Astrology - Popcorn Post ஆடும்வரை ஆட்டம்!!
Popcorn Post No.25
பாப்கார்ன் பதிவுகள் - எண்.25
"வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?"
என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:
"ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?"
செவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்
நம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள், மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப் படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்ற வர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா! அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப் படுத்துகொள்வானா?
மாட்டான்!. மாட்டான்! மாட்டான்!
அதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? என்று கவியரசர் கேட்டார்
------------------------------------------------------------------
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கிரக்கத்துடன் தேடி அலைபவர்கள் நிறையப் பேர்கள் உள்ளார்கள்.
அவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது!
வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலைய மாட்டான்!
கிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும். அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை
ஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்
------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகம் உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்
ஆமாம். ஹிட்லரின் ஜாதகம்
ஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன்
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.
ஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின!
ஜாதகப்படி என்ன காரணம்?
கஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது!
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு? துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.
ஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா?
அதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

காலை வணக்கம் ... உள்ளேன் ஐயா ...
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteதங்களின் இரண்டு பாடங்களும் மிக அருமை,
g r murugan bsnl
காலை வணக்கம், ஐயா.
ReplyDeleteஒரு சந்தேகம்.
நேற்று தானே, குரு வில்லனானாலும் (தீய இடத்து அதிபதி ஆனாலும்) தீமை பண்ண மாட்டார் என்று சொல்லி இருந்தீர்கள்?
Quote from yesterday's lesson, point 15:
/////நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்./////
லக்கினத்துக்கு எட்டாம் இட தீயவன் வேலையை பார்க்காத குரு துலா லக்கினத்துக்கு மட்டும் ஆறாம் இடத்து வில்லன்வேலையை பார்க்கலாமா?
இது என்ன அவருக்கு ஓரவஞ்சனை?
இதில் ஏதாவது சூட்சுமம் இருக்கும். அதை நீங்கள் கற்றுத்தருமாறு வேண்டுகிறேன்.
நன்றி!
+++++
மற்றபடி...... சொன்ன கருத்து சத்தியமான உண்மை. எதுவுமே கூட வராது. குறையே இல்லாத ஜாதகமாக இருப்பினும் கடைசி நாள் ஒன்று வருமே?
குந்தித்தின்றால் குன்றும் மாயுமே..... மாயும் போழ்து எது கூட வரும்? சிந்திக்கிறேன்........
+++++
பிரியங்களுடன்
புவனேஷ்
ஆறாம் அதிபதி ஆட்சி பெற்று அவருடன் வேற்று இனத்தினரை குறிக்கும் கேது, மனோகாரகன் நிலா, எல்லாரும் மூன்றாம் வீட்டில் இருப்பதினால் தான் வேற்று இன மக்களை அப்படி கொண்ள்ள யத்தனித்தாரோ?
ReplyDeleteஏழுக்கு இரண்டாம், ஏழாம் எட்டாம் வீட்டு அதிபதி ஒன்றாய் இருப்பதால் தான் ஒரு வேலை அவர் மனைவிக்கு அவரால் மரணம் நேர்ந்ததோ? சும்மா யோசனை!
ஆறாம் அதிபதி ஆட்சி பெற்று அவருடன் வேற்று இனத்தினரை குறிக்கும் கேது, மனோகாரகன் நிலா, எல்லாரும் மூன்றாம் வீட்டில் இருப்பதினால் தான் வேற்று இன மக்களை அப்படி படுகொலை பண்ண யத்தனித்தாரோ?
ReplyDeleteஏழுக்கு இரண்டாம், ஏழுக்கு ஏழாம், ஏழுக்கு எட்டாம் வீட்டு அதிபதி ஏழுக்கு லக்கினத்தில் ஒன்றாய் இருப்பதால் தான் அவர் மனைவிக்கு (Eva Braun) அவரால் மரணம் நேர்ந்ததோ? சும்மா யோசனை!
கடைசி வரை யாரும் வருவதில்லை என்பதற்கு காரணம்
ReplyDeleteஇவர்கள் போவதற்கு தயாராவதில்லை அல்லது விரும்புவதில்லை என்பதினால் தான்
கேசரியை சுவைக்க கொடுத்தமைக்கு நன்றிகள்.. வாழ்த்துக்கள்..
