மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.10.11

உலகை மயக்கிய மற்றுமொரு மந்திரப் பெயர்

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உலகை மயக்கிய மற்றுமொரு மந்திரப் பெயர்

நம்ம ஊர் தமிழ்நாட்டிலுள்ள இளவட்டங்களெல்லாம் நமீதாவை விரும்புகிற அளவில், அவருக்காகச் செலவிடுகின்ற நேரத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூடத் தொன்மையான கலையான ஜோதிடத்தைத் தெரிந்துகொள்வதில் செலுத்துவதில்லை.

1,500 ஆண்டுகளாக இருக்கும் அக்கலையின் மேலான்மையைப் புரிந்து கொள்ளாததோடு, நமக்கு அதன் மீதுள்ள நம்பிக்கையை அசைக்க வேண்டுமென்ற நோக்கோடு அரைகுறையான கேள்விகளைக் கேட்டு எரிச்சலையும் உண்டாக்குவார்கள்.

ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து இங்கே மகாராஷ்டிராவில் ஒரு அந்தனர் வீட்டில் இரண்டாண்டு காலம் தங்கி, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டதோடு, திரும்பிச் சென்று சுமார் 40 ஆண்டு காலம் அக்கலையில் புகழ்பெற்று உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆங்கிலேயரைப் பற்றிய உண்மைச் செய்திகளை இன்று (மறு) பதிவிடுகிறேன்.

பதிவு சற்றுப் பெரிதாக இருக்கும். நீளமாக இருக்கும். பொறுமை இல்லாதவர்கள் பதிவை விட்டு இப்போதே விலகி விடலாம். ரசித்துப் படிப்பவர்கள் மட்டும் தொடரவும்.

உலகை மயக்கிய அந்த மந்திரப் பெயர்: வில்லியம் ஜான் வார்னர் - மற்றும் ஒரு பெயர் கவுன்ட் லூயி ஹாமோன். ஆனால் சீரோ என்று சொன்னால்தான் அவரை அனைவருக்கும் தெரியும். His name, Cheiro, derives from the word cheiromancy -- meaning palmistry

அவர் வாழ்ந்த காலம்: November 1, 1866 - October 8, 1936 (சுமார் 70 ஆண்டு காலம்)

ஜோதிடம், கைரேகை, எண் ஜோதிடம் என்று அத்தனை துறையிலும் உலகைக் கலக்கியவர் அவர்.

அவருடைய ரசிகர்கள் அல்லது அவரை ஆதரித்துக் கெளரவித்தவர்களைப் பட்டியலிட்டு மாளாது.

King Edward VII (இங்கிலாந்தின் பேரரசராக இருந்தவர்), William Gladstone, Charles Stewart Parnell, Henry Morton Stanley, Sarah Bernhardt, Oscar Wilde, Professor Max Muller, Blanche Roosevelt, the Comte de Paris, Joseph Chamberlain, Lord Russell of Killowen,Robert Ingersoll
(இவர் பிரபல நாத்திகர் - லண்டனில் வாழ்ந்தவர்) Ella Wheeler Wilcox, Lillie Langtry, Mark Twain, W.T. Stead, Richard Croker, Natalia Janotha என்று சிலரைக் குறிப்பிடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சீரோ, தனது கணிப்பை அது நன்மையோ அல்லது தீமையோ- அப்பட்டமாகச் சொல்லி விடுவார்.

பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டிய சீரோ ஐரீஷில் பிறந்தவர், ஆனால் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர். அவருடைய கணிப்பு என்றுமே தவறானது கிடையாது.

யுத்த நாயகன் என்று புகழ் பெற்ற ஃபீல்ட் மார்ஷல் லார்ட் கிச்சென்னரின் கையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக் கூறிவிட்டு, இறுதியாகச் சொன்னார்,"நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்" நீச்சல் தெரியாத, பயந்துபோன கிச்சென்னார், உடனே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சலும் கற்றுக் கொண்டார்.

ஆனால் சீரோ சொன்னதுதான் நடந்தது.

1916-ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் ஃபீல்டு மார்ஷல் பயணம் செய்தார். அக்கப்பல் கடற் கண்ணி ஒன்றில் மோதிச் சேதமுற்று மூழ்கியது. லார்ட் கிச்சென்னர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

சீரோவை நேரில் பார்த்து தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள மக்கள் கூட்டம் அலை மோதியது. நாள் ஒன்றிற்கு இருபது பேர்களுக்குக் குறையாமல் சந்தித்துப் பலன்களைச் சொல்லி வந்தார்.

பெரிய இடங்களிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன!

இங்கிலாந்தின் மாமன்னர் ஏழாம் எட்வர்டின் உடல் நிலை மிகவும் மோசமாகி மரணத்தின் விளிம்பில் அவர் இருந்த நேரம், மூச்சிவிடத் திணறிக் கொண்டி ருந்தார் அவர். மருத்துவர்கள் எல்லாம் கை விட்டு விட்டனர். அரசரின் இறுதி நேரம் நெருங்கி விட்டது என்றனர்.

