Quiz No.37: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
தொடர் - பகுதி முப்பத்தியேழு
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் ஒரு அய்யனின் ஜாதகம். அய்யனின் நிதி நிலைமையை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.அவருக்குப் பணக் கஷ்டம் உள்ளதா? இல்லையா? இருந்தால் அது எப்போது தீரும். எழுதுங்கள்
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
------------------------------------------------------------------------------------------
இலக்கினாதிபதி குரு 7ல் இருந்து தனது நேரடி பார்வையில் இலக்கினதையும் இலக்கினத்தில் உள்ள 2ம் இடத்து சனி பகவானை பார்க்கிறார். குரு இருக்கும் வீட்டிற்கு அதிபதி புதன் உச்சம், நீசமான 11ம் இடத்து அதிபதி (இலாபாதிபதி) சுக்கிரனுடன் (நீச பங்க இராஜ யோகம்). 8ம் இடத்து சந்திரன் 12ல் நீசம். குரு பார்வையில் 11ம் இடம் உள்ளது. பாக்கியாதிபதி சூரியன் தன்னுடைய சொந்த வீடான சிம்மத்தில் மூல திரிகோணத்தில் உள்ளார். 2ம் அதிபர் அந்த வீட்டிற்கு 12ம் இடத்திலும், 11ம் அதிபர் அந்த வீட்டிற்கு 12ம் இடத்திலும் இருந்தாலும், மற்ற யோகங்கள் இவரை பெரும் செல்வந்தராக ஆக்கி இருக்கும். ஆகஸ்ட் 30 1930 பிறந்த இவர் யார் என்று பார்த்தால், அட நம்ம வாரன் பப்பெட் அவர்கள். உலக செல்வந்தர்கள் வரிசையில் முதல் 3 இடங்களுக்குள் எப்போதும் இருக்கும், தனது செல்வத்தின் பெரும் பகுதியை தானமாக அளித்திருக்கும் மிக எளிமையான வாழ்க்கை வாழும் ஒரு பெருமகன்.
ReplyDeleteResult : The native has financial problems.
ReplyDeleteReasons:
1) 2nd lord saturn in 12th place from itself on the lagna
2) malefic aspect of mars on 2nd house. Mars being the 12th lord.
Mars also damages the dhanakaraka Guru. Saturn's malefic aspect on dhanakaraka.
3) 11th lord is debilitated in 10th house(i.e. 12th place from itself).
4) There is a slight chance of increase in the inflow of income after getting married because of wife's luck but still the native's chance of handling and maintaining money are weak because of weak 2nd house. Should hand over the money to wife if the wife has a better 2nd house.
Good Morning Sir
ReplyDeleteThe native get lot of my from his wife side and horse race/gambling. But most of it will not stay with him. He will get money inKethu Dasa/budhi and budhan/sukran dasa/budhi
1. 10th lord with Sukran (money from wifeside). Sukran neecha pangam as well.
2. Kethu in 11th money from horse race/gambling
3. 2nd lord is in 12th place from it and have Mars's look. Mars looks at 2nd place as well. Guru's look at 2nd lord is the consolation.
இரண்டாம் அதிபதியான (தனஸ்தானாதிபதி) சனி வக்கிரமாகி, இரண்டுக்குப் பன்னிரண்டில், அதாவது லக்கினத்தில் இருப்பதால் தனஸ்தானத்திற்கு உதவமுடியாது; ஐந்தாம் அதிபதி ஐந்துக்கு மூன்றில் மற்றும் முக்கியமான பதினொன்றாம் அதிபதி அந்த ஸ்தானத்திற்குப் பன்னிரண்டில் நீசபங்கம் ஆகி பாபகர்த்தாரியில் என்று முக்கியமானவர்கள் தனயோக ஸ்தானங்களுக்கு மறைவு ஸ்தானங்களில் இருக்கிறார்கள்.
ReplyDeleteதனகாரகனும் ஐந்தாம் அதிபனும் பதினொன்றாம் அதிபனும் வக்கிர சனியின் பார்வையில்.
மேலும் ஐந்திலும் பதினொன்றிலும் ராஹு மற்றும் கேது இருப்பதால் சிறப்பான தன யோகம் ஒன்றும் இல்லை.
எண்பத்துமூன்று வயதாகும் இவருக்கு வாழ்வில் பணத் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருந்திருக்கும்.
aiyanugku. guru, sevvai 7 el erunthu
ReplyDeletelagnam,thanathipathi saniyaium
paargkirargal. sukgiran, puthan 10 el
erugkirathu. athanaal aiyan
KOTEESVARAN !!!
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteஇரண்டாம் வீட்டின் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 12 ல்.
