---------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் - பகுதி ஒன்று!
நமது வகுப்பறைக்கு வரும் வாசக அன்பர் ஒருவர், நவக்கிரகக் கோவில்கலைப் பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.
இந்தவாரம், துவக்கப்பகுதி. சூரியனுக்கு உரிய கோவிலைப் பற்றி இன்று எழுதியுள்ளேன். வாரம் ஒரு கோவில். இதன் அடுத்த பகுதி அடுத்தவாரம் வரும். பொறுத்திருந்து படியுங்கள்.
-------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்திலே உள்ளன.
ஏன் தஞ்சை மாவட்டத்திலேயே உள்ளன?
சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்ற கோவில்கள் அவைகள். அதனால் தஞ்சை மாவட்டத்திலேயே அவைகள் இடம் பெற்றுள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் குடந்தையில் (தற்போதைய கும்பகோணம்) நிறைய ஜோதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின் ஆலோசனைப்படியும், ஆகம விதிகளின் படியும், மன்னர்கள் கோவில்களை அமைத்ததாக வரலாறு.
நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது.
அசட்டுக் கேள்விகளைத் தவிர்த்து, நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!
---------------------------------------------------------------------
சூரியனார் கோவில்
நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான சூரியனுக்கான கோவில்
குலோத்துங்க சோழனால், 1100ஆம் ஆண்டு கட்டப்பெற்றது.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருமங்கலக்குடி என்னும் கிராமத்தின் அருகில் உள்ளது.
ஸ்தல மூர்த்தியின் பெயர் ஸ்ரீசூரியநாராயணமூர்த்தி. உடன் ஸ்ரீஉஷா தேவியும், ஸ்ரீபிரத்யுஷ தேவியும் உள்ளார்கள். மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி இருக்கும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.
கோவிலுக்குள் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் கருவறைகள் உள்ளன. (அவர்கள் இல்லாமல் கோவில் ஏது?) கோள்தீர்த்த விநாயகருக்கும் கருவறை உள்ளது.
சூரிய பகவான், உடல்காரகன் (உடல் ஆரோக்கியத்திற்கு அதிபதி) வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் அதிபதி.
யார், யார் போகலாம்?
யார் வேண்டுமென்றாலும் போகலாம். போய் வரலாம். இறைவனையும், கோள்களையும் வணங்கக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.
ஜாதகத்தில் சூரியன் நீசமடைந்திருந்தாலும், சூரியனுடைய திசை நடைபெற்றாலும், அல்லது அடிக்கடி உடற்கோளாறுகள் ஏற்பட்டாலும், அவர்கள் தவறாமல் ஒருமுறையாவது போய் வரவேண்டும். அதுபோல கோச்சாரத்தில் ஜன்மச் சனி, அஷ்டமச்சனி நடைபெறும் காலங்களில் ஜாதகர் சென்று வரலாம். சனியின் தாக்கங்களைத் தாக்குப்பிடிக்கும் சக்தியை சூரியபகவான் கொடுப்பார்.
கோதுமை, செந்தாமரை மலர் (சிவப்புத் தாமரை மலர்) மற்றும் எருக்கம்பூ ஆகியவைகள் இங்கே பூஜைக்கு உகந்தவையாகும்
கோவிலின் கருவறையும், அர்த்தமண்டபமும், கருங்கற்களால் கட்டப்பெற்றதாகும். சூரியக் கதிர்கள் முழு வீச்சில் கோவிலுக்குள் வரும்படி கோவில் அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரமும் உள்ளது.
சூர்ய புஷ்கரணி என்னும் ஸ்தல தீர்த்தமும் அருகில் உள்ளது. அதாவது ஊருணியும் உள்ளது. ராஜகோபுரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. பக்தர்கள் இங்கே புனித நீராடலாம்.