Guruvirkku vankkam
ReplyDeletepresent
nandri
vanakam sir padam nanru ..
ReplyDeleteமரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா, ஜோசியம் பற்றி எதுவும் அறியாத நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆகவே அதுகுறித்து நான் பேசவில்லை. ஆனால் தாங்கள் ஹிட்லர் பற்றி எழுதிய கருத்தைப் பற்றி மட்டும் ஒருசில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன். ஹிட்லரின் அச்சுறுத்தலுக்கும், அவனுடைய ரகசிய படையினரின் அட்டூழியங்களுக்கும் பயந்தே அவன் கீழிருந்த அதிகாரிகள் அவன் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஹிட்லரின் வெறி அவர்களையும் பற்றிக் கொண்டது; அப்படிப்பட்டவர்கள் நியூரம்பர்க் விசாரணையின் முடிவில் மின் நாற்காலியில் அமர்ந்து உயிர் நீத்தார்கள். தப்பி ஓடி அர்ஜெண்டைனாவில் ஒளிந்திருந்த குற்றவாளி ஈச்மன் என்பவன் கூட பல வருடங்களுக்குப் பிறகு கடத்தி வரப்பட்டு நியூரம்பர்க்கில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். ஆனால் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டபோது அவனுக்காக வருந்தி கண்ணீர் விட்டவர்களும் இருந்தார்கள். எந்தவொரு தலைவனும் அதிகாரம் கையில் இருக்கும் வரை அவனைச் சுற்றி 'ஆமாம்'சாமிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவன் வீழ்ந்தால் இவர்கள் 'அற்ற குளத்து பறவைகள்' போல் ஓடிவிடுவார்கள். ஒரு நிகழ்ச்சி சொல்வார்கள். உண்மையோ, பொய்யோ தெரியாது. ரஷ்ய கம்யூனிஸ்டுகள் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு குருஷேவ் தலைமையில் கூடிப் பேசினார்கள். குருஷேவ் ஸ்டாலின் சர்வாதிகாரத்தைக் கண்டித்துப் பேசினார். அப்போது ஒரு குரல் கேட்டது. நீங்கள் ஏன் அவரைத் தட்டிக் கேட்கவில்லை என்றது அந்தக் குரல். குரல் வந்த திசை நோக்கி குருஷேவ் கத்தினார். யார் இப்போது கேள்வி கேட்டது என்று. ஒரே அமைதி. கேள்வி கேட்ட மனிதனும் அமைதியாக இருந்தான். அப்பொது சொன்னார் குருஷேவ், இப்படித்தான் நான் அப்போது அமைதியாக இருந்தேன் என்று.
ReplyDeleteஹிட்லரின் ஜாதகத்தில் சனி ஒருவரைத் தவிர மற்ற ஏழு கிரஹங்களும் குருவால் பார்க்கப் பட்டோ அல்லது உடன் இருந்தோ பலன் கொடுத்துள்ளன.
ReplyDeleteஇது போல அமைப்பு வேறு யாருக்கும் உள்ளதா?
நல்ல பதிவினை அளித்த ஐயாவுக்கு நன்றிகள்.
ஒரு நல்லவரை மட்டுமல்ல ஒரு கெட்டவரையும் உலகம் மறக்காமல் இன்னும் நினைக்கிறது என்றால் அது ஹிட்லர் போன்றோரைத்தான்.
ReplyDeleteஹிட்லர் தன் 24 ஆம் வயதில் படை வீரனாக இருந்தபோது ஒரு போரில் அடிபட்டு எதிரியிடம் மாட்டி மரணத்தின் வாசலில் மன்னிக்கப்பட்டவன்.அந்த உயிர் பிச்சையில் பிழைத்த
அவன் அதன் பின் யாரிடமும் மண்டியிட்டதில்லை. இவரிடம் இருந்த சூடேற்றும் பேச்சு திறமை தான் மிகப்பெரிய ரானுவத்தை இவருக்கு விசுவாசமாக மாற்றியது.
ஐயா...குரு சந்திரனுக்கு கேந்திரங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் என்றும் குரு சந்திரனுடன் இருந்தால் அதற்கு குரு சந்திர யோகம் என்றும் யோகங்கள் பற்றிய பாடத்தில் சொல்லியிருந்தீர்கள். இப்போது கஜகேசரி என்று சொல்லுகிறீர்கள்...எது சரி?