தனகாரகன் குரு, விரையதிபதி செவ்வாயுடன் ஏழில். 12ல் சந்திரன் நீசம். ஆகையால் அவருக்கு பணத் தட்டுபாடு இருந்திருக்கும்.கையில் காசு தங்காது.
ஆனால் 10ல் புதன் உச்சம் சுக்ரன் நீச பங்க ராஜயோகத்துடன் அதனால் அவருடைய தசா புத்திகளில் நிலைமை தலைகீழாக மாறி விடும்.அதிக பண வரவு இருக்கும்.
Dear Sir,
ReplyDelete1. Earning Income Initial stage he struggles more but after his middle age he got good income. reason: 11th place Kethu & his owner is in neecham but with Utcha Buthan so neechabanga rajayagam. Initial struggle but finally success.
2. 2th house Saturn is place in Lagna that means 12th house of his own 2nd house. but dhanakaragan Guru is looking directly so everything good. He holding saving money.
Regards
rm.srithar
Surely he will face finantial problem.I have given the reason below.
ReplyDelete1.2nd house lord in 12th from 2nd house.
2.12th lord mars aspecting 2nd lord and 2nd house.
3.Dhana karakan jupiter conject with 12th lord mars.
ராமன் அயனாம்சத்துப்படி லாபஸ்தானாதிபதி சுக்கிரன், 11-லேயே ஆட்சிபெற்று இருந்து தனகாரகன் குருவின் பார்வையைப் பெறுகிறார். அப்படிப் பார்க்கும்போது சுக்கிரதசையில் (1962) மில்லியனர் ஆகி இன்று ஒரு பெரும் பணக்காரராக விளங்கும் திரு வாரன் பஃபேயின் ஜாதகத்தை ஒத்திருக்கிறது.
ReplyDelete(மிகவும் சூக்குமமான ஜாதகம்.)
நீண்ட நாட்கள் கழித்து வகுப்பறை வருகிறேன், இன்னும் பழைய பதிவுகளைப் படிக்கவில்லை. அனைவரும் நலமா?
ReplyDeleteஎனது கருத்து:
கடன் என்று இருக்க வாய்ப்பில்லாவிட்டாலும் பணப் பற்றாக்குறை இருக்கும் என்று தோன்றுகிறது.
1. இரண்டாம் அதி சனி அதன் பன்னிரெண்டாம் வீட்டில், அதற்கு பன்னிரெண்டாம் அதி பார்வை. பன்னிரெண்டாம் அதி செவ் இரண்டாம் வீட்டையும் பார்க்கிறார்.
2. லக் மற்றும் விரய அதி சேர்ந்திருப்பது (தனகாரகனும் அவர்தான்).
3. இருப்பினும் செவ்வாய் ஐந்திற்கும் அதி என்பதால் சமாளிக்கும் அளவு கட்டுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு காரணம் தனாதிபதி குருவின் பார்வையும் இரண்டாம் அதிபதிக்கு இருக்கிறது. அவர் கேந்திரத்திலும் இருக்கிறார்.
மேலும் பாக்கியஸ்தானாதிபதி வலுவாக சொந்த வீட்டில் இருப்பதும் ஒரு காரணம்.
4. கடன் பெரிதாக இருக்காது என்று சொல்லக் காரணம் ஆறாம் அதி கேந்திரத்தில் நீச்ச பங்க ராஜ யோகத்தில் இருப்பதால்.
5. மூன்றாம் அதி வலுவாக இருப்பதால் இந்த நபர் தைரியத்துடன் எதையும் சமாளிப்பார்.
லக்கினத்தில் சனி தனுசு நட்பு வீட்டில் உள்ளார்.
ReplyDeleteலக்கினாதிபதி குரு 7-ஆம் பார்வையாக லக்கினத்தை தான் பார்வையில் வைத்துள்ளார்.
தீர்க்க ஆயுள் உண்டு.
4-க்கு உடையவனும் அவரே குரு ஆக வாகனம்,வசதிக்கு குறைவில்லை,
2-க்கு உடையவன் லக்கினத்தில்,
2-ஆம் வீட்டை செவ்வாய் தான் 8-ஆம் பார்வை (விசேஷ பார்வையால்) பேச்சால் ஆதாயம் உண்டு.
5-இல் ராகு பூர்வ புண்ணிய வீட்டில் ,5-க்கு உடையவன் 7-இல் மணம் போல் திருமணம் அல்லது காதல் திருமணமாக இருக்கலாம்,
இருப்பினும் லக்கினத்தில் சனியும் 7-இல் செவ்வாயும் சமசப்தம பார்வையால் திருமண உறவு பாதிக்கபடும்,விவாகரத்து அல்லது பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.