கோவிலின் பலிபீடத்திற்கு அருகே குதிரை வாகனமும் உள்ளது. அது சூரியனுக்கான வாகனம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இங்கே செல்பவர்கள் முதலில் கோள்தீர்த்த விநாயகரை முதலில் வணங்கிவிட்டுப் பிறகு சூரிய பகவானை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
கோவிலின் விழாக்காலங்கள்
தை மாதம் சப்தமி திதி. ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் முதல் ஞாயிற்றுக்கிழமை. விஜயதசமி ஆகிய தினங்களில் கோவில் விழாக்கோலத்துடன் இருக்கும்.
சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே அந்த தினத்தில் செல்வது சிறப்பாக இருக்கும். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் 12:30 மணி வரை. மாலை 4:00 மணி முதல் 8:00 மணிவரை
கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம். மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம். பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.
நம்பிக்கை உள்ளவர்கள் சென்று வரலாம். நலன்களைப் பெற்று வரலாம்!
மேலதிகத் தகவல்கள்:
சூரியனார் கோவிலில் மற்ற கிரஹங்கள் 8க்கும் சன்னதிகள் உள்ளன. 9 கிரஹங்கள், வினாயகர், சுவாமி, அம்பாள் ஆகிய சன்னதிகள் 12க்கும் அர்ச்சனை செய்ய 12 தேங்காய் உள்ள தட்டு வாங்கச் சொல்லியும் அதற்கு உண்டான அர்ச்சனைச் சீட்டு, தட்சணை எல்லாம் சேர்த்து இன்ரையத் தேதிக்கு ரூ500/= வரை செலவாகும். தேவையான அளவு கையில் பணத்தோடு செல்ல வெண்டும். திருமங்கலக்குடி திருமண தாமதத்தை நிவர்த்தி செய்ய தரிசிக்க வேண்டிய தலம்
சூரிய பகவானுக்கு நேர் எதிராக குரு பகவான் உள்ளார். அதாவது இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையில். சூரிய பகவான் பூஜைக்கு அடுத்து குருவுக்கும் பூஜை நடத்தப்படும். இது மற்ற கோவில்களில் கிடைக்காத சிறப்பு!
------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
m.sgஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteதன்னையே எரித்து
தரணி வாழச் செய்பவன்,
மண்ணோரும் விண்ணோரும் போற்றும்
கண்ணினும் உயர்ந்தோன்,
தர்மத்தின் தலைவன் இவன்
தர்மத்தையே உயிரென கொண்ட
கர்ணனின் தந்தை இவன்,
இருட்டிற்கும், விடியலுக்கும்;
வெம்மைக்கும், குளிருக்கும்;
உயிரெல்லாம் உய்யும், மடியவும்
உணரவும், உணர்த்தவும்;
உலகம் உருளவும் ஏன்?
பிரபஞ்சம இயங்கவும் இந்த
சூரியனே முதன்மையானவன்.
அவனருள் பெற்றிடவே
ஆற்றுபடுத்திய ஐயா,
ஆயிரம் நன்றிகள் உமக்கு!
Om Surya Devaya namo namaha!
ReplyDeleteDear Sir,
Thanks for the publishing today. You are doing a great spiritual task of educating all of us with your kind service. By this noble service of education you will be blessed by dharama devathi. God bless you and your family.
I would like to pass this message to all of your readers in this posting.
Please refer the following 11 links given below.
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam1.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam2.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam3.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam4.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam5.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam6.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam7.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam8.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam9.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam10.asp
This is a very powerful and ultimate sloka to get the blessing of Sun God.
This must be recited 9 times in the morning and from 6 am to 7 am.
Reciting this sloka in Sunday on surya hora( 6 am to 7 am) is very beneficial.
Aditya hrudayam brings punyam.
The meditation of Sun in the heart highly beneficial.
Destroyer of all enemies.
Ensures Victory at all times to the one who to be meditated always.
The indestructible and bestows permanent happiness.
