சோமஸ்கந்தர் - திருநாகேஷ்வரம் |
எல்லா நாளிதழ்களிலும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியைப் பற்றி நான்கு கால செய்தியைப் போட்டு, ந்ம்மைக் கவலைப்பட வைத்திருக்கிறார்கள்.
யாரும் கவலைப் பட வேண்டாம். நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக்கொள்வான் என்று மன தைரியத்துடன் இருங்கள்
அது என்ன பெயர்ச்சி?
கோள்சாரத்தில் (transit of planets) ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் மாறுகிறார்கள். உங்கள் மொழியில் சொன்னால் transfer ஆகிப் போகிறார்கள். மாற்றல் உத்தரவு தேவையில்லாத ஆசாமிகள் அவர்கள்.
ராகு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise) கேது ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise)
2.12.2012 அன்று இடம் மாறும் அவர்கள், அந்த இடத்தில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருப்பார்கள். 21.6.2014 வரை அங்கே இருப்பார்கள். அவர்களின் இடம் மாற்றத்தில் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் உண்டாகும்.
ராசி வாரியாக அதைப் பார்ப்போம்:
1. மேஷ ராசி: நன்மையும் தீமையும் சரி சமமாகக் கலந்த கலவையான பலன்
2. ரிஷப ராசி. இதுவரை பிடித்திருந்தவர்கள் விட்டு விலகிப் போவதால் இனி எல்லாமுமே நல்லதாக நடக்கும்
3. மிதுன ராசி இன்றைய நிலவரப்படி அது (கேதுவிற்கு) 11ஆம் இடம். பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும். வேலையில் தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும்
4. கடக ராசி. பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும்.
5. சிம்ம ராசி. ராசிக்கு மூன்றில் ராகு வருகிறார். அது மறைவிடம். இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமுமே யோகமான பலன்கள்தான். வளம் உண்டாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
6. கன்னி ராசி. ராசிக்கு இரண்டில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத்துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்
7. துலாம் ராசி. ராசிக்கு ஒன்றில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத் துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்
8. விருச்சிக ராசி. இதுவரை பிடித்து அமுக்கி வைத்திருந்த ராகு விட்டு விலகிப் போவதால் இனி நல்லகாலம்தான். பெரும்பாலும் நன்மையான பலன்களாகவே நடைபெறும்.
9. தனுசு ராசி. இன்றையப் பெய்ர்ச்சிப்படி அது ராகுவிற்கு (from thanusu) பதினொன்றாம் இடம். யோகமான பலன்களே நடைபெறும்
10. மகர ராசி. ராகு 10ல், கேது 4ல். நல்ல அமைப்பு இல்லை. இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். நம்ம ஆள் - அதாங்க ராசி நாதன் சனீஷ்வரனின் சேர்க்க, மற்றும் பார்வையில் அவர்கள் இருப்பதால், அவர் பார்த்துக் கொள்வார்.
11. கும்ப ராசி. கேது 3ல். உபத்திரவம் இருக்காது. உற்சாகமே அதிகமாக இருக்கும். எதையும் துணிச்சலாகச் செய்வீர்கள். பணவரவுகள் இருக்கும்.
12. மீன ராசி. எட்டில் ராகு. முன்பாகவே அஷ்டமச்சனியும் அங்கே உள்ளார். ஆகவே கைக்காசெல்லாம் கரைந்து போகும் (2ல் இருக்கும் கேது அதைச் செய்வார்)
இவை எல்லாமுமே பொதுப் பலன்கள்தான்!
நல்ல தசா புத்திகள் நடப்பவர்களை, இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. தசாபுத்திகள்தான் முக்கியம். கோளசாரத்திற்கு இரண்டாம் இடம்தான். ஆகவே உங்கள் ஜாதகப்படி தற்சமயம் உங்களுக்கு நல்ல தசா புத்திகள் நட்ந்தால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். மற்ற எதுவும் உங்களைப் பாதிக்காது.
