++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரங்கநாதனுக்கு எதைச் சாற்றினார் கண்ணதாசன்?
கவியரசர் கண்ணதாசன்: திருமாலின் பெருமைகளைப் பாடியது (1)
பல அவதாரங்களை எடுத்தவர் திருமால். அவர் பெருமைகளைப் பாடுவதற்கு அந்தக் காலத்தில் அவரது அடியார்களான ஆழ்வார்கள் இருந்தார்கள்
ஸ்ரீநாராயண மூர்த்தி உன்னைப் பாடிப் பரவசப் படுவதைவிட எங்களுக்குப் பெரிதாக வேறு என்ன கிடைத்து விடப்போகிறது? ஒன்றும் வேண்டாம். அது இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் எண்று சொன்னதோடு, அப்படியே வாழ்ந்தும் காட்டியவர்கள் அவர்கள்.
பிறகு முண்டாசுக் கவிஞர் பாரதி வந்து திருமாலின் கண்ணன் அவதாரத்தின் மேல் தீராத பக்தி கொண்டதோடு அவரைப் பலவிதமாக தன் மனதிற்கண்டு இன்புற்றுச் சிறப்பாகப் பல பாடல்களை இயற்றினார்.
1.கண்ணன் என் தோழன், 2.கண்ணன் என் தாய், 3.கண்ணன் என் தந்தை 4.கண்ணன் என் சேவகன், 5.கண்ணன் என் அரசன் 6.கண்ணன் என் சீடன், 7.கண்ணன் என் சற்குரு 8. கண்ணம்மா என் குழந்தை, 9.கண்ணன் என்
விளையாட்டுப் பிள்ளை, 10.கண்ணன் என் காதலன் (5 பகுதிகள், 11.கண்ணன்
என் காந்தன் என்று அந்த மாயக்கண்ணனைப் பல வடிவங்களில் கண்டு இன்புற்று, உருகி உருகி எழுதியவர் அவர். இறைவனையே, தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் கற்பனை செய்து எழுதியதோடு மட்டுமல்லாமல்
தோழனாகவும், சீடனாகவும், ஏன் சேவகனாவும், அதற்கும் மேலே ஒரு படிசென்று காதலனாகவும் எழுதிக் களிப்புற்றதோடு பலரையும் கிறங்க வைத்தவர் அவர்.
அவருக்குப் பிறகு, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன. அவற்றையெல்லாம் முடிந்தவரை ஒன்றையும் விடாமல் தருவதற்கு முயற்சி செய்கிறேன்.
அதற்கு அந்தக் கண்ணன்தான் எனக்கும் உதவ வேண்டும்!
------------------------------------------------------------
திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்
(திருமால்)
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!
பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!
நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!
மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!
ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்
அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்
ஸ்ரீராகம்:
விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!
(திருமால்)
படம்: திருமால் பெருமை - வருடம் 1968
பரந்தாமன் எடுத்த அவதாரங்களைப் பட்டியலிட்டவர், எடுக்க வேண்டிய அவதாரத்தையும் முத்தாய்ப்பாய்ச் சொல்லிப் பாடலை நிறைவு செய்ததுதான் இந்தப் பாடலின் சிறப்பு
-------------------------------------------
மற்றுமொரு பாடல்:
மலர்களிலே பலநிறம் கண்டேன் - திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பலமணம் கண்டேன் - அதில்
மாதவன் கருணை மனம் கண்டேன்!
(மலர்)
பச்சைநிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவிமுகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்!
(மலர்)
பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப்
பாசமென்னும் சிறு நூலெடுத்துச்
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!
(மலர்)
நானிலம் நாரணன் விளையாட்டு
நாயகன் பெயரில் திருப்பாட்டு
ஆயர் குலப்பிள்ளை விளையாட்டு - இந்த
அடியவர்க் கென்றும் அருள்கூட்டு!
