மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.11.10

இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

---------------------------------------------------------------------
 இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

அடியவன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில், என் எழுத்தாள நண்பர் ஒருவர் என்னை இப்படி எச்சரித்தார்.

“நீங்கள் பத்திரிக்கையில் செட்டிநாட்டு மண் வாசனைக்கதைகள் எழுதுவதைப்போல, ஜோதிடத்தையும் தனியாக  எழுதி, 'Copy Right’
உரிமைக்குப் பதிவு செய்து புத்தகமாக வெளியிடுங்கள். அதுதான்
நல்லது. இணையத்தில் எழுதினால் அதைத் திருடிக் கொண்டு
போவதற்கு இணையத்தில் நிறையத் திருடர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் பதிவுகள் திருட்டுப்போகும் அபாயம் உண்டு”

அதற்கு நான் சொன்னேன்:  “என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, என்னுடைய அறிவை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் எழுதுகிறேன். எழுதிய பிறகு அதை ஆவணப் படுத்தும் முகமாக புத்தகங்களாக வெளியிடலாம் என்றுள்ளேன். என் எழுத்துக்கள் தனிதன்மை வாய்ந்தவை. நான்  என் ஸ்டைலில் எழுத உள்ளேன். அதைத் திருடுபவர்கள் மாட்டிக்கொண்டு விடுவார்கள்.”

ஒருபக்கம், இரு பக்கம் திருட்டுப்போனால் பரவாயில்லை. ஒட்டு மொத்தமாக வகுப்பறையில் எழுதப்பெற்ற  பாடங்கள் அனைத்தையும் ஒருவர் திருடி, தான் எழுதியதைப்போல பதிவிட்டுள்ளார். தொடர்ந்து செய்தும்  வருகிறார். அவர் பல ஜோதிட மென்பொருள்களை தான் தயார் செய்து விற்பதாகவும் தன் விலை விபரங்களையும்  எழுதியுள்ளார். அவைகளை அவர் தயார் செய்தாரா அல்லது அவைகளும் இதுபோலத் திருடப்பெற்ற  மென்பொருட்களா? கடவுளுக்கே வெளிச்சம். அவைகள் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

நம் வகுப்பறையில்  ‘பின் தொடர்பவர்கள்’ இன்றையத் தேதியில்
1,937 பேர்கள் இருக்கிறார்கள். அதுதவிர கூகுள்  ரீடர் வழியாகப்
படிப்பவர்கள் எண்ணிக்கை தெரியாது. மாதம் சராசரியாக ஒரு லட்சம்
ஹிட்ஸ் விழுகிறது. எவர் திருடி பதிவிட்டாலும், அவர்கள் 
கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.

என் பதிவுகள் திருடப்பெற்றுப் பதிவிடுவதை, நம் வகுப்பு மாணவக் கண்மணி ஒருவர் மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அதைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு என் நன்றி

------------------------------------------------------------------------------------
from    DHANA SEKARAN
to    classroom2007@gmail.com
date    9 November 2010 17:37
subject    வகுப்பறை மாணவன்
mailed-by    gmail.com
Signed by    gmail.com

ஐயா!
    வணக்கம் தாங்கள் வகுப்பறையில் நடத்தும் பாடங்கள்  இந்த தளத்தில் உள்ளது. .

(psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6237) நீங்கள் கவனித்து நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி!
------------------------------------------------------------------------------------
நானும் சென்று பார்த்தேன். அதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் சென்று பாருங்கள்


சுட்டி இங்கே!


நமது வகுப்பறையில் இருந்து கிட்டத்தட்ட அத்தனை பக்கங்களும் திருடப்பெற்று, அந்தத் தளத்தில் பதிவிடப்பெற்றுள்ளது. 1370 பிரிவுகளாகப் பதிவிடப்பெற்றுள்ளது. அத்தனையும் 16.8.2010 அன்று  வலையேற்றப் பெற்றுள்ளது. அத்தனை பக்கங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றாமல், ஒட்டு மொத்தமாக பதிவில் ஏற்றப்பெற்றிருக்கிறது. அத்தனையும் copy & paste முறையில் பதிவிடப்பெற்றுள்ளது. சுமார் 2,000
பக்கங்கள் இருக்கலாம்.

நோகாமல் நொங்கு தின்பது இதுதான்!

இதைத் திருட்டு என்பதைவிடக் ‘கொள்ளை’ என்று சொல்லலாம்.

எனது எழுத்துக்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சில பகுதிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிவப்பு நிறத்தில்  கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

நீங்களும் சென்று பாருங்கள்.

கேள்வி 1: ‘திருடப்பெற்ற பகுதிகள் அனைத்தும் அந்தத் தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு என்ன  செய்யலாம்?

கேள்வி 2: இனி எழுத உள்ள பாடங்கள் அனைத்தும் மேல் நிலைப் பாடங்கள். precise lessons அவைகள்  இதுபோல  திருடப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும் 


1

2

3


4

5

6


7

8
--------------------------------------------------------------------------------------
அததனை பதிவுகளும் 16.08.2010ல் பதிவிடப்பெற்றுள்ளதைக் கவனியுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-----------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
என் பெயர் கோவிந்தன் நேரம் கிடைக்கும்போது, இந்த முகவரிப் பக்கம் பூர்த்தியாகும் என்று குறிபிட்டுள்ளார். சுமார் 2,000 பக்கங்களைக் காப்பியடித்துப் பதிவு செய்தவர், இததனை மென்பொருட்களை விற்பவர், தன் முகவரியை மட்டும் ஏன் கொடுக்கவில்லை? பெயரும் உண்மைதானா? இல்லை அதுவும் பொய்யா என்பது தெரியவில்லை.

அலைபேசி எண் கொடுக்கப்பெற்றுள்ளது. 88709 - 74887 (ஏர்டெல் நம்பர்). மூன்று முறை முயன்றேன் ஸ்விட்சிடு ஆஃப் என்று வருகிறது. அந்த எண்ணைவைத்து அவரைப்பிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை. அதற்கு வழி இருக்கிறது. அதை இப்போது சொல்ல விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

70 comments:

  1. அய்யா,

    போலீஸ் complaint எந்த அளவுக்கு உதவ முடியும் என தெரியவில்லை. இது ஒரு சைபர் crime

    எனக்கு தெரிந்து ஒரே வழி, மின் அஞ்சல் மூலம் பாடம் நடத்துவது தான்!

    நன்றி

    ஸ்ரீதர்

    ReplyDelete
  2. அன்பின் சுப்பையா அய்யா,

    மதுரை நாராயணன் கிருஷ்ணனுக்கு நிறைய ஓட்டு போட்டாச்சு. IP மாத்தி பல கள்ள ஓட்டும் போட்டாச்சு. சரியான ஒன்றுக்கு கள்ள ஓட்டு போடுவது தவறான வழிமுறை என மற்றவர்கள் சொன்னாலும் அது பற்றி எனக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவும் தப்பில்லை.



    பிறகு உங்களின் பதிவு திருடப்பட்டதை அறிந்தேன். முன்னர் பதிவில் உள்ள ஒரு சில இடுகைகளை மட்டும் தான் திருடி வந்தனர். ஆனால் தற்போது முழுப்பதிவுமே திருடப்பட்டதை காணும் போது அதிர்ச்சியாக உள்ளது.

