பக்தி மலர்!
ஒவ்வொருவருக்கும் ஒரு காட்சி காலமெல்லாம் அவர்கள் மனதில் நிற்கும்
ஆனால் முருகபக்தர்களுக்குக் காலமெல்லாம் மனதில் நிற்கும் காட்சி என்றால் அது வேலோடும், மயிலோடும், பேரழகோடும் - முருகன் அமர்ந்திருக்கும் காட்சிதான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை!
அப்படிப்பட்ட காட்சி ஒன்றை மனதை நெகிழ்விக்கும் விதமாகக் கவிஞர் ஒருவர் பாடலாக்கிக் கொடுத்துள்ளார். பாடலைப் பதிவிட்டுள்ளேன். அனைவரையும் படித்துமகிழ வேண்டுகிறேன்!
-----------------------------------------------
வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன்
கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல்வந்து)
பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில் - கந்தன்
எனைக் கண்டானடி
சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!
(வேல்வந்து)
--------------------------------------------------
பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை: திரு.வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்.
அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------
Broad Band Server, Electricity & UPS - total failure என்ற மும்முனைத் தாக்குதலால், நேற்று பதிவு எதையும் வெளியிட முடியவில்லை. வருத்தம் மேலோங்கி யிருந்தது. அறிவிப்பு வெளியிடவும் முடியவில்லை. அடுத்த பாடம் 23.07.2012ம் தேதி, திங்களன்று வெளியாகும். சனி & ஞாயிறு உங்களுக்கு (வகுப்பறைக்கு) விடுமுறை!
வாழ்க வளமுடன்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅடுத்த பாடத்துக்காக ஆவலுடன் உள்ளேன். அனைவருக்கும் வார இறுதி நன்கு அமைய இறையருளை வேண்டுகிறேன்.
ReplyDeleteஎன்று கேட்டாலும் செவிக்கும் ,மனதுக்கும் இனிமையான பாடல் . நன்றி அய்யா . காலை வணக்கம் .
ReplyDeletegood morning sir naal padal.
ReplyDeleteநல்லதொரு முருகன் பாடலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார் !
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=AYKOWdffve0
ReplyDeleteமேற்படி 'யூ ட்யூப்' தொடர்பில் நமது வகுப்பறையின் மூத்த உறுப்பினர் சுப்புரெத்தினம் என்கிற சுப்புத்தாத்தா என்கிற உயர்திரு. சூர்ய நாராயணன் அவர்கள் ஐயாவின் பதிவு வெளியானவுடன் பாடலுக்கு சூலமங்கலம் சகோதரிகளின் குரலைத் தேடி, கிடைக்காததால் தானே பாடிப் பதிவு செய்துவிட்டார்.71 வயதில் அவருடைய முருக பக்தி வியக்க வைக்கிறது.அவர் எனக்கு 9 வயது மூத்தவர்.அவர் பணி புரிந்த நிறுவனத்தில் உயர்ந்த பதவிகளை வகித்தவர்.தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உயர்ந்த பாண்டித்யம் உள்ளவர்.13க்கும் மேற்பட்ட வலைப்பூகளை நடத்துகிறார்.அவர் கையெழுத்து
கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி இருக்கும்.
உளுந்தூர் பேட்டை சண்முகம் வெளியில் தெரியாத நல்ல கவிஞர்.சீர்காழியின் பாடல்கள் பலவற்றையும் எழுதியவர் அவரே.தமிழ் எவ்வளவு இனிமையானது
என்பதை உளுந்தூர்பேட்டையாரின் பாடல்கள் பறைசாற்றும்.
ஐயாவுக்கு நன்றி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteமுருகா முருகா
நன்றி ஜயா
very good post
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநமது வகுப்பறை தோழர் கண்ணன்
ReplyDeleteநடைபயணம் குறித்த அழைப்பு தந்தார்
விரும்புபவர்கள் தொகை அனுப்பலாமென வங்கி கணக்கு
விபரம் அனுப்பி இருந்தார்..
அன்பு நிறைந்தவராய் பேசிய அவருக்கு
அய்யர் சிறு தொகையினை அனுப்பி இருந்தோம்
திருமலை அவர்களுடைய உணர்வுகளின்
திருவேங்கடமுடையான் அன்பை அறிய முடிந்தது
வகுப்பறை தோழரும் தமது பங்களிப்பினை தந்திருக்கலாம்
வளமோடு நலம் காண இப்பவும் அவருக்கு அனுப்பலாம்..
நலமோடு வளம் பெற
இறைவன் திருமுன் வேண்டி நிற்கிறோம்
இந்த பாடல் வரிகளை உங்கள் அனுமதியுடன் சுழல விட்டபடி..
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete