மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.5.10

குருவிற்கு ஒரு கோவில்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருவிற்கு ஒரு கோவில்!

நவக்கிரக ஸ்தலங்கள்: ஆலங்குடி!
குரு பகவானுக்கான ஸ்தலம் இது

எல்லா நவக்கிரக ஸ்தலங்களிலும் அம்பிகை உடனமர்ந்த சிவபெருமானுக் குத்தான் முக்கிய சந்நதி. அவர்கள் இல்லாமல் கிரகங்கள் ஏது? இவ்வுலகம்தான் ஏது? அதை மனதில் கொள்க!

ஆலங்குடியில் உறையும் சிவனாருக்கு ‘ஆபத்சகாயர்’ என்று பெயர். ஆலகால விஷத்தை உண்டு, தேவர்களைக் காத்த சிவனார், இங்கே குடிகொண்டுள்ளதால் இத்திருத்தலத்திற்கு ஆலங்குடி என்று பெயர்.

இங்கே உறையும் கணபதிக்கு ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்று பெயர். ’கஜமுஹாசூரன்’ என்னும் அரக்கனை அழித்து, தேவர்களுக்கு உதவியதால், அவருக்கு அப்பெயர் உள்ளது! அம்பிகை தன்னுடைய ஒரு அவதாரத்தில், இத்தலத்தில் கடும் தவமிருந்து, சிவபெருமானை மணந்து கொண்டதால், இத்தலத்திற்குத் ‘திருமணமங்கலம்’ என்னும் பெயரும் உண்டு!

திருமால், பிரம்மா, லக்ஷ்மி தேவி, கருடன், விஸ்வாமித்திரர், அஷ்டதிக்குப் பாலகர்கள், அய்யனார், வீரபத்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிப்பட்ட பெருமையை உடையது இத்தலம்.

ஒருமுறை அருகில் உள்ள வெட்டாற்றில் வெள்ளப் பிரவாகம் எடுத்தபோது, மறுகரையில் இருந்த சுந்தரரை, இக்கரைக்கு, ஒரு படகோட்டியாகச் சென்று, கூட்டிக்கொண்டு வந்தது சிவனார் என்ற வரலாறும் உண்டு. இத்தலத்தில் உறையும் தட்சிணாமூர்த்தியிடம்தான் சுந்தரர் ஞானஉபதேசம் பெற்றார்
என்பதும் வரலாறு!
____________________________________________________
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கான ஸ்தலம் இது. ஜாதகத்தில் குரு நீசம் பெற்றிருந்தாலும் அல்லது 6, 8 12ஆம் இடம் போன்ற மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது குரு திசை நடைபெற்றாலும், நன்மை பெற வேண்டி, ஜாதகன் வழிபட வேண்டிய ஸ்தலம் இது!

கும்பகோணத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். இங்கே உறையும் குரு பகவானுக்கு தட்சிணாமூர்த்தி என்னும் பெயரும் உண்டு. திருவாரூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் ஆலங்குடி உள்ளது. திருவாரூரில் ரயில் நிலையம் உள்ளது. திருவாரூரில் இருந்து ஆலங்குடிக்கு நிறையப் பேருந்துகள் உள்ளன! கும்பகோணத்தில் இருந்தும் நிறையப் பேருந்துகள் உள்ளன!

குரு என்னும் வடமொழிச்சொல் இருளைப் போக்குபவர் என்று பொருள்படும். அறியாமை என்னும் இருளைப்போக்கி அறிவைக்கொடுக்கும் ஆசானுக்கு அதனால்தான் குரு என்று பெயர். அதைபோல வாழ்க்கையில் உள்ள துன்பம் என்னும் இருளைப்போக்கி, மகிழ்ச்சி என்னும் ஒளியைக் கொடுப்பவர் குரு பகவான்.

செல்வம், புகழ், குழந்தைபாக்கியம் ஆகியவற்றிக்குக் காரகன் குருபகவான். இத்தலத்திற்கு 24 முறைகள் சென்று (அப்பா, ஸ்வாமி 24 முறைகளா?) ஒவ்வொருமுறையும் 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால், குருவால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை!