7-இல் குரு+ செவ்வாய் -குருமங்கள யோகம்.
9-இல் சூரியன் ஆட்சி பலத்துடன் உள்ளார்.
10-இல் புதன் + சுக்கிரன் + செவ்வாயின் 4-ஆம் (விசேஷ பார்வையுடன்) + கர்மகாரகன் சனி 10-ஆம் (விசேஷ பார்வையுடன்) பிரபலமானவர் அரசியல் ,கலை ,வியாபாரத்துறை சேர்ந்தவராக இருக்கலாம்
10-இல் புதன் ஆட்சி மற்றும் உச்சம் உடன் சுக்கிரன் நீச்சம் பெற்றாலும்
உச்சனுடன் நிச்சன் சேர்ந்து நீச்சபங்க ராஜயோகம். தான் தொழிலில் சாதனையாளராக இருக்கலாம் .
11-இல் கேது குருவின் 5-ஆம் பார்வையுடன் லாபத்திற்க்கு குறைவில்லை.
12-இல் சந்திரன் நீச்சம் பெற்று இரு பாவ கிரகத்திற்கு இடையே உள்ளார்.( லாபத்தை கணக்கில் எடுக்கும் போது செலவு குறைவாக தான் இருக்கும்)
மொத்தத்தில் ஜாதகன் ஒரு பணக்காராக இருக்கலாம்.
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபுதிர் பகுதி 37 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
தனுசு லக்கினம் விருச்சிக ராசிக்காரரான இந்த ஜாதகருக்கு,
லக்கினாதிபதி குரு 7ல் மிதுனத்தில் செவ்வாயுடன் இருந்து லக்கினத்தைப் பார்ப்பதாலும் தனாதிபதி சனி லக்கினத்தில் இருப்பதாலும் சொந்த முயற்சியில் பணம் சம்பாதிப்பார்.
நீச்ச பங்கமான 11ம் அதிபதி சுக்கிரன், உச்சம் பெற்ற 10ம் அதிபதி புதனுடன் சேர்ந்து ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானத்துக்கு குறைவில்லாத இவர் ஒரு பணக்காரர்.
5ம் அதிபதி செவ்வாயும், 6ம் அதிபதி சுக்கிரனும் பரஸ்பர கேந்திரத்தில் இருப்பதால் நல்ல வாழ்க்கைத் துணை, குடும்பம் என்று வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
ஆனால் ஐந்தில் இருக்கும் ராகு புத்திர தோஷத்தைக் கொடுப்பதால், வயதான காலத்தில் புத்திரர்களின் உதவியில்லாமல் தனிமையில் கஷ்டப்பட வேண்டிய நிலை இருக்கும்.
இப்போது நடக்கும் ராகு திசையில் ராகு புக்தி முடிந்து 2015 இல் குரு புக்தி ஆரம்பமாகும் போது இவருடைய பிரச்சினைகள் தீரும்.
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
இந்த ஜாதகத்தில் தனுசு லக்கினத்துக்கு இரண்டுக்குரிய சனி தன் வீட்டிற்கு 12 ல்
அமர்ந்து 12 க்குரிய செவ்வாயால் பர்க்கப்படுவதால் இந்த ஜாதகர் பணக்கஷ்டம்
உள்ளவர்தான் என்பது உறுதி. தனகாரகர் குருவின் தசையோ அல்லது குருவின்
5 ஆம் பார்வையில் இருக்கும் கேதுவின் தசையோ நடப்புக்கு வரும்போது
இவருடைய பணக்கஷ்டம் நீங்கும்.
அன்புடன்.
அரசு.
அய்யா,
ReplyDeleteஇரண்டாம் வீடதிபதி 2-இற்கு 12-இல், 2-ஆம் இடத்தை சூரியன் தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார், விரயம் மட்டும் தான் பணம் கையில் தங்காது, 2-இற்கு 9-இல் 2-ஆம் அதிபன் புதனின் பார்வை கடனாளி ஆக்கிவிடுவான். சுருக்கமாக சொன்னால் கையில் காசு தங்காது.கடனாளி.
லக்னாதிபதி குரு, விரையாதிபதி செவ்வாய் 7ம் பாவத்தில் சேர்க்கை!
ReplyDeleteலக்னத்தில் சனிபகவான் அமர்வு!
குரு/சந்திரன்..6/8ல்..சகடயோகம்!
கஷ்ட ஜீவனம்! பொருள் தேடி அலைய வேண்டியது கட்டாயம்! மற்றவர் இவரை உபயாகித்துக் கொள்வர்!
லாபாதிபதி சுக்ரதசையின் இரண்டாவது பத்தாண்டில் கஷ்டம் தீரும்! கேது தசையிலும் வாய்ப்பு உண்டு!
Dear sir,
ReplyDeleteI just want to present my answer for the quiz no 37, please forgive me ,if suppose it may be wrong.
For the financial position we have to see 2,5,8,11. Where the 8th lord is neecha in 12th place. But the 11th lord is neecham in 10th place. That it is 12th place for 11th place. So first half of his life may with good financial position due to 2nd lord and 5th lord are seeing each other , the second half may becomes difficult in financial position, either the Chandra dasa or sukra dasa gives the over come from the difficulty. Even though that the two lords in bad condition sukran is in neechabanga rajayogam. And 8th lord is in 12th place so kettavan kettidil kittidum rajayogam
இரண்டாம் வீட்டின் அதிபதி ஒன்றாம் வீட்டில்.அது அவருக்கு விரயஸ்தானம்.அது அவருக்கு பனிரெண்டாம் இடம்.
ReplyDeleteதனஸ்தானம் சரி இல்லை.
லாபாதிபதி சுக்கிரன் நீசம்.
ஆகவே நிதி நிலை தடுமாற்றம் இருக்கும்.
பத்தாம் இடம் – நீச பங்க யோகம். சிறந்த தொழில் தரும்.
ivarukku panam kidaippathu konchcham kuraivuthan enenral 2,11 m athipathikal antha idaththukku 12 il amarnthullanar anal ivarukku thirumanaththukku piraku panam tharalama kidaikkum 7 il lagnathipathi guru 7 m athipathi puthan 10 il uchcham
ReplyDeleteivarukku panam kidaippathu konchcham kuraivuthan enenral 2,11 m athipathikal antha idaththukku 12 il amarnthullanar anal ivarukku thirumanaththukku piraku panam tharalama kidaikkum 7 il lagnathipathi guru 7 m athipathi puthan 10 il uchcham
ReplyDeleteஐயா, தனுசு லக்னம், லக்னாதிபதி குரு ஏழில் விரையாதிபதி செவ்வாயுடன். தனாதிபதி சனி லக்னத்தில் ( 2க்கு 12ல்), அதோடு செவ்வாயின் பார்வையுடன்.சந்திரன் நீசமடைந்து 12ல் விரையத்தில் பாபகர்த்தாரி பிடியில் உள்ளார்.11ம் வீட்டில் கேது, லாபதிபதி சுக்கிரன் அதற்கு 12ல் நீசபங்கம் அடைந்து உள்ளார். பூர்வ புண்ணிய இடத்தில் ராகு வேறு. ஜாதகர் வறுமையின் பிடியில் கைக்கும் வாய்க்குமாக இருந்திருப்பார். நீசபங்கமடந்த சுக்கிரன் தசை, மற்றும் செவ்வாய் தசை (4ம் அதிபதியான குருவுடன் சேர்ந்து ராஜ யோகத்தை கொடுப்பதால்) வளம் கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz No.37:
Date of birth : 30.08.1930
Time of birth : 02:00 to 3:00pm
Place of birth: Omaha, Nebraska, USA
Name of the Native: BILLIONAIRE SHRI. WARREN EDWARD BUFFETT (Berkshire Hathaway Inc.)
1. HE IS BILLIONAIRE.(AMERICANS BUSINESS MAGNATE, INVESTOR AND PHILANTHROPIST)
i) According to his horoscope, Lagna lord and Dhana karaga Jupiter is sitting in seventh house from lagna and aspects lagna and second house lord. It gives standing power and wealth.Second house lord Saturn sitting in langa.
ii) Eleventh lord Venus cojoined with tenth house lord exalted Mercury in the same house. Here, Badra, Nibhunathuva, Neechapanga yogas are there. This leads him to get great success in his profession. Karmakaraga Saturn also looks as its tenth aspect to this house.
iii) Jupiter aspects Eleventh house as its fifth aspect.
iv) Poorva puniyathipathi associated with lagna lord and aspects lagna as its seventh aspect.
In short, Lagna lord, Fifth house lord, Nineth house lord, Tenth and Eleventh house lord are having good position and aspecting as well. These are all lead to him great success in his profession and having crore and crores of money.
2. PHILANTHROPIST
i) Nineth lord Sun sitting in own house and it is in varhothama position. This gives great fame and charity.
ii) Fifth house lord Mars sitting in seventh house alongwith lagna lord. This leads him to involve in speculation business.
iii) Moon is sitting in Twelfth house. This also one of the main cause for giving his fortunes to charity. ( He has given more than 85% of his fortune as charity to Gates foundation (Mircosoft chief Bill Gate's charity foundation)
3. PERSONAL LIFE:
i) He has married and Three childern. Second house authority is sitting 12th position from its own house and getting Mars eighth aspect. This leads some trouble in family life. His wife Susan separated from him in 1977 and he married his long term companion Astrid Menks.
