மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.09

வேகமும், வேகத்தடையும்!

வேகமும், வேகத்தடையும்!

CONFIDENCE
கிராமம் ஒன்றில் மழை வேண்டி பெரிய அளவில் யாகம் ஒன்றை
நடத்தினார்கள். யாகத்திற்கு கிராமத்தில் உள்ள மொத்த ஜனங்களும்
(சுமார் ஆயிரம் பேர்கள்) வந்திருந்தார்கள்.

வந்திருந்தவர்களில் ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையோடு வந்திருந்தான்.
யாகம் முடிந்தவுடன் மழை பெய்யும் என்று அவன் நம்பினான்.

Confidence என்பது அதுதான்.
---------------------------------------------------------------------
TRUST

ஒரு வயதுக் குழந்தை ஒன்றைக் கைகளால் மேலே துக்கிப் போட்டுப்
பிடிக்கிறீர்கள். அந்தக் குழந்தை தன்னை மறந்து கலகலவென்று சிரிக்கும்.
நீங்கள் தவறாமல் பிடித்துவிடுவீர்கள் என்ற அசாத்திய நம்பிக்கை
அதற்கு இருக்கும்.

அதற்குப் பெயர்தான் Trust
---------------------------------------------------------------------
HOPE

ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்கிறீர்கள்.
காலையில் உயிரோடு மீண்டும் எழுவோம் என்பதற்கு எந்தவிதமான
உத்திரவாதமும் கிடையாது.

இருந்தாலும் அடுத்தநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி மனது
அசைபோடும்.

அதற்குப் பெயர்தான் Hope
---------------------------------------------------------------------------
ஆகவே எப்போதும், எதிலும் நம்பிக்கையோடு இருங்கள்!

HAVE CONFIDENCE, TRUST & NEVER LOSE HOPE
--------------------------------------------------------------------------
If money is lost; nothing is lost!
If health is lost; something is lost!
If courage is lost; everything is lost!

ஆகவே உங்கள் தைரியத்தை எப்போதும் இழக்காதீர்கள்!
-------------------------------------------------------------------------
அடுத்த பாடம் தைரியத்தைப் பற்றிச் சொல்லும் 3ஆம் வீட்டைப் பற்றிய பாடம்

Confidence = a trust
Trust = firm belief
Hope = expectation and desire, anticipate
தமிழில் இம்மூன்றிற்கும் ஒரு பொதுவான சொல்: நம்பிக்கை!
---------------------------------------------------------------------------
மூன்றாம் பாடத்தின் முதல் பகுதி 6.4.2009 திங்களன்று வெளியாகும்
என் சொந்த மற்றும் வியாபார அலுவல்கள் காரணமாக தட்டச்ச
நேரமில்லை. அதனால் அப்பாடம் வெளியாவதில் இரண்டு நாட்கள்
தாமதம். மன்னிக்கவும்.

யாரையும் காக்க வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும்
சில நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. தாமதம் குறுக்கே
வந்து நின்று விடுகிறது.

எனக்குத் திருவோண நட்சத்திரம். அஷ்டமத்துச்சனி நடக்கிறது.
அதனால் என்னையும் மீறி இப்படி நடக்கிறது:-((((((

இல்லையென்றால் Honda City கார் போல என்னுடைய வேகமே தனி!:-))))

சனி எப்போதுமே நமது வேகத்திற்குத் தடையான கிரகம்தான்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

51 comments:

  1. வார இறுதி நாட்களில் எனக்கும் நேரம் இருப்பதில்லை. நல்ல வேளையாக பாடமும் இல்லை.

    ReplyDelete
  2. வாத்தியாரே..

    இதுல வருத்தப்பட ஏதுமில்லை.

    நீங்க எப்ப பாடம் சொல்லிக் கொடுக்குறீங்களோ.. அப்பத்தான் நாங்க படிக்கப் போறோம்..

    அது வாத்தியாரின் சாய்ஸ்தான்..