    இணையத்தில் முகவரி கண்டுபிடிப்பது எங்களைப் போன்ற தொழில்நுட்பாளர்களுக்கு ஒன்றும் கடினமான காரியம் இல்லை. இதோ அந்த தள உரிமையாளரின் முகவரி.


    PSS Senthamil Selvi Research Foundation
    8, Mariyamman Koil Street,
    Keelsathamangalam
    Puducherry - 605110
    +91.413.2918492
    psssrf@gmail.com


    உங்களின் உழைப்பை திருடி அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறார் என அறிய ஆவலாக உள்ளது. உங்கள் கண்மனிகள் யாராவது இந்த முகவரிக்கு அருகில் வசித்தால் ஒரு நடை போய் பார்க்க சொல்லவும். தவிர மேலே உள்ள தொலைபேசி எண் BSNL தரும் WLL Phone வகை போலத் தெரிகிறது. ஆகவே அதையும் Swith Off செய்யும் முன் அழைக்கவும்.


    பிறகு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் முன் அந்த தளத்தினை http://www.httrack.com/ கொண்டு உங்களின் கணனியில் சேமித்து வைத்துக்கொள்ளவும். அது உங்களுக்கு பலமான ஆதரமாக இருக்கும். இல்லையெனில் அந்த தளம் அழிக்கப்பட்டால் குற்றத்தை நிரூபிக்க கடினமாகி விடும்.(நான் அதை பத்திரமாக காப்பி செய்துவிட்டேன். தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்).


    பிறகு இந்த காப்பி ரைட்டு, லெப்டு, டாப்பு, பாட்டம் என்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்பாக வரும். காரணம் மனிதன் பிறக்கும் போதே எதையும் கற்றுக்கொண்டு வருவதில்லை. கற்று கொண்டது அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து தான். நீங்கள் பெற்ற இந்த ஜோதிட அறிவும் அப்படித்தான்!. நிலைமை இப்படி இருக்க அந்த அறிவு என்பது ஒரு தனிமனித சொத்தாக மாற முடியும்? யாராவது விளக்கமளிக்க முடியுமா?

    உலகப்படம் போட்டுக்காட்டிக்கொண்டிருந்த கிழக்கை, ஒரு பின்னூட்டத்தின் மூலம் மேற்காக திருப்பி வைத்த கல்வெட்டு @ பலூன் மாமாவின் கருத்தை எதிர்பார்க்கும்..


    Muhammad Ismail .H, PHD.,

    ReplyDelete
  3. கலி காலம் அய்யா கலி காலம்!இதுபோல சைபெர் குற்றங்கள் பெருகிவிட்டன.இந்த‌ ரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளை என்ன செய்தாலும் தகும்.காப்பி பேஸ்ட் செய்ய‌முடியாம‌ல் தடை‌யை உருவாக்க‌ முடியுமா என்று பாருங்க‌ள் அய்யா!


    நாள்தோறும் யாஹூ மின்னஞ்ச‌‌லில் ஒரு மில்லிய‌ன் டால‌ர் ப‌ரிசு என்றும், திர‌ண்ட‌ சொத்து கேட்பார் அற்றுக் கிட‌ப்ப‌தாக‌வும் அத‌னை ப‌ங்கு போட்டுக் கொள்ள‌லாம் என‌வும் சும‌ர் 5மின்ன‌ஞ்சல்களாவது வ‌ருகின்றன‌. பெரும்பாலும் இது நைஜீரியாவில் இருந்து கிள‌ம்புகிற‌து.ப‌டிக்காமலேயே அழித்து வ‌ருகிறேன்.

    ReplyDelete
  4. /////Sridhar Subramaniam said...
    அய்யா,
    போலீஸ் complaint எந்த அளவுக்கு உதவ முடியும் என தெரியவில்லை. இது ஒரு சைபர் crime
    எனக்கு தெரிந்து ஒரே வழி, மின் அஞ்சல் மூலம் பாடம் நடத்துவது தான்!
    நன்றி
    ஸ்ரீதர்////

    உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Muhammad Ismail .H, PHD., said...
    அன்பின் சுப்பையா அய்யா,
    மதுரை நாராயணன் கிருஷ்ணனுக்கு நிறைய ஓட்டு போட்டாச்சு. IP மாத்தி பல கள்ள ஓட்டும் போட்டாச்சு. சரியான ஒன்றுக்கு கள்ள ஓட்டு போடுவது தவறான வழிமுறை என மற்றவர்கள் சொன்னாலும் அது பற்றி எனக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவும் தப்பில்லை.//////

    உண்மைதான். உங்களின் கருத்திற்கும் போட்ட ஓட்டுக்களுக்கும் நன்றி நண்பரே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////பிறகு உங்களின் பதிவு திருடப்பட்டதை அறிந்தேன். முன்னர் பதிவில் உள்ள ஒரு சில இடுகைகளை மட்டும் தான் திருடி வந்தனர். ஆனால் தற்போது முழுப்பதிவுமே திருடப்பட்டதை காணும் போது அதிர்ச்சியாக உள்ளது.
    இணையத்தில் முகவரி கண்டுபிடிப்பது எங்களைப் போன்ற தொழில்நுட்பாளர்களுக்கு ஒன்றும் கடினமான காரியம் இல்லை. இதோ அந்த தள உரிமையாளரின் முகவரி.
    PSS Senthamil Selvi Research Foundation
    8, Mariyamman Koil Street,
    Keelsathamangalam
    Puducherry - 605110
    +91.413.2918492
    psssrf@gmail.com////////

    உங்கள் தொழில்நுட்ப அறிவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////////உங்களின் உழைப்பை திருடி அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறார் என அறிய ஆவலாக உள்ளது. உங்கள் கண்மணிகள் யாராவது இந்த முகவரிக்கு அருகில் வசித்தால் ஒரு நடை போய் பார்க்க சொல்லவும். தவிர மேலே உள்ள தொலைபேசி எண் BSNL தரும் WLL Phone வகை போலத் தெரிகிறது. ஆகவே அதையும் Swith Off செய்யும் முன் அழைக்கவும்.
    பிறகு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் முன் அந்த தளத்தினை http://www.httrack.com/ கொண்டு உங்களின் கணனியில் சேமித்து வைத்துக்கொள்ளவும். அது உங்களுக்கு பலமான ஆதரமாக இருக்கும். இல்லையெனில் அந்த தளம் அழிக்கப்பட்டால் குற்றத்தை நிரூபிக்க கடினமாகி விடும்.(நான் அதை பத்திரமாக காப்பி செய்துவிட்டேன். தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்).///////

    உங்களின் பேருதவிக்கு நன்றி! என் வேலையை சுலபமாக்கிவிட்டீர்கள். நீங்கள் சேமித்ததை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்: எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////// பிறகு இந்த காப்பி ரைட்டு, லெப்டு, டாப்பு, பாட்டம் என்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்பாக வரும். காரணம் மனிதன் பிறக்கும் போதே எதையும் கற்றுக்கொண்டு வருவதில்லை. கற்று கொண்டது அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து தான். நீங்கள் பெற்ற இந்த ஜோதிட அறிவும் அப்படித்தான்!. நிலைமை இப்படி இருக்க அந்த அறிவு என்பது ஒரு தனிமனித சொத்தாக மாற முடியும்? யாராவது விளக்கமளிக்க முடியுமா?
    உலகப்படம் போட்டுக்காட்டிக்கொண்டிருந்த கிழக்கை, ஒரு பின்னூட்டத்தின் மூலம் மேற்காக திருப்பி வைத்த கல்வெட்டு @ பலூன் மாமாவின் கருத்தை எதிர்பார்க்கும்..//////

