புத்தாண்டு பொதுப் பலன்!
ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் அமிர்தயோக வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்தில் புத்தாண்டு பிறந்திருக்கிறது .
வகுப்பறையின் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!.
புத்தாண்டைப் பற்றி பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.
தமிழ் ஆண்டுகள் அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். தனுசு லக்கினத்தில் ஆண்டு பிறந்துள்ளதால் சுபகிரகமான குரு, லக்கினாதிபதியாகி இந்த ஆண்டின்
அரசனாக இருக்கிறார். குருவும், சந்திரனும் பலத்துடன் இருப்பதால் அனைவருக்கும் இந்த ஆண்டில் பலவிதமான நன்மைகள் உண்டாகும்!.
மண்ணில் விசய வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங் களெங்கே நண்ணும்
பயம்பெருகி நொந்த பரிவாரமெல்லாம்
ந்யங்களின்றி வாடுமென் நாட்டு!
- இடைக்காடர் சித்தரின் பாடல்
சித்தரின் பாடலின் படி இந்த ஆண்டு மழை மிகுதியாக இருக்கும். எல்லா பயிர்களும் நன்கு விளையும். ஆனால், மக்கள் சொந்தங்களை விடுத்து விலகி
நிற்பார்கள். மக்களுடைய மனதில் பய உணர்வு இருக்கும் என்று அறிய வருகிறோம்!
சித்தர் பாடல் பலிக்குமா என்று தெரியவில்லை. எத்தர்கள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்த சந்தேகம்!
பாடலின் கடைசி வரியைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. மக்கள் சொந்தங்களை விட்டு விலகி ரொம்ப நாளாகிவிட்டது. கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் இப்போது ஏது? எல்லாம் மைக்ரோ ஃபாமிலி களாகிவிட்டன!
பெண்களும் நிறைய மாறி விட்டார்கள். பி.இ,, எம்.பி.ஏ என்று படித்து பல நிறுவனங்களில் இன்று பணி புரிகிறார்கள். கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். தலை நிறைய பூ வைத்துக்கொள்கிறார்கள். மாலையில் சாட் ஐட்டங்கள் உண்வாகிறது. கையில் கேலக்ஸி போன்கள். கண்ணில் வண்ணக் கனவுகள் இளம் வயதில் ரம்மியமாகத்தான் இருக்கிறார்கள். ஆனல் பலருக்கு குணம்தான் சரியாக இல்லை!.
தன்னைவிட அதிகம் படித்த, அதிகம் சம்பாதிக்கும் கண்வன் வேணும் என்கிறார்கள். நெருக்கிப் பேசினால், அவன் வீட்டில் எத்தனை லக்கேஜ்? என்கிறார்கள்.அதாவது பைய்னின் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறப்புக்கள் எல்லாம் சுமக்க வேண்டிய லக்கேஜாம். எப்ப்டி இருக்கிறது?
பையன் தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
முதலில் நீங்கள் பிறந்த ஆண்டின் தமிழ்ப் பெயரைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வருடங்களின் பெயர்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன். 1987 - 1988 ஆம் ஆண்டில் இருந்து விவரம் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு வேண்டுபவர்கள்.
அறுபது ஆண்டுகளைக் கழித்து விட்டுப் பின் நோக்கிப் பார்க்கலாம்.;
தமிழ் வருட ங்கள வரிசையில் ஸ்ரீவிஜய வருடம். இது இந்த வ்ருட வரிசையில் 27வது வருடமாகும். வருடம் என்பது வர்ஷா என்னும் வடமொழிச்சொல்லின் நேரடிச் சொல். வர்ஷா என்றால் பொழிவது என்று பொருள். (வருடம் முழுவதும் நன்மைகளைப் பொழிய வேண்டும் என்பதற்காக அப்படி வைத்திருப்பார்களோ?
