++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா?
“ஒருவன் உன் கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு. ஒருவன் உனது மேலங்கியை (coat) திருடிக்கொண்டு போனால், உன்னுடைய சட்டையையும், அவனிடம் கழற்றி கொடு” என்கிறது யேசு கிறிஸ்து பெருமகனாரின் அறிவுரை!
When someone hits you on the cheek offer the other as well.
When someone takes your coat let him have your shirt too.
Lk 6:29 Mt 5:39f - 60
எனக்கு அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை. கன்னத்தில் அறைந்தாலாவது பரவாயில்லை. முதுகில் கத்தியால் குத்திவிட்டுச் செல்பவனைக் கூப்பிட்டு, தம்பி, நெஞ்சிலும் சொருகி விட்டுப்போ என்று சொல்ல முடியமா?
இது கலியுகம். கருணை கொண்டவனைவிட, அப்படித் திரிபவர்கள்தான் அதிகம்.
எனது ஜோதிடப் பாடங்களை ஒட்டு மொத்தமாகக் கடத்திக்கொண்டு சென்று தனது தளத்தில் பதிவிட்டுள்ளார் ஒரு அன்பர்.
கேட்டால் நான் உங்களிடமிருந்து கடத்தவில்லை என்கிறார். data files downloaded from http://www.4shared.com/ and http://gkgupthag.blog.com/ என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அந்த அருமைமிகும் குப்தாஜி என்ன சொல்கிறார்?
“பல இணைய தளங்களில் இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம் முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு ஆண்டிற்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு”
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவருக்குத் தமிழ் தெரியுமா? என்பது தெரியவில்லை! அவர் தன்னுடைய வலைப்பூவில் அவற்றைக் கொடுக்கவில்லை. இவரும் அதை இன்னும் கொடுக்கவில்லை.
அத்துடன் http://www.4shared.com/ இணைய தளத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டதற்கு, அதன் சுட்டியைக் கேட்டிருந்தோம். அதற்கும் இதுவரை பதில் தரவில்லை.
கடத்திப் பதிவிட்டுள்ள பாடங்களின் அளவு சுமார் 140 MB.
4shared தளத்தில் அதன் உறுப்பினர்களுக்கு கோப்புக்களுக்காகத் தரப்படும் கொள்ளளவு 10 MB மட்டுமே.ஆகவே 140 MBக்கள் அளவிற்கான கோப்புக்களை அங்கிருந்து எடுத்திருக்க வாய்ப்பு இல்லை.
அவரே 40% அளவில் அங்கிருந்து எடுத்ததாகத் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மீதியை எங்கிருந்து எடுத்தார்?
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, இவை அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும்!
அதுவரை, தற்சமயம், தகாத மொழியில் வசை பாடிக்கொண்டிருப்பதை அவர் தொடர்ந்து செய்யட்டும். வழக்கு என்னும்போது, இந்த வசை பாடல்களும் அதில் சேர்க்கப்படும். அதை அவர் மனதில் கொள்வது நல்லது.
அதைவிட ஒருபடி மேலே சென்று கையகப்படுத்திய எனது எழுத்துக்களை நீக்குவது அவருக்கு இன்னும் நல்லது!
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுவரை 400 ஜோதிடப் பதிவுகளை வலையில் ஏற்றியுள்ளேன்.
தொடர்ந்து எழுத உள்ளேன்.
எழுத உள்ள அனைத்துமே மேல் நிலைப் பாடங்கள். அஷ்டகவர்க்கத்தில் மேல் நிலைப் பாடங்களைத் துவங்கினேன். அதைத் தொடர்ந்து எழுத உள்ளேன். ஜோதிட நுட்பங்களைப் பாடமாக நடத்த உள்ளேன். பிறகு பயிற்சிப்பாடங்கள், தொடர்ந்து அலசல் பாடங்கள் என்று என் பணி என் உயிர் உள்ளவரை தொடரும். ஜோதிடம் பெரிய கடல். என்னால் முடிந்த அளவு உங்களுக்குச் சுற்றிக் காட்டலாம் என்று உள்ளேன். அதற்கு அந்தப் பழநிஅப்பன் துணை மட்டும் வேண்டும்.
