மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.5.11

உள்ளாடைத் திருடர்கள்

-----------------------------------------------------------------
உள்ளாடைத் திருடர்கள்

திருடர்களில் பலவகையினர் உள்ளனர், ஜன்னல் கம்பியை வளைத்து
வீடு புகுந்து திருடும் திருடர்களில் இருந்து, வீட்டு மொட்டை மாடியில்
காயப் போட்டிருக்கும் துணிகளைத் திருடிக்கொண்டு போகும்
ஆசாமிகள் வரை பல ரகத்தினர் உள்ளனர்.. அவர்களைப் பற்றிய
செய்தி கீழே உள்ளது
---------------------------------------------------------------------------------------------------------
இப்போது பாடத்தைப் பார்ப்போம்:

ஜோதிடப் பாடங்களைப் படிப்பவர்களில் 4 வகையானவர்கள் இருக்கிறார்கள்.

1. மேலோட்டமாகப் படிப்பவர்கள். நுனிப்புல் மேய்பவர்கள். எழுதும் ஆக்கங்களில் தங்களுக்கான செய்தி ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்பவர்கள். கொடுக்கப்பட்டுள்ள விதிகளில் (Rules), தங்களின்
ஜாதகத்திற்கு ஏதாவது உள்ளதா என்று பார்ப்பவர்கள். அதாவது லக்கினங்களைப் பற்றிய முழுக் கட்டுரையை மாங்கு மாங்கு
என்று எழுதி 10 பக்க கட்டுரையாகப் பதிவிட்டால், தங்கள் லக்கினம் சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும் படித்து விட்டு, மற்ற பகுதிகளை விட்டுவிடுவார்கள். வகுப்பறைக்கு வருபவர்களில்     90 சதவிகிதம்
பேர்கள் இப்படிப்  பட்டவர்களே!

2. உண்மையிலேயே ஜோதிடத்தின் மீது மதிப்பும், ஆர்வமும்
உள்ளவர்கள். முனைப்புடன் எப்படியாவது  ஜோதிடத்தைக்
கற்றுக்கொள்ள வேண்டும்   என்று படிப்பவர்கள். ஏறாத விஷயங்களை மீண்டும் மீண்டும் படித்து மனதில் ஏற்றிக் கொள்பவர்கள். இவர்கள்
10 சதவிகிதம் பேர்கள். இவர்களுக்காகத்தான் நான் ஊற்சாகம்
குறையாமல் எழுதுகிறேன்.

3. ஜோதிடம் நன்கு தெரிந்தவர்கள். மேலும் தெளிவு பெற அல்லது
புதிய செய்தி வருகிறதா என்று  பார்ப்பதற்காகப் படிப்பவர்கள்.

4. திருடுவதற்கு என்றே வரும் சிலர். இவர்கள் இங்கே எழுதப்படும் ஜோதிடக்கட்டுரைகளை லபக்கிக் கொண்டுபோய் விடுவார்கள்.
ஜேப்படித் திருடன், பர்ஸை அடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கியவுடன், பர்ஸில் உள்ள பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை எல்லாம் தெருவோரத்தில் வீசிவிட்டுப்  போவதைப்
போல, இவர்கள் கட்டுரையில்  உள்ள சுவையான விளக்கங்களை
நீக்கிவிட்டு, அதாவது  கை,  கால்களை வெட்டிவிட்டு வெறும்
முண்டத்தை மட்டும் கொண்டுபோய் தங்கள் பதிவுகளில் ஒட்டிக்
கொண்டு,  தாங்கள் எழுதியதைப் போல பீற்றிக் கொள்வார்கள்.
இவர்கள் மன நோயாளிகள். இவர்களுக்காக நான்  எழுதுவதை
நிறுத்தப் போவதில்லை.

துவைத்துக் காயப்போடுவதில் எச்சரிக்கையாக இருக்கலாம்.
திருட்டு    போகும் என்று தெரிந்த பின் விலை உயர்ந்த ஆடைகளை
வெட்ட வெளியில் காயப்போடுவதைத் தவிர்க்கலாம். பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே காயப்போட்டுக் கொள்ளலாம். உள்ளாடைகளை
மட்டும் வெளியே காயப் போடலாம்.

