மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.09

உயர்ந்த கோவிலில் ஒப்பற்ற விழா!


உயர்ந்த கோவிலில் ஒப்பற்ற விழா!

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலின் திருக்குட
நன்னீராட்டுப் பெருவிழா நாளை 1.7.2009 புதன் கிழமை காலை
9:30 முதல் 10:30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

திருக்கோவில் நிர்வாகத்தினரிடமிருந்து அடியவனுக்கு வந்த
அழைப்பிதழை உங்களுக்கும் உரிய அழைப்பிதழாகக் கீழே
கொடுத்துள்ளேன்.

“கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறியாகுமன்றே”

என்று அப்பர் சுவாமி அவர்களால் பாடப்பெற்ற அற்புதமான
திருத்தலம் அது!

ஸ்ரீ ராமபிரான் ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்தார்
என்பதாலும், சைவம், வைணவ மதத்தினர்களும் வந்துகூடி வழிபடுவதாலும்
இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இராமேசுவரம் முக்கியமான
தலமாகத் திகழ்கிறது. இந்தக் கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய
தீர்த்தங்களில் நீராடுவதால் உடலும் உள்ளமும் தூய்மை அடையும்

அதோடு தோஷங்களுக்குச் அது சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
ஆகவே விருப்பமுள்ளவர்கள் சென்று வாருங்கள்.
நாளைக்கே செல்ல வேண்டும் என்பதில்லை. ஒரு மண்டலத்திற்குள்
அதாவது 48 நாட்களுக்குள் நேரம் கிடைக்கும்போது எப்போது வேண்டு
மென்றாலும் சென்று வரலாம்.

தோஷம் என்றால் என்னவென்று கேட்பவர்களும், தோஷத்தின் மீது
நம்பிக்கை இல்லாதவர்களும், வழக்கம்போல மாநகராட்சி
அல்லது நகராட்சி குழாய்த் தண்ணீரிலேயே நீராடி மகிழலாம்.
என்னிடம் வந்து இது சம்பந்தமாகக் கேள்வி கேட்டுப் பிறாண்ட வேண்டாம்

இது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கான பதிவு.
அதை மனதில் வையுங்கள்!


படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++
48 நாட்கள் சுவாமியை வணங்குவது ஏன்?

எந்த தெய்வத்தின் பூஜிப்பதாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து
ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜிக்க வேண்டும்.
இதற்கான காரணம் தெரியுமா? சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள்
ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும்.
அசுவதி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும்.
இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத்தொகையான 48ஐ வழிபாட்டில்
ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர்.

9 planets + 12 rasis + 27 stars = 48

ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும், ராசிநாதர்களும்,
நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே
மண்டல வழிபாடு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு அந்நோக்கம் நிறைவேறுவதற்காக
ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு. இந்நாட்களில், எந்த தெய்வத்தை
வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் கோயிலுக்குச் செல்லுதல்,
அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை உச்சாடனம் செய்தல்,
மந்திரம் சொல்ல முடியாதவர்கள் அந்த தெய்வத்திற்குரிய எளிய
துதிப்பாடல்கள், கவசங்களைப் பாராயணம் செய்தல், சகஸ்ர நாமங்களை
ஜபித்தல், புஷ்பத்தால் அர்ச்சித்தல், தீபமிடுதல் போன்ற எளிய விதங்களில்,
நம் சக்திக்கு எவ்வழிபாட்டுமுறைகள் இயன்றதோ அம்முறையில் வழிபாடு
செய்தல் போதுமானது. ஒருமுகப்பட்ட மனதுடன் ஒருமண்டலம் செய்து
வரும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறி வருவதை அனுபவத்தில்
உணரலாம். மண்டல வழிபாடு செய்வது என்பது மிகவும் மகத்தானது.
ஆனால், மண்டலவழிபாடு இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யப்பட
வேண்டும். ஒரு செயலில் முழுமையான வெற்றியை வேண்டுவோர் தமக்கு
விருப்பமான இஷ்டதேவதையை முன்னிறுத்தி தொடர்ந்து 48 நாட்கள்
பூஜித்து வர நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.

(48 நாட்களைப் பற்றிய விளக்கக் கட்டுரை: நன்றி’ தினமலர்’)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

18 comments:

  1. ராமேஸ்வரமே போனது‌ போல உள்ளது.நன்றி.

