்பா முதலியார், தியாகராயர், செங்கல்வராயர்,அழகப்பர் இப்படி பட்டியல் பெரியது
உலகம் போற்றி கொண்டாடும் எங்கள் சிற்பம் மற்றும் நாட்டிய கலைகள்
தமிழ் மகள் முறத்தில் புலி அடித்து விரட்டிய வீரம் எங்கள் வீரம்
ஆராய்ச்சி மணி கட்டி பசுவுக்கு நீதி அளித்த மனுநீதி சோழன் தந்த நீதி
எங்கள் நீதி
முல்லை கொடிக்கு தேரையும், புறாவிற்காக தான் தொடையையும் தந்த மன்னர்கள் கொடை எங்கள் கொடை (அரிசி பானையில் இருந்தும் அள்ளி கொண்டு சென்றது இல்லை)
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்..ஆம்.. நாங்கள் தமிழர்கள்.*.
---------------------------------------------------------
படித்ததில் அதிர்ந்தது.உங்களுடன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Super sir thanks sir, vazhga valamudan
ReplyDeleteஇதனால் தான் நமது நாட்டை இந்தி என்னும் மொழிகொண்டு ஒடுக்கபார்க்கறார்கள்
ReplyDeleteஅப்படி இருந்த நாம
ReplyDeleteஎப்படி ஆயிட்டோம்
யாரு தான் நம்ம முதலமைச்சர்?
ஏன் இன்னும் வரட்சி மாநிலமா வரலை?
தெர்மாகோல் விட்டவர் எப்படி இன்னும் பதவியில் ?
சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என கூறப்பட்டவர் படம் பள்ளி புத்தகத்தில்?
கூத்தாடி தலைவர் எதிர்பார்க்கும் ஆட்டு மந்தை கூட்டமானோமோ?
இத்தனை செய்தியையும் இந்தி, வங்காளி, மராட்டியில் எழுதி அங்குள்ள செய்தித்தாள்களில் வெளி வரும்படி செய்தால்தானே அவர்களுக்குத் தெரிய வரும். இதற்காகவாவது அந்த மொழிகளைக் கற்க வேண்டாமா? சும்மா குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருந்தால் எப்படி?
ReplyDeleteSema sir
ReplyDeleteஅவர்கள் மீராவின் பஜனை மற்றும் பல வட தேசத்து மகான்களின் சரித்திரங்கள் தமிழில் ஒன்றும் மொழிபெயர்த்து கொடுக்க வில்லை நாம் தான் செய்துள்ளோம்
ReplyDeleteavarkal mattumalla nammil palarukke theriyathu ayya
ReplyDeleteவணக்கம் ஐயா,இனி பழம் பெருமைகளைப் பற்றி பேசுவதால் ஆவது ஒன்றும் இல்லை.உயர் கல்வியில் எங்கேயோ இருந்த ஆந்திரம் இன்று முன்னிலை பெற்றிருக்கிறது.கடல்கடந்த கல்வியிலும்,அதை சார்ந்த வேலை வாய்ப்புகளிலும் அவர்களே முன்னிலை.ஐஐடி,என்ஐடிகளிலும் மற்ற மாநிலத்தவரே.விழித்து செயல்பட வேண்டிய காலமிது.நன்றி
ReplyDelete///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteSuper sir thanks sir, vazhga valamudan////
நல்லது. நன்றி நண்பரே!!!
////Blogger Kalai Rajan said...
ReplyDeleteஇதனால் தான் நமது நாட்டை இந்தி என்னும் மொழிகொண்டு ஒடுக்கபார்க்கறார்கள்/////
யரையும் எதையும் கொண்டு ஒடுக்க முடியாது. பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே!!!!
////Blogger selvaspk said...
ReplyDeleteஅப்படி இருந்த நாம
எப்படி ஆயிட்டோம்
யாரு தான் நம்ம முதலமைச்சர்?
ஏன் இன்னும் வரட்சி மாநிலமா வரலை?
தெர்மாகோல் விட்டவர் எப்படி இன்னும் பதவியில் ?
சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என கூறப்பட்டவர் படம் பள்ளி புத்தகத்தில்?
கூத்தாடி தலைவர் எதிர்பார்க்கும் ஆட்டு மந்தை கூட்டமானோமோ?////
பொறுத்திருங்கள்:
காலம் ஒரு நாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
- கவியரசரின் வரிகளை நினைவில் வையுங்கள். நன்றி!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇத்தனை செய்தியையும் இந்தி, வங்காளி, மராட்டியில் எழுதி அங்குள்ள செய்தித்தாள்களில் வெளி வரும்படி செய்தால்தானே அவர்களுக்குத் தெரிய வரும். இதற்காகவாவது அந்த மொழிகளைக் கற்க வேண்டாமா? சும்மா குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருந்தால் எப்படி?////
உண்மைதான். நம் வரலாறு தெரியாதவரை, தெரிவிக்காதவரை, இப்படித்தான் நடக்கும். நன்றி கிருஷ்ணன் சார்!!!!
//Blogger Vasanth said...
ReplyDeleteSema sir///
நல்லது. நன்றி நண்பரே!!!!
////Blogger Kalai Rajan said...
ReplyDeleteஅவர்கள் மீராவின் பஜனை மற்றும் பல வட தேசத்து மகான்களின் சரித்திரங்கள் தமிழில் ஒன்றும் மொழிபெயர்த்து கொடுக்க வில்லை நாம் தான் செய்துள்ளோம்////
தகவலுக்கு நன்றி நண்பரே!!!!!
////Blogger s m swamy said...
ReplyDeleteavarkal mattumalla nammil palarukke theriyathu ayya////
உண்மைதான். பலரும் பணத் தேடலில் உள்ளதால், இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை!!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,இனி பழம் பெருமைகளைப் பற்றி பேசுவதால் ஆவது ஒன்றும் இல்லை.உயர் கல்வியில் எங்கேயோ இருந்த ஆந்திரம் இன்று முன்னிலை பெற்றிருக்கிறது.கடல்கடந்த கல்வியிலும்,அதை சார்ந்த வேலை வாய்ப்புகளிலும் அவர்களே முன்னிலை.ஐஐடி,என்ஐடிகளிலும் மற்ற மாநிலத்தவரே.விழித்து செயல்பட வேண்டிய காலமிது.நன்றி////
ஆமாம். நமக்கு அதிகமான விழிப்புணர்வு தேவை!!! நன்றி ஆதித்தன்!!!!