    ReplyDelete
  3. ஐயா,

    காத்திருப்பதில்தான் சுகமே...காத்திருக்கின்றோம்...

    வாழ்க வளமுடன்,:
    வேலன்.

    ReplyDelete
  4. Speed breakers are for our safety ... Sani also give trouble to us for our future well beings.

    Just 4 more months Sani will go to 9th place then we have lessons daily.Correct than sir?

    ReplyDelete
  5. வாத்தியாரே

    எளிதில் கிடைக்கும் எதுவும் அதிக காலம் நம்மிடம் தங்குவதில்லை, காத்திருந்து கிடைப்பது தான் நம்மிடம் வெகு காலம் இருக்கும், அது போலத்தான் இதுவும்.

    உங்கள் சொந்த அலுவல் அஷ்டம சனியால் தாமதம் அடையாமல் இருக்க ஆண்டவ்ர் அருள் புரிய பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  6. //எனக்குத் திருவோண நட்சத்திரம். அஷ்டமத்துச்சனி நடக்கிறது.
    அதனால் என்னையும் மீறி இப்படி நடக்கிறது:-((((((//


    :)

    ReplyDelete
  7. We are willing to wait for your lessons with thankful heart.

    ReplyDelete
  8. அய்யா,
    தாமதித்தால் தான் ஆவல் அதிகம் ஆகும்.... :)))

    ReplyDelete
  9. ஐயா... உங்களது பாடத்துக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

    என் ஜாதகத்தில் 3 ம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை.

    எனக்கு என்ன பலன்?

    ReplyDelete
  10. வாத்தியாருக்காக மாணவர்கள் ஆவலுடன் காத்திருப்பது இந்த வகுப்பறையின் தனி அம்ஸம். தனுர்லக்னனான (ராசியும் அதுவே) எனக்கு மூன்றில் ஆட்சியில் 4 பரல்களுடன் மந்தன். (நவாம்சத்தில் மிதுனத்தில்) ... இதுவரை சனி புக்திகளும் அஷ்டம சனியும் கூட ரொம்ப தொந்தரவு கொடுத்ததில்லை ...

    -ஆவலுடன் காத்திருக்கும்
    சீனு

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா

    மூன்றாம் இடம் பற்றிய பாடம் திங்கள் அன்று தொடங்க உள்ளது அதுவரை
    நாலாம் இடம் பற்றிய பாடங்களை revice செய்ய நிறைய உள்ளது

    ReplyDelete
  12. When you are willing to WRITE, we are always willing to WAIT

    ReplyDelete
  13. /////Blogger ananth said...
    வார இறுதி நாட்களில் எனக்கும் நேரம் இருப்பதில்லை. நல்ல வேளையாக பாடமும் இல்லை.//////

    இப்படியொரு சந்தோஷமா? வார இறுதி நாட்களில் விடுமுறை விட்டுவிடலாமா?

    ReplyDelete
  14. //////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    இதுல வருத்தப்பட ஏதுமில்லை.
    நீங்க எப்ப பாடம் சொல்லிக் கொடுக்குறீங்களோ.. அப்பத்தான் நாங்க படிக்கப் போறோம்..
    அது வாத்தியாரின் சாய்ஸ்தான்../////

    நீங்கள் சொன்னால் பழநியப்பனே சொன்னாற்போல! நன்றி ஊனா தானா!

    ReplyDelete
  15. ////////////Blogger வேலன். said...
    ஐயா,
    காத்திருப்பதில்தான் சுகமே...காத்திருக்கின்றோம்...
    வாழ்க வளமுடன்,:
    வேலன்.//////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  16. //////////////Blogger vijayan said...
    Speed breakers are for our safety ... Sani also give trouble to us for our future well beings.
    Just 4 more months Sani will go to 9th place then we have lessons daily.Correct than sir?//////////////

    you are correct my dear friend. Saturn changes his place on 26.9.2009

    ReplyDelete
  17. ///////////Blogger Slakshmanan said...
    வாத்தியாரே
    எளிதில் கிடைக்கும் எதுவும் அதிக காலம் நம்மிடம் தங்குவதில்லை, காத்திருந்து கிடைப்பது தான் நம்மிடம் வெகு காலம் இருக்கும், அது போலத்தான் இதுவும்.
    உங்கள் சொந்த அலுவல் அஷ்டம சனியால் தாமதம் அடையாமல் இருக்க ஆண்டவர் அருள் புரிய பிராத்திக்கிறேன்///////////

    உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  18. ////////////Blogger நாமக்கல் சிபி said...
    //எனக்குத் திருவோண நட்சத்திரம். அஷ்டமத்துச்சனி நடக்கிறது.
    அதனால் என்னையும் மீறி இப்படி நடக்கிறது:-((((((//
    :)//////////

    எதற்காக ஸ்மைலி என்று எனக்குத் தெரியும், திருவோணத்தாரே!

    ReplyDelete
  19. ////////Blogger krish said...
    We are willing to wait for your lessons with thankful heart./////////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  20. //////////Blogger VA P RAJAGOPAL said...
    அய்யா,
    தாமதித்தால் தான் ஆவல் அதிகம் ஆகும்.... :)))///////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ///////Blogger பரமார்த்த குரு said...
    ஐயா... உங்களது பாடத்துக்காக காத்து கொண்டிருக்கிறேன்.
    என் ஜாதகத்தில் 3 ம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை.
    எனக்கு என்ன பலன்?///////

    கிரகம் இல்லை என்பதற்காக விட்டுவிடமுடியுமா? அவர் எங்கே போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று பார்த்துவையுங்கள்!

    ReplyDelete
  22. //////Blogger Cheenu said...
    வாத்தியாருக்காக மாணவர்கள் ஆவலுடன் காத்திருப்பது இந்த வகுப்பறையின் தனி அம்ஸம். தனுர்லக்னனான (ராசியும் அதுவே) எனக்கு மூன்றில் ஆட்சியில் 4 பரல்களுடன் மந்தன். (நவாம்சத்தில் மிதுனத்தில்) ... இதுவரை சனி புக்திகளும் அஷ்டம சனியும் கூட ரொம்ப தொந்தரவு கொடுத்ததில்லை ...
    -ஆவலுடன் காத்திருக்கும்
    சீனு/////////////

    நன்றி சீனா!

    ReplyDelete
  23. ////////////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    மூன்றாம் இடம் பற்றிய பாடம் திங்கள் அன்று தொடங்க உள்ளது அதுவரை
    நாலாம் இடம் பற்றிய பாடங்களை revice செய்ய நிறைய உள்ளது///////

    ஆகா நீங்கள்தான் சிறந்த மாணவர். மீண்டும் மீண்டும் அவைகளைப் படித்து மனதில் ஏற்றுங்கள்!

    ReplyDelete
  24. //////////Blogger Ragu Sivanmalai said...
    When you are willing to WRITE, we are always willing to WAIT//////

    Your (students) willing is important than my willing. Our relationship is like that!

    ReplyDelete
  25. நல்ல கருத்து...படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது... அப்போ 6ஆம் வீடு தைரியத்துக்கு இல்லையா வாத்தியாரே?

    ReplyDelete
  26. //////இப்படியொரு சந்தோஷமா? வார இறுதி நாட்களில் விடுமுறை விட்டுவிடலாமா?///////

    நான் சரி என்று சொல்லலாம். ஆனால் உன் ஒருவனுக்காக எங்கள் பாடம் கெட வேண்டுமா என்று சக மாணவர்கள் கோபித்துக் கொள்வார்கள். எனக்கு எதற்கய்யா வீண் பொல்லாப்பு.

    ReplyDelete
  27. எனக்கு 3ல் குரு. நிறைய சகோதரர்களைக் கொடுத்த குரு, தைரியத்தை குறைத்துக் கொடுத்து விட்டார். தந்தையின் சகோதரரின் பிள்ளைகளையும் நாம் சகோதரர்கள் என்கிறோம். அவர்களுக்கும் இதே இடம்தானோ.