    சிந்திக்க வைக்கும் நல்ல கேள்வி! பிறக்கும்போதே யாரும் அறிவு கொண்டிருக்க முடியாது. கற்பதால் வருவபவைதான் அனைத்தும். நான் முப்பது ஆண்டுகாலம் கற்றவற்றைக் குறிப்பெடுத்துவைத்திருந்து ஐந்து ஆண்டுகளாகப் பதிவில் எழுதி வருகிறேன். என் உழைப்பின் மேன்மையை அனைவரும் உணர வேண்டும். அதுபோல அவரும் செய்தால் தவறு எதுவும் இல்லை. இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே வாரத்தில் அனைத்தையும் கடத்திக்கொண்டுபோய் காப்பி & பேஸ்ட் செய்து பதிடுவதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? 21 ஆண்டுகள் ஒருவர் வளர்த்த பெண்ணை ஒருவன் கத்தி முனையில் கடத்திக்கொண்டுபோவதற்குச் சமம் இது.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  6. /////kmr.krishnan said...
    கலி காலம் அய்யா கலி காலம்!இதுபோல சைபெர் குற்றங்கள் பெருகிவிட்டன.இந்த‌ ரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளை என்ன செய்தாலும் தகும்.காப்பி பேஸ்ட் செய்ய‌முடியாம‌ல் தடை‌யை உருவாக்க‌ முடியுமா என்று பாருங்க‌ள் அய்யா!
    நாள்தோறும் யாஹூ மின்னஞ்ச‌‌லில் ஒரு மில்லிய‌ன் டால‌ர் ப‌ரிசு என்றும், திர‌ண்ட‌ சொத்து கேட்பார் அற்றுக் கிட‌ப்ப‌தாக‌வும் அத‌னை ப‌ங்கு போட்டுக் கொள்ள‌லாம் என‌வும் சும‌ர் 5மின்ன‌ஞ்சல்களாவது வ‌ருகின்றன‌. பெரும்பாலும் இது நைஜீரியாவில் இருந்து கிள‌ம்புகிற‌து.ப‌டிக்காமலேயே அழித்து வ‌ருகிறேன்.///////

    “திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
    அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
    திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
    திருட்டை ஓழிக்க முடியாது
    திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
    திருட்டை ஓழிக்க முடியாது”
    - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

    ReplyDelete
  7. use copyscape to detect the list of people who uses your own material.

    http://en.wikipedia.org/wiki/Copyscape

    http://www.copyscape.com/

    ReplyDelete
  8. Check our government laws for content-theft from the following URL. (Information Technology Act 2000).

    Section 43, 60, 66, 70, 72 deals with content theft. For more details you can google and get the details about this law.

    ReplyDelete
  9. Also google for data protection laws of India. You will get plenty of legal support to protect your materials.

    Check chapter 9 and 11 of IT Act 2000 for more details.

    ReplyDelete
  10. இது தான் பகற் கொள்ளை போலும்.
    இப்படியும் மனிதர்களா?........................
    எளிதில் அடையாளம் காண்பித்த
    நண்பர் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  11. I read the comments of Mr. Ismail. It looks like he had some valid points with respect to the copy right. You can very well prove that any subject you are learning from others. But when it comes to IPR (Intellectutal property right) it is worth to think from the perspective of the person who presented the same.

    As part of our school time we came across good number of teachers. Irrespective of all teachers there are few teachers who are liked by most. The reason is simple. It is his innovative approach. The same needs to be recognized. Just because it is not tangible it is not wise for the learned people to counter argue/heckle the same with a more generic concept of "we learn everything from others". The same thing is applicable for everyone including me.

    ReplyDelete
  12. ஐயா,
    முதலில் அங்குள்ள பின்னூட்ட படிவத்தில் அவரின் தவறை சுட்டிக்காட்டி, உங்கள் பாடப்பகுதிகளை உடனே நீக்குமாறு அறிவுறுத்துங்கள். அவர் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த வழி பற்றி சிந்திக்கலாம்.

    நீங்கள் மின்னஞ்சல் வழியில் பாடம் நடத்தினாலும் திருட நினைப்பவர்கள் திருடிக்கொண்டுதான் இருப்பார்கள்.

    "திருடனாக பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

    நன்றி
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா!

    என்ன கொடுமை சரவணன் இது ?

    தெரு தேங்காயை எடுத்துகொண்டு போய் வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக அல்லவா இருக்கு என்று கேள்வி பட்டுள்ளேன்.

    ஆனால்,
    இது அதனிலும் கொடுமையிலும் பெரிய கொடுமையாக வியாபாரம் அல்லவா ஜோராக நடக்கின்றது .

    மகாகவி சுப்பிரமணி பாரதி சொன்னது போல

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினையாயிரம் நாட்டல் எனிலும்
    ஒரு ஏழைக்கு " கல்வி அறிவு!" போதித்தல்

    என்னும் கூற்றின் படி எத்தனையோ வகையான " மிகவும் அறிய வகை கல்வி பாடங்களை!" களவாடி விற்று பிழைப்பு தேடும் நபர்கள் செய்யும் பாவத்தை எங்கு போகி தொலைக்க போகின்றார்கள் என்றுதான் தெரிய வில்லை.

    சகோதரர் Muhammad Ismail .H, PHD., அவர்களுக்கு எமது மனம்மார்ந்த நன்றி சார்!
    மனித நேயம் இன்னும் எமது மண்ணில் உள்ளது என்பதிற்கு தாங்கள் ஒருவரே (சாட்சியாக) போதும்

    ReplyDelete
  14. நண்பர் முஹமது இஸ்மயில் அவர்களின் விரைவு நடவடிக்கைப் பாராட்டுக்குரியது.இந்த அளவு துல்லியமாக முகவரி வரை கண்டுபிடிக்க முடியும் என்பது என் போன்ற க‌ணினியில் ஆரம்பப்பாடமே அறிந்த‌
    வய‌தேறியவர்களுக்கு மிகுந்த ஆச்சரிய்த்தை அளிக்கிறது.நன்றி நண்பரே!


    எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான‌ அங்கங்க‌ளுடன் பிறந்தாலும்,அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றலில் வித்யாசம் உண்டு.அதேபோல வாத்தியாரும் சோதிடப்பாடத்தை முன்னோர் அளித்த அடிப்படையைத் தழுவி எழுதினாலும்,அவருடைய தனிப்பட்ட சொல்லாற்ற‌லாலும், பாடம் நடத்தும் எளிய, சுவைமிக்க முறையாலும்
    முன்னோர்களிடமிருந்து பல வகைகளிலும் மாறுபடுகிறார். எனவே அவருடைய‌
    எழுத்து தனித்தன்மை வாய்ந்ததுவே! அதனை அப்படியே திருடியவர், திருடியது மட்டும் இல்லாமல் விலை வைத்தவர் குற்றம் புரிந்தவரே.
    தண்டிக்கத் தகுந்தவரே!