சீரோ வரவழைக்கப்பட்டார். அரசரின் கையை ஆராய்ந்த பிறகு சீரோ சொன்னார்.

"உங்கள் உயிருக்கு இப்போது ஒன்றும் ஆபத்தில்லை. 69வது வயதில்தான் உங்களுக்கு மரணம் ஏற்படும்"

அதன்படி 1841ல் பிறந்த அரசர், 1910ஆம் ஆண்டு மே மாதம் - தனது 69 வது வயதில்தான் காலமானார்.

அதேபோன்று பிறிதொரு சமயம், அரச குடும்பத்தினர் அனைவரையும் உட்காரவைத்து ஒவ்வொருவர் கையாகப் பார்த்துப் பலன் சொல்லும்போது, பட்டத்து இளவரசன் எட்டாம் எட்வர்ட் வேல்ஸின் கையைப் பார்த்துவிட்டு, சீரோ சொன்ன செய்தியால் மொத்த அரச குடும்பமும் திடுக்கிட்டுப் போய் விட்டது.

சீரோ சொன்னது இதுதான்."இளவரசனே, நீ பதவிக்கு வரமாட்டாய்.அரசனாகும் வாய்ப்பு உனக்கு இல்லை!"

அதன்படிதான் பின்னால் நடந்தது. திருமதி சிம்ப்சன் என்ற விவாகரத்தான - தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை - அந்த இளவரசன்
காதலித்ததையும் - தன் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, காதலிதான் முக்கியம் எனக்கு - நாடும் பதவியும் முக்கியமில்லை என்று ஒரு
பெண்ணிற்காக ஒரு மிகப் பெரிய சாமராஜ்ஜியத்தையே (அப்போது பிரிட்டனின் கீழ் 26 நாடுகள் இருந்த காலம்) உதறிவிட்டுத் தன் காதலியோடு நாட்டையே விட்டு வெளியேறினான் அந்த இளைஞன் (அது மிகவும் சுவாரசியமான கதை - 40 ஆண்டுகளுக்கு முன்பு சாவி அவர்கள் ஆனந்த விகடனில் தொடராக அதை எழுதினார் - படித்தவர்களுக்கு நினைவிருக்கும்)

23 -06 - 1894 ஆண்டு பிறந்த - முடி துறந்த அந்த இளவரசன், பிறகு பிரான்ஸ் நாட்டில் 28 .05.1972 வாழ்ந்து தன்னுடைய 79 வது வயதில் இறந்து போனான். விக்டோரியா மகாராணியின் பேரன் அவன் என்பது உபரிச்செய்தி.

தெரியாதவர்கள் அக்கதையைப் படிக்க சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்

The story of Edward Eight

சீரோ எழுதிய நூல்கள்தான் இன்று ரேகை சாஸ்திரம் மற்றும் எண் கணித நிபுணர்களின் வேத புத்தகங்களாகும். நீங்களும் வாங்கிப் படியுங்கள்!
-------------------------------------------------------------------------------------
ரேகை சாஸ்திரஸ்தில் அவருக்குள்ள மேதைத்தனத்தையும், தனித்தன்மையையும் அறிந்து கொள்ளவும், உலகிற்கு அதை நிருபிக்கவும்
அமெரிக்காவில் இவருக்கு டெஸ்ட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.

மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும், புகழ் பெற்ற அறிஞர்களையும் கொண்ட கூட்டுக் குழு அதை நடத்தியது. ஏராளமான
பத்திரிக்கையாளர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

புகை படர்ந்த காகிதத்தில் பன்னிரெண்டு பேருடைய கை ரேகைகளைப்பதிவு செய்து சீரோவிடம் கொடுத்தார்கள். கை ரேகைகளைத் தவிர அவற்றில் எந்த விதமான குறிப்போ அல்லது அடையாளமோ கிடையாது.

சீரோ அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துவிட்டு, மற்றவற்றிற்கு குறிப்புகள் எழுதிக் கொடுத்தார்.

அத்தனையும் உண்மை.

இறுதியாக தனியாக எடுத்துவைத்திருந்த ரேகையை எடுத்தார். "இது ஒரு கொலைகாரனின் கை ரேகை" என்றார். அனைவரும் ஆச்சரியத்தால் அதிர்ந்து போயினர்.

அதற்குக் காரணம், உண்மையிலேயே ஒரு கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருக்கும் டாக்டர் மேயர் என்பவனின் கைரேகைதான் அது!

"ஆனால் இவனுடைய மரண தண்டனை நிறைவேறாது. ரத்தாகிவிடும்" என்றார் சீரோ.

அதன்படிதான் நடந்தது.

