Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.113: கேள்வி பிறந்தது இன்று!!!
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்
:
இது ஒரு அன்பரின் ஜாதகம். அவர் பிறந்தது 1962ம் வருடம். ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம்.
1.பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.
சரியான விடை. 7-8-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
======================================
2
உங்கள் அனைவருக்கும் நன்றி!
நான் வகுப்பறை துவங்கிய காலத்தில் முதலில் தினமும் 30 அல்லது 40 பேர்கள்தான் வந்து படித்துக்கொடிருந்தார்கள். 9 ஆண்டுகளாக எழுதியதன் பலன் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்து இன்று அந்த எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. படம் கீழே உள்ளது.
Google blogger page views taken from my blogger dash board
நான் எண்ணிக்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டேன். ஆனால் இத்தனை (பத்தாயிரம் பேர்கள்) எனும் போது, என் பொறுப்பு அதிகமாகியுள்ளது. ஆகவே நான் இன்னும் சிரத்தையோடு பதிவுகளை எழுத வேண்டும். எழுதுவேன்
உங்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்
:
இது ஒரு அன்பரின் ஜாதகம். அவர் பிறந்தது 1962ம் வருடம். ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம்.
1.பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.
சரியான விடை. 7-8-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
======================================
2
உங்கள் அனைவருக்கும் நன்றி!
நான் வகுப்பறை துவங்கிய காலத்தில் முதலில் தினமும் 30 அல்லது 40 பேர்கள்தான் வந்து படித்துக்கொடிருந்தார்கள். 9 ஆண்டுகளாக எழுதியதன் பலன் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்து இன்று அந்த எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. படம் கீழே உள்ளது.
Google blogger page views taken from my blogger dash board
நான் எண்ணிக்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டேன். ஆனால் இத்தனை (பத்தாயிரம் பேர்கள்) எனும் போது, என் பொறுப்பு அதிகமாகியுள்ளது. ஆகவே நான் இன்னும் சிரத்தையோடு பதிவுகளை எழுத வேண்டும். எழுதுவேன்
உங்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஆசிரியர் ஐயா வணக்கம்.
ReplyDeleteமெஞ்ஞானமும், விஞ்ஞானமும்
தங்களுக்கு ஒன்று சேர்ந்ததுடன்
எழுத்தாற்றலும், நகைச்சுவை உணர்வும்
சமவிகிதத்தில் உள்ளதாலும்
நல்ல எண்ணத்தாலும் , உழைப்பாலும்
இலவச சேவையினாலும் தினசரி பார்வையிடுவோர்
எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி உள்ளது.
வாழ்க நீ எம்மான்.
Canadian ayya jathagar mesha lagnam annarin Dada inpadi 12 veetil sukkaran Chandra erupathallum 2m veetil many hi karanamaga kadumaiyana panakkastam ethu lagnathipathi 11m veetil erupathin karanamaga sukkaran dasai guru pukthi Chevvai antharathil panakastathillurunthu meentar vazhga valamudan
ReplyDeleteஜாதகர் பிறந்த தேதி : 07 – 03 – 1962
ReplyDeleteமேஷ லக்னம். திரிகோண அதிபதிகள் மூவரும் லாப ஸ்தானத்தில் உள்ள நல்ல அமைப்பு.
தனஸ்தானத்தில் மாந்தி
ஆறாம் அதிபதி புதன், கேது & பாதகாதிபதி சனி மூவரும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தொழிலில் கடுமையான பிரச்னை கொடுத்து இருப்பார்கள்.
பாதகாதிபதி சனி ஆட்சி பலத்துடன் உள்ளது நல்ல அமைப்பு இல்லை.
ஜாதகருடைய 34வது வயதில் ஆறாம் அதிபதி புதன் தசை மற்றும் ஏழரைசனி நடந்தாலும் கடனில் மூழ்கி இருப்பார். கேது திசையிலும் சிரமப்பட்டு இருப்பார்.
45வது வயதில் வந்த சுக்கிர திசையில் கடனில் இருந்து மீண்டு இருப்பார். (தனஸ்தான அதிபதி சுக்கிரன் உச்சம்)
காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். இளமையில் சிரமப்பட்டு மத்திய வயதில் முன்னுக்கு வரும் அமைப்பு.
1. ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.
ReplyDelete2. ஜாதகர் தனது மத்திய வயதில் பணத்தட்டுப்பாட்டிற்கு ஆளாகி, கடனில் மூழ்கி, பிறகு மீண்டு வந்தவர்.
