பசுவின் பால் சைவமா, அசைவமா?
1
பசுவின் பால் சைவமா, அசைவமா?
மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக
மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச்
சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.
ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும்.
மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும்
கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்", என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் ஒளவைப்பாட்டி.
--------------------------------------------------------
2
அரோகரா' என்றால் என்ன?
'அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற
சொற்களின் சுறுக்கம். இதற்கான பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக' ... என்பதாகும்.
முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது.
திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்
போது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ'
என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட
பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ ஹரா'என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 'அர ஹரோ ஹரா'
என்று சொல்வது வழக்கமாயிற்று.
காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது.
ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்), 'வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா' ... என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'
என்று சொல்வது, 'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி,
நற்கதியை அருள்வாயாக'
என்று உரிமையோடு முறையிடுவதாகும்.
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் இனி, 'வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா' ... என்று உற்சாகமாகச்
சொல்வோமே!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
இப்போ பால் கறக்கும் முறை
ReplyDeleteஇப்படித்தான்...
பசுவின் மடியில் மிஷின் மாட்டி விடுவார்கள் - பின்
பால் 4 மடுவில் இருந்து கரந்துவிடும்
கன்றுக்கு கூட இல்லாமல் இது தான்
கஷ்டமானது.. அதை விட கொடுமை
பால் போதவில்லை என்று ரசாயணம் கலந்த
பவுடர் வேறு கலந்து விடுவார்கள்..
முன்பெல்லாம் சில நேரத்தில் மட்டுமே கிடைக்கும்
முதலில் இதை சொல்லுங்க... இப்போ எப்படி
24 மணி நேரமும் பால் கிடைக்கிறது
இதுபற்றி யாராவது யோசித்ததுண்டா?
சைவமா ..? அசைவமா..? என்று கேட்பதற்கு பதில்
சாப்பிடலாமா? வேண்டாமா? என்று கேட்டு இருக்கலாம்..
இன்னும் கொடுமை தெரியுமா?
இப்போ எல்லாம் ரயில் நிலைய பின்புறம்
பெவிகால்லை கலந்து இது தான்
பெஸ்ட் பால் (திக் ஆக இருப்பதால்) என
காபி டீ வியாபாரம் படு சூப்பர் அதனால்
கஷ்டம் சாப்பிடுபவருக்கு
காசு அவர்களுக்கு இந்த
கேள்வியினால்
அது சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும்
அந்த பாலை சாப்பிடாமல் இருப்பது தான் ஆரோக்கியம்.
முடிந்தால் பின்பற்றுங்கள்...
முடியாவிட்டால் மருத்துவரை சந்தியுங்கள்...
சிந்திக்காமல் சொல்லும் விதண்டாவாதங்களில் இதுவும் ஒன்று.
ReplyDeleteபால் அசைவம் என்றால் (அது பசும்பால் என்றாலும் சரி, தாய்ப்பால் என்றாலும் சரி), கன்றுக்குட்டிகள் எல்லாம் மாமிச உண்ணிகள் என்றாகி விடும். இதில் எல்லா பாலூட்டும் தாவர உண்ணிகளும் அடங்கி விடும்.
எனவே இந்த வாதம் அர்த்தம் இல்லாதது. சுய சிந்தனை இல்லாதது. சில விதண்டாவாதிகளுடன் வாதாடுவதை விட, விலத்தி நடப்பது நமக்கு நலம். அவர்கள் சிந்தனைகளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பேலாது என்பது போல், சிலர் வீம்புக்கென்றே வம்பிழுப்பது. அவர்களுடன் சகவாசம் வைப்பதே வீண்.
ஆனால், பசுவை ஆதரவுடன் பேணி வளர்க்கும் சைவர்களுக்கு, நீங்கள் கூறுவது போல், கன்றுக்கு முதல் விட்டுவிட்டே கறக்க வேண்டும் என்பது தெரிந்திருந்தது. பசுவை வளர்த்து அனுபவம் உள்ளவர்களுக்கும், அனுபவமுள்ள தாய்மார்களுக்கும் இது புரியும். அவ்வீடுகளில் கன்றை அவிழ்த்து விட்டு, குடிக்க விட்டு விட்டே, பால் கறப்பர். அதனால், பசுவும் திருப்தியுடன் பால் கறக்க விடும். அத்துடன் பால் குறைவு என்ற கேள்விக்கே இடமில்லை. இறைக்க இறைக்க கிணறும், கேணியும் ஊறுவது போல், கறக்க கறக்க பால் அதிகம் சுரக்கும் (என்ன, பசுவிற்கு தீவனம், நீர் நன்றாக வைத்தால் போதும்.).