இறுதிவரை அந்தக் கணிக்கும் திறமை சற்றும் குறையாமல் இருந்தது

சீரோவிடம். தனது ஆயுள் நெருங்குவதை உணர்ந்த சீரோ, பதிப்பாளர்களிடம் தீவிரம் காட்டி, தன்னுடைய கண்டுபிடிப்புக்கள், கணிப்புக்கள், அனுபவங்கள் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டு விட்டுத்தான் மறைந்தார்.

தன்னுடைய இறுதி நாளையும் சரியாகக் கணித்துத் தன் மனைவியிடமும், நண்பர்களிடமும் சொன்ன சீரோ, தன்னுடைய வாழ்நாளின் கடைசி
தினத்தன்று தன் நண்பர்களுக்கு மிகப் பெரிய விருந்தையும் அளித்தார்.

அன்று இரவு படுத்தவர்தான் அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கவில்லை. அவர். படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தது. (3.10.1936) தான் கற்றுக் கொண்ட கலைக்காக, இந்தியாவின் புகழை அவர் தன்னுடைய நூல்களில் நன்றிக்கடனாக குறிப்பிடத்தவறவில்லை! That is his greatness!

The Story of Cheiro - Click here for the link

எண் கணிதத்தில் சீரோ எழுதிய பல சுவையான செய்திகள், மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய பல குறிப்புகள் என்னிடம் உள்ளன. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன். பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


*************************************
சேர்க்கை
--------------------------
புதிய அட்டவணை!

திங்கள் முதல் வெள்ளிவரை வகுப்பறை நடைபெறும். ஐந்து நாட்களும் வாத்தியாரின் ஆக்கங்கள் வெளியாகும். சனிக்கிழமை விடுமுறை.

ஞாயிற்றுக்கிழமை மாணவர் மலர். அன்று உங்களின் ஆக்கங்கள் வெளியாகும். அனைவரையும் பங்குகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை என்று எழுத்தின் எல்லா பரிமாணத் திலும் எழுதியனுப்புங்கள். தமிழில் சரளமாக எழுதமுடியாதவர்கள்
ஆங்கிலத்தில் எழுதியனுப்பலாம். தகுதியுடையவைகள் அனைத்தும் வெளியாகும். எழுத்தில் உங்கள் அனைவரையும் ஊக்குவிற்பதற்காக இந்தப் பகுதி. அன்று வரும் பின்னூட்டங்களுக்கு நீங்கள் (ஆக்கங்களை எழுதியவர்கள்) பதில் எழுதலாம்.

ஆக்கங்கள் உங்கள் சொந்த எழுத்தாக இருக்கட்டும். பிறர் எழுதியதை வெட்டி ஒட்டும் வேலையைச் செய்ய வேண்டாம். நீங்கள் எங்காவது படித்ததில் பிடித்தவற்றை உங்கள் மொழியில் எழுதியும் அனுப்பலாம்.

திருவாளர்கள் கே.எம்.ஆர்.கே, கோபாலன் சார், தமிழ் விரும்பி, மலேசியா ஆனந்த், விசு அய்யர், தில்லி உமா, ஜப்பான் மைனர், துபாய் கண்ணன், கோவை சகோதரி, யு.எஸ்.ஏ. ராமுடு, தேமொழி, ஸ்ரீசோபனா போன்ற முன் பெஞ்ச் மாணவியர், மாணவர்களுடன் மற்ற அனைவரையும் பங்கு  கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வாத்தியார் கலகலப்பான ஆசாமி. டேக் இட் ஈஸி’ கொள்கை உடையவர். ஆகவே பின்னூட்டங்கள் கலகலப்பாக இருப்பதில் தவறு இல்லை. யாரையும் காயப்படுத்தும்படி, குறை சொல்லும்படி இருக்கவேண்டாம்.

வரும் பின்னூட்டங்களில், பிரச்சினையான  பின்னூட்டங்களைத் தவிர மற்ற அனைத்துப் பின்னூட்டங்களும்  வெளியாகும்.

அன்புடன்
வாத்தியார்
20.10.2011

வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------

30 comments:

  1. Dear Sir,

    Hope you are doing good. I am reading all your blogs but not commenting on it. As usual I feel its really worth of your time spending to teach/educate us. Thanks a bunch!

    ReplyDelete
  2. சீரோவைப் பற்றி வாத்தியார் ஏற்கனவே எழுதியிருந்த தகவல்களும் தற்போது மேலும் சுவை சேர்த்திருப்பதும், எங்கள் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தங்களின் குறிப்புகளையும் செய்திகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். வகுப்பறையை மாணவர்களுக்கென்று ஒரு நாள் விட்டுக் கொடுத்திருப்பது தங்களின் அரவணைத்துச் செல்லும் சீரிய குணத்திற்கு இன்னுமொரு உதாரணம் - நன்றி அய்யா!

