மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.1.13

கவிதைச் சோலை: இனிக் காண்பதெல்லாம் இன்பமப்பா!


கவிதைச் சோலை: இனிக் காண்பதெல்லாம் இன்பமப்பா!

இன்றையக் கவிதைச் சோலையைப் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------
1
தலைப்பு: காண்பதெல்லாம் இன்பமப்பா!

விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
மேல்கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே!

மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்துவரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா!


- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
-------------------------------------------------
2
தலைப்பு: இதுதான் உலகமடா!

இதுதான் உலகமடா - மனிதா
இதுதான் உலகமடா - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

உதைத்தவன் காலை முத்தமிடும்
உத்தமர் வாழ்வைக் கொத்திவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும் - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சைத் தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்கப்
பாலும் பழமும் தேடித் தரும் - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
வீணே சிறையில் பூட்டிவிடும்
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னைப்
புகழ்ந்தே பாடல் புனைந்துவிடும் - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9 comments:

  1. 1.
    இடும்பைக்கு இடும்பை படுப்பர்
    இடும்பைக்கு இடும்பை படாதஅவர்
    2.
    பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
    தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்

    கவிதைக்கு குறள்(ரல்) தந்து
    குறிக்கின்றோம் வருகை பதிவு..

    எனினும்..
    கவிஞரின் உலக பார்வையின்
    கருத்து ஏற்புடையதாக தெரியவில்லை




    ReplyDelete
  2. இடுக்கண் வருங்கால் நகுக! என்றார் வள்ளுவர்.
    துன்பமதை துணிந்து மிதி உனக்கு மதியும், கற்புடைய மனைவியும், வலிமையையும் இருக்கிறது அந்நிலையைப் பெற்றால் அதன் பின்பு இன்பமே என்கிறார்.. பட்டுக் கோட்டையார்.
    பிரித்து மொழிதல் அணியாகக் கொண்டால்... இம்மூன்றும் (இன்னபிறவும்) துன்பத்திற்கும் காரணம் என்பதையும் உணரலாம்.

    பொருள் இருந்தால் வந்து கூடும் என்றப் பட்டியலில் எதார்த்த அவலத்தை அருமையாக வடிக்கிறார்...

    உலகை இவர்கள் பார்க்கும் பார்வையும், அது இவர்களுள் ஏற்படுத்தும் பாதிப்பும் வரையும் ஓவியம் இக் கவிதைகள்!

    அருமையானப் பாடல்கள்.. பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. "பொருள் இருந்தால் வந்து கூடும் அதை இழந்தால் விலகி ஓடும்"

    எவ்வளவு உண்மையான சொற்கள் ஐயா!மனதைத்தொட்ட பாடல்.நன்றி ஐயா!

    ReplyDelete
  4. ayya,
    thanks for ur golden time to sent reply to my comment and i feel very happy to c ur comment. my home town is sivagangai. i couldnt find a good and best astrologer in my life in sivagangai,i have met a jothidar in pattamangalam but im not satisfied with his words ayya, thats y i ask with u ayya. anyway still my life is getting only bad time only. thanks for ur comments ayya.

    ReplyDelete
  5. ////Blogger அய்யர் said...
    1.
    இடும்பைக்கு இடும்பை படுப்பர்
    இடும்பைக்கு இடும்பை படாதஅவர்
    2.
    பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
    தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
    கவிதைக்கு குறள்(ரல்) தந்து
    குறிக்கின்றோம் வருகை பதிவு..
    எனினும்..
    கவிஞரின் உலக பார்வையின்
    கருத்து ஏற்புடையதாக தெரியவில்லை////

    எல்லோருக்கும் ஏற்புடையதாக எழுதமுடியுமா என்ன?

    ReplyDelete
  6. ////Blogger ஜி ஆலாசியம் said...
    இடுக்கண் வருங்கால் நகுக! என்றார் வள்ளுவர்.
    துன்பமதை துணிந்து மிதி உனக்கு மதியும், கற்புடைய மனைவியும், வலிமையையும் இருக்கிறது அந்நிலையைப் பெற்றால் அதன் பின்பு இன்பமே என்கிறார்.. பட்டுக் கோட்டையார்.
    பிரித்து மொழிதல் அணியாகக் கொண்டால்... இம்மூன்றும் (இன்னபிறவும்) துன்பத்திற்கும் காரணம் என்பதையும் உணரலாம்.
    பொருள் இருந்தால் வந்து கூடும் என்றப் பட்டியலில் எதார்த்த அவலத்தை அருமையாக வடிக்கிறார்...
    உலகை இவர்கள் பார்க்கும் பார்வையும், அது இவர்களுள் ஏற்படுத்தும் பாதிப்பும் வரையும் ஓவியம் இக் கவிதைகள்!
    அருமையானப் பாடல்கள்.. பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    "பொருள் இருந்தால் வந்து கூடும் அதை இழந்தால் விலகி ஓடும்"
    எவ்வளவு உண்மையான சொற்கள் ஐயா!மனதைத்தொட்ட பாடல்.நன்றி ஐயா!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. ////Blogger C.Senthil said...
    ayya,
    thanks for ur golden time to sent reply to my comment and i feel very happy to c ur comment. my home town is sivagangai. i couldnt find a good and best astrologer in my life in sivagangai,i have met a jothidar in pattamangalam but im not satisfied with his words ayya, thats y i ask with u ayya. anyway still my life is getting only bad time only. thanks for ur comments ayya./////

    உங்கள் பகுதியில், திருக்கோஷ்டியூரில் உறையும் இறைவனை வணங்குங்கள். வாழ்வில் வசந்தம் வந்துவிடும்!

    ReplyDelete
  9. வ்ணக்கம்
    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
    தங்கள் பணி இனிதே தொடர மனமார்ந்த பிரார்த்தனைகள்
    சர்மா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com