மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.7.12

Astrology Popcorn Posts: படிப்பா, ட்ராப் அவுட்டா?

Astrology Popcorn Posts: படிப்பா, ட்ராப் அவுட்டா?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி ஒன்பது

முற்காலத்தில் முனிவர்கள் ஜாதகங்களுக்கான நெறிமுறைகளை வகுத்தபோது இருந்த கல்விக்கூடங்கள் வேறு இப்போது உள்ள கல்வி
அமைப்புக்கள் வேறு.

அன்று திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குருகுலமும் மட்டுமே இருந்தன. கல்வி இலவசமாக இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.  கல்வி வியாபாரமாகிவிட்டது.

கலை, அறிவியல், வணிகம், மருத்துவம்,பொறியியல், விஞ்ஞானம் என்று பல துறைக்கல்விகள். அதிலும் தலை சுற்றும் அளவிற்குப் பல பிரிவுகள் உள்ளன.

பொறியியலில் மட்டும் 36 பிரிவுகள் உள்ளன. நான் படித்த காலத்தில் பொறியியலில் 3 பிரிவுகள் மட்டுமே இருந்தன. (சிவில், எலக்ட்ரிகல்,
மெக்கானிகல்) மருத்துவத்தில் 60 வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன. மருந்தை விற்பதற்குக்கூட  இன்று படித்திருக்க வேண்டும்.

நிர்வாகவியலில் கூட பல பட்டப் படிப்புகள் உள்ளன. விவரித்தால் தலை சுற்றும். ஏன் அனுபவ்த்தில் செய்யும் விவசாயம் மற்றும் சமையலுக்குக்கூட இப்போது படிப்புக்கள் வந்துவிட்டன.

அதனால் ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் பையன் கல்வியில் தேறுவானா அல்லது தேற மாட்டானா என்பதை மட்டும் சொல்லலாம். என்ன
படிப்புப் படிப்பான் - எங்கே போய் உட்கார்ந்து பெஞ்சைத் தேய்ப்பான் என்பதை எல்லாம் கோடிட்டுக் காட்டலாமே தவிர துல்லியமாகச் சொல்ல முடியாது!
----------------------------------------------------
ஒரு ஜாதகனின் கல்வித் தகுதியை அல்லது கல்வியால் பெறவிருக்கும் மேன்மையை அலச முடியுமா?

நான்காம் வீடு கல்வி
ஐந்தாம் வீடு நுண்ணறிவு
இரண்டாம் வீடு பேச்சுத் திறமை

இம்மூன்று வீடுகளையும் அலச வேண்டும்.

அத்துடன் வித்யாகாரகன் புதன், நுண்ணறிவிற்கான காரகன் குரு, மருத்துவப் படிப்பிற்கான காரகன் செவ்வாய், தொழில்காரகன் சனி, கலைக்கான காரகன் சுக்கிரன் ஆகிய்யோரின் நிலைமையையும் அலச வேண்டும்!
-----------------------------------------------------
இந்த வீடுகளுக்கு உரிய அதிபதிகள், காரகர்கள், ஆகியோரின் வலிமை, பெறும் பார்வை, சேர்க்கை என்று எல்லாவற்றையும் அலச வேண்டும். அனுபவத்தில் நிறைய ஜாதகங்களைப் பார்த்துத் தெளிந்தவர்கள் மட்டுமே ‘டக்’ என்று சொல்லுவார்கள். பையன் டாக்டராக வருவான் அல்லது பொறியாளராக வருவான் என்று!

அதற்கு இன்னும் பல காம்பினேஷன்கள் உள்ளன. அது முழுச் சாப்பாடு. அதை இன்னொரு நாள் சமைத்து விரிவாக பறிமாறுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

47 comments:

  1. ///ஒரு ஜாதகனின் கல்வித் தகுதியை அல்லது கல்வியால் பெறவிருக்கும் மேன்மையை அலச முடியுமா?

    ஐயா, மங்கு மங்குன்னு படிப்பது வேறு, அதனால் பயனடைவது வேறு.
    இந்த இடத்தில்தான் நான் வசமாக மாட்டிக்கொண்டேன்.

    ///நான்காம் வீடு கல்வி
    ஐந்தாம் வீடு நுண்ணறிவு
    இரண்டாம் வீடு பேச்சுத் திறமை
    இம்மூன்று வீடுகளையும் அலச வேண்டும்.

    அத்துடன் வித்யாகாரகன் புதன், நுண்ணறிவிற்கான காரகன் குரு, மருத்துவப் படிப்பிற்கான காரகன் செவ்வாய், தொழில்காரகன் சனி, கலைக்கான காரகன் சுக்கிரன் ஆகிய்யோரின் நிலைமையையும் அலச வேண்டும்!///

    எனக்கு ...
    நான்காம் வீடு - மேஷம் - அதிபதி செய்வாய் அங்கேயே ஆட்சி
    ஐந்தாம் வீடு - ரிஷபம் - அதிபதி சுக்கிரன் ஏழில் ராகுவுடன்
    இரண்டாம் வீடு - கும்பம் - அதிபதி சனி லக்கினாபதி, லக்கினத்தில் மகரத்தில் கேதுவுடன்

    வித்யாகரன் புதன் - ஐந்தாம் இடத்தில்
    நுண்ணறிவிர்கானகாரகன் குரு - இரண்டாம் இடத்தில் சந்திரனுடன் சேர்ந்து குருச்சந்திரன் சேர்க்கை
    தொழில்காரகன் சனி லக்கினத்தில் அமர்ந்து பத்தாம் இடத்தை தன் பத்தாம் பார்வையில் வைத்திருந்தும், கலைக்கானகாரகன் சுக்கிரன் பத்தாம் இடத்தின் அதிபதி ஏழில் ராகுவுடன் இருப்பதும்; நவாம்சத்தில் குருவும், புதனும், செவ்வாயும், சுக்கிரன் என எல்லோரும் ஆட்சி.
    அஷ்டவர்க்கப் பரல்களும் மோசமில்லை. லக்கினம் (30), ஏழாம் இடம் (28), பத்தாம் இடம்(30), இரண்டாம் இடம்(27), நான்காம் இடம் (32), ஐந்தாம் இடம் (26)

    ஊஹூம். பிரயோஜனமில்ல. யாரோட பப்பும் சுத்தமா வேகல. என்னைப்போல படிப்பில் அதிகமாக முதலீடு செய்துவிட்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. என்னவோ கோளாறு, எங்கயோ கோளாறு.

    "இதுதான் உலகமா இதுதான் வாழ்க்கையா? இதுவரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?" பாடலையும், "பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்" பாடலையும் மாற்றி மாற்றி பாடி பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். சென்ற ஆண்டுவரை ஜாதகம், ஜோதிடம் இதையெல்லாம் பார்க்காததால் "சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிகொண்டார்" என்பது என் வரையில் உண்மையில்லை, "முயற்சி திருவினை ஆக்கும்" என்பதும் என்வரையில் பொய்த்துவிட்டது. ஆடி, ஓடி ஓய்ந்து இதற்கு மேல் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன என்ற எண்ணம் வந்தாகிவிட்டது. பதிவிற்கு நன்றிஐயா.

    ReplyDelete
  2. /////Blogger தேமொழி said...
    ///ஒரு ஜாதகனின் கல்வித் தகுதியை அல்லது கல்வியால் பெறவிருக்கும் மேன்மையை அலச முடியுமா?
    ஐயா, மங்கு மங்குன்னு படிப்பது வேறு, அதனால் பயனடைவது வேறு.
    இந்த இடத்தில்தான் நான் வசமாக மாட்டிக்கொண்டேன். /////

    படித்தும் பயனடையலாம், படிக்காமலும் பயனடையலாம். பயனடைவதற்கான இலாக்கள் வேறு.
    வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து, பெரும்பொருள் ஈட்டுவதற்கான இலாக்காக்கள். ஒன்று, இரண்டு மற்றும் பதினொன்றாம் வீடுகள். அவற்றுடன் முக்கியமானவர் லக்கினாதிபதி. அவைகளையும் பாருங்கள் சகோதரியாரே!