அதுபோல துலாம் ராசியிலும், மேஷராசியிலும் சர்வாஷ்டகப்பரல்களின்படி 30ம் அத்ற்கு மேற்பட்ட பரல்களும் உடையவர்களையும் இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. அதையும் கவனத்தில் கொள்க
சனியின் சுற்றிலும் அதுதான் அஷ்டகவர்க்க விதி. சனி வரும் இடத்தில் 30 பரல்களோ அல்லது மேலாகவோ இருந்தால் சனியின் பாதிப்பு எதுவும் இருக்காது. அந்த இடம் 30 பரல்களுடன் இருப்பதால், அது வலிமையான இடம். அங்கே தீய கிரகங்களின் ஆட்டம் செல்லாது. அவைகள் அடக்கி வாசிக்கும். அதையும் மனதில் கொள்க!!!!!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
மேலதிகத் தகவல்
Naganatha Swami temple - Rahu stalam (தகவல்: விக்கி மஹாராஜா)
கும்பகோண்த்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஸ்தலம் உள்ளது
Naganatha Swami (Naga in Tamil/Sanskrit means Snake and Natha means God) is a temple dedicated to Lord Shiva. An important feature of Naganatha Swami temple is that of Rahu bhagawan (one of the nine celestial bodies) sannathi. It is the 29th in the series of Tevara Stalams located south of the river Kaveri. Here milk abhishekam is performed daily during Rahukaalam. At this time, the milk that is poured on the statue turns blue when it passes over the body and once again to white after it reaches the floor. This wonder is watched by many daily during the Raahu Kaalam. This is also the only place wherein one can view Rahu bhagawan with his consorts. The mythological serpents Aadi Seshan, Dakshan and Kaarkotakan worshipped Shiva here. Nala worshipped Shiva here too. Gautama Maharishi, Parashara and Bhageerata are also associated with this temple.
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Ballard pathivu.Nanri, Ayya,
ReplyDeleteநீண்ட நாட்கள் கழித்து வகுப்பறைக்கு வருகிறேன். பாம்பு கிரஹங்களின் பெயர்ச்சி என்ன செய்தாலும் பழனியாண்டவன் துணையால் அனைத்தையும் தாண்டி விடுவோம்
ReplyDeleteசில காலமே இருந்து ஆட்சி செய்யும்
ReplyDeleteசிலர் இப்படி ஆட்டம் போடும் போது
இறைவனையே தஞ்சமடைந்தவர்க்கு
இன்னல்கள் என்பது ஏது..
பலன்களுக்கும் உற்சாகமூட்டும்
பதிவிற்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்..
வலமாக சுழல விடுடிகறோம்
வழக்கம் போல் கவிஞரின் பாடலினை
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
Good morning sir. Very useful post which everyone expected. Which days are favour for ragu and kethu.
ReplyDeleteThanks,
Sathishkumar GS
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteகோள்சாரத்தில் ராகுவும் கேதுவும் நல்ல பாடம் "யாம் இருக்க பயம் ஏன்"
முருகன்துணை.
நன்றி
Respected sir,
ReplyDeleteGood morning.
Very good lesson with clear understanding in nutshell.
Thanks a lot.
Yours sincerely,
K.Umapathy
vanakam sir .. mega thilvga oru solliullirgal thanks sir.. ..
ReplyDelete
ReplyDeleteஇன்று மிகவும் உபயோகமான பதிவினை
தகுந்த நேரத்தில் சிறப்பாக அளித்துள்ள வாத்தியார்
அவர்களுக்கு மிக,மிக நன்றி !!
மிதுன ராசிக்காரனான எனக்கு ராகு கேது 5,11 என்று இருப்பார்கள். இந்த பெயர்ச்சியால் இப்போது நடக்கும் கேது புத்தி இனி நன்மை செய்யலாம்.
ReplyDeleteஐயர் அவர்களே ’நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடலையும் சேர்த்து சுழல விடுங்கள். கோள்கள் சுழன்று சென்றுதான் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பெயர்ச்சியாவார்கள். அவர்கள் சுழற்சிக்கு ஈடு கொடுத்து பாட்டும் சேர்ந்து சுழலட்டுமே.
Respected Sir,
ReplyDeleteTimely superb post... and Should we check this planet transit with our own horoscope lakna for accurate calculation?
I am waiting...