வருடத்திற்கு உரிய சரியான தமிழ்(ற்) சொல் ஆண்டு என்பது ஆகும். அதை நினைவில் வையுங்கள்
எண் - பெயர் - Name, வருடம்
1 ப ரபவ Prabhava 1987 - 1988
2 விபவ Vibhava 1988 - 1989
3 சுக்ல Sukla 1989 - 1990
4 ப ரேமா தூத Pramodhudha 1990 - 1991
5 பிரசோர்பதி Prajorpati 1991 - 1992
6 ஆங் கீரச Angirasa 1992 - 1993
7 ஸ்ரீமுக Srimukha 1993 - 1994
8 பவ Bhava 1994 - 1995
9 யுவ Yuva 1995 - 1996
10 தாது Dhatu 1996 - 1997
11 ஈ ஸ்வர Esvara 1997 - 1998
12 வெகுதான்ய Vehudhaniya 1998 - 1999
13 பிரமாதி Pramathi 1999 - 2000
14 விக்கிரம Vikrama 2000 - 2001
15 வி ஷூ Vishu 2001 - 2002
16 சி த்திரபானு Chitrabanu 2002 - 2003
17 சுபானு Subanu 2003 - 2004
18 தாரண Tarana 2004 - 2005
19 பா ர்த்திப Parthiba 2005 - 2006
20 வி ய Viya 2006 - 2007
21 சர் வசி த்து Sarvasithu 2007 - 2008
22 ச ர்வதாரி Sarvadhari 2008 - 2009
23 விரோதி Virodhi 2009 - 2010
24 விக்ருதி Vikruthi 2010 - 2011
25 கர Kara 2011 - 2012
26 நந்தன Nandhana 2012 - 2013
27 விஜய Vijaya 2013-2014
28 ஜய Jaya 2014 - 2015
29 மன்மத Manmatha 2015 - 2016
30 , துன்முகி Dhunmuki 2016 - 2017
31 ஹேவிளம்பி Hevilambi 2017 - 2018
32 விளம்பி Vilambi 2018 - 2019
33 விகாரி Vikari 2019 - 2020
34 சா ர்வரி Sarvari 2020 - 2021
35 பிலவ Pilava 2021 - 2022
36 சுபகிருது Subakrithu 2022 - 2023
37 சோபகிருது Sobakrithu 2023 - 2024
38 குரோதி Krodhi 2024 - 2025
39 விசுவாசுவ Visuvaasuva 2025 - 2026
40 பிரபாவ Parabhaava 2026 - 2027
41 பிலவங்க Plavanga 2027 - 2028
42 கீலக Keelaka 2028 - 2029
43 செளமிய Saumya 2029 - 2030
44 சாதாரண Sadharana 2030 - 2031
45 விரோதிகிருது Virodhikrithu 2031 - 2032
46 பரிதாபி Paridhaabi 2032 - 2033
47 பி ரமாதீச Pramaadhisa 2033 - 2034
48 ஆனந்த Aanandha 2034 - 2035
49 ராட்சச Rakshasa 2035 - 2036
50 நள Nala 2036 - 2037
51 பிங் கள Pingala 2037 - 2038
52 காளயுக் தி Kalayukthi 2038 - 2039
53 சி த்தா ர்த்தி Siddharthi 2039 - 2040
54 ரெள்த்திரி' Raudhri 2040 - 2041
55 துன்மதி Thunmathi 2041 - 2042
56 துந்துபி Dhundubhi 2042 - 2043
57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043 - 2044
58 ர க்தாட்சி Raktakshi 2044 - 2045
59 குரோதன Krodhana 2045 - 2046
60 அட்சய Akshaya 2046 - 2047
-------------------------------------------------------------
புத்தாண்டு துவக்கத்திற்கும் சித்திரை முதல் தேதிக்கும், மேஷ ராசிக்கும் என்ன தொடர்பு? அதை நாளை விரிவாகப் பார்ப்போம். அத்துடன் தலைப்பில் உள்ள நீங்களும் உங்கள் ஜாதகமும் பற்றியும் விவரமாகப் பார்ப்போம்
பொறுத்திருங்கள்
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
தலை நிறைய பூ வைத்துக்கொள்கிறார்கள்.???!!!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அய்யா காலை வணக்கம்
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteபல மாதங்களாக வகுப்பிற்கு வராமைக்கு மன்னிக்கவும்.
இடம், பொருள், ஏவள் என்பார்களே, அதனை மனதில் கொண்டு தான் ஐயா!
என்ன செய்ய எல்லாம் படைத்தவனின் விளையாட்டு ஒழிய வேறு ஒன்றும் அல்ல இல்லை அல்லவா ஐயா,
எல்லோருக்கும் எம்முடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சித்தர் பாடல்கள்
ReplyDeleteசிறப்பு
முன்பெல்லாம்
detached பாத்ரூம்
attached பேமிலி
இப்போதெல்லாம்
attached பாத்ரூம்
detached பேமிலி
வருஷங்களை தெரியபடித்தமைக்கு நன்றிகள்
////நெருக்கிப் பேசினால், அவன் வீட்டில் எத்தனை லக்கேஜ்? என்கிறார்கள்.அதாவது பைய்னின் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறப்புக்கள் எல்லாம் சுமக்க வேண்டிய லக்கேஜாம்.////
ReplyDeleteஅப்படியானால் தாய் தந்தையே யாரென்று தெரியாது வளரும் குடிலுக்காது நல்லது பிறக்கட்டும். :)
நான் சௌமிய ஆண்டுக் குழந்தை (என் பெற்றோருக்கு :)...)