    ReplyDelete
  3. அடடே, நம்ம டாபிக்!
    நல்லாருக்கே, வாத்தியார் ஐயா!
    இந்த மேட்டர்ல நீங்க முழு சாப்பாடு போடறதுக்கு நான் காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  4. வாத்தியார் அவர்களுக்கு குரு பூர்ணிமா தினத்தன்று என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நல்ல, அருமையான பதிவினைத் தந்தமைக்கு நன்றி. படிப்புக்கும் தொழிலும் சம்பந்தமில்லாதது ஏன் என்று புரிந்தது. பதிவின் விரிவாக்கத்தைப் (முழுச்சாப்பாடு) படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. சுயஜாதகதை பரிசீலிக்க கூடாது என்பதால் விரிவாக எதையும் எழுத விரும்பவில்லை.
    ஆனால் நான் வேதியியல் படிப்பதும் அதிலும் கனிம வேதியியல் படிப்பதும், ஆசிரியர் பணியில் தான் இருப்பேன் என்பதும் கவிதை எழுதுவதும் அடியேன் ஜாதகத்தில் உள்ளன.

    BUT, and that is a BIG BUT:

    என்ன படித்து என்ன பயன்?

    -----------

    நல்ல பதிவு தான்.

    இருந்தாலும் ஒரு ஆதங்கம்.

    படிப்பிற்கும் (கல்வித்தகுதிக்கும்) வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. மதிப்பெண்களோ பட்டங்களோ வாழ்க்கை தகுதியை நிர்ணயிப்பதே இல்லை. அது மக்களோடு தொடர்பு கொண்டு வினையாற்றும் திறமையை கொண்டே நிறுவப்படுகிறது.

    என்னோடு படித்த சக நண்பர்களில், ஒரே ஒரு பொறியியல் பட்டம் மட்டுமே பெற்றவர்கள் இன்று அசோக் லைலாண்டில் மேலாளராக வாழ்க்கையில் செட்டிலாகி இருக்கிறார்கள். அதே சமயம் என்னை போன்ற சில கிறுக்குகள் ஆராய்ச்சி என எடுத்து எதையோ நோண்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறோம்.

    மேலுக்கு சொல்லலாம், நாங்கள் சமுதாயத்துக்கு பயன் தரும் வகையில் பணி ஆற்றுகிறோம் என்று.

    சமயத்தில் தோன்றுகிறது, திறமைகள் இருந்தும் என்ன பலன் என்று.

    நானும் பொறியியலோ மருத்துவமோ எடுத்து படித்திருந்தால் இந்நேரம் கை நிறைய சம்பாதித்து மணம் முடித்து செட்டில் ஆகி இருப்பேன். பிடித்த படிப்பை தான் படிப்பேன் என்று ஆராய்ச்சியிலும் கவிதையிலும் போனேன். படித்த இடத்தில் எல்லாம் topper . ஆனால் அது மட்டும் தான் மிச்சம் - ஆத்ம திருப்தி, job satisfaction. வேறு எந்த ஒரு திருப்தியும் கண்டேனில்லை.

    படிப்பை வைத்து உருப்படுவேனா இல்லையா என காலம் சொல்லட்டும்.

    மாங்கு மாங்கென்று ஆராய்ச்சி பண்ணுகிறேன். அதை பற்றி கேட்ககூட சுற்றத்தில் ஆளில்லை, ஆர்வம் இல்லை. விஞ்ஞானிகள் கேட்பார்கள் சரி. அவார்டு எல்லாம் கூட தான் வாங்கினேன். ஆனால் வீட்டில்? டொக்கு தான்.

    கவிதையாய் எழுதினேன் and still do so. படிக்க ஆளில்லை. parents and family இதெல்லாம் வெட்டி வேலை, Shut up and பொழப்பை பாருடா, என்கிறார்கள்.

    கடைவிரித்தேன் கொள்வாரில்லை.

    -----

    மேற்கண்ட முதல் பின்னூட்டத்துக்கு என்னுடைய தாழ்மையான கருத்து:

    முன் சொன்னது போல படிப்பு வேறு, படித்ததை வைத்து பிழைப்பது வேறு.

    லக்கினாதிபதியையும், தொழில், லாப, விரைய வீட்டின் நிலவரத்தையும் பார்த்தால் தான் படித்தாலும் பயபுள்ள உருப்படுமா என தெரியும்!

    ஆயுள் பாவமும் வேண்டும் தான். உழைக்கிற ஆரம்ப காலத்தில் ஜாதகன் இருந்து உழைப்பின் பயனாக உயர்கிற காலத்தில் டிக்கட் கிடைத்து விட்டால்? இருந்து புகழோடு வாழ நல்ல ஆயுளும் வேண்டும் அல்லவா?

    என்ன படித்து என்ன பயன், வருபவள் கவிதை சொன்னால்/ஆராய்ச்சி பற்றி சொன்னால் "கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? ப்ளேடு போடாதீங்க" என்று சொன்னால்? அல்லது மனைவியோடு படித்ததை பகிர்ந்து கொள்ள இயலாமல் தூர தேசத்தில் இருந்தால்?

    கற்றதின் biggest பயனே சுற்றத்தாரோடு அறிவை படித்ததை ரசித்ததை பகிர்ந்து மகிழ்வது தானே.

    For that ஏழாம் பாவமும் இரண்டாம் பாவமும் முக்கியமில்லையா?

    என்ன படித்து என்ன பலன் கூட இருப்பவர்கள் துரோகம் பண்ணி தொழிலை கெடுத்தாள்? எட்டாம் இடமும் பத்தாம் இடமும் சம்பந்தம் இருக்கிறதா என பார்க்க வேண்டும் இல்லையா?

    யோகங்களையும் பார்க்க வேண்டும். தலைமை பதவிக்கு சூரியனின் செவ்வாயின் நிலை முக்கியம்.

    இது intricately woven fabric!

    நான் சொன்னதில் தவறுகள் இருக்குமாயின் வாத்தியார் ஐயா திருத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  6. //படித்தும் பயனடையலாம், படிக்காமலும் பயனடையலாம். பயனடைவதற்கான இலாக்கள் வேறு.
    வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து, பெரும்பொருள் ஈட்டுவதற்கான இலாக்காக்கள். ஒன்று, இரண்டு மற்றும் பதினொன்றாம் வீடுகள். அவற்றுடன் முக்கியமானவர் லக்கினாதிபதி. அவைகளையும் பாருங்கள் சகோதரியாரே!//

    Wow, awesome Sir! I did not notice your reply whilst I was typing away to glory! hehehe..... [:D]

    You've said it!

    ReplyDelete
  7. /// வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து, பெரும்பொருள் ஈட்டுவதற்கான இலாக்காக்கள். ஒன்று, இரண்டு மற்றும் பதினொன்றாம் வீடுகள். அவற்றுடன் முக்கியமானவர் லக்கினாதிபதி. அவைகளையும் பாருங்கள் சகோதரியாரே!///

    பதினோராம் வீட்டின் அதிபதி செவ்வாய் (மேஷத்தில் ஆட்சி), பதினோராம் வீட்டின் பரல்களும் 32, செவ்வாயின் சுய பரல்கள் 4, அம்சத்திலும் செவ்வாய் ஆட்சி.
    தொழில் காரகன் சனி, லக்கினாதிபதி, லக்கினத்தில் ஆட்சி, இரண்டாம் வீட்டின் அதிபதியும் கூட, சுய பரல்கள் ஐந்து.
    சுய தொழில் முயற்சியும் ஒத்து வரவில்லை, ஐயா எனக்கு உண்மையிலேயே காரணம் புரியவில்லை, It really beats me
    இது போல நான் குழம்பியதில்லை. நானும் தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் பாடங்களை, என்றாவது ஒரு நாள் புதிர் விடுபடக்கூடும். நன்றி ஐயா.