    12 ராசிக்கு 48 பாதம்! அதுவும் மண்டலம் 48 நாள் காரணமா? ‌

    ReplyDelete
  2. 48 நாள் என்பது எதற்கு என்ற எனது கேள்விக்கு இன்று விடை கிடைத்தது. ஆசிரியருக்கு எனது நன்றி. ராமேஸ்வரத்தின் மகிமையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு சென்று வர வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய அவா. இது நிறைவேற ஆண்டவந்தான் அருள் புரிய வேண்டும்

    ReplyDelete
  3. 48 days explaniation good. Rameswaram is excellent temple for hindus at south!!!Heard lot about it.

    -Shankar

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    ராமேஸ்வரமே போனது‌ போல உள்ளது.நன்றி.
    12 ராசிக்கு 48 பாதம்! அதுவும் மண்டலம் 48 நாள் காரணமா? ‌////

    பதிவில் எழுதியிருக்கிறேன்: 9 planets + 12 rasis + 27 stars = 48 நாட்கள்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ////Blogger ananth said...
    48 நாள் என்பது எதற்கு என்ற எனது கேள்விக்கு இன்று விடை கிடைத்தது. ஆசிரியருக்கு எனது நன்றி. ராமேஸ்வரத்தின் மகிமையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு சென்று வர வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய அவா. இது நிறைவேற ஆண்டவந்தான் அருள் புரிய வேண்டும்//////

    ஆண்டவனிடம் உங்களுக்காக நான் பிரர்த்தனை செய்கிறேன். விரைவில் ஆனந்த’மாகச் சென்று வாருங்கள்!

    ReplyDelete
  7. /////Blogger hotcat said...
    48 days explaniation good. Rameswaram is excellent temple for hindus at south!!!Heard lot about it.
    -Shankar/////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,கோவில் விசேஷ‌ம் பற்றிய தகவலுக்கு நன்றிகள்.48 நாட்களுக்கான விளக்கத்திற்கும் நன்றிகள்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  9. Dear Sir,

    thanks for 48 days mandalam explanation.

    Rgds
    Nainar

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஐயா! ராமேஸ்வரம் மற்றும் மண்டலம் பற்றி விளக்கம் அருமை. ஒரு விளக்கம் வேண்டும். ஐயா கும்பத்தில் குரு ஏழாம் இடத்தில் ஏழின் அதிபதி சனி நான்காம் இடத்தில் இதன் விளக்கம் வேண்டும் ஐயா.

    ReplyDelete
  12. மண்டலம் என்னும் சொல் இதற்க்கு முன்னால் விவேக் ஜோக் ஒன்றில் தான் கேள்வி பட்டேன். அதை நீங்கள் அருமையாக அதன் உள்ள பொருளை விளக்கியதற்கு மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  13. I had been to Rameswaram as a kid and we had bathed in the 22 springs water as a family. It felt great and it was fantastic fun. As a Kid, I enjoyed the ocean, spring water and all that experience!

    ReplyDelete
  14. /////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,கோவில் விசேஷ‌ம் பற்றிய தகவலுக்கு நன்றிகள்.48 நாட்களுக்கான விளக்கத்திற்கும் நன்றிகள்.
    அன்புடன்,
    மதுரை தனா.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger arumuganainar said...
    Dear Sir,
    thanks for 48 days mandalam explanation.
    Rgds
    Nainar////

    எல்லாம் உங்களுக்காகத்தான் நைனார்!

    ReplyDelete
  16. //////Blogger DD said...
    ஐயா! ராமேஸ்வரம் மற்றும் மண்டலம் பற்றி விளக்கம் அருமை. ஒரு விளக்கம் வேண்டும். ஐயா கும்பத்தில் குரு ஏழாம் இடத்தில் ஏழின் அதிபதி சனி நான்காம் இடத்தில் இதன் விளக்கம் வேண்டும் ஐயா.//////

    இது தனிப்பட்ட ஜாதகத்திற்கான கேள்வி. கேள்வி மற்றும் உங்கள் பிறப்பு விவரங்களுடன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் (with one specific question)

    ReplyDelete
  17. ////Blogger Dinesh babu said...
    மண்டலம் என்னும் சொல் இதற்கு முன்னால் விவேக் ஜோக் ஒன்றில் தான் கேள்வி பட்டேன். அதை நீங்கள் அருமையாக அதன் உள்ள பொருளை விளக்கியதற்கு மிக்க நன்றி அய்யா!/////

    நன்றி தினேஷ் பாபு!

    ReplyDelete
  18. /////Blogger Dinesh babu said...
    I had been to Rameswaram as a kid and we had bathed in the 22 springs water as a family. It felt great and it was fantastic fun. As a Kid, I enjoyed the ocean, spring water and all that experience!////

    மீண்டும் ஒருமுறை சென்று வாருங்கள். இன்னும் ஆனந்தமாக இருக்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com