ReplyDeleteவாத்தியார் ஜாயா வணக்க்கம் உங்களுடைய பாடங்கபைடிக்க்கும் போது [அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடம். நாளைக் காலை அனைவருக்கும் வரும்] என சொல்கின்றீர்கள் நானும் அதல் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ReplyDeleteஇதுவரை பலபேருடைய ஜாதகத்தை அலசியுள்ளீர்கள் இவருடைய ஜாதகத்தையும் அலசுங்களேன் பார்ப்போம்.
osama bin laden
March 10, 1957, 10:58 AM
Riyadh (Saudi Arabia)
Vanakam sir. Did you teach us abt kiraga vagram before??
ReplyDeleteIf pls tell me when.
Tq
////Blogger Sanjai said...
ReplyDeleteகாலை வணக்கம் ... உள்ளேன் ஐயா ...////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger murugan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
தங்களின் இரண்டு பாடங்களும் மிக அருமை,
g r murugan bsnl//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கம், ஐயா.
ஒரு சந்தேகம்.
நேற்று தானே, குரு வில்லனானாலும் (தீய இடத்து அதிபதி ஆனாலும்) தீமை பண்ண மாட்டார் என்று சொல்லி இருந்தீர்கள்?
Quote from yesterday's lesson, point 15:
/////நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்./////
லக்கினத்துக்கு எட்டாம் இட தீயவன் வேலையை பார்க்காத குரு துலா லக்கினத்துக்கு மட்டும் ஆறாம் இடத்து வில்லன்வேலையை பார்க்கலாமா?
இது என்ன அவருக்கு ஓரவஞ்சனை?
இதில் ஏதாவது சூட்சுமம் இருக்கும். அதை நீங்கள் கற்றுத்தருமாறு வேண்டுகிறேன்.
நன்றி!
+++++
மற்றபடி...... சொன்ன கருத்து சத்தியமான உண்மை. எதுவுமே கூட வராது. குறையே இல்லாத ஜாதகமாக இருப்பினும் கடைசி நாள் ஒன்று வருமே?
குந்தித்தின்றால் குன்றும் மாயுமே..... மாயும் போழ்து எது கூட வரும்? சிந்திக்கிறேன்........
+++++
பிரியங்களுடன்
புவனேஷ்//////
எட்டாம் இடத்தைவிட ஆறாம் இடம் அதிக மோசமானது. குரு தன் அதிபதி தர்மத்தையும் விடாமல் செய்வார்!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஆறாம் அதிபதி ஆட்சி பெற்று அவருடன் வேற்று இனத்தினரை குறிக்கும் கேது, மனோகாரகன் நிலா, எல்லாரும் மூன்றாம் வீட்டில் இருப்பதினால் தான் வேற்று இன மக்களை அப்படி கொல்ல யத்தனித்தாரோ?
ஏழுக்கு இரண்டாம், ஏழாம் எட்டாம் வீட்டு அதிபதி ஒன்றாய் இருப்பதால் தான் ஒரு வேலை அவர் மனைவிக்கு அவரால் மரணம் நேர்ந்ததோ? சும்மா யோசனை!/////
இன்னும் யோசியுங்கள். யோசிக்க யோசிக்க நிறையக் கிடைக்கும்!:-)))
/////Blogger அய்யர் said...
ReplyDeleteகடைசி வரை யாரும் வருவதில்லை என்பதற்கு காரணம்
இவர்கள் போவதற்கு தயாராவதில்லை அல்லது விரும்புவதில்லை என்பதினால் தான்
கேசரியை சுவைக்க கொடுத்தமைக்கு நன்றிகள்.. வாழ்த்துக்கள்..///////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteGuruvirkku vankkam
present
nandri/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir padam nanru ..////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger Thanjavooraan said...
ReplyDeleteமரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா, ஜோசியம் பற்றி எதுவும் அறியாத நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆகவே அதுகுறித்து நான் பேசவில்லை. ஆனால் தாங்கள் ஹிட்லர் பற்றி எழுதிய கருத்தைப் பற்றி மட்டும் ஒருசில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன். ஹிட்லரின் அச்சுறுத்தலுக்கும், அவனுடைய ரகசிய படையினரின் அட்டூழியங்களுக்கும் பயந்தே அவன் கீழிருந்த அதிகாரிகள் அவன் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஹிட்லரின் வெறி அவர்களையும் பற்றிக் கொண்டது; அப்படிப்பட்டவர்கள் நியூரம்பர்க் விசாரணையின் முடிவில் மின் நாற்காலியில் அமர்ந்து உயிர் நீத்தார்கள். தப்பி ஓடி அர்ஜெண்டைனாவில் ஒளிந்திருந்த குற்றவாளி ஈச்மன் என்பவன் கூட பல வருடங்களுக்குப் பிறகு கடத்தி வரப்பட்டு நியூரம்பர்க்கில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். ஆனால் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டபோது அவனுக்காக வருந்தி கண்ணீர் விட்டவர்களும் இருந்தார்கள். எந்தவொரு தலைவனும் அதிகாரம் கையில் இருக்கும் வரை அவனைச் சுற்றி 'ஆமாம்'சாமிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவன் வீழ்ந்தால் இவர்கள் 'அற்ற குளத்து பறவைகள்' போல் ஓடிவிடுவார்கள். ஒரு நிகழ்ச்சி சொல்வார்கள். உண்மையோ, பொய்யோ தெரியாது. ரஷ்ய கம்யூனிஸ்டுகள் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு குருஷேவ் தலைமையில் கூடிப் பேசினார்கள். குருஷேவ் ஸ்டாலின் சர்வாதிகாரத்தைக் கண்டித்துப் பேசினார். அப்போது ஒரு குரல் கேட்டது. நீங்கள் ஏன் அவரைத் தட்டிக் கேட்கவில்லை என்றது அந்தக் குரல். குரல் வந்த திசை நோக்கி குருஷேவ் கத்தினார். யார் இப்போது கேள்வி கேட்டது என்று. ஒரே அமைதி. கேள்வி கேட்ட மனிதனும் அமைதியாக இருந்தான். அப்பொது சொன்னார் குருஷேவ், இப்படித்தான் நான் அப்போது அமைதியாக இருந்தேன் என்று./////
குருஷேவ் பற்றிய இந்தச் செய்தி உண்மைதான். நானும் படித்திருக்கிறேன்! உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கோபாலன் சார்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஹிட்லரின் ஜாதகத்தில் சனி ஒருவரைத் தவிர மற்ற ஏழு கிரஹங்களும் குருவால் பார்க்கப் பட்டோ அல்லது உடன் இருந்தோ பலன் கொடுத்துள்ளன.
இது போல அமைப்பு வேறு யாருக்கும் உள்ளதா?
நல்ல பதிவினை அளித்த ஐயாவுக்கு நன்றிகள்.////
அதனால்தான் அவருக்கு (நல்லதோ அல்லது கெட்டதோ) அத்தனை புகழ் கிடைத்தது. நன்றி!
/////Blogger thanusu said...
ReplyDeleteஒரு நல்லவரை மட்டுமல்ல ஒரு கெட்டவரையும் உலகம் மறக்காமல் இன்னும் நினைக்கிறது என்றால் அது ஹிட்லர் போன்றோரைத்தான்.
ஹிட்லர் தன் 24 ஆம் வயதில் படை வீரனாக இருந்தபோது ஒரு போரில் அடிபட்டு எதிரியிடம் மாட்டி மரணத்தின் வாசலில் மன்னிக்கப்பட்டவன்.அந்த உயிர் பிச்சையில் பிழைத்த
அவன் அதன் பின் யாரிடமும் மண்டியிட்டதில்லை. இவரிடம் இருந்த சூடேற்றும் பேச்சு திறமை தான் மிகப்பெரிய ரானுவத்தை இவருக்கு விசுவாசமாக மாற்றியது.//////
உண்மைதான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி தனுசு!
////Blogger Arul said...
ReplyDeleteஐயா...குரு சந்திரனுக்கு கேந்திரங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் என்றும் குரு சந்திரனுடன் இருந்தால் அதற்கு குரு சந்திர யோகம் என்றும் யோகங்கள் பற்றிய பாடத்தில் சொல்லியிருந்தீர்கள். இப்போது கஜகேசரி என்று சொல்லுகிறீர்கள்...எது சரி?/////
சந்திரனை வைத்துத்தான் கணக்கு! சந்திரனுக்குக் கேந்திரத்தில் குரு இருந்தால் அது கஜகேசரி யோகம். சந்திரனுக்கு திரிகோணங்களில் குரு இருந்தால், அது குருச் சந்திர யோகம். இரண்டிற்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் வெவ்வேறு விதமான பலன்கள்!