(மலர்)
படம்: திருமால் பெருமை - வருடம் 1968
அந்தப் பரந்தாமனுக்குக் கவியரசர் எதைச் சாற்றினார் பார்த்தீர்களா?
பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப்
பாசமென்னும் சிறு நூலெடுத்துச்
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!
சத்தியம் என்னும் சரத்தில் பக்தி, பாசம் எல்லாவற்றையும்
தொடுத்தல்லவா சாற்றியுள்ளார்!!
அந்தப் பரந்தாமனின் அருள் கிடைக்க நாமும் அதையே சாற்றுவோம்!
(இதன் அடுத்த பகுதி நாளை தொடரும்)
-------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
27.5.10
Subscribe to:
Post Comments (Atom)
அனைவரும் ஒன்று கூடி சாற்றினால் இறைவன் நன்மை தருவார்! நன்றி!
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஆழ்வாரும் அடியாரும் போற்றிய திருமாலின் பெருமையை
ஆழ்கடல் என்னும் மனதிலே அடிவரை முக்குளித்து,
குவித்த முத்துக்களை கோர்த்துப் பண்(பாடு)பாடிய
பாங்கு கண்டு; முத்தையாவின் பக்தி கடலிலே என்னையும்
நீந்தவிட்ட தங்களுக்கு எனது நன்றிகள்!
பா(ரதி) - யின் கண்ணன் பாட்டு என்றவுடன் எனக்கு அவர்
அந்த கோவிந்தசாமியுடன் உரையாடியது நினைவுக்கு வருகிறது...
'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு.
நன்றி!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDelete......... "கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன. அவற்றையெல்லாம் முடிந்தவரை ஒன்றையும் விடாமல் தருவதற்கு முயற்சி செய்கிறேன்".........
நல்ல முயற்சி. முயற்சி வெற்றிபெற கண்ணனின் அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள கண்ணன் புகழ் பாடும் அற்புதப் பாடல்களை,தாங்கள் தருவதன் மூலமாக,மீண்டும் அவற்றை நினைவு கூறும் வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொடுக்கும் தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-05-27
மஹாகவிபாரதியார் பற்றி நன்கு குறிப்பிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.
ReplyDeleteஎன் நண்பர் உயர்திரு.வெ.கோபாலன்(வயது 75)பரதியாரின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மஹகவி பாரதியைப்பற்றி
அஞ்சல் வழி வகுப்பு நடத்தினார். 300 மாணவ மாணவிகள் பயின்றனர்.
தற்போது அப்பாடங்களில்(மொத்தம் 36 பாடங்கள்) 27 பாடங்களை வலை ஏற்றியுள்ளார். அனைவரும் இலவசமாகப் படிக்கலாம்.மேலும் கம்பராமயணத்தை உரைநடை வடிவில் முழுமையாகக் கொடுத்துள்ளார்.அது தனியாக ஒரு பிளாக். தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்புக் கூறும் மற்றொரு பிளாக்.எல்லோரும் படித்தால் மிகுந்த
மகிழ்ச்சி அடைவோம்.இந்த செய்தியை வகுப்பறைக்கு வந்து செல்லும் அனைவரும் காணும் வண்ணம் பாடப்பகுதியில் வெளியிட்டு உதவ சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். வணக்கம் பல. நன்றி!
bharathiyaar blog:
"ilakkiyapayilagam.blogspot.com"
kambaramayanam prose order blog:
"kambaramayanm-thanjavooraan. blogspot.com"
Freedom fighter's blog:
"privarsh.blogspot.com"
சோதிட கலை உலக ராசாவே . .
ReplyDeleteமாறிய பாடலுக்கு நன்றி . . .
பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பதனை தவிர்க்க முடியாதது தானே. . .
கண்ணன் தேவகி வயிற்றில் பிறந்து யசோதையின் வீட்டில் வளர்ந்து
தீராத விளையாட்டு பிள்ளையாய்
சாரதியாய் இருந்து
அர்சுனருக்கு உபதேசம் செய்து
. . .