    ReplyDelete
  8. நாலாம் வீட்டு அதிபதி சுக்ரன் 3ல் அமர்ந்து நீசனாகி கேதுவுடனும் சம்பந்தம்.
    12க்கும் 3க்கும் உடைய புதன் 2ல் அமர்ந்து சனி சூர்யன் சேர்க்கை. இதையெல்லாம் பார்த்துவிட்டு மேட்டூரில் இருந்து வந்த ஒரு சோதிடர் 'பையனுக்குப் படிப்பு வராது' என்று ஆசீர்வாதம் செய்துவிட்டார். படிப்புக்குத் தடைகள் வந்தது உண்மைதான்.ஆனால் படிப்பே வராமல் இருக்கவில்லை.

    சோதிடம் சொன்னவருக்கு ஒரு மகன் 'ஸ்பாஸ்டிக்' பாவம். பள்ளிக்கூடமே போகவில்லை.

    பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  9. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    மிகவும் இன்று நல்ல பாடம்
    நன்றி

    ReplyDelete
  10. அன்றைய நாட்களில்
    பள்ளிகளை நடத்தி நிர்வகிப்பவர் படித்த சான்றோராக இருந்தார்கள்..

    இன்று

    வேறுபட்ட இவர்கள் அல்லவா
    பள்ளி கல்ஊரிகளை அமைக்கின்றனர்

    அப்போ அது
    அப்படித்தானே இருக்கும்..

    வாழ்க்கையே படிப்பாய் போச்சு..
    உலகம் என்னும் பள்ளியிலே

    நாம் எல்லோரும் மாணவர்கள் இல்லையா?

    4,5 ஓகே..
    2ல் தான் கேது..

    ReplyDelete
  11. நான் படித்த படிப்பிற்கும் இப்போது பார்க்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. படிப்பிலும் நான் விரும்பியதைப் படிக்க இயலவில்லை. நான்காம் அதி நீசம் இருப்பினும் ஏழில் கேந்திரத்தில், மேலும் காரகன் புதன் ஆட்சி (ஆறில்) என்பதால் கல்லூரிப்படிப்பு வரை தடை எதுவும் ஏற்படவில்லை. அதன்பின் மேற்படிப்பு படிக்க நினைத்தபோது ஏற்பட்டது. திருமணத்திற்குப் பின் சேர்ந்து படித்து ஒரு வருடம் கிளியர் செய்தபின் தொடர்ந்து ஆர்வம் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

    ReplyDelete
  12. ஐயா!!!

    நீங்கள் முன்ன மாதிரி இல்லை. விரிவான பாடம் பின்னால் வரும் என்றுதான் சொல்கிறீர்கள்...ஆனால் வருவதில்லை...சரி உங்கள் புத்தகமாவது வரும், அதில் படிக்கலாம் என்று கிட்டத்தட்ட இரண்டரை வருடமாக காத்திருக்கிறேன். என்னாயிற்று? ஏன் இவ்வளவு தாமதமாகிறது? வருத்ததுடன் அருள்நிதி.

    ReplyDelete
  13. பிள்ளைகளுக்கு என்ன செய்யலாம் எனும் என்னத்தில் இருக்கும் பெற்றோர்களுக்காக எழுதப்பட்ட பாடமோ?நான் நேரம் இருக்கும் நேரத்தில் என் பிள்ளைகளுக்கு எது கை கொடுக்கும் எனும் யோசனையில் அவர்களின் ஜாதக கட்டத்தைப் பார்ப்பேன்.அரை குறையாய் எதையோ பார்ப்பேன்.ஒன்றும் பிடிபடாது.

    ///நான்காம் வீடு கல்வி
    ஐந்தாம் வீடு நுண்ணறிவு
    இரண்டாம் வீடு பேச்சுத் திறமை////
    அத்துடன் வித்யாகாரகன் புதன், நுண்ணறிவிற்கான காரகன் குரு,தொழில்காரகன் சனி,/////

    இங்கே எனக்கு சில விஷயங்கள் என் ஜாதகத்தில் பிடிபடுகிறது.

    நான்காம் வீடு கல்வி -- 4.5 உடைய சனி 4 இல் இருக்கிறார்,(இடையிடையில் படிப்பில் கொஞ்சம் தடை வந்தது)

    ஐந்தாம் வீடு நுன்னறிவு//நுண்ண்றிவுக்கான காரகன் குரு -- ஐந்தில் குரு (எனக்கு நுண்ண்றிவு இருக்குமோ)

    ///அத்துடன் வித்யாகாரகன் புதன்/// அவர் ஒன்பதிலேயே ஆட்சியில் இருக்கிறார்.

    ///தொழில்காரகன் சனி,///// இவர் மேலேயே சொல்லிவிட்டேன்-4 இல் ஆட்சி

    ///இரண்டாம் வீடு பேச்சுத் திறமை//// இரண்டுக்குடைய செய்வாய் 8 இல்,தன் வீட்டையே பார்க்கிரார்(சபையில் பேசும் போது கொஞ்சம் சூடாகி விடுகிறேன்)

    தொழிலாளர் கூட்டத்திற்கு தலமையாகவும், அவர்களுக்கு வேலையில் தேவைப்படும் நுண்ணிய ஆலோசனை சொல்லும் அதிகாரியாகவும், அதனால் தினசரி தொழிலாளர் மத்தியில் பேசி பேசியே பொழுதை கழிக்கிறேன்.

    நான் சொன்னது சரியாக இருக்கிறதா அய்யா.

    ReplyDelete
  14. //////Blogger Bhuvaneshwar said...
    அடடே, நம்ம டாபிக்!
    நல்லாருக்கே, வாத்தியார் ஐயா!
    இந்த மேட்டர்ல நீங்க முழு சாப்பாடு போடறதுக்கு நான் காத்து இருக்கிறேன்./////

    முதலில் போட்டிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது. வேறு மெனுவுடன் மீண்டும் ஒரு முறை முழுச்சாப்பாடு உணடு!

    ReplyDelete
  15. //////Blogger Parvathy Ramachandran said...
    வாத்தியார் அவர்களுக்கு குரு பூர்ணிமா தினத்தன்று என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நல்ல,
    அருமையான பதிவினைத் தந்தமைக்கு நன்றி. படிப்புக்கும் தொழிலும் சம்பந்தமில்லாதது ஏன் என்று புரிந்தது. பதிவின் விரிவாக்கத்தைப்
    (முழுச்சாப்பாடு) படிக்கக் காத்திருக்கிறேன்./////

    இன்று ஆனி மூலம். அனுமனின் பிறந்ததினம் அல்லவா? தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரி!

    ReplyDelete
  16. Blogger Bhuvaneshwar said...
    சுயஜாதகதை பரிசீலிக்க கூடாது என்பதால் விரிவாக எதையும் எழுத விரும்பவில்லை.
    ஆனால் நான் வேதியியல் படிப்பதும் அதிலும் கனிம வேதியியல் படிப்பதும், ஆசிரியர் பணியில் தான் இருப்பேன் என்பதும் கவிதை எழுதுவதும் அடியேன் ஜாதகத்தில் உள்ளன.
    BUT, and that is a BIG BUT:
    என்ன படித்து என்ன பயன்?
    -----------
    நல்ல பதிவு தான்.
    இருந்தாலும் ஒரு ஆதங்கம்.
    படிப்பிற்கும் (கல்வித்தகுதிக்கும்) வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. மதிப்பெண்களோ பட்டங்களோ வாழ்க்கை தகுதியை
    நிர்ணயிப்பதே இல்லை. அது மக்களோடு தொடர்பு கொண்டு வினையாற்றும் திறமையை கொண்டே நிறுவப்படுகிறது.
    என்னோடு படித்த சக நண்பர்களில், ஒரே ஒரு பொறியியல் பட்டம் மட்டுமே பெற்றவர்கள் இன்று அசோக் லைலாண்டில் மேலாளராக
    வாழ்க்கையில் செட்டிலாகி இருக்கிறார்கள். அதே சமயம் என்னை போன்ற சில கிறுக்குகள் ஆராய்ச்சி என எடுத்து எதையோ
    நோண்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறோம்.
    மேலுக்கு சொல்லலாம், நாங்கள் சமுதாயத்துக்கு பயன் தரும் வகையில் பணி ஆற்றுகிறோம் என்று.
    சமயத்தில் தோன்றுகிறது, திறமைகள் இருந்தும் என்ன பலன் என்று.
    நானும் பொறியியலோ மருத்துவமோ எடுத்து படித்திருந்தால் இந்நேரம் கை நிறைய சம்பாதித்து மணம் முடித்து செட்டில் ஆகி

