Astrology: Quiz No.22: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
தொடர் - பகுதி இருபத்தியிரண்டு!
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=======================================================
1. லக்னத்தில் கேது. லக்னாதிபதி சனி 10ல் குருவுடன். லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த செவ்வாய் 5ல் சந்திரனுடன். சராசரி தோற்றமுடையவர். எதையும் எதிர்கொள்பவர்.
ReplyDelete2. 2ம் அதிபதி குரு 10ல் மற்றும் 2ம் வீட்டிற்கு 9ல். 2ம் வீட்டிற்கு குருவின் 5ம் பார்வை மற்றும் உச்ச புதன், நீசபங்க சுக்கிரன் பார்வை. 2ம் அதிபதிக்கு வீடு கொடுத்த செவ்வாய் 5ல் சந்திரனுடன். எனவே நல்ல குடும்பம் அமைந்திருக்கும். தனகாரகன் குரு கேந்திரத்தில் நட்பு வீட்டில் இருப்பதால் செல்வ செழிப்பு மிகுந்திருக்கும்.
3. 5ம் அதிபதி புதன் 8ல் உச்சம், மறைவு. அந்த வீட்டிற்கு 4ல். 5ம் வீட்டில் சந்திரன் ம்ற்றும் செவ்வாய். காரகன் குரு 10ல். குழந்தை பாக்கியம் உண்டு.
4. 7ம் அதிபதி சூரியன் 7ல் ஆட்சி ராகுவுடன். காரகன் சுக்கிரன் 8ல் நீசம், உச்சம் ஆன புதனுடன். ஆனால் நீசபங்கம். 7ம் வீட்டிற்கு லக்னாதிபதி சனியின் 10ம் பார்வை. ராசிக்கு 7ம் அதிபதி குரு 6ல். தாமத திருமணம்.
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபுதிர் - பகுதி 22 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி இந்த ஜாதகியின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சோதனைகளும் கலந்திருக்கும்,
லக்கினத்தில் கேது இருப்பதால் நரம்பு சந்தமான பிரச்சினைகள் இருக்கும். லக்கினாதிபதி ஆயுள்காரகன் சனியாகவும், எட்டாம் அதிபதி புதன் எட்டிலும் இருப்பதால் தீர்க்க ஆயுள் உண்டு. லக்கினாதிபதி தொழில் ஸ்தானமான பத்தில், லாபாதிபதி குருவின் கூட்டணியில் இருப்பதால் செய்யும் தொழில் மூலமாக பணவரவு அதிகமிருக்கும்.
குடும்பஸ்தானத்துக்கு அதிபதி பத்தில் அமர்ந்து அதைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும் கூடவே சனியும் இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.
ஐந்தாம் அதிபதி எட்டில் இருப்பது புத்திர தோஷத்தை கொடுக்கும் என்றாலும், ஐந்தாம் அதிபன் புதன் எட்டில் சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதாலும், ஐந்தாம் வீட்டில் சந்திரன் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதாலும், குழந்தை பாக்கியத்துக்கும் வசதியான வாழ்க்கைக்கும் குறைவில்லை. பத்தாம் வீட்டுக்கு அதிபதியான செவ்வாய் ஐந்தில் ஆறுக்குடைய சந்திரனுடன் இருப்பதால் கலைத்துறை சம்பந்தமான தொழிலில் இருப்பார்.
களத்திரகாரகன் சூரியன் தன்னுடைய வீட்டிலேயே இருப்பதால் தனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்தவரையே திருமணம் செய்து கொள்வார். ஆனாலும் திருமண வாழ்க்கை சுகப்படாது. ஏழில் சூரியனுடன் கூடவே ராகுவும் இருப்பதால் விவாகரத்து ஆகியிருக்கும்.
1st house: - Saniswarar house- he is in 10th house along with Guru at the same time kethu also in ist house-
ReplyDeleteThe woman is self enterpreneur since bhudhan is in kanni she may be well knowledged even in astrology or a lawyer or teacher.she amy not accept others views immediately.
2nd house: guru is in 10th house with sani, moreover neesa sukkran is in 8th house also sees directly 2nd house-
She will not be satisfied with what is having with her and day by day more losses will occur.however she can manage all as she is employed [ guru sees 2nd house ]
5th house - bhudhan is very strong in kanni but its 8th house and in 5th house chandhran and sevvai are there.
She is having problems with her children and also she will get issues against them.
7th place:
Surya is in 7th place along with raghu. Chandhran and sevvai are together in 5th place,
She got married to a dictator like person, well settled but the marriage might be done against her wishes. so that misundersatading between them is common.