அந்த கண்ணன் இறந்தது எப்படி . . ?
அது பற்றிய தகவல்களை கண்ணதாசன் கூட சொன்ன தாக தெரியவில்லையே . .
பிறந்தவர் இறக்க வில்லை என்றால்
எங்கேயோ நெருடல் என தெரியவில்லையா . .
திருமாலைப் பற்றி வள்ளுவர் பாடும் போது . .
பிறந்து பிறந்து இறப்பவன் திருமால் என சொன்னதை வைத்துப் பார்த்தால் . . .
என்னை பெரியார் கட்சியில் சேர்த்து விடாதீர்கள் . . .
உண்மையைச் சொன்னால்
பெரியார் எங்கள் கட்சி
////snkm said...
ReplyDeleteஅனைவரும் ஒன்று கூடி சாற்றினால் இறைவன் நன்மை தருவார்! நன்றி!////
நல்லது. நன்றி நண்பரே!
Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ஆழ்வாரும் அடியாரும் போற்றிய திருமாலின் பெருமையை
ஆழ்கடல் என்னும் மனதிலே அடிவரை முக்குளித்து,
குவித்த முத்துக்களை கோர்த்துப் பண்(பாடு)பாடிய
பாங்கு கண்டு; முத்தையாவின் பக்தி கடலிலே என்னையும்
நீந்தவிட்ட தங்களுக்கு எனது நன்றிகள்!
பா(ரதி) - யின் கண்ணன் பாட்டு என்றவுடன் எனக்கு அவர்
அந்த கோவிந்தசாமியுடன் உரையாடியது நினைவுக்கு வருகிறது...
'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு.
நன்றி!/////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
......... "கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன. அவற்றையெல்லாம் முடிந்தவரை ஒன்றையும் விடாமல் தருவதற்கு முயற்சி செய்கிறேன்".........
நல்ல முயற்சி. முயற்சி வெற்றிபெற கண்ணனின் அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள கண்ணன் புகழ் பாடும் அற்புதப் பாடல்களை,தாங்கள் தருவதன் மூலமாக,மீண்டும் அவற்றை நினைவு கூறும் வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொடுக்கும் தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி///////
நல்லது. நன்றி நண்பரே!
///////kmr.krishnan said...
ReplyDeleteமஹாகவிபாரதியார் பற்றி நன்கு குறிப்பிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.
என் நண்பர் உயர்திரு.வெ.கோபாலன்(வயது 75)பரதியாரின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மஹகவி பாரதியைப்பற்றி
அஞ்சல் வழி வகுப்பு நடத்தினார். 300 மாணவ மாணவிகள் பயின்றனர்.
தற்போது அப்பாடங்களில்(மொத்தம் 36 பாடங்கள்) 27 பாடங்களை வலை ஏற்றியுள்ளார். அனைவரும் இலவசமாகப் படிக்கலாம்.மேலும் கம்பராமயணத்தை உரைநடை வடிவில் முழுமையாகக் கொடுத்துள்ளார்.அது தனியாக ஒரு பிளாக். தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்புக் கூறும் மற்றொரு பிளாக்.எல்லோரும் படித்தால் மிகுந்த
மகிழ்ச்சி அடைவோம்.இந்த செய்தியை வகுப்பறைக்கு வந்து செல்லும் அனைவரும் காணும் வண்ணம் பாடப்பகுதியில் வெளியிட்டு உதவ சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். வணக்கம் பல. நன்றி!
bharathiyaar blog:
"ilakkiyapayilagam.blogspot.com"
kambaramayanam prose order blog:
"kambaramayanm-thanjavooraan. blogspot.com"
Freedom fighter's blog:
"privarsh.blogspot.com"///////
உங்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது கிருஷ்ணன் சார். சைடுபாரில் அனைவரின் கண்ணிலும் படுபடியாக வெளியிட்டுள்ளேன். நீங்களும் பாருங்கள்
////visu said...
ReplyDeleteசோதிட கலை உலக ராசாவே . .