புத்தாண்டு அனைவரும் புதுப் புது மகிழ்வை பொலிவுடன் வழங்கட்டும்!
"நீங்களும் உங்கள் ஜாதகமும்" ஆவலுடன் கடைசி பெஞ்சில் இருந்து:)
நன்றிகள் ஐயா!
ஐயா வணக்கம்,
ReplyDeleteதமிழ் புததாண்டுகள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாளைய பொழுதை ஆவலுடன் எதிர் நோக்கும் மாணவன்.
மனிதர்கள் மாறி விட்டனர். எல்லாமே அவன் திருவிளயாடல் எனும் போது சித்தர்கள் வாக்கும் கண்டிப்பாகப் பலிக்கும்!.
ReplyDeleteவாத்தியார் ஐய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.வகுப்பறை கண்மணிகள் அனைவருக்கும் வளமான வாழ்க்கைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாளைய பாடத்தைஎதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.
நன்றியுடன்,
-Peeyes
வணக்கம்,
ReplyDeleteதங்களுக்கு விஜய நாம வருஷ வணக்கங்களை யும் வகுப்பறை த்தோழப்பெருமக்களுக்கு வாழ்த்துக்களும் உரித்தாகுக.
வருஷபலன் படித்தேன்.முந்தினப்பதிவில் வந்திருந்தால் ந்ன்றாயிருக்கும்
பெண்களின் அதீத முன்னேற்றம் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக் சொந்தவீட்டில் அன்பாக வளர்ந்த பெண்கள் புகுந்தவீட்டில் பட்ட சிரமங்களும் சொல்லொணாத்துயரங்களும் கருகிய கனவுகளும் அதனால் அவர்களிடம் இருந்து எழுந்த சாபங்களுமே இந்ததலைமுறையின் விதியைமாற்றியிருக்கிறது/ பிரம்மனால் எழுதப்படுகிறதேயன்றி அவர்களால் அல்ல என்று சொல்லலாமா?.அவர்கள் ஒருவிதத்தில் பாராட்ட படவேண்டியவர்கள் ஆயினும் எல்லை மீறப்படும் அவர்களின் விவரமற்ற நடைமுறை விரும்பத்தக்கதல்ல.
விவரமான் கட்டுரைப் பதிவை எதிர்பார்க்கிறேன்.
வணக்கம் ஐயா!
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீங்களும் உங்கள் ஜாதகமும் - அந்த துயரத்தை வேற ஏன் சார் மறுபடி கிண்டி விடறீங்க? நல்லா தானே கதை சொல்லிக்கிட்டு இருந்தீங்க? உங்க பாஷைல சொன்னா "ரம்மியமா"? அப்புறம் ஏன் திடீர்னு இப்புடி? :)
ReplyDeletevanakam sir..happy new year..
ReplyDeleteஅய்யா எல்லோருக்கும் விஜய வருட வாழ்த்துக்கள் ,
ReplyDelete12 ராசிகளில் முதல் ராசி யான மேஷத்தில் சூரியன் ப்ரவேசிப்பதும்,
அந்த ராசியே சூரியனுக்கு உச்ச வீடும் என்பதே ,
தமிழ் வருட பிறப்பு கொண்டாடுவதன் காரணமாக
இருக்கக் கூடும் என நினைக்கிறேன்,
மற்ற ஊர்களில் சந்திரனை வைத்தே மாதப்
பிற்ப்பு ஆரம்பமாகிறது.
சார், வருடம் என்பதன் வேர்ச்சொல் தமிழ்ச் சொல்லான வருடை என்பதிலிருந்து வந்தது. வருடை என்கிற சொல் ஆடு என்று பொருள்படும். சூரியன் மேஷ(ஆடு) ராசியில் நுழைவதால் தொடங்கும் காலச்சக்கரம் ஆகையால் வருடம் என்று கூறுகிறார்கள்
ReplyDeleteVANAKKAM AYYA INIYA TAMIL PUTHTHAANDU VAALTHUKAL
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteகுருவிற்கு புத்தாண்டு வழ்த்துகள்,
நன்றி
நான் பிறந்தது 45வதாக இருக்கும் விரோதிகிருது ஆண்டில். இந்த பெயர்களையெல்லாம் பார்த்தால் தமிழ் பெயர் போல் தெரியவில்லை.