It is Aditya hrudayam which is holy, destroyer of all enemies, bestower of victory, eternal and supremely blessed, and must be recited always.
Om Surya Devaya namo namaha!
Thanks and warm regards,
Ramalingam.P
Vanakam sir,
ReplyDeleteNavamsathil suryan neechama irunthalum athu paathipu irukuma sir?
thanks
thanuja
சூரியனார் கோவிலில் ஏனைய கிரஹங்கள் 8க்கும் சன்னதிகள் உள்ளன. 9 கிரஹங்கள், வினாயகர், சுவாமி, அம்பாள் ஆகிய சன்னதிகள் 12க்கும் அர்ச்சனை செய்ய 12 தேங்காய் உள்ள தட்டு வாங்கச் சொல்லியும் அதற்கு உண்டான தட்சணை எல்லாம் சேர்த்து ரூ500/= வரை செலவாகும். தேவையான அளவு கையில் பணத்தோடு செல்ல வெண்டும்.திருமஙலக்குடி
ReplyDeleteதிருமண தாமதத்தை நிவர்த்தி செய்ய தரிசிக்க வேண்டிய தலம்
/////Alasiam G said...
ReplyDeletem.sgஆசிரியருக்கு வணக்கம்,
தன்னையே எரித்து தரணி வாழச் செய்பவன், மண்ணோரும் விண்ணோரும் போற்றும் கண்ணினும் உயர்ந்தோன், தர்மத்தின் தலைவன் இவன் தர்மத்தையே உயிரென கொண்ட கர்ணனின் தந்தை இவன்,
இருட்டிற்கும், விடியலுக்கும்;வெம்மைக்கும், குளிருக்கும்;உயிரெல்லாம் உய்யும், மடியவும்உணரவும், உணர்த்தவும்;
உலகம் உருளவும் ஏன்? பிரபஞ்சம இயங்கவும் இந்த சூரியனே முதன்மையானவன்.
அவனருள் பெற்றிடவே
ஆற்றுபடுத்திய ஐயா,
ஆயிரம் நன்றிகள் உமக்கு!////
நல்லது. நன்றி ஆலாசியம்!
Ram said...
ReplyDeleteOm Surya Devaya namo namaha!
Dear Sir,
Thanks for the publishing today. You are doing a great spiritual task of educating all of us with your kind service. By this noble service of education you will be blessed by dharama devathai. God bless you and your family.
I would like to pass this message to all of your readers in this posting.
Please refer the following 11 links given below.
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam1.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam2.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam3.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam4.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam5.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam6.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam7.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam8.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam9.asp
http://www.mypurohith.com/Rituals/Aditya_Hrudayam10.asp
This is a very powerful and ultimate sloka to get the blessing of Sun God.
This must be recited 9 times in the morning and from 6 am to 7 am.
Reciting this sloka in Sunday on surya hora( 6 am to 7 am) is very beneficial.
Aditya hrudayam brings punyam.
The meditation of Sun in the heart highly beneficial.
Destroyer of all enemies.
Ensures Victory at all times to the one who to be meditated always.
The indestructible and bestows permanent happiness.
It is Aditya hrudayam which is holy, destroyer of all enemies, bestower of victory, eternal and supremely blessed, and must be recited always.
Om Surya Devaya namo namaha!
Thanks and warm regards,
Ramalingam.P//////
மேலதிகத்தகவல்களுக்கு நன்றி நண்பரே!
/////Thanuja said...
ReplyDeleteVanakam sir,
Navamsathil suryan neechama irunthalum athu paathipu irukuma sir?
thanks
thanuja////
ஆமாம் சகோதரி!
//////kmr.krishnan said...
