Astrology: Proof for Destiny: விதிக்கு வேண்டுமா சான்று?
விதிக்குச் சான்று
"Everything is 'Prewritten' and nothing can be rewritten in our life. So live the best and leave the rest to The Almighty" என்று நான் அடிக்கடி சொல்வேன்.
“எல்லாமே விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டபடிதான் எதுவுமே நடக்கும் எனும்போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகபோகிறது. ஆகவே கவலையை விட்டொழி” என்பார் கவியரர் கண்ணதாசன்
விதியைப் பற்றி அதிரடியாக, விளக்கமாக, எளிமையாக, இரத்தினச் சுருக்கமாக இரண்டு இரண்டு வரிகளில் எழுதிவைத்து விட்டுப்போனவர் திருவள்ளுவர். திருக்குறளின் 38ஆவது அதிகாரத்தில் பத்துக் குறள்கள் உள்ளன. படித்துப் பாருங்கள். மனம் தெளிவடையும்
“என்ன செய்யும் விதி?”
“விதி என்று ஒன்று உண்டா?”
என்று கேட்பவர்களுக்கெல்லாம், நான் வள்ளுவரின் இந்தக் குறளைத்தான் அடையாளம் காட்டுவேன்:
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் நுறும்”
இந்தக் குறளுக்கு திரு மு.வரதராசனார் அவர்கள் எழுதிய விளக்க உரை
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் அது தானே முன் வந்து நிற்கும்.
பாதிரியார் ஜி.யு.போப் அவர்கள், இந்தக் குறளை மொழிமாற்றம் செய்யும்போது இப்படி எழுதினார்:
Nothing is stronger than destiny.If you try to forfeit destiny, It won't allow and it will come in your way again and again
-----------------------------------------------------------------------------
“அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”
“நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்துவாய். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது. அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”
-----------------------------------------------------------------------------
இன்றையப் பாடம் பாடல் வடிவில் உள்ளது. இரவல் வாங்கியது. எழுதியவர் ஒரு மாபெரும் கவிஞர் கவியரசர் கண்ணதாசன்.
----------------------------------------------------------------------------
ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
ஆனந்தக் கூத்துமாய் வாழும்
ஆறிரண் டானபின் பள்ளியும் பாடமும்
ஆரவா ரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
தன்நினை வெண்ணியே வாடும்!
காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றம்வரும் குணத்தில்மாற் றம்வரும்
கொள்கைமாற் றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
நல்லதாய்க் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநாள் வாழ்ந்தபின்
வாழ்ந்ததை எண்ணியே வாடும்!
விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
கவலைகள் உண்டெனக் கண்டோம்
முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்
முழுமோர் விறகுமாய் மாறி
சிதையிலே அமர்ந்திடும் மரங்களும் மனிதனும்
தேவனின் லீலைகள் அலவோ!
எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
என்றும்நம் உரிமைகள் எனவே
நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
நாயகன் செய்கைவே றில்லையே
உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
உயர்வதும் தாழ்வதும் அவனே
விண்ணுயர் மாளிகைச் செல்வனும் வாழ்க்கையில்
வேறென்ன செய்வதோ இதிலே!
தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
தொடர்புண்டாம் இவைஇவை இடையே
ஊன்றுகோல் மானிடம் உள்விழும் பள்ளமே
உயர்ந்ததோர் நாயகன் கதையே
சான்றுகேட் பார்க்கெலாம் ஒன்றைநான் காட்டுவேன்
சாவினை வென்றவர் இலையே
ஈன்றவள் ஒருத்திபோல் எடுப்பவன் ஒருவனாம்
இதன்பெயர் ஆண்டவன் விதியே!
-கண்ணதாசன்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Good morning sir,
ReplyDeletenice lesson
I am agreeing with post. but then Human try is just to prove the destiny? I really wonder, destiny to console our self from Sorrows and bad thoughts. Mind can carry on next events on the base of destiny.
ReplyDeleteAbsolutely true sir
ReplyDeleteவிதி வலியது என்று தான்
ReplyDeleteவள்ளுவன் சொன்னான்
விதியை வெல்ல முடியாது என
விதிவிலக்காக கூட சொல்லவில்லை
கால் பட்டு அழிந்தது
தலையெழுத்து என்பார் அருணகிரி
உங்கள் கருத்து
உண்மையில் முரணானது..
ஏற்றுக் கொள்ளாத மனம்
இருக்கும் போது என்னத்த சொல்ல
உங்கள் கருத்து
உங்களுக்கு சரியாக இருக்கலாம்
உண்மைக்கு அது
உசிதமாக இராது..
அவ்வளவில் அவன் மகிழ்க என்ற
அப்பர் வாக்கினை கொண்டு
வாழ்த்துக்களும்
வணக்கங்களும்
//“நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்துவாய். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது. அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”// உண்மைதான் குரு, ஆனால் அதற்கும் இறைவன் அருள் வேண்டும். முயற்சி நம்முடையது ஆனால் முடிவு நம்முடையது கிடையாது -இதுவும் தாங்கள் சொன்னதே அதுவும் கிரிஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் கூறியதாக.
ReplyDeleteநன்றி.
செல்வம்
நல்ல பகிர்வு...
ReplyDelete////Blogger sundari said...
ReplyDeleteGood morning sir,
nice lesson//////
நல்லது. நன்றி சகோதரி!!
////Blogger Karthikraja K said...
ReplyDeleteI am agreeing with post. but then Human try is just to prove the destiny? I really wonder, destiny to console our self from Sorrows and bad thoughts. Mind can carry on next events on the base of destiny.////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger எண்ணமும் - எழுத்தும் said...
ReplyDeleteAbsolutely true sir/////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger வேப்பிலை said...
ReplyDeleteவிதி வலியது என்று தான்
வள்ளுவன் சொன்னான்
விதியை வெல்ல முடியாது என
விதிவிலக்காக கூட சொல்லவில்லை//////
திருக்குறளின் 38 ஆவது அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் உள்ளன. முதலில் அவற்றைப் படித்துவிட்டு வந்து விளக்கம் சொல்லுங்கள் வேப்பிலையாரே!
/////Blogger Selvam Velusamy said...
ReplyDelete//“நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்துவாய். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது. அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”// உண்மைதான் குரு, ஆனால் அதற்கும் இறைவன் அருள் வேண்டும். முயற்சி நம்முடையது ஆனால் முடிவு நம்முடையது கிடையாது -இதுவும் தாங்கள் சொன்னதே அதுவும் கிரிஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் கூறியதாக.
நன்றி.
செல்வம்/////
இறையருள் என்பது சுவாசம் போன்றது. அது இல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்!
"ஏற்றுக் கொள்ளாத மனம்
ReplyDeleteஇருக்கும் போது என்னத்த சொல்ல"
ஏற்றுக் கொள்ளும்படிக்கு வேப்பிலை சுவாமிகள் சொல்ல வேண்டும் என்று
விக்ஞாபனம் செய்து கொள்கிறேன்.
விதியை, வழிபாடும், அதன் பலனான இறைக் கருணையும் போக்கிவிடும் என்ற
கருத்துக்கு எந்த மனமும் முரணாக இருக்காது.
"சொல்லாதே யாரும் கேட்டால்..." என்ற சொர்க்கம் படப் பாடலில் இதே கவியரசர் கண்ணதாசன்
"விதியென்று ஏதும் இல்லை;வெதங்கள் வாழ்க்கை இல்லை;
உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே.. மேலே "
என்பார்.
/////Blogger சே. குமார் said...
ReplyDeleteநல்ல பகிர்வு.../////
நல்லது. நன்றி!