மாறிய பாடலுக்கு நன்றி . . .//////
ராசாவும் இல்லை. மந்திரியும் இல்லை! சம்பளமில்லாத வாத்தியார் அவ்வளவுதான்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////////பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பதனை தவிர்க்க முடியாதது தானே. . .
கண்ணன் தேவகி வயிற்றில் பிறந்து யசோதையின் வீட்டில் வளர்ந்து
தீராத விளையாட்டு பிள்ளையாய்
சாரதியாய் இருந்து அர்சுனருக்கு உபதேசம் செய்து . . .
அந்த கண்ணன் இறந்தது எப்படி . . ?
அது பற்றிய தகவல்களை கண்ணதாசன் கூட சொன்னதாக தெரியவில்லையே . .
பிறந்தவர் இறக்க வில்லை என்றால்
எங்கேயோ நெருடல் என தெரியவில்லையா . .
திருமாலைப் பற்றி வள்ளுவர் பாடும் போது . .
பிறந்து பிறந்து இறப்பவன் திருமால் என சொன்னதை வைத்துப் பார்த்தால் . . .
என்னை பெரியார் கட்சியில் சேர்த்து விடாதீர்கள் . . .
உண்மையைச் சொன்னால் பெரியார் எங்கள் கட்சி/////////
கண்ணன் அவதாரம் அனைவரும் அறிந்ததே!அதில் ரகசியம் என்ன உள்ளது?
என் வேண்டுகோளை ஏற்று பாரதி பயிலகம் பற்றிய செய்தியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா!
ReplyDeleteகாதல், சோகம், தத்துவம்,பக்தி என எல்லாப் பாடல்களிலும் தனித்து தெரிவார் கவிஞர். அவரின் கிருஷ்ணகானம் மெய்மறக்க வைக்கும்.
ReplyDeleteஅனைத்து பாடல்களும் அருமை.
ReplyDeleteகண்ணன் இறந்தார் அல்லது பூத உடலை விட்டு வைகுந்தம் சேர்ந்தார். எதனால் இறந்தார், எப்படி என்பதெல்லாம் பாகவதம், விஷ்னு புராணம் இவற்றில் தெளிவாக சொல்லி விளக்கப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க கண்ணன் இறந்ததைப் பற்றி தகவல் இல்லையா. இதென்ன புதுக் கதையாக இருக்கிறது.
/////kmr.krishnan said...
ReplyDeleteஎன் வேண்டுகோளை ஏற்று பாரதி பயிலகம் பற்றிய செய்தியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா!////
இதற்கெல்லாம் நன்றி எதற்கு கிருஷ்ணன் சார்? பாரதியைப் பற்றி ஒருவர் அத்தனை எழுதியிருக்கும்போது,
அதற்கு இதைக்கூட நாம் செய்யவேண்டாமா என்ன?
//ரிஷபன்Meena said...
ReplyDeleteகாதல், சோகம், தத்துவம்,பக்தி என எல்லாப் பாடல்களிலும் தனித்து தெரிவார் கவிஞர். அவரின் கிருஷ்ணகானம் மெய்மறக்க வைக்கும்.////
உண்மை! அவருடைய பாடல்கள் அனைத்திலுமே அவருடைய தனித்தன்மை மேலோங்கி இருக்கும்! அது கடவுள் அவருக்கு அளித்த கொடை!
///////ananth said...
ReplyDeleteஅனைத்து பாடல்களும் அருமை.
கண்ணன் இறந்தார் அல்லது பூத உடலை விட்டு வைகுந்தம் சேர்ந்தார். எதனால் இறந்தார், எப்படி என்பதெல்லாம் பாகவதம், விஷ்னு புராணம் இவற்றில் தெளிவாக சொல்லி விளக்கப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க கண்ணன் இறந்ததைப் பற்றி தகவல் இல்லையா. இதென்ன புதுக் கதையாக இருக்கிறது.///////
அறியாமையின் விளைவு. அவ்வளவுதான்! வேறொன்றுமில்லை
This comment has been removed by the author.