மேஷ லக்கினம். லக்கினாதிபதி 11ல்
இரண்டாம் வீட்டிற்கு உரிய (தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.
11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.
ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் தசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப் போட்டு விட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. பிறகு சுக்கிரதிசை நடந்த காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.
ஜோதிடப் புதிர் எண்.113: பதில்
ReplyDeleteஐயா வணக்கம்,
1.பணக் கஷ்டம் ஜாதகப்படி ஏற்பட்ட காரணம்
1. ராகு கொடிபிடித்து செல்லும் கால சர்பதோஷம்.
2. 2 ஆம் அதிபதி விரயஸானத்தில் உச்சம். 2ல் மாத்தி.
3. விரயஸ்தான அதிபதி விரயத்திர்கு விரயஸானத்தில் அமர்த்து உள்ளது.
4. சனியின் 3 ஆம் பார்வை விரயஸானத்திற்கும், செவ்வாயின் பார்வை 2 ஆம் வீட்டில் இருப்பதால் பணக் கஷ்டம் ஏற்பட்டது.
2. ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா
1. 10 ஆம் அதிபதி 10ல் அதனால் கடினமாக உழைத்து பிரச்சினையில் இருந்து மீண்டு இருப்பார்.
இப்படிக்கு தங்கள் மாணவி,
மு.சாந்தி
நல்ல பகிர்வுகளை தேடிப் படிப்பார்கள்...
ReplyDeleteதொடரட்டும் ஐயா..
வணக்கம் வாத்தியாரே!
ReplyDeleteQuiz 113 க்கான பதில்.
கடன் தீர்ந்து, ஜாதகர் பிரச்சினையில் இருந்து சுக்கிர திசையில் மீண்டார்
ஜாதகர் பிறந்த தேதி : 07/Mar/1962 , 09.00 am
நட்சத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்.
மேஷ லக்கினம், மீன ராசி.
6ம் அதிபதி புதனின் திசையில்; புதன், கேது மற்றும் சனியுடன்
கூடி 10ல் நின்று ஜாதகரை தொழிலுக்காக கடன் வாங்க வைத்தார்.
கேந்திரத்தில் இருக்கும் புதன் கடன் வாங்க வைக்கும்.
சனியுடன் கூடிய கேதுவால் பண வரவில் சிக்கல் ஏற்பட்டு கேது திசை முழுவதும் அவமான பட்டிருப்பார்.
அடுத்து வந்த சுக்கிர திசை ஆறாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகர் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Astrology Quiz: 113 Answer
ReplyDeleteஜாதகர் மேஷலக்னம். லக்னாதிபதியும் 8 ஆம் அதிபதியுமான செவ்வாய், 12 ஆம் அதிபதி மற்றும் 9 ஆம் அதிபதியான குரு மற்றும் யோகாதிபதி சூரியனுடன் 11 ஆம் இடத்தில்.
இரண்டுக்கும் 7 க்கும் அதிபதியான சுக்ரன் உச்சமாகி அவருடய பகைவர் சந்த்ரனுடன் ( 4ஆம் அதிபதி) 12 ஆம் இடத்தில்.
சனியும் புதனும் கேதுவுடன் கூடி 10 ஆம் வீட்டில். சனி நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில்.
34 வயதில் 1996 ல் அவருக்கு புதன் தசையில் சனி புக்தி ஆரம்பமானது. இருவரும் பகைவர்களாதலால் கேதுவுடன் கூடி நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். கோள்சாரத்தில் சனி 1996 ல் 12 ஆம் இடத்திற்கு வந்து கேதுவுடன் மிகுந்த விரையங்களை ஏற்படுத்தினார். பின்னர் வந்த கேது தசையும் அவருக்கு நன்மை விளைவிக்கவில்லை. 1996 லிருது 2005 வரை சனி கோள்சாரத்தில் 12, லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டிலிருப்பதால் அவருடைய பணக்கஷ்டம் தீர்ந்திருக்காது.