எழுத உள்ளவைகள் அனைத்துமே ஜோதிடத்தின் உயிர் நாடியான பகுதிகள். ஜீவனுள்ள பகுதிகள். சுவாரசியமான பகுதிகள். எழுத்தின் மேல் உள்ள காதலால், எழுதிப் பழகிவிட்டதால், செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் என்று நான் எழுதிய 60 சிறுகதைகளைப் புத்தகங்களாக்கிப் பலர் கைகளில் தவழ விட்டதால், அந்த ஆர்வம் கூடிக்கொண்டே செல்கிறது.
இனி எழுத உள்ள பகுதிகள் திருட்டுப்போகக்கூடாது. தனிப்பட்ட நபர் பயன் பாட்டிற்கு மட்டுமே அது உதவ வேண்டும்.
என்ன செய்யலாம்?
உங்களுடைய மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
இதுவரை நான் கேட்கும் முன்பாகவே 7 அன்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுடைய பார்வைக்காக அவற்றைத் தொகுத்துக் கீழே கொடுத்திருக்கிறேன். அவற்றையும் படித்துப்பார்க்க வேண்டுகிறேன்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++============
1
/////Sridhar Subramaniam said...
அய்யா,
போலீஸ் complaint எந்த அளவுக்கு உதவ முடியும் என தெரியவில்லை. இது ஒரு சைபர் crime
எனக்கு தெரிந்து ஒரே வழி, மின் அஞ்சல் மூலம் பாடம் நடத்துவது தான்!
நன்றி
ஸ்ரீதர்
ஸ்ரீதர்
Sunday, November 14, 2010 11:11:00 PM
------------------------------------------------------------------------------
2
///////hamaragana said...
அன்புடன் வணக்கம்
எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி
Tuesday, November 16, 2010 6:58:00 AM
------------------------------------------------------------------------------
3
//////Sai said...
//////அன்புடன் வணக்கம்
எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி/////
இந்த யோசனையை நானும் வரவேற்கின்றேன். இலவச bloggerல் தான் இப்படிப்பட்ட பிரச்சனை வரும்
தனியார் இணைய தளத்தில் வர வாய்ப்பு குறைவு
Tuesday, November 16, 2010 8:50:00 AM/////
-----------------------------------------------------------------------------
4
kmr.krishnan said...
'காப்பி ரைட் மீறல் இருந்தால் "முறைப்படி" தெரிவிக்கவும்' என்பதில் இருந்தே தெரிகிறது எப்பேர்ப்பட்ட "விளைஞ்ச கட்டை" அவர் என்பது.முறையற்ற செயலை செய்பவர்கள்தான் சட்டம் என்ற இருட்டறையில் புகுந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆட்டம் காட்டுவார்கள்.
மனசாட்சி,தர்மம்,நியாயம் என்று சொல்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்பட மாட்டார்கள்.கோவிந்தன் "கோவிந்தா" ஆகட்டும்! நல்லவர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிகிறேன்.
வகுப்பறையை இணையமாக மாற்றும் யோசனையை நானும் வரவேற்கிறேன்.
ஆனால் இதுபோன்ற திருடர்களும் உறுப்பினர் ஆகி திருடாமல் இருக்க அதில் வழி உண்டா?
ஆம்!நடராஜன் சார் சொல்லும் "தட்சணை தராத கல்வி பாழ்"என்பது மிகச் சரி.சிறிய அளவாக இருந்தாலும் ஒரு தொகையை வலியுறுத்தி விட்டால், உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். ஆர்வக்கோளாறு மட்டும் இருப்பவர்கள் விலகிக் கொள்வார்கள்.
Tuesday, November 16, 2010 10:25:00 AM //////
-------------------------------------------------------------------------------
5
//////sanjay said...
