-------------------------------------------------------------------------------------
Astrology என் கேள்விக்கென்ன பதில்? அவன் பார்வைக்கென்ன பொருள்?
எனக்கு நம் மாணவக் கண்மணிகளிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைவிட, வழிப்போக்கர்களிடமிருந்து, அதாவது யாராவது சொல்லி நம் வகுப்பறைக்குள் நுழைபவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களே அதிகம்!
ஜோதிட வகுப்பறை என்று தெரிந்தவுடன், செய்கின்ற முதல் காரியம் தங்கள் ஜாதத்தைப் பார்க்க வேண்டி மின்னஞ்சல் கொடுத்துவிடுவார்கள்.
நேரமில்லை என்று ஒதுக்கி வைத்தால், விடமாட்டார்கள். தொடர்ந்து நினைவூட்டல்கள் (ரிமைண்டர்கள்) வந்து கொண்டிருக்கும்.
“ஜோதிடம் என் தொழிலல்ல, என்னுடைய போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஜோதிடத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது மட்டும்தான் எனது நோக்கம். எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. உங்களைப் போலவே எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான். கூடுதல் நேரத்தைக் கடவுள் அளிக்கவில்லை” என்றாலும் விடமாட்டார்கள்.
குறைந்தது தினமும் ஐந்து மின்னஞ்சல்களாவது வரும். அவை அனைத்திற்கும் எப்படி நான் பதில் எழுதுவது?
எல்லாம் - அதாவது 90 சதவிகிதம் இப்படித்தான் இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------
“சார், என்னுடைய பிறந்த தேதியையும், நேரத்தையும் கீழே கொடுத்துள்ளேன். என் எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று பார்த்துச் சொல்லுங்கள்”
பிறந்த ஊரைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அத்துடன் தங்களுடைய ஜாதகத்தை இணைத்து அனுப்பியிருக்கவும் மாட்டார்கள். ஆனால் 108 தடவை..Please help me..என்று தவறாமல் குறிப்பிட்டிருப்பார்கள்.
அதில் இரண்டு விஷயம். பிறந்த ஊர் முக்கியமில்லையா? அது இல்லாமல் எப்படிச் ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்பது?
இரண்டாவது விஷயம் ‘எதிர்காலம்’ (Future) என்றால் என்ன?
எதிர்காலம் என்பது நூற்றுக் கணக்கான கேள்விகளை உள்ளடக்கியது.
ஜாதகருக்கு இப்போது 25 அல்லது 30 வயதென்றும் அவர் 75 முதல் 80 ஆண்டுகள் காலம்வரை உயிர் வாழக்கூடியவர் என்றும் வைத்துக் கொண்டால், இடைப்பட்ட அந்த 50 ஆண்டு காலத்திலும் அவர் வாழ்க்கை எப்படி இருக்கும், எங்கெங்கே முடிச்சு உள்ளது, எங்கெங்கே திருப்புமுனை உள்ளது, எங்கெங்கே மாத்து வாங்குவார் என்றேல்லாம், நாசா கழகத்தில் ஆராய்ச்சி செய்வது போல ஆராய்ந்து அவருக்குப் பதில் சொல்ல வேண்டும். அதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கினம், மற்றும் ஒன்பது கிரகங்களையும், 12 வீடுகளையும் அலசுவதோடு, எதிர் கொள்ளவிருக்கும் மகாதிசைகள் மற்றும் புத்திகள், 50 ஆண்டுகளுக்கான குரு, மற்றும் சனியின் கோள்சாரமாற்றங்களையும் பார்த்துப் பலன்களைச் சொல்ல வேண்டும்.
பன்னிரெண்டு வீடுகள். ஒருவீட்டிற்கு மூன்று காரகத்துவங்கள். ஆகமொத்தம் குறைந்தது அவருடைய 36 துணிகளையாவது சோப்புப் போட்டு அலசிப் பிழிந்து காயவைத்து, அயர்ன் செய்து, மடித்துப் பார்சல் செய்து தரவேண்டும்
அதெல்லாம் சாத்தியமா?
சாத்தியம்தான்!!! சாத்தியமில்லாதது எதுவுமே இல்லை!
ஒரு நாள் முழுக்க குறைந்தது எட்டு மணி நேரம் சிரத்தையாக அமர்ந்தால் அலசிவிடலாம். அதற்கு அடுத்ததாக அலசியதை எல்லாம் ஒரு 40 பக்க நோட்டுப் புத்தகத்தில் வரிசையாகப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேலும் ஒரு நாள் பிடிக்கும்
அந்தச் செயலுக்கு, ‘ஆயுள்காலப் பலன்’ என்று பெயர். அந்தக் காலத்தில், ஜோதிடர்கள், கஞ்சி வெள்ளம் + அச்சு வெல்லத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பொறுமையாகத் தங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு அதைச் செய்து கொடுத்தார்கள். என் தந்தையாருக்கு, அவருடைய ஜோதிட நண்பர் திரு. ஆசான் என்பவர் செய்து கொடுத்தார். அது நடந்து அறுபது ஆண்டுகள் இருக்கும். கணினி வசதி இல்லாத காலம். அஷ்டவர்கத்தையெல்லாம் மனதால் கணக்கிட்டு எழுத வேண்டும். அதற்காக என் தந்தையார் அவருக்கு ஐநூறு ரூபாய் காணிக்கை யாகக் கொடுத்தாராம். அன்றைய காலகட்டத்தில் இந்தியன் வங்கியில் (அன்றையத் தேதியில் அது தனியார் வங்கி) குமாஸ்தாவின் மாத சம்பளம் வேறும் ரூ.125:00. என் தந்தையார் கொடுத்த பணத்தின் அன்றைய மதிப்பை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
ஆசான் எழுதிக் கொடுத்த பலன்கள் மிகத் துல்லியமாக இருந்தன. ஆயுள் 74 வயது என்று எழுதிக்கொடுத்திருந்தார். என் தந்தையாரும் அதை அடிக்கடி சொல்வார். அதன்படியே என் தந்தையாரும் 74ஆவது வயது முடிந்த நிலையில் இறந்துவிட்டார். மாஸிவ் ஹார்ட் அட்டாக். பத்து நிமிடத்தில் உயிர் பிரிந்துவிட்டது.
இன்றையத் தேதியில் எந்த ஜோதிடரும் ஆயுள்காலப் பலனைக் கணித்து எழுதிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.
ஆகவே எந்த ஜோதிடரிடம் சென்றாலும் என்னுடைய எதிர்காலம் எப்படி என்று அசட்டுத்தனமாக யாரும் கேட்காதீர்கள்.
உங்களுடைய பிரச்சினையைக் குறிப்பிட்டு அதற்கு மட்டும் தீர்வைக் கேளுங்கள்.