தனுசு, மற்றும் மீன ராசிக்காரர்களுக்கும், லக்கினக்காரர்களுக்கும் அதிபதி குருபகவான், அவர்கள் நேரம் கிடைக்கும்போது சென்று வருவது நலம் பயக்கும்!

எல்லா வியாழக்கிழமைகளிலும், அமாவாசை, மற்றும் பெளர்ணமி தினங்களிலும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற குருபகவானின் நட்சத்திர நாட்களிலும் இங்கே விசேஷ பூஜைகள் உணடு. அதுதவிர தினசரி பூஜைகளும் உண்டு. குரு ஹோரையில் அவரை வழிபடுவது சிறப்பைக்கொடுக்கும்!

சகஸ்ரநாம அர்ச்சனைகள், குரு ஹோமம், பாலாபிஷேகம் ஆகியவை ஜாதக தோஷங்களை நீக்கும். அவரவர் சக்திக்கு ஏற்ப வழிபட்டுவிட்டு வரலாம்.

மஞ்சள் வஸ்திரம், முல்லை மலர்கள், கொண்டக்கடலை ஆகியவை குரு பகவானுக்கு உரிய நிவேதனப் பொருட்களாகும். சர்க்கரைப் பொங்கலும் நிவேதனப் பொருளாகும்!

வடமொழியில் ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரு’ என்றால் நீக்குபவர் என்றும் பொருள்படும். வடமொழி தெரிந்தவர்கள் இதை உறுதிப்படுத்தலாம்!

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களால் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த்து இத்தலம்.

குருப் பெயர்ச்சி தினங்களில் 1008 சங்குகளை வைத்து, இங்கே அபிஷேகம் நடைபெறும். சித்திரை மாதம் பெளர்ணமி திதியன்று நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு உடையதாகும்! அதுபோல தைப்பூச தினத்திலும், பங்குனி உத்திர தினத்திலும் நடைபெறும் விழாக்கள் மிகவும் சிறப்புடையதாகும்!

கோவிலிம் சுற்றுப் பகுதியில் 15 தீர்த்தங்கள் (குளங்கள்) உள்ளன. அவற்றில் ’அம்ரித புஷ்கரணி’ என்னும் தீர்த்தம் மிகவும் புகழ்பெற்றதாகும். அது கோவிலின் உட்பகுதியில் உள்ளது.

விக்கிரமசோழன் காலத்துக் (1131ஆம் ஆண்டு) கல்வெட்டு கோவிலில் உள்ளது இக்கோவிலின் தொன்மையைக் குறிக்கும்!

அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள். குரு பகவானின் அருளைப் பெற்று வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

31 comments:

  1. குருவே
    பாட்டை மாத்தலையே குருவே

    இரண்டு நாளைக்கு ஒரு முறை மாற்றுவதாக சொன்னீர்கள் . . .

