ஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!
இதற்கு முந்தைய பதிவில் மதிப்பிற்குரிய நமது ஸ்வாமிஜி அவர்கள்
இட்ட பின்னூட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
அந்த பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லும் முகமாக இந்தப் பதிவு
////////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
திரு சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,
ஓரை - ஹோரா எனும் இந்த தகவல் பயனுள்ளது என்றாலும்,
அட்டவணையை கொடுத்து அதை பயன்படுத்து என சொல்லுவது
சரியான வழிகாட்டுதலா?
கேள்விகள்
---------
1)ஏன் ஞாயிறு 6 முதல் 7 வரை சூரியன் ஹோரையாக இருக்கிறது?
7 முதல் 8 வரை ஏன் சுக்கிரன் ஹோரையாக வருகிறது? சுக்கிரனுக்கு
பதில் வேறு கிரகம் வரக்கூடாதா?
2)ஏன் 7 கிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது?
ராகு கேது ஏன் இல்லை? நவக்கிரங்கள் தானே?
சப்த கிரகங்கள் பயன்படுத்தியதன் நோக்கம் என்ன?
3)நேரங்கள் சூரிய உதயத்திற்கு தக்க மாறுமா?
போன்ற கேள்விகளுக்கு விளக்கத்துடன் இத்தகவல்களை
வெளியிட்டால் நல்லது. இல்லை என்றால் இதை விட மூட நம்பிக்கை
வேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.
உங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்...///////
===================================================
நன்றி ஸ்வாமிஜி; இந்த எளியவனின் பதில்:
(விளக்கங்கள் சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்)
++++++++++++++++++++++++++++++++
நல்ல காரியங்கள் வெற்றிபெற வேண்டும்.
அதுதான் அதைச் செய்பவர்களுக்கு நல்லது
ஆகவே அவற்றைக் காலமறிந்து செய்யுங்கள் என்றார்கள்
நம் முன்னோர்கள்
சொன்னதோடு நிற்காமல் அதற்கான வழியையும்
சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
அதுதான் ஓரை அல்லது ஓரை நேரம்.
சுப ஓரைகளில் செய்யப்படும் செயல்கள் வெற்றிபெறும்
என்பது அவர்களின் வாக்கு!
ஆகவே செய்யும் நல்ல செயல்களை ஓரை பார்த்துச் செய்யுங்கள்.
வெற்றி நிச்சயம்!
ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது.
ஒரு நாளின் கிழமை அதன் அதிபதியின் முதல் ஓரையாக
கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி
நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.
இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை,
8-9 மணி வரை புதன் ஓரை,
9-10 வரை சந்திரன் ஓரை,
10-11 வரை சனி ஓரை,
11-12 மணி வரை குரு ஓரை,
12-1 மணி வரை செவ்வாய் ஓரை.
இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால்
அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை,
புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை,
அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள
வரிசைப்படி ஓரை கணக்கிடப்படுகிறது.
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய
நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.
சரியான சூரிய உதயத்தை வைத்துக் கணக்கிட்டால் பலன்கள்
இன்னும் சூப்பராக இருக்கும்.
அதற்கு சூரிய உதயம் பற்றிய விவரம் தேவை; உங்களுக்காக
சூரிய உதய அட்டவணையையும் கீழே கொடுத்துள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு.
ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும்,
அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும்
அவற்றிற்கு ஓரை கிடையாது
ஓரைகளை யார் உருவாக்கினார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள்.
அவைகள் ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை
அதோடு கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை.
பிடித்திருந்தால், ஒப்புதல் இருந்தால் கடைப்பிடியுங்கள்
இல்லாவிட்டால் கடாசி விட்டு நடையைக் கட்டுங்கள்.
அதனால் வேறு யாருக்கும் நஷ்டமில்லை!
பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள்
எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும்
உருவாக்கப்பட்டன.
சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள்,
தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி,
அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான
கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள்
ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின்
அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர்.
இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு
அளித்தனர்.
சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன.
இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும்,
அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்)
அதற்கு 2வது இடம் வழங்கினர்.
இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,
4வது இடம் சந்திரனுக்கும்,
5வது இடம் சனிக்கும்,
6வது இடம் குருவுக்கும்,
7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும்
நல்ல ஓரைகள் எனப்படுகிறது.
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே
கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம்,
குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது,
பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்
ஆகியற்றைச் செய்யலாம்.
இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும்.
கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால்,
அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது
என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது,
ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது,
நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல்,
விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும்
பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்,
வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.
நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது,
சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல்,
உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம்,
மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம்
செவ்வாய் ஓரை மேற்கொள்ளலாம்.
இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால்
சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war)
வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது.
செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும்,
அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள்
கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும்,
வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது.
இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.
மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது.
நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும்.
அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.
அதோடு அடியேன் மாய்ந்து மாய்ந்து பாடம் நடத்துவதின் நோக்கமும்
நிறைவேறும்:-)))
நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
sir its really very use full....
ReplyDeleteஅருமை..
ReplyDeleteஉங்கள் அன்புக்கு அளவில்லா நன்றிகள்.
விரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவுடுகிறேன்.
நன்றி
Dear Sir,
ReplyDeleteReally appreciate your details and patience in answering, and respecting the others opinion.
Btw, is it based on sunrise...will this hora timing hold good, if I use it in usa.
-Shankar
1995 ம் ஆண்டு முதலாக நான் ஹோரை நேரத்தை பின்பற்றி வருகிறேன். நற்பலன் தரும் என்பதை அனுபவபூர்வமாக இன்றுவரை உணர்கிறேன். நன்றி
ReplyDeleteஆஹா.. புதிய புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteவாழ்க ஓம்கார் ஸ்வாமிஜி..
அவர் புண்ணியத்தில் ஓரை பாடம் மனப்பாடமானது..!
வாத்தியாருக்கும் நன்றிகள்..!
சூரிய உதயம் நாட்டிற்கு நாடு வேறு படும். அதை கவணமாக ஆராய்ந்து பலன் காண வேண்டும். எங்கள் நாட்டில் இதுவரை 3 முறை நேர மாற்றம் செய்யப் பட்டு உள்ளது. இங்கே சூரிய உதயம் 7 மணி என்று கணக்கிடப் படுகிறது.
ReplyDeleteஓரை/கிழமை என்பது உருவான போது 7 கிரகங்கள் மட்டும் இருந்தாகவும் அதை அனுசரித்துதான் இவை உருவானதாகப் படித்திருக்கிறேன்.
nala vilakam
ReplyDeleteபுரிஞ்ச மாதிரி இருக்கு.... புரியாத மாதிரியும் இருக்கு.......
ReplyDelete>>விரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவுடுகிறேன்<<
நன்றி ஸ்வமிஜி
i have also read the chaya grahas are later day additions.previously the horoscopes were cast only with 7 grahas.that is why in hora only 7 are taken(?).
ReplyDeleteAyya........
ReplyDeleteThis is my correct info onli......
12.7.1986
12.58am
Sivagangai district...
For me kathra dosha i seen or not.......
வணக்கம் ஐயா,ஓரை குறித்த தகவலுக்கு நன்றிகள்.ஓம்கார் சுவாமிகளுக்கும் நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
மதுரை தனா
Very nice and detailed explanation saar! Really liked it!
ReplyDelete//இதை விட மூட நம்பிக்கை
ReplyDeleteவேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.
உங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்.../////////
ஸ்வாமி (ஓம்கார்) சோதிப்பது சோதனைக்குள்ளாக்குவது இவை அனைத்தையும் வேதத்தின் கண்மணிகளோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா ? இப்படி சுப்பையா வாத்தியாரிடமுமா காட்டவேண்டும்.
பழனி கோவைக்கு பக்கத்தில் இருக்கு, வாத்தியார் பேரும் சுப்பையா, நெனச்சாலே அடிவயுத்தைக் கலக்குது.
:)
////Blogger DD said...
ReplyDeletesir its really very use full....///
நன்றி சகோதரி!
/////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteஅருமை..
உங்கள் அன்புக்கு அளவில்லா நன்றிகள்.
விரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவிடுகிறேன்.