    ReplyDelete
  15. அய்யா,
    நான் நேற்றிரவுதான் வெளிநாடு பயணம் முடித்து வீடு திரும்பிணேன்.சற்றே ஒரு அருமையான காபி குடித்துவிட்டு,(கடந்த 10 நாள் பாடங்களை படிக்க) உற்சாகமாக நம் வகுப்பறைக்கு வந்து நுழைந்தால், இப்படி ஒரு கொள்ளை நடந்திருப்பது கண்டு மணம் சுக்கல் நூறாக சிதறி என் அத்துனை உற்சகத்தையும் கொன்டு சென்றுவிட்டது ! இவ்வுலகில் எத்தனைக் கேவலமான வார்த்தைகள் உள்ளதோ அத்தனை வார்த்தைகளும் அந்த திருட்டுத் திருவாளருக்குப் பொருந்தும்!! நல்ல வேளையாக சரஸ்வதி தேவி நேரில் இல்லை, இருந்தால் அவளையும் கடத்தி விற்றுவிடுவார் ஏட்டுச்சுவடி கள்ளர் திரு.கோவிந்தன் அவர்கள். இவருக்கு காவல்துறை பத்தாது, திருடப்பார்த்த கண்களையும், திருட பலமுறை காபி பேஸ்ட் க்ளிக்கிய கைகளையும் நூறு துண்டாக வெட்டிப் பொசுக்க வேண்டும். தான் எப்பேர்பட்ட கில்லாடி கிரி கிரி என்று தன்னுடைய ஜாதகத்தை இந்த சுட்டியின் மூலம் விளக்குகிராறாம் விளக்கெண்னை ! (http://psssrf.org.in/screenshort/sbirth.aspx இனி எனக்கு எழுத வார்த்தை இல்லை. திட்டச்சொன்னால் 24 மணி நேரமும் அவரைத் திட்டுவேன் !!!

    சஞ்சய் ராமனாதன்

    ReplyDelete
  16. ////Ravi said...
    use copyscape to detect the list of people who uses your own material.
    http://en.wikipedia.org/wiki/Copyscape
    http://www.copyscape.com//////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //////Ravi said...
    Check our government laws for content-theft from the following URL. (Information Technology Act 2000).
    Section 43, 60, 66, 70, 72 deals with content theft. For more details you can google and get the details about this law./////

    தேவைப்பட்டால் பயன் படுத்திக்கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete
  18. ////Ravi said...
    Also google for data protection laws of India. You will get plenty of legal support to protect your materials.
    Check chapter 9 and 11 of IT Act 2000 for more details./////

    தேவைப்பட்டால் பயன் படுத்திக்கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete
  19. //////Alasiam G said...
    இது தான் பகற் கொள்ளை போலும்.
    இப்படியும் மனிதர்களா?.......................
    எளிதில் அடையாளம் காண்பித்த நண்பர் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டுகள்./////

    ஆமாம். அவர்போன்று தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் நமது வகுப்பறைக்கு வந்து செல்வது நாம் செய்த புண்ணியம்!

    ReplyDelete
  20. /////Ravi said...
    I read the comments of Mr. Ismail. It looks like he had some valid points with respect to the copy right.
    You can very well prove that any subject you are learning from others. But when it comes to IPR (Intellectutal
    property right) it is worth to think from the perspective of the person who presented the same.
    As part of our school time we came across good number of teachers. Irrespective of all teachers there are few teachers who are liked by most. The reason is simple. It is his innovative approach. The same needs to be
    recognized. Just because it is not tangible it is not wise for the learned people to counter argue/heckle the same
    with a more generic concept of "we learn everything from others". The same thing is applicable for everyone including me./////

    ஆமாம். எல்லா ஆக்கங்களையும் ஒரு கண்ணோட்டத்தில் எடைபோட முடியாது. தனிதன்மை, உழைப்பு, மனதில் பதியும்படியான எளிய நடையில் எழுதுவது, என்று எல்லாவற்றையும் மனதில் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  21. /////R.Puratchimani said...
    ஐயா,
    முதலில் அங்குள்ள பின்னூட்ட படிவத்தில் அவரின் தவறை சுட்டிக்காட்டி, உங்கள் பாடப்பகுதிகளை உடனே
    நீக்குமாறு அறிவுறுத்துங்கள். அவர் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த வழி பற்றி சிந்திக்கலாம்.
    நீங்கள் மின்னஞ்சல் வழியில் பாடம் நடத்தினாலும் திருட நினைப்பவர்கள் திருடிக்கொண்டுதான்
    இருப்பார்கள்.
    "திருடனாக பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
    நன்றி
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி////

    உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி புரட்சியாரே!

    ReplyDelete
  22. //////kannan said...
    வணக்கம் ஐயா!
    என்ன கொடுமை சரவணன் இது?
    தெரு தேங்காயை எடுத்துகொண்டு போய் வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக அல்லவா இருக்கு
    என்று கேள்வி பட்டுள்ளேன்.
    ஆனால்,
    இது அதனிலும் கொடுமையிலும் பெரிய கொடுமையாக வியாபாரம் அல்லவா ஜோராக நடக்கின்றது .
    மகாகவி சுப்பிரமணி பாரதி சொன்னது போல
    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினையாயிரம் நாட்டல் எனிலும்
    ஒரு ஏழைக்கு " கல்வி அறிவு!" போதித்தல்
    என்னும் கூற்றின் படி எத்தனையோ வகையான " மிகவும் அறிய வகை கல்வி பாடங்களை!" களவாடி விற்று
    பிழைப்பு தேடும் நபர்கள் செய்யும் பாவத்தை எங்கு போகி தொலைக்க போகின்றார்கள் என்றுதான் தெரிய
    வில்லை. சகோதரர் Muhammad Ismail .H, PHD., அவர்களுக்கு எமது மனம்மார்ந்த நன்றி சார்!
    மனித நேயம் இன்னும் எமது மண்ணில் உள்ளது என்பதிற்கு தாங்கள் ஒருவரே (சாட்சியாக) போதும்/////

    அவர்போன்று சில உள்ளங்கள் இருப்பதால்தான் இன்னும் உலகம் நீற்றுப்போகாமல் இருக்கிறது!

    ReplyDelete
  23. Hello sir,
    sending some information while this guy register the domain. May be helpful to you.