மூன்று உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்.
1. “பொறியாளர் படிப்பைப் படித்து முடித்துவிட்டேன். ஒரு ஆண்டாகிறது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்?”
2. “வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமணம் முடியமாட்டேன் என்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்?”
3. “எனக்குத் தொழிலில் பிரச்சினை. நிறையக் கடன் உள்ளது. எப்போது பிரச்சினை (கடன்) தீரும்?
Your question should be specific with a little narration of the prevailing problem and also you should produce your full horoscope
அதற்கு அடுத்து, வேறு ஒரு தொடர் பிர்ச்சினை இருக்கிறது. அதென்ன தொடர் பிரச்சினை?
“சார், என் பெண்ணின் பிறப்பு விபரத்தையும், அவளுக்குப் பார்த்திருக்கும் வரனின் பிறப்பு விபரத்தையும் அனுப்பியுள்ளேன். இருவருக்கும் ஜாதகம் பொருந்துகிறதா? திருமணம் செய்யலாமா? என்று சொல்லுங்கள். நேரமில்லை என்று ஒதுக்கிவிடாதீர்கள். என் பெண்ணின் வாழ்வே உங்கள் கையில்தான் இருக்கிறது” என்ற வேண்டுகோளுடன் மின்னஞ்சல்கள் வரும்.
பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் (பத்துப் பொருத்தங்கள்), தோஷப் பொருத்தம், தசா சந்திப்பு இன்மை போன்றவற்றை அலசிப் பதில் சொல்ல வேண்டும். பாவம் போனால் போகிறது என்று பார்த்து, பொருந்தாத நிலையில், பொருந்தவில்லை. வேண்டாம் என்று சொன்னால், பிரச்சினை அத்துடன் தீர்ந்துவிடாது. நீங்கள் மாட்டிக்கொண்டு விடுவீர்கள். தொடர்ந்து திருமண மையங்களில் வாங்கிய வேறு ஐந்து வரன்களின் விபரத்தை அனுப்பி, அவற்றுள் எது பொருந்துகிறது சொல்லுங்கள் என்று அடுத்த தினமே வேறு ஒரு மின்னஞ்சல் வரும்.
கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார் போலும்:
“சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”
அதை நான் மாற்றி இப்படிச் சொல்வது வழக்கம்: “துன்பம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”
-------------------------------------------------------------------------------
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் கலக்கலாக இருக்கும்.
“சார், நான் ஒருவரைத் தீவிரமாகக் காதலிக்கிறேன். மூன்று ஆண்டுகளாகக் காதலிக்கிறேன். எங்கள் இருவரின் ஜாதகங்களையும் அனுப்பியுள்ளேன். எங்கள் காதல் நிறைவேறுமா? தயவு செய்து பார்த்துச் சொல்லுங்கள்”
காதல் என்று வந்தாகிவிட்டது. அதற்குப் பிறகு எதற்கு ஜாதகம்? பார்க்க வேண்டும் என்று ஆசையிருந்தால், காதலிக்கும் முன்பு அல்லவா அதைப் பார்த்திருக்க வேண்டும்?
இப்போது பார்த்துப் பொருந்தவில்லை என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? அவனை வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா? சொன்னால் அவன் சும்மா விட்டுவிடுவானா? காதலுக்கு எத்தனை ஆதாரங்கள் அவனிடம் சிக்கி உள்ளதோ - பிரச்சினை செய்ய மாட்டானா?
“காதல் புனிதமானது. அவனுடன் அல்லது அவளுடன் ஒரு மாதம் வாழ்ந்தாலும் போதும். அதுதான் காதல். ஜாதகத்தை எல்லாம் பார்க்காதீர்கள். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.” என்று அறிவுறுத்தி எழுதினால், விட மாட்டார்கள்.
“சார், அவனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் வராது. வந்தாலும், மகளிர் காவல் நிலையத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்தி, முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணிவிடுவேன். அதில் எனக்குத் தில் இருக்கிறது. என் பிரச்சினை எல்லாம் வேறு விதமானது. அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன். எங்களுடைய காதல் தெரிந்தால் என் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை எப்படி ஒப்புக்கொள்ளச் செய்வது? ஜாதகத்தில் அதற்கான சான்ஸ் இருக்கிறதா? அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள். இல்லை அதற்கு ஒரு உபாயத்தையாவது சொல்லுங்கள்.”
என் கேள்விக்கென்ன பதில்?
அவன் பார்வைக்கென்ன பொருள்?
அதாவது ஜாதகத்தில் உள்ள ஏழாம் இடத்தான் அல்லது களத்திரகாரன் சுக்கிரனின் பார்வையைத்தான் பார்வைக்கென்ன பொருள் என்று சொல்லியிருக்கிறேன்.
பல பக்கங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது. படித்துப் பாருங்கள்.
பதிவில் பாடங்களை எழுதுவது மட்டுமே என்னுடைய பிரதான வேலை. மற்றதற்கெல்லாம் எனக்கு நேரமிருக்காது என்பதை அனைவரும் உணரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
சரி, இவர்களையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?
ஸிம்ப்பிள். நேரமில்லை. மன்னிக்கவும் என்று பதில் எழுதிவிடுவேன்.
எல்லோருக்குமா?
இல்லை. இரண்டொருவருக்குப் பார்த்துச்சொல்வேன். அவர்கள் கொடுத்திருக்கும் விவரங்களும், கேள்வியும் சரியாக இருந்தால்! அது மனிதாபிமான அடிப்படையில். அதுவும் வகுப்பறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான்.
வகுப்பறை உறுப்பினர் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?
அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால் இங்கே அதைச் சொல்ல முடியாது. ஆகவே அது ரகசியம்!:-)))))
நன்றி, வணக்கத்துடன்,
மற்றும் அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

முன்னரே கூறிய கருத்துக்கள்தான். புதிய உறுப்பினர்களுக்காக மீண்டும் சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.
ReplyDeleteதங்களுக்கு இதைப் போல அன்புத் தொல்லைகள் வருவதை தவிர்க்க இயலாது! ஆனால் கோரிக்கை விடுப்போர் மனம் நோகாமல் தவிர்ப்பது அசாத்தியமானது!