    மாறும் வரை காத்திருக்கிறேன்
    மாற்றங்களை சேர்த்திருக்கிறேன்

    புதுமைகள் வரும் என பூத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,

    குரு பகவான் கோவில் பற்றிய பாடத்திற்கு நன்றிகள் குருவே.
    எனது முழுப் பெயரும் ஆலாலசுந்தரம் தான் (ஹாலாஸ்யசுந்தரம்) ஆலகால விஷம் அருந்தி அழகுடன் இருப்பவன் எனப் பொருள்.
    எனது லக்னம் தனுசு அதிபதி குருபஹவான் ராசியில் 11-ல் சுக்கிரனோடும், நவாம்சத்தில் விருச்சிகராசியில் உட்ச்சகேதுவுடனும் (நட்சத்திராதிபதியுடன்) சேர்ந்து இருக்கிறார்.
    இதுவரை எல்லா விசயத்திலும் நல்ல குருமார்களைப் பெற்றேன் (தங்களையும் சேர்த்து) அவர்களின் அங்கீகாரத்தையும், ஆசீர்வாதமும் கிடைக்கப் பெற்றேன். இது என் பாக்கியம்.
    நிச்சயம் அடுத்தப் பயணம் ஆலங்குடிக்குத் தான்.
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. ஆலங்குடியில் கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியையே குரு கிரஹமாக வழிபாடு செய்கிறார்கள். தென்குடித்திட்டையில் குரு கிரஹத்திற்கான தனிச் சன்னதி உள்ளது. ஞானம் வேண்டுவோர் ஆலங்குடிக்கும், குரு கிரஹப்
    பரிஹாரத்திற்கு தென்குடித்திட்டைக்கும் செல்ல வேண்டும்.திட்டை தஞ்சாவூர்
    கும்பகோண‌ம் பேருந்துத் தடத்தில் பள்ளியகரம் தாண்டியவுடன் உள் புறமாக 3 கிமி தூரத்தில் உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 9 கிமி தூரம்.

    ReplyDelete
  4. ///visu said...
    குருவே
    பாட்டை மாத்தலையே குருவே
    இரண்டு நாளைக்கு ஒரு முறை மாற்றுவதாக சொன்னீர்கள் . . .
    மாறும் வரை காத்திருக்கிறேன்
    மாற்றங்களை சேர்த்திருக்கிறேன்
    புதுமைகள் வரும் என பூத்திருக்கிறேன்/////

    மாத்திவிட்டேன் ராசா! நான் மாற்றுவதாக இருந்தேன். அதற்குள் உங்கள் பின்னூட்டம் முந்திக்கொண்டுவிட்டது.

    ReplyDelete
  5. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    குரு பகவான் கோவில் பற்றிய பாடத்திற்கு நன்றிகள் குருவே.
    எனது முழுப் பெயரும் ஆலாலசுந்தரம் தான் (ஹாலாஸ்யசுந்தரம்) ஆலகால விஷம் அருந்தி அழகுடன் இருப்பவன் எனப் பொருள். எனது லக்னம் தனுசு அதிபதி குருபஹவான் ராசியில் 11-ல் சுக்கிரனோடும், நவாம்சத்தில் விருச்சிகராசியில் உட்ச்சகேதுவுடனும் (நட்சத்திராதிபதியுடன்) சேர்ந்து இருக்கிறார்.
    இதுவரை எல்லா விசயத்திலும் நல்ல குருமார்களைப் பெற்றேன் (தங்களையும் சேர்த்து) அவர்களின் அங்கீகாரத்தையும், ஆசீர்வாதமும் கிடைக்கப் பெற்றேன். இது என் பாக்கியம்.
    நிச்சயம் அடுத்தப் பயணம் ஆலங்குடிக்குத்தான்.
    நன்றிகள் குருவே!/////

    ஆலங்குடிக்குச் சென்றால், நம் வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் சேர்த்து குரு பகவானை ஒருமுறை விஷேசமாக வணங்கிவிட்டு வாருங்கள்!

    ReplyDelete
  6. //////kmr.krishnan said...
    ஆலங்குடியில் கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியையே குரு கிரஹமாக வழிபாடு செய்கிறார்கள். தென்குடித்திட்டையில் குரு கிரஹத்திற்கான தனிச் சன்னதி உள்ளது. ஞானம் வேண்டுவோர் ஆலங்குடிக்கும், குரு கிரஹப் பரிஹாரத்திற்கு தென்குடித்திட்டைக்கும் செல்ல வேண்டும்.திட்டை தஞ்சாவூர்
    கும்பகோண‌ம் பேருந்துத் தடத்தில் பள்ளியகரம் தாண்டியவுடன் உள் புறமாக 3 கிமி தூரத்தில் உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 9 கிமி தூரம்.//////

    மேலதிகத்தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்! நவக்கிரக ஸ்தலங்களுக்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தஞ்சை மாவட்டத்தில், முதலில் உங்களைச் சந்தித்துவிட்டுப் பிறகு பயணத்தைத் துவங்கினால் பயணம் சுலபமாக இருக்கும் என்று நம்புகிறென்!சரிதானே?