    ReplyDelete
  28. சகோதரர் மதி கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். ரணம், ரோகம், சத்ரு இவற்றிற்கு 6ம் இடம், இவற்றை எதிர் கொள்ள தைரியம் உள்ளதா, பக்கபலமாக சகோதரர்கள் இருப்பர்களா (தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்களெ அதுபோல்) என்பதற்கு 3ம் இடம். சரியா ஆசிரியரே.

    ReplyDelete
  29. 1. Honda city கார் வாங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே! சொல்லவே இல்லை? ஆமாம்.. எப்போ Treat?

    2. லீவு விட்டாலும் பரவாயில்லை, பழைய பதிவுகளை (பாடங்களை)படித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  30. //வாத்தியாரே..

    இதுல வருத்தப்பட ஏதுமில்லை.

    நீங்க எப்ப பாடம் சொல்லிக் கொடுக்குறீங்களோ.. அப்பத்தான் நாங்க படிக்கப் போறோம்..

    அது வாத்தியாரின் சாய்ஸ்தான்..//

    Repettu..

    GK,BLR

    ReplyDelete
  31. //Honda city கார் வாங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே! சொல்லவே இல்லை? ஆமாம்.. எப்போ Treat?//

    அது எங்களூர் காராக்கும் ... :-)(சிங்கப்பூர் Regd nr). வாத்தியாரும் ஹோண்டா சிடிதான் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன் (அவருடைய பதிவு சொல்கிறது). இருப்பினும், புத்தக வெளியீட்டுக்குப் பின் நிச்சயம் நம்முடைய Treat வாத்தியாருக்கு உண்டு.
    -அன்புடன்,
    சிங்கப்பூர் சீனு

    ReplyDelete
  32. Dear Sir

    Arumayana Karuthu Sir.. Thanks Sir.

    Neengal(Sir) thavikavidalam ,Nangal(Your Loving Student Arulkumar Rajaraman) Thavikalam.. Idhu Oru Sugam

    3rd ---> sakodhara isthanam, vetri isthanam, sakaya isthanam, Dhayiriya Isthanam

    6th Sathru Isthanam, Ranam, rogham Isthanam Mattumalla...."IDHU Sila Nerangalil Thozhil Isthanam"...

    I have one elder brother and one younger brother -happy brothers...

    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  33. Dear Sir

    Arumayana Karuthu Sir.. Thanks Sir.

    Neengal(Sir) thavikavidalam ,Nangal(Your Loving Student Arulkumar Rajaraman) Thavikalam.. Idhu Oru Sugam

    3rd ---> sakodhara isthanam, vetri isthanam, sakaya isthanam, Dhayiriya Isthanam

    6th Sathru Isthanam, Ranam, rogham Isthanam Mattumalla...."IDHU Sila Nerangalil Thozhil Isthanam"...

    I have one elder brother and one younger brother -happy brothers...

    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  34. பல மகர ராசி திருவோணத்தினர் இருக்கினம் போல. படிப்பதற்க்கும் அவர் தான் தடை போடுறார் .. :))) (நான் என்ன செய்ய) இதில் என்ன ஜயா இருக்கிறது .. நாங்கள் காத்திருப்போம் வரும்வரை :)

    ReplyDelete
  35. /////Blogger மதி said..
    நல்ல கருத்து...பாடத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது... அப்போ 6ஆம் வீடு தைரியத்துக்கு இல்லையா வாத்தியாரே?//////

    தைரியத்திற்கு உரிய இடம் 3ஆம் வீடுதான்!