ReplyDeleteஜோசியத்தில் முதுகலை நிலையில் பாடங்கள் நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் அரிச்சுவடி கூட படிக்காத நான் ஜோசியம் பற்றி விளக்கம் கேட்பது நன்றாக இருக்காதுதான். வேறு வழியில்லை. என் மனதில் தோன்றும் ஐயப்பாட்டை நீங்கள் நீக்குவீர்கள் என்று இதை எழுதுகிறேன். கடந்த காலம் நமக்கே தெரியும். நிகழ்காலமும், எதிர்காலமும் தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆவல்தான். அப்படி எதிர்காலம் தெரிந்துவிட்டால் ஒரு மதார்ப்பு வந்துவிடாதா? இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தபின் அதில் என்ன 'த்ரில்' இருக்கும். கிரிக்கெட் போட்டியை 'லைவ்வாக'ப் பார்த்தா த்ரில். பழைய ஆட்டமொன்றை போடுகின்ற போது, முடிவு தெரிந்த ஆட்டத்தைப் பார்ப்பதில் சுவாரசியம் இருக்குமா? ஜோசியம் அறிந்த உங்கள் மாணவ மணிகள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். இது ஒரு அரிச்சுவடி கேள்விதான்; காரணம் எனக்கு இந்த சப்ஜெட்டில் எதுவும் தெரியாது.
ReplyDelete///“சார், அவனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் வராது. வந்தாலும், மகளிர் காவல் நிலையத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்தி, முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணிவிடுவேன். அதில் எனக்குத் தில் இருக்கிறது. என் பிரச்சினை எல்லாம் வேறு விதமானது. அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன். எங்களுடைய காதல் தெரிந்தால் என் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ///
ReplyDeleteஐயா,
இந்த வரிகள் சிரிப்பை வர வழைத்தது. இந்த நூற்றாண்டில் இவ்வளவு பத்தாம்பசலிப் பெண்களா? என்று பாவமாகவும் இருந்தது.
இப்பொழுதெல்லாம் ...
"ரெடி? ஹன்றேட் பெர்சென்ட்? போகலாமா? ....
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம், அப்புறம் ரிசப்ஷனுக்கு எல்லோரையும் கூப்பிடலாம்....."
அலைபாயுதே படத்திர்க்கப்புறம் இந்த நூற்றாண்டில் பெண்களின் லேட்டஸ்ட் ட்ரென்ட் இது.
பாவம் இது கூடத் தெரியாமல்...ஹ்ம்ம்
எப்படி முறையாக கேள்வி கேட்க வேண்டும் சொல்லிக்கொடுதுவிட்டீர்கள், இனிமேல் முழுமையான ஜாதகத்துடன், தெளிவான கேள்விகளுடன் பல மின்னஞ்சல்கள் வரப்போவது நிச்சயம். பதிவிற்கு நன்றி.
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமுன்னரே கூறிய கருத்துக்கள்தான். புதிய உறுப்பினர்களுக்காக மீண்டும் சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.////
சில சேர்க்கைகள் உள்ளன. உதாரணம்: எதிர்காலம் பற்றிய விளக்கம்! நன்றி சார்!
/////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteதங்களுக்கு இதைப் போல அன்புத் தொல்லைகள் வருவதை தவிர்க்க இயலாது! ஆனால் கோரிக்கை விடுப்போர் மனம் நோகாமல் தவிர்ப்பது அசாத்தியமானது!////
இல்லை. பழகிவிட்டது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். பொறுமை முக்கியமானது.
/////Blogger Thanjavooraan said...
ReplyDeleteஜோசியத்தில் முதுகலை நிலையில் பாடங்கள் நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் அரிச்சுவடி கூட படிக்காத நான் ஜோசியம் பற்றி விளக்கம் கேட்பது நன்றாக இருக்காதுதான். வேறு வழியில்லை. என் மனதில் தோன்றும் ஐயப்பாட்டை நீங்கள் நீக்குவீர்கள் என்று இதை எழுதுகிறேன். கடந்த காலம் நமக்கே தெரியும். நிகழ்காலமும், எதிர்காலமும் தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆவல்தான். அப்படி எதிர்காலம் தெரிந்துவிட்டால் ஒரு மதார்ப்பு வந்துவிடாதா? இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தபின் அதில் என்ன 'த்ரில்' இருக்கும். கிரிக்கெட் போட்டியை 'லைவ்வாக'ப் பார்த்தா த்ரில். பழைய ஆட்டமொன்றை போடுகின்ற போது, முடிவு தெரிந்த ஆட்டத்தைப் பார்ப்பதில் சுவாரசியம் இருக்குமா? ஜோசியம் அறிந்த உங்கள் மாணவ மணிகள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். இது ஒரு அரிச்சுவடி கேள்விதான்; காரணம் எனக்கு இந்த சப்ஜெட்டில் எதுவும் தெரியாது.//////
பதினைந்து வருடங்களாகக் கஷ்டத்தில் மிதப்பவனுக்கு, இன்னும் மூன்று வருடத்தில் ராகு திசை முடிந்தவுடன் கரை ஏறிவிடுவாய் என்று கணித்துச் சொல்லும்போது. அடுத்து வரும் 3 ஆண்டுகளையும் ஒருவித நிம்மதியோடு எதிர்கொள்வான் இல்லையா? அந்தப் பணியைத்தான் ஜோதிடத்தின் மூலம் செய்ய முடியும். ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
Blogger தேமொழி said...
ReplyDelete///“சார், அவனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் வராது. வந்தாலும், மகளிர் காவல் நிலையத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்தி, முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணிவிடுவேன். அதில் எனக்குத் தில் இருக்கிறது. என் பிரச்சினை எல்லாம் வேறு விதமானது. அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன். எங்களுடைய காதல் தெரிந்தால் என் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ///
ஐயா,
இந்த வரிகள் சிரிப்பை வர வழைத்தது. இந்த நூற்றாண்டில் இவ்வளவு பத்தாம்பசலிப் பெண்களா? என்று பாவமாகவும் இருந்தது.
இப்பொழுதெல்லாம் ...
"ரெடி? ஹன்றேட் பெர்சென்ட்? போகலாமா? ....
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம், அப்புறம் ரிசப்ஷனுக்கு எல்லோரையும் கூப்பிடலாம்....."
அலைபாயுதே படத்திர்க்கப்புறம் இந்த நூற்றாண்டில் பெண்களின் லேட்டஸ்ட் ட்ரென்ட் இது.
பாவம் இது கூடத் தெரியாமல்...ஹ்ம்ம்
எப்படி முறையாக கேள்வி கேட்க வேண்டும் சொல்லிக்கொடுத்துவிட்டீர்கள், இனிமேல் முழுமையான ஜாதகத்துடன், தெளிவான கேள்விகளுடன் பல மின்னஞ்சல்கள் வரப்போவது நிச்சயம். பதிவிற்கு நன்றி.//////
வருபவற்றில் வேண்டாதவைகளை எப்படி முறையாகத் தவிர்ப்பது என்றும் தெரியும் சகோதரி!:-)))))
Guru Vanakkam,
ReplyDeleteWe understand your concern.