Respected Sir,
ReplyDeleteHappy morning... Vetri vel muruganekku arokhara...
Simply suberb sir.
With kind regards,
Ravi-avn
குருவே சரணம்.
ReplyDeleteபாலைப் பற்றிய இக்கேள்வி பல்லாண்டு காலமாகவே இருந்து வருகிறது!புல்லை
தின்று பாலாகத் தருகிறது,பசு!ஆனாலும் மனிதனின் அபரிமிதமான ஆசையால் அவன் பசுவின் நான்கு காம்புகளிலிருந்தும் பால் கறப்பது போதாதென்று, injectionஉம் போடத் தொடங்கிவிட்டான்! பசும்பாலின் சிறப்பை, உண்மைத் தன்மையைத்
தாங்கள் அழகாகக் கூறியுள்ளீர்கள்!
மும்மூர்த்திகளும் (அப்பர்,சுந்தரர்,திருஞானசம்பந்தர்) தாங்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு கட்டங்களில் இறைவனை/இறைவியை நேரில் வரவழைத்து மக்களின் துன்பங்களைப் போக்கிய உணர்ச்சித் தருணங்களைப் படித்திருக்கின்றோம்!!
அப்பேற்பட்டபேறுடைய திருஞானசம்பந்தர் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நாமமான "அர ஹரோ ஹரா" வை தற்சமயம் முருகப்பெருமானுக்குச் சொல்வோம்; சுவாமிநாதனான கார்த்திகைக் குமரன் நம் அனைவரின் துன்பங்களையும் போக்கி, நற்கதியையும் அருளட்டும்!
அர ஹரோ ஹரா!!
செந்தமிழ் பாடிய ஞான சம்பந்தர் வடமொழியில் கூவிட சொல்லியிருப்பார் என்பது சந்தேகமே!
ReplyDeleteஜெயகுமார்
வாத்தியார் ஐயா அரோகரா
ReplyDeleteபால் - கண்டிப்பாக அசைவம் தான்.
ReplyDeleteஆச்சரியமாக இருந்தது. எனக்கும் இது தெரியும் வரை.
தெலுங்கு தொலைக்காட்சியில், சமய சொற்பொழிவாளர், கொடுத்த விளக்கம், புதுமையாக இருந்தது.
சைவ - வைணவம் / சைவம் - அசைவம். எதோ ஒரு ஒற்றுமை எதோ ஒரு வேற்றுமை.
சைவம் என்றால் ஜடத்துவம். அதானல் தான் சிவபெருமானை, மலையாக வணங்குகிறோம். ஆகையால் அசையாமல், அதாவது ஒரு இடத்தை விட்டு நகராமல் , ஒரே இடத்தில் இருப்பது சைவம். இதற்கு மாறாக, வைணவத்தில், நீரை குறிப்பாக நதியை, பாற்கடலை கடவுளாக வணங்குகிறோம். பெருமாள் கோவிலில் தீர்த்தம் தருகிறார்கள்.
இதே பாணியில், அசையாமல், அதாவது ஒரு இடத்தை விட்டு நகராமல் இருப்பது மரம், செடிகொடிகளே. இவற்றிலிருந்து நமக்கு கிடைப்பது மட்டும் தான் சைவம்.
மாடு, கோழி முதலியவை அசைவம் தான். அதன் மூலம் பெறப்படும் பால் / முட்டை முதலியவையும் அசைவம் தான். ஏன் மனித உடம்பே மாமிசம் தான்.
பிறகு அவரவர் விருப்பம் தான், எதை சாப்பிவது/எதை சாப்பிடகூடாது என்பது.
வெ.நாராயணன்.
புதுச்சேரி.
பால் சைவமோ அசைவமோ அது கூட இரண்டாம் பட்சமே...
ReplyDeleteஆனால்...
பசு கருத்தரிக்க மனிதன் மேற்கொள்ளும் முறைதான்
அசைவமாக அல்ல அரக்கத்தனமாகவே தோன்றுகிறது...
கோமாதாவாக போற்ற வேண்டிய பசுவிற்கு
கருத்தரிக்க ஊசி போடும் சமுதாயம் இது...
காளை மாட்ட பார்த்தே பல வருசம் ஆச்சு...
ஒன்லி பசு...
அதும் போடுது கன்னு குட்டி...
நாமும் கறக்கறோம் பாலை...
நல்ல பகிர்வு....
ReplyDeleteஅரோகரா....