ReplyDeleteஏற்கனவே இங்கு மழை மிகுதியாகதான் பெய்கிறது. இந்த ஆண்டு இன்னும் மிகுதி என்றால் என்ன ஆகுமோ. சராசரியாக மாதத்தில் ஒரு சில நாட்கள்தான் மழை பெய்யாமல் இருக்கிறது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete/////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteதலை நிறைய பூ வைத்துக்கொள்கிறார்கள்.???!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்./////
மல்லிகைப்பூ கிலோ ஐநூறு ரூபாய் விற்கிறது. ஒரு முழம் பூ பதினைந்து ரூபாய்க்கு விற்கிறது. வயதான, காசருமை தெரிந்த பெண்மணிகள் ஒரு முழம் பூவை வாங்கி, பாதியை வீட்டில் உள்ள விளக்கிற்கு வைத்துவிட்டு, மீதியைத் தங்கள் தலையில் வைத்துக்கொள்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள், பூ என்ன விலை விற்றாலும் கவலையின்றி 4 முழம் வாங்கித் தலையில் சூடிக்கொள்கிறார்கள். அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்1111 நன்றி!
////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம்////
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
Blogger Maaya kanna said...
ReplyDeleteவணக்கம் ஐயா!
பல மாதங்களாக வகுப்பிற்கு வராமைக்கு மன்னிக்கவும்.
இடம், பொருள், ஏவல் என்பார்களே, அதனை மனதில் கொண்டு தான் ஐயா!
என்ன செய்ய எல்லாம் படைத்தவனின் விளையாட்டு ஒழிய வேறு ஒன்றும் அல்ல இல்லை அல்லவா ஐயா,
எல்லோருக்கும் எம்முடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.////
பெயருக்குத் தகுந்தாற்போல அடிக்கடி மாயமாகி விடுகிறீர்கள்!:-=)))
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
////Blogger அய்யர் said...
ReplyDeleteசித்தர் பாடல்கள்
சிறப்பு
முன்பெல்லாம்
detached பாத்ரூம்
attached பேமிலி
இப்போதெல்லாம்
attached பாத்ரூம்
detached பேமிலி
வருஷங்களைத் தெரியபடுத்தியமைக்கு நன்றிகள்////
மக்களில் முக்கால்வாசிப் பேர்கள் பணத்தைத் தவிர வேறு எதிலும் attachment இல்லாமல் இருக்கிறார்கள். அதுதான் வருத்தம் தரக்கூடியது!
////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDelete////நெருக்கிப் பேசினால், அவன் வீட்டில் எத்தனை லக்கேஜ்? என்கிறார்கள்.அதாவது பைய்னின் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறப்புக்கள் எல்லாம் சுமக்க வேண்டிய லக்கேஜாம்.////
அப்படியானால் தாய் தந்தையே யாரென்று தெரியாது வளரும் குடிலுக்காது நல்லது பிறக்கட்டும். :)
நான் சௌமிய ஆண்டுக் குழந்தை (என் பெற்றோருக்கு :)...)
புத்தாண்டு அனைவரும் புதுப் புது மகிழ்வை பொலிவுடன் வழங்கட்டும்!
"நீங்களும் உங்கள் ஜாதகமும்" ஆவலுடன் கடைசி பெஞ்சில் இருந்து:)
நன்றிகள் ஐயா!////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
////Blogger SG Krish said...
ReplyDeleteஐயா வணக்கம்,
தமிழ் புததாண்டுகள்////
சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டீர்களே! புத்தாண்டு வாழ்த்துக்கள்தானே? நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
////Blogger thanusu said...
ReplyDeleteஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாளைய பொழுதை ஆவலுடன் எதிர் நோக்கும் மாணவன்.////
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தனுசு!
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteமனிதர்கள் மாறி விட்டனர். எல்லாமே அவன் திருவிளயாடல் எனும் போது சித்தர்கள் வாக்கும் கண்டிப்பாகப் பலிக்கும்!./////
உங்கள் வாக்கு பலிக்கட்டும்! நன்றி!
////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteவாத்தியார் ஐய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.வகுப்பறை கண்மணிகள் அனைவருக்கும் வளமான வாழ்க்கைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாளைய பாடத்தைஎதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.