ReplyDeleteசூரியனார் கோவிலில் ஏனைய கிரஹங்கள் 8க்கும் சன்னதிகள் உள்ளன. 9 கிரஹங்கள், வினாயகர், சுவாமி, அம்பாள் ஆகிய சன்னதிகள் 12க்கும் அர்ச்சனை செய்ய 12 தேங்காய் உள்ள தட்டு வாங்கச் சொல்லியும் அதற்கு உண்டான தட்சணை எல்லாம் சேர்த்து ரூ500/= வரை செலவாகும். தேவையான அளவு கையில் பணத்தோடு செல்ல வெண்டும்.திருமங்கலக்குடி
திருமண தாமதத்தை நிவர்த்தி செய்ய தரிசிக்க வேண்டிய தலம்/////
அதிகப்படியான தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
ஐயா! தாங்கள் கோவிலின் முக்கிய சிறப்பை குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.
ReplyDeleteசூரிய பகவானுக்கு நேர் எதிராக குரு பகவான் உள்ளார். அதாவது இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையில். சூரிய பகவான் பூஜைக்கு அடுத்து குருவுக்கும் பூஜை நடத்தப்படும். இது மற்ற கோவில்களில் கிடைக்காத சிறப்பு!
ஐயாவின் விட்டுப் போன பாடங்களில் சகுனங்கள் பற்றிய பாடங்களையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.என் அனுபவத்தில் ஜாதகத்திற்கு இணையாக சகுனங்களின் பலன்களையும் நிறைய உணர்ந்திருக்கிறேன்.உங்கள் அனுபவத்தையும் அறிய ஆவல்.நன்றி.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
ReplyDeleteசூரியனார் கோயில்-விபரங்களும் விளக்கமும் நன்றாக உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் இங்கு மட்டுமே, தாங்கள் கொடுத்துள்ள படத்தில் உள்ளவாறு சூரியன் அமைப்பும்,சூரியனுக்கு நேர் எதிரில் குருவுக்கும் சிலை அமைத்து மற்ற ஏழு கிரகங்களுக்கும் தனித்தனியே சூரியனைப் பார்த்தவாறு சிறிய கோவில்கள் கட்டி சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. ஸ்தல விருட்சம் "எருக்கன்".
தகவலுக்காக.
படங்கள் அருமையாக உள்ளது.நன்றி! வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-04-28
/////கார்மேகராஜா said...
ReplyDeleteஐயா! தாங்கள் கோவிலின் முக்கிய சிறப்பை குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.
சூரிய பகவானுக்கு நேர் எதிராக குரு பகவான் உள்ளார். அதாவது இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையில். சூரிய பகவான் பூஜைக்கு அடுத்து குருவுக்கும் பூஜை நடத்தப்படும். இது மற்ற கோவில்களில் கிடைக்காத சிறப்பு!////
மேலதிகத்தகவலுக்கு நன்றி. உங்களுடைய செய்தியையும், திரு. KMR.கிருஷ்ணன் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியையும் பதிவில் நுழைத்துவிட்டேன். இப்போது பதிவை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.
/////இராதா கிருஷ்ணன் said...
ReplyDeleteஐயாவின் விட்டுப் போன பாடங்களில் சகுனங்கள் பற்றிய பாடங்களையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.என் அனுபவத்தில் ஜாதகத்திற்கு இணையாக சகுனங்களின் பலன்களையும் நிறைய உணர்ந்திருக்கிறேன்.உங்கள் அனுபவத்தையும் அறிய ஆவல்.நன்றி./////
நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் நன்பரே!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
சூரியனார் கோயில்-விபரங்களும் விளக்கமும் நன்றாக உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் இங்கு மட்டுமே, தாங்கள் கொடுத்துள்ள படத்தில் உள்ளவாறு சூரியன் அமைப்பும்,சூரியனுக்கு நேர் எதிரில் குருவுக்கும் சிலை அமைத்து மற்ற ஏழு கிரகங்களுக்கும் தனித்தனியே சூரியனைப் பார்த்தவாறு சிறிய கோவில்கள் கட்டி சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. ஸ்தல விருட்சம் "எருக்கன்".
தகவலுக்காக.