RAMADU.
அய்யா ஒரு சின்ன suggestion.
ReplyDeleteசில ஜாதகங்களை, வாத்தியார் அலசலுக்கு மாணவர்கள் முன் வைக்கலாமே.. அல்லது மாணவர்களையே அவர்களிடம் உள்ள ஜாதகங்களை முன்னிருத்தி அலசச் சொல்லலாமே. மேல் வகுப்பில் seminar எடுப்பதைப் போல.
இது மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் மற்றும் ஜொதிட பலன்களை சொல்வதில் தன்னம்பிக்கையும் பிறக்கும்.
இது ஒரு exercise மாதிரியும் இருக்கும்.
தவறாயிருப்பின் மன்னிக்கவும்.
////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru Vanakkam,
We understand your concern.
RAMADU.////
உங்களின் புரிதலுக்கு நன்றி நண்பரே!
/////Blogger Govindasamy said...
ReplyDeleteஅய்யா ஒரு சின்ன suggestion.
சில ஜாதகங்களை, வாத்தியார் அலசலுக்கு மாணவர்கள் முன் வைக்கலாமே.. அல்லது மாணவர்களையே அவர்களிடம் உள்ள ஜாதகங்களை முன்னிருத்தி அலசச் சொல்லலாமே. மேல் வகுப்பில் seminar எடுப்பதைப் போல.
இது மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் மற்றும் ஜொதிட பலன்களை சொல்வதில் தன்னம்பிக்கையும் பிறக்கும்.
இது ஒரு exercise மாதிரியும் இருக்கும்.
தவறாயிருப்பின் மன்னிக்கவும்./////
கேள்வி பதில் பகுதியை நடத்தினேன். பலர் தங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களை பொது சந்தேகம்போல தோற்றமளிக்கும்படி கேள்வி கேட்டார்கள். ஜாதகங்களை அலசலுக்கு அனுப்பச் சொன்னால், 90 சதவிகிதம் பேர்கள் தங்கள் சொந்த ஜாதகத்தைத்தான் அனுப்புவார்கள். எப்போது என்று பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேல் நிலைப் பாடங்களை எனது தனி இணைய தளத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறேன். பாடங்கள் முடிந்தவுடன். அங்கு வரும் (எண்ணிக்கையில் குறைவாக உள்ளார்கள் அவர்கள்) மாணவர்களுக்கு இந்த அலசல் பயிற்சியைக் கொடுக்க உள்ளேன்! அத்துடன் மேல்நிலைப் பாடங்களைப் படித்து முடித்தவர்களுக்கே அது சாத்தியமும் ஆகும்!
Dear Sir,
ReplyDeleteThis is repeated for people who are repeatedly asking the same questions...
Thanks...
அய்யா,
ReplyDeleteநான் தங்களின் பதிவில் பின்னுட்டமிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன'
பலகாரணங்களால் மேலொட்டமாக வகுப்பு பாடஙகலையும் ,மட்ற பதிவுகளயும் படித்து விட்டு, பின்னூட்டமிடாமல் இருந்து விட்டேன்.
2010 செப்டம்பெர் க்கு பிறகு எனது தாயின் உடல் நலக்குரைவு ,தந்தஇன்
மரணம் , மட்ற்றூம் இட ,வீடு மாற்றம் , மகனின் திருமணம் ஆகீய காரணஙகளால் நேர குரைவே ஆகும்.
தங்களின் புத்தக வெளியீடு எப்போது? அல்லது முடிந்துவிட்டதா? அப்படியானால் எங்கு கிடைக்கும்?
சந்தனகுழலி நாகராஜன்
"I am continuously watching your classroom website" என்பது எந்த அளவுக்கு உண்மை என்றுத் தெரியவில்லை. "Watching" மட்டும் தான் என்பதாலோ!?
ReplyDeleteவகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டு ஒப்படைப்பை (Project) அவரவர் செய்து கொள்வது தான் வகுப்பறையில் உட்கார்ந்ததற்கு அர்த்தம் அல்லவா!
உங்களின் கஷ்டம் புரிகிறது...
இருந்தும், இத்தனை பொறுமையாக படித்த விசயங்களை
அதிலும் நயம் பட பதிவிடும் தங்களின் திறமை தான்
வெகுவாக வியப்பில் ஆழ்த்துகிறது...
சுப்பையா என்ற பெயராலோ!..
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
////Blogger Arul said...
ReplyDeleteDear Sir,
This is repeated for people who are repeatedly asking the same questions...
Thanks.../////
அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. வாத்தியாரின் வேலைப் பளுவை அவர்கள் நினைப்பதில்லை.
////Blogger santhanakuzhali said...
ReplyDeleteஅய்யா,
நான் தங்களின் பதிவில் பின்னுட்டமிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன'
பலகாரணங்களால் மேலொட்டமாக வகுப்பு பாடங்களையும் ,மற்ற பதிவுகளயும் படித்து விட்டு, பின்னூட்டமிடாமல் இருந்து விட்டேன்.
2010 செப்டம்பெருக்குப் பிறகு எனது தாயின் உடல் நலக்குறைவு ,தந்தையின் மரணம் , மற்றும் இட ,வீடு மாற்றம் , மகனின் திருமணம் ஆகிய காரணஙகளால் நேரக் குறைவே ஆகும்.
தங்களின் புத்தக வெளியீடு எப்போது? அல்லது முடிந்துவிட்டதா? அப்படியானால் எங்கு கிடைக்கும்?
சந்தனகுழலி நாகராஜன்////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி. உங்களின் இன்னல்கள் தீர இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன. வெளிவரும்போது முறையான அறிவிப்பு பதிவில் வரும்!
//////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDelete"I am continuously watching your classroom website" என்பது எந்த அளவுக்கு உண்மை என்றுத் தெரியவில்லை. "Watching" மட்டும் தான் என்பதாலோ!?
வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டு ஒப்படைப்பை (Project) அவரவர் செய்து கொள்வது தான் வகுப்பறையில் உட்கார்ந்ததற்கு அர்த்தம் அல்லவா!
உங்களின் கஷ்டம் புரிகிறது...
இருந்தும், இத்தனை பொறுமையாக படித்த விசயங்களை
அதிலும் நயம் பட பதிவிடும் தங்களின் திறமை தான்
வெகுவாக வியப்பில் ஆழ்த்துகிறது...
சுப்பையா என்ற பெயராலோ!..