கேது தசை 2005 ல் முடிந்தபிறகு வந்த சுக்ர தசையில் 2 க்கும் 7க்கும் அதிபதியாதலால் உச்சமாகியிருப்பதாலும் அவருடைய தசையில் பணக்கஷ்டத்திலிருந்து மீளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பார். சூரியன் புக்தியில் யோகாதிபதியாதலால் கஷ்டத்திலிருந்து முழுவதும் மீண்டுருப்பார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை
1962 - மார்ச் மாதம் 7-ஆம் தேதி பிறந்த அன்பர், நல்ல உழைப்பாளி. சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர். புத தசை சனி புக்திக்கு முன் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
ReplyDelete1. தன ஸ்தானாதிபதி விரைய ஸ்தானத்தில் (சுக்கிரன்) என்ற ரீதியில் பார்க்கும்போது, பெரிய சொத்து ஒன்றும் கிடையாது. ருண ஸ்தானாதிபதி புதன் திசையில் வாங்கிய கடன் சனி புக்தியில் திருப்ப முடியாமல் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார். லாப ஸ்தானாதிபதி சனி அவ்விடத்திற்குப் பன்னிரண்டில் மறைந்ததால் இந்த நிலைமை.
பின் தொடர்ந்து வந்த கேதுவின் ஏழு வருடங்களும் கஷ்டங்களும் தொடர்ந்தன.
௨. ஆனால் உச்சனான சுக்கிரன் தசை வந்தபோது நிலைமையில் முன்னேற்றம். சுக்கிரனுக்குப் பன்னிரண்டாம் இடம் மறைவு கிடையாது. மேலும் தனஸ்தானத்திற்குப் பதினொன்றில் சுபரான சந்திரனுடன் நிற்பது பண வரவைக் கொடுத்தது. 2012-ஆம் வருடம் வந்த லக்னாதிபன் புக்தி நல்லதாக அமைந்து இப்போது நன்றாக இருக்கிறார்.
நன்றி ஐயா
ReplyDeleteAyya vanakkam, as the viewers increased the responsibilities increase but this is not a days job, your efforts made you to have this numbers. we all pray you a better health and the best of everything,. let LORD PALANIAPPAN showers bleesings regards,
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம் .
ReplyDeleteஇன்னும் பத்து பத்தாயிரம் பேர் படித்து பயனடையும் வண்ணம் பழனி முருகனின் அருள் தங்களை
வழி நடத்தி செல்ல வேண்டுகிறேன் .
அன்புடன்
அரசு
அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்,
ReplyDeleteஜாதகர் 07-03-1962 பூரட்டாதி 4ம் பாதத்தில் மீன ராசியில் ஜனனம் ஆனார்.
தோசங்கள் – யோகங்கள்,
1. கால சர்ப்ப தோசம்
2. எல்லா சுபர்களும் பாபகார்த்திரி யோகத்தினிலுள்ளனர்
3. சனி, ஆட்சியில் 10ம் வீட்டிலுள்ளார் கேந்திரத்திலுள்ளார் – சஷ்ய யோகம்
4. ஏழரை சனி – கும்பத்தில் 5-3-93ல் தொடங்கி 6-6-2000ல் ரிசபத்தில் போகும்போது முடிவடைந்த்து. 36ம் வயது இந்தக்காலகட்டத்தில் வரும்.
5. புதன் திசை முடிய கேது திசை ஆரம்பமாகின்றது. அது 2005 ஆவணி மாதத்தில் முடியும்.
6. 2006 ஐப்பசி மாதம் குரு விருச்சிக ராசிக்கு வருகிறார், 7ல் குரு.
புதிரிற்கு விடை
பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
மேற்கொண்ட காரணங்களினால்
அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
2005ம ஆண்டிற்கு பின் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
நன்றி
அன்புடன்
ராஜம் ஆனந்த்
வணக்கம் அய்யா ,
ReplyDeleteபுதிர் 113 கான பதில் .
1. ஜாதகர் நல்ல செல்வந்தர் வீட்டில் பிறந்து தனது செயல்களால் அதிக செலவுகள் மட்டுமே செய்து தனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை விற்று ஜீவனம் செய்வார் .
2. மேஷத்திற்கு பாதகாதிபதி சனி , பாதகாதிபதி வீட்டில் சூரியன் [யோகாதிபதி ] செவ்வாய் [லக்கினாதிபதி ] மற்றும் குரு .
3. ஜாதகரின் 34 வயது புதன் திசை முடியும் தருவாயில் வந்திருக்கும், புதன் மூன்று மற்றும் ரோகம் கடனுக்குண்டான ஆறாம் இடத்திற்கு அதிபதி , லாபத்தில் பாதகாதிபதி வீட்டில் இருக்கும் செவ்வாய் காலில் உள்ளார் . ஒரு ருபாய் லாபத்திற்கு ஒன்னேகால் ருபாய் செலவு செய்யவேண்டி வரும் .
4. அடுத்து வந்த கேது தசை 12 இல் மறைந்த நான்காம் வீட்டின் அதிபதி சந்திரனின் காலில் தன் வீடு வண்டி வாகனத்தை விற்று கடனில் இருந்து மீண்டிருக்கலாம்.