வணக்கம் அய்யா,
பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.'லாகின், பாஸ்வர்ட்' வைத்தாலும், கள்வர்கள் தானும் ஒரு உறுப்பிணறாகி கள்ளச்சாவியைப்போட்டு பெட்டியை உடைப்பார்! ஆகவே, இணையதளமாக மாற்றினாலும் தொகுப்பு உள்ள பக்கத்திற்கு மட்டும் 'ரைட் க்ளிக்கை டிஸேபிள்' செய்துவிடவேண்டும். அய்யா, நம்முடைய இனணயதளத்தை வடிவமைத்துக் கொடுக்க நான் பொறுப்பேற்கிறேன். அதனுடைய 'வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்ட்ரேஸன்' உங்களுடைய பொறுப்பு.(இரண்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.2500/ வருடச் சந்தா வரும்) அதன் இணைய முகவரி 'ஈவெப்குரு.காம்' சென்று சற்று நோட்டமிடுங்கள் உங்களுக்கே எல்லாம் புரிந்துவிடும்.
டிஸ்கி:
'இனணயதள வடிவமைப்பை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவருகிறேன். நான், சரக்குக் கப்பலில் முதல்நிலை அலுவலராகப் பணிபுறிகிறேன். ஆகவே, இந்த இனணயதள வடிவமைப்பை குரு தட்ச்சனையாக எற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'
Tuesday, November 16, 2010 11:49:00 AM /////
----------------------------------------------------------------------------------
6
//////SHEN said...
மதிப்புமிக்க பதிவுகளைக்கொண்டது உங்கள் வலைப்பூ..இதை இணையதளமாக ஆக்குவதே நல்லது..அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என அறிவிக்கவும்.
அன்புடன்
செங்கோவி
Tuesday, November 16, 2010 8:42:00 PM //////
----------------------------------------------------------------------------------------
7.
//////aryboy said...
வணக்கம் அய்யா,
திருடர்கள் எவ்வளவுதான் தன்டனை பெட்ராலும் காலம் காலமாக
இது நடக்கதான் செய்யும்.நம் பாதுகாப்பை நாம் தான் அமைத்துக்
கொள்ள வேண்டும்.நடக்கும் எதிர்மைரை சம்பவங்கல் நன்மை அளிக்கவே
வருகிரது.எந்த முடிவு எடுத்தாலும் எங்களது ஆதரவு உண்டு.
நன்றி,அரிபாய். வாழ்க வளமுடன்.
Thursday, November 18, 2010 3:33:00 PM /////
---------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
22.11.10
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
//////அன்புடன் வணக்கம்
ReplyDeleteஎனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!/////
//////மதிப்புமிக்க பதிவுகளைக்கொண்டது உங்கள் வலைப்பூ..இதை இணையதளமாக ஆக்குவதே நல்லது..அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என அறிவிக்கவும்.//////
நானும் இதையே வழிமொழிகிறேன் ஐயா.
அய்யா
ReplyDeleteவகுப்பறையை இணைய தளமாக மாற்றுவதே சிறந்த தீர்வு. பயனர்களுக்கு அடையாள எண் அல்லது பெயரும் கொடுத்து விட்டால் சரி.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
5
ReplyDelete//////sanjay said...
வணக்கம் அய்யா,
பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.'லாகின், பாஸ்வர்ட்' வைத்தாலும், கள்வர்கள் தானும் ஒரு உறுப்பிணறாகி கள்ளச்சாவியைப்போட்டு பெட்டியை உடைப்பார்! ஆகவே, இணையதளமாக மாற்றினாலும் தொகுப்பு உள்ள பக்கத்திற்கு மட்டும் 'ரைட் க்ளிக்கை டிஸேபிள்' செய்துவிடவேண்டும். அய்யா, நம்முடைய இனணயதளத்தை வடிவமைத்துக் கொடுக்க நான் பொறுப்பேற்கிறேன். அதனுடைய 'வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்ட்ரேஸன்' உங்களுடைய பொறுப்பு.(இரண்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.2500/ வருடச் சந்தா வரும்) அதன் இணைய முகவரி 'ஈவெப்குரு.காம்' சென்று சற்று நோட்டமிடுங்கள் உங்களுக்கே எல்லாம் புரிந்துவிடும்.
