புத்தக விமர்சனம்
விஜய் டிவி புகழ் மங்களம் ஆச்சி அவர்கள் எழுதிப் பதிப்பித்துள்ள ‘ செட்டிநாட்டு பாரம்பரிய சமையல்’ என்னும் நூலைப் பற்றிய செய்தியை உங்களுக்கு அறியத் தரவிரும்புகிறேன்
புத்தகத்தைக் கையில் எடுத்தவுடனேயே நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம். எல்லாவிதத்திலும் அப்படியொரு நேர்த்தியான அமைப்பு. அருமையாக வடிவமைக்கப்பெற்று நல்ல காகிதத்தில் நேர்த்தியாக அச்சிடப்பெற்றுள்ளது.
செட்டிநாடு' என்றாலே, கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் முதலில் நம் கண் முன்னே வந்து நிற்கும்.
வெள்ளைப் பணியாரம்,பால் பணியாரம்,கும்மாயம், இனிப்பு சீயம்,
ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை, கந்தரப்பம்.
கவுனி அரிசி. என்று சுவையான உணவுவைகள் நூற்றுக்கும் மேல்
உள்ளன. அவைகள் அனைத்தும் கண் முன்னே வந்து நிற்கும்.
செட்டிநாட்டு உணவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி உடையதாகும். மேலான சிறப்பிற்கு அதுதான் காரணமுமாகும்.
செட்டிநாட்டு பாரம்பரிய உணவு மற்றும் பலகார வகைகளுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தனி செல்வாக்குண்டு. சொக்க வைக்கும் சுவையுடனும், மணத்துடனும் இருக்கும் செட்டிநாட்டு உணவு வகைகள்தான், இப்பொழுது ஐந்து நட்சத்திர உணவகங்களில்
இருந்து கையேந்தி பவன்கள்வரை கோலோச்சுகிறது.
இந்த நூலில், திருமதி மங்களம் ஆச்சி அவர்கள் சிறப்பாகப் பல
செட்டிநாட்டு உணவுவகைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளார்கள். செய்முறைகளை எளிமையான தமிழில் எழுதியுள்ளார்கள். ஆச்சி அவர்களுக்கு 86 வயதாகிறது. இந்த வயதிலும் அவர்களின் இப்பணியைச் செய்துள்ளது மிகுந்த பாராட்டிற்கு உரியதாகும். முதற்கண் அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்!
இந்த “பாரம்பரிய செட்டிநாடு சமையல்” நூல் சிறப்பாக அமைந்துள்ளது. நீங்கள் எளிதில் செய்யக்கூடிய நோக்கில் எழுதியுள்ளார்கள். நீங்களும் செய்து பாருங்கள். தன்னுடைய நீண்ட நாள் சமையல் அனுபவம்
பலருக்கும் பயன்பட வேண்டும் என்று அவற்றை எழுதி நூலாக்கித்
தவழ விட்டிருக்கிறார்கள்.
இந்த நூல் ஒரு மூத்த குடிமகளின் அனுபவ வெளிப்பாடு. அதுதான்
இந்த நூலுக்கு உரிய முத்தாய்ப்பான சிறப்பாகும்.
அனைவரும் இந்த நூலைப் பணம் கொடுத்து வாங்கி, படித்துப் பயனடையுங்கள்.
இனிப்பு வகைகள், காரசிற்றுண்டிகள், சட்னி வகைகள், சாத வகைகள், சூப் வகைகள், மண்டி/பச்சடி/கூட்டு வகைகள், பொறியல் வகைகள், குழம்பு வகைகள், பாயாச வகைகள் என்று மொத்தம் ஒன்பது பகுதிகளாகப் புத்தகம் தொகுக்கப்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்!
புத்தகம் கிடைக்கும் இடம்:
மங்களம் ஆச்சி பதிப்பகம்,
வி - 84, ரங்கா திரியம்பவா,
காளப்பட்டி ரோடு,
கோயமுத்தூர் - 641 014
அலைபேசி எண்: 94432 76860
பக்கங்கள் 166
விலை: ரூ.150:00 + கூரியர் செலவு (ஊரைப் பொருத்து) தனி. உத்தேசமாக
200 ரூபாய்கள் ஆகும். ஆனால் அதில் உள்ள மேட்டரைப் பார்க்கும் போது இந்தத் தொகை ஒன்றும் மேட்டரல்ல! அதாவது பெரிய விஷயமல்ல!
அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
இந்த ஆச்சி விஜய் டிவியில் 'கிட்ச்சன் சூப்பெர் கிங்'நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே பார்த்து மகிழ்ந்தேன். அவர்களுடைய சமையல் திறமையும் இளையவர்களுடன் போட்டியிட்ட சுறு சுறுப்பும் வியக்க வைத்தன.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி ஐயா!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇந்த ஆச்சி விஜய் டிவியில் 'கிட்ச்சன் சூப்பெர் கிங்'நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே பார்த்து மகிழ்ந்தேன். அவர்களுடைய சமையல் திறமையும் இளையவர்களுடன் போட்டியிட்ட சுறு சுறுப்பும் வியக்க வைத்தன.
அறிமுகத்திற்கு நன்றி ஐயா!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
//வெள்ளைப் பணியாரம்,பால் பணியாரம்,கும்மாயம், இனிப்பு சீயம்,
ReplyDeleteஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை, கந்தரப்பம், கவுனி அரிசி.//
இந்தப் பெயரையெல்லாம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். என் மனைவி நிறைய சமையல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறார். ஒன்றிரணடைத் தவிர எதையும் சமைத்துப் பார்த்ததில்லை. நான் சாப்பாட்டுப் பிரியனுமல்லன். அதனால் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. எனக்கானது, சிறு வயது முதலே, அளவுச் சாப்பாடு என்பார்களே அது போன்றதுதான்.
Super book
ReplyDelete