[ Chandhran, Guru, sukkran are all in 12 places of their places]
sir,
ReplyDeleteNative got late marraige and late children because of sevvai in 5th place and raghu in 7th place. She will be good in her professional as sani at 10th place.
கும்ப லக்னம். மிதுன ராசி. பெண் அழகாக இருப்பார்.
ReplyDeleteலக்னாதிபதி சனி 10 - ம் வீட்டில். சுப கிரஹமான குருவுடன்.குரு 2 மற்றும் 11-ம் வீட்டிற்கு உரியவன். கும்ப லக்னத்துக்கு சுக்ரன் யோககாரகன். அவன் நீசம் அடைந்துள்ளான் . ஆனால் உச்சம் பெற்ற புதனுடன். 8-ம் வீட்டில்.
1). வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நிறைய இருக்கும், சனி 1-ம் வீட்டிற்கும் 12-ம் வீட்டிற்கும் அவனே அதிபதி. கும்ப லக்னததிற்கு மட்டுமே உரிய விந்தை அது !. லக்னத்தில் கேது. பகை கிரகமான சூரியன் ஆட்சி வீட்டிலிருந்து பார்வை. வேறு பார்வை கிடையாது. அதனால் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை !. கர்மகாரகன் சனி கர்ம ஸ்தானத்தில் இருந்து லக்னாதிபதியாகவும் இருந்து குருவுடன் சேர்ந்து இருப்பதால் வெற்றி பெற்று இருப்பார்.
2) இரண்டாம் வீட்டில் கிரஹங்கள் இல்லை. அதன் அதிபதி தனக்காரகன் குரு லக்னாதிபதியுடன் இருப்பதாலும் அவர் தன் வீடான 2-ம் வீட்டை பார்ப்பதாலும் , உச்சம் பெற்ற புதனும் , யோககாரகனான சுக்ரன் பார்ப்பதாலும், தனம் மிகுந்திருக்கும். ஆனால் யோககாரகன் மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் இருப்பதாலும் நீசம் அடைந்திருப்பதால், குடும்ப ஸ்தானம் அடி பட்டிருக்கும் !.அதாவது குடும்பம் இருக்கும் !. ஆனால் அதில் நிம்மதி இருக்காது !.
3) ஐந்தில் சந்திரனுடன் செவ்வாய் !. செவ்வாய் 3-ம் மற்றும் 11-ம் வீட்டிற்கு அதிபதி. 5-ம் வீட்டு அதிபதி புதன் உச்சம். ஒரு ஆண் மகன் நிச்சயம் !. பெண் குழந்தைகளும் இருந்திருக்கலாம்.
4) ஏழாம் அதிபதி சூரியன் ஆட்சியில். ஆனால் பகை கிரகமான ராகுவுடன். லக்னாதிபதி சனியின் பார்வை இருப்பதால் திருமணம் நடந்திருக்கும் ! ஆனால் விதவை தோஷம் உண்டு !.
ஜாதகர் இந்தியர் அல்ல என்று நினைக்கிறேன் !. சரியா அய்யா ?.
வணக்கம் ஐயா,
ReplyDelete-கும்ப லக்கின ஜாதகம்,
-பெண்களுக்கு உகந்த ஜாதகம்.
-கேது லக்கினத்தில் இருந்தால் அதிஷ்டம்
அளிப்பவராக இருப்பார். ஜாதகி அதிஷ்டசாலி.
-ஏழாம் வீட்டிற்குரிய சூரியன் தன் வீட்டில்
அமர்ந்து ஜாதகிக்கு திருமணம் செய்து
வைத்திருப்பார். எனினும் ராகுவால்
ரத்து ஆகியிருக்கும்.
-இரண்டாம் வீட்டிற்குரிய குரு சனியிடம்
அகப்பட்டுள்ளார்.எனவே குடும்ப வாழ்க்கை
போராட்டமாக இருந்திருக்கும்
-பூர்வ புண்ணியாதிபதி புதன் எட்டில்.
அவ்விடத்தில் சந்திரனும் செவ்வாயும்.
சசி மங்கள யோகம்.ஜாதகி பணவசதி உடையவராக
இருப்பார்.
-களத்திரக்காரன் மற்றும் நான்காம் வீட்டிறகுரியவர்
எட்டில் மறைந்து விட்டார்.எனவே சுகக்கேடு
-குருவும் ஐந்தாம் வீடும் பலமிழந்து விட்ட்தால்
குழ்ந்தை வாய்ப்பு இல்லை.
