மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.5.11

Astrology வாய்ப்பு எப்போதடா வரும்?

----------------------------------------------------------------------------------
Astrology வாய்ப்பு எப்போதடா வரும்?

எல்லோருடைய மனதிலும் உள்ள கேள்வி இதுதான்: “வாய்ப்பு எப்போது(டா) வரும்?”

முதலில் வாய்ப்பு என்றால் என்னவென்று பார்ப்போம்.

‘வாய்ப்பு’ என்பது ஒன்றைச் செய்வதற்கு அல்லது பெறுவதற்கு உரிய அனுகூல நிலை. சுருக்கமாகச் சொன்னால் சந்தர்ப்பம்  அல்லது opportunity, opening. சாத்தியம் possibility, Chance, scope என்று நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆட்சி மாற்றம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது. அரியணை அம்மையாருக்குக் கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தார். கிடைத்தது. அதுவாகக் கிடைத்ததா? இல்லை. மக்கள் கொடுத்தார்கள். மக்களும் நினைத்தபோது கொடுத்தார்களா? இல்லை. கொடுக்கக்கூடிய சூழ்நிலையை, முந்தைய ஆட்சியாளர்களும் சமீபத்தில் நடந்த தேர்தலும் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. அதனால் அது சாத்தியப்பட்டது.

வாரியார் சுவாமிகள் சொல்லுவார், “உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும் பருவத்தால் அன்றிப் பழுக்காது” அதாவது பழத்தைக் கொடுக்காது.

ஒரு குழந்தைக்கு நல்ல தாய் கிடைப்பது முதல் வாய்ப்பு. நல்ல தகப்பன் கிடைப்பது இரண்டாவது வாய்ப்பு. வளரும்போது வறுமையில்லாத வாழ்க்கை அமைவது மூன்றாவது வாய்ப்பு. படிப்பு அதற்கடுத்த வாய்ப்பு. உயர் கல்வி அதற்கு அடுத்துவரும் வாய்ப்பு. நல்ல நிறுவனத்தில் வேலை, கை நிறையச் சம்பளம், உரிய வயதில் திருமணம், திருமணமான அடுத்த ஆண்டே கொஞ்சி மகிழ ஒரு குழந்தை, நோயில்லாத வாழ்க்கை, நீண்ட ஆயுள் என்று வாய்ப்பின் வலிமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, எல்லோருக்கும் இந்த வாய்ப்புக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின் றனவா?அல்லது கிடைத்துக் கொண்டிருக்கின்றனவா?

இல்லை. ஒரு பத்து சதவிகிதம் பேருக்கு அப்படி அமையலாம். மற்றவர்களை, விதி எதாவது ஒன்றில் அல்லாட வைத்துவிடும்.

சிலர் ‘உப்புமா’ கம்பெனிகளில் வேலை பார்ப்பார்கள். அவர்களுடைய திறமை முழுவதும் அங்கீகாரமில்லாமல் வீணாகிக் கொண்டிருக்கும். சிலருக்கு உரிய வயதில் திருமணமாகாது. ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தள்ளிக் கொண்டே போகும், அழகும், இளமையும், கனவுகளும் வீணாகிக் கொண்டிருக்கும்.

சிலருக்குத் திருமணமாகி ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இருக்காது. குழந்தை இல்லாமல்  உருகிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உருகாமல் இருந்தாலும், அவர்களுக்குத் தெரிந்தவர்கள், “என்ன விசேசம் ஒன்றும் இல்லையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களை உருக்கி விடுவார்கள். குழந்தையில்லாத நிலைமையைவிட இவர்களுடைய உபத்திரவம் கொடுமையானதாக இருக்கும்.

கணினியில் operating system சீராக  programme செய்யப்பெற்று உருவாக்கப் பட்டிருப்பதைப் போல, மனித வாழ்க்கைக்கும் கடவுள் ஒரு குறைந்த பட்ச operating system த்தை உருவாக்கிக் கொடுத்திருக்கலாம். அதாவது திருமணம், குழந்தைச் செல்வம் ஆகிய இரண்டிற்கும் ஒரு common programme ஐ அவர் உருவாக்கி மனிதர்களைப் படைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டார்.

அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், மனிதன் விடுவானா?

அடுத்ததற்கு அடிப்போடுவான். வருமானத்திற்கும் ஒரு common 
programme வேண்டும் என்று கேட்பான். இன்னொருவன் நோயில்லாத வாழ்க்கைக்கு  ஒரு common programme வேண்டும் என்று கேட்பான்.
வேறு ஒருவன் சிறிய வயது, மத்திய வயது, மரணங்களைத் தவிர்த்து அனைவருக்கும்  நீண்ட ஆயுள் கிடைக்க ஒரு common programme
வேண்டும் என்று கேட்பான்.

ஆசைக்கு அளவும் இல்லை. எல்லையும் இல்லை.