5. பின் வந்த சுக்கிரன் 12 இல் மறைந்தாலும் உச்சமாக இருப்பதாலும் குருவின் காலில் இருப்பதாலும் துணைவர்கள் /நண்பர்கள் உதவியோடு வண்டி யோடும் என்றாலும் அவர்களுக்காகவும் தன் சொத்தை அதிகமாக விற்று செலவு செய்பவர்களாகவே இருப்பர் . அல்லது தனது தொழில் ஈட்டிய லாபத்தை விட அதிகமாக செலவு செய்பவர் இந்த ஜாதகர்.
ஐயா,
ReplyDeleteபணக்கஷ்டம் வந்த போது ஜாதகருக்கு சுக்கிரன் திசை ராகு புத்தி நடந்திருக்கும். தனாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர காரகனும் ஆன சுக்கிரன் சுகாதிபதியுடன் கூடி 12-ல் மறைந்துள்ளனர். சுக்கிரன் 12ல் இருப்பதால் தகாத வழியில் செலவழித்திருப்பாரா என்றால், 5-ம் மற்றும் 9-ம் அதிபதியுடன் கூடிய லக்னாதிபதியும், சுக்கிரன் உச்சம் பெற்று சுபச்சந்திரனுடன் கூடியிருப்பதாலும் அதற்கு வாய்ப்பு இல்லை. பிரச்சினை 2-ல் உள்ள மாந்தியாலும் 4ல் உள்ள இராகு வாலும் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். மேலும் நான்காம் வீட்டை ஆறாம் அதிபதி நான் கிற்கு எட்டாம் அதிபதி சேர்ந்து பார்ப்பது நான்காம் வீட்டை நன்றாக பாதித்து உள்ளது. சந்திரன் இலக்கினத்துக்கு மாரகருடன் இணைந்துள்ளார். இராகுவே தனது புத்தியில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பணக்கஷ்டத்தை கொடுத்திருக்க வேண்டும். இன்று தான் நான் முதல் டெஸ்ட் எழுதுகிறேன் ஐயா. ரிசல்ட் நெனச்சா ஒரே டென்சனா இருக்கு.
ஆறுக்கு அதிபதியான வலிமை பெற்ற புதன் தசை நடத்தியதால் ஏற்பட்ட விளைவு ! லக்கினாதிபதி செவ்வாய் , யோகாதிபகளான சூரியன் , குருவுடன் சேர்ந்து 11ம் இடத்தில இருப்பதால் , நிச்சயம் கடன் பிரச்சனை தீர்ந்து இருக்கும் ! ஆனால் மிகுந்த கஷ்டத்துக்கு பிறகு தான் அது நடந்திருக்கும் !!
ReplyDeleteContd.....
ReplyDeleteதனகாரகர் குரு கெடவில்லை. எனவே இராகு புத்திக்குப் பிறகு வரும் குரு புத்தியில் சரியாகி இருக்க வேண்டும் ஐயா.
Sir,
ReplyDeleteVirayathibathi with Lagnathypathy in 11th house.Also Maandhi in Second house.
Native could have come out of his Financial problems. Because, Lagnathypathy with fifth house owner.
Thanks
Sathishkumar GS
முதலில் வாத்தியார் அவர்களுக்கு "10000" பேர்கள் தினமும் அவரின் பதிவை பார்வையிட்டதற்கான வாழ்த்துக்கள். அது மேலும் பெருகி ஒரு லட்சம், ஒரு கோடி பேர் என்று வளர, பழனி முருகப் பெருமானை வேண்டுகிறேன்.
ReplyDeleteபுதிர் எண் 113க்கான அலசல்:
மேச லக்கினம், மீன ராசி ஜாதகர். கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்து குருவுடன் கிரகயுத்ததிலுள்ளார். 5ம் அதிபதி சூரியனும் அவருடன் கூட்டணியில் இருக்கிறார். தனாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தாலும் உச்சமடைந்துள்ளார்.
இப்ப வாத்தியாரின் கேள்விக்கு வருவோம். ஜாதகரின் 34 வயதில் மிகக் கடுமையான பணக்கஷ்டம் ஏன் ஏற்பட்டது? ஜாதகப்படி அதன் காரணம் என்ன?
ஜாதகரின் 34 வயதில் புதன் மகாதசை, சனி அந்தரம் நடைபெற்ற நேரம். கர்மாதிபதி சனி 6ம் அதிபதி வில்லன் புதன் மற்றும் கேதுவுடன் கூட்டணியில் 10மிடத்தில் தன் சொந்த வீட்டில் உள்ளார்.
