புலிகளை ஆதரித்து பேசினால் 'களி!' : முதல்வர் கருணாநிதி கடும் எச்சரிக்கை'
என்கின்ற தலைப்பில் மதிப்பிற்குரிய நமது முதல்வர் டாக்டர் கலைஞர் மு,க
அவர்களின் உரையில் என்னைக் கவர்ந்த பகுதியை சிவப்பு எழுத்தில் சுட்டிக்
காட்டியுள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
விடுதலைப் புலிகளை தி.மு.க., ஆதரிக்கிறதா?
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு தான் தி.மு.க.,வின் குறிக்கோள். இந்தியாவில்
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரை, தி.மு.க., ஆதரிக்கவில்லை.
அவ்வாறு ஆதரித்துப் பேசினாலும், செயல்பட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்க தி.மு.க., ஆட்சி தயக்கம் காட்டாது. இந்த எச்சரிக்கை
எல்லாருக்கும் பொருந்தும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டம் பாய்வது உறுதி: "இந்த எச்சரிக்கை எல்லாருக்கும் பொருந்தும்'
என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது ராமதாஸ், திருமாவளவன், இதுவரை
கி.வீரமணி என இருந்த தன் பெயரை "நியூமராலஜி' அடிப்படையில் மீ.கி.வீரமணி
என மாற்றிக் கொண்டுள்ள தி.க. தலைவர் வீரமணி உட்பட அனைவருக்கும்
பொருந்தும். எனவே, இன்றைய கூட்டத்தில் விடுதலைப் புலிகளை யார் ஆதரித்துப்
பேசினாலும் அவர்கள் மீது சட்டம் பாய்வது உறுதி.
முழுச் செய்தியையும் படிக்க சுட்டி இங்கே உள்ளது!
நன்றி தினமலர்! 26.12.2008 இதழ்!
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
26.12.08
வீரமானவருக்குக் கடவுள் வேண்டாம். எண் கணிதம் மட்டும் வேண்டுமா?
Subscribe to:
Post Comments (Atom)
//அறிவிப்பு!
ReplyDeleteஇந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!//
வாழ்த்துகள் ஆசிரியர் ஐயா. புத்தகமாக வந்ததும் வாங்கிப் படிக்க ஆவல்.
புத்தகத்தில் இடுகைகளுடன் பின்னூட்டங்கள் வருமா வராதா ஐயா ?
தாயார் பெயரையும் இனிஷியலில் சேர்க்க வேண்டுமென்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதன்படியே தன் பெயரை மாற்றியிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
ReplyDeleteஐயா
ReplyDeleteஎனக்கு மகர லக்னம். மாரக அதிபதி செவ்வாய் என்று கூறி உள்ளீர்கள் .எனக்கு 7-ல் செவ்வாயும் சனியும் (கடகத்தில்) . இதன் பலன் என்ன? மாரக அதிபதி என்றால்?என்ன செய்யும் ? மேலும் குரு 4-ல் கேதுவுடன்...........
அய்யா இந்த தினமலர் எப்போது பார்த்தாலும் பொய் செய்திகளையே வெளியிடுகிறது...
ReplyDeleteதிரு வீரமணி அவர்கள் தனது தாயார் பெயரை முன்னெழுத்தில் சேர்த்துள்ளார் என்று நினைக்கிறேன்...
ஒருமுறை உறுதிசெய்யவும்....
ஹாஹாஹாஹாஹா
ReplyDeleteமன்னிக்கவும். முதலில் கருணாநிதி என்ன சொன்னார் என்பதை மீண்டும் ஒரு முறை படிக்கவும். தமிழ் உங்களுக்கு சரியாக படிக்க வரும் என்று நம்புகின்றேன்.
