உலகம் போற்றும் படைப்பு - நீங்கள் அவசியம் படிக்க வேண்டியது!
உலகம் போற்றும் அருளாளர்களில் "ஆதிசங்கரர்" முதன்மையானவர்.
கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா" என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில... :
கேள்வி (1)
எது இதமானது ?
பதில் (*) தர்மம்.
(2) நஞ்சு எது ?
(*) பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
(3) மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
(*) பற்றுதல்.
(4) கள்வர்கள் யார் ?
(*) புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
(5) எதிரி யார் ?
(*) சோம்பல்.
(6) எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
(*) இறப்புக்கு.
(7) குருடனை விட குருடன் யார் ?
(*) ஆசைகள் உள்ளவன்.
(8) சூரன் யார் ?
(*) கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
(9) மதிப்புக்கு மூலம் எது ?
(*) எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
(10) எது துக்கம் ?
(*) மன நிறைவு இல்லாமல் இருப்பது.
(11) உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
(*) குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
(12) தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
(*) இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.
(13) சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
(*) நல்லவர்கள்.
(14) எது சுகமானது ?
(*) அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
(15) எது இன்பம் தரும் ?
(*) நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
(16) எது மரணத்துக்கு இணையானது ?
(*) அசட்டுத்தனம்.
(17) விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
(*) காலமறிந்து செய்யும் உதவி.
(18) இறக்கும் வரை உறுத்துவது எது ?
(*) ரகசியமாகச் செய்த பாவம்.
(19) எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
(*) துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
(20) சாது என்பவர் யார் ?
(*) ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
(21) உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
(*) சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
(22) யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
(*) எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
(23) செவிடன் யார் ?
(*) நல்லதைக் கேட்காதவன்.
(24) ஊமை யார் ?
(*) சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
(25) நண்பன் யார் ?
(*) பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
(26) யாரை விபத்துகள் அணுகாது ?
(*) மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
படித்ததில் பிடித்தது!
அன்புடன்,
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
உலகம் போற்றும் அருளாளர்களில் "ஆதிசங்கரர்" முதன்மையானவர்.
கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா" என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில... :
கேள்வி (1)
எது இதமானது ?
பதில் (*) தர்மம்.
(2) நஞ்சு எது ?
(*) பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
(3) மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
(*) பற்றுதல்.
(4) கள்வர்கள் யார் ?
(*) புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
(5) எதிரி யார் ?
(*) சோம்பல்.
(6) எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
(*) இறப்புக்கு.
(7) குருடனை விட குருடன் யார் ?
(*) ஆசைகள் உள்ளவன்.
(8) சூரன் யார் ?
(*) கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
(9) மதிப்புக்கு மூலம் எது ?
(*) எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
(10) எது துக்கம் ?
(*) மன நிறைவு இல்லாமல் இருப்பது.
(11) உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
(*) குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
(12) தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
(*) இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.
(13) சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
(*) நல்லவர்கள்.
(14) எது சுகமானது ?
(*) அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
(15) எது இன்பம் தரும் ?
(*) நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
(16) எது மரணத்துக்கு இணையானது ?
(*) அசட்டுத்தனம்.
(17) விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
(*) காலமறிந்து செய்யும் உதவி.
(18) இறக்கும் வரை உறுத்துவது எது ?
(*) ரகசியமாகச் செய்த பாவம்.
(19) எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
(*) துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
(20) சாது என்பவர் யார் ?
(*) ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
(21) உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
(*) சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
(22) யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
(*) எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
(23) செவிடன் யார் ?
(*) நல்லதைக் கேட்காதவன்.
(24) ஊமை யார் ?
(*) சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
(25) நண்பன் யார் ?
(*) பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
(26) யாரை விபத்துகள் அணுகாது ?
(*) மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
படித்ததில் பிடித்தது!