அதே சமயம் கோச்சார ஜன்ம சனி வேறு ஜாதகரை புரட்டிப் போட்டது. ஜாதகருக்கு மேற்கண்ட காரணங்களால் இருந்த வேலையும் போய், கடுமையான பண நெருக்கடி, கடன் சுமை ஏற்பட்டது.
ஜாதகர் பணப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா?
புதன் மகாதசை முடிந்து, கேதுவின் தசை 7 வருடம் வரை ஜாதகருக்கு அந்த பணப்பிரச்சினை இருந்தது. பிறகு வந்த சுக்கிர தசையில் அதாவது ஜாதகரின் 46 வயதில் எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்து மீண்டு வந்தார்.
Vanakkam Iyya,
ReplyDeleteMesha lagna kaarar. Pooratadhi natchathram paadham 4.
Lagnathipathi sevvai 11il + 5 aam athipathi + 9 aam athipathi guru vudan
Jaathagarin 34 aam vayathil Budhan (3&6 - Villan) dasa sukra bukthi nadai petru ullathu
Sukran 2 aam veetirku uriyavan, lagnathirku 12il + uchaam+ chandran udan graha yudhham.
11 aam veetilum graha yuddham.
Chandra rasi yil irundhu paarthalum, irandam veetiruku uriyavan (sevvai) antha veetirku 11il, aana chandra rasi ku 12il..
Ivaye jaathagarin pana kastathirku kaaranam.
Pana Prachanayil irundhu meendar. Sukra dasai chandra bukthiyil.
Sukranum chandranum sernthu kaapatrinar. sukkran (2&7 irku uriyavan, chandran 4iruku uriyavan)
nandri,
Bala
வணக்கம் ஐயா,ஜாதகத்தை பார்த்து பிறந்த தேதி,மாதம் வருடம் கண்டிபிடிக்க தெரியாது.அதனால் இருப்பு தசா,புத்தி கண்டுபிடிக்க தெரியவில்லை.வருடம் கொடுத்து விட்டீர்கள்.காலசர்ப தோஷம் உள்ள ஜாதகம்.லக்னாதிபதி 11ல்.குறைந்த முயற்சி.அதிக பலன்.மேலும் யோக காரன் செவ்வாயுடன்.பண கஷ்டம் என்றால் தொழில் அல்லது வேலை அல்லது உடல் உபாதையால் இருக்க வேண்டும்.லக்னாதிபதி வலிமையாக உள்ளார்.6ம் அதிபதியும் 10ல் நட்பு வீட்டில்.எனவே பண கஷ்டம் உடல் சம்மந்தபட்டதல்ல.10ல் சனி.வேலையில் பல ஏற்ற இறக்கங்கள் இருப்பதால்,வேலை இவருக்கு ஒத்துவராது. எனவே இவருக்கு வியாபாரமே அமைந்தது.வியாபாரத்தில் கஷ்டம்.விரையாதிபதி குரு 11ல்.அதே குரு பாக்யாதிபதியாகவும் வருவதால் அவரே அந்த கஷ்டத்தையும் போக்குகிறார்.நன்றி.
ReplyDeleteAyya,
ReplyDelete1. Money problem happened due to Ketu Desa started at age 34. Because Ketu placement will not be good other than 3,6,11. Issue happened in work place. Because he joined with 6th house owner(Work related) and 10th house(Shani).
2. Issue would have resolved after Sukra Dasa starts. Because he is Uccham and joined with Chandran. Moreover he is owner for 2nd house(Dhanasthanm).
Best Regards,
Trichy Ravi
தசா இருப்பு கொடுக்கப்படவில்லை.
ReplyDeleteஎனவே சரியான நட்சத்திரம், தசா புக்தி அறிய முடியவில்லை.32 வயதில் புத தசா சனி புக்தி அல்லது கேது தசா கேது புக்தி நடந்திருக்கும்.அதனால் அவர் பெருத்த நஷ்டம் அடைந்திருப்பார். புதன் அவருக்கு கடன் ஸ்தானதிபதி புதன் லாப ஸ்தானதிபதி சனியுடனுன் கேதுவுடனும் சம்பந்தம்.
ஏழு ஆண்டுகள் கழித்து சுக்கிர தசா சுக்கிரபுக்தியில் மீண்டும் தலைதூக்கியிருப்பார். கேது தசாவில் பதுங்கிய புலி போல் இருந்திருப்பார்.