///////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஇப்போ பால் கறக்கும் முறை
இப்படித்தான்...
பசுவின் மடியில் மிஷின் மாட்டி விடுவார்கள் - பின்
பால் 4 மடுவில் இருந்து கரந்துவிடும்
கன்றுக்கு கூட இல்லாமல் இது தான்
கஷ்டமானது.. அதை விட கொடுமை
பால் போதவில்லை என்று ரசாயணம் கலந்த
பவுடர் வேறு கலந்து விடுவார்கள்..
முன்பெல்லாம் சில நேரத்தில் மட்டுமே கிடைக்கும்
முதலில் இதை சொல்லுங்க... இப்போ எப்படி
24 மணி நேரமும் பால் கிடைக்கிறது
இதுபற்றி யாராவது யோசித்ததுண்டா?
சைவமா ..? அசைவமா..? என்று கேட்பதற்கு பதில்
சாப்பிடலாமா? வேண்டாமா? என்று கேட்டு இருக்கலாம்..
இன்னும் கொடுமை தெரியுமா?
இப்போ எல்லாம் ரயில் நிலைய பின்புறம்
பெவிகால்லை கலந்து இது தான்
பெஸ்ட் பால் (திக் ஆக இருப்பதால்) என
காபி டீ வியாபாரம் படு சூப்பர் அதனால்
கஷ்டம் சாப்பிடுபவருக்கு
காசு அவர்களுக்கு இந்த
கேள்வியினால்
அது சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும்
அந்த பாலை சாப்பிடாமல் இருப்பது தான் ஆரோக்கியம்.
முடிந்தால் பின்பற்றுங்கள்...
முடியாவிட்டால் மருத்துவரை சந்தியுங்கள்...///////
நீங்கள் வேறு ஏன் சாமி பெவிகால் அது இது என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள்? வெளியில் டீ, காபி சாப்பிடுவதைத் தவிர்த்து விடலாம். வீட்டில் ஆவின் பால் வாங்கி உபயோகிப்பதில் என்ன தவறு?
//////Blogger Mrs Anpalagan N said...
ReplyDeleteசிந்திக்காமல் சொல்லும் விதண்டாவாதங்களில் இதுவும் ஒன்று.
பால் அசைவம் என்றால் (அது பசும்பால் என்றாலும் சரி, தாய்ப்பால் என்றாலும் சரி), கன்றுக்குட்டிகள் எல்லாம் மாமிச உண்ணிகள் என்றாகி விடும். இதில் எல்லா பாலூட்டும் தாவர உண்ணிகளும் அடங்கி விடும்.
எனவே இந்த வாதம் அர்த்தம் இல்லாதது. சுய சிந்தனை இல்லாதது. சில விதண்டாவாதிகளுடன் வாதாடுவதை விட, விலத்தி நடப்பது நமக்கு நலம். அவர்கள் சிந்தனைகளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பேலாது என்பது போல், சிலர் வீம்புக்கென்றே வம்பிழுப்பது. அவர்களுடன் சகவாசம் வைப்பதே வீண்.
ஆனால், பசுவை ஆதரவுடன் பேணி வளர்க்கும் சைவர்களுக்கு, நீங்கள் கூறுவது போல், கன்றுக்கு முதல் விட்டுவிட்டே கறக்க வேண்டும் என்பது தெரிந்திருந்தது. பசுவை வளர்த்து அனுபவம் உள்ளவர்களுக்கும், அனுபவமுள்ள தாய்மார்களுக்கும் இது புரியும். அவ்வீடுகளில் கன்றை அவிழ்த்து விட்டு, குடிக்க விட்டு விட்டே, பால் கறப்பர். அதனால், பசுவும் திருப்தியுடன் பால் கறக்க விடும். அத்துடன் பால் குறைவு என்ற கேள்விக்கே இடமில்லை. இறைக்க இறைக்க கிணறும், கேணியும் ஊறுவது போல், கறக்க கறக்க பால் அதிகம் சுரக்கும் (என்ன, பசுவிற்கு தீவனம், நீர் நன்றாக வைத்தால் போதும்.)./////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
//////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Vetri vel muruganekku arokhara...
Simply suberb sir.
With kind regards,
Ravi-avn/////
வீரவேல் முருகனுக்கு அரோஹரா!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே சரணம்.