    ReplyDelete
  3. Guru Vanakkam,

    // endarO mahAnubhavulu
    antareeki vandanamulu //

    There are so many Good Astrologers. To all goes my salutations.

    Ramadu:

    ReplyDelete
  4. ரேகை நாயகன் "சீரோ"
    நீ மட்டுமே
    இக்கலையில் "ஹீரோ."
    வாக்கு பலிதம் செய்த
    கிரகாதிபதிகள் யார் யாரோ.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு அய்யா..

    ReplyDelete
  6. மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  7. வகுப்பறை எனக்கு ஆவு தீண்டும் கல்லாக இருந்தது.ஆம்! எழுத வேண்டும் என்ற என் தினவுக்குத் தேய் கல்லாக வகுப்பறை இருந்தது.வாத்தியாரின் பொறுமை கடலினும் பெரிது. அதை விடப் பெரியது அவர் மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு.

    கூட்டம் இருக்கும் இடத்தில்தான் சரக்கு விற்கும் அல்லவா?

    அதனால்தான் பெரிய எண்ணிக்கையில் பின் தொடர்வோர் உள்ள வகுப்பறையில் ஐயா வாய்ப்பு அளித்தவுடன் அதனைப் பயன் படுத்தி என் எழுத்துத் திறமையை சோதித்து/வளர்த்துக் கொண்டேன். வாத்தியாரின் வழிகாட்டுதலும் இருந்ததால் துணிவாக எழுத முடிந்தது. ஏதோ 2500 பேரில் ஒரு 100 பேராவது முழுதும் வாசித்து இருந்தாலே எனக்கு அது வெற்றிதான்.

    சூரியதசா(வாக்கு ஸ்தானாதிபதி) குரு புக்தியில்(6,9 இடத்திற்கு உரியவன்) துவங்கிய இந்தப்பயணம், சூரிய தசா சனி புக்தியில் ( 11 அக்டோப‌ர் 2011 அன்று துவங்கிவிட்டது)முடிவடைகிறது.எனக்குப் பிறந்த ஜாதகத்தில் வாக்கில் வேறு சனி. எது சொன்னாலும் எல்லோரும் தவறாக‌ எடுத்துக் கொள்ளும் காலம் 22 செப் 2012 வரை.எனவே மேலும் சிக்கல்களை உருவாக்கி கொள்ளாமல் மெள‌னம் காப்பது என்ற முடிவினை எடுத்து உள்ளேன்.

    நட்புக்காக ஞாயமே இல்லாத பக்கத்தில் நின்று போராடியது உண்டு; மஹாபாரதக் கதையில் கெள‌ரவர் பக்கம் இருக்கும் சில பாத்திரங்களைப்போல.
    ஆனால் என் வாழ்க்கையில் என் பக்கம் ஞாயம் இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது 'நடுநிலை'யாளர்களாக மாறிவிடும் நடபையும், உறவையும்தான் எனக்கு அளித்தான் ஆண்டவன்.யாரையும் குற்றம் சொல்லிவிட்டு என் குற்றங்களை மறைக்க விரும்பவில்லை. என் குறைகளை அறிந்தே வைத்து இருக்கிறேன்.தவறென்று பெரியவர்கள் சுட்டிக்காட்டினாலே போதும்,நான் தவறே செய்யா விடினும் மன்னிப்புக் கேட்கும் பண்பினை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

    வகுப்பறை மேலும் மேலும் வளர ஆண்டவனைவேண்டுகிறேன்.

    பல்லாண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கும் ரயில் வகுப்பறை. அதில் பலரும் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள்.அதைப் பற்றியெல்லாம் இன்ஜின் ஓட்டுபவரோ, பின்னால் கொடி அசைக்கும் கார்டோ கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா?

    Let the barking dogs bark while the caravan moves on!

    என்னுடைய வகுப்பறை ஆக்கங்களை மீள்பதிவு செய்து கொள்ள ஐயாவின் அனுமதியைப் பணிந்து வேண்டுகிறேன்.என் மனைவியாரின் அனுராதாவில் ஒவ்வொரு முறையும் வகுப்பறையில் இந்தத் தேதியில் பதிவிடப்பட்டது என்ற குறிப்புடன் வெளியிட்டுக் கொள்கிறேன்.

    மேலும் என் ஆக்கங்களை ஒரு 'விசிடி' யாக ஐயா நேரம் கிடைக்கும் போது எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றும் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

    மீண்டும் மீண்டும் என் நன்றியை வாத்தியாருக்கும், வகுப்புத் தோழர்களுக்கும்
    உரித்தாகுகிறேன்.

    வாத்தியாரைச் சந்தித்தபோது என் ஆக்கத்தில் ஒன்றை நினைவு கூர்ந்தார்.
    "மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை" என்பது அதன் தலைப்பு.