அதுபோல நானும் எழுதுவதில் முக்கியமான ஆக்கங்களை எனது
சொந்தத் தளத்தில் (Own web site) எழுதிக்கொண்டு வருகிறேன்.  
4 மாதங்களாக அப்படிச் செய்து வருகிறேன். உள்ளாடைகள்
லெவலில் உள்ள     கட்டுரைகளை மட்டுமே இங்கே காயப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை 4 ஆண்டுகளில் 420 பாடங்களை இங்கே நடத்தியுள்ளேன்.       அடிப்படை ஜோதிடத்திற்கு. அது போதும். அதாவது நுனிப்புல்
மேய்வதற்கு  அது போதும். உண்மையிலேயே ஜோதிடத்தில்
ஆர்வம்  உள்ளவர் களுக்குத்தான்  மேல் நிலைப் பாடங்கள் தேவை.

ஆகவே மேல் நிலைப் பாடங்களில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும்
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் எழுதுங்கள். முழு விவரம் இல்லாமல் வரும்
கடிதங்கள்  ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. அத்துடன் அது கட்டண
வகுப்பு. கட்டணம் இல்லா வித்தை  பாழ் என்பதற்கு  ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப் பெற்றுள்ளது. கட்டணம் கட்டிப் படிப்பவர்களுக்கு சில சலுகைகளும் உள்ளது. ஒன்றும் இல்லாமல் கதவைத் திறந்து வைத்தால், அங்கேயும் ஜேப்படித் திருடர்கள் நுழைந்து விடுவார்கள். ஆகவே  எச்சரிக்கையாய் இருக்க வேண்டியாதாக உள்ளது சாமிகளா!


அடிப்படை ஜோதிடம் சம்பந்தமாக நிறையப்  பாடங்கள் உள்ளன.  
அவற்றைத் தொடர்ந்து எழுத உள்ளேன். அவற்றை எல்லாம்
வழக்கம்போல  நீங்கள் இங்கேயே படிக்கலாம்.

ஜோதிடம் அனைவருக்கும் பொதுவானதுதான். யாரும் பிறக்கும்
போதே ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. ஜோதிடத்தை வகுத்த
வராஹி மிகிரரும், பராசுரரும், ஜெய்மானி முனிவரும், ஆர்யபட்டரும் பிறக்கும்போதேஜோதிட அறிவுடன் பிறக்கவில்லை. கற்றுத்
தேர்ந்தார்கள். அதுபோல யார் வேண்டுமென்றாலும் கற்றுத்தேரலாம்.  அதற்குத் தடை இல்லை.

ஒருவன் தான் கற்றுத் தேர்ந்தவற்றை தன் நடையில் தன் மொழியில் எழுதலாம்.. அதைவிடுத்து அடுத்தவன்  எழுதியவற்றை, cut & paste  முறையில் திருடிக்கொண்டுபோய் உபயோகப் படுத்துவது எந்த வழியில் நியாயம்?

அவர்கள் எல்லாம் துணிகரத் திருடர்கள் அல்ல! கேவலமான துணித் திருடர்கள். காயப் போட்டிருக்கும்  துணிகளைத் திருடிக்கொண்டுபோய் பிழைப்பு நடத்துபவர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரமகாதிசை

21.4.2011 அன்று சுக்கிரதிசையில் சூரியனின் புத்தியைப் பார்த்தோம். அதேபோல சூரியதிசையில் சுக்கிரனின் புத்தி  எப்படி இருக்கும் என்றும் பார்த்தோம். அதற்குப் பிறகு ஜோதிடப் பாடங்களை இங்கே Blogல் எழுதி 15
தினங்களாகி விட்டது.