    ReplyDelete
  7. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நவக்கிரக ஸ்தலங்களில்,
    குரு பகவான் கோவில் படம் நன்றாக உள்ளது.
    ஸ்தலபுராணம் ,கோவில் இருக்குமிடம்,பரிகார பூஜைக்கான தகுந்த விபரங்களுடன் கொடுத்துள்ளீர்கள்.
    ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரு’ என்றால் நீக்குபவர் என்றும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரியான பொருள்.இதனை நானும் படித்திருக்கிறேன்.

    தங்களின் மூலமாக நல்ல பல கருத்துகளையும்,விபரங்களையும் அறிந்துக்கொள்ள முடிகிறது.
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-26

    ReplyDelete
  8. நல்ல விவரங்கள்.

    //முகுந்த சக்கரவர்த்தி, சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிப்பட்ட// அவர் பெயர் முசுகுந்த சக்கரவர்த்தி என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நவக்கிரக ஸ்தலங்களில்,
    குரு பகவான் கோவில் படம் நன்றாக உள்ளது.
    ஸ்தலபுராணம் ,கோவில் இருக்குமிடம்,பரிகார பூஜைக்கான தகுந்த விபரங்களுடன் கொடுத்துள்ளீர்கள்.
    ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரு’ என்றால் நீக்குபவர் என்றும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரியான பொருள்.இதனை நானும் படித்திருக்கிறேன்.
    தங்களின் மூலமாக நல்ல பல கருத்துகளையும்,விபரங்களையும் அறிந்துக்கொள்ள முடிகிறது.
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  10. /////Uma said...
    நல்ல விவரங்கள்.
    //முகுந்த சக்கரவர்த்தி, சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிப்பட்ட// அவர் பெயர் முசுகுந்த சக்கரவர்த்தி என்று நினைக்கிறேன்.////

    நீங்கள் நினைத்தது சரிதான். அவர் பெயர் முசுகுந்த சக்கரவர்த்திதான். பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. Very informative article .PATTAMANGALAM near thirupathur is also a guru sthalam enru kelvipatten.Please write about this temple sir.Guru Parikarathirku ingum pogalama.

    ReplyDelete
  12. /////uma said...
    Very informative article .PATTAMANGALAM near thirupathur is also a guru sthalam enru kelvipatten.Please write about this temple sir.Guru Parikarathirku ingum pogalama./////

    பட்டமங்கலம் செட்டிநாட்டுக் கிராமங்களில் ஒன்று. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ளது. குரு பகவான் அங்கே பிரம்மாண்டமான ஆலமரத்தடியில் வீற்றிருக்கிறார். 60 மீட்டர் சுற்றளவு உள்ள ஆலமரம். ஒருமுறை பிரகாரமாகச் சுற்றிவர 10 - 15 நிமிடங்கள் ஆகும்! விஷேசமான ஸ்தலம். அங்கேயும் சென்று வரலாம்!

    ReplyDelete
  13. குரு தேவர்களுக்கு குருவானவர்.சுக்கிரன் அசுரர்களுக்கு குரு..இந்தப் பிறவியில் மனிதர்களை ஜாதகத்தை வைத்து அசுர கணம் or தேவகணம் என்ற அடிப்படையில் இனங்காணுதல் சாத்தியமா? அல்லது வேறு ஏதும் வழிகள் உள்ளனவா?
    குருதான் உண்மையான குருவா?இல்லை சுக்கிராச்சாரியார்தான் உண்மையான குருவா?யார் பக்கம் இருப்பது சரி? என்று குழம்பித் தவிக்கும் மாணவன்..

