14.1.2013
ஸ்ரீநந்தன ஆண்டு தைத்திங்கள் முதல் தேதி
பொங்கல்: சேர்ந்து வாழ்வதைச் சிறப்பாகச் சொல்லும் பொங்கல்!
அனைவருக்கும் நம்து வகுப்பறையின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கலைச் சிற்ப்பித்துக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை மகிழ்ச்சியுடன் கீழே தந்துள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------------
அறவழி வாழ்க்கை பண்பு
அகம்புறந் தூய்மை வாய்மை
உறவுபார்த் துண்ணல், கையில்
உளவரை பகிர்ந்து வாழ்தல்
குரவரைப் பணிதல், கொண்ட
குல்மகள் இதயங் காத்தல்
நெறியெனப் பொங்க்ல் நாளை
நிறைவுறத் தமிழர் வைத்தார்!
எவ்வழி மனமோ வாழ்வும்
அவ்வழி யேதான் போகும்
எவ்வழி அறிவோ நெஞ்சும்
அவ்வழி யேதான் செல்லும்
செல்வழி சிறந்த நெஞ்சு
சேர்ந்துவாழ் கின்ற வாழ்வு
நல்வழி தோன்றும், தோன்றி
நலமுறப் பொங்கல் நாளே!
- கவியாக்கம் கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------------------------------------------------------------------
பொங்கலை முன்னிட்டு, உங்களுக்கு (வகுப்பறைக்கு) ஒரு நாள் விடுமுறை. அடுத்த வகுப்பு 16.1.2013 புதன்கிழமை அன்று நடைபெறும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
கவிதையும், இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கண்ணதாசன் கருத்தும் அருமை ஐயா. தங்களுக்கும் வகுப்பறை மாணவர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள். பாடல் அருமை. குரு அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தமிழர்த்திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொங்கலுடன் கூடிய தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeletekannadashanin karuthu miga arumai
ReplyDeleteகுருவிற்கு வணக்கம் ,
ReplyDeleteதைபிறந்தால் வழிபிறக்கும் என்பது
ஆன்றேர்வாக்கு, குருவிற்கும்,வகுப்பறை மாணவர்களுக்கும் பொங்கும் மங்களம், என்றும் நிலைத்திட் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி
பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeletesubbu rathinam
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகல்லை சேர்த்து வரும் ஒரே பண்டிகை பொங்
ReplyDelete"கல்" தான்..அது சிலருக்கு அதிருஷ்ட
கல்..சிலருக்கு வெறும் செங்
கல்.. கல் என்பதன் பொருள்
தோண்டுதல் என்பதே..உன்னை
தோண்டி உன்னை கண்டால்
உலகம் உன்னை வணங்கும் என
உன்னதமான கருத்தினை உள்ளடக்கிய
தித்திக்கும் பாடலுக்கு நன்றி..
திடீர் லீவு எங்களுக்கும் மகிழ்ச்சி தான்
சனங்களுக்கு லீவை வாரி தருவதால் சன(வா)வரி யானாயோ..
முழுமனதுடன் தொடங்கும் எந்த
முயற்சிகளும் வெற்றியே பெற்று தரும்
வெள்ளி மணி ஓசையாலும்
பல்லி விழும் சத்தத்தாலும் நிற்பதில்லை
அரிசியோடு பாலும் பொங்குவது போல்
அன்போடு மகிழ்ச்சியும் பொங்கட்டும்..
இந்த பாடலினை
இன்று சுழலவிடுகிறோம்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
முப்பாட்டன் காலம் தொட்டு
முப்போகம் யாரல
கல்மேடு தாண்டி வரும்
காவிரி நீராலே
சேத்தோடு சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோட சேதி சொல்ல
காத்து வராதா-
செவ்வாழ செங்கரும்பு
சாதிமல்லி தோட்டந்தான்
எல்லாமே இங்கிருக்கு (ஆனால்)
ஏதுமில்லா வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது
மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது
கண்ணில் உள்ளதடி
கனவில் இல்லையடி
(மனதை தொட்ட வரிகள்)
வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவ தோழியர், தோழர்களுக்கும் பொங்ல நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கண்ணதாசன் கவிதை சந்த நயத்துடன் அருமை.
ReplyDeletehappy pongal sir
ReplyDeleteமுக்கிய அறிவிப்பு:
ReplyDeleteபழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
////Blogger சரண் said...
ReplyDeleteகவிதையும், இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கண்ணதாசன் கருத்தும் அருமை ஐயா. தங்களுக்கும் வகுப்பறை மாணவர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்./////
நல்லது. நன்றி சரண்!
////Blogger renga said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள். பாடல் அருமை. குரு அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தமிழர்த்திருநாள் வாழ்த்துக்கள்.////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ரெங்கா!
///Blogger krishnar said...
ReplyDeleteபொங்கலுடன் கூடிய தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள்.////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி மிஸ்டர் கிருஷ்ணர்!
////Blogger arul said...
ReplyDeletekannadashanin karuthu miga arumai/////
நல்லது. நன்றி அருள்!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம் ,
தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது
ஆன்றேர்வாக்கு, குருவிற்கும்,வகுப்பறை மாணவர்களுக்கும் பொங்கும் மங்களம், என்றும் நிலைத்திட் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி/////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி உதயகுமார்!
////Blogger sury Siva said...