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////
என் உண்மையான பெயர் சுப்பிரமணியன். என் அன்னையால் அது சுப்பையா என்று மாற்றப்பெற்றது. நான் துவக்கத்தில் தீவிர வாசகன். அது மட்டுமே என் தகுதி. எழுதவைத்ததெல்லாம் பழநிஅப்பன். முதலில் குறும்பத்திரிக்கைகளில் எழுதவைத்தான். சிறுகதைகள் எழுதுவதில் பெயர் வாங்கிக்கொடுத்தான். பிறகு பதிவுகளில் எழுதத் துவங்கினேன். கதை எழுதும் உத்தி வசப்பட்டமையால், ஜோதிடப் பாடத்தையும் கதையைப் போல சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இத்தனை மாணவர்களுக்கு அதுதான் - அந்த உத்திதான் காரணம். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு எழுத்தாளர்கள் 1. Jeffery Archer 2. James Hadley Chase. ஆர்ச்சரின் Twist in the Tale' சிறுகதைத் தொகுப்பு நூலைப் படித்திருக்கிறீர்களா? படிக்கவில்லை என்றால் தேடிப்பிடித்துப் படியுங்கள். சிறுகதைகளின் இலக்கணம் அந்த நூல்!
வ ப
ReplyDelete//////Thanjavooraan said... நிகழ்காலமும், எதிர்காலமும் தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆவல்தான். அப்படி எதிர்காலம் தெரிந்துவிட்டால் ஒரு மதார்ப்பு வந்துவிடாதா? இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தபின் அதில் என்ன 'த்ரில்' இருக்கும்.//////////
ReplyDeleteநானும் ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஒரு சுவாரஸ்யத்துக்காக வரும் போகும் ஜோசியர்களிடமெல்லாம் ஜோசியம் பார்த்துப் பலன் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அவர்களால் ஒரு நடக்க வாய்ப்பிருக்கும் சம்பவங்களைப் பற்றி ஒரு கோடிட்டுக் காட்டத்தான் முடிகிறதே தவிர அட்சர சுத்தமாக சொல்லமுடிவதில்லை..ஒரு முறை பலிக்கும் விஷயம் அடுத்த தடவை சொல்லும் போது எடுபடுவதில்லை..கிட்டத்தட்ட ப்ராபபபிளிட்டி..கான்செப்ட்தான்...அப்படியே சொன்னபடியே நடந்து விட்ட ஒரு விஷயம் ஒரு வருடத்துக்கு முன் நடந்தது..அதே ஜோசியர் சொன்னபடி அடுத்த தரம் நடக்கவில்லை..ஒரு அன்செர்டைன்ட்டி..இருக்கிறது..
இதுதான் த்ரில்..
//////////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா,
இந்த வரிகள் சிரிப்பை வர வழைத்தது. இந்த நூற்றாண்டில் இவ்வளவு பத்தாம்பசலிப் பெண்களா? என்று பாவமாகவும் இருந்தது.
இப்பொழுதெல்லாம் ...
"ரெடி? ஹன்றேட் பெர்சென்ட்? போகலாமா? ....
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம், அப்புறம் ரிசப்ஷனுக்கு எல்லோரையும் கூப்பிடலாம்....."
அலைபாயுதே படத்திர்க்கப்புறம் இந்த நூற்றாண்டில் பெண்களின் லேட்டஸ்ட் ட்ரென்ட் இது.
பாவம் இது கூடத் தெரியாமல்...ஹ்ம்ம்///////
இந்த வரிகள் சிரிப்பை வர வழைத்தது.
இந்த நூற்றாண்டில் இவ்வளவு பத்தாம்பசலிப் பெண்களா? என்று பாவமாகவும் இருந்தது.(இது என்னோட கமென்ட்.)
இப்பொழுதெல்லாம் ...jz..a convenient date..தட் ஸ் ஆல்..ரொம்பப் போனா living together.. for a short time ..அவ்வளோதான்..
கல்யாணமாம்..ரிசப்ஷனாம்..
அலைபாயுதே படம் ரிலீஸ் ஆகி பத்து வருஷத்துக்கு மேலாச்சு..
SIR ,
ReplyDeleteThank U very much for ur immediate kind reply
வணக்கம் அய்யா, தங்கள்ளுடைய தனி இணைய தளத்தில் அனுமதி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். நான் உங்களுடைய அணைத்து ஜோதிட பாடங்களையும் படித்துள்ளேன். மேலும், நான் என்ன தகுதியை வளர்த்துகொள்ள வேண்டும். I have already read 2-3 times your valuable lessons from 1-490. Also I have bought many astrology related books and read many times. I am learnt different dimension of information whenever I read your articles and other books again and again. I still I believe I need to be strong in basics. Thanks for your service.
ReplyDeleteநிகழ்காலமும், எதிர்காலமும் தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆவல்தான். அப்படி எதிர்காலம் தெரிந்துவிட்டால் ஒரு மதார்ப்பு வந்துவிடாதா? இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தபின் அதில் என்ன 'த்ரில்' இருக்கும்.//////////
ReplyDeleteஜோதிடம் பார்ப்பது உங்கள் முயற்சிகளுக்கு எந்தெந்த நேரங்களில் நல்ல விளைவுகள் இருக்கும், எந்தெந்த நேரங்களில் மோசமான விளைவுகள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மற்றபடி முயற்சி, செயல் உங்கள் கையில்தான் இருக்கிறது.
ஒரு உழவன் பருவமறிந்து விதைப்பது போன்றதுதான் இது. இன்ன பருவத்தில் விதைத்தால் நல்ல மகசூல் என்பது விதி. ஆனால் விதைப்பதை கடவுள் தூண்ட மாட்டார். அதற்கான முயற்சிகளையும், செயல்களையும் நாம்தான் செய்ய வேண்டும். இன்ன பருவத்தில் விதைத்தால் மோசமான மகசூல் என்பது தெரிந்தால் விதைக்காமல் இருப்பதையும் நாம்தான் செய்ய வேண்டும்.
//ஜோதிடம் பார்ப்பது உங்கள் முயற்சிகளுக்கு எந்தெந்த நேரங்களில் நல்ல விளைவுகள் இருக்கும், எந்தெந்த நேரங்களில் மோசமான விளைவுகள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மற்றபடி முயற்சி, செயல் உங்கள் கையில்தான் இருக்கிறது//.
ReplyDeleteஇந்த விளக்கம் சரியானதாகப் படுகிறது. பலன் தெரிந்துவிட்டால் நம் முயற்சி, உழைப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் என் சந்தேகம். அதை நீக்க உங்கள் பதில் பயன்படுகிறது. நன்றி.
/// அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. வாத்தியாரின் வேலைப் பளுவை அவர்கள் நினைப்பதில்லை. ///
ReplyDeleteஅவ்வாறு அனுப்புபவர்கள் சில மணித்துளிகள் Spare செய்து ஒவ்வொரு பதிவையும் நீங்கள் எத்தனை மணிக்கு Post / Upload செய்கிறீர்கள் என்பதை at the bottom of the Blog பார்த்து விட்டு அவர்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை வரும் விரத நாட்களில் கூட நாங்களெல்லாம்(generally speaking) அதிகாலை 3 or 4 மணிக்கு விழித்திருக்க மாட்டோம். அப்படியிருக்க 60 வயதில் உங்கள் உழைப்பு....( நீங்கள் முன்பு உங்கள் ஜாதகத்தில் குரு, சனி, ராகு அமர்ந்த வீடுகளை கூறியதை வைத்து Age'ஐ guess செய்தேன்).
குரு வணக்கம்,ஐயா நீங்கள் இடும் தலைப்பே உணர்த்துகிறது சொல்லப்போவதை எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு அருமையான தலைப்புகள். மீண்டும் ஒரு அருமையான பதிவை வெளியிட்டு அசத்திவிட்டீர்கள்.எல்லோரும் தாங்களிடம் ஜாதக சம்பந்தமான கேள்வி கேட்பதன் அடிப்படையே எதிர்காலத்தை அறியத்தான்.ஆனால் நீங்கள் சொல்வது போன்ற கேள்விகள் வருவதன் அடிப்படை கேட்பவர்களுக்கு ஜோதிடத்தைப்பற்றிய அறியாமையும்,ஆர்வக்கோளாறும் தான் காரணமேயன்றி வேறு ஒன்றுமில்லை.அவர்களுக்கு(என்னையும் சேர்த்துத்தான்)த் தெரியாது அதில் உள்ள கஷ்டம்.நீங்கள் சொல்வது போல் பல்லக்கில் செல்பவனை வேடிக்கை பார்ப்பவன்,நாமும் ஒரு நாள் பல்லக்கில் செல்வோமா?,வேடிக்கை பார்ப்பதோடு முடிந்துவிடுமா? என அறியத்தான்.அதனால் தான் எதிர்காலம் என்ற ஒரே கேள்வியைக் கேட்டு உங்களுக்கு அன்புத்தொல்லை தருகிறார்கள்.மருதமலை ஆண்டவனின் அருளினால் அனைத்தையும் சமாளிக்கிறீர்கள் அதுவே பெரிய விசயம் தான்.தொடரட்டும் தாங்களின் பணி.
ReplyDelete//// அவர்களால் ஒரு நடக்க வாய்ப்பிருக்கும் சம்பவங்களைப் பற்றி ஒரு கோடிட்டுக் காட்டத்தான் முடிகிறதே தவிர அட்சர சுத்தமாக சொல்லமுடிவதில்லை..ஒரு முறை பலிக்கும் விஷயம் அடுத்த தடவை சொல்லும் போது எடுபடுவதில்லை..கிட்டத்தட்ட ப்ராபபபிளிட்டி..கான்செப்ட்தான்...அப்படியே சொன்னபடியே நடந்து விட்ட ஒரு விஷயம் ஒரு வருடத்துக்கு முன் நடந்தது. ////
ReplyDeleteஎன் அனுபவத்தில் கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட தடைகள், துன்பங்கள், health problems, அம்மா, அப்பா பற்றி ஓரளவு, நம் Character பற்றி ஓரளவு, இனி ஏற்பட இருக்கும் கேடுகள் பற்றி(சூசகமாக),அடைய இருக்கும் உயரங்கள் என பல பரிமாணங்களில் ஜாதகத்தை ஆராய்ந்து பலன்களை கூறி விடுகிறார்கள் . ஆனால் "Timing of events" (அவர்கள் predict செய்த Events எப்பொழுது நடக்கும்)என வரும் போது திணறி,சொதப்பி விடுகிறார்கள்.
/////Blogger iyer said...
ReplyDeleteவ ப////
உங்களின் வருமைப் பதிவிற்கு நன்றி அய்யர்!
Blogger minorwall said...
ReplyDelete//////Thanjavooraan said... நிகழ்காலமும், எதிர்காலமும் தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆவல்தான். அப்படி எதிர்காலம் தெரிந்துவிட்டால் ஒரு மதார்ப்பு வந்துவிடாதா? இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தபின் அதில் என்ன 'த்ரில்' இருக்கும்.//////////
நானும் ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஒரு சுவாரஸ்யத்துக்காக வரும் போகும் ஜோசியர்களிடமெல்லாம் ஜோசியம் பார்த்துப் பலன் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அவர்களால் ஒரு நடக்க வாய்ப்பிருக்கும் சம்பவங்களைப் பற்றி ஒரு கோடிட்டுக் காட்டத்தான் முடிகிறதே தவிர அட்சர சுத்தமாக சொல்லமுடிவதில்லை..ஒரு முறை பலிக்கும் விஷயம் அடுத்த தடவை சொல்லும் போது எடுபடுவதில்லை..கிட்டத்தட்ட ப்ராபபபிளிட்டி..கான்செப்ட்தான்...அப்படியே சொன்னபடியே நடந்து விட்ட ஒரு விஷயம் ஒரு வருடத்துக்கு முன் நடந்தது..அதே ஜோசியர் சொன்னபடி அடுத்த தரம் நடக்கவில்லை..ஒரு அன்செர்டைன்ட்டி..இருக்கிறது..
இதுதான் த்ரில்../////////
ஜோதிடம் உண்மையானது. ஜோதிடர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொய்யானவர்கள். அதாவது பாண்டித்யம் இல்லாதவர்கள். அரைகுறையாகப் படித்துவிட்டு தொழில் செய்பவர்கள். அவர்களால்தான் பிரச்சினையே!
////Blogger minorwall said...
ReplyDelete//////////Blogger தேமொழி said...
ஐயா,
இந்த வரிகள் சிரிப்பை வர வழைத்தது. இந்த நூற்றாண்டில் இவ்வளவு பத்தாம்பசலிப் பெண்களா? என்று பாவமாகவும் இருந்தது.
இப்பொழுதெல்லாம் ...
"ரெடி? ஹன்றேட் பெர்சென்ட்? போகலாமா? ....
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம், அப்புறம் ரிசப்ஷனுக்கு எல்லோரையும் கூப்பிடலாம்....."
அலைபாயுதே படத்திர்க்கப்புறம் இந்த நூற்றாண்டில் பெண்களின் லேட்டஸ்ட் ட்ரென்ட் இது.
பாவம் இது கூடத் தெரியாமல்...ஹ்ம்ம்///////
இந்த வரிகள் சிரிப்பை வர வழைத்தது.
இந்த நூற்றாண்டில் இவ்வளவு பத்தாம்பசலிப் பெண்களா? என்று பாவமாகவும் இருந்தது.(இது என்னோட கமென்ட்.)