-பிறந்த வீட்டில் அதிஷ்டசாலியாக இருந்தாலும்
திருமண வாழ்க்கை முடிவு பெற்று சந்நியாசியாக
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார்.
என் சிற்றறிவுக்கு எட்டியதை எழுதியுள்ளேன்.
பிழையிருப்பின் ஐயா பொறுத்தருளுங்கள்.
இரண்டாம் இடத்திற்கு குரு,சுக்கிரன், உச்சமான புதன் ஆகியோருடைய பார்வை கிடைப்பதால் குடும்ப வாழ்வும் , தனமும் நன்றாகவே இருக்கும்.லக்னாதிபதியும் கர்மகாரகனுமான சனைச்சரன் கர்ம இடத்திலேயே இருந்ததால் தொழில் மூலமோ சொத்துக்கள் மூலமோ தனம் பெருகியிருக்கும்.மேலும் பத்தாம் அதிபன் 5ம் இடம் அமர்ந்ததால் நல்ல விளைவுகளே இருக்கும். ராஜயோக பலன்.
ReplyDeleteஐந்தாம் இடத்தில் ஆறாம் அதிபன் சந்திரன் அமர்ந்ததும் செவ்வாய் கூட்டணி அமைத்ததும் குழந்தைகள் இருந்தாலும் அவர்களால் சிரமங்கள்.மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருக்கும்.அல்லது குழந்தைகள் பகைமை பாராட்டுவார்கள்.
ஏழாம் அதிபன் ஏழிலேயே அமர்ந்தது நன்று.ராகுவுடன் இருந்ததால் தாமதித்த திருமணம்.முதல் திருமணம் முறிந்துபோய், இரண்டாவது திருமணம் நீடித்து இருக்கும்.சுக்கிரன் நீசபங்கம் அடைந்ததும்,9ம் அதிபன்சுக்கிரன் 8ல் அமர்ந்ததும்
எட்டாம் அதிபனுடன் சேர்ந்ததும் 5ம் அதிபன் புதன் எட்டில் அமர்ந்ததும் பகைவனான செவ்வாய்ய் பார்வை பெற்றதும் திருமண விஷயத்தில் கெட்ட பெயர் இருக்கும். புகழ் பாதிக்கப்பட்டிருக்கும்.
வெறும் ராசிக்கட்டத்தை மட்டும் வைத்துக் கூறியுள்ளேன். பிறந்த தேதியை கணிக்கவில்லை.
Dear Sir,
ReplyDelete1. Lagna lord sani in 10th place (enemy sign) with guru. Lagna kethu in enemy sign. Hence the native will have always some health problems.
She work hard and earn money.
2. 2nd lord guru is with lagna lord sani. Even though sani is in enemy sign, due to the placement of guru and kendra,
She will have family and wealth through the hard work.
3. 5th lord mercury exalted in 8th. even though exalted, does not have power. mars is seeing as enemy. sukran is neecham. 6th lord in 5th house.
So there is no chance to get child.
4.7th lord in 7th own place with rahu enemy sign.
She will not have interested in sex.
Since sun is in power and affected by rahu, She will divorce her husband.
பிறந்த வருடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறடித்த ஜாதகம்.
ReplyDelete1) ஜாதகர் தைரியசாலி
2) தாமதமாகத் திருமணம் புரிந்தவர்
3) குழந்தை மற்றும் தன பாக்கியம் கொண்டவர்.
4) பின்னாட்களில் குடும்பத்தைத் துறந்து மதத்தில் ஈடுபட்டிருந்தவராக இருந்திருப்பார். (அல்லது ஒரு ராஜ மாதாவைப் போல வாழ்ந்திருப்பார்)
தைரிய ஸ்தானாதிபதி, மற்றும் காரகனான செவ்வாய் மனக் காரகனுடன் நல்ல கோணத்தில் இருப்பதால் தைரியசாலி
கேது லக்னத்தில் (ராஹு களத்திர ஸ்தானத்தில்); களத்திர காரகன் எட்டில் மறைவு. ஆனாலும் ஏழாம் அதிபதி வலுவாக ஏழில் இருப்பதாலும், காரகன சுபருடன் இருப்பதாலும், குடும்பஸ்தானாதிபதி, அந்தஸ்தானத்தைப் பார்ப்பதாலும் திருமணம் தாமதமாக ஆகியிருக்கும்.
தனகாரகன் லக்னாதிபதியுடன் கேந்திரத்தில் இருப்பதால் தனம் பற்றிக் குறையில்லை.
குருவும் ஐந்தாம் இடமும் நன்றாக இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு.