    ReplyDelete
  14. திருச்செந்தூரும் குரு வழிபாட்டு தலங்களில் ஒன்று என்று படித்திருக்கிறேன். ஒரு விளக்கம் ஐயா. தேவர்களுக்கு குருவாக இருப்பவர் குரு பிரஹஸ்பதி வேறு. தக்ஷிணாமூர்த்தி சிவனின் ஒரு அவதாரம். தேவ குருவிற்கு குரு. இது சம்பந்தப் பட்ட விளக்கம் உள்ள வலைதளம் ஒன்று கீழே கொடுத்திருக்கிறேன்.

    http://www.shvoong.com/humanities/203999-lord-dakshinamurthi-lord-preceptors/

    ReplyDelete
  15. ஐயா, வகுப்புக்கு வரும் மாணவர்களுக்காக கூகுளின் தமிழ் தட்டச்சி தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதன் முகவரி பின்வருமாறு

    http://www.google.com/transliterate/indic/Tamil

    நன்றி.

    ReplyDelete
  16. \\நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

    ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள்
    இருக்க வேண்டும்.

    படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்//

    உங்கள் தகவலுக்கு,,,, கொஞ்சம் லேட்தான் ...இருந்தாலும் தெரிவிக்கிறேன்...

    எனக்கு இந்த மாதிரி அமைப்பு உள்ளது....1 - 31 , 9 - 30 , 10 - 30 , 11 - 31

    ReplyDelete
  17. Dear Sir

    Thanks Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  18. ////////minorwall said...
    குரு தேவர்களுக்கு குருவானவர்.சுக்கிரன் அசுரர்களுக்கு குரு..இந்தப் பிறவியில் மனிதர்களை ஜாதகத்தை வைத்து அசுர கணம் or தேவகணம் என்ற அடிப்படையில் இனங்காணுதல் சாத்தியமா? அல்லது வேறு ஏதும் வழிகள் உள்ளனவா?///////

    வழிகள் உள்ளன!
    >>>>>>>>>>>>>>>>
    ////////குருதான் உண்மையான குருவா?இல்லை சுக்கிராச்சாரியார்தான் உண்மையான குருவா?யார் பக்கம் இருப்பது சரி? என்று குழம்பித் தவிக்கும் மாணவன்..////////

    குருதான் உண்மையான குரு! அதில் சந்தேகம் எதற்கு மைனர்?

    ReplyDelete
  19. /////ananth said...
    திருச்செந்தூரும் குரு வழிபாட்டு தலங்களில் ஒன்று என்று படித்திருக்கிறேன். ஒரு விளக்கம் ஐயா. தேவர்களுக்கு குருவாக இருப்பவர் குரு பிரஹஸ்பதி வேறு. தக்ஷிணாமூர்த்தி சிவனின் ஒரு அவதாரம். தேவ குருவிற்கு குரு. இது சம்பந்தப் பட்ட விளக்கம் உள்ள வலைதளம் ஒன்று கீழே கொடுத்திருக்கிறேன்.
    http://www.shvoong.com/humanities/203999-lord-dakshinamurthi-lord-preceptors////////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  20. /////////Pugazhenthi said...
    ஐயா, வகுப்புக்கு வரும் மாணவர்களுக்காக கூகுளின் தமிழ் தட்டச்சி தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதன் முகவரி பின்வருமாறு
    http://www.google.com/transliterate/indic/Tamil
    நன்றி./////////

    எனது வலைப்பதிவின் சைடுபாரைப் பாருங்கள். அதில் அறிமுகம் செய்துவைத்துள்ளேன். நீண்ட நாட்களாகிறது.
    யாரும் அதைப் பார்ப்பதாகத் தெரியவில்லை!

    ReplyDelete
  21. /////Nattu said...
    \\நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?
    ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள்
    இருக்க வேண்டும்.
    படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்//
    உங்கள் தகவலுக்கு,,,, கொஞ்சம் லேட்தான் ...இருந்தாலும் தெரிவிக்கிறேன்..
    எனக்கு இந்த மாதிரி அமைப்பு உள்ளது....1 - 31 , 9 - 30 , 10 - 30 , 11 - 31/////////

    அப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் நல்லதுதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Thanks Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  23. Respected sir,
    (1)I wanted to share this incident with you..