படங்கள் அருமையாக உள்ளது.நன்றி! வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
சூரியனார் கோயில் பற்றிய தகவல்கள் அருமை. எனக்குத் தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். விஞ்ஞானம் சூரியனை நட்சத்திரம் என்கிறதே அது எப்படி கிரகமாகும் என்று யாராவது அறிவு ஜீவித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து குழப்பாமல் இருந்தால் சரி.
ReplyDeleteஆதித்ய ஹிருதயம் எவ்வளவு நீளமானது என்று தெரியும். 9 முறை படித்தால் அல்லது படிக்க எத்தனித்தால் முடிப்பதற்குள் வாயில் நுரை தள்ளிவிடும்.
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம் என்னுடைய ஆவல் தீர்த்தற்க்கு மிகவும் நன்றி அய்யா
ReplyDeleteமதிப்பிற்குரிய அய்யா,
ReplyDeleteசூரிய பகவான் கோவில் பற்றிய பாடம் மிக அருமை.
/////ananth said...
ReplyDeleteசூரியனார் கோயில் பற்றிய தகவல்கள் அருமை. எனக்குத் தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். விஞ்ஞானம் சூரியனை நட்சத்திரம் என்கிறதே அது எப்படி கிரகமாகும் என்று யாராவது அறிவு ஜீவித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து குழப்பாமல் இருந்தால் சரி.
ஆதித்ய ஹிருதயம் எவ்வளவு நீளமானது என்று தெரியும். 9 முறை படித்தால் அல்லது படிக்க எத்தனித்தால் முடிப்பதற்குள் வாயில் நுரை தள்ளிவிடும்./////////
கேள்வி கேட்பவர்கள் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். தெரிந்தவரை, பதில் சொல்லவேண்டியது நமது கடமையாகும். நன்றி ஆனந்த்!
//////rajesh said...
ReplyDeleteஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம் என்னுடைய ஆவல் தீர்த்தற்க்கு மிகவும் நன்றி அய்யா/////
உங்களின் மூலம் பலரது ஆவலையும் தீர்த்திருக்கிறேன்!
//////Theivendrakumar PP said...
ReplyDeleteமதிப்பிற்குரிய அய்யா,
சூரிய பகவான் கோவில் பற்றிய பாடம் மிக அருமை./////
நல்லது. நன்றி நண்பரே!
வாத்தியார் ஐயா!
ReplyDeleteஅந்நியதேசத்து பொன்மாலை பொழுது வணக்கம்.
நம்பிக்கை உள்ளவர்கள் சென்று வரலாம். நலன்களைப் பெற்று வரலாம்!
என்று அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா
உண்மைதான் மிகவும் அருமையான ஸ்தலம் காணவேண்டிய கோவில் ஆகும்.
அடியவனுக்கு (இது மற்றும் இதனை சுற்றிய) கோவிலுக்கு செல்லும் பாக்கியம் மட்டும் அன்று முதல் இன்று வரை கொடுத்து வைத்து உள்ளது
இந்த வகையில் அடியவன் பாக்கியவான் ஆகும் .
(என் தந்தையார் சொல்லுவார் படி பின்னர் வரும் காலங்களில் தெய்வம் வந்து உனக்கு பரீட்சை எழுதாது என்று இப்பம் நினைத்தாலும் மலை மலையாக கண்ணீர் வருகின்றது ஐயா .
உயிர், உடல் , ஆத்மா, புண்ணியம் என்று அனைத்தும் தந்த தந்தையின் சொல்லை தட்டிய பாவதிக்காக இன்று தன்மானம் முதல் அனைத்தையும் அடகு வைக்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டமே என்று நினைக்கும் பொழுது வேதனைதான் கூடுகின்றது ஐயா
இதில் எங்கு ஐயா தெய்வம் உள்ளது )
Respected Sir..!