நன்றி/////
ஆகா, பதிவிடுங்கள். படித்து மகிழக் காத்திருக்கிறோம்.
நன்றி ஸ்வாமிஜி!
////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir,
Really appreciate your details and patience in answering, and respecting the others opinion.
Btw, is it based on sunrise...will this hora timing hold good, if I use it in usa.
-Shankar//////
உங்கள் ஊரின் சூரிய உதயத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் சங்கர்!
/////Blogger Krushna Cumaar said...
ReplyDelete1995 ம் ஆண்டு முதலாக நான் ஹோரை நேரத்தை பின்பற்றி வருகிறேன். நற்பலன் தரும் என்பதை அனுபவபூர்வமாக இன்றுவரை உணர்கிறேன். நன்றி////
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!
////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஆஹா.. புதிய புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
வாழ்க ஓம்கார் ஸ்வாமிஜி..
அவர் புண்ணியத்தில் ஓரை பாடம் மனப்பாடமானது..!
வாத்தியாருக்கும் நன்றிகள்..!//////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி உண்மைத்தமிழரே!
/////Blogger ananth said...
ReplyDeleteசூரிய உதயம் நாட்டிற்கு நாடு வேறு படும். அதை கவணமாக ஆராய்ந்து பலன் காண வேண்டும். எங்கள் நாட்டில் இதுவரை 3 முறை நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கே சூரிய உதயம் 7 மணி என்று கணக்கிடப் படுகிறது./////
அப்படியே செய்யுங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஓரை/கிழமை என்பது உருவான போது 7 கிரகங்கள் மட்டும் இருந்தாகவும் அதை அனுசரித்துதான் இவை உருவானதாகப் படித்திருக்கிறேன்.//////
அது பற்றிச் சரியாகத் தெரியவில்லை நண்பரே!நான் அவ்விதம் படித்ததில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////Blogger Nisha said...
ReplyDeletenalla vilakam/////
நன்றி சகோதரி!
////Blogger மதி said...
ReplyDeleteபுரிஞ்ச மாதிரி இருக்கு.... புரியாத மாதிரியும் இருக்கு.......
>>விரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவுடுகிறேன்<<
நன்றி ஸ்வமிஜி///
இரண்டு அல்லது மூன்று முறைகள் பொறுமையாகப் படியுங்கள். புரியும்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeletei have also read the chaya grahas are later day additions.previously the horoscopes were cast only with 7 grahas.that is why in hora only 7 are taken(?).////
இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை!
/////Blogger Bala said...
ReplyDeleteAyya........
This is my correct info onli......
12.7.1986
12.58am
Sivagangai district...
For me kathra dosha i seen or not.......////////
களத்திர தோஷத்தைப் பற்றி எதற்குக் கவலை?
பெண்கள்தான் கவலைப்பட வேண்டும்.
பாலனுக்கு எதற்குக் கவலை?
////Blogger dhanan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,ஓரை குறித்த தகவலுக்கு நன்றிகள்.ஓம்கார் சுவாமிகளுக்கும் நன்றிகள்.
அன்புடன்
மதுரை தனா///////
நன்றி தனா!
/////Blogger Dinesh babu said...
ReplyDeleteVery nice and detailed explanation saar! Really liked it!/////
நன்றி நண்பரே!
////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//இதை விட மூட நம்பிக்கை
வேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.
உங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்.../////////
ஸ்வாமி (ஓம்கார்) சோதிப்பது சோதனைக்குள்ளாக்குவது இவை அனைத்தையும் வேதத்தின் கண்மணிகளோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா ? இப்படி சுப்பையா வாத்தியாரிடமுமா காட்டவேண்டும்./////
சாதனையும், சோதனையும் அனைவருக்கும் பொதுவானது. அதில் வாத்தியாருக்கு மட்டும் விதிவிலக்கென்பது அக்கிரமம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பழனி கோவைக்கு பக்கத்தில் இருக்கு, வாத்தியார் பேரும் சுப்பையா, நெனச்சாலே அடிவயுத்தைக் கலக்குது. :)
பக்கத்தில் இல்லை. 105 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
எட்டுக்குடி முருகன் உங்கள் ஊருக்கு (நாகைக்கு) அருகிலேயே இருக்கிறான்.