நன்றியுடன்,
-Peeyes////
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பொன்னுசாமி அண்ணா!
////Blogger சர்மா said...
ReplyDeleteவணக்கம்,
தங்களுக்கு விஜய நாம வருஷ வணக்கங்களையும் வகுப்பறைத் தோழப்பெருமக்களுக்கு வாழ்த்துக்களும் உரித்தாகுக.
வருஷபலன் படித்தேன்.முந்தினப்பதிவில் வந்திருந்தால் ந்ன்றாயிருக்கும்
பெண்களின் அதீத முன்னேற்றம் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக் சொந்தவீட்டில் அன்பாக வளர்ந்த பெண்கள் புகுந்தவீட்டில் பட்ட சிரமங்களும் சொல்லொணாத்துயரங்களும் கருகிய கனவுகளும் அதனால் அவர்களிடம் இருந்து எழுந்த சாபங்களுமே இந்ததலைமுறையின் விதியைமாற்றியிருக்கிறது/ பிரம்மனால் எழுதப்படுகிறதேயன்றி அவர்களால் அல்ல என்று சொல்லலாமா?.அவர்கள் ஒருவிதத்தில் பாராட்ட படவேண்டியவர்கள் ஆயினும் எல்லை மீறப்படும் அவர்களின் விவரமற்ற நடைமுறை விரும்பத்தக்கதல்ல.
விவரமான் கட்டுரைப் பதிவை எதிர்பார்க்கிறேன்.///
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
///Blogger SG Krish said...
ReplyDeleteவணக்கம் ஐயா!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்////
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteநீங்களும் உங்கள் ஜாதகமும் - அந்த துயரத்தை வேற ஏன் சார் மறுபடி கிண்டி விடறீங்க? நல்லா தானே கதை சொல்லிக்கிட்டு இருந்தீங்க? உங்க பாஷைல சொன்னா "ரம்மியமா"? அப்புறம் ஏன் திடீர்னு இப்புடி? :)////
இல்லை சாமி! வித்தியசமாக ஒன்றும் எழுதவில்லையே!
/////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir..happy new year..////
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete////Blogger rajanblogs said...
அய்யா எல்லோருக்கும் விஜய வருட வாழ்த்துக்கள் ,
12 ராசிகளில் முதல் ராசி யான மேஷத்தில் சூரியன் ப்ரவேசிப்பதும்,
அந்த ராசியே சூரியனுக்கு உச்ச வீடும் என்பதே ,
தமிழ் வருட பிறப்பு கொண்டாடுவதன் காரணமாக
இருக்கக் கூடும் என நினைக்கிறேன்,
மற்ற ஊர்களில் சந்திரனை வைத்தே மாதப்
பிற்ப்பு ஆரம்பமாகிறது./////
சந்திரனை வைத்து மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பது புதிய செய்தி!. எந்த ஊர் என்று நீங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்!
///Blogger Sivaraman Kannan said...
ReplyDeleteசார், வருடம் என்பதன் வேர்ச்சொல் தமிழ்ச் சொல்லான வருடை என்பதிலிருந்து வந்தது. வருடை என்கிற சொல் ஆடு என்று பொருள்படும். சூரியன் மேஷ(ஆடு) ராசியில் நுழைவதால் தொடங்கும் காலச்சக்கரம் ஆகையால் வருடம் என்று கூறுகிறார்கள்/////
நல்லது. நன்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்!
//////Blogger rajakala said...
ReplyDeleteVANAKKAM AYYA INIYA TAMIL PUTHTHAANDU VAALTHUKAL/////
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
குருவிற்கு புத்தாண்டு வழ்த்துகள்,
நன்றி/////
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete/////Blogger Ak Ananth said...
நான் பிறந்தது 45வதாக இருக்கும் விரோதிகிருது ஆண்டில். இந்த பெயர்களையெல்லாம் பார்த்தால் தமிழ் பெயர் போல் தெரியவில்லை.
ஏற்கனவே இங்கு மழை மிகுதியாகதான் பெய்கிறது. இந்த ஆண்டு இன்னும் மிகுதி என்றால் என்ன ஆகுமோ. சராசரியாக மாதத்தில் ஒரு சில நாட்கள்தான் மழை பெய்யாமல் இருக்கிறது./////
கொடுத்துவைத்தவர்கள். எங்கள் ஊரில் ஒருவருடமாக மழையே இல்லை!
////Blogger கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்////
நல்லது. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!