    ஒரு தேர்ந்த கதை சொல்லியின் நினைவில் நிற்கும் வண்ணம் ஒரு ஆக்கத்தையாவது அளித்துள்ளேனே என்ற நிறைவு எனக்கு இருக்கிறது.
    வேறு என்ன வேண்டும் ஒரு படைப்பாளிக்கு?

    நன்றியுடன்,
    கே. முத்துராமகிருஷ்ணன்.

    ReplyDelete
  8. /////Blogger hotcat said...
    Dear Sir,
    Hope you are doing good. I am reading all your blogs but not commenting on it. As usual I feel its really worth of your time spending to teach/educate us. Thanks a bunch!/////

    நல்லது. நீண்டநாட்களுக்குப் பிறகு உங்களின் பின்னூட்டம். நன்றி சங்கர்!

    ReplyDelete
  9. //////Blogger Srinivasa Rajulu.M said...
    சீரோவைப் பற்றி வாத்தியார் ஏற்கனவே எழுதியிருந்த தகவல்களும் தற்போது மேலும் சுவை சேர்த்திருப்பதும், எங்கள் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தங்களின் குறிப்புகளையும் செய்திகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். வகுப்பறையை மாணவர்களுக்கென்று ஒரு நாள் விட்டுக் கொடுத்திருப்பது தங்களின் அரவணைத்துச் செல்லும் சீரிய குணத்திற்கு இன்னுமொரு உதாரணம் - நன்றி அய்யா!/////

    அது புதிதல்ல. முன்பிருந்தே உள்ளதுதான்.

    ReplyDelete
  10. ////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    // endarO mahAnubhavulu
    antareeki vandanamulu //
    There are so many Good Astrologers. To all goes my salutations.
    Ramadu://///

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger thanusu said...
    ரேகை நாயகன் "சீரோ"
    நீ மட்டுமே
    இக்கலையில் "ஹீரோ."
    வாக்கு பலிதம் செய்த
    கிரகாதிபதிகள் யார் யாரோ.////

    அது தெய்வ அருள்! God's gift

    ReplyDelete
  12. ////Blogger Govindasamy said...
    நல்ல பகிர்வு அய்யா..//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger Govindasamy said...
    மிக்க நன்றிகள்./////

    நல்லது. கோவிந்தசாமி!

    ReplyDelete
  14. ///////Blogger kmr.krishnan said...
    வகுப்பறை எனக்கு ஆவு தீண்டும் கல்லாக இருந்தது.ஆம்! எழுத வேண்டும் என்ற என் தினவுக்குத் தேய்கல்லாக வகுப்பறை இருந்தது.வாத்தியாரின் பொறுமை கடலினும் பெரிது. அதை விடப் பெரியது அவர் மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு.
    கூட்டம் இருக்கும் இடத்தில்தான் சரக்கு விற்கும் அல்லவா?
    அதனால்தான் பெரிய எண்ணிக்கையில் பின் தொடர்வோர் உள்ள வகுப்பறையில் ஐயா வாய்ப்பு அளித்தவுடன் அதனைப் பயன் படுத்தி என் எழுத்துத் திறமையை சோதித்து/வளர்த்துக் கொண்டேன். வாத்தியாரின் வழிகாட்டுதலும் இருந்ததால் துணிவாக எழுத முடிந்தது. ஏதோ 2500 பேரில் ஒரு 100 பேராவது முழுதும் வாசித்து இருந்தாலே எனக்கு அது வெற்றிதான்.////////

    எண்ணிக்கை முக்கியமில்லை. நான் ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவுகளில் எழுதத் துவங்கியபோது. முதல் ஆறு மாதங்கள் வெறும் 30 பேர்கள்தான் வந்து படித்துவிட்டுப் போவார்கள். நான் என் மனத் திருப்திக்காகத்தான் எழுதினேன். தொடர்ந்து எழுதுகிறேன். எழுத்தின் முக்கிய அங்கம் அதுதான்! அப்போதுதான் எழுத்தில் ஒரு ஜீவன் இருக்கும்.
    -------------------------------------------------------------------------------------
    //////சூரியதசா(வாக்கு ஸ்தானாதிபதி) குரு புக்தியில்(6,9 இடத்திற்கு உரியவன்) துவங்கிய இந்தப்பயணம், சூரிய தசா சனி புக்தியில் ( 11 அக்டோப‌ர் 2011 அன்று துவங்கிவிட்டது)முடிவடைகிறது.எனக்குப் பிறந்த ஜாதகத்தில் வாக்கில் வேறு சனி. எது சொன்னாலும் எல்லோரும் தவறாக‌ எடுத்துக் கொள்ளும் காலம் 22 செப் 2012 வரை.எனவே மேலும் சிக்கல்களை உருவாக்கி கொள்ளாமல் மெள‌னம் காப்பது என்ற முடிவினை எடுத்து உள்ளேன்.///////