ReplyDeleteகருணாநிதி சொன்னது "இந்த எச்சரிக்கை எல்லாருக்கும் பொருந்தும்" என்பது மட்டும்தான். மற்றது எல்லாம் (மீ.கி. ராமதாஸ், பாரதிராஜா) என்பது எல்லாம் தினமலத்தின் சேர்க்கை. தினமலத்தின் செய்தியை
நம்பி இப்படி ஒரு பதிவா?
திரு.செந்தழல் ரவி சொன்னதை வழிமொழிகின்றேன்.
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
//தாயார் பெயரையும் இனிஷியலில் சேர்க்க வேண்டுமென்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதன்படியே தன் பெயரை மாற்றியிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
ReplyDelete//
ஆமாம், பொய் மூட்டை தினமலர் புத்தியை காண்பிக்கிறது, சுப்பையா அய்யாவாவது கொஞ்சம் யோசித்து போட்டிருக்கலாம், சிக்குனான்யா நல்ல வாய்ப்பு கிடைச்சதுன்னு நினைச்சாரோ என்னமோ...
http://files.periyar.org.in/TheModernRationalist/200810mr/page11.html
.
ReplyDeleteதாயார் பெயரையும் இனிஷியலில் சேர்க்க வேண்டுமென்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதன்படியே தன் பெயரை மாற்றியிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.//
இதுதான் உண்மை.... எதிலுமே நஞ்சைக் கக்கும் தின மலம் இதிலும் கக்கியிருக்கிறது. அதுவே உண்மை.
9
ReplyDeleteஇனியாவது தினமலம் போன்ற பொய்ப்பத்திரிக்கைகளின் விளையாட்டை உணர்ந்து கொண்டு திரு. சுப்பையா போன்ற பெரிய மனிதர்கள் தமது மாணாக்கர்களுக்கும் இந்த வகுப்பறையில் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ReplyDeleteதின மலத்தை படித்தால் இப்படித்தான் நாற வேண்டும்.. சுப்பையா அவர்களே.. சரியாக படித்துவிட்டோ அல்லது புரிந்துக்கொண்டோ இந்த பதிவை இட்டிருக்கலாம்..
ReplyDeleteவீரமனி நாத்திகர் என்பதால் சுப்பையா அண்ணன் அவர்கள்.. இந்த செய்தி பார்த்தவுடன் சந்தோஷத்தில் துள்ளி குதித்து இந்த பதிவை போட்டுவிட்டாரா , கொஞ்சம் கூட ஆராயாமல்.. இந்த வகுப்பற மாணவர்கள் பாவம்..
ReplyDelete"திருட்டு மலம்" தினமலருக்கு அரிப்பு தெரிந்தது.. அதை விட துள்ளி குதித்து பதிவு போட்டு.. அட போங்கப்பா..
Saluting mom, DK leader adds initial
ReplyDeleteDravidar Kazhagam president K. Veeramani will soon be called M.K. Veeramani, or Mee. Ki. Veeramani in Tamil.
Don’t jump to any conclusion that the die-hard atheist is suddenly turning to numerology or some pseudo-science. For him, it is for a progressive cause.
Veeramani declared on Saturday, 6th September at the end of the DK’s women’s wing conference, which called for legislation to mandate the use of one’s mother’s name ahead of the father’s name as one’s initials, that he would be the first one to follow it.
“I will notify the addition in my initials soon. In my name, I will have my mother Meenakshi’s name first, and then my father Krishnasamy’s” the 75-year-old Veeramani said.
The conference also called for an amendment in the Protection of Women from Domestic Violence Act to ensure that women enjoy the sole right to give birth to a child. It stressed that the woman should have complete autonomy over her body.
முழு விவரம் சுட்டி இங்கே!
posted on October 2008
http://files.periyar.org.in/TheModernRationalist/200810mr/page11.html
தகவல்: நன்றி - பதிவர் குழலி!
இதுதான் அய்யா என்பது...!!!
ReplyDeleteதகவலுக்கு நன்றி !!!!
அய்யாவுக்கு தகவல் தந்த குழலிக்கும் நன்றி....