    இருப்பேன். பிடித்த படிப்பை தான் படிப்பேன் என்று ஆராய்ச்சியிலும் கவிதையிலும் போனேன். படித்த இடத்தில் எல்லாம் topper . ஆனால்
    அது மட்டும் தான் மிச்சம் - ஆத்ம திருப்தி, job satisfaction. வேறு எந்த ஒரு திருப்தியும் கண்டேனில்லை.
    படிப்பை வைத்து உருப்படுவேனா இல்லையா என காலம் சொல்லட்டும்.
    மாங்கு மாங்கென்று ஆராய்ச்சி பண்ணுகிறேன். அதை பற்றி கேட்ககூட சுற்றத்தில் ஆளில்லை, ஆர்வம் இல்லை. விஞ்ஞானிகள்
    கேட்பார்கள் சரி. அவார்டு எல்லாம் கூட தான் வாங்கினேன். ஆனால் வீட்டில்? டொக்கு தான்.
    கவிதையாய் எழுதினேன் and still do so. படிக்க ஆளில்லை. parents and family இதெல்லாம் வெட்டி வேலை, Shut up and பொழப்பை பாருடா, என்கிறார்கள்.
    கடைவிரித்தேன் கொள்வாரில்லை.
    -----
    மேற்கண்ட முதல் பின்னூட்டத்துக்கு என்னுடைய தாழ்மையான கருத்து:
    முன் சொன்னது போல படிப்பு வேறு, படித்ததை வைத்து பிழைப்பது வேறு.
    லக்கினாதிபதியையும், தொழில், லாப, விரைய வீட்டின் நிலவரத்தையும் பார்த்தால் தான் படித்தாலும் பயபுள்ள உருப்படுமா என தெரியும்!
    ஆயுள் பாவமும் வேண்டும் தான். உழைக்கிற ஆரம்ப காலத்தில் ஜாதகன் இருந்து உழைப்பின் பயனாக உயர்கிற காலத்தில் டிக்கட்
    கிடைத்து விட்டால்? இருந்து புகழோடு வாழ நல்ல ஆயுளும் வேண்டும் அல்லவா?
    என்ன படித்து என்ன பயன், வருபவள் கவிதை சொன்னால்/ஆராய்ச்சி பற்றி சொன்னால் "கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? ப்ளேடு
    போடாதீங்க" என்று சொன்னால்? அல்லது மனைவியோடு படித்ததை பகிர்ந்து கொள்ள இயலாமல் தூர தேசத்தில் இருந்தால்?
    கற்றதின் biggest பயனே சுற்றத்தாரோடு அறிவை படித்ததை ரசித்ததை பகிர்ந்து மகிழ்வது தானே.
    For that ஏழாம் பாவமும் இரண்டாம் பாவமும் முக்கியமில்லையா?
    என்ன படித்து என்ன பலன் கூட இருப்பவர்கள் துரோகம் பண்ணி தொழிலை கெடுத்தால்? எட்டாம் இடமும் பத்தாம் இடமும் சம்பந்தம்
    இருக்கிறதா என பார்க்க வேண்டும் இல்லையா?
    யோகங்களையும் பார்க்க வேண்டும். தலைமை பதவிக்கு சூரியனின் செவ்வாயின் நிலை முக்கியம்.
    இது intricately woven fabric!//////

    ஆமாம். பொருள் சார்ந்த உலகத்தில், பொருளைத் தவிர மற்றதற்கெல்லாம் மதிப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது! வருந்த வேண்டிய விஷயம்!

    ReplyDelete
  17. /////Blogger Bhuvaneshwar said...
    //படித்தும் பயனடையலாம், படிக்காமலும் பயனடையலாம். பயனடைவதற்கான இலாக்கள் வேறு.
    வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து, பெரும்பொருள் ஈட்டுவதற்கான இலாக்காக்கள். ஒன்று, இரண்டு மற்றும் பதினொன்றாம் வீடுகள். அவற்றுடன் முக்கியமானவர் லக்கினாதிபதி. அவைகளையும் பாருங்கள் சகோதரியாரே!//
    Wow, awesome Sir! I did not notice your reply whilst I was typing away to glory! hehehe..... [:D] You've said it!//////

    பார்த்திருந்தால், அத்தனை பெரிய பின்னூட்டம் போட்டிருக்க மாட்டீர்கள் - இல்லையா?

    ReplyDelete
  18. //////Blogger தேமொழி said...
    /// வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து, பெரும்பொருள் ஈட்டுவதற்கான இலாக்காக்கள். ஒன்று, இரண்டு மற்றும் பதினொன்றாம் வீடுகள். அவற்றுடன் முக்கியமானவர் லக்கினாதிபதி. அவைகளையும் பாருங்கள் சகோதரியாரே!///
    பதினோராம் வீட்டின் அதிபதி செவ்வாய் (மேஷத்தில் ஆட்சி), பதினோராம் வீட்டின் பரல்களும் 32, செவ்வாயின் சுய பரல்கள் 4,
    அம்சத்திலும் செவ்வாய் ஆட்சி.
    தொழில் காரகன் சனி, லக்கினாதிபதி, லக்கினத்தில் ஆட்சி, இரண்டாம் வீட்டின் அதிபதியும் கூட, சுய பரல்கள் ஐந்து.
    சுய தொழில் முயற்சியும் ஒத்து வரவில்லை, ஐயா எனக்கு உண்மையிலேயே காரணம் புரியவில்லை, It really beats me
    இது போல நான் குழம்பியதில்லை. நானும் தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் பாடங்களை, என்றாவது ஒரு நாள் புதிர் விடுபடக்கூடும். நன்றி ஐயா./////

    எங்கோ ஒரு knot உள்ளது. அது ஒரு நாள் விடுபடும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger kmr.krishnan said...
    நாலாம் வீட்டு அதிபதி சுக்ரன் 3ல் அமர்ந்து நீசனாகி கேதுவுடனும் சம்பந்தம்.
    12க்கும் 3க்கும் உடைய புதன் 2ல் அமர்ந்து சனி சூர்யன் சேர்க்கை. இதையெல்லாம் பார்த்துவிட்டு மேட்டூரில் இருந்து வந்த ஒரு
    சோதிடர் 'பையனுக்குப் படிப்பு வராது' என்று ஆசீர்வாதம் செய்துவிட்டார். படிப்புக்குத் தடைகள் வந்தது உண்மைதான்.ஆனால் படிப்பே வராமல் இருக்கவில்லை.
    சோதிடம் சொன்னவருக்கு ஒரு மகன் 'ஸ்பாஸ்டிக்' பாவம். பள்ளிக்கூடமே போகவில்லை.
    பதிவுக்கு நன்றி ஐயா!/////

    அந்தப் படிப்பிற்கே இந்தக் கலக்கு கலக்குகிறீர்கள் சுவாமி. அதனால் (எங்களைப் பொறுத்தவரை) நீங்கள் படித்த படிப்பே போதும்!
    பொது சேவை செய்ததைப் பற்றிப் பலமுறைகூறியுள்ளீர்கள். உயர் படிப்பெல்லாம் படித்திருந்தால், உயர் வேலை கிடைத்திருந்தால், சேவைகளுக்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. காலதேவன் எல்லாவற்றிற்குமே ஒரு கணக்கு வைத்திருக்கிறான். அதன்படிதான் நடக்கும்!