அடிவயிற்றைக் கலக்கினால் அன்பர் டாக்டர் ப்ரூனோ அவர்களைத் தொடர்பு கொண்டு கேளுங்கள் அற்புதமான மருந்தைப் பரிந்துரைப்பார்!
\\இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,\\
ReplyDelete2வது இடம் சுக்கிரனுக்கு, 3வது இடம் புதனுக்கு அல்லவா?
புதன், குரு, சுக்கரன் ஓரைகளில் கடன் அடைப்பது, வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்வது, நிலம் வாங்குவது - விற்பது, ஒப்பந்தம் போடுவது போன்றவற்றைச் செய்யலாம் அல்லவா? அல்லது இவற்றை அதற்குரிய ஓரைகளில் தான் செய்ய வேண்டுமா?
////Blogger குறும்பன் said...
ReplyDelete\\இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,\\
2வது இடம் சுக்கிரனுக்கு, 3வது இடம் புதனுக்கு அல்லவா?/////
அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஓரை யாருடையது என்று பாருங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////புதன், குரு, சுக்கரன் ஓரைகளில் கடன் அடைப்பது, வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்வது, நிலம் வாங்குவது - விற்பது, ஒப்பந்தம் போடுவது போன்றவற்றைச் செய்யலாம் அல்லவா? அல்லது இவற்றை அதற்குரிய ஓரைகளில் தான் செய்ய வேண்டுமா?/////
எதை, எப்போது செய்தால் நன்மை என்பதற்குத்தானே இந்தப் பதிவு. பதிவில் எழுதியுள்ளபடியே செய்யுங்கள்!
\\அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஓரை யாருடையது என்று பாருங்கள்\\ சுக்கிரன் என்று தான் உள்ளது, மூன்றாவது ஆக புதன் உள்ளது. இடுகையில் "இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு," என்று உள்ளதால் குழப்பம்.
ReplyDelete\\எதை, எப்போது செய்தால் நன்மை என்பதற்குத்தானே இந்தப் பதிவு. பதிவில் எழுதியுள்ளபடியே செய்யுங்கள்!\\
நல்ல ஓரைகளில் எல்லா செயல்களையும் (மற்ற ஓரைகளுக்கு சிறப்பானதையும்) செய்யலாம் அல்லவா?
தெளிவடைவதற்கே இக்கேள்வி. திருப்பி திருப்பி கேக்குறேன் என்று வகுப்பறையை விட்டு துரத்திவிடாதீர்கள்.
Blogger குறும்பன் said...
ReplyDelete\\அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஓரை யாருடையது என்று பாருங்கள்\\ சுக்கிரன் என்று தான் உள்ளது, மூன்றாவது ஆக புதன் உள்ளது. இடுகையில் "இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு," என்று உள்ளதால் குழப்பம்.
\\எதை, எப்போது செய்தால் நன்மை என்பதற்குத்தானே இந்தப் பதிவு. பதிவில் எழுதியுள்ளபடியே செய்யுங்கள்!\\
நல்ல ஓரைகளில் எல்லா செயல்களையும் (மற்ற ஓரைகளுக்கு சிறப்பானதையும்) செய்யலாம் அல்லவா?
தெளிவடைவதற்கே இக்கேள்வி. திருப்பி திருப்பி கேக்குறேன் என்று வகுப்பறையை விட்டு துரத்திவிடாதீர்கள்./////
ஆகா செய்யலாம். சிலசமயம் கட்டாயத்தின்பேரில் சிலவற்றைச் செய்ய நேரிடும். அதற்கெல்லாம் ஹோரை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டுவிட்டுச் செய்ய வேண்டியதுதான். அவர் பார்த்துக்கொள்வார்!
ஓரை நல்ல இருந்தா ராகு எமகண்டம் குளிகை வந்திடுது. இல்ல கௌரி பஞ்சாங்கம் நான் இருக்கேன்னு தலைய காட்டுது அப்படி பட்ட நாள்ல என்ன பண்ண? (உதாரணமா வெள்ளிக்கிழமை இதுல எதாவது ஒன்று இடிக்குது?)
ReplyDelete