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.
subbu rathinam/////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சுப்பு சார்!
நீங்கள் பின்னூட்டம் இடும் நாட்களெல்லாம் எங்களுக்குப் பண்டிகை நாட்களே!
/////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்./////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
Blogger அய்யர் said...
ReplyDeleteகல்லை சேர்த்து வரும் ஒரே பண்டிகை பொங்
"கல்" தான்..அது சிலருக்கு அதிருஷ்ட
கல்..சிலருக்கு வெறும் செங்
கல்.. கல் என்பதன் பொருள்
தோண்டுதல் என்பதே..உன்னை
தோண்டி உன்னை கண்டால்
உலகம் உன்னை வணங்கும் என
உன்னதமான கருத்தினை உள்ளடக்கிய
தித்திக்கும் பாடலுக்கு நன்றி..
திடீர் லீவு எங்களுக்கும் மகிழ்ச்சி தான்
சனங்களுக்கு லீவை வாரி தருவதால் சன(வா)வரி யானாயோ..
முழுமனதுடன் தொடங்கும் எந்த
முயற்சிகளும் வெற்றியே பெற்று தரும்
வெள்ளி மணி ஓசையாலும்
பல்லி விழும் சத்தத்தாலும் நிற்பதில்லை
அரிசியோடு பாலும் பொங்குவது போல்
அன்போடு மகிழ்ச்சியும் பொங்கட்டும்..//////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteவாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவ தோழியர், தோழர்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண்ணதாசன் கவிதை சந்த நயத்துடன் அருமை.////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger eswari sekar said...
ReplyDeletehappy pongal sir/////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!
ஐயா வணக்கம் இந்தக் கேள்வியை தனிப்பட்டரீதியில் உங்களுக்கு அனுப்பி யிருப்பேன் ஆனாலும் பலரும் இதற்கான பதிலை அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக பின்னூட்டதில் வெளியிடுகின்றேன்.
ReplyDeleteவா.பஞ்சாங்கம் பார்பதில் சில சந்தேகங்கள் உள்ளது அதாவது ராகு கேது பாதசாரம் கார்த்திகை 18 நா-வி 6-14 விசாகம் 3ல் {து} பெயர்ச்சி என உள்ளது. நா-வி 6-14 எனறால் என்ன நேரம் என்று எப்படி கணித்துக் கொள்வது?
நந்தன வருட கார்த்திகை மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை நாடி 17 விநாடி 23 [மணி 1-05ல்] விருச்சிக ரவி. என்று உள்ளது இதில் நாடி 17 விநாடி 23 என்றால் எத்தனை மணி என்று புரிந்து கொள்ளது?
நாடி 17 விநாடி 23 மணி 1-05 கணிப்பது எப்படி?
ஐயா பஞ்சாங்கம் பார்பது எப்படி நேரங்களை கணிப்பது எப்படி என்று பதிவு எழுதலாமே..
திரு சுப்பையா ஆசிரியருக்கு வணக்கம்
ReplyDeleteதங்களுடைய
http://classroom2012.in, http://classroom337.com
வலைத்தளத்துக்கு எனக்கும் அனுமதி கிடைக்குமா
மிகவும் ஆவலாய் உள்ளேன் ஐயா
இவ்வண்
வி.இ.சர்மா
////Blogger Balasingam said...
ReplyDeleteஐயா வணக்கம் இந்தக் கேள்வியை தனிப்பட்டரீதியில் உங்களுக்கு அனுப்பி யிருப்பேன் ஆனாலும் பலரும் இதற்கான பதிலை அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக பின்னூட்டதில் வெளியிடுகின்றேன்.
வா.பஞ்சாங்கம் பார்பதில் சில சந்தேகங்கள் உள்ளது அதாவது ராகு கேது பாதசாரம் கார்த்திகை 18 நா-வி 6-14 விசாகம் 3ல் {து} பெயர்ச்சி என உள்ளது. நா-வி 6-14 எனறால் என்ன நேரம் என்று எப்படி கணித்துக் கொள்வது?
நந்தன வருட கார்த்திகை மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை நாடி 17 விநாடி 23 [மணி 1-05ல்] விருச்சிக ரவி. என்று உள்ளது இதில் நாடி 17 விநாடி 23 என்றால் எத்தனை மணி என்று புரிந்து கொள்ளது?
நாடி 17 விநாடி 23 மணி 1-05 கணிப்பது எப்படி?
ஐயா பஞ்சாங்கம் பார்பது எப்படி நேரங்களை கணிப்பது எப்படி என்று பதிவு எழுதலாமே../////
ஆங்கிலக் கணக்கு
நாள் ஒன்றிற்கு 24 மணிகள்
ஒரு மணிக்கு 60 நிமிடங்கள்
தமிழ்க் கணக்கு
நாள் ஒன்றிற்கு 60 நாழிகைகள்
ஒரு நாழிகைக்கு 60 விநாடிகள்
ஒரு நாழிகை = 24 நிமிடங்கள் (24 minutes)
----------------------------------
இன்னும் விறகு அடுப்பில் எதற்காக சமையல் செய்ய வேண்டும்?
Gas Stove & Induction stove எல்லாம் வந்துவிட்டதே?
பஞ்சாங்கத்தை வைத்து, ஜாதகத்தைக் கணித்து நேரத்தை வீணாக்காமல், கணினியைப் பயன்படுத்துங்கள்!