    ReplyDelete
  20. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    மிகவும் இன்று நல்ல பாடம்
    நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  21. /////Blogger arul said...
    nice post on guru purnima/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger அய்யர் said...
    அன்றைய நாட்களில்
    பள்ளிகளை நடத்தி நிர்வகிப்பவர் படித்த சான்றோராக இருந்தார்கள்..
    இன்று
    வேறுபட்ட இவர்கள் அல்லவா
    பள்ளி கல்ஊரிகளை அமைக்கின்றனர்
    அப்போ அது
    அப்படித்தானே இருக்கும்..
    வாழ்க்கையே படிப்பாய் போச்சு.. உலகம் என்னும் பள்ளியிலே
    நாம் எல்லோரும் மாணவர்கள் இல்லையா?/////

    ஆமாம். உண்மைதான் விசுவநாதன். நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  23. ////Blogger Uma said...
    நான் படித்த படிப்பிற்கும் இப்போது பார்க்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. படிப்பிலும் நான் விரும்பியதைப் படிக்க
    இயலவில்லை. நான்காம் அதி நீசம் இருப்பினும் ஏழில் கேந்திரத்தில், மேலும் காரகன் புதன் ஆட்சி (ஆறில்) என்பதால் கல்லூரிப்படிப்பு
    வரை தடை எதுவும் ஏற்படவில்லை. அதன்பின் மேற்படிப்பு படிக்க நினைத்தபோது ஏற்பட்டது. திருமணத்திற்குப் பின் சேர்ந்து படித்து ஒரு வருடம் கிளியர் செய்தபின் தொடர்ந்து ஆர்வம் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டேன்.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. ////Blogger Arul said...
    ஐயா!!!
    நீங்கள் முன்ன மாதிரி இல்லை. விரிவான பாடம் பின்னால் வரும் என்றுதான் சொல்கிறீர்கள்...ஆனால் வருவதில்லை...சரி உங்கள்
    புத்தகமாவது வரும், அதில் படிக்கலாம் என்று கிட்டத்தட்ட இரண்டரை வருடமாக காத்திருக்கிறேன். என்னாயிற்று? ஏன் இவ்வளவு தாமதமாகிறது? வருத்ததுடன் அருள்நிதி.//////

    எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. கூடிய சீக்கிரம் வந்துவிடும் பொறுத்திருங்கள்!
    எனது புத்தகங்கள் மொத்தம் 3,000 பக்கங்கள் ஒழுங்கு படுத்தும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அத்தியாயங்களையும், பாகங்களையும் பிரிக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு பிரித்தால்தான் படிப்பதற்கு வசதியாக இருக்கும். மேலும் குறிச்சொற்களும்
    சேர்க்கப்படவுள்ளது.பிறகு அச்சாகி வெளிவர வேண்டும். ஐந்து பாகங்கள். முதலில் இரண்டு பாகங்கள் வெளிவரும்!அதற்கு 3 மாத காலங்கள்

    ஆகும். வெளியாகும் சமயத்தில் முறையான அறிவிப்பு பதிவில் (Blog) வரும்! அதுவரை பொறுத்திருங்கள்

    ReplyDelete
  25. /////Blogger thanusu said...
    பிள்ளைகளுக்கு என்ன செய்யலாம் எனும் என்னத்தில் இருக்கும் பெற்றோர்களுக்காக எழுதப்பட்ட பாடமோ?நான் நேரம் இருக்கும் நேரத்தில் என் பிள்ளைகளுக்கு எது கை கொடுக்கும் எனும் யோசனையில் அவர்களின் ஜாதக கட்டத்தைப் பார்ப்பேன்.அரை குறையாய் எதையோ பார்ப்பேன்.ஒன்றும் பிடிபடாது.
    ///நான்காம் வீடு கல்வி
    ஐந்தாம் வீடு நுண்ணறிவு
    இரண்டாம் வீடு பேச்சுத் திறமை////
    அத்துடன் வித்யாகாரகன் புதன், நுண்ணறிவிற்கான காரகன் குரு,தொழில்காரகன் சனி,/////
    இங்கே எனக்கு சில விஷயங்கள் என் ஜாதகத்தில் பிடிபடுகிறது.
    நான்காம் வீடு கல்வி -- 4.5 உடைய சனி 4 இல் இருக்கிறார்,(இடையிடையில் படிப்பில் கொஞ்சம் தடை வந்தது)
    ஐந்தாம் வீடு நுன்னறிவு//நுண்ண்றிவுக்கான காரகன் குரு -- ஐந்தில் குரு (எனக்கு நுண்ண்றிவு இருக்குமோ)
    ///அத்துடன் வித்யாகாரகன் புதன்/// அவர் ஒன்பதிலேயே ஆட்சியில் இருக்கிறார்.
    ///தொழில்காரகன் சனி,///// இவர் மேலேயே சொல்லிவிட்டேன்-4 இல் ஆட்சி
    ///இரண்டாம் வீடு பேச்சுத் திறமை//// இரண்டுக்குடைய செய்வாய் 8 இல்,தன் வீட்டையே பார்க்கிரார்(சபையில் பேசும் போது கொஞ்சம் சூடாகி விடுகிறேன்)
    தொழிலாளர் கூட்டத்திற்கு தலமையாகவும், அவர்களுக்கு வேலையில் தேவைப்படும் நுண்ணிய ஆலோசனை சொல்லும்
    அதிகாரியாகவும், அதனால் தினசரி தொழிலாளர் மத்தியில் பேசி பேசியே பொழுதை கழிக்கிறேன்.
    நான் சொன்னது சரியாக இருக்கிறதா அய்யா./////

    எல்லாம் சரிதான். பொழுதைக் கழிப்பது மட்டும் தவறு:-))))

    ReplyDelete
  26. //பார்த்திருந்தால், அத்தனை பெரிய பின்னூட்டம் போட்டிருக்க மாட்டீர்கள் - இல்லையா?//

    ----

    சேச்சே, அப்படிலாம் இல்லவே இல்லை.
    :-)))

    நம்மகிட்ட பின்னூட்டம் போடுறதுக்கு வஞ்சனையே இல்ல!

    என்ன, பார்த்திருந்தால், வாத்தியாரின் கருத்தினை வழி மொழிகிறேன் என சொல்லி, உங்கள் கருத்துக்கு உரையாக (பாஷ்யமாக) நம்ம பின்னூட்டத்தை போட்டு இருப்பேன்! ஹிஹிஹி!

    ReplyDelete
  27. //SP.VR. SUBBAIYA said...
    //இன்று ஆனி மூலம். அனுமனின் பிறந்த தினம் அல்லவா? தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரி!//

    ஐயா, தங்களுக்குத் தெரியாததல்ல. இருப்பினும் என்னைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    அனுமனின் பிறந்த தினம் மார்கழி மாதம் அமாவாசை/மூலம் நட்சத்திரம்.

    தமிழ் மாதங்கள் போல், தெலுங்கு, கன்னட மாதங்கள் கணக்கிடப்படுவதில்லை. அமாவாசை முடிந்த மறுநாளே அவர்களுக்கு அடுத்த மாதம் துவங்கிவிடுகிறது. ஆகவே இப்போது அவர்களுக்கு ஆஷாட மாதம். அதன் அடிப்படையிலேயே, நமது பெரும்பாலான விசேஷ தினங்கள் அமைந்திருக்கிறது. ஆகவே இன்று குரு பூர்ணிமா.

    மேலும்,இவ்வாறு கணக்கிடுவதால், நாலு வருடங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு 'அதிக மாசம்' எனப்படும் ஒரு மாதம் கூடுதலாக வரும் (13 மாதங்களுடன்) வருடம் வருகிறது. ஆகவே, ஒரு பௌர்ணமி, அமாவாசை கூடுதலாக வரும். நாம் கணக்கிட்டால் அறிந்து கொள்ள முடியும்.

    இதன் அடிப்படையிலேயே, 81 வயது நிறைந்தவர்களை, 'சஹஸ்ர சந்திர தரிசி'யாக, ஆயிரம் பிறை கண்டவராகக் கருதி சதாபிஷேகம் செய்கிறோம்.
    இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தாலே, 81 வயது நிறையும் பொழுது ஆயிரம் பௌர்ணமி கணக்கு சரியாக வரும்.

    ReplyDelete
  28. ஐயா வணக்கம்!.

    பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டியளையும் ஆற்றுகின்றிர்களே குருநாதரே இது நியமா?

    >>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<

    அதற்கு இன்னும் பல காம்பினேஷன்கள் உள்ளன. அது முழுச் சாப்பாடு. அதை இன்னொரு நாள் சமைத்து விரிவாக பறிமாறுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

    அன்புடன்வாத்தியார்
    +++++++++++++++++++++++++++++++++++++

    ReplyDelete
  29. எனது முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக இதைக் கருத வேண்டுகிறேன்.

