மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.3.17

Humour:நகைச்சுவை: சாதிக்கனும்னு நினைக்கும்போது என்ன நடக்கிறது?

Humour:நகைச்சுவை: சாதிக்கனும்னு நினைக்கும்போது என்ன நடக்கிறது?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
---------------------------------------------------------------------------
இப்பவெல்லாம் "Silence Please"னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி "WIFI" Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்..

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது..  காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!

யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது...

அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சு கூவுறது சேவல். பேரு வாங்குறது கோழி.. "கோழி கூவுது" !! - ஆண் பாவம்

இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!

இதுவும் கடந்து போகும்னு எனக்கு தெரியும்.. ஆனா இது ஏன் இவ்வளவு மெதுவா நடந்து போகுதுங்கிறது தான் பிரச்சனையே..!!

நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு - 'முதல்ல  இதை சமாளி மகனே'னு..!!

காந்தியின் சிரிப்பு எல்லா பணத்தாள்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.. நம்முடைய சிரிப்புதான் பணத்தைப்பொருத்து மாறுகிறது...

புருஷன்கிட்ட நல்லபேர் வாங்க பொண்டாட்டி சீரியல் பார்க்காம இருந்தா போதும்.. பொண்டாட்டிகிட்ட நல்லபேர் வாங்க புருஷன் மொபைல  நோண்டாம இருந்தா போதும்...

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே..வருத்த படாதே.. ஃபீல் பண்ணாதே..உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்..!!

வேலைக்குபோனா எல்லாம் சரியாயிடும்.. கல்யாணம் பண்ணுனா எல்லாம் சரியாயிடும்.. குழந்தை பொறந்தா எல்லாம் சரியாயிடும்.. இப்படி  சொல்றவன மிதிச்சா எல்லாம் சரியாயிடும்...

கடவுளும் மனைவியும் ஒன்று.. நாம் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்வார்கள்! ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்துக்கு  செய்வார்கள்..!!

'சர்வீஸ்'க்கு போயிட்டு வந்த "பைக்கும்", அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த "wife"ம் ரெண்டு நாளைக்கு நம்ம கன்ட்ரோல்ல இருக்காது..!!

தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்..

கடவுளிடம் ஓம் சொல்லுவதை விட மனைவியிடம் ஆம் சொல்லிபாருங்கள்.. LIFE ரொம்ப நல்லா இருக்கும்..

மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா இல்லையா??.. "நம்பிக் கட்டினோம்.. நன்றாக  இருக்கிறோம்..."

ஸ்மார்ட் போனால ஒரு நன்மை என்னன்னா... பசங்க/பொண்ணுங்க எங்க சுத்துனாலும் சாயங்காலம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துர்றாங்க.... சார்ஜ்  போடணும்ல

புருஷன் என்பது காங்கிரீட் சிமெண்ட் மாதிரி.. கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது.. நல்லா 'செட்டாக' விட்டுட்டு அப்பறமா  என்ன வேணுமானாலும் பண்ணலாம்.. ஒன்னும் ஆகாது..!

மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்.. பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..! ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்..!

ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

எப்பவும் சார்ஜிலேயே இருக்குற என் ஆண்ட்ராயிட் போன பார்த்தா, ஆசுபத்திரில குளுகோஸ் எத்திட்டிருக்கிற பேஷன்ட் மாதிரி இருக்கு..

சிலருக்கு மனைவி "தேவயாணி" போலவும் சிலருக்கு மனைவி "தேவையா...? நீ" போலவும் அமைந்து விடுகிறது..!
----------------------------------------
2
US Economy....Brilliant comment!  

Dr. Marc Faber, the investment guru, concluded his monthly bulletin  with the following comments! :

"The federal government is sending each of us a $600 rebate.
If we spend that money at Wal-Mart, the money goes to China .
If we spend it on gasoline it goes to the Arabs.
If we buy a software, it will go to India .
If we purchase fruits and vegetables it will go to Mexico , Honduras and Guatemala .
If we purchase a good car, it will go to Germany  and Japan .
If we purchase useless crap, it will go to Taiwan .
In short, none of it will help the American economy.
The only way to keep that money here at home is to spend it on Guns, Prostitutes, and Beer, since these are the only products still produced in the US .

படித்தவற்றில் பிடித்தவை
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் ஐயா,நகைச்சுவை, சுவையோ சுவை.அமெரிக்க பொருளாதாரம் அப்பட்டம்.நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அனைத்துமே அட்டகாசமான தேர்ந்த நகைச்சுவை துணுக்குகள்!

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Very nice sir. Laughed heartily.////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  4. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நகைச்சுவை, சுவையோ சுவை.அமெரிக்க பொருளாதாரம் அப்பட்டம்.நன்றி./////

    உங்களின் இரசனை உணர்விற்கு மிக்க நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அனைத்துமே அட்டகாசமான தேர்ந்த நகைச்சுவை துணுக்குகள்! /////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com