With kind regards,
Ravichandran M.
பொன்மகள் நிலமை:
ReplyDeleteஒன்றாம் இடத்திற்க்கு உரிய குரு பகவான் ஏலாம் இடத்தில், ஐந்து மற்றும் பணிரண்டுக்கு உடைய செவ்வாய்யுடன்- கேந்தரத்தில் இருந்தாலும் பணிரண்டுக்கூடையவனுடன் இருந்து தான் வீட்டை பார்க்கிறார் லக்கினத்தில் இருந்த சனி குருவை பார்க்கிறார்- நல்லதும் கெட்டதும் கலந்த பலன்.
சனியாள் பார்க்கபெற்ற ஐந்தாம் இடத்து செவ்வாய் [லக்கினாதிபதிக்கு நல்லோன் ]கேந்திர ஸ்தானத்தில் ஏழில் குருவோடு சேர்ந்து லக்கினத்தை பார்க்க சனி பார்வை இருந்தாலும் நன்று.
பாக்கியஸ்தானாதிபதி சூரியன் தான் வீட்டில் ஆட்சி பலத்துடன் நன்றாகவே உள்ளார்.
ஆகவே அப்பா, தாத்தா, சம்பாதித்து வைத்துள்ளதை அனுபவிப்பார்[ ராகு ஐந்தில் இருக்க அதை செலவழிப்பார்.
தனக்காரகன் லக்கீனமானாலும் தானாதிபதி சனி லக்கினத்தில் தான் வீட்டிற்க்கு பணிரண்டில் உள்ளதால் இருக்கும் செல்வத்த்தை கரைப்பார்
சுக வீடான மீனத்தின் அதிபதியான குரு [ லக்கினானத்தோன் ] ஏழில் நன்று.இருந்தாலும் சனி பார்க்கிறார் நீச சுக்கிரன் பார்க்கிறார் , தனுசுக்கு பாவரான புதனும் பார்க்கிறார்.
-- ஆக அனைத்து வசதி வாய்ப்புகளும் இருந்தாலும் நாள்பட குறையும்
அவர் வாழ்வில் நாற்பதுகளில் சூரிய திசையில் பொன்மகள் அவருக்கு பொருள் தருவார்.
Respected Sir
ReplyDeleteGood evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
Dhanusu lagnum , Virchika rasi with Anusham star
YOGTHIPATHI – Sun
BHATHAGAPATHI – saturn & venus
PLANETARY POSITION:
1) GURU & Mars AT QUADRANT POSITION
2) Sun at trine position – 9th house – Own house
3) VENUS AND MERCURY AT 10 TH HOUSE - Quadrant position. Both in Kanni rasi – NESSA BANGA YOGUM.
4) Mars owner of 5th house & Guru Owner of 4th and lagnum - combination
5) Moon - deblitated
6) Raghu at 5th house – house of speculation.
7) Kethu at 11th house – house of gains
Assessment Of Financial strengths:
LAGNUM:
1) Aspected by Guru & Mars
2) Saturn at Lagnum
Lagnum is made weak by Saturn but the Lagnathipathi is aspecting it .But Lagnathipathi is at his enemy house along with mars
Lagnum is Moderately strong
LAGNATHIPATHI
1) At Kendra but at his enemy house along with Mars. But Guru will always do good but his power may be less.
Moon is in debilitated position and 12th house - house of losses
SECOND HOUSE:
1) Aspected by Mars .The lord is at first house which is 12th to second house
2) Navamsam shows he has only 1 PARALS & VERY WEAK
FIFTH HOUSE:
1) Made weak by occupation of Raghu who is in his enemy house
2) 5th lord is in 3rd position from this house
ELEVENTH HOUSE:
1) Lord of eleventh house is debilitated and in 12th position from it.
2) But he is in VARGOTHAMAM POSITION AND HAS NEESA BANGA YOGUM
PREDICTIONS
1) Initial life of this person will be difficult. He has to struggle hard and make lot of efforts.
2) He will be a very pious man and engaged in lot of charity. His father will be long lived.
3) He may lose money in speculation
4) But he will be learned man with good skills because of stronger Mercury
5) He may have chance to travel abroad.
6) He will have fortunes after marriage and in the DASA of venus which is vargotham
He will be fortunate and earn money in his later part late forty or early fifty
( dasa of venus & Sun)
Dr.Mohan, Brunei
22.1.14
ReplyDeleteAstrology: பொன்மகள் வருவாளா? பொருள் கோடி தருவாளா?