    விசேஷ தினங்களை தமிழ் மாத அடிப்படையில் கொண்டாடுவது தானே சரி என்றொரு கேள்வி எழுவது இயற்கை. நமது பெரும்பாலான விசேஷ தினங்கள் அவ்வாறு தான் அமைந்துள்ளன. நமது பஞ்சாங்கத்தில் நாம் சௌரமான (சூரிய சுழற்சி) அடிப்படையில் வருட, மாதங்களைக் கணக்கிடுகிறோம்.

    தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ‘சௌரமானம்’ முறையிலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சாந்திரமான’ (சந்திர சுழற்சி)அடிப்படையிலும் வருடம், மாதம் கணக்கிடப்படுகிறது.

    "வட இந்தியாவிலும் தெலுங்கு மற்றும் கன்னட சம்பிரதாயத்திலும் அவர்கள் சந்திரனது சஞ்சாரத்தை அடிப்படையாகக்கொண்ட சாந்திரமான மாசங்களையே பிரமாணமாகக் கொள்வர். அவர்களுக்கு மாதம் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாதத்தினது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்தாகும். இதிலிருந்து அடுத்த மாதத்தின் வளர்பிறைப் பிரதமை வரை ஒரு மாத காலம் ஆகும். இதுவேதான் சில வேளைகளில் மகா சிவராத்திரி நாளை நிர்ணயிப்பது பற்றிய விவாதங்களுக்குக் காரணமாகின்றது. சாந்திரமானப்படி இவர்களுக்கு பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்றே சித்திரை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது. "(http://www.knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1614:2012-05-08-15-54-59&catid=265)

    ஆகவே, சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட விசேஷ தினங்கள் (குரு பௌர்ணமி போன்றவை) சாந்திரமான முறையிலேயே விவாதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏற்கப்பட்டு, இரு வித (சௌரமான, சாந்திரமான) பஞ்சாங்கங்களிலும் சாந்திரமான அடிப்படையிலேயே குறிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

    ReplyDelete
  30. எனக்கு துலாம் லக்னம் - 22 பரல்கள்
    4ஆம் வீடு மகரத்தின் அதிபதி சனி - 12 கன்னியில் மறைவு
    5ஆம் வீடு கும்பத்தின் அதிபதி குரு - 12 கன்னியில் மறைவு.
    2ஆம் வீடு பேச்சுத்திறமைக்கு விருச்சிக அதிபதி செவ்வாய் - 10 கடகத்தில் நீசம் (ஆனால் நவாம்சத்தில் 9ஆம் இடம் பாக்கியஸ்தானம் கும்பத்தில் சமம்)
    கலைக்கான காரகன், லக்னாதிபதி - சுக்கிரன் 2ஆம் வீடான விருச்சிகத்தில் சமம்.(நவாம்சத்திலும் 2ஆம் இடம் கடகத்தில் ராகுவுடன்.)
    வித்யாகாரகன் புதன் (9 மற்றும் 12 ஆம் இடத்துக்கு அதிபதி)- 12 ஆம் இடம் கன்னியில் உச்சம் மற்றும் வக்கிரம்.

    பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி எல்லாரும் மிக கடுமையாக உழைத்து படித்து 80 சதவீத மார்க் வாங்கினால், நான் கடைசி நேரத்தில் பாடப்புத்தகத்தை கதைப் புத்தகம் போல் நுனிப்புல் மேய்வது மாதிரி படித்து 75 சதவீத அளவுக்கு மார்க் வாங்குவேன். ஆனால் நாளைக்கு படிப்போம் என்ற சோம்பேறித்தனத்தால் நான் நிறைய இழந்தது ஏராளம்.

    பள்ளிக்கு போனதே பகுதி நேரமாகத்தான். பள்ளிப்படிப்பில் ஒரு முறை கூட பெயில் ஆனது கிடையாது. ஆனால் 10ஆம் வகுப்புடன் நானே மேலே படிக்க விருப்பமில்லை என்று நிறுத்திவிட்டு சிலகாலம் வேறு வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு மீண்டும் பிரைவேட்டாக +2 எழுத முயற்சித்தபோது டுடோரியல் நடத்தியவன் 1 நாள் பணம் லேட்டாக செலுத்தியதால் எனக்கு ஒரு ஆண்டு வீணாகி விட்டது. (இப்போது மாதிரி 1999-ல் தட்கல் முறை இல்லை)

    எனக்கு கல்வி தடை படவேண்டும் என்று இருந்தாலும் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்ததால் டுடோரியல் காரன் அலட்சியத்தின் மூலமாக எனக்கு 1 ஆண்டு அவுட்.

    லக்னத்தில் 22 பரல்கள்
    இரண்டில் 26 பரல்கள்
    நான்காம் இடத்தில் 29 பரல்கள்
    ஐந்தாம் இடத்தில் 28 பரல்கள்
    ஏழாம் இடத்தில் 28 பரல்கள்
    பத்தாம் இடத்தில் 44 பரல்கள்
    11ஆம் இடத்தில் 28 பரல்கள்.

    பத்தாம் இடத்தில் 44 பரல்கள் இருப்பது எனக்கு கொஞ்சம் கூட பயன்படவே இல்லை. ஆனால் ஏதோ ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. அது என்ன என்பதை தெரிந்துகொண்டுவிட்டால் கடவுளை நினைக்க மாட்டேன் என்பதால் அது மறைவாகவே இருக்கிறதோ என்னவோ.

    ஆனால் ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. பகவத் கீதையில் சொன்ன வாக்கியமான, கடமையை செய். பலனை எதிர்பாராதே என்ற விஷயம் எனக்கு 100க்கு 1000 சதவீதம் பொருந்தும்.

    பல நாட்கள் மிகவும் யோசித்து பக்கம் பக்கமாக செதுக்கி எழுதும் கதை பிரசுரமே ஆகாது. ஏதாவது ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கடைசி தேதிக்கு முதல் நாள் மனதில் தோன்றியதை அதன் போக்கிலேயே எழுதி அனுப்பிய கதைகள் பிரசுரமானதுடன் பரிசையும் பெற்றுத்தந்திருக்கின்றன.

    சரவணன் என்ற பெயரில் எழுதிய கதைகளை விட, திருவாரூர் சரவணன் என்ற பெயரில்தான் பல கதைகள் பரிசை பெற்றுத்தந்துள்ளன. அதுவும் அதிகமில்லை.

    மிஞ்சிப்போனால் 20 கதைகள் பிரசுரமாகியிருக்கும். ஆனால் அவற்றில் தினமலர்-வாரமலரில் 3 முறை, அமுதசுரபியில் 1 முறை, தமிழக அரசின் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு துறையின் முதல் பரிசு என்று பரிசு பெற்ற கதைகள் 10 இருக்கும். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் இவ்வளவுதான்.

    பாடப்புத்தகத்தை தவிர மீதி எல்லாத்தையும் ஆர்வமா படிப்பேன்.

    ReplyDelete
  31. ////Blogger Bhuvaneshwar said...
    //பார்த்திருந்தால், அத்தனை பெரிய பின்னூட்டம் போட்டிருக்க மாட்டீர்கள் - இல்லையா?//
    ----
    சேச்சே, அப்படிலாம் இல்லவே இல்லை. :-)))
    நம்மகிட்ட பின்னூட்டம் போடுறதுக்கு வஞ்சனையே இல்ல!
    என்ன, பார்த்திருந்தால், வாத்தியாரின் கருத்தினை வழி மொழிகிறேன் என சொல்லி, உங்கள் கருத்துக்கு உரையாக (பாஷ்யமாக) நம்ம பின்னூட்டத்தை போட்டு இருப்பேன்! ஹிஹிஹி!////

    பரவாயில்லை. உங்களின் உடனடி பின்னூட்டத்திற்கு நன்றி! ஆமாம். அலுவலகத்தில் Blog படிப்பதற்கு அனுமதிக்கிறார்களா என்ன?