ReplyDelete/////Blogger பாலராஜன்கீதா said...
ReplyDelete//அறிவிப்பு!
இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!//
வாழ்த்துகள் ஆசிரியர் ஐயா. புத்தகமாக வந்ததும் வாங்கிப் படிக்க ஆவல்.
புத்தகத்தில் இடுகைகளுடன் பின்னூட்டங்கள் வருமா வராதா ஐயா ?//////
அதை இன்னும் முடிவு செய்யவில்லை நண்பரே!
////Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ReplyDeleteதாயார் பெயரையும் இனிஷியலில் சேர்க்க வேண்டுமென்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதன்படியே தன் பெயரை மாற்றியிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.//////
நீங்கள் சொல்வது உண்மைதான் சுந்தர். பதிவர் குழலி அவர்கள் தகவலுடன் சுட்டியையும் கொடுத்திருந்தார். அதை அப்படியே மேலே கொடுத்துள்ளேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி உரித்தாகுக!
///////Blogger செந்தழல் ரவி said...
ReplyDeleteஅய்யா இந்த தினமலர் எப்போது பார்த்தாலும் பொய் செய்திகளையே வெளியிடுகிறது.
திரு வீரமணி அவர்கள் தனது தாயார் பெயரை முன்னெழுத்தில் சேர்த்துள்ளார் என்று நினைக்கிறேன்...
ஒருமுறை உறுதிசெய்யவும்....//////
ஒரு பெரிய பத்திரிக்கை - அதுவும் முதல்வரின் அறிக்கையை செய்தியாக வெளியிடும்போது - எப்படி தங்கள்
சொந்தக் கருத்துக்களையும் சேர்த்து வெளியிடுகிறார்கள்?
புரியாத புதிராக இருக்கிறது தழலாரே!
/////Blogger A N A N T H E N said...
ReplyDeleteஹாஹாஹாஹாஹா///////
எதற்காக இந்த ஹாஹா?
சாதாரண செய்திதானே?
/////Blogger அருண்மொழி said...
ReplyDeleteமன்னிக்கவும். முதலில் கருணாநிதி என்ன சொன்னார் என்பதை மீண்டும் ஒரு முறை படிக்கவும். தமிழ் உங்களுக்கு சரியாக படிக்க வரும் என்று நம்புகின்றேன்.
கருணாநிதி சொன்னது "இந்த எச்சரிக்கை எல்லாருக்கும் பொருந்தும்" என்பது மட்டும்தான். மற்றது எல்லாம் (மீ.கி. ராமதாஸ், பாரதிராஜா) என்பது எல்லாம் தினமலத்தின் சேர்க்கை. தினமலத்தின் செய்தியை
நம்பி இப்படி ஒரு பதிவா?/////
எனக்கு ஓரளவு தமிழ் படிக்க வரும். தினமலரின் சேர்க்கைகளை அதன் வாசகன் எப்படிப் பிரித்து அறிவான் நண்பரே?
Blogger வேலன். said...
ReplyDeleteதிரு.செந்தழல் ரவி சொன்னதை வழிமொழிகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.////
உங்கள் வழிமொழிதலுக்கு நன்றி நண்பரே!
Blogger குழலி / Kuzhali said...
ReplyDelete//தாயார் பெயரையும் இனிஷியலில் சேர்க்க வேண்டுமென்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதன்படியே தன் பெயரை மாற்றியிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
//
ஆமாம், பொய் மூட்டை தினமலர் புத்தியை காண்பிக்கிறது, சுப்பையா அய்யாவாவது கொஞ்சம் யோசித்து போட்டிருக்கலாம், சிக்குனான்யா நல்ல வாய்ப்பு கிடைச்சதுன்னு நினைச்சாரோ என்னமோ...
http://files.periyar.org.in/TheModernRationalist/200810mr/page11.html/////////
உங்களுடைய தகவலிற்கு நன்றி குழலி!