//////Blogger warman raja said...
ReplyDeleteவாத்தியார் ஜாயா வணக்க்கம் உங்களுடைய பாடங்களைப் படிக்கும் போது [அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடம். நாளைக் காலை அனைவருக்கும் வரும்] என சொல்கின்றீர்கள் நானும் அதல் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
இதுவரை பலபேருடைய ஜாதகத்தை அலசியுள்ளீர்கள் இவருடைய ஜாதகத்தையும் அலசுங்களேன் பார்ப்போம்.
osama bin laden
March 10, 1957, 10:58 AM
Riyadh (Saudi Arabia)///////
எந்தக் காலத்தை நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? மின்னஞ்சல் பாடம் என்று எதுவும் கிடையாது. மேல் நிலைப் பாடங்களுக்கென்று தனி இணைய தளம் (Web site) உள்ளது. அது கட்டண வகுப்பு. கட்டணம் இல்லாத வித்தை பாழ் என்று அதற்குக் கட்டணம். அதில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்தவர்களில் 80% பேர்கள் கட்டணம் என்று தெரிந்தவுடன், காணாமல் போய்விட்டார்கள். நமக்கு (இந்தியாவின் தேசிய குணம்) இலவசம் என்றால் மட்டுமே ஒத்துவரும். ஆகவே அதைப் பற்றி விரிவாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதில் வரும் பாடங்கள் எல்லாம் பின் ஒரு நாள் புத்தகமாக வரும். அப்போது அனைவரும் படிக்கலாம்.
பின்லேடனின் ஜாதகம்தானே? அலசினால் போயிற்று! பொறுத்திருங்கள்!
////Blogger Sundarajan Nardarajan said...
ReplyDeleteVanakam sir. Did you teach us abt kiraga vagram before??
If pls tell me when.
Tq////
கிரக வக்கிரம், கிரக அஸ்தமனம், கிரக யுத்தம் ஆகியவற்ரைப் பற்றி முன்பே பாடங்களை நடத்தியுள்ளேன். பழைய படங்களை ஒன்று விடாமல் வரிசையாகப் படியுங்கள். எல்லாம் சிக்கும். அதாவது எல்லாம் வசப்படும். எல்லாம் கிடைக்கும்! எல்லாம் தெரியவரும்!
ஐயா விளக்கம் அருமை,
ReplyDeleteஹிட்லரை உலகம் ஒரு கொடூரமான மனிதனாகத் தான் பார்க்கிறது ஆனால் அவரது தலைசிறந்த நிர்வாகத்திறமையைப் பற்றிப் பார்ப்பதில்லை,எவ்வளவு ஒரு சிறந்த பன்முகத்திறமையாளர்,ஒரு சிப்பாயாக தன் வாழ்வைத்தொடங்கி படிப்படியாக ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக வருவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை.மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற அவரது எண்ணம் ஒரு மிகப்பெரிய அழிவில் முடிந்ததற்கு அவரே காரணம்,எது எப்படியாயினும் அதுவும் வாங்கி வந்த வரம் தானே.
லக்கினத்தைப் பார்த்த லக்கினாதிபதி(சுக்கிரன்) அளவுகடந்த தன்னம்பிக்கையைத் தந்தது(காதல் விஷயங்களிலும் படு கில்லாடி, துலாம் லக்கினமே எதிர்பால் மேல் ஈர்ப்பைத் தரக்கூடியது),செவ்வாய் அடுத்தவர்களை மிரட்டும் தைரியத்தைத் தந்தது,சூரியன் யாரையும் மதிக்காத தலைக்கணத்தையும்,ஈகோவையும் தந்தது,புதன் கவர்ந்திழுக்கும் பேச்சையும்,மிகச்சிறந்த மதிநுட்பத்தையும் தந்தது. (நாட்டை ஆள நினைத்த ஆசை,உலகை ஆளவேண்டும் என்ற பேராசையாக மாறிய போது பல விளைவுகளை உண்டாக்கியது).
தன் செயலே தன்னழிவிற்குக் காரணமாக லக்கினாதிபதியுடன் இணைந்த 12ம் அதிபதி புதனும்,பாதகாதிபதியான(சரம் 11ம் அதிபதி)சூரியனும் சேர்ந்ததுடன்,அந்தக் கூட்டணி லக்கினத்தையும் பார்த்ததால் அவர் தானே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார்.
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கம், ஐயா.
ஒரு சந்தேகம்.
நேற்று தானே, குரு வில்லனானாலும் (தீய இடத்து அதிபதி ஆனாலும்) தீமை பண்ண மாட்டார் என்று சொல்லி இருந்தீர்கள்?
Quote from yesterday's lesson, point 15:
/////நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்./////
லக்கினத்துக்கு எட்டாம் இட தீயவன் வேலையை பார்க்காத குரு துலா லக்கினத்துக்கு மட்டும் ஆறாம் இடத்து வில்லன்வேலையை பார்க்கலாமா?
இது என்ன அவருக்கு ஓரவஞ்சனை?
இதில் ஏதாவது சூட்சுமம் இருக்கும். அதை நீங்கள் கற்றுத்தருமாறு வேண்டுகிறேன்.
நன்றி!////
இங்கு நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு பார்க்கவேண்டும்,லக்கினத்தில் இருக்கும் போது மட்டும் தான்,மற்ற இடங்களில் இருக்கும் போது பொருள் மாறுபடும். ரிஷப,துலா லக்கினங்களுக்கு லக்கினத்தில் இருக்கும்போது பகை வீடாகி தலைவர்(குரு) அவுட்டாகி விடுவார். பகை வீடானாலும் பலமாக இருந்தால் காரகத்துவம் அல்லது ஆதிபத்தியம் ஏதாவது ஒன்றின் பலனைச் சிறப்பாக்குவார்.இல்லையெனில் அவர் லக்கினத்தில் இருந்தாலும் ஒன்றும் பயனில்லை(பேரு பெத்த பேரு நீரு தாகலேது).
ஹிட்லரின் ஜாதகத்தில் மூன்றில் இருந்து 7ம் வீட்டைப் பார்க்கிறார் அவர் தான் நம்பர் 1 வில்லன். 2 வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் ஆட்சி வீட்டை விட,மூலத்திரிகோண வீட்டில் இருக்கும் போது மிகவும் பலமாக இருக்கும். அதன்படி குரு தன் மூலத்திரிகோண வீடான தனுசில் இருந்து பார்ப்பதால் அடி செமையாக விழுந்துவிட்டது.
/////Blogger Rajaram said...
ReplyDeleteஐயா விளக்கம் அருமை,
ஹிட்லரை உலகம் ஒரு கொடூரமான மனிதனாகத் தான் பார்க்கிறது ஆனால் அவரது தலைசிறந்த நிர்வாகத்திறமையைப் பற்றிப் பார்ப்பதில்லை,எவ்வளவு ஒரு சிறந்த பன்முகத்திறமையாளர்,ஒரு சிப்பாயாக தன் வாழ்வைத்தொடங்கி படிப்படியாக ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக வருவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை.மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற அவரது எண்ணம் ஒரு மிகப்பெரிய அழிவில் முடிந்ததற்கு அவரே காரணம்,எது எப்படியாயினும் அதுவும் வாங்கி வந்த வரம் தானே.
லக்கினத்தைப் பார்த்த லக்கினாதிபதி(சுக்கிரன்) அளவுகடந்த தன்னம்பிக்கையைத் தந்தது(காதல் விஷயங்களிலும் படு கில்லாடி, துலாம் லக்கினமே எதிர்பால் மேல் ஈர்ப்பைத் தரக்கூடியது),செவ்வாய் அடுத்தவர்களை மிரட்டும் தைரியத்தைத் தந்தது,சூரியன் யாரையும் மதிக்காத தலைக்கணத்தையும்,ஈகோவையும் தந்தது,புதன் கவர்ந்திழுக்கும் பேச்சையும்,மிகச்சிறந்த மதிநுட்பத்தையும் தந்தது. (நாட்டை ஆள நினைத்த ஆசை,உலகை ஆளவேண்டும் என்ற பேராசையாக மாறிய போது பல விளைவுகளை உண்டாக்கியது).