    ReplyDelete
  32. /////Blogger Parvathy Ramachandran said...
    //SP.VR. SUBBAIYA said...
    //இன்று ஆனி மூலம். அனுமனின் பிறந்த தினம் அல்லவா? தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரி!//
    ஐயா, தங்களுக்குத் தெரியாததல்ல. இருப்பினும் என்னைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    அனுமனின் பிறந்த தினம் மார்கழி மாதம் அமாவாசை/மூலம் நட்சத்திரம்.
    தமிழ் மாதங்கள் போல், தெலுங்கு, கன்னட மாதங்கள் கணக்கிடப்படுவதில்லை. அமாவாசை முடிந்த மறுநாளே அவர்களுக்கு அடுத்த மாதம் துவங்கிவிடுகிறது. ஆகவே இப்போது அவர்களுக்கு ஆஷாட மாதம். அதன் அடிப்படையிலேயே, நமது பெரும்பாலான விசேஷ தினங்கள் அமைந்திருக்கிறது. ஆகவே இன்று குரு பூர்ணிமா.
    மேலும்,இவ்வாறு கணக்கிடுவதால், நாலு வருடங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு 'அதிக மாசம்' எனப்படும் ஒரு மாதம் கூடுதலாக வரும் (13 மாதங்களுடன்) வருடம் வருகிறது. ஆகவே, ஒரு பௌர்ணமி, அமாவாசை கூடுதலாக வரும். நாம் கணக்கிட்டால் அறிந்து கொள்ள முடியும்.
    இதன் அடிப்படையிலேயே, 81 வயது நிறைந்தவர்களை, 'சஹஸ்ர சந்திர தரிசி'யாக, ஆயிரம் பிறை கண்டவராகக் கருதி சதாபிஷேகம் செய்கிறோம்.
    இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தாலே, 81 வயது நிறையும் பொழுது ஆயிரம் பௌர்ணமி கணக்கு சரியாக வரும்./////

    அனுமனின் நட்சத்திரம் மூலம். சரஸ்வதி தேவியாரின் நட்சத்திரமும் மூலம். அது தெரியும். எந்த மாதம் என்பதுதான் நினைவில் இல்லை. அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். உங்கள் விளக்கங்களுக்கு நன்றி சகோதரி! சில சமயங்களில் வாத்தியாரும் மாணவன்தான்! நானும் பதிவிற்கு வருபவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  33. ////Blogger eswari sekar said...
    inrya. lesson nanrga.. ullathu.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  34. /////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்!.
    பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றீர்களே, குருநாதரே இது நியாயமா?
    >>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<
    அதற்கு இன்னும் பல காம்பினேஷன்கள் உள்ளன. அது முழுச் சாப்பாடு. அதை இன்னொரு நாள் சமைத்து விரிவாக பறிமாறுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்
    அன்புடன்வாத்தியார்
    ++++++++++++++++++++++++

    முன்பே தாலாட்டை எல்லாம் பாடியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது கண்ணன். தொட்டிலை விட்டிறங்கி வந்து அவைகளையெல்லாம் மீண்டும் ஒருமுறை படியுங்கள். மீண்டும் ஒருமுறை வித்தியாசமான கோணத்தில் எழுத இருப்பதைத்தான் இன்று சொல்லியுள்ளேன்!

    ReplyDelete
  35. ////Blogger Parvathy Ramachandran said...
    எனது முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக இதைக் கருத வேண்டுகிறேன்.
    விசேஷ தினங்களை தமிழ் மாத அடிப்படையில் கொண்டாடுவது தானே சரி என்றொரு கேள்வி எழுவது இயற்கை. நமது பெரும்பாலான விசேஷ தினங்கள் அவ்வாறு தான் அமைந்துள்ளன. நமது பஞ்சாங்கத்தில் நாம் சௌரமான (சூரிய சுழற்சி) அடிப்படையில் வருட, மாதங்களைக் கணக்கிடுகிறோம்.
    தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ‘சௌரமானம்’ முறையிலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சாந்திரமான’ (சந்திர சுழற்சி)அடிப்படையிலும் வருடம், மாதம் கணக்கிடப்படுகிறது.
    "வட இந்தியாவிலும் தெலுங்கு மற்றும் கன்னட சம்பிரதாயத்திலும் அவர்கள் சந்திரனது சஞ்சாரத்தை அடிப்படையாகக்கொண்ட சாந்திரமான மாசங்களையே பிரமாணமாகக் கொள்வர். அவர்களுக்கு மாதம் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாதத்தினது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்தாகும். இதிலிருந்து அடுத்த மாதத்தின் வளர்பிறைப் பிரதமை வரை ஒரு மாத காலம் ஆகும். இதுவேதான் சில வேளைகளில் மகா சிவராத்திரி நாளை நிர்ணயிப்பது பற்றிய விவாதங்களுக்குக் காரணமாகின்றது. சாந்திரமானப்படி இவர்களுக்கு பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்றே சித்திரை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது. "(http://www.knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1614:2012-05-08-15-54-59&catid=265)
    ஆகவே, சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட விசேஷ தினங்கள் (குரு பௌர்ணமி போன்றவை) சாந்திரமான முறையிலேயே விவாதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏற்கப்பட்டு, இரு வித (சௌரமான, சாந்திரமான) பஞ்சாங்கங்களிலும் சாந்திரமான அடிப்படையிலேயே குறிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.////

    ஆமாம். தெலுங்கு வருடப் பிறப்பு (உகாதி) 15 அல்லது 20 தினங்கள் முன்பாகவே வந்துவிடும். நம் தமிழ் வருடப்பிறப்புதான் முறையானது. சூரியன் மேஷ ராசியில் காலடி வைக்கும் தினம்தான் நமக்கு தமிழ் வருடப்பிறப்பு! சூரியன்தான் பிரதான கிரகம் அதை வைத்துத்தான் தமிழ்ப் பஞ்சாங்கள் அனைத்துமே! நன்றி சகோதரி!