    Domain ID:D3362585-AFIN
    Domain Name:PSSSRF.ORG.IN
    Created On:25-Mar-2009 13:09:18 UTC
    Last Updated On:19-Mar-2010 15:57:12 UTC
    Expiration Date:25-Mar-2011 13:09:18 UTC
    Sponsoring Registrar:Directi Internet Solutions Pvt. Ltd. dba PublicDomainRegistry.com (R5-AFIN)
    Status:CLIENT TRANSFER PROHIBITED
    Registrant ID:DI_9573724
    Registrant Name:Administrator
    Registrant Organization:PSS Senthamil Selvi Research Foundation
    Registrant Street1:8, Mariyamman Koil Street,
    Registrant Street2:Keelsathamangalam
    Registrant Street3:
    Registrant City:Puducherry
    Registrant State/Province:Pondicherry
    Registrant Postal Code:605110
    Registrant Country:IN
    Registrant Phone:+091.4132918492
    Registrant Phone Ext.:
    Registrant FAX:
    Registrant FAX Ext.:
    Registrant Email:psssrf@gmail.com
    Admin ID:DI_9573724
    Admin Name:Administrator
    Admin Organization:PSS Senthamil Selvi Research Foundation
    Admin Street1:8, Mariyamman Koil Street,
    Admin Street2:Keelsathamangalam
    Admin Street3:
    Admin City:Puducherry
    Admin State/Province:Pondicherry
    Admin Postal Code:605110
    Admin Country:IN
    Admin Phone:+091.4132918492
    Admin Phone Ext.:
    Admin FAX:
    Admin FAX Ext.:
    Admin Email:psssrf@gmail.com
    Tech ID:DI_9573724
    Tech Name:Administrator
    Tech Organization:PSS Senthamil Selvi Research Foundation
    Tech Street1:8, Mariyamman Koil Street,
    Tech Street2:Keelsathamangalam
    Tech Street3:
    Tech City:Puducherry
    Tech State/Province:Pondicherry
    Tech Postal Code:605110
    Tech Country:IN
    Tech Phone:+091.4132918492
    Tech Phone Ext.:
    Tech FAX:
    Tech FAX Ext.:
    Tech Email:psssrf@gmail.com
    Name Server:NS5.PARADOXTECHNOLOGIES.NET
    Name Server:NS6.PARADOXTECHNOLOGIES.NET
    ============================================
    தனி மின்னஞ்சலில் வந்த கடிதம். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  24. //////kmr.krishnan said...
    நண்பர் முஹமது இஸ்மயில் அவர்களின் விரைவு நடவடிக்கைப் பாராட்டுக்குரியது.இந்த அளவு துல்லியமாக முகவரி வரை கண்டுபிடிக்க முடியும் என்பது என் போன்ற க‌ணினியில் ஆரம்பப்பாடமே அறிந்த‌
    வய‌தேறியவர்களுக்கு மிகுந்த ஆச்சரிய்த்தை அளிக்கிறது.நன்றி நண்பரே!
    எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான‌ அங்கங்க‌ளுடன் பிறந்தாலும்,அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றலில் வித்யாசம் உண்டு.அதேபோல வாத்தியாரும் சோதிடப்பாடத்தை முன்னோர் அளித்த அடிப்படையைத் தழுவி எழுதினாலும்,அவருடைய தனிப்பட்ட சொல்லாற்ற‌லாலும், பாடம் நடத்தும் எளிய, சுவைமிக்க முறையாலும்
    முன்னோர்களிடமிருந்து பல வகைகளிலும் மாறுபடுகிறார். எனவே அவருடைய‌
    எழுத்து தனித்தன்மை வாய்ந்ததுவே! அதனை அப்படியே திருடியவர், திருடியது மட்டும் இல்லாமல் விலை வைத்தவர் குற்றம் புரிந்தவரே.
    தண்டிக்கத் தகுந்தவரே!////////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  25. /////sanjay said...
    அய்யா,
    நான் நேற்றிரவுதான் வெளிநாடு பயணம் முடித்து வீடு திரும்பிணேன்.சற்றே ஒரு அருமையான காபி குடித்துவிட்டு,(கடந்த 10 நாள் பாடங்களை படிக்க) உற்சாகமாக நம் வகுப்பறைக்கு வந்து நுழைந்தால், இப்படி ஒரு கொள்ளை நடந்திருப்பது கண்டு மணம் சுக்கல் நூறாக சிதறி என் அத்துனை உற்சகத்தையும் கொன்டு சென்றுவிட்டது ! இவ்வுலகில் எத்தனைக் கேவலமான வார்த்தைகள் உள்ளதோ அத்தனை வார்த்தைகளும் அந்த திருட்டுத் திருவாளருக்குப் பொருந்தும்!! நல்ல வேளையாக சரஸ்வதி தேவி நேரில் இல்லை, இருந்தால் அவளையும் கடத்தி விற்றுவிடுவார் ஏட்டுச்சுவடி கள்ளர் திரு.கோவிந்தன் அவர்கள். இவருக்கு காவல்துறை பத்தாது, திருடப்பார்த்த கண்களையும், திருட பலமுறை காபி பேஸ்ட் க்ளிக்கிய கைகளையும் நூறு துண்டாக வெட்டிப் பொசுக்க வேண்டும். தான் எப்பேர்பட்ட கில்லாடி கிரி கிரி என்று தன்னுடைய ஜாதகத்தை இந்த சுட்டியின் மூலம் விளக்குகிராறாம் விளக்கெண்னை ! (http://psssrf.org.in/screenshort/sbirth.aspx இனி எனக்கு எழுத வார்த்தை இல்லை. திட்டச்சொன்னால் 24 மணி நேரமும் அவரைத் திட்டுவேன் !!!
    சஞ்சய் ராமனாதன்/////

    அவறைத்திருத்துவது நமது வேலை அல்ல! திட்டித் தீர்ப்பதும் நமது வேலை அல்லை. அவற்றை இறைவன் பார்த்துக்கொள்வான். திருடிய பதிவுகளை அவர் நீக்கிவிட்டால் போதும். அத்துடன் விட்டுவிடுவோம் சஞ்சய்!

    ReplyDelete
  26. please try get copy right under creative commas many things are copyrigtted there :
    for detials

    we can get our rights protected.
    http://en.wikipedia.org/wiki/Creative_Commons
    webaddress


    and ..
    http://creativecommons.org/
    with reagards
    vinoth

    ReplyDelete
  27. கற்பனைக் கதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒருவருடைய கற்பனையில் தோன்றி அதனை எழுத்து வடிவில் கொண்டு வந்து விட்டால் அது அவருடைய சொந்த உரிமை பெற்றது. யார் வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம் அதனால் நான் அதனை எடுத்துக் கையாள முடியாது. அதுதான் காப்பி ரைட். ஜோசியம் என்பது பொதுவான கலை. அதை விளக்கி, வார்த்தைகளில் மற்றவர்களுக்குப் புரியும்படி சொல்வது ஒரு தனிக்கலை. அந்தக் கலையில் வல்லவராக, பாமரரும் புரிந்து கொள்ளும்படி பாடங்களை எழுதித் தந்த கொடையை போகிற போக்கில் ஒருவர் அள்ளிக்கொண்டு போவது காப்பி ரைட் மீறல் மட்டுமல்ல, வழிப்பறி மாதிரிதான். ஆகையால் தாங்கள் உடனடியாக அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் கொடுத்து அத்தனைத் திருட்டு சொத்துக்களையும் நீக்கிவிடும்படியும், இல்லாவிட்டால் சட்டப்படியான வழக்குத் தொடரப்படுமென்றும் என்றும் அறிக்கைக் கொடுங்கள். அவர் அப்படிச் செய்யாவிட்டால், உடனடியாக ஒரு சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். நன்றி.

    ReplyDelete
  28. அய்யா, இணைய தளத்தில் வந்தே மாதரம் பிளாக் ஸ்பட்டில் இதற்கு குறிப்பு கொடுத்திருக்கிறார்கள். இதன் படி செய்தால் நமது பிளாக்கரிலிருந்து யாரும் பதிவை அப்படியே copy செய்யமுடியாது. ரைட் கிளிக்கை செயலிழக்கச் செய்து விடும். தயவுசெய்து பாருங்கள்.