என் வயதிற்கு நான் வாய்ப்புக்களைத் தேடுவதில்லை:-))))))
இது தற்செயலாகப் பதிவிட்டது.
நானும் பதிவை வலையில் ஏற்றுமுன்பு விக்கிபீடியாவில் வீரமணி அவர்களின் ப்ரொஃபைலைப் பார்த்தேன். கிருஷ்ணசாமி வீரமணி என்று குறிப்பிடப்பதிருந்ததே தவிர அதில் இன்ஷியலுக்கான வேறு தகவல்கள் இல்லை
/////Blogger மதிபாலா said...
ReplyDeleteதாயார் பெயரையும் இனிஷியலில் சேர்க்க வேண்டுமென்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதன்படியே தன் பெயரை மாற்றியிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.//
இதுதான் உண்மை.... எதிலுமே நஞ்சைக் கக்கும் தின மலம் இதிலும் கக்கியிருக்கிறது. அதுவே உண்மை.///////
தகவலுக்கு நன்றி மதிபாலா!
//////Blogger மதிபாலா said...
ReplyDeleteஇனியாவது தினமலம் போன்ற பொய்ப்பத்திரிக்கைகளின் விளையாட்டை உணர்ந்து கொண்டு திரு. சுப்பையா போன்ற பெரிய மனிதர்கள் தமது மாணாக்கர்களுக்கும் இந்த வகுப்பறையில் சொல்லிக்கொடுக்க வேண்டும்./////
தங்கள் அறிவுரைக்கு நன்றி!
/////Blogger வாக்காளன் said...
ReplyDeleteதின மலத்தை படித்தால் இப்படித்தான் நாற வேண்டும்.. சுப்பையா அவர்களே.. சரியாக படித்துவிட்டோ அல்லது புரிந்துக்கொண்டோ இந்த பதிவை இட்டிருக்கலாம்../////
பதிவை இட்டதால் புரிந்து கொள்ள முடிந்தது.
///////Blogger muthu said...
ReplyDeleteவீரமனி நாத்திகர் என்பதால் சுப்பையா அண்ணன் அவர்கள்.. இந்த செய்தி பார்த்தவுடன் சந்தோஷத்தில் துள்ளி குதித்து இந்த பதிவை போட்டுவிட்டாரா , கொஞ்சம் கூட ஆராயாமல்.. இந்த வகுப்பற மாணவர்கள் பாவம்..
"திருட்டு மலம்" தினமலருக்கு அரிப்பு தெரிந்தது.. அதை விட துள்ளி குதித்து பதிவு போட்டு.. அட போங்கப்பா..///////
நானும் நாத்திகனாக இருந்தவன்தான் நண்பரே!
துள்ளிக் குதிக்கும் வயதை எல்லாம் நான் தாண்டிவிட்டேன்
செய்தி வித்தியாசமாக இருந்ததால் வியப்புற்றேன். அவ்வளவுதான்!
என்னுடைய வகுப்பரை மாணவர்களின் மேல் உள்ள உங்களுடைய அனுதாபத்திற்கு நன்றி!
இது போன்ற பொய் புரட்டுகளை வெளியிடும் ஊடகங்களை சம்பந்தப் பட்ட முதல்வர் ஐயாவும், கி.வீரமணி ஐயாவும் சட்டரீதியாக தண்டிக்கலாமே? எழுத்துச் சுதந்திரத்தை நாறடிப்பவர்களை நீதி மன்றத்திற்கு இழுத்து நாறடிக்க வேண்டும்.
ReplyDeleteஇது நடக்காத பட்சத்தில் சுப்பையா சாரை கரிந்து கொட்டுவதில் எந்த புண்ணியமும் இல்லை.