எட்டாம் இடம் சுபர்களால் வலுப்பட்டிருப்பதால் (மற்றும் லக்ன கேதுவால்), மத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்திருப்பார்.
அயா,
ReplyDeleteலனாதிபதி மவரயாதிபதிசனபகவா.
இரடாமதிபதி 11-இ சனட,
7-ஆ அதிபதி7-இ ராட ,
5-இ சதிரெசவாடணசசிமகள ேயாக.
5-ஆ அதிபதி த உச ஆனா 8-இ மைறவடதி உளா.
இதெபணதிமண நட இ, ஆனா கணவஅடகாைம, ஆைகயா திமண வாைக செதாசமிைம, ழைத பாகியஉ, 1 ஆ ம 1 ெப ழைதஉ.
ெபண9-ஆ இட தாகிய, 9-ஆ அதிபதி8-இ உச தட. வகெசாகிைடகவாபைல.
Respected Sir,
ReplyDeleteThe lagna lord in 10th house is a favourable position but it is also lord of 12th house.The native will have more spritual beliefs as kaethu in lagnam.
The native will be a unmarried as sun in 7th house in the combo of raghu which is very unfavourable position for marriage.Also the sukran is neecham in 8th house.
6th lord in 5th house though forms chandra mangala yoga & 5th lord is ucham in 8th house so the native will have a adopted child.
Sukran in neecham bangam with mercury forms nibuna yogam gives the native talents & 2nd lord in 10th house from which she will manage her financial needs.
chandra mangala yogam n nibuna yogam hiddden in 6th & 8th house respectively so the native will not get much advantage from those yogams.
Kumba lagna's native usually have either a big success or a big failure. This horoscope will not have big success in family aspects.
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz No.22:-
1. She has good character
2. Well educated and having enough money to run the life.
3. Not married.
4. She has no child since she didn't married.
FIRST HOUSE: Since the native belongs to Kumba lagna, she has good character and we can believe her. Lagna lord sitting in tenth house along with Jupiter. Seventh lord Sun looking lagna as its seventh aspect hence she will lead or guide to others. She was intelligent this is because moon is sitting in Gemini house.
SECOND HOUSE: She doesn't have money problem. Second house authority looking this house as its fifth aspect from tenth house. The owner of this house itself authority for money. So she has enough money to run the life. She also has educated well due to Jupiter and exalted Mercury.
SEVENTH HOUSE: She didn't marry in her lifetime. This is because seventh house and seventh house authority Sun is affected by Rahu and Saturn is looking as its tenth aspect to this house. Kalathrakaraga Venus also affected since it is sitting in Eighth house alongwith eighth house authority. Its is very bad.The authority for house of benefit is sitting twelfth house from its own house alongwith that house authority (Mercury). The authority for house of benefit is also kalathrahara for this native. So totally affected her marriage.
FIFTH HOUSE: She has no child. She didn't married in her life time as per above seventh house point and Sixth house lord is sitting in fifth house along with Mars.
In short, Seventh house, Seventh house authority and Bagyathipathi as well as kalathrakaraga are affected totally. Hence her marriage was denied.
Eleventh house authority Jupiter is sitting along with Lagna lord Saturn in tenth house. So she worked as a teacher (Guru is sitting in tenth house and tenth lord is sitting in Mercury (education).
With kind regards,
Ravichandran M.
ஐயா,
ReplyDeleteஇந்த பெண்ணிற்கு லக்னத்தில் கேது இருப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் இரருக்கும்.ஜாதகர் படித்தவர்
7ல் உள்ள சூரியன் ராகுவை சனி பர்ப்பதால் இரண்டு விவாகம், இரண்டுமே தோல்வியில் முடிந்து இருக்கும். மேலும் தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது.
5ஆம் அதிபதி 8ல் உச்சம் பெற்று இருப்பதால் ஜாதகருக்கு குழந்தைகள் உண்டு
ஒரு பெண் ஒரு ஆண்.
10ல் குருவும் சனியும் இருப்பதால் தொழில் நன்றாக இருக்கும். அதன் மூலம் வருமானம் நன்றாக வரும்.
Hi Sir,
ReplyDeleteLagna: Person will be intelligent and have healthy body Since Kethu is placed in lagna and Sun sees the lagna.
Long lived - 8th house owner-Mercury is exalted
2nd House: Person will richer having enough money to live. Since ChandraMangala yoga formed & 2nd house owner and Authority for money-guru is placed in 9th position from 2nd house. Also it gets little strength from Mercury vision[exalted position] from 7th place to it.
At the same time he will spend a lot.