இப்பொழுதெல்லாம் ...jz..a convenient date..தட் ஸ் ஆல்..ரொம்பப் போனா living together.. for a short time ..அவ்வளோதான்..
கல்யாணமாம்..ரிசப்ஷனாம்..
அலைபாயுதே படம் ரிலீஸ் ஆகி பத்து வருஷத்துக்கு மேலாச்சு../////
ஆமாம். திருமணமே செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்துவதுதான் இன்றைய நாகரீகம். திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துபவனெல்லாம் பைத்தியக்காரன்கள். அமெரிக்காவைப் போலவே இங்கேயும் சிங்கிள் பேரண்ட் ஃபாமிலிகள் உதயமாகிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காலக் கோளாறு!
////////Blogger vrajesh said...
ReplyDeleteவணக்கம் அய்யா, தங்கள்ளுடைய தனி இணைய தளத்தில் அனுமதி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். நான் உங்களுடைய அணைத்து ஜோதிட பாடங்களையும் படித்துள்ளேன். மேலும், நான் என்ன தகுதியை வளர்த்துகொள்ள வேண்டும். I have already read 2-3 times your valuable lessons from 1-490. Also I have bought many astrology related books and read many times. I am learnt different dimension of information whenever I read your articles and other books again and again. I still I believe I need to be strong in basics. Thanks for your service.///////
தனி இணைய தளம் துவங்கி ஒன்பது மாதங்கள் ஆகின்றன. இடைச் சேர்க்கைகள் கிடையாது. அங்கே எழுதுபவைகள் எல்லாம் புத்தகமாக வரும். அப்போது படித்துக்கொள்ளுங்கள்
/////Blogger Jagannath said...
ReplyDeleteநிகழ்காலமும், எதிர்காலமும் தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆவல்தான். அப்படி எதிர்காலம் தெரிந்துவிட்டால் ஒரு மதார்ப்பு வந்துவிடாதா? இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தபின் அதில் என்ன 'த்ரில்' இருக்கும்.//////////
ஜோதிடம் பார்ப்பது உங்கள் முயற்சிகளுக்கு எந்தெந்த நேரங்களில் நல்ல விளைவுகள் இருக்கும், எந்தெந்த நேரங்களில் மோசமான விளைவுகள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மற்றபடி முயற்சி, செயல் உங்கள் கையில்தான் இருக்கிறது.
ஒரு உழவன் பருவமறிந்து விதைப்பது போன்றதுதான் இது. இன்ன பருவத்தில் விதைத்தால் நல்ல மகசூல் என்பது விதி. ஆனால் விதைப்பதை கடவுள் தூண்ட மாட்டார். அதற்கான முயற்சிகளையும், செயல்களையும் நாம்தான் செய்ய வேண்டும். இன்ன பருவத்தில் விதைத்தால் மோசமான மகசூல் என்பது தெரிந்தால் விதைக்காமல் இருப்பதையும் நாம்தான் செய்ய வேண்டும்.////////
கரெக்ட். நன்றி ஜகந்நாதன்!
///////Blogger Thanjavooraan said...
ReplyDelete//ஜோதிடம் பார்ப்பது உங்கள் முயற்சிகளுக்கு எந்தெந்த நேரங்களில் நல்ல விளைவுகள் இருக்கும், எந்தெந்த நேரங்களில் மோசமான விளைவுகள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மற்றபடி முயற்சி, செயல் உங்கள் கையில்தான் இருக்கிறது//.
இந்த விளக்கம் சரியானதாகப் படுகிறது. பலன் தெரிந்துவிட்டால் நம் முயற்சி, உழைப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் என் சந்தேகம். அதை நீக்க உங்கள் பதில் பயன்படுகிறது. நன்றி.///////
உண்மைதான் சார்! நன்றி!
//////Blogger Arul Murugan. S said...
ReplyDelete/// அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. வாத்தியாரின் வேலைப் பளுவை அவர்கள் நினைப்பதில்லை. ///
அவ்வாறு அனுப்புபவர்கள் சில மணித்துளிகள் Spare செய்து ஒவ்வொரு பதிவையும் நீங்கள் எத்தனை மணிக்கு Post / Upload செய்கிறீர்கள் என்பதை at the bottom of the Blog பார்த்து விட்டு அவர்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை வரும் விரத நாட்களில் கூட நாங்களெல்லாம்(generally speaking) அதிகாலை 3 or 4 மணிக்கு விழித்திருக்க மாட்டோம். அப்படியிருக்க 60 வயதில் உங்கள் உழைப்பு....( நீங்கள் முன்பு உங்கள் ஜாதகத்தில் குரு, சனி, ராகு அமர்ந்த வீடுகளை கூறியதை வைத்து Age'ஐ guess செய்தேன்).///////
ஆர்வமும் அக்கறையும் இருந்தால், யார் வேண்டுமென்றாலும் அந்த நேரத்திற்கு எழுந்து பணி செய்யலாம் நண்பரே. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////Blogger Rajaram said...
ReplyDeleteகுரு வணக்கம்,ஐயா நீங்கள் இடும் தலைப்பே உணர்த்துகிறது சொல்லப்போவதை எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு அருமையான தலைப்புகள். மீண்டும் ஒரு அருமையான பதிவை வெளியிட்டு அசத்திவிட்டீர்கள்.எல்லோரும் தாங்களிடம் ஜாதக சம்பந்தமான கேள்வி கேட்பதன் அடிப்படையே எதிர்காலத்தை அறியத்தான்.ஆனால் நீங்கள் சொல்வது போன்ற கேள்விகள் வருவதன் அடிப்படை கேட்பவர்களுக்கு ஜோதிடத்தைப்பற்றிய அறியாமையும்,ஆர்வக்கோளாறும் தான் காரணமேயன்றி வேறு ஒன்றுமில்லை.அவர்களுக்கு(என்னையும் சேர்த்துத்தான்)த் தெரியாது அதில் உள்ள கஷ்டம்.நீங்கள் சொல்வது போல் பல்லக்கில் செல்பவனை வேடிக்கை பார்ப்பவன்,நாமும் ஒரு நாள் பல்லக்கில் செல்வோமா?,வேடிக்கை பார்ப்பதோடு முடிந்துவிடுமா? என அறியத்தான்.அதனால் தான் எதிர்காலம் என்ற ஒரே கேள்வியைக் கேட்டு உங்களுக்கு அன்புத்தொல்லை தருகிறார்கள்.மருதமலை ஆண்டவனின் அருளினால் அனைத்தையும் சமாளிக்கிறீர்கள் அதுவே பெரிய விசயம் தான்.தொடரட்டும் தாங்களின் பணி.////
தலைப்பை நன்றாகப் போடு
தானே வருவார்கள்
எழுதுவதை நன்றாக எழுது
எல்லோரும் படிப்பார்கள்
என்பேன். அதுதான் எழுத்தின் சூட்சமம்!