    நான் சனிதிசை, ராகுபுத்தியில்தான் எழுதத் துவங்கினேன். சனியைப் பற்றிய உங்கள் கணக்குத் தவறானது!
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    ReplyDelete
  15. ///////Blogger kmr.krishnan said...
    ///////நட்புக்காக நியாயமே இல்லாத பக்கத்தில் நின்று போராடியது உண்டு; மஹாபாரதக் கதையில் கெள‌ரவர் பக்கம் இருக்கும் சில பாத்திரங்களைப்போல.
    ஆனால் என் வாழ்க்கையில் என் பக்கம் நியாயம் இருந்தாலும் பிரச்சினை என்று வரும் போது 'நடுநிலை'யாளர்களாக மாறிவிடும் நட்பையும், உறவையும்தான் எனக்கு அளித்தான் ஆண்டவன். யாரையும் குற்றம் சொல்லிவிட்டு என் குற்றங்களை மறைக்க விரும்பவில்லை. என் குறைகளை அறிந்தே வைத்து இருக்கிறேன். தவறென்று பெரியவர்கள் சுட்டிக்காட்டினாலே போதும், நான் தவறே செய்யா விடினும் மன்னிப்புக் கேட்கும் பண்பினை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
    வகுப்பறை மேலும் மேலும் வளர ஆண்டவனைவேண்டுகிறேன்.
    பல்லாண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கும் ரயில் வகுப்பறை. அதில் பலரும் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள்.அதைப் பற்றியெல்லாம் இன்ஜின் ஓட்டுபவரோ, பின்னால் கொடி அசைக்கும் கார்டோ கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா?
    Let the barking dogs bark while the caravan moves on!////////

    என்ன ஆயிற்று? ஏன் உங்கள் எழுத்தில் இன்று ஒருவித விரக்தி தெரிகிறது? இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டால், நம்மை ஒன்றும் அணுகாது!
    --------------------------------------------------------------------------------------
    /////என்னுடைய வகுப்பறை ஆக்கங்களை மீள்பதிவு செய்து கொள்ள ஐயாவின் அனுமதியைப் பணிந்து வேண்டுகிறேன்.என் மனைவியாரின் அனுராதாவில் ஒவ்வொரு முறையும் வகுப்பறையில் இந்தத் தேதியில் பதிவிடப்பட்டது என்ற குறிப்புடன் வெளியிட்டுக் கொள்கிறேன்.//////

    ஆக்கங்களின் உரிமை (எப்போதும்) அதனை எழுதியவருக்குத்தான். நீங்கள் அவற்றை உங்கள் விருப்பம்போல் செய்துகொள்ளலாம்
    ----------------------------------------------------------------------------
    //////மேலும் என் ஆக்கங்களை ஒரு 'விசிடி' யாக ஐயா நேரம் கிடைக்கும் போது எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றும் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.///////

    எதற்கு விசிடி? PDFகோப்பாகவும் & Text கோப்பாகவும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். பத்து நாள் அவகாசம் கொடுங்கள்
    ------------------------------------------------------------------------------------------------
    /////// மீண்டும் மீண்டும் என் நன்றியை வாத்தியாருக்கும், வகுப்புத் தோழர்களுக்கும்
    உரித்தாகுகிறேன்.///////

    என்ன விடைபெறுகிறீர்களா? எதற்காக? விடைகொடுக்க விருப்பமில்லை. தொடர்ந்து எழுதுங்கள். மாணவர் மலரை உங்கள் ஆக்கங்களும் அலங்கரிக்கட்டும்!
    --------------------------------------------------------------------------------
    ///////வாத்தியாரைச் சந்தித்தபோது என் ஆக்கத்தில் ஒன்றை நினைவு கூர்ந்தார்.
    "மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை" என்பது அதன் தலைப்பு.
    ஒரு தேர்ந்த கதை சொல்லியின் நினைவில் நிற்கும் வண்ணம் ஒரு ஆக்கத்தையாவது அளித்துள்ளேனே என்ற நிறைவு எனக்கு இருக்கிறது.
    வேறு என்ன வேண்டும் ஒரு படைப்பாளிக்கு?
    நன்றியுடன்,
    கே. முத்துராமகிருஷ்ணன்.////////

    உங்களுடைய பாராட்டிற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி!
    நட்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  16. ///////Blogger kmr.krishnan said...
    ///////நட்புக்காக நியாயமே இல்லாத பக்கத்தில் நின்று போராடியது உண்டு; மஹாபாரதக் கதையில் கெள‌ரவர் பக்கம் இருக்கும் சில பாத்திரங்களைப்போல.
    ஆனால் என் வாழ்க்கையில் என் பக்கம் நியாயம் இருந்தாலும் பிரச்சினை என்று வரும் போது 'நடுநிலை'யாளர்களாக மாறிவிடும் நட்பையும், உறவையும்தான் எனக்கு அளித்தான் ஆண்டவன்.//