தன் செயலே தன்னழிவிற்குக் காரணமாக லக்கினாதிபதியுடன் இணைந்த 12ம் அதிபதி புதனும்,பாதகாதிபதியான(சரம் 11ம் அதிபதி)சூரியனும் சேர்ந்ததுடன்,அந்தக் கூட்டணி லக்கினத்தையும் பார்த்ததால் அவர் தானே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார்./////
ஹிடலரின் ஜாதகத்தை மேலதிகமாக ஒரு அலசல் அலசிய மேன்மைக்கு நன்றி நண்பரே!
//////Blogger Rajaram said...
ReplyDelete/////Blogger Bhuvaneshwar said...
காலை வணக்கம், ஐயா.
ஒரு சந்தேகம்.
நேற்று தானே, குரு வில்லனானாலும் (தீய இடத்து அதிபதி ஆனாலும்) தீமை பண்ண மாட்டார் என்று சொல்லி இருந்தீர்கள்?
Quote from yesterday's lesson, point 15:
/////நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்./////
லக்கினத்துக்கு எட்டாம் இட தீயவன் வேலையை பார்க்காத குரு துலா லக்கினத்துக்கு மட்டும் ஆறாம் இடத்து வில்லன்வேலையை பார்க்கலாமா?
இது என்ன அவருக்கு ஓரவஞ்சனை?
இதில் ஏதாவது சூட்சுமம் இருக்கும். அதை நீங்கள் கற்றுத்தருமாறு வேண்டுகிறேன்.
நன்றி!////
இங்கு நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு பார்க்கவேண்டும்,லக்கினத்தில் இருக்கும் போது மட்டும் தான்,மற்ற இடங்களில் இருக்கும் போது பொருள் மாறுபடும். ரிஷப,துலா லக்கினங்களுக்கு லக்கினத்தில் இருக்கும்போது பகை வீடாகி தலைவர்(குரு) அவுட்டாகி விடுவார். பகை வீடானாலும் பலமாக இருந்தால் காரகத்துவம் அல்லது ஆதிபத்தியம் ஏதாவது ஒன்றின் பலனைச் சிறப்பாக்குவார்.இல்லையெனில் அவர் லக்கினத்தில் இருந்தாலும் ஒன்றும் பயனில்லை(பேரு பெத்த பேரு நீரு தாகலேது).
ஹிட்லரின் ஜாதகத்தில் மூன்றில் இருந்து 7ம் வீட்டைப் பார்க்கிறார் அவர் தான் நம்பர் 1 வில்லன். 2 வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் ஆட்சி வீட்டை விட,மூலத்திரிகோண வீட்டில் இருக்கும் போது மிகவும் பலமாக இருக்கும். அதன்படி குரு தன் மூலத்திரிகோண வீடான தனுசில் இருந்து பார்ப்பதால் அடி செமையாக விழுந்துவிட்டது.///////
உங்களுடைய மேலதிக விளக்கத்திற்கு நன்றி நண்பரே!
ஐயா உங்கள் பதிவை படிக்கும் போதெல்லாம் எதாவது எழுத தூண்டுகிறீர்கள் என் அடுத்த பதிவில் வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் பற்றி எழுத உள்ளேன்
ReplyDelete///Blogger நடராஜன் said...
ReplyDeleteஐயா உங்கள் பதிவை படிக்கும் போதெல்லாம் எதாவது எழுத தூண்டுகிறீர்கள் என் அடுத்த பதிவில் வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் பற்றி எழுத உள்ளேன்/////
ஆஹா..எழுதுங்கள். எழுதிய பிறகு அதன் சுட்டியைக் கொடுங்கள்!
///Blogger நடராஜன் said...
ReplyDeleteஐயா உங்கள் பதிவை படிக்கும் போதெல்லாம் எதாவது எழுத தூண்டுகிறீர்கள் என் அடுத்த பதிவில் வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் பற்றி எழுத உள்ளேன்/////
ஆஹா..எழுதுங்கள். எழுதிய பிறகு அதன் சுட்டியைக் கொடுங்கள்!
2ல் குரு(ஆட்சி) ராகுவுடன், 8ல் சந்திரன்(6ம் அதிபதி) கேதுவுடன் இது ஹிட்லரை ஒத்த கஜகேசரி யோகம் என்று சொல்ல முடியுமா?
ReplyDelete