நீங்கள் நினைப்பவை எல்லாம் programme செய்யப்பெற்றுத்தான் படைக்கப்பெற்றிருக்கிறீர்கள். உங்களுடைய முன் வினைகள் காரணமாக அவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தன்னிச்சையாக அவைகள் programme செய்யப்படுகின்றன. கடவுளுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அதை, அல்லது அவற்றை உங்களுக்குடைய தலை எழுத்து அல்லது தலைவிதி என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால், வாங்கி வந்த வரம் என்று சொல்லலாம்

எல்லாம் சீராக, ஒரு ஒழுங்கு முறையில் இருந்தால் என்ன ஆகும்? வாழ்க்கையில் சுவை இருக்காது. அப்படி ஒழுங்கு முறையுடன் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. மனிதன் தெய்வத்தையே நினைக்க மாட்டான்! கையில் ஜாதகத்தைத் தூக்க மாட்டான்!

ஆர்யபட்டர், வராஹி மிஹிரர், ஜெய்மானி, பராசுரர், அகத்தியர், புலிப்பாணி போன்ற முனிவர்கள் தங்களுடைய அதீத Inspiration சக்தியினால் காலத்தின் மேன்மை பற்றிய செய்திகளையும், கிரகங்களைப் பற்றிய உண்மை களையும், அவைகளின் தாக்கத்தையும், ஜோதிடத்தையும் வடிவமைத்துக் கொடுத்துவிட்டுப் போனார்கள்

Inspiration என்பது A supernatural divine influence on the prophets, apostles, or sacred writers, by which they were qualified to communicate moral or religious truth with authority; a supernatural influence which qualifies men to receive and communicate divine truth; also, the truth communicated. என்று வைத்துக் கொள்ளுங்கள்

ஜோதிடத்தில் 12 வீடுகள். ஒரு வீட்டிற்கு 3 பாக்கியங்கள். மொத்தம்
36 பாக்கியங்கள். அந்த 36ல் சரி பாதிதான் கிடைக்கும். சரிபாதி கிடைத்திருக்காது. உதாரணத்திற்கு வெல்த் இருந்தால் ஹெல்த்
இருக்காது. அப்படி.

எந்தெந்தப்  பாக்கியங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக்
கண்டு பிடித்துச் சொல்வதுதான் ஜோதிடம். எல்லோரும் சமமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. பூர்வ புண்னியத்தை (முன்வினைப் பயன்களை) வைத்து அவை வேற்படும்

இல்லை என்றால் அஷ்டகவர்க்கப்படி யாராக இருந்தாலும் கிடைக்கும் மதிப்பெண்கள் எப்படி ஒன்றாக இருக்கும்? உங்களுக்கும் 337தான். அம்மையாருக்கும் 337தான். கனிக்கும் 337தான். பசிக்கும் (ப.சி) 337தான். ராசாவுக்கும் 337தான் சைனிக்கும் 337தான். வடிவேலுக்கும் 337தான் கேப்டனுக்கும் 337தான். அதை நினைவில் வையுங்கள்.

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும்? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

அதை விரிவாக அலசுவோம்

நாளைவரை பொறுத்திருங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14 comments:

  1. ///“உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும் பருவத்தால் அன்றிப் பழுக்காது” ///

    இந்த பாடல் வரிகள் மூதுரை என்ற நுலில் ஔவையார் சொன்னது.

    அந்தப் பாடல்
    அப்படியே..

    அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

    எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த

    உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றி பழா


    வாத்தியார் சொன்ன பட்டியலில்..
    வகுப்பறைக்கு வந்து படித்து அனுபவம்

    பெறுவதனையும் சேர்த்துக் கொள்ள
    தருதல் நன்றியை தவிர வேறுண்டோ?

    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கமான திருக்குறள் சிந்தனையுடன்

    "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி"

    ReplyDelete
  2. 'ஆபெரேட்டிங் சிஸ்ட'ததையும் , 'காமன் ப்ரொக்ராம்'மையும் வைத்துத் தற்கால‌ இளைஞர்களுக்கு எளிதில் புரியும் படி எழுதிய தத்துவம் சரியான வாத்தியார் 'டச்'பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ////Blogger iyer said...
    ///“உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும் பருவத்தால் அன்றிப் பழுக்காது” ///
    இந்த பாடல் வரிகள் மூதுரை என்ற நுலில் ஔவையார் சொன்னது.
    அந்தப் பாடல் அப்படியே..
    அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றி பழா
    வாத்தியார் சொன்ன பட்டியலில்.. வகுப்பறைக்கு வந்து படித்து அனுபவம்
    பெறுவதனையும் சேர்த்துக் கொள்ள தருதல் நன்றியை தவிர வேறுண்டோ?
    வணக்கமும் வாழ்த்துக்களும் வழக்கமான திருக்குறள் சிந்தனையுடன்
    "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி"//////

    மை டியர் விஸ்வநாதன். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் எதற்காக மூன்று முறைகள் அனுப்புகிறீர்கள்? ஏதாவது வேண்டுதலா?