வீரமணியின் நாத்திகத்திற்கும், எண் கணிதத்திற்கும் என்ன சம்பந்தம்? நாத்திகராயிருப்பவர் தான் நலமாக இருக்க்வேண்டும் என நினைப்பது தவறா/
ReplyDelete***புலிகளை ஆதரித்து பேசினால் "களி"****
ReplyDeleteஆசானே ! களி என்பதற்கு மகிழ்ச்சி என்றும் ஒரு பொருள் உள்ளதல்லவா?! அப்படியானால் இவ் வாக்கியத்தின் பொருள்!!!!
உள்ளேன் ஐயா..
ReplyDeleteதினமலர் நிறுவனர் டி.வி.சுப்பராமைய்யருக்கு தபால் தலை வெளியிட்டிருப்பவர்கள் அவர்கள் மீது நவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்!
ReplyDeletehttp://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2579&cls=row3
READ
ReplyDeleteஅட, துப்புக்கெட்ட தினமலரே! கி.வீரமணி அவர்கள் "மீ.கி.வீரமணி" ஆகியது
http://idhuthanunmai.blogspot.com/2008/12/blog-post_26.html
SUBBIAH YOU ARE OUT.
YOU AND YOUR NUMEROLOGY
NEXT TIME THINK BEFORE YOUR POSTING.
//////Blogger ஜோதிபாரதி said...
ReplyDeleteஇது போன்ற பொய் புரட்டுகளை வெளியிடும் ஊடகங்களை சம்பந்தப் பட்ட முதல்வர் ஐயாவும், கி.வீரமணி ஐயாவும் சட்டரீதியாக தண்டிக்கலாமே? எழுத்துச் சுதந்திரத்தை நாறடிப்பவர்களை நீதி மன்றத்திற்கு இழுத்து நாறடிக்க வேண்டும்.
இது நடக்காத பட்சத்தில் சுப்பையா சாரை கரிந்து கொட்டுவதில் எந்த புண்ணியமும் இல்லை.////////
பதிவு என்றால் சிலசமயம் தவறு ஏற்படலாம். அதை சக பதிவுலக நண்பர்கள் சுட்டிக்காட்டுவார்கள். நாம் ஏற்றுக் கொள்வோம்,
அத்தோடு முடிந்து விட்டது. அரசிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் நாம் சொல்வது எடுபடாது. டேக் இட் ஈஸி என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான்!
////Blogger pvina said...
ReplyDeleteவீரமணியின் நாத்திகத்திற்கும், எண் கணிதத்திற்கும் என்ன சம்பந்தம்? நாத்திகராயிருப்பவர் தான் நலமாக இருக்க்வேண்டும் என நினைப்பது தவறா/////
அதெல்லாம் முடிந்து விட்டது நண்பரே! நீங்கள் புதிதாக எதையாவது கிண்டிக்கொண்டிருக்காதீர்கள்!
///Blogger அணுயோகி said...
ReplyDelete***புலிகளை ஆதரித்து பேசினால் "களி"****
ஆசானே ! களி என்பதற்கு மகிழ்ச்சி என்றும் ஒரு பொருள் உள்ளதல்லவா?! அப்படியானால் இவ் வாக்கியத்தின் பொருள்!!!!/////
சிறையில் கொடுக்கப்படும் களி என்கின்ற பொருளில்தான் மதிப்பிற்குரிய முதல்வர் கூறியிருக்கிறார்
/////Blogger வண்ணத்துபூச்சியார் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..///
நன்றி நண்பரே!
Blogger ஜோதிபாரதி said...
ReplyDeleteதினமலர் நிறுவனர் டி.வி.சுப்பராமைய்யருக்கு தபால் தலை வெளியிட்டிருப்பவர்கள் அவர்கள் மீது நவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்!
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2579&cls=row3///////
நிறுவனருக்கும் இன்றைய செய்திகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
////Blogger RAJ said...
ReplyDeleteREAD
அட, துப்புக்கெட்ட தினமலரே! கி.வீரமணி அவர்கள் "மீ.கி.வீரமணி" ஆகியது
http://idhuthanunmai.blogspot.com/2008/12/blog-post_26.html
SUBