சிவன்மலை முருகன் தெய்வானை வள்ளியம்மையுடன்!
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில்
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பு ர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
மூலவர் : சுப்ரமணிய சுவாமி
உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர்
அம்மன் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : தொரட்டி மரம்
தீர்த்தம் : காசி தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
தலச் சிறப்பு :
🌿 மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.
🌿 நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.
🌿 அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும்.
🌿 திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.
உத்தரவு பெட்டி :
🌿 சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
உத்தரவுப் பெட்டி!
🌿 மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும். பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை :
🌿 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.
🌿 நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம்.
🌿 சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.
🌿 மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.
வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சிவன்மலைக்குச் சென்று வாருங்கள்!
படித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Fine Sir.
ReplyDeleteBlogger kmr.krishnan said...
ReplyDeleteFine Sir.
Tuesday, March 07, 2017 4:08:00 AM
-----------------------------------
அதிகாலையிலேயே பதிவைப் படித்துப் பின்னூட்டமா? வாழ்க உங்களின் சுறுசுறுப்பு!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Holy information.
Have a holy day...
Thanks & Regards,
Ravi-avn
வணக்கம் ஐயா,புதிய தகவல்கள் ஏராளம்.நன்றி.
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteஇப்படிப்பட்ட ஒரு கோவில் இங்கு இருப்பதைக் தெரியப்படுத்திய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! தாங்கள் கூறியபடி இங்கு செல்லவும்
முயற்சிக்கிறேன்!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Holy information.
Have a holy day...
Thanks & Regards,
Ravi-avn////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,புதிய தகவல்கள் ஏராளம்.நன்றி./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
இப்படிப்பட்ட ஒரு கோவில் இங்கு இருப்பதைக் தெரியப்படுத்திய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! தாங்கள் கூறியபடி இங்கு செல்லவும்
முயற்சிக்கிறேன்!/////
ஆஹா...ஒரு முறை சென்று சிவன்மலை ஆண்டவரை தரிசித்து வாருங்கள் வரதராஜன்!!!!
தகவல்கள் ஏராளம்.நன்றி
ReplyDelete