5th house: Will have children since 5th place owner mercury is in exalted position.
7th house: Native will get married since 7th house owner sun is in own house and lagna owner-Saturn sees 7th place. marriage life will not be happy since venus is debiliated and Rahu is associated to it.
Ayya,
ReplyDeletePlease find answers.
Lagna: Person must be blackish color and fighting in life for everything due to ketu in Lagna and Aspected by Rahu & Bhagya house owner Neecha Sukran sitting from that 12th house.
Second House: Income is good, because second house owner Guru sitting 9th(Trikona) from second house and aspected by bhagya house owner Sukra. Family life is not good, because 8th house owner(Uccha Budhan) and Neecha Sukran is aspecting.
5th House: She will have kids, because 5th house owner uccham with bhgaya house owner, but it should be cesarian baby(bcoz of chevvai)
7th House: She must be married, bcoz Raja Planet Surya sitting in his own house. But undergone big stress due to Rahu & Sun combination. She must divorced or lost husband after sometime due to Neecha Sukran.
Your Student,
Trichy Ravi
quiz 22
ReplyDeleteவணக்கம்.
2ம் பாவம்
2ம் அதிபதி குரு, தன் 10ம் வீட்டிலிருந்து தன் வீட்டை பார்க்கிறார். 9ம் இடத்தில, நட்பு வீட்டில், லகினதிபதியுடன் சேர்ந்து இருக்கிறார். தனம், வாக்கு பலம் நன்றாக உள்ளது. 4, 5ம் அதிபதிகள் 2ம் வீட்டை நேர் பார்வை.
5ம் பாவம்
5, 8ம் அதிபதி புதன் 8ல் உச்சம். 4,9ம் அதிபதியுடன் சேர்கை.5ல் 10, 6ம் அதிபதி சேர்க்கை . 5ம் பாவம் சுமார்.
7ம் பாவம்
ஆட்சி சூரியன் ராகு சேர்கை.. திருமணம் மறுக்க பட்ட ஜாதகம்.சனி பார்வை.
ஜாதகி அழகாக இருப்பாள் . உயர்ந்த பதவியில், பேராசிரியராக இருப்பார்.
அன்புடன்,
ராதா
7th house: Native will get married since 7th house owner sun is in own house and lagna owner-Saturn sees 7th place. Marriage life will end in divorce since venus is debiliated and Rahu is associated to 7th place.
ReplyDeleteவாத்தியாருக்கு வணக்கம்.
ReplyDelete1. ஜாதகி புத்திசாலி, காரியவாதி, விடாமுயற்ச்சி, கடுமையாக உழைப்பவர், மன உறுதி கொண்டவர், தீர்க்காயுள்.
2. தாமதமாக திருமணமானவர்.
3. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டும்
4. திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
4. பண கஷ்டம் இல்லாதவர். கல்வியில் உயர்ந்த பதவி உடையவர்
5. ஜாதகி வெளிநாட்டில் வசிப்பவர்.
6. குழந்தை பாக்கியம் இல்லை. ஜாதகி பெண் குழந்தயை தத்து எடுத்து வளர்த்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கும்ப லக்கினம். ஸ்திர ராசி. பெண்ணிற்க்கு சிறந்த லக்னம். ஜாதகி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று என்னுடய கணிப்பு. ஆரம்ப தசை செவ்வாய். லக்கினாதிபதி சனியாக இருப்பதால், கடும் உழைப்பாளி, மன உறுதி கொண்டவர், விடாமுயற்ச்சியுடயவர்.
லக்கினத்தில் கேது இருப்பதால், புத்திசாலி, அதிர்ஷ்டம் உடையவர்,காரியவாதி, ஞானம் இருக்கும்.
லக்கினாதிபதி சனி 10ம் வீட்டில் விருச்சிகத்தில் செவ்வாய்யின் பகை வீட்டில் வந்து அமர்ந்துள்ளதால் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை. ஜாதகிக்கு வாழ்க்கை பயனில்லாமல் போய்விட்டது.
லக்கினாதிபதி சனியுடன் குரு சேர்ந்து குருதசை சனி புக்தியில் திருமணத்தை செய்து வைத்தார். கால சர்ப்பதோஷத்தினால் தாமதமாக 28 வயதில் திருமணமானார். கும்ப ராசி காரர்களுக்கு சனி சுப கிரகமாக இருப்பதால் கிடைத்த நன்மை. அதே குரு தசையில் ராகு புக்தியில் 40 வயதில் விவாகரத்து எற்பட்டது.