ReplyDeleteayya vanakkam.
ReplyDeletekannanai patri paaduvathu endral athu
kaviyarasarukku alathi inbam.
kannanai potri avar pala paadalgal
ezhuthiyullar.antha aththanai
padalgalaiyum neengal ondru vidamal
kodungal endru vendi kettuk
kolgiren.athartku ungalukku
kannanin arul kidaikka aandavanidam
vendik kolgiren.
nandri.vanakkam.
by arjunchandarsingh@gmail.com
ரங்க விமானத்தில் உறையும் ‘பர
ReplyDeleteவாஸுதேவ மூர்த்தி’
ஆஹா, அருமை !
பெரிதுபடுத்தி தரிசித்து இல்லத்தில் அனைவரும் மகிழ்ந்தோம்.
மிக்க நன்றி
தேவ்
///////cs said...
ReplyDeleteayya vanakkam.
kannanai patri paaduvathu endral athu kaviyarasarukku alathi inbam. kannanai potri avar pala paadalgal
ezhuthiyullar.antha aththanai padalgalaiyum neengal ondru vidamal kodungal endru vendi kettuk
kolgiren.athartku ungalukku kannanin arul kidaikka aandavanidam vendik kolgiren.
nandri.vanakkam.
by arjunchandarsingh@gmail.com//////
நல்லது. நன்றி நண்பரே!
//////R.DEVARAJAN said...
ReplyDeleteரங்க விமானத்தில் உறையும் ‘பரவாஸுதேவ மூர்த்தி’
ஆஹா, அருமை ! பெரிதுபடுத்தி தரிசித்து இல்லத்தில் அனைவரும் மகிழ்ந்தோம்.
மிக்க நன்றி
தேவ்/////
உங்களின் மகிழ்ச்சி, எனது மகிழ்ச்சியே! நன்றி!
நவக்கிரஹத் தலங்களைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதோடு கீழ்கண்ட தலங்களும் நவக்கிரஹத் தலங்களாக வழிபடப்படுகின்றன என்ற செய்தியையும் தெரிவிக்க விரும்புகிறேன். நன்றி.
ReplyDeleteசூரியன் திருக்கண்டியூர், சூரியனார்கோயில்
சந்திரன்: திங்களூர், திருப்பதி
செவ்வாய்: வைத்தீஸ்வரன்கோயில், பழனி
புதன்: திருவெண்காடு, மதுரை
வியாழன்: ஆலங்குடி, திருச்செந்தூர், தென் திட்டைக்குடி, தக்கோலம்
வெள்ளி: திருவரங்கம், திருநாவலூர்
சனி: திருநள்ளாறு, மதுரைகுச்சனூர்
ராகு: திருநாகேச்சரம், திருக்காளத்தி
கேது: கீழப்பெரும்பள்ளம், திருக்காளத்தி
/////Thanjavooraan said...
ReplyDeleteநவக்கிரஹத் தலங்களைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதோடு கீழ்கண்ட தலங்களும் நவக்கிரஹத் தலங்களாக வழிபடப்படுகின்றன என்ற செய்தியையும் தெரிவிக்க விரும்புகிறேன். நன்றி.
சூரியன் திருக்கண்டியூர், சூரியனார்கோயில்
சந்திரன்: திங்களூர், திருப்பதி
செவ்வாய்: வைத்தீஸ்வரன்கோயில், பழனி
புதன்: திருவெண்காடு, மதுரை
வியாழன்: ஆலங்குடி, திருச்செந்தூர், தென் திட்டைக்குடி, தக்கோலம்
வெள்ளி: திருவரங்கம், திருநாவலூர்
சனி: திருநள்ளாறு, மதுரைகுச்சனூர்
ராகு: திருநாகேச்சரம், திருக்காளத்தி
கேது: கீழப்பெரும்பள்ளம், திருக்காளத்தி////
மேலதிகத் தகவல்களுக்கு நண்றி சார்!