    நமக்கென்று ஒரு கருத்து, நோக்கம் இவை இருந்தால் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். மகாபாரதத்தில் துரோணருக்கும், பீஷ்மருக்கும் துரியோதனன் பக்கம் இருக்க வேண்டிய அவசியம், கட்டாயம், ராஜதர்மம் இருந்தது. நமக்கு அப்படியெல்லாம் எதுவும் கிடையாது அல்லவா? நட்புக்காக என்று தவறுக்குத் துணை போயிருந்தால், அது உங்கள் மனச்சாட்சிக்கு எதிரான நடவடிக்கை அல்லவா? அப்படியென்ன நட்பு? "நகுதற் பொருட்டன்று நட்டன், மிகுதிக்கண் மேற்சென்றிடித்தற் பொருட்டு", "முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்றும் வள்ளுவர் சொன்னதைப் படித்திருக்கிறீர்களே. மகிழ்ச்சியில் துள்ளலும், மனச்சோர்வில் தளர்வும் மன உறுதியைக் காட்டாது. நாம் கடந்து வந்த பாதையை இப்போது நினைத்து வருந்துவது என்பது காலம் கடந்த செயல். கண்ணதாசன் வரிகளை நினைவு படுத்துகிறேன். "போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்" என்று.

    ReplyDelete
  17. /////Blogger Thanjavooraan said...
    ///////Blogger kmr.krishnan said...
    ///////நட்புக்காக நியாயமே இல்லாத பக்கத்தில் நின்று போராடியது உண்டு; மஹாபாரதக் கதையில் கெள‌ரவர் பக்கம் இருக்கும் சில பாத்திரங்களைப்போல.
    ஆனால் என் வாழ்க்கையில் என் பக்கம் நியாயம் இருந்தாலும் பிரச்சினை என்று வரும் போது 'நடுநிலை'யாளர்களாக மாறிவிடும்
    நட்பையும், உறவையும்தான் எனக்கு அளித்தான் ஆண்டவன்.//
    நமக்கென்று ஒரு கருத்து, நோக்கம் இவை இருந்தால் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். மகாபாரதத்தில் துரோணருக்கும், பீஷ்மருக்கும் துரியோதனன் பக்கம் இருக்க வேண்டிய அவசியம், கட்டாயம், ராஜதர்மம் இருந்தது. நமக்கு
    அப்படியெல்லாம் எதுவும் கிடையாது அல்லவா? நட்புக்காக என்று தவறுக்குத் துணை போயிருந்தால், அது உங்கள் மனச்சாட்சிக்கு எதிரான
    நடவடிக்கை அல்லவா? அப்படியென்ன நட்பு? "நகுதற் பொருட்டன்று நட்டன், மிகுதிக்கண் மேற்சென்றிடித்தற் பொருட்டு", "முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்றும் வள்ளுவர் சொன்னதைப் படித்திருக்கிறீர்களே. மகிழ்ச்சியில் துள்ளலும், மனச்சோர்வில்
    தளர்வும் மன உறுதியைக் காட்டாது. நாம் கடந்து வந்த பாதையை இப்போது நினைத்து வருந்துவது என்பது காலம் கடந்த செயல்.

    கண்ணதாசன் வரிகளை நினைவு படுத்துகிறேன். "போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்" என்று.//////

    எந்தச் சூழ்நிலையிலும், எல்லா மாணவர்களையும் அரவனைத்துக்கொண்டு போவதுதான் வாத்தியாருக்கான முதல் தர்மம். அதில் நடுநிலை, சார்புநிலை’ க் கெல்லாம் வேலை இல்லை! நீங்கள் சொல்வது சரி. "போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்" என்ற கவியரசரின் அறிவுரைப்படி நடந்தால், பிரச்சினைகள் தலை தூக்காது. அதை உணர்ந்து கே,எம்.ஆர்.கே. தன் வருத்தத்தைப் போக்கி கொள்வாராக. பழநிஅப்பனைப் பிரார்த்திக்கிறேன். அதற்குரிய மனப்பக்குவத்தை பழநிஅப்பன் சம்பந்தப்பட்ட இருவருக்குமே அளிக்கட்டும்!
    மனதைத் தொடும் உங்களின் இந்தப் பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  18. அய்யா வணக்கம்
    ஜோதிட முன்னோடி திரு சீரோ பற்றிய ஆக்கமுள்ள பதிவு . நன்றி

    ReplyDelete
  19. வணக்கம் அய்யா,
    இன்றைய தொகுப்பு மிக அருமை.இவ்வாறான மேதைகளின் வாழ்க்கையை அறிவதை விடவா சினிமாக்கள் பெரியதாக உள்ளன?அவரது பிரமிட் எண் ஜோதிடம் தான் இன்று மிகவும் சரியான எண் கணித முறையாக பலரும் ஏற்றும் கொண்டுள்ளனர்.அவ‌ரை ப‌ற்றி அறியாத செய்திக‌ளை இன்று அறிந்தேன்.ந‌ன்றி அய்யா.