டிஸ்கி:
'இனணயதள வடிவமைப்பை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவருகிறேன். நான், சரக்குக் கப்பலில் முதல்நிலை அலுவலராகப் பணிபுறிகிறேன். ஆகவே, இந்த இனணயதள வடிவமைப்பை குரு தட்ச்சனையாக எற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'
Tuesday, November 16, 2010 11:49:00 AM /////
Dear Sir,
I will take care of first year hosting domain registration charge. Please let me know when and where to pay!
aiya vanakkam!
ReplyDeleteCurrently, psssrf.org.in is under construction. May be our friend govidan is drinking lot of water....uppu neraiya sapttar pola. thangal merkolil slight mistake irukku enru nenaikkiren. Coat-i goat enru thavaruthalaha ninaithu vitterkal enru ninaikkiren. chuttikatiyatharku mannikkavum!
"ஒருவன் உனது ஆட்டைத் திருடிக்கொண்டு போனால், உன்னுடைய சட்டையையும், அவனிடம் கழற்றி கொடு”
When someone takes your coat let him have your shirt too."
அய்யா,
ReplyDeleteஎன்னுடைய மின்னஞ்சல்களைப் பார்த்துவிட்டீர்களா? நம் இணையதள வடிவமைப்பின் 'ஸ்க்ரீன் ஷாட்' அனுப்பியுள்ளேன். நான் அனுப்பி 4 நாட்கள் ஆகின்றது. இதுவரை ஒரு பதிலும் தங்களிடமிருந்து கிடைக்கவில்லை. என்னுடைய மின்னஞ்சல்கள் கிடைத்ததா இல்லையா என்று ஐயமாக உள்ளது. தயவுகூர்ந்து பதில் எழுதுங்கள் ஐயா !
(தற்போது, 'பேனர் அனிமேஷன்' தயார் செய்துகொண்டிருக்கிறேன்)
அன்புடன்,
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com
சார் உங்கள் மன வேதனை / வருத்தம் புரிகிறது. எனக்கு technically இந்த விஷயங்கள் புரியாததால், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் என்னுடைய ஆதரவு இருக்கும்.
ReplyDeleteநாளை இரவு சொந்த ஊருக்கு ஒரு அவசரப் பயணம். அதனாலே புதன் - வெள்ளி நோ கமெண்ட்ஸ்.
அய்யா,
ReplyDeleteசற்றே, தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதனுடன் 'பேனர் அனிமேஷன்' இணைத்துள்ளேன். அது நம் இணையதளத்திற்கு அமைப்பாக உள்ளதா என்று கூறுங்கள் ஐயா ! என் மனதில் பட்ட யோசனையை அதில் ப்ரதிபலித்துள்ளேன்.
அன்புடன்,
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com
ஐயா,
ReplyDelete"வகுப்பறை" இணையதளத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால், தாம் என்னென்ன தகவல்கள் தந்து பதிவு செய்ய வேண்டும் அல்லது தங்களுக்கு அவர்களிடமிருந்து என்னென்ன தகவல்கள் பெறவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதன் பட்டியலை எனக்கு மின்னஞ்சலில் அணுப்பவேண்டுகிறேன்.
அன்புடன்
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com
Sir,
ReplyDeleteemail classroom should be better solution.
any decision from your end is welcome sir.
ஐயா,
ReplyDeleteஎன்னதான் வலைப்பூவை இணையமாக மாற்றினாலும் Content-ஐ திருடுவது எளிது. வேண்டுமானால் Right Click-ஐ Disable செய்தும் Content-ஐ Selection செய்யாதவாறும் தடுக்கலாம். அவ்வாறு செய்தால் Technically Sound ஆக உள்ளவர்கள் மட்டுமே திருட முடியும்.
தங்களுக்கு இந்த யோசனை பிடித்திருந்தால், நான் எப்போது வேண்டுமானாலும் உதவ தயார்.
மேலும் குரு தட்சிணையாக என்னுடைய Server-ல் தங்களுக்கென ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதில் இந்த Setup-களை செய்து கொடுக்கிறேன்.