Life long money problem - no relief
reasonns:
1. 2nd lord (tap) sani place in his 12th place
2. 6th lord sukathipathi sukran with bhu - neechyabangam but locked in pabakarthari
3. In 11th place (Andaa) malfic plated kethu placed.
4. Sani aspects guru (karaka of money)
sincerely yours
ramesh
rameshraja1304@gmail.com
1. 2ம் அதிபதி (தனாதிபதி) சனி, 2க்கு 12ம் இடத்தில், நிச்வா யோகம், பண தட்டுபாடு அல்லது பணவரவு அற்ற நிலை பணம் எவ்வளவு வந்தும் பற்றவில்லை எனும் நிலை. 2ம் அதிபதி மீது செவ்வாய்(விரையாதிபதி) பார்வை, பாக்யாதிபதி சூரியன் பார்வை தன லாபத்தில் இல்லை
ReplyDelete2. பணவரவுக்கான வழிகளில் 4ம் அதிபதி கேந்திரத்தில் (7ல்) 11ல் கேது 11ம் அதிபதி 10ல், குருவின் 5ம் பார்வையால் சொத்து வழியில் பணம் அல்லது மூத்த சகோதரன் சொத்தால் லாபம்.
3. தொழில் ஸ்தானாதிபதி மற்றும் களத்திராதிபதி புதன் 10ம் வீட்டில் ஆட்சி,உச்சம் உடன் லாபாதிபதி (மனைவி துணைவுடன் அல்லது கூட்டு முறையில் தொழில்)
4. 6ம் வீடு மற்றும் 8ம் வீடு பாபகத்தாரி யோகத்தில். 6ம் வீடு 8மதிபதி பார்வையில் 8ம் அதிபதி பாபகத்தாரி யோகத்தில் நோய் மற்றும் கடன்களால் பணம் விரயம்.
5. 10 அதிபதி திசையில் லக்கினாதிபதி திசையில் பணம் வரும் வந்தாலும் விரயம் ஆகும். குழாய்,மற்றும் தண்ணீர் வந்தும் ஓட்டை அண்டா போன்றது
Hi Sir,
ReplyDelete2nd House owner[Saturn] is placed 12th from its position.
11th house[laabasthanam] owner[Venus] also placed placed 12th from its position.
11th house has a malefic[Kethu]
So native of the horoscope will have financial problems.
Authority of money[Jupiter] sees the lagna and problems will be solved in his dasa/bukthi.
Ayya,
ReplyDeleteHe must be undergone severe money problem before marriage.But that must have changed after marriage.
The reason for money problem is second house owner sitting from his 12th house. The reason for incoming money is: 11th house owner(Neecha Sukran) with Uccha Budhan. So money is coming via NeechaBanga Rajayogam.
Your Student,
Trichy Ravi
Dear Sir,
ReplyDeleteHe will not have problems in availabbility of money as saturn(2nd house lord) is aspected by guru. (Small difficulities can be there as saturn is placed to 12th place to 2nd place but are manageable)
During Guru/kethu dasa/bukthi , He will have more money. Regards NSK.
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
ReplyDeletequiz37 க்குரிய விடை: இளமையில் பணக்கஷ்டம் (திருமணதிற்க்குப்பின் நிதி
நிலையில் முன்னேற்றம்)
*தனுசு லக்னம்,விருச்சிக ராசி. குரு லக்னாதிபதியாகி 7ல் அமர்ந்து லக்னம்,தைரிய ஸ்தானம் மற்றும் லாபஸ்தானமான 11ம் இடத்தையும் தன் பார்வையில் வைத்துள்ளார்.
*இரண்டுக்குரியவன் தன,வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானாதிபதியான சனி
பகவான் அந்த ஸ்தானத்திற்க்கு 12ம் இடமான லக்னத்தில் அமர்ந்ததால் அந்த
ஸ்தானம் பலமிழந்து உள்ளது.
*தனஸ்தானாதிபதியான சனியின் தசை பணக்கஷ்டத்தை கொடுத்திருக்கும்.
*அதன் பிறகு நடந்த களத்திர ஸ்தானாதிபதியான உச்சம் பெற்ற புதன் தசை
யில்(நீச்சபங்கமடைந்த)சுக்கிரபுத்தியில் அழகும்,செல்வமும் உள்ள மனைவி அமைந்திருப்பார்.
விடை சரியா என தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.
நன்றி ல ரகுபதி
வணக்கம் குரு,
ReplyDeleteஇது Warren Edward Buffett ஜாதகம். 2008இல் உலகின் முதல் பணக்காரர் இவர்தான் மற்றும் 2011இல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நன்றி
செல்வம்
Quiz no.37 வணக்கம்.