    என் போன்ற‌ மாணவ‌ர்க‌ளும் வகுப்பறையில் "செமினார்" எடுப்பது சற்று பயமாக இருந்தாலும் என் போன்றோரின் படைப்புகளையும் எற்று ஊக்குவிற்பதற்காக எடுத்த தங்களின் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி அய்யா.என்னால் முடிந்த படைப்பை நிச்சயம் அனுப்புவேன்.நன்றி அய்யா.

    ReplyDelete
  20. பயிற்சி கொடுத்து
    முயற்சிக்க வைக்கும்
    மாஸ்டருக்கு ஒரு சல்யூட்.

    மாணவர் மலர் ஆக்கங்களை எந்த விலாசத்துக்கு அனுப்புவது. classroom2007-mail id க்கு அனுப்பலாமா .

    ReplyDelete
  21. /////Blogger sekar said...
    அய்யா வணக்கம்
    ஜோதிட முன்னோடி திரு சீரோ பற்றிய ஆக்கமுள்ள பதிவு . நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////Blogger R.Srishobana said...
    வணக்கம் அய்யா,
    இன்றைய தொகுப்பு மிக அருமை.இவ்வாறான மேதைகளின் வாழ்க்கையை அறிவதை விடவா சினிமாக்கள் பெரியதாக உள்ளன?அவரது பிரமிட் எண் ஜோதிடம் தான் இன்று மிகவும் சரியான எண் கணித முறையாக பலரும் ஏற்றும் கொண்டுள்ளனர்.அவ‌ரை ப‌ற்றி அறியாத செய்திக‌ளை இன்று அறிந்தேன்.ந‌ன்றி அய்யா.
    என் போன்ற‌ மாணவ‌ர்க‌ளும் வகுப்பறையில் "செமினார்" எடுப்பது சற்று பயமாக இருந்தாலும் என் போன்றோரின் படைப்புகளையும் எற்று ஊக்குவிற்பதற்காக எடுத்த தங்களின் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி அய்யா.என்னால் முடிந்த படைப்பை நிச்சயம் அனுப்புவேன்.நன்றி அய்யா.//////

    ஆகா அனுப்புங்கள். துவக்கத்தில் தேவைப்பட்டால் திருத்தங்களை நான் செய்துகொள்கிறேன். கவலை வேண்டாம்:
    அனுப்ப வேண்டிய முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  23. //////Blogger thanusu said...
    பயிற்சி கொடுத்து
    முயற்சிக்க வைக்கும்
    மாஸ்டருக்கு ஒரு சல்யூட்.
    மாணவர் மலர் ஆக்கங்களை எந்த விலாசத்துக்கு அனுப்புவது. classroom2007-mail id க்கு அனுப்பலாமா?////////

    அனுப்பலாம். அனுப்புங்கள்: classroom2007@gmail.com

    ReplyDelete
  24. நேரம் கிடைக்கும் போது என் ஆக்கத்தையும் அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  25. /////Blogger vprasanakumar said...
    nalla padhivu/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger ananth said...
    நேரம் கிடைக்கும் போது என் ஆக்கத்தையும் அனுப்பி வைக்கிறேன்./////

    ஆகா, அனுப்பிவையுங்கள் ஆனந்த்! ஆவலோடு இருக்கிறேன்!

    ReplyDelete
  27. prema-
    iyya vanakkam.chiero pattri puthiya pathivu padithen.munadiye ungal pathivu ondril ivarai pattriya kurippukalaum padithen.migavum suvaraciamaga ullathu.thangalathu pathivugal anathum arumai.naanum theevira vasagi.

    ReplyDelete
  28. வாத்தியார் ஐயா வணக்கம்.

    கடந்த நான்கு பாடத்திற்கு வரமுடியாமல் போனதிற்கு மன்னிக்க வேண்டுகின்றேன் ஐயா.

    முதற்காரணம் காரணம் லேப்டாப் பழுது ஆகி விட்டது , இரண்டாவது காரணம் அலுவலக கம்ப்யூட்டர் மூலமும் படிக்க இயலாது போகி விட்டது, காரணம் நிர்வாகத்திற்கு தேவை இல்லாத அனைத்தையும் நல்ல பெரிய திண்டுகல்லு பூட்டு போட்டு பூட்டி உள்ளார்கள் ஐயா.

    இப்பொழுது கடந்த நாட்கள் பாடத்தை படித்தது நண்பனின் கணினி மூலம் தான் ஐயா.

    ReplyDelete
  29. சுவையான பதிவு கலக்கலான உங்கள் நடையில். சாவி எழுதிய தொடரின் பெயரைச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே....

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com