    ReplyDelete
  36. /////Blogger ananth said...
    //////இப்படியொரு சந்தோஷமா? வார இறுதி நாட்களில் விடுமுறை விட்டுவிடலாமா?///////
    நான் சரி என்று சொல்லலாம். ஆனால் உன் ஒருவனுக்காக எங்கள் பாடம் கெட வேண்டுமா என்று சக மாணவர்கள் கோபித்துக் கொள்வார்கள். எனக்கு எதற்கய்யா வீண் பொல்லாப்பு.//////

    இப்படி எழுதினால்தானே, எத்தனை பேருக்கு அந்த எண்ணம் இருக்கிறது என்று தெரியும்!

    ReplyDelete
  37. ////Blogger ananth said...
    எனக்கு 3ல் குரு. நிறைய சகோதரர்களைக் கொடுத்த குரு, தைரியத்தை குறைத்துக் கொடுத்து விட்டார். தந்தையின் சகோதரரின் பிள்ளைகளையும் நாம் சகோதரர்கள் என்கிறோம். அவர்களுக்கும் இதே இடம்தானோ.//////

    நம் சகோதரர்களுக்கு மட்டும்தான் இந்த இடம். அவர்கள் எல்லாம் உறவுக் கணக்கில் வருவார்கள். Father side relations.

    ReplyDelete
  38. Blogger ananth said...
    சகோதரர் மதி கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். ரணம், ரோகம், சத்ரு இவற்றிற்கு 6ம் இடம், இவற்றை எதிர் கொள்ள தைரியம் உள்ளதா, பக்கபலமாக சகோதரர்கள் இருப்பர்களா (தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்களே அதுபோல்) என்பதற்கு 3ம் இடம். சரியா ஆசிரியரே.

    சரிதான்! அதுமட்டுமல்ல வாழ்க்கையின் சவால்களை ஏற்றுக் கொள்ளும் துணிவிற்கும் இதுதான் இடம்!

    ReplyDelete
  39. //////Blogger மெனக்கெட்டு said...
    1. Honda city கார் வாங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே! சொல்லவே இல்லை? ஆமாம்.. எப்போ Treat?
    2. லீவு விட்டாலும் பரவாயில்லை, பழைய பதிவுகளை (பாடங்களை)படித்துக்கொள்கிறோம்.///////


    முதலில் ஒருவரை ஒருவர் சந்தித்துப்பேசுவோம். Treat எங்கே போய்விடப்போகிறது?

    ReplyDelete
  40. /////Blogger Geekay said...
    //வாத்தியாரே..
    இதுல வருத்தப்பட ஏதுமில்லை.
    நீங்க எப்ப பாடம் சொல்லிக் கொடுக்குறீங்களோ.. அப்பத்தான் நாங்க படிக்கப் போறோம்.
    அது வாத்தியாரின் சாய்ஸ்தான்..//
    Repettu..
    GK,BLR/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  41. //////Blogger Cheenu said...
    //Honda city கார் வாங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே! சொல்லவே இல்லை? ஆமாம்.. எப்போ Treat?//
    அது எங்களூர் காராக்கும் ... :-)(சிங்கப்பூர் Regd nr). வாத்தியாரும் ஹோண்டா சிடிதான் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன் (அவருடைய பதிவு சொல்கிறது). இருப்பினும், புத்தக வெளியீட்டுக்குப் பின் நிச்சயம் நம்முடைய Treat வாத்தியாருக்கு உண்டு.
    -அன்புடன்,
    சிங்கப்பூர் சீனு/////

    முதலில் ஒருவரை ஒருவர் சந்தித்துப்பேசுவோம் சீனு. ஜோதிட நூல்கள் வெளியீட்டின்போது அதை வைத்துக் கொள்வோம்!

    ReplyDelete
  42. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumayana Karuthu Sir.. Thanks Sir.
    Neengal(Sir) thavikavidalam ,Nangal(Your Loving Student Arulkumar Rajaraman) Thavikalam.. Idhu Oru Sugam
    3rd ---> sakodhara isthanam, vetri isthanam, sakaya isthanam, Dhayiriya Isthanam
    6th Sathru Isthanam, Ranam, rogham Isthanam Mattumalla...."IDHU Sila Nerangalil Thozhil Isthanam"...
    I have one elder brother and one younger brother -happy brothers...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ராஜாராமன்.