ReplyDelete30 ஆகஸ்ட்டில் 1930, 3.10 PM அனுஷம் நட்ச்சத்திரத்தில் பிறந்த ஜாதகனுக்கு சனி தசை இருப்பு 14 வருடம் 8 மாதம் 2 தேதி.
தனுர் லக்கினம். தனுர் லக்கினத்தில் 24 பரல். லக்கினாதிபதி குரு 7ல் பகை வீட்டில் மிதுனதில். லக்கினத்தில் சனி (1 பரல்). வக்கிரம். துரதிர்ஷ்ட்டம். தனுர் லக்கினத்திற்க்கு புதன், செவ்வாய், சூரியன் யோககாரகர்கள்.
பிறந்த நாள் முதல் 14 வயது வரை சனி தசையில் இளமை காலத்தில் பண கஷ்ட்டம் எற்பட்டது. குடும்பத்தை விட்டு வெளியில் சென்று இருக்க வேண்டிய நிலமை எற்பட்டது. மன நிம்மதியிலாமல் மன நிம்மதி தேட வெளியில் சென்றான். இந்த சனி காலத்தில் கஷ்டமான கஷ்ட்டம்.
2ம் வீட்டு அதிபதி சனி, 2ம் வீட்டிற்க்கு 12ல் லக்கினத்தில். 11ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (3 பரல்) 11ம் வீட்டிற்க்கு 12ல் நீசம். 6ம் வீட்டிற்க்கும் அதிபதி அவனே. தனுர் லக்கினகார்களுக்கு சுக்கிரன் யோகமில்லாதவன். மேலும், செவ்வாயின் 4ம் பார்வை 10ம் வீட்டில் உள்ள சுக்கிரனின் மீது. ராகுவின் 7ம் பார்வை 11ம் வீட்டின் மீது உள்ளது. எல்லாம் சேர்ந்து இளமை காலத்தில் பண கஷ்ட்டம் எற்பட்டது.
4ம் வீட்டு அதிபதி குரு மிதுனத்தில் பகை வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் இருக்காது.மேலும், வக்கிரமான சனியின் பார்வை 7ல் இருக்கும் குருவின் மீது.
12ல் சந்திரன் விருச்சிகத்தில் நீசம். அமைதியற்ற மன நிலை இருக்கும். மன வருத்ததுடன் இருந்தார் அந்த கால கட்டத்தில்.
அடுத்து வந்த புதன் திசையில் ஜாதகனுக்கு மாற்றம் எற்பட்டது. 10ம் வீட்டின் அதிபதி உச்சமான புதன்(6 பரல்) அதன் வீட்டிலேயே நீசமான சுக்கிரனுடன் சேர்ந்து நீச ராஜபங்க யோகத்தை உருவாக்கினான்.
புதன் மாக தசையில் ஜாதகனை வெளி நாட்டில் தொழில் செய்து சீரான வருமாணம் கிடைக்க வழி செய்தான்.
31 வயதிற்க்கு மேல் கேது திசையில் ஜாதகனுக்கு பண கஷ்ட்டத்தை நீக்கினான். இதற்க்கு காரனம் 11ல் இருக்கும் கேதுவால் ஜாதகனுக்கு செல்வத்தையும் அதிக படிப்பையும் கொடுத்தது . மேலும், 7ல் உள்ள குருவின் (6 பரல்) 5ம் பார்வை 11ம் வீட்டின் மீது விழுவதால். 7ம் வீட்டு அதிபதி புதன் உச்சம் 10ம் வீட்டில். மனைவியின் மூலம் அதிர்ஷ்ட்டம் உண்டானது. அதிக செல்வம் கிடைத்தது.
2ம் வீட்டில் (31 பரல்), 10ம் வீட்டில் (31 பரல்), 11ம் வீட்டில் (27 பரல்) உள்ளதால் தனுராசியில் பிறந்தவராதலால் சீரான ஊதியம் கிடைத்தது.
9ம் அதிபதி சூரியன் 9ம் வீட்டில் காணப்படுகிறது. வெளி நாடு செல்லும் யோகம் உள்ளது. நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.
2ம் வீட்டு அதிபதி சனி 4ம் வீட்டு அதிபதியை பார்த்தால் தாயாரின் ஆசியினால் புதன் தசை குரு புக்தியில் அதிக பணம் வந்து சேர்ந்தது (மாத்ரு மூலதன யோகம்)
10ம் வீட்டின் அதிபதி உச்சமான புதன்(6 பரல்) அதன் வீட்டிலேயே நீசமான சுக்கிரனுடன் சேர்ந்து நீச ராஜபங்க யோகத்தை உருவாக்கினான்.புதன் மாக தசையில் ஜாதகனை வெளி நாட்டில் தொழில் செய்து சீரான வருமாணம் கிடைக்க வழி செய்தான். செய்யும் தொழிலில் பல வெற்றிகளை குவிப்பார். உண்மை ஊழீயராக இருப்பார்.