    Many months back my dad had given my horoscope to a vedic astrologer.
    He said many things like upapada lagna,arudha pada lagna ,seem to
    have asked my dad "Your daughter's second lord from upapada lagna is moon",
    so her spouse might have one of krishna bhagwan's names .

    He was on dot .
    Are such derivations possible from our rasi,Navamsa chart?

    (2) Since i started learning your lessons, i am active on google reading
    various doshas ,yogas.

    In one free forum,one person had consulted an astrologer complaining he
    was engaged thrice but all the 3 engagements broke .
    The astrologer's reply was - "You had verbally and physically abused your wife in past life,
    her curse on you so you are experiencing delay,problems in getting married".

    Is it possible to look into sins we did in past life from our chart?

    ReplyDelete
  24. நட்சத்திரங்களை வகைப்படுத்தி தேவ மனித அசுர ஜாதிகளாக பிரிக்கப் படுகின்றன. விவாகப் பொருத்தத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
    தேவ குரு ப்ரகஸ்பதி, வியாழனுக்கு கடவுள் தக்ஷிணாமூர்த்தி. அதனால் அவரை வணங்குகிறோம்

    ReplyDelete
  25. /////Sowmya said...
    Respected sir,
    (1)I wanted to share this incident with you..
    Many months back my dad had given my horoscope to a vedic astrologer.
    He said many things like upapada lagna,arudha pada lagna ,seem to
    have asked my dad "Your daughter's second lord from upapada lagna is moon",
    so her spouse might have one of krishna bhagwan's names .
    He was on dot .
    Are such derivations possible from our rasi,Navamsa chart?///////

    அதுபற்றித் தெரியவில்லை சகோதரி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ///////(2) Since i started learning your lessons, i am active on google reading
    various doshas ,yogas.
    In one free forum,one person had consulted an astrologer complaining he
    was engaged thrice but all the 3 engagements broke .
    The astrologer's reply was - "You had verbally and physically abused your wife in past life,
    her curse on you so you are experiencing delay,problems in getting married".
    Is it possible to look into sins we did in past life from our chart?/////

    இது பற்றியும் தெரியவில்லை சகோதரி! எனக்கு அனுபவமில்லை!

    ReplyDelete
  26. /////krish said...
    நட்சத்திரங்களை வகைப்படுத்தி தேவமனித அசுர ஜாதிகளாக பிரிக்கப் படுகின்றன. விவாகப் பொருத்தத்திற்காக பயன்படுத்துகிறார்கள். தேவகுரு ப்ரகஸ்பதி, வியாழனுக்கு கடவுள் தக்ஷிணாமூர்த்தி. அதனால் அவரை வணங்குகிறோம்////

    நல்லது.நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  27. Upapada lagna,Arudapada lagna are Jaimini system of astrology mainly practiced by north Godhavari district astrologers. They learn it in a parambara and no authentic treaties are available. Learning from books is not possible.Differnt methods are used for calculating UL and AL. You can check www.journalofastrology.com of Dr. K.N. Rao for further information.
    Predictions are accurate, but may be based on intution.
    About previous karma D60 Vimsamsa Chart is used. But that requires accurate birth time, which is not possible.

    ReplyDelete
  28. ////krish said...
    Upapada lagna,Arudapada lagna are Jaimini system of astrology mainly practiced by north Godhavari district astrologers. They learn it in a parambara and no authentic treaties are available. Learning from books is not possible.Differnt methods are used for calculating UL and AL. You can check www.journalofastrology.com of Dr. K.N. Rao for further information.
    Predictions are accurate, but may be based on intution.
    About previous karma D60 Vimsamsa Chart is used. But that requires accurate birth time, which is not possible.////

    மேலதிகத்தகவல்களுக்கு நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  29. How is the reemployment after regular retirement is seen from horoscope

    ReplyDelete
  30. /////Mahalingam said...
    How is the reemployment after regular retirement is seen from horoscope/////

    நடப்பு தசா புத்தி மற்றும் கோள்சாரத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com