நன்றி ஐயா
சில நாட்களாக உடல் நலமின்மையால் அவதிபட்டு பல நாள் ஓய்வுக்கு (ஆழ்ந்த உறக்கம் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், நான் வருத்தப்பட மாட்டேன்) பிறகு இன்று வகுப்பறைக்கு வந்தால் வகுப்பறையே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது போல் தாங்களும் இந்த வகுப்பறையும் பல் முனைத் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. தங்களுக்கு சரியென்று பட்டதைச் செய்யுங்கள்.
ReplyDeleteஎன் வகுப்பறையிலும் திருடியிருக்கிறார்களா அல்லது திருடுவதற்கு இது தகுதியற்றது என்று விட்டு விட்டார்களா தெரியவில்லை. எது நடந்தாலும் எல்லாம் அவன் செயல்.
Dear Sir,
ReplyDeleteRegistering a domain name sounds good for me also. Please let us know your decision I am ready for any.
Regards,
Sudhakar
/////Alasiam G said...
ReplyDelete//////அன்புடன் வணக்கம்
எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும்
மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!/////
//////மதிப்புமிக்க பதிவுகளைக்கொண்டது உங்கள் வலைப்பூ..இதை இணையதளமாக ஆக்குவதே நல்லது..அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என அறிவிக்கவும்.//////
நானும் இதையே வழிமொழிகிறேன் ஐயா./////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்! வகுப்பறைக்கு ஒரு இணயதளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. முறையான அறிவிப்பு, பதிவில் வரும்!
/////venkatesan.P said...
ReplyDeleteஅய்யா
வகுப்பறையை இணைய தளமாக மாற்றுவதே சிறந்த தீர்வு. பயனர்களுக்கு அடையாள எண் அல்லது பெயரும் கொடுத்து விட்டால் சரி.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்/////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி வெங்கடேசன்! வகுப்பறைக்கு ஒரு இணயதளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. முறையான அறிவிப்பு, பதிவில் வரும்!
//////Prakash said...
ReplyDelete//////sanjay said...
வணக்கம் அய்யா,
பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.'லாகின், பாஸ்வர்ட்' வைத்தாலும், கள்வர்கள் தானும்
ஒரு உறுப்பிணறாகி கள்ளச்சாவியைப்போட்டு பெட்டியை உடைப்பார்! ஆகவே, இணையதளமாக மாற்றினாலும்
தொகுப்பு உள்ள பக்கத்திற்கு மட்டும் 'ரைட் க்ளிக்கை டிஸேபிள்' செய்துவிடவேண்டும். அய்யா, நம்முடைய
இனணயதளத்தை வடிவமைத்துக் கொடுக்க நான் பொறுப்பேற்கிறேன். அதனுடைய 'வெப் ஹோஸ்டிங், டொமைன்
ரெஜிஸ்ட்ரேஸன்' உங்களுடைய பொறுப்பு.(இரண்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.2500/ வருடச் சந்தா வரும்)
அதன் இணைய முகவரி 'ஈவெப்குரு.காம்' சென்று சற்று நோட்டமிடுங்கள் உங்களுக்கே எல்லாம் புரிந்துவிடும்.
டிஸ்கி:
'இனணயதள வடிவமைப்பை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவருகிறேன். நான், சரக்குக் கப்பலில்
முதல்நிலை அலுவலராகப் பணிபுரிகிறேன். ஆகவே, இந்த இனணயதள வடிவமைப்பை குரு தட்ச்சனையாக
எற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'
Tuesday, November 16, 2010 11:49:00 AM /////
Dear Sir,
I will take care of first year hosting domain registration charge. Please let me know when and where to
pay!/////
உங்களின் அன்பிற்கு நன்றி. தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன்!
//////PALANI'S BLOG said...
ReplyDeleteaiya vanakkam!
Currently, psssrf.org.in is under construction. May be our friend govidan is drinking lot of water....uppu neraiya
sapttar pola. thangal merkolil slight mistake irukku enru nenaikkiren. Coat-i goat enru thavaruthalaha ninaithu
vitterkal enru ninaikkiren. chuttikatiyatharku mannikkavum!