    ReplyDelete
  29. Vinoth said...
    please try get copy right under creative commas many things are copyrigtted there :
    for detials
    we can get our rights protected.
    http://en.wikipedia.org/wiki/Creative_Commons
    webaddress
    and ..
    http://creativecommons.org/
    with reagards
    vinoth////

    உங்களின் மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே! ஆவன செய்கிறேன்!

    ReplyDelete
  30. ////Thanjavooraan said...
    கற்பனைக் கதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒருவருடைய கற்பனையில் தோன்றி அதனை எழுத்து வடிவில் கொண்டு வந்து விட்டால் அது அவருடைய சொந்த உரிமை பெற்றது. யார் வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம் அதனால் நான் அதனை எடுத்துக் கையாள முடியாது. அதுதான் காப்பி ரைட். ஜோசியம் என்பது பொதுவான கலை. அதை விளக்கி, வார்த்தைகளில் மற்றவர்களுக்குப் புரியும்படி சொல்வது ஒரு தனிக்கலை. அந்தக் கலையில் வல்லவராக, பாமரரும் புரிந்து கொள்ளும்படி பாடங்களை எழுதித் தந்த கொடையை போகிற போக்கில் ஒருவர் அள்ளிக்கொண்டு போவது காப்பி ரைட் மீறல் மட்டுமல்ல, வழிப்பறி மாதிரிதான். ஆகையால் தாங்கள் உடனடியாக அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் கொடுத்து அத்தனைத் திருட்டு சொத்துக்களையும் நீக்கிவிடும்படியும், இல்லாவிட்டால் சட்டப்படியான வழக்குத் தொடரப்படுமென்றும் என்றும் அறிக்கைக் கொடுங்கள். அவர் அப்படிச் செய்யாவிட்டால், உடனடியாக ஒரு சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். நன்றி.//////

    உங்களின் மேலான யோசனைக்கு நன்றி! ஒருவாரம் பார்க்கலாம். இத்தனை பேர்களின் கண்டனத்தையும் சட்டை செய்யாமல் அவர் இருப்பாரேயானால், அதைச் செய்யலாம் சார்!

    ReplyDelete
  31. /////selvakumar said...
    THIS IS VERY BAD////

    உங்களின் வருத்ததைப் பதிவு செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  32. //////selvakumar said...
    THIS IS VERY BAD AND WORST.//////

    உங்களின் வருத்ததைப் பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. /////Govindasamy said...
    அய்யா, இணைய தளத்தில் வந்தே மாதரம் பிளாக் ஸ்பட்டில் இதற்கு குறிப்பு கொடுத்திருக்கிறார்கள். இதன் படி செய்தால் நமது பிளாக்கரிலிருந்து யாரும் பதிவை அப்படியே copy செய்யமுடியாது. ரைட் கிளிக்கை செயலிழக்கச் செய்து விடும். தயவுசெய்து பாருங்கள்./////

    அதையெல்லாம் செய்திருக்கிறேன். அதை மீறி Comments Page > show the original Post > பகுதியில் க்ளிக்கினால் மொத்தப் பதிவும் அங்கே தெரியும். அங்கிருந்து காப்பி எடுக்கலாம். அதைத் தடுக்க வழியில்லை!

    ReplyDelete
  34. அய்யா தங்கள் தளத்தை காப்பிரைட் செய்து விடலாம். கீழ்கண்ட தளத்தில் பதிவு செய்தால் காப்பி பேஸ்ட் செய்ய முடியாது.

    நாம் என்ன தான் முயற்சித்தாலும் இணைய திருட்டை தடுக்கவே முடியாது. இணையம் என்பது திறந்தவெளி இங்கு எதையும் அவ்வளவு சுலபமாக மறைக்க முடியாது. பல லட்சகணக்காண மதிப்புடைய சாப்ட்வேர்கள் கீ உடைக்கப்பட்டு தறவிரக்கம் செய்யப்படும் போது நம் எழுத்துகள் எல்லாம் எம்மாத்திரம்.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
    என விட்டுவிட வேண்டியது தான்.

    ReplyDelete
  35. அவர்களது ஜோதிட சாப்ட்வேரை கிராக் செய்து வெளிட நமது வகுப்பறை மாணவர்கள் யாராவது முயன்றால் அவர்கள் சும்மா இருப்பார்களா.

    ReplyDelete
  36. Ayya, I didnt read the lessons for last 2 weeks as I was totally sick.(Im carrying my second baby, very hard to manage kid, family work).
    Just today logged in to read the lessons, I was totally shocked to know the theft.Lot of our class members have given valuable suggestions,plz take action accordingly. I dont know wot to say about that 'GOVIND', losing hope on ppl. I know the pain & effort you take to deliver each line. I feel very sorry for this....otherwise I do not know, how to help you on this, though Im willing to offer....Im sorry ayya...

    ReplyDelete
  37. Dear Sir,
    Shocking news sir. that also in the name of "govinda" Make one police complaint cyber crime department.
    : make your blogs copy right protection.

    ReplyDelete
  38. அய்யா, இது பிற்காலத்தில் அவர்களே எழுதியது போலாகும். (வரலாறு முக்கியம் அமைச்சரே). எதற்கும் நீங்கள் வழக்கு பதிவு செய்தல் நியாயம் ஆகும்.

    ReplyDelete
  39. இது என்னுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் 'present ' மட்டும் போட்டுடுங்க.

    ReplyDelete
  40. காப்பிரைட் செய்யும் தளத்தின் முகவரியை எழுத மறந்து விட்டேன். கீழே கொடுத்துள்ளேன். முயன்று பாருங்கள். தளம் முழுவதுமே ரைட்கிளிக் செய்து காப்பி பேஸ்ட் செய்ய முடியாது.

    http://myfreecopyright.com

    ReplyDelete
  41. தமிழுக்கும் ஜோதிடத்திற்கும் ஆற்றுகின்ற தங்களின் பங்களிப்பு அளப்பரியாதவை. ஆனாலும் தங்களின் உழைப்பின் பயன் தங்களுக்கே சேர வேண்டும். ஆதலால் IP சட்டத்தின் கீழ் COPYRIGHTS பதிவு செய்ய வேண்டிய தருணம் இது. அதன் பின் சட்டம் தன் கடமையினை செவ்வனே செய்யும் என நம்புகிறேன்!!
    ‍- ஜவகர் கோவிந்தராஜ், ஆஸ்திரேலியா

    ReplyDelete
  42. டியர் சார்,
    நான் ஏற்கனவே (Mon, Oct 4, 2010 at 7:53 PM ) இந்த மெயிலை உங்களுக்கு அனுப்பி இருந்தேன்..பார்க்கச் சொல்லி..நீங்கள் பார்க்கவில்லை..கவனத்தில் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்..
    இப்போது வேறு ரூபத்தில் விஷயம் வெளியாகி இருப்பது மகிழ்ச்சிதான்..இவனெல்லாம் என்ன research foundation வெச்சு என்ன பண்ணப் போறானோ?நாராயணன் எந்த அவலத்தை ரோட்டோரம் கண்டு சேவை மனப்பான்மைக்குத் தூண்டப்பட்டாரோ அந்த அவலத்தை தினமும் செய்யும் ஆளாக இருப்பான் போலிருக்கிறது..இப்படிப்பட்ட கேவலமானவர்களை மற்றவர்கள் ஏதும் பெரிதாகக் கேவலப் படுத்திவிடமுடியாது என்பதுதான் என் எண்ணம்..டெக்னிகளா அட்ரெஸ் கண்டுபிடிச்சு வெளியிட்ட Muhammad Ismail .H, PHD.,அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    mail mater:

    //////////copyright problem: Take care..
    Reply |napoleon gnanaprakasam to Subramanian
    show details Oct 4

    fromnapoleon gnanaprakasam
    toSubramanian Veerappan

    dateMon, Oct 4, 2010 at 7:53 PM
    subjectcopyright problem: Take care..
    mailed-bygmail.com

    hide details Oct 4


    Dear சார்..