    ReplyDelete
  36. ////Blogger சரண் said...
    எனக்கு துலாம் லக்னம் - 22 பரல்கள்
    4ஆம் வீடு மகரத்தின் அதிபதி சனி - 12 கன்னியில் மறைவு
    5ஆம் வீடு கும்பத்தின் அதிபதி குரு - 12 கன்னியில் மறைவு.
    2ஆம் வீடு பேச்சுத்திறமைக்கு விருச்சிக அதிபதி செவ்வாய் - 10 கடகத்தில் நீசம் (ஆனால் நவாம்சத்தில் 9ஆம் இடம் பாக்கியஸ்தானம் கும்பத்தில் சமம்)
    கலைக்கான காரகன், லக்னாதிபதி - சுக்கிரன் 2ஆம் வீடான விருச்சிகத்தில் சமம்.(நவாம்சத்திலும் 2ஆம் இடம் கடகத்தில் ராகுவுடன்.)
    வித்யாகாரகன் புதன் (9 மற்றும் 12 ஆம் இடத்துக்கு அதிபதி)- 12 ஆம் இடம் கன்னியில் உச்சம் மற்றும் வக்கிரம்.
    பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி எல்லாரும் மிக கடுமையாக உழைத்து படித்து 80 சதவீத மார்க் வாங்கினால், நான் கடைசி நேரத்தில் பாடப்புத்தகத்தை கதைப் புத்தகம் போல் நுனிப்புல் மேய்வது மாதிரி படித்து 75 சதவீத அளவுக்கு மார்க் வாங்குவேன். ஆனால் நாளைக்கு படிப்போம் என்ற சோம்பேறித்தனத்தால் நான் நிறைய இழந்தது ஏராளம்.
    பள்ளிக்கு போனதே பகுதி நேரமாகத்தான். பள்ளிப்படிப்பில் ஒரு முறை கூட பெயில் ஆனது கிடையாது. ஆனால் 10ஆம் வகுப்புடன் நானே மேலே படிக்க விருப்பமில்லை என்று நிறுத்திவிட்டு சிலகாலம் வேறு வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு மீண்டும் பிரைவேட்டாக +2 எழுத முயற்சித்தபோது டுடோரியல் நடத்தியவன் 1 நாள் பணம் லேட்டாக செலுத்தியதால் எனக்கு ஒரு ஆண்டு வீணாகி விட்டது. (இப்போது மாதிரி 1999-ல் தட்கல் முறை இல்லை)
    எனக்கு கல்வி தடை படவேண்டும் என்று இருந்தாலும் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்ததால் டுடோரியல் காரன் அலட்சியத்தின் மூலமாக எனக்கு 1 ஆண்டு அவுட்.
    லக்னத்தில் 22 பரல்கள்
    இரண்டில் 26 பரல்கள்
    நான்காம் இடத்தில் 29 பரல்கள்
    ஐந்தாம் இடத்தில் 28 பரல்கள்
    ஏழாம் இடத்தில் 28 பரல்கள்
    பத்தாம் இடத்தில் 44 பரல்கள்
    11ஆம் இடத்தில் 28 பரல்கள்.
    பத்தாம் இடத்தில் 44 பரல்கள் இருப்பது எனக்கு கொஞ்சம் கூட பயன்படவே இல்லை. ஆனால் ஏதோ ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. அது என்ன என்பதை தெரிந்துகொண்டுவிட்டால் கடவுளை நினைக்க மாட்டேன் என்பதால் அது மறைவாகவே இருக்கிறதோ என்னவோ.
    ஆனால் ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. பகவத் கீதையில் சொன்ன வாக்கியமான, கடமையை செய். பலனை எதிர்பாராதே என்ற விஷயம் எனக்கு 100க்கு 1000 சதவீதம் பொருந்தும்.
    பல நாட்கள் மிகவும் யோசித்து பக்கம் பக்கமாக செதுக்கி எழுதும் கதை பிரசுரமே ஆகாது. ஏதாவது ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கடைசி தேதிக்கு முதல் நாள் மனதில் தோன்றியதை அதன் போக்கிலேயே எழுதி அனுப்பிய கதைகள் பிரசுரமானதுடன் பரிசையும் பெற்றுத்தந்திருக்கின்றன.
    சரவணன் என்ற பெயரில் எழுதிய கதைகளை விட, திருவாரூர் சரவணன் என்ற பெயரில்தான் பல கதைகள் பரிசை பெற்றுத்தந்துள்ளன. அதுவும் அதிகமில்லை.
    மிஞ்சிப்போனால் 20 கதைகள் பிரசுரமாகியிருக்கும். ஆனால் அவற்றில் தினமலர்-வாரமலரில் 3 முறை, அமுதசுரபியில் 1 முறை, தமிழக அரசின் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு துறையின் முதல் பரிசு என்று பரிசு பெற்ற கதைகள் 10 இருக்கும். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் இவ்வளவுதான்.
    பாடப்புத்தகத்தை தவிர மீதி எல்லாத்தையும் ஆர்வமா படிப்பேன்./////

    எல்லாவற்றையும் ஆர்வமாகப் படிப்பேன் என்பது எனக்கும் பொருந்தும். நான் ஒரு தீவிர வாசகன். எழுத ஆரம்பித்து எட்டு ஆண்டுகளில் அந்த வாசிப்பிற்குக் குறை வந்து விட்டது. நேரமின்மை காரணம். இவ்வளவுதான் என்று மனதைத் தளரவிடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். பழநிஅப்பன் கதவைத் திறந்துவிடுவான். வெற்றிப் படிகளில் ஏற வழி காட்டுவான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. //ஆகவே இன்று குரு பூர்ணிமா.//

    நமது அனைத்து குருமார்களுக்கும், இங்கே வாத்தியார் ஐயாவுக்கும் குரு பூர்ணிமா வந்தனங்கள்.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. //ஆமாம். அலுவலகத்தில் Blog படிப்பதற்கு அனுமதிக்கிறார்களா என்ன?
    //

    -----

    It's not prohibited as long as I do my research well.

    hehe :-)

    !!!!!!!!!

    ReplyDelete
  40. தேமொழி உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திலேயே 2 வில்லன்கள் இருக்கிறார்கள். இவர்களை இங்கு வைத்துக் கொண்டு நல்ல பலன் நடக்குமா என்று பார்ப்பது பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பதைப் போன்றது.

    ReplyDelete
  41. ///ananth said...
    தேமொழி உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திலேயே 2 வில்லன்கள் இருக்கிறார்கள். இவர்களை இங்கு வைத்துக் கொண்டு நல்ல பலன் நடக்குமா என்று பார்ப்பது பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பதைப் போன்றது.///

    காலசர்ப்ப தோஷம், கிரகங்கள் விரைய இடத்திலோ அல்லது ஆறுக்கு எட்டு என்று போய் உட்கார்ந்து கொள்வதும் போதாது என்று ....
    ஆஹா.... இது வேறா?
    லக்கினாபதியே சனி, அதனால் இது நம்ம ஆளுன்னு கொஞ்சம் கருணை காட்டுவாருன்னு நினச்சிட்டேன்.
    ஆனால், அவரோ சொன்னது கேட்காட்டி நல்லா அடி நிமுத்துங்க டீச்சர்னு அடிக்க பிரம்பு எடுத்துக் கொடுக்கும் பெற்றோர் வேலை பார்கிறார் போலிருக்கிறது.

    லக்கினத்தில் இரு தீய கிரகங்கள் இருந்து (சனி+கேது எனக்கு இருப்பது) ஒன்பது அல்லது பத்தாம் அதிபதியும் கூட துணைக்கு இல்லாவிட்டால் அது தரித்திர யோகம் என்று கேள்வி. இது எனக்கு எப்படி வேலை செய்கிறது என்றால், எல்லாம் கிடைத்தாலும் அவைகளை அனுபவிக்கும் வாய்ப்பை பறித்து விடுகிறது அல்லது அதில் குறை வைக்கிறது என நினைக்கிறேன். இது என் வாழ்கை அடிப்படையில் பார்த்ததை வைத்து நான் சொல்வது.

    நன்றி ஆனந்த்.

    ReplyDelete
  42. தேமொழி சனிஸ்வரர் உங்களுக்கு வக்கிரமாக வேறு இருக்கிறார். அவர் கொடுக்க வேண்டிய பலன் தலை கீழாகதான் நடக்கும். லக்கினாதிபதியாக நன்மை செய்ய வேண்டியவர் தீமை புரியக் கூடும். சனி 8ம் இடத்தில் இருந்தால் மிகவும் கஷ்டங்களைக் கொடுத்து (2ம் இடத்தைப் பார்ப்பதால்) நீண்ட ஆயுளைக் கொடுப்பார் என்பது பெரும்பாலான புராதண நூல்களின் கருத்து. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு சனி 8ல் வக்கிரமாக இருந்தார். அந்த ஜாதகர் தனது 25 வயதில் அற்ப ஆயுளில் இறந்துப் போனார். அற்ப ஆயுளுக்கு வலு சேர்ப்பதுபோல் செவ்வாய் 2ல் இருந்தார். 8க்கு 8ம் இடமான 3ல் ராகு.

    ReplyDelete
  43. Blogger kmr.krishnan said...
    //ஆகவே இன்று குரு பூர்ணிமா.//
    நமது அனைத்து குருமார்களுக்கும், இங்கே வாத்தியார் ஐயாவுக்கும் குரு பூர்ணிமா வந்தனங்கள்./////

    உங்களுடைய மேலான அன்பிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  44. /////Blogger Bhuvaneshwar said...
    //ஆமாம். அலுவலகத்தில் Blog படிப்பதற்கு அனுமதிக்கிறார்களா என்ன? //
    -----
    It's not prohibited as long as I do my research well.
    hehe :-)/////

    உங்கள் அலுவலக நிர்வாகிகளுக்குப் பாராட்டுக்கள்! வாழ்க அவர்கள்!

    ReplyDelete
  45. ///ananth said... தேமொழி சனிஸ்வரர் உங்களுக்கு வக்கிரமாக வேறு இருக்கிறார். அவர் கொடுக்க வேண்டிய பலன் தலை கீழாகதான் நடக்கும். லக்கினாதிபதியாக நன்மை செய்ய வேண்டியவர் தீமை புரியக் கூடும்.///

    நீங்கள் கவனித்ததை உதாரணத்துடன் விளக்கி சொல்ல நேரம் எடுத்துக்கொண்ட உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி ஆனந்த்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com