இரண்டாம் வீட்டை ஐந்தாம் பார்வையால் குரு பார்ப்பதாலும், சுக்கிரனின் 7ம் பார்வை 2ம் வீட்டை பார்பதாலும், 2ம் வீட்டை பலமாக்கி சுக ஸ்தானத்தை கொடுத்தார். 9ம் வீட்டின் பாக்கியாதிபதி சுக்கிரன் 9ம் வீட்டிற்க்கு 12ல் அமர்ந்துள்ளதால் ஜாதகிக்கு பாக்கியஸ்தானம் பயனில்லாமல் போயிவிட்டது. நீச பங்க ராஜ யோகம் இருந்தும் ஜாதகிக்கு பாக்கியஸ்தானத்திற்க்கு பயன்படவில்லை.
எட்டாம் வீட்டில் உச்சமான புதன், நீசமான 4ம் வீட்டு சுக்கிரனுடன் கன்னி ராசியில் சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி ஜாதிக்கு சிறந்த கல்வியை கொடுத்து, கல்வியில் உயர்ந்த பதவியை கொடுத்தார். சந்திரன், செவ்வாய்யின் 7ம் சுப பார்வை 11ம் வீட்டில் பார்ப்பதால் செல்வத்திற்க்கு குறையில்லாமல் செய்துவிட்டார். 8ம் விட்டில் புதன் உச்சத்தில் இருப்பதால் தீர்க்காயுள்.
எழாம் வீட்டில் ராகு இருப்பதால் களத்திர தோஷம். 7ம் வீட்டு அதிபதி சூரியன் 7ம் வீட்டில் சொந்த வீட்டில் தீய கிரகம் ராகுவுடன் சேர்ந்து இருந்ததால் திருமணம் பிரிவில் முடிந்தது. ஜாதகி தவரான வழியில் செல்லநேரிடும். எந்த ஒரு சுப கிரகங்களின் பார்வையும் 7ம் விட்டின் மீது இல்லை. லக்கினதிலிருந்து தீய கிரக கேது 7ம் வீட்டை பார்பதாலும், மேலும், திருமண பிரிவு உறுதியாகிறது.
7ம் வீட்டில் ராகு இருப்பதால் மண வாழ்க்கை மகிழ்ச்சி இருக்காது, நோயால் உடல் சீர்கெடும். ஜாதகி வெளிநாட்டில் வசிப்பவராக இருப்பார்.
ஐந்தாம் வீட்டு அதிபதி புதன் 8ம் வீட்டில் இருப்பதாலும், காரகன் குருவின் பார்வை இல்லாததாலும், எந்த ஒரு சுப கிரகமும் 5ம் வீட்டை பார்க்காததாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.
5ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் பெண் குழந்தை மட்டுமே இருக்கும். ஆகையினால், ஜாதகி பெண் குழந்தயை தத்து எடுத்து வளர்த்தார். கோபம் கொள்கின்ற குணம் இருக்கும். குழந்தை பிறப்பில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். மகிழ்ச்சி இல்லாதவர்.
5ம் வீட்டில் சந்திரன், செவ்வாய் சேர்ந்து சசி மங்கல யோகத்தை உண்டாக்கி ஜாதகிக்கு வீடு, வாகணம், நிலம், சொத்து, கவலை, ஓய்வில்லாமல் இருப்பது போன்றவற்றையளித்தார்
மிதுனத்தில் சந்திரன் இருப்பதால் அறிவு ஜீவி ,புத்திசாலியாக இருப்பாள். அதிக ஆர்வமும், நேசிக்கும் தன்மை உடையவள்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
ReplyDelete1.கும்பலக்ன ஜாதகி,இயற்க்கையிலே நாயகி,நல்லஅம்சங்கள் பல பொறுந்தியவர்.
2.நல்லகுடும்பம் உள்ளவர்,பண வசதி உடையவர்.
3.ஆளுமையுள்ள கணவர்,கலப்பு திருமணம் ஆனவர்.
4.பெண் குழந்தைகள் உண்டு.
அ.கும்பலக்ன நாயகியின் ஜாதகம் லக்னத்தில் கேது அமர்ந்து,புத்திசாலிதனம்,
திறமை,அதிர்ஷ்டம் முதலியவற்றை தருகிறார்.லக்னாதிபதி சனி 10ல் அமர்ந்து 4,7,12ம் இடத்தை பார்வை செய்கிறார்.நல்ல வாகனவசதி கல்வி உண்டு.