    உங்கள் பாட சப்ஜெக்ட் பதிவுகளில் வெளியான விவரங்களை தன் பதிவில் பதிவிட்டு சாப்ட்வேர் விளம்பரம் செய்துவரும் ஒரு வலைப் பதிவைக் கண்டேன்..
    http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6237
    நீங்கள் பாருங்கள்..\\\\\\\\\\\

    ReplyDelete
  43. //////MANI said...
    அய்யா தங்கள் தளத்தை காப்பிரைட் செய்து விடலாம். கீழ்கண்ட தளத்தில் பதிவு செய்தால் காப்பி பேஸ்ட் செய்ய முடியாது.
    நாம் என்ன தான் முயற்சித்தாலும் இணைய திருட்டை தடுக்கவே முடியாது. இணையம் என்பது திறந்தவெளி இங்கு எதையும் அவ்வளவு சுலபமாக மறைக்க முடியாது. பல லட்சகணக்காண மதிப்புடைய சாப்ட்வேர்கள் கீ உடைக்கப்பட்டு தறவிரக்கம் செய்யப்படும் போது நம் எழுத்துகள் எல்லாம் எம்மாத்திரம்.
    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
    என விட்டுவிட வேண்டியது தான்./////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. ////MANI said...
    அவர்களது ஜோதிட சாப்ட்வேரை கிராக் செய்து வெளிட நமது வகுப்பறை மாணவர்கள் யாராவது முயன்றால் அவர்கள் சும்மா இருப்பார்களா?//////

    அதை நாம் செய்ய மாட்டோம். அதர்மம் என்பது தெரியும். அதனால் செய்ய மாட்டோம்!

    ReplyDelete
  45. /////kalai said...
    Ayya, I didnt read the lessons for last 2 weeks as I was totally sick.(Im carrying my second baby, very hard to manage kid, family work).
    Just today logged in to read the lessons, I was totally shocked to know the theft.Lot of our class members have given valuable suggestions,plz take action accordingly. I dont know wot to say about that 'GOVIND', losing hope on ppl. I know the pain & effort you take to deliver each line. I feel very sorry for this....otherwise I do not know, how to help you on this, though Im willing to offer....Im sorry ayya.../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  46. //////CJeevanantham said...
    Dear Sir,
    Shocking news sir. that also in the name of "govinda" Make one police complaint cyber crime department.
    : make your blogs copy right protection./////

    அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம். ஒருவாரத்திற்குள் அவர், திருடப்பெற்ற பகுதிகள் அனைத்தையும் நீக்காவிட்டால், அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம்!

    ReplyDelete
  47. /////satheshpandian said...
    அய்யா, இது பிற்காலத்தில் அவர்களே எழுதியது போலாகும். (வரலாறு முக்கியம் அமைச்சரே). எதற்கும் நீங்கள் வழக்கு பதிவு செய்தல் நியாயம் ஆகும்./////

    நல்லது. உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. /////Uma said...
    இது என்னுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் 'present ' மட்டும் போட்டுடுங்க./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  49. /////MANI said...
    காப்பிரைட் செய்யும் தளத்தின் முகவரியை எழுத மறந்து விட்டேன். கீழே கொடுத்துள்ளேன். முயன்று பாருங்கள். தளம் முழுவதுமே ரைட்கிளிக் செய்து காப்பி பேஸ்ட் செய்ய முடியாது.
    http://myfreecopyright.com/////

    மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  50. ///////Jawahar said...
    தமிழுக்கும் ஜோதிடத்திற்கும் ஆற்றுகின்ற தங்களின் பங்களிப்பு அளப்பரியாதவை. ஆனாலும் தங்களின் உழைப்பின் பயன் தங்களுக்கே சேர வேண்டும். ஆதலால் IP சட்டத்தின் கீழ் COPYRIGHTS பதிவு செய்ய வேண்டிய தருணம் இது. அதன் பின் சட்டம் தன் கடமையினை செவ்வனே செய்யும் என நம்புகிறேன்!!
    ‍- ஜவகர் கோவிந்தராஜ், ஆஸ்திரேலியா/////

    நல்லது. உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஜவஹர்!

    ReplyDelete
  51. அன்புடன் வணக்கம்
    நமது வகுப்பறை பாடம் திருடு போனது மனம் மிகவும் வேதனை அளிகிறது
    இரவு பகல் பாராமல் தட்டச்சு செய்வது எவ்வளவு சிரமமான விஷயம்!!!.நோகாமல் நொங்கு திங்கறான்
    நான் ஒரு சமையல் பதிவை. copy &paste.. செயும் போது இந்த வசதி இல்லை ???என வந்தது அது போல் செயலாம ..
    செய்தாலும் எப்பிடியாவது திருடிவிடுவார்கள்... வகுப்பறை சக மாணவர் திரு முஹமது இஸ்மைய்ல்
    போன்ற கணணி நுட்ப நிபுணர்கள் ஏதாவது செய்ய இயலும!!! .முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. /////minorwall said...
    டியர் சார்,
    நான் ஏற்கனவே (Mon, Oct 4, 2010 at 7:53 PM ) இந்த மெயிலை உங்களுக்கு அனுப்பி இருந்தேன்..பார்க்கச் சொல்லி..நீங்கள் பார்க்கவில்லை..கவனத்தில் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்..
    இப்போது வேறு ரூபத்தில் விஷயம் வெளியாகி இருப்பது மகிழ்ச்சிதான்..இவனெல்லாம் என்ன research foundation வெச்சு என்ன பண்ணப் போறானோ?நாராயணன் எந்த அவலத்தை ரோட்டோரம் கண்டு சேவை மனப்பான்மைக்குத் தூண்டப்பட்டாரோ அந்த அவலத்தை தினமும் செய்யும் ஆளாக இருப்பான் போலிருக்கிறது..இப்படிப்பட்ட கேவலமானவர்களை மற்றவர்கள் ஏதும் பெரிதாகக் கேவலப் படுத்திவிடமுடியாது என்பதுதான் என் எண்ணம்..டெக்னிகளா அட்ரெஸ் கண்டுபிடிச்சு வெளியிட்ட Muhammad Ismail .H, PHD.,அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    mail mater:
    //////////copyright problem: Take care..
    Reply |napoleon gnanaprakasam to Subramanian
    show details Oct 4
    fromnapoleon gnanaprakasam
    toSubramanian Veerappan
    dateMon, Oct 4, 2010 at 7:53 PM
    subjectcopyright problem: Take care..
    mailed-bygmail.com
    hide details Oct 4
    Dear சார்..
    உங்கள் பாட சப்ஜெக்ட் பதிவுகளில் வெளியான விவரங்களை தன் பதிவில் பதிவிட்டு சாப்ட்வேர் விளம்பரம் செய்துவரும் ஒரு வலைப் பதிவைக் கண்டேன்..
    http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6237
    நீங்கள் பாருங்கள்..\\\\\\\\\\\