"ஒருவன் உனது ஆட்டைத் திருடிக்கொண்டு போனால், உன்னுடைய சட்டையையும், அவனிடம் கழற்றி கொடு” When someone takes your coat let him have your shirt too."////////
சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி. பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்!
////sanjay said...
ReplyDeleteஅய்யா,
என்னுடைய மின்னஞ்சல்களைப் பார்த்துவிட்டீர்களா? நம் இணையதள வடிவமைப்பின் 'ஸ்க்ரீன் ஷாட்'
அனுப்பியுள்ளேன். நான் அனுப்பி 4 நாட்கள் ஆகின்றது. இதுவரை ஒரு பதிலும் தங்களிடமிருந்து
கிடைக்கவில்லை. என்னுடைய மின்னஞ்சல்கள் கிடைத்ததா இல்லையா என்று ஐயமாக உள்ளது. தயவுகூர்ந்து
பதில் எழுதுங்கள் ஐயா !
(தற்போது, 'பேனர் அனிமேஷன்' தயார் செய்துகொண்டிருக்கிறேன்)
அன்புடன்,
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com////
அதிக வேலைப் பளுவினால், உடனே பதில் அனுப்ப முடியவில்லை. நாளை அனுப்பிவைக்கிறேன் நண்பரே!
////Uma said...
ReplyDeleteசார் உங்கள் மன வேதனை / வருத்தம் புரிகிறது. எனக்கு technically இந்த விஷயங்கள் புரியாததால், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் என்னுடைய ஆதரவு இருக்கும்.
நாளை இரவு சொந்த ஊருக்கு ஒரு அவசரப் பயணம். அதனாலே புதன் - வெள்ளி நோ கமெண்ட்ஸ்./////
நல்லது. நன்றி சகோதரி!
/////sanjay said...
ReplyDeleteஅய்யா,
சற்றே, தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதனுடன் 'பேனர் அனிமேஷன்' இணைத்துள்ளேன். அது நம் இணையதளத்திற்கு அமைப்பாக உள்ளதா என்று கூறுங்கள் ஐயா ! என் மனதில் பட்ட யோசனையை
அதில் ப்ரதிபலித்துள்ளேன்.
அன்புடன்,
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com/////
பார்த்துப் பதில் எழுதுகிறேன்!
//////sanjay said...
ReplyDeleteஐயா,
"வகுப்பறை" இணையதளத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால், தாம் என்னென்ன தகவல்கள் தந்து பதிவு செய்ய வேண்டும் அல்லது தங்களுக்கு அவர்களிடமிருந்து என்னென்ன தகவல்கள் பெறவேண்டும் என்று
நினைக்கிறீர்களோ, அதன் பட்டியலை எனக்கு மின்னஞ்சலில் அணுப்பவேண்டுகிறேன்.
அன்புடன்
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com////
அதிக வேலைப் பளுவினால், உடனே பதில் அனுப்ப முடியவில்லை. நாளை அனுப்பிவைக்கிறேன் நண்பரே!
//////vprasanakumar said...
ReplyDeleteSir,
email classroom should be better solution.
any decision from your end is welcome sir./////
நல்லது. நன்றி நண்பரே!
////எஸ். சேர்மராஜ் said...
ReplyDeleteஐயா,
என்னதான் வலைப்பூவை இணையமாக மாற்றினாலும் Content-ஐ திருடுவது எளிது. வேண்டுமானால் Right
Click-ஐ Disable செய்தும் Content-ஐ Selection செய்யாதவாறும் தடுக்கலாம். அவ்வாறு செய்தால் Technically Sound ஆக உள்ளவர்கள் மட்டுமே திருட முடியும்.
தங்களுக்கு இந்த யோசனை பிடித்திருந்தால், நான் எப்போது வேண்டுமானாலும் உதவ தயார்.
மேலும் குரு தட்சிணையாக என்னுடைய Server-ல் தங்களுக்கென ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதில் இந்த Setup-களை செய்து கொடுக்கிறேன்.
நன்றி ஐயா/////
உங்களுடைய அன்பிற்கு நன்றி. தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன் சேர்மராஜ்!