ஆ.குடும்பஸ்தானத்தை காரகர் குரு,சுக்கிரன்,புதன்(சுபர்கள்)பார்வைசெய்வது,
நல்லகுடும்பம் அமைந்தது.2,11க்கு உரியவன் 10ல் அமர்ந்து 2மிடத்தை பார்வைசெய்து பணவசதியை உண்டாக்கினார்.4மிடத்திற்க்கு தன் பார்வை மூலம் சுக வசதிகளை கொடுத்தார்.
இ.களத்திரஸ்தானாதிபதி ஆட்சி பெற்று லக்னாதிபதியின் பார்வையில் உள்ளார்
இதனால் தன்விருப்பம்போல் (கலப்பு)மணம்முடித்தார்.ஆளுமையுள்ள கணவர்.
அமைந்தார்.
ஈ.5க்கு உரியவன் உச்சம்,சுக்கிரன்(4,10க்கு உரியவன்,யோகாதிபதி) நீச்ச பங்கமாகி உள்ளார்.பெண்குழந்தைகள் உண்டு.முன்கோபி,சற்று உணர்ச்சி
வசப்படக்கூடியவர்.
உ.சந்திரமங்கள யோகம்,பத்ரா யோகம்,சகடயோகம் போன்ற யோகங்களை
உடையவர்.மொத்ததில் இவர் நாயகி!
விடை தெரிந்துகொள்ள ஆவலாய் ஊள்ளேன் ஐயா. நன்றி.
ல ரகுபதி
கொடுக்கப்பட்ட ஜாதகம் கும்ப லக்னம் மிதுன ராசி
ReplyDeleteலக்னாதிபதி 10இல் குருவுடன்
லக்னத்தில் கேது வாழ்க்கை லேது
லக்னத்திற்கு ராகு பார்வை நல்லதல்ல. 7இல் ஆட்சி பெற்ற சூரிய பார்வை மட்டுமே ஆறுதல்.
போரட்ட வாழ்க்கை.
2மதிபதி லக்னத்திற்கு 10இல் அந்த வீட்டிற்கு 9இல் அமர்ந்து தன் வீட்டை நேரடிப் பார்வையில் வைத்திருக்கிறார்.
கூடவே லக்னாதிபதியும் விரையாதிபதியுமான சனி சேர்க்கை
50% நல்ல பலன் 50%கெடு பலனே.
7மதிபதி 7 இல் ஆட்சி பெற்று ராகுவுடன் கூட்டணி
காரகன் 8இல் மறைவு.
களத்திர தோசம்
தாமதத்திருமணம்
மண வாழ்க்கையில் மகிழ்ச்சியிருக்காது.
5மதிபதி 8இல் ஆட்சி உச்சம்
காரகன் குரு 10 இல்
தாமதமான புத்திர பாக்கியம் உண்டு.
மொத்தத்தில் அனைத்திற்கும் தாமதமான பலன்களே.
This horoscope was given as an example for denied marriage by vathiyar earlier. I just try to add some more reasons.
ReplyDelete1. Good character, face the life independently.
Even though lagna is affected by ketu, lord of lagna is in 10th house(kendra) with guru (2nd lord & 11th lord). Generally kumba lagna gives independant talents and patience.
2. Enough money & good speech.
2nd lord guru looks 2nd house from 10th house. This gives good money flow, speech. This makes her to work as teacher-this also explained by vathiar.
3. Good knowledge & higher education because of moon in 5th house.
4. No marriage.
7th house is badly effected by raagu, sun & ketu. Also lagna lord sani aspects 7th house. Even though lagna lord, sani is also 12th lord and affects the family life, depleted venus in 8th house also don't help for marriage.- this also explained by vathiar.
Thank you.
Dear Sir
ReplyDeleteQuiz No.22
1. லக்கினாதிபதி 10ம் வீட்டீல் (சனி+குரு) கும்ப லக்கினத்திற்கு குரு பாவி மேலும் சனியும் பகை வீட்டீல் பாவியுடன் இணைந்துள்ளார்.suriyan, raghu 7ம் பார்வையாக லக்கினம் மீது. ஆனால் கேதுக்கு கும்ப லக்கினம் உகந்தது. மேலும் 10மிடத்தில் குரு + சனி எனவே ஆசிரியை, நீதிபதி,ஜெயிலர் போன்று மற்றவர்களுக்கு நீதி /
தண்டனை தரும் தொழில் செய்பவர்.
2. 2மிடம் குரு 10மிடத்தில் சனியுடன் இணைந்துள்ளார். ஜீவனத்திற்கு குறை இருக்காது. சொந்த காலில் நிற்பார்.
3. 5ல் சந்திரன் இருப்பது நல்ல புத்தி, ஞான விருத்தி. செவ்வாய் இருப்பது புத்திரதோஉஷம்.