Yours sincerely,
Ravi
thanks for the post
ReplyDeleteThank u very much sir :)
ReplyDelete//ஐயர் அவர்களே ’நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடலையும் சேர்த்து சுழல விடுங்கள். கோள்கள் சுழன்று சென்றுதான் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பெயர்ச்சியாவார்கள். அவர்கள் சுழற்சிக்கு ஈடு கொடுத்து பாட்டும் சேர்ந்து சுழலட்டுமே.///
ReplyDelete:):):)))
வணக்கம் ஐயா,ராகு,கேது பெயர்ச்சி பற்றி எழுதி,மேலும் திசா பலன் நன்றாக இருக்கவேண்டும்,திசா புத்தி நன்றாக இருந்தால் எதை பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற தகவல் நன்று,இதில் நம் தமிழ் நாடும், நம் இந்தியாவும் ஆட்சியாளர்களின் கையில் சிக்கி என்ன நிலைமையில் இருக்கும் என்பதையும் எழுதுங்கள் நன்றி ஐயா.
ReplyDeleteDear Sir, Thanks for the lesson. When we trust God, he will protect us like a father protecting his son. My faith is increasing due to reading class room and thanks to blessings of elders like you and others here. Thanks.
ReplyDeleteBhuvanesh
ஐயா அவர்களின் ராகு - கேது பெயர்ச்சியின் விளக்கம் கண்டபின்னரே தெளிவடைந்தோம்..மிக்கநன்றி!
ReplyDeleteநன்றி ஐயா...
ReplyDelete////Blogger Bala M said...
ReplyDeleteBallard pathivu.Nanri, Ayya,////
Ballard பதிவா? என்ன் சொல்ல வருகிறீர்கள் சாமி? என்ன மொழிச் சொல் அது?
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநீண்ட நாட்கள் கழித்து வகுப்பறைக்கு வருகிறேன். பாம்பு கிரஹங்களின் பெயர்ச்சி என்ன செய்தாலும் பழனியாண்டவன் துணையால் அனைத்தையும் தாண்டி விடுவோம்////
ஆமாம். அவன் இருக்கையில் பயம் எதற்கு? நன்றி சுவாமி!
Blogger அய்யர் said...
ReplyDeleteசில காலமே இருந்து ஆட்சி செய்யும்
சிலர் இப்படி ஆட்டம் போடும் போது
இறைவனையே தஞ்சமடைந்தவர்க்கு
இன்னல்கள் என்பது ஏது..
பலன்களுக்கும் உற்சாகமூட்டும்
பதிவிற்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்..
வலமாக சுழல விடுடிகறோம்
வழக்கம் போல் கவிஞரின் பாடலினை
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger KJ said...
ReplyDeleteGood morning sir. Very useful post which everyone expected. Which days are favour for ragu and kethu.
Thanks,
Sathishkumar GS/////
வாரத்தில் ஏழு நாட்கள் தானே? ராகு & கேதுவைத் தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டும் நாட்கள். ராகு & கேதுவிற்குத் தினமும் 90 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவே? போதாதா? ராகு கேதுவிற்கு உகந்த நாட்களைத் தெரிந்து கொண்டு என்ன செய்யலாம் என்று உள்ளீர்கள்? அதைச் சொல்லுங்கள்!
அதற்கான (அந்தச் செயலுக்கான) உகந்த நாட்களை நான் சொல்கிறேன்!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
கோள்சாரத்தில் ராகுவும் கேதுவும் நல்ல பாடம் "யாம் இருக்க பயம் ஏன்"
முருகன்துணை.
நன்றி////
யெஸ், அவன் இருக்கப் பயம் ஏன்? நன்றி உதயகுமார்!
/////Blogger k.umapathy said..
ReplyDeleteRespected sir,
Good morning.
Very good lesson with clear understanding in nutshell.
Thanks a lot.
Yours sincerely,
K.Umapathy/////
நல்லது. நன்றி நண்பரே!
ReplyDelete////Blogger eswari sekar said...
vanakam sir .. mega thilvga oru solliullirgal thanks sir.. ..////
தெளிவாக இருந்தால்தானே அனைவரும் படிப்பார்கள் சகோதரி!
////Blogger V Dhakshanamoorthy said...