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    'ஆபெரேட்டிங் சிஸ்ட'ததையும் , 'காமன் ப்ரொக்ராம்'மையும் வைத்துத் தற்கால‌ இளைஞர்களுக்கு எளிதில் புரியும்படி எழுதிய தத்துவம் சரியான வாத்தியார் 'டச்' பாராட்டுக்கள்.////

    நல்லது. உங்களூடைய பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்

    ReplyDelete
  5. Ayya, I wanted to join ur new blog room. I was trying to join for the past 6months, but I couldnt. Please help me on this regards. - Trichy Ravi

    ReplyDelete
  6. நானும் சில குழப்பங்கள் தீர வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன். நாளைய பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. வணக்கம் வாத்தியார் சார்,
    எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இனறைய பாடம் நீங்க ஏன் ஜாதக புத்தகத்தைவெளியிடவில்லை நாளையபாடத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  8. சகோதிரி உமாவின் பின்னூட்டத்தையே நானும் கூற விழைகிறேன்!

    ReplyDelete
  9. அன்புள்ள அய்யா,

    இன்றைய பாடம் நன்றாக இருந்தது..நன்றி..

    ஒரு சந்தேகம்.. நேற்று ஒரு விஷயம் இடறலாகக் கண்டேன்.பஞ்சாங்கத்தில் வருகின்ற ஆறாம் மாதம் 4 ஆம் தேதி. சனிக்கிழமை..எப்போதும் போலே ராகுகாலம் 9 .30 to 10 .30 என்றுள்ளது..ஆனால் இதே காலகட்டத்தை வாஸ்து நாள் என்று குறித்து பகல் 9 .58 லிருந்து 10 .34 வரைக்கும் மனை,மடம்,ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது சனிக்கிழமை ராகுகாலத்தில் இந்த சுபகாரியங்களை செய்ய உத்தமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..இந்த இடறல் குறித்து விளக்கமளிக்க வேண்டுகிறேன்..

    ReplyDelete
  10. வணக்கம் வாத்தியார் அய்யா.

    எங்க பிரச்னை தான் உங்களுக்கே தெரியுமே ?

    சோ, நாங்களும் உமா, ஆலாசியம் கூட லைன் லே நிக்கறோம்

    ReplyDelete
  11. அன்புடன் வணக்கம்
    ** நாளைய பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.**
    thanks.

    ReplyDelete
  12. common minimum program என்று ஒரு விஷயத்தை சொல்லியிருந்தீர்கள்..

    இந்த ப்ரோக்ராம் செய்து செயற்கையாக DNA வை உருவாக்கி மனிதன் சாதனை படைத்து ஒருவருடம் கழிந்துவிட்டது..உயிரில்லாத கெமிக்கலை வைத்து உயிர் உருவாக்கப்பட்டிருக்கிறது..இன்று எதிர்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் நாளை நனவாக வாய்ப்பு இருக்கிறது..தலைஎழுத்து என்ற சொல் இப்பொழுது ஜெனிடிக் கோட் என்றாகிவிட்டது..எப்படி இதை எழுதுவது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்..அமெரிக்காவைச் சார்ந்த J. Craig Venter Institute நிலைய Dr. பிரான்கேன்ச்டீன் தலைமையிலான விஞ்ஞானிகள்.நான்கு பாட்டில்கள் கெமிகளில் இருந்து கம்ப்யுட்டர் ப்ரோக்ராம் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை குரோமோசோம்,அதிலிருந்து பெறப்பட்ட முழுக்கமுழுக்க செயற்கை செல்(ஜெனோம்) என்று சிந்தெடிக் பயாலஜி ஆராய்ச்சி முயற்சிகள் வெற்றிப்பாதையில் தொடர்ந்து பயணிக்கின்றன..ஜெனிடிக் எஞ்சிநியரிங்குக்கு அடுத்த கட்டமான இந்த துறை செயற்கை முறையில் வைரஸ்களையும் பாக்டீரியாக்களையும் முழு உயிரியையும் புதிதாக ப்ரோக்ராம் செய்து உருவாக்கும் முயற்சியில் முதல் வெற்றி கிட்டியிருக்கிறது....உதாரணத்துக்கு புது மருந்துகளையும் புது பயோ எரிபொருளையும் இவ்விதம் உருவாக்க முடியும்.

    ReplyDelete
  13. ////சோ, நாங்களும் உமா, ஆலாசியம் கூட லைன் லே நிக்கறோம்////

    என்ன ஜானகிராமன்! சொல்லவே இல்லை... துக்ளக் ஆசிரியரோ டெல்லாம்
    உங்களுக்கு நல்லப் பழக்கம்னு....

    ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
  14. வணக்கம் ஆலாசியம்,

    //துக்ளக் ஆசிரியரோ டெல்லாம்
    உங்களுக்கு நல்லப் பழக்கம்னு...//

    டைமிங் கமெண்ட் வேறயா ?

    சோ - ன்னு சொன்னதை வெச்சி
    சோவோடு + சோடி சேத்தீட்டீகளா ?

    அதுவும் சரிதான் அவர்மாதிரி
    நமக்கும் இன்னும் கொஞ்ச நாள்லே ஆயிடும்.. பளபளன்னு..

    ஆனா..
    சகலகலா வித்தகரா இருப்பீக போல ?
    வாழ்த்துக்கள் ஆலாசியம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com