ஜய யோகத்தின் காரணமாக 6ம் வீட்டு அதிபதி நீசமடைந்து அதே சமயத்தில் 10ம் அதிபதி உச்சமடைந்திருந்தால் எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாக செய்து அதில் லாபம் அடைவான்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
வணக்கம் அய்யா !
ReplyDeleteஇரண்டாம் அதிபதி 2 இக்கு 12 இல் மறைவு
மேலும் 11 இம் அதிபதி மற்றும் சுக்கிரன் 11 இக்கு 12 இல் மறைந்து விட்டார்கள்
விரய இச்தனதிபதியான செவ்வாய் 7இல் இருந்து 2 இம் இடம் பார்க்கிறார்
ஆகையால் ஜதகர்கு பணம் தட்டுப்பாடு எபோதும் இருக்கும்
உங்கள் ஸ்டைல் - ஒட்டை பாத்திரம்
Sattur Karthi
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeletequizNo 37.
லக்னம் தனுசு. லக்னாதிபதி குரு 7ல் .மிதுனம்.உடன் செவ்வாய். குருமங்கள யோகம் .ஜாதகருக்கு லக்னாதிபதி குருவே யோக காரகன் அவன் கேந்திரத்தில் [7ல் ]
2. 10 மிடம் சுக்கிரன்நீசம்பெற்று உச்சம்பெற்றபுதனுடன் நீசபங்க ராஜ யோகம் .
3. 9ல் ஆட்சி பெற்ற சூரியன் --11ல் கேது சுபர் வீட்டில் நல்லவர்.தர்மசிந்தனை உள்ளவர்.
4. 9க்கும் 11க்கும் நடுவே சிறுது பாபா கர்த்தாரி யோகம் இருந்தாலும் 9ல் ஆட்சி பெற்ற சூரியன் ஆகவே சுய தொழில் கிடையாது !!அனால் வேலை நன்றாக அமைந்து நல்லதொரு சம்பாத்தியம் இருக்கும்..
5.11ல் கேது இருப்பதால் தர்ம சிந்தனையுடன் இருப்பார் 11ம் வீட்டுஅதிபதி . சுக்கிரன் 10ல் உச்சம் பெற்ற புதனுடன் நீச பங்க ராஜா யோகம் ஆகவே குறைவற்றசெல்வம் அத்துடன்பகைவீட்டில்குரு இருந்தாலும் .50%நலமான பார்வை .11மிடத்தை .ஆகவகுறைவற்ற செல்வம்
6..9,10,11,சும்மா புது ஸ்கோடா கார் மாதிரி இருக்கானுங்க !!! பிறகென்ன நல்ல கார் ஓட்ட வேண்டியது தான் ஜாதகர்
7..சந்திரன் 12 மிடம் அத்துடன் பாபா கர்த்தாரி யோகம் மேலும் சந்திரன் நீசம் ஆகையால் சம்பாதிக்கும் பணம் எங்கு விரயம் ஆகுது என்பது தெரியாமலே போய் கொண்டிருக்கும்., ???ஆனால் அதற்கு தகுந்தார் போல் பணம் வந்து கொண்டே இருக்கும்
மொத்தத்தில் ஜாதகருக்கு பண வரவில்.. குறைவிருக்காது .!!!!. குறைவிருக்காது !!!!.. குறைவிருக்காது .!!!!.
எனக்கு தெரிஞ்ச வரை பதில் எழுதிட்டேன் .வாத்தியார் மார்க் எப்பிடி போடுதாரொ தெரியலை..மார்க் போடுவார ?தலைல குட்டுவார ???.பரீட்சை எழுதிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் கடைசி பெஞ்ச் மாணவன் s.n.ganapathi...
கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் விடை தெரிய காத்திருக்கலாம் அல்லவா...
ReplyDeleteவாங்க உமா மேடம்.. மீண்டும்
ReplyDeleteவகுப்பறை பக்கம் பார்ப்து
மகிழ்ச்சியாக இருக்கிறது தலைநகர்
மகிழ்ச்சி தானே..
தொடர்ந்து வந்து எங்களை
தொய்வில்லாமல் உற்சாகபடுத்த
வேண்டுகிறோம்
வேண்டுதல் ஏற்கபடுமா?
வாங்க உமா மேடம்//
ReplyDeleteநீங்கள் நலமா? வேப்பிலை பெயர்க்காரணம் என்னவோ?