இன்று சுக்கிர திசையில் சந்திர புத்தி எப்படி இருக்கும் என்று பார்ப்போம்!
நன்மை உடையதாக இல்லை

ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
    அருளில்லாத மாதமது நாலைந்தாகும்
போவானே அதன்பலனைப் புகழக் கேளு
    பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்
சாவானே சம்பத்தும் குறைந்து போகும்
    சதிரான மனையை விட்டு ஓடிப்போவான்
நோவானே வியாதியது தொடர்ந்து கொல்லும்
    நுணுக்கமுள்ள வினைசமயம் நுகருந்தானே


சந்திரதிசையில் சுக்கிர புத்தி
நன்மைகள் உடையதாக இருக்கிறது

கேளப்பா சந்திரதிசை சுக்கிரபுத்தி
    கெணிதமுள்ள நாளதுவும் மாதம் நாலைந்து
ஆளப்பா அதன் பலனை சொல்லக்கேளு
    அன்பான லட்சுமியுமனுதினமும் நிற்பாள்
வாளப்பா வாகனமும் பொன் முத்து சேரும்
    வகையான பூஷணமும் மிகுதியுண்டாம்
கேளப்பா கலியாணங் கெணிதமுடன் நடக்குங்
    கெந்தமுடன் சுகந்தங்கள் அணிவான் பாரே!


பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கங்களை எழுதவில்லை

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

7 comments:

  1. இது வரையில் கட்டண வகுப்பில் நான் சேரவில்லை. பணம் காரணமல்ல. அது ஒரு பொருட்டும் அல்ல. ஜோதிடத்தில் எல்லாம் படித்து கரைத்து குடித்து விட்டேன் என்ற ஆணவமும் காரணமல்ல. நேரமின்மைதான் காரணம். இந்த வகுப்பறைக்கு வருவதற்கே நேரம் கிடைப்பதில்லை. பல பாடங்களை இன்னும் படிக்காமலே இருக்கிறேன்.

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள்......
    புதிய வகுப்பறை பற்றிய மற்ற
    விவரங்களை மேலும் அறிய ஆவலுடன்...
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. வஞ்சன சோர பீதியில் இப்போ நாம்
    வாஞ்சையுடன் தருவதை எப்போ


    புரிந்து கொள்ளவில்லையோ பிறகுஏன்
    புட்டு புட்டு வைக்கோனும்..


    பூட்டு போட்டுத்தான் வைக்கோனும்
    பூபாளம் பாடும் போதும் அதன்பின்னும்


    இரும்பு கடலை கடினமான விசயங்கள்
    இனிப்பு கடலை எளிமையாக தருதல்


    விரும்புபவர்கள்
    விரும்பியதை எடுத்துக் கொள்ளட்டும்


    "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே


    தன்னாலே வெளிவரும் தயங்காதேஒரு
    தலைவன் இருக்கிறான் மயங்காதே"

    என்ற நம் வாத்தியாரின் பாடலினை தந்து வகுப்பறை ஆஜர் பட்டியலில் வருகை பதிவினை தருகிறோம்.

    ReplyDelete
  4. சுக்கிரனுக்கு சந்திரன் பகை. ஆனால் சந்திரனுக்கு சுக்கிரன் சமம். Conclusion. தசாநாதனுடன் புத்திநாதன் ஒத்துப் போகக் கூடியவராக இருக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட கிரக புத்தியில் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியும்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,

    தங்களின் உழைப்பு வீணாகுவதை கண்டு எங்களுக்கே வருத்தம் தான் ..

    விரைவில் புத்தகத்தை வெளியிடுங்கள் ஐயா, அது எங்களைப் போன்றோருக்குப் பயன்படும்...

    ஐயா கட்டண வகுப்பறையில்
    ( classroom.20011 ) எனது இமெயில் ஐடியை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன் என்ன செய்வது ?

    கடந்த வாரத்தில் அடியேன் அனுப்பிய மெயில் குறித்த தகவல் ஏதும் இல்லையே ஐயா ..

    +++++++++++++++++++++++

    என் வாழ்வில் சுக்கிர திசையே வருவதில்லை ஐயா .. என்றாலும் பாடத்தை படித்தோம் .. நீங்கள் தான் சொல்லியிருக்கிறீர்களே ...

    சுக்கிர திசை வரவில்லையென்றாலும் - சுக்கிர புத்தி வருமென்று - அதை எண்ணி மகிழ்கிறோம்..

    நன்றி ஐயா ..

    ReplyDelete
  6. ஏற்கனவே பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் மீண்டும் இப்போதும் அனுப்பியுள்ளேன்.நன்றி ஐயா!

    ReplyDelete
  7. sir vanakam i need books
    so that i can study well than this web site.. while you publish the book could you please inform me.. thank you sir..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com