ReplyDeleteஇன்று மிகவும் உபயோகமான பதிவினை
தகுந்த நேரத்தில் சிறப்பாக அளித்துள்ள வாத்தியார்
அவர்களுக்கு மிக,மிக நன்றி !!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!!
////Blogger ananth said...
ReplyDeleteமிதுன ராசிக்காரனான எனக்கு ராகு கேது 5,11 என்று இருப்பார்கள். இந்த பெயர்ச்சியால் இப்போது நடக்கும் கேது புத்தி இனி நன்மை செய்யலாம்.
ஐயர் அவர்களே ’நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடலையும் சேர்த்து சுழல விடுங்கள். கோள்கள் சுழன்று சென்றுதான் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பெயர்ச்சியாவார்கள். அவர்கள் சுழற்சிக்கு ஈடு கொடுத்து பாட்டும் சேர்ந்து சுழலட்டுமே./////
நாம் கேட்டுக் கொண்டாலும், கேட்காமல் விட்டாலும், அவர் சுழல விடுவார். பொறுத்திருந்து பாருங்கள். நிறைய ஸ்டாக் வைத்திருக்கிறாரா அல்லது இணயத்தில் இருந்து வரிகளை எடுத்துச் சுழல் விடுகிறாரா என்பது மட்டும் தெரியவில்லை!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Timely superb post... and Should we check this planet transit with our own horoscope lakna for accurate calculation?
I am waiting...
Yours sincerely,
Ravi/////
கோள்சாரப் பலன்களை சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து கணக்கிட வேண்டும். லக்கினத்தில் இருந்து அல்ல ராஜா!
////Blogger arul said...
ReplyDeletethanks for the post////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger kimu said...
ReplyDeleteThank u very much sir :)/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDelete//ஐயர் அவர்களே ’நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடலையும் சேர்த்து சுழல விடுங்கள். கோள்கள் சுழன்று சென்றுதான் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பெயர்ச்சியாவார்கள். அவர்கள் சுழற்சிக்கு ஈடு கொடுத்து பாட்டும் சேர்ந்து சுழலட்டுமே.///
:):):)))/////
கிரகங்களின் சுழற்சிக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு வேகமாகவா விஸ்வநாதன் பாடலைச் சுழல் விடுகிறார்?
////Blogger geetha lakshmi said...
ReplyDeleteவணக்கம் ஐயா,ராகு,கேது பெயர்ச்சி பற்றி எழுதி,மேலும் திசா பலன் நன்றாக இருக்கவேண்டும்,திசா புத்தி நன்றாக இருந்தால் எதை பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற தகவல் நன்று, இதில் நம் தமிழ் நாடும், நம் இந்தியாவும் ஆட்சியாளர்களின் கையில் சிக்கி என்ன நிலைமையில் இருக்கும் என்பதையும் எழுதுங்கள் நன்றி ஐயா.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!! நமக்கு அரசியல் வேண்டாம் சகோதரி! சற்றுத் தள்ளியே நிற்போம்!
///Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteDear Sir, Thanks for the lesson. When we trust God, he will protect us like a father protecting his son. My faith is increasing due to reading class room and thanks to blessings of elders like you and others here. Thanks.
Bhuvanesh/////
உங்களின் இறை விசுவாசம் நாளுக்கு நாள் வளர்வதைப் பற்றிக் குறிபிட்டுள்ளீர்கள். நான் எழுதும் நோக்கமும் அதுதான். நன்றி புவனேஷ்!
////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஐயா அவர்களின் ராகு - கேது பெயர்ச்சியின் விளக்கம் கண்டபின்னரே தெளிவடைந்தோம்..மிக்கநன்றி!////
தெளிவு பெற்றதைத் தெரிவித்த மேன்மைக்கு நன்றி நண்பரே!
/////Blogger Arul said...
ReplyDeleteநன்றி ஐயா..////.
நல்லது. நன்றி நண்பரே!
Sir, for praying only i am asking. What else i can do with ragu., kethu. If we know favour day for them, we can pray on that day. So that we will get some additional benefits. Like other planets. Tuesday for sevvai. Wednesday for budhan. I heard somewher that Saturday is good for ragu kethu also. That's why i asked. I said the reason. Now tell me sir, which day is favourite for ragu kethu.
ReplyDelete