பாலைப் பற்றிய இக்கேள்வி பல்லாண்டு காலமாகவே இருந்து வருகிறது!புல்லைத் தின்று பாலாகத் தருகிறது,பசு!ஆனாலும் மனிதனின் அபரிமிதமான ஆசையால் அவன் பசுவின் நான்கு காம்புகளிலிருந்தும் பால் கறப்பது போதாதென்று, injectionஉம் போடத் தொடங்கிவிட்டான்! பசும்பாலின் சிறப்பை, உண்மைத் தன்மையைத் தாங்கள் அழகாகக் கூறியுள்ளீர்கள்!
மும்மூர்த்திகளும் (அப்பர்,சுந்தரர்,திருஞானசம்பந்தர்) தாங்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு கட்டங்களில் இறைவனை/இறைவியை நேரில் வரவழைத்து மக்களின் துன்பங்களைப் போக்கிய உணர்ச்சித் தருணங்களைப் படித்திருக்கின்றோம்!!
அப்பேற்பட்டபேறுடைய திருஞானசம்பந்தர் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நாமமான "அர ஹரோ ஹரா" வை தற்சமயம் முருகப்பெருமானுக்குச் சொல்வோம்; சுவாமிநாதனான கார்த்திகைக் குமரன் நம் அனைவரின் துன்பங்களையும் போக்கி, நற்கதியையும் அருளட்டும்!
அர ஹரோ ஹரா!!//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
//////Blogger jk22384 said...
ReplyDeleteசெந்தமிழ் பாடிய ஞான சம்பந்தர் வடமொழியில் கூவிட சொல்லியிருப்பார் என்பது சந்தேகமே!
ஜெயகுமார்/////
அதை எப்படிச் சொல்ல முடியும்? திருஞான சம்பந்தருக்கு வடமொழி தெரியாது என்பதை எப்படிச் சொல்ல முடியும்?
///////Blogger siva kumar said...
ReplyDeleteவாத்தியார் ஐயா அரோகரா/////
வாத்தியார் ஐயாவிற்கு எதற்கு அரோஹரா! முருகனுக்கு அரோஹரா!
///////Blogger Narayanan V said...
ReplyDeleteபால் - கண்டிப்பாக அசைவம் தான்.
ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் இது தெரியும் வரை.
தெலுங்கு தொலைக்காட்சியில், சமய சொற்பொழிவாளர், கொடுத்த விளக்கம், புதுமையாக இருந்தது.
சைவ - வைணவம் / சைவம் - அசைவம். எதோ ஒரு ஒற்றுமை எதோ ஒரு வேற்றுமை.
சைவம் என்றால் ஜடத்துவம். அதனால் தான் சிவபெருமானை, மலையாக வணங்குகிறோம். ஆகையால் அசையாமல், அதாவது ஒரு இடத்தை விட்டு நகராமல் , ஒரே இடத்தில் இருப்பது சைவம். இதற்கு மாறாக, வைணவத்தில், நீரை குறிப்பாக நதியை, பாற்கடலை கடவுளாக வணங்குகிறோம். பெருமாள் கோவிலில் தீர்த்தம் தருகிறார்கள்.
இதே பாணியில், அசையாமல், அதாவது ஒரு இடத்தை விட்டு நகராமல் இருப்பது மரம், செடிகொடிகளே. இவற்றிலிருந்து நமக்கு கிடைப்பது மட்டும் தான் சைவம்.
மாடு, கோழி முதலியவை அசைவம் தான். அதன் மூலம் பெறப்படும் பால் / முட்டை முதலியவையும் அசைவம் தான். ஏன் மனித உடம்பே மாமிசம் தான்.
பிறகு அவரவர் விருப்பம் தான், எதை சாப்பிவது/எதை சாப்பிடக்கூடாது என்பது.
வெ.நாராயணன்.
புதுச்சேரி.//////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நாராயணன்!
////Blogger A. Anitha said...
ReplyDeleteபால் சைவமோ அசைவமோ அது கூட இரண்டாம் பட்சமே...
ஆனால்...
பசு கருத்தரிக்க மனிதன் மேற்கொள்ளும் முறைதான்
அசைவமாக அல்ல அரக்கத்தனமாகவே தோன்றுகிறது...
கோமாதாவாக போற்ற வேண்டிய பசுவிற்கு
கருத்தரிக்க ஊசி போடும் சமுதாயம் இது...
காளை மாட்ட பார்த்தே பல வருசம் ஆச்சு...
ஒன்லி பசு...
அதும் போடுது கன்னு குட்டி...
நாமும் கறக்கறோம் பாலை...//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
///////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteநல்ல பகிர்வு....
அரோகரா....//////
நல்லது. நன்றி நண்பரே!
வணக்கம் ஐயா.
ReplyDelete