    ஆமாம். நீங்கள் தெரியப்படுத்தினீர்கள். நேரமின்மையால், அதை நான் கவனித்து அப்போது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நன்றி மைனர்1

    ReplyDelete
  53. //////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    நமது வகுப்பறை பாடம் திருடு போனது மனம் மிகவும் வேதனை அளிகிறது
    இரவு பகல் பாராமல் தட்டச்சு செய்வது எவ்வளவு சிரமமான விஷயம்!!!.நோகாமல் நொங்கு திங்கறான்
    நான் ஒரு சமையல் பதிவை. copy &paste.. செயும் போது இந்த வசதி இல்லை ???என வந்தது அது போல் செயலாம ..
    செய்தாலும் எப்பிடியாவது திருடிவிடுவார்கள்... வகுப்பறை சக மாணவர் திரு முஹமது இஸ்மைய்ல்
    போன்ற கணணி நுட்ப நிபுணர்கள் ஏதாவது செய்ய இயலும!!! .முயற்சிக்கு வாழ்த்துக்கள்//////

    அதையெல்லாம் செய்திருக்கிறேன். அதை மீறி Comments Page > show the original Post > பகுதியில் க்ளிக்கினால் மொத்தப் பதிவும் அங்கே தெரியும். அங்கிருந்து காப்பி எடுக்கலாம். அதைத் தடுக்க வழியில்லை!

    ReplyDelete
  54. ஐயா,
    முதலில் இஸ்மாயில் சார் அவர்களுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    சுமார் ஒரு வாரம் முன்பாக அந்தத் திருட்டு வெப்சைட்டுக்கு ஒருமுறை கூகிள் லிங்க் மூலமாக சென்றேன்.
    படித்தவுடன் உங்கள் நடை அதில் பளிச்சென்று தென்பட்டது.
    ஆனால், வலைப்பதிவு பற்றிய போதிய அறிவு இன்மையால் அது திருடப்பட்டுள்ளது என்பது மனதில் தோன்றாமல் போய்விட்டது.
    மன்னிக்கவும்!.
    இந்தத் திருட்டை உங்கள் மாணவராகிய எவராலும்பொறுத்துக் கொள்ள முடியாது.
    கண்டிப்பாக அவர் தண்டிக்கப்பட வேண்டும் ஐயா.
    இது எங்களுடைய தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  55. அன்பிற்குரிய அய்யா ,வாக்களீத்து விட்டேன்.தங்களது மொத்த பதிவையும் திருடிய பகல் கொள்ளையனை திட்ட வார்த்தைகள்
    இல்லை தான் செய்த செயலுக்கு தர்மப்படி கடும் தண்டனை அடைவான்.
    கே.ராஜன் பவானி

    ReplyDelete
  56. ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று தாங்கள் இந்த திருட்டை கண்டும் காணாமல் விட்டு விட முடியாது. தே
    வையான நடவடிக்கை சட்ட பூர்வமாக மேற்கொள்வது முக்கியம்தான்.

    அன்புடன்,அரசு.

    ReplyDelete
  57. It's really bad..Thanks to Ismayil for finding out..Pls give complaint in cyber crime if they don't remove it..

    ReplyDelete
  58. THIS IS VERY BAD////

    CHANDRASEKARAN SURYANARAYANAN
    USA

    ReplyDelete
  59. //////Vibin said...
    ஐயா,
    முதலில் இஸ்மாயில் சார் அவர்களுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    சுமார் ஒரு வாரம் முன்பாக அந்தத் திருட்டு வெப்சைட்டுக்கு ஒருமுறை கூகிள் லிங்க் மூலமாக சென்றேன்.
    படித்தவுடன் உங்கள் நடை அதில் பளிச்சென்று தென்பட்டது.
    ஆனால், வலைப்பதிவு பற்றிய போதிய அறிவு இன்மையால் அது திருடப்பட்டுள்ளது என்பது மனதில் தோன்றாமல் போய்விட்டது./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  60. /////krajan said...
    அன்பிற்குரிய அய்யா ,வாக்களீத்து விட்டேன்.தங்களது மொத்த பதிவையும் திருடிய பகல் கொள்ளையனை திட்ட வார்த்தைகள் இல்லை. தான் செய்த செயலுக்கு தர்மப்படி கடும் தண்டனை அடைவான்.
    கே.ராஜன் பவானி////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  61. ////ARASU said...
    ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று தாங்கள் இந்த திருட்டை கண்டும் காணாமல் விட்டு விட முடியாது. தேவையான நடவடிக்கை சட்ட பூர்வமாக மேற்கொள்வது முக்கியம்தான்.
    அன்புடன்,அரசு./////

    உங்களின் மேலான யோசனைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  62. /////SHEN said...
    It's really bad..Thanks to Ismayil for finding out..Pls give complaint in cyber crime if they don't remove it../////

    நல்லது. அப்படியே செய்வோம்!

    ReplyDelete
  63. /////csekar2930 said...
    THIS IS VERY BAD////
    CHANDRASEKARAN SURYANARAYANAN
    USA/////

    உங்களின் வருத்தத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  64. /////nellai ram said...
    God will punish him soon!//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  65. உழைப்பு பறீபோவதை கண்டால் மனம் பதறூகிறது.

    ReplyDelete
  66. Dear Sir,

    we can understand how emotionally disturbed you are.All of our readers are as well emotionally disturbed.

    when some one copying your writings and post it in other sites, please remember the following quote.
    -----------------------------------
    "Never interrupt your enemy when he is making a mistake."
    -Napoleon Bonaparte,French general & politician (1769 - 1821)
    -----------------------------------

    The idea is to make enemy to make full 100% mistake and then attack.

    Clouds can hide the sun for few minutes. But Sun is Sun.The king of solar system.

    You are the king of the Teaching.

    Always "Truth is mightier than sward". Your truth is universal.
    Please ignore this kind of stuffs.


    Thanks and warm regards,
    Ram

    ReplyDelete
  67. என்னுடைய வலைபூவிலும் இப்படித்தான் சார் ஒருவன் திருடினான். இன்னும் திருடிட்டே இருக்கான். அவனுக்கு மெயிலில் எச்சரிக்கை அனுப்ப அது எனக்கே வினையாக முடிந்தது. என்னுடைய கட்டுரைகளுக்கு தலா 2 டாலர் விலை கொடுத்து வாங்கியதாக அவனது வலைபூவில் வெளியிட்டு ஒரு வழி பண்ணிவிட்டான். அப்படியே அப்பட்ட காப்பி அடிக்கும் பயலுகல அந்த கடவுள் பார்த்துக்கெர்ள்வார். இப்படித்தான் நாம் நம்பி ஆகணும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com