அன்புடன்,
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஏன் உங்கள் எண்ணம் வேறு பாதையில் போகிறது
ReplyDeleteஎந்த அடிப்படையில் உலகம் போற்றுவதில் "ஆதிசங்கரர்" ரை முதன்மையாக்கினீர்
முக்கியமானர் என்று சொல்லுங்கள்...
முதல்வர் என்று சொல்லாதீர்கள்..
இப்படி சொல்வதால்
இவரை குறை சொல்லவில்லை ... ஆனால்...
வரும் தலைமுறை தவறானதை அறிய நாமே
வழி வகுக்கலாமா?
தமிழ் (பாட்டி)சொல்லாததை
தரணியில் யாரும் சொல்லவில்லை
என்பதே உண்மை..
என்றாலும் இவர் கருத்தை
பதிவது தவறில்லை... தவறாக
புரிந்து கொள்ளும்படி செய்வது சொல்வது தவறு. அல்லவா .
அன்பின் மிகுதியால்
அதட்டி சொல்லிவிட்டேன்
தவறு இருந்தால் மன்னிக்க வேண்டாம்
தண்டிக்கலாம்..
Respected Sir,
ReplyDeleteHappy morning... Answer for 11th question is superb among all.
Have a holy day.
Thanks & Regards,
Ravi-avn
குருவே சரணம்.
ReplyDeleteமிக மிக உயர்ந்த படிப்பினைகள் கொண்ட கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா!
அருமை.அருமையிலும் அருமை.
ReplyDeleteப்ரஸ்னம் என்றால் கேள்வி. உத்தரம் என்றால் பதில். ஆக இக்காலத்தில் வாரப் பத்திரிகைகளில் வரும் கேள்வி பதில் போலத்தான். ஆனால் ஆதிசங்கரரிடம் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும் காலத்தால் அழியாதவை. நமது பத்திரிகைக் கேள்வி பதிலில் ரம்யா கிருஷ்ணனின் மூக்கும், ராதிகாவின் மூக்கும் ஒப்பிடுவது அல்லவா நடக்கிறது.
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஏன் உங்கள் எண்ணம் வேறு பாதையில் போகிறது
எந்த அடிப்படையில் உலகம் போற்றுவதில் "ஆதிசங்கரர்" ரை முதன்மையாக்கினீர்
முக்கியமானர் என்று சொல்லுங்கள்...
முதல்வர் என்று சொல்லாதீர்கள்..
இப்படி சொல்வதால்
இவரை குறை சொல்லவில்லை ... ஆனால்...
வரும் தலைமுறை தவறானதை அறிய நாமே
வழி வகுக்கலாமா?
தமிழ் (பாட்டி)சொல்லாததை
தரணியில் யாரும் சொல்லவில்லை
என்பதே உண்மை..
என்றாலும் இவர் கருத்தை
பதிவது தவறில்லை... தவறாக
புரிந்து கொள்ளும்படி செய்வது சொல்வது தவறு. அல்லவா .
அன்பின் மிகுதியால்
அதட்டி சொல்லிவிட்டேன்
தவறு இருந்தால் மன்னிக்க வேண்டாம்
தண்டிக்கலாம்..////////
உங்களின் கருத்துப் பகிர்விர்க்கு நன்றி வேப்பிலையரே!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Answer for 11th question is superb among all.
Have a holy day.
Thanks & Regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே சரணம்.
மிக மிக உயர்ந்த படிப்பினைகள் கொண்ட கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா!//////
உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமை.அருமையிலும் அருமை.
ப்ரஸ்னம் என்றால் கேள்வி. உத்தரம் என்றால் பதில். ஆக இக்காலத்தில் வாரப் பத்திரிகைகளில் வரும் கேள்வி பதில் போலத்தான். ஆனால் ஆதிசங்கரரிடம் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும் காலத்தால் அழியாதவை. நமது பத்திரிகைக் கேள்வி பதிலில் ரம்யா கிருஷ்ணனின் மூக்கும், ராதிகாவின் மூக்கும் ஒப்பிடுவது அல்லவா நடக்கிறது.//////
உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!