4. 7ம் வீட்டீல் ராகு (களத்திர தோஉஷம்) உடன் சுரியன், 10ம் பார்வையாக சனியின் பார்வை மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் நீசம். மேலும் அந்த லக்கினத்திற்கு யோகக்காரன் சுக்கிரன் 8மிடத்தில் (மறைவு)+ நீசம்.
7ம் வீடு,7ம் அதிபதி,பாக்கியாதிபதி 3ம் கெட்டுள்ளது எனவே திருமணம் ஆவது கஉஷ்டம். எனவே குழந்தை பாக்கியம் இல்லை.
J.Dhanalakshmi
அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
ReplyDeleteலக்னம் .கும்பம் .-லக்னத்தில் கேது இவனுக்கு இது உகந்த லக்னம் என்பதால் .நல்ல பெண்மணி .உடல் வாகு நல்லா இருக்கும்
2, இரண்டாம் வீடு மீனம் குரு 10ல் சனியுடன் கூட்டணி. இருந்தாலும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் (சனி பகை வீடு ஆகையால் சனி இங்கே மட்டும் செல்லா காசாகி விடுகிறார்..
3. 5 ம் வீடு .செவ்வாய் சந்திரனுடன் கூட்டணி. பெண் குழைந்தைகள் உடைய பெண்மணி.
4. 7 ல் சிம்ம வீடு உடன் ராகு இருந்தாலும் சூரியன் ஆட்சி.
தந்தைக்கு சிரமம் இருந்தாலும் திருமண வாழ்க்கை .சிறப்பனதகவே இருக்கும்..
5.களஷ்த்ரகாரகன் நீசமனதால் உடன் ஆட்சி பெற்ற புதன் தாம்பத்திய வாழ்க்கை குறைவிலாது இருக்கும். .சுபம் .
1. கடின உழப்பாளி. சசி மங்கள யோகம் வட்டாரத்தில் புகழ் பெற்றவர்
ReplyDelete10ல் குரு அரசில் வேலை
2. குடும்பம் இல்லை 2ம் பாவம், அதிபதி,சுக்ரன்
அதிபதி 10ல் உடன் விரயாதிபதி சனி,சுக்ரன் நீசம்
3. குழதைகள் இல்லை 5 இடம் அதிபதி உச்சம் + பாக்கயாதிபதி நீசம்
என்று நினைகிறேன்
4. கணவர் இல்லை 7ல் உச்ச சூரியன் வுடன் ராகு பாக்கயாதிபதி சுக்ரன் நீசம்
அனாலும்
அதிபதி 10ல் உடன் சனி லக்னதிப்தி என்றால்,சுக்ரன் நீசம் ஆனாலும் நீசம் பஙகம்
என்றால் குடும்பம் உண்டு என்றும் தோன்றுகிறது
5 இடம் சந்திரன் அதிபதி உச்சம் + பாக்கயாதிபதி சுக்ரன் நீசம் பஙகம் என்றும்
குழதைகள் வுண்டு என்றும்தோன்றுகிறது விளக்கஉம்
ஜாதகியின் பிறப்பு விவரங்களை அறிந்து கொள்ளமுடியவில்லை. (கிட்டத்தட்ட 1663 ஆண்டு என்று வருகிறது.) ஆனால் ஏதாவது ஒரு வகையில் புகழ் பெற்றவர் என்று தெரிகிறது. லக்னத்தில் கேது. ஏழில் ஆட்சி பெற்ற சூரியனுடன் ராகு. லக்னத்திற்கு சூரியன் தவிர வேறு பார்வை இல்லை. லக்னாதிபதி சனி 10ல் குருவுடன். ஜாதகி தன் தோற்றத்தைப்பற்றி கவலைப்படாதவர். துறந்தவர் என்று சொல்லலாம். 2, 11 ஆம் அதிபதி 10ல் 1, 2ஆம் அதிபதியுடன். மக்களுடன் மக்களுக்காக சேவை, மத போதனை, அதன் மூலம் வருமானம் பெற்று வாழ்க்கை நடத்தியவர். 5ல் 6ஆம் அதிபதி சந்திரன், 5ஆம் அதிபதி 8ல் உச்சம் ஆனால் நீசம் பெற்ற சுக்கிரனுடன்-குழந்தைகள் இல்லை. சுக்கிரன் 8ல் நீச பங்கம் - நீண்ட ஆயுள். 7ல் ராகு + சூரியன் - திருமணம் ஆகவில்லை.
ReplyDelete