/////ananth said...
ReplyDeleteசில நாட்களாக உடல் நலமின்மையால் அவதிபட்டு பல நாள் ஓய்வுக்கு (ஆழ்ந்த உறக்கம் என்று
வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், நான் வருத்தப்பட மாட்டேன்) பிறகு இன்று வகுப்பறைக்கு வந்தால்
வகுப்பறையே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது போல் தாங்களும் இந்த வகுப்பறையும் பல் முனைத் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. தங்களுக்கு சரியென்று பட்டதைச் செய்யுங்கள்.
என் வகுப்பறையிலும் திருடியிருக்கிறார்களா அல்லது திருடுவதற்கு இது தகுதியற்றது என்று விட்டு விட்டார்களா தெரியவில்லை. எது நடந்தாலும் எல்லாம் அவன் செயல்./////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////sudhakar said...
ReplyDeleteDear Sir,
Registering a domain name sounds good for me also. Please let us know your decision I am ready for any.
Regards,
Sudhakar//////
நல்லது. நன்றி சுதாகர்!
வணக்கம் ஐயா!
ReplyDeleteஎமது கருத்தை சொல்லுகின்றேன் நன்றாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எத்தனையோ மாணவர்கள் வசதி வாய்ப்பு இன்றி இருப்பார்கள். அவர்களிடம் போய் நீ! இந்த கட்டணத்தை தா என்று கேட்பது அவ்வளவிற்கு நல்லதாக படவில்லை எமக்கு . மேலும் இணையதளத்தில் வந்து படிக்கும் நிலைமையில் உள்ளவர்கள் அனைவரும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அல்ல என்பதனை அனைவரும் மனதில் கொள்ள வேண்டு.
வகுப்பறைக்கு வாத்தியார் அவர்கள் கேட்டும் தொகையை எல்லோரையும் போல் எம்மாலும் தரமுடியும் இன்று. ஆனால் சில வருடகளுக்கு முன்னர் இந்திய பணத்தின் மதிப்பில் வெறும் 10 ரூபாய் கொடுத்து இன்டர்நெட் சென்டர் க்கு செல்ல முடியாமல் ஏங்கி தவித்த காலமும் உண்டு.
எம்மை போல படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார வசதி அற்ற மாணவர்கள் எத்தனையோ எத்தனையோ எம் தாய் திருநாட்டில் அவர்களின் நலம் பொருட்டு
" தர்ம பள்ளிகூடத்தை தர்ம பள்ளிகூடமாகவே!" ஐயா மென்மேலும் கொண்டு செல்ல வேண்டு என்பது எமது ஆசை எண்ணமும் கூட.
ஐயா! ஒரு வருடத்திற்கு முன்னர்
" கடவிலுக்கு எப்படிடா தெரியும்!" என்ற தலைப்பில் ஒரு அற்புதமான கதை தந்து இருந்தீர்கள் .அதன்படி எல்லாம் வல்ல எம்பெருமான் "தகப்பன் சுவாமி பாலதண்டாயுதம்!" எல்லாவற்றையும் பார்த்துகொண்டு தானே ஐயா உள்ளார் . அவர் கயவர்களால் கொள்ளை போகும் கல்வியை காக்கும் வழியை கண்டிப்பாக காட்டுவார் தங்களுக்கு எம்மால் முடிந்தவரைக்கும் பிராத்தனை மற்றும் தர்ம பள்ளிக்கு வேண்டிய பொருள் உதவியை செய்ய தயாராக உள்ளோம்.
மேலும் ஒரு கருத்து, ஒரு பக்கம் நாத்திகர்கள். மற்றொருபக்கம் மதமாற்றிகள் என்று இந்து கலாசாரம் அணு அணுவாக ஆயகலைகள் அருபதினான்கும் அழிந்து கொண்டு போகும் பொழுது தாங்களாவது அறிய வகை ஜோதிடத்தை இணையதளத்தின் மூலமாக நவீன உலகத்திற்கு ஏற்றாற்போல் பாடமாக தாருங்களேன் அதுவும் இலவசமாக ஐயா!.
.
Sir,
ReplyDeleteI understand your pain. It's very hard to take when someone steals our intellectual property.
I too prefer the e-mail class room as the better option sir.
If it is a separate website, the copy option and right click options should be disabled as said by other person in our class.
Anyways we accept whatever decision you take sir.
ஐயா, வகுப்பறையை முற்றிலும் தொழில்முறை இணையதளமாக மாற்றிவிடலாம். மேலும் தங்கள் பதிவின் கருவை (Abstract) மட்டும் அனைவரும் காணும்படி செய்துவிட்டு, முழு விரிவான பதிவினை (Detailed page) தங்கள் இணையதளத்தின் பதிவு (Register) செய்த நபர்கள் மட்டும் பார்க்கும் படி (by providing user name / password) செய்து விடலாம். தங்கள் இணையதளத்தின் பதிவு செய்பவர்கள் சுயவிபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அந்த நபர்களை பார்க்க அனுமதிக்கலாம். இணையதளத்திற்கான செலவினை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். தொடர்ந்து எழுதவும். ஜவஹர் கோவிந்தராஜ், ஆஸ்திரேலியா
ReplyDelete/////kannan said...
ReplyDeleteமேலும் ஒரு கருத்து, ஒரு பக்கம் நாத்திகர்கள். மற்றொருபக்கம் மதமாற்றிகள் என்று இந்து கலாசாரம் அணு அணுவாக ஆயகலைகள் அருபதினான்கும் அழிந்து கொண்டு போகும் பொழுது தாங்களாவது அறிய வகை ஜோதிடத்தை இணையதளத்தின் மூலமாக நவீன உலகத்திற்கு ஏற்றாற்போல் பாடமாக தாருங்களேன் அதுவும் இலவசமாக ஐயா!./////
நான்கு ஆண்டுகளாக பதிவில் நடத்திய பாடங்கள் அனைத்தையும் (மொத்தம் 400 பாடங்கள்) ஊதியம் இல்லாமல், இலவசமாகத்தானே நடத்தியுள்ளேன் சுவாமி! வேறு வழியில் அப்பணி தொடரும்
///தொடர்ந்து எழுத உள்ளேன். பிறகு பயிற்சிப்பாடங்கள், தொடர்ந்து அலசல் பாடங்கள் என்று என் பணி என் உயிர் உள்ளவரை தொடரும் ///
ReplyDeleteமெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள். F.I.R register செய்வதில் தாமதம் வேண்டாம் சார். முள் செடியை விருட்சமாவதற்கு முன்பே களைவது சிறந்தது. ஒரு திருட்டு பல திருட்டுக்கு வழிவகுத்து விடக் கூடாது. ஜெய் ஷ்ரீராம்.
பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.
ReplyDeleteClick-ஐ Disable செய்தும் Content-ஐ Selection செய்யாதவாறும் தடுக்கலாம்.
அய்யா,
ReplyDeleteஇணைய உலகமே தாடு தகா இல்லாத உலகம்.
இதுல போயி உங்க செல்வத்தை எல்லாம் கொட்டி வச்சிங்களே..
பேசாம நீங்க உடனடியா இன்வைட் பண்றவுக மட்டும் பார்க்கிறாப்ல மாத்திருங்க.
செட்டிங்ஸ்ல போயி துழாவுங்க ஆப்ஷன் இருக்கு.
உடனெ இந்த வேலைய செய்ங்க
திருடு போன பிறகாச்சும் லாயத்தை பூட்டுங்க
அய்யா,
ReplyDeleteஇணைய உலகமே தாடு தகா இல்லாத உலகம்.
இதுல போயி உங்க செல்வத்தை எல்லாம் கொட்டி வச்சிங்களே..
பேசாம நீங்க உடனடியா இன்வைட் பண்றவுக மட்டும் பார்க்கிறாப்ல மாத்திருங்க.
செட்டிங்ஸ்ல போயி துழாவுங்க ஆப்ஷன் இருக்கு.
உடனெ இந்த வேலைய செய்ங்க
திருடு போன பிறகாச்சும் லாயத்தை பூட்டுங்க