ReplyDeleteYou are not only teaching us Astralogy, but also giving us related useful and most precious information to us. Thankyou very much and hats off to your dedication. You have provided the information which was badly required by me.. I hope you will provide the rest of the informations about all other planets very soon..
Yours faithful student
M. Thiruvel Murugan
Shimla, (H. P.)
////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா!
அந்நியதேசத்து பொன்மாலை பொழுது வணக்கம்.
நம்பிக்கை உள்ளவர்கள் சென்று வரலாம். நலன்களைப் பெற்று வரலாம்!
என்று அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா
உண்மைதான் மிகவும் அருமையான ஸ்தலம் காணவேண்டிய கோவில் ஆகும்.
அடியவனுக்கு (இது மற்றும் இதனை சுற்றிய) கோவிலுக்கு செல்லும் பாக்கியம் மட்டும் அன்று முதல் இன்று வரை கொடுத்து வைத்து உள்ளது. இந்த வகையில் அடியவன் பாக்கியவான் ஆகும்
(என் தந்தையார் சொல்லுவார் படி பின்னர் வரும் காலங்களில் தெய்வம் வந்து உனக்கு பரீட்சை எழுதாது என்று இப்ப நினைத்தாலும் மலை மலையாக கண்ணீர் வருகின்றது ஐயா ).
உயிர், உடல் , ஆத்மா, புண்ணியம் என்று அனைத்தும் தந்த தந்தையின் சொல்லை தட்டிய பாவத்திற்காக இன்று தன்மானம் முதல் அனைத்தையும் அடகு வைக்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டமே என்று நினைக்கும் பொழுது வேதனைதான் கூடுகின்றது ஐயா
இதில் எங்கு ஐயா தெய்வம் உள்ளது )////////
தெய்வம் இல்லாமல் எதுவும் இல்லை. நான் பதிவு எழுதுவது அவன் அருளால். அதைப்படிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்ததும் அவன் அருளால்தான். அதை மனதில் வையுங்கள்!
////M. Thiruvel Murugan said...
ReplyDeleteRespected Sir..!
You are not only teaching us Astralogy, but also giving us related useful and most precious information to us. Thankyou very much and hats off to your dedication. You have provided the information which was badly required by me.. I hope you will provide the rest of the informations about all other planets very soon..
Yours faithful student
M. Thiruvel Murugan
Shimla, (H. P.)/////
ஆமாம், தொடர்ந்து அனைத்துத் தகவல்களும் வரும்! நன்றி திருவேல்முருகன்.
ஜெய் ஸ்ரீ ராம்.!
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
தாங்கள் ஜோதிடத்தை ஆன்மீகத்தோடு சேர்த்து எழுதுவது அற்புதமாக இருக்கிறது..
எந்தவித பலனும் எதிபார்க்காமல் அந்தகாலத்து ஆன்மீகப் பெரியோர்களைப்போல் உயரிய பணி செய்கிறீர்கள்.
(திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் சிவன் கோவிலில் நவக்கிரகங்கள் நாயகியருடன் உள்ள தகவல் நீங்கள் உங்கள் வலைதளத்தில் கொடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.)
////Thilaga .I said...
ReplyDeleteஜெய் ஸ்ரீ ராம்.!
அன்புள்ள அய்யா,
தாங்கள் ஜோதிடத்தை ஆன்மீகத்தோடு சேர்த்து எழுதுவது அற்புதமாக இருக்கிறது..
எந்தவித பலனும் எதிபார்க்காமல் அந்தகாலத்து ஆன்மீகப் பெரியோர்களைப்போல் உயரிய பணி செய்கிறீர்கள்.
(திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் சிவன் கோவிலில் நவக்கிரகங்கள் நாயகியருடன் உள்ள தகவல் நீங்கள் உங்கள் வலைதளத்தில் கொடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.)///////
இல்லை சகோதரி. அதற்கான பக்கங்கள் இணைய தளத்தில் இருந்தால் அதன் சுட்டியைக் கொடுங்கள். நன்றி!