    ReplyDelete
  43. /////Blogger Emmanuel Arul Gobinath said...
    பல மகர ராசி திருவோணத்தினர் இருக்கினம் போல. படிப்பதற்க்கும் அவர் தான் தடை போடுறார் .. :))) (நான் என்ன செய்ய) இதில் என்ன ஜயா இருக்கிறது .. நாங்கள் காத்திருப்போம் வரும்வரை :)///////

    நன்றி கோபிநாத்!

    ReplyDelete
  44. sir two of my frens are also makara thiruvonam. one is geeting married the other has met with an accident and has been advised to have an operation. ligament tear. should he wait till 8th sani gets over ?


    also thanx for ur previous tip.sir, whats ur opinion on k.p stellar astro ? could you xplain it briefly ? ur doing gr8 work sir. you must have a lotta of patience and time on your hands to do all that yu have been doin.

    ReplyDelete
  45. sir kumbalagnam magara rasi thiruvonam star irunthal ashtamasani pathipu kuraivaga irukkuma sani in 11 place

    ReplyDelete
  46. ////Blogger mike said...
    sir two of my frens are also makara thiruvonam. one is geeting married the other has met with an accident and has been advised to have an operation. ligament tear. should he wait till 8th sani gets over?//////

    திருமணத்திற்கு உரிய திசை புத்தி நடக்கும்போது திருமணத்தை அது நடத்திவிடும். ஆகவே இறைச் செயல் என்று விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களைக் குழப்பி விடாதீர்கள். பாவம்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///also thanx for ur previous tip.sir, whats ur opinion on k.p stellar astro ? could you xplain it briefly ? ur doing gr8 work sir. you must have a lotta of patience and time on your hands to do all that yu have been doin.//////

    கே.பி சிஸ்டத்தைப் பற்றிய அனுபவம் எனக்கு இல்லை. நான் பி.வி.ராமன் அவர்களின் மாணவன். அவர் காட்டிய வழியில் ஜோதிடத்தைக் கற்றவன்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  47. //////Blogger uma said...
    sir kumbalagnam magara rasi thiruvonam star irunthal ashtamasani pathipu kuraivaga irukkuma sani in 11 place///////

    நீங்கள் சொல்லும் அன்பருக்குத் தற்போது சனி இருக்கும் சிம்ம வீட்டில் 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சனியின் பாதிப்பு இருக்காது. இல்லையென்றால் இருக்கும். 26.9.2009 அன்று சனி இடம் மாறும் போது அஷ்டமத்துச் சனி முடிவிற்கு வந்துவிடும்!

    ReplyDelete
  48. வாத்தியாரையா,

    மூன்றாம் இடம் தைரியம் மற்றும் இளைய சகோதரத்துக்கான இடம். இந்த பாடத்துக்காக வெயிட்டிங். இந்த பாடத்துக்கு அவசியம் பரிகாரத்தையும் சேர்த்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  49. ////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    மூன்றாம் இடம் தைரியம் மற்றும் இளைய சகோதரத்துக்கான இடம். இந்த பாடத்துக்காக வெயிட்டிங். இந்த பாடத்துக்கு அவசியம் பரிகாரத்தையும் சேர்த்து சொல்லுங்கள்.////

    பரிகாரம் எப்போதும் பிரார்த்தனை ஒன்றுதான்!

    ReplyDelete
  50. Hello sir,with ur permission i am also joining ur class today.Already i read ur all notes.Ur way of teaching superb.I want to continue with ur class.I want to thank for ur work.

    ReplyDelete
  51. /////Blogger dhanan said...
    Hello sir,with ur permission i am also joining ur class today.Already i read ur all notes.Ur way of teaching superb.I want to continue with ur class.I want to thank for ur work.////

    வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும். முதலில் பழைய பாடங்களையெல்லாம் படியுங்கள்! அப்போதுதான் இப்போது எழுதுவது பிடிபடும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com