மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 6


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 6

ஜோதிடத் தொடர் - பகுதி 6

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
6. மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மட்டும் (ரிஷப ராசி)

இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. பூசம்
7. உத்திரம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. விசாகம்
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. உத்திராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. பூரட்டாதி
19. உத்திரட்டாதி
20. ரேவதி
ஆகிய 20 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராடம், மற்றும் உத்திராடம் முதல் பாத நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

அதுபோல புனர்பூசம். ஆயில்யம் ஆகிய 2 நட்சத்திரங்களும் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) உடையவை ஆகும். சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

மகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

23 comments:

  1. வாசித்துப் பயன் பெற்றேன் ஐயா! நன்றி!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கங்கள்,
    விளக்கங்கள் அருமை. பதிவிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  4. நல்ல பதிவு.........நன்றி ஐயா.

    ReplyDelete
  5. Dear Sir,

    We see mostly moon star only for matching. What is the effect if we see, the lagna placement star. ?

    Thanking you.

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    வாசித்துப் பயன் பெற்றேன் ஐயா! நன்றி!////

    நானும் உங்கள் பின்னூட்டம் பார்த்து எழுதியதற்கான பயனைப் பெற்றேன். நன்றி!

    ReplyDelete
  7. ////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    விளக்கங்கள் அருமை. பதிவிற்கு நன்றிகள்////.

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger ananth said...
    உள்ளேன் ஐயா.////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger raja said...
    நல்ல பதிவு.........நன்றி ஐயா./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    We see mostly moon star only for matching. What is the effect if we see, the lagna placement star. ?
    Thanking you.////

    மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் சிறப்பாகத் தேரும். என்று எழுதியுள்ளேனே! சந்திரனின் நட்சத்திரங்கள் மூன்றுதானே சாமி! உங்கள் கேள்வியின் பின்பாதி புரியவில்லை!

    ReplyDelete
  12. ////Blogger Maaya kanna said...
    Yes Sir!.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete

  13. ////Blogger அய்யர் said...
    attendance marked.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  14. நண்பர் C Jeevanantham சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தைக் மட்டும் கணக்கில் எடுக்கிறோமே அது போல் லக்னம் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதை கணக்கில் எடுத்தால் என்ன பலன் என்று கேட்கிறார் ஐயா.

    ReplyDelete
  15. Dear Sir,

    Mr. Kirubanandham Arumugam has explained my question.

    When we see matching always we see the star where moon placement. Why we are not considering the lagna placement star ?

    ReplyDelete
  16. /////Blogger A.Kirupanandan Arumugam said...
    நண்பர் C Jeevanantham சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தைக் மட்டும் கணக்கில் எடுக்கிறோமே அது போல் லக்னம் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதை கணக்கில் எடுத்தால் என்ன பலன் என்று கேட்கிறார் ஐயா.////

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  17. //////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    Mr. Kirubanandham Arumugam has explained my question.
    When we see matching always we see the star where moon placement. Why we are not considering the lagna placement star ?//////

    சந்திரன் சுபக்கிரகம். அது அமர்ந்திருக்கும் ராசியை வைத்துத்தான் பார்க்கிறோமே தவிர, சந்திரனின் நட்சத்திரங்களான ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகியவ்றை வைத்துப் பார்ப்பதில்லை. லக்கினம் என்பதில், அதன் இடத்தில் இரண்டே கால நட்சத்திரங்கள் இருக்குமே சாமி! இரண்டே காலில் எதை எடுத்துக்கொள்வீர்கள்?. குழப்பம் வராதா? ஜோதிட விதிகளில் நம் சொந்தக் கருத்திற்கெல்லாம் இடமில்லை. முனிகள் எழுதி வைத்துவிட்டுப் போனதை அப்படியே கடைப் பிடிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. Dear sir,
    Did you publish your astrology books? When you going to publish that book?

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்,
    நல்ல பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com