/////Blogger Arul Murugan. S said...
ReplyDelete//// அவர்களால் ஒரு நடக்க வாய்ப்பிருக்கும் சம்பவங்களைப் பற்றி ஒரு கோடிட்டுக் காட்டத்தான் முடிகிறதே தவிர அட்சர சுத்தமாக சொல்லமுடிவதில்லை..ஒரு முறை பலிக்கும் விஷயம் அடுத்த தடவை சொல்லும் போது எடுபடுவதில்லை..கிட்டத்தட்ட ப்ராபபபிளிட்டி..கான்செப்ட்தான்...அப்படியே சொன்னபடியே நடந்து விட்ட ஒரு விஷயம் ஒரு வருடத்துக்கு முன் நடந்தது. ////
என் அனுபவத்தில் கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட தடைகள், துன்பங்கள், health problems, அம்மா, அப்பா பற்றி ஓரளவு, நம் Character பற்றி ஓரளவு, இனி ஏற்பட இருக்கும் கேடுகள் பற்றி(சூசகமாக),அடைய இருக்கும் உயரங்கள் என பல பரிமாணங்களில் ஜாதகத்தை ஆராய்ந்து பலன்களை கூறி விடுகிறார்கள் . ஆனால் "Timing of events" (அவர்கள் predict செய்த Events எப்பொழுது நடக்கும்)என வரும் போது திணறி,சொதப்பி விடுகிறார்கள்.//////
எல்லாவற்றையும் சொல்ல இறையருள் வேண்டும்! That is called intuition (invisible) power!
///ஆமாம். திருமணமே செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்துவதுதான் இன்றைய நாகரீகம். திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துபவனெல்லாம் பைத்தியக்காரன்கள். அமெரிக்காவைப் போலவே இங்கேயும் சிங்கிள் பேரண்ட் ஃபாமிலிகள் உதயமாகிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காலக் கோளாறு!///
ReplyDeleteஇதன் தாக்கம் இப்போதல்ல..
1987ல் வந்த "வாழ்க வளர்க" என்ற திரைப்படம் சொல்லும்
இந்த படத்தின் கதாநாயகன் நடிகவேள் குடும்பத்தை சேர்ந்த ராதா ரவி
கதா நாயகி சரிதா.
பார்த்துவிட்டு மைனர்வாளும் கருத்துச் சொல்லட்டும்
//////// iyer said...
ReplyDelete///ஆமாம். திருமணமே செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்துவதுதான் இன்றைய நாகரீகம். திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துபவனெல்லாம் பைத்தியக்காரன்கள். அமெரிக்காவைப் போலவே இங்கேயும் சிங்கிள் பேரண்ட் ஃபாமிலிகள் உதயமாகிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காலக் கோளாறு!///
இதன் தாக்கம் இப்போதல்ல..
1987ல் வந்த "வாழ்க வளர்க" என்ற திரைப்படம் சொல்லும்
இந்த படத்தின் கதாநாயகன் நடிகவேள் குடும்பத்தை சேர்ந்த ராதா ரவி
கதா நாயகி சரிதா.
பார்த்துவிட்டு மைனர்வாளும் கருத்துச் சொல்லட்டும்..///////
இந்தப் படம் கொஞ்சம் பசுமையாக நினைவில் உள்ளது..சில்க் ஜிப்பா போட்ட ஃபாரின் பார்ட்டி கிடைச்சதும் ராதாரவியைக் கழட்டிவிடும் தீபாவின் கிறக்கத்தில் மயங்கிக்கிடக்கும் ராதாரவி சரிதாவையும் அவள் பிள்ளையையும் தூக்கிஎறிந்து பேசும் தோரணை மனதில் பதிந்து ஞாபகத்தில் உள்ளது..
திருச்சியில் பிளஸ் ஒன் படித்த நேரம் டவுன் ஹாலில் ஏதோ காகிராஸ் நிகழ்ச்சிக்கு தீபா வந்தது தெரிந்து கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு நெருக்கத்தில் தரிசித்தது ரொம்பவே பசுமையாக நினைவில் இருக்கிறது..
இதிலே யாருடன் லிவிங் together ஸ்டைலில் ராதாரவி இருந்தாரென்று சரியாக ஞாபகம் இல்லை..
உடல்வலு இருக்கும்வரைதான் எல்லா ஆட்டமும் என்று கடைசியில் சரிதாவைத் தஞ்சம் அடையும் விதத்தில் படம் செல்வதாக ஞாபகம்..
/////////என் அனுபவத்தில் கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட தடைகள், துன்பங்கள், health problems, அம்மா, அப்பா பற்றி ஓரளவு, நம் Character பற்றி ஓரளவு, இனி ஏற்பட இருக்கும் கேடுகள் பற்றி(சூசகமாக),அடைய இருக்கும் உயரங்கள் என பல பரிமாணங்களில் ஜாதகத்தை ஆராய்ந்து பலன்களை கூறி விடுகிறார்கள் . ஆனால் "Timing of events" (அவர்கள் predict செய்த Events எப்பொழுது நடக்கும்)என வரும் போது திணறி,சொதப்பி விடுகிறார்கள்.//////////////
ReplyDelete"Timing of events" க்குத்தான் அஸ்ட்ரோலாஜியே...
இதை நம்பி எத்தனையோ பேர் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள்..
இதிலே சொதப்ப சொதப்பலான பல காரணங்கள் மூலத்திலேயே இருக்கும்போது இதை வைத்துத் தொழில் செய்யும் பலரின் நிலை பற்றி மட்டுமே வருத்தப்பட்டு ஒன்றும் பயனில்லை..
இந்த "Timing of events" கான்செப்ட்டிலேதான் பலர் கிளைகளாக தன் பங்குக்கு ஆராய்கிறேன் பேர்வழி என்று வெவ்வேறு முறைகளைப் புகுத்தி எது சரியான வழியாக இருக்கும் என்று ஒரு புது ஆராய்ச்சியையும் சேர்த்து செய்யவேண்டிய நிலைக்கு மாணவனைத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்..
Dear sir,
ReplyDeleteGood. Everybody is having only 24 hours per day. No one can answer to all the questions.
அய்யா,
ReplyDeleteவணக்கம். ஆயுள் கணிதத்தில் பலமுறைகள் உள்ளதாக சொல்லியிருந்தீர்கள். அதில் ஷட்பல கணிதம் சரியாக வருமா? அல்லது அஷ்டவர்க்கம் சரியாக வருமா? தாங்கள் எந்த முறைக்கு முன்னுரிமை குடுபீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?