என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்!!
1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது.
நாம் அணைக்கக் கூடாது.
3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது
5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது
.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது
.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.
19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது.
படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Very useful information sir thanks for your valuable words sir
ReplyDeleteOkay Sir.
ReplyDeleteAyya vanakkam. point 20 picture of god not to face north/
ReplyDelete////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteVery useful information sir thanks for your valuable words sir////
நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteOkay Sir.////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger kittuswamy palaniappan said...
ReplyDeleteAyya vanakkam. point 20 picture of god not to face north//////
ஆமாம்.நன்றி!!!
தெரியாதன தெரிந்துக்கொண்டேன்.
ReplyDeleteநல்லது. நன்றி
ReplyDeleteவணக்கம் ஐயா,பயன் தரும் குறிப்புகள்.பகிர்ந்து கொண்டேன்.நன்றி.
ReplyDelete////Blogger ராஜி said...
ReplyDeleteதெரியாதன தெரிந்துக்கொண்டேன்////.
நல்லது. நன்றி சகோதரி!!!
////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteநல்லது. நன்றி////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,பயன் தரும் குறிப்புகள்.பகிர்ந்து கொண்டேன்.நன்றி.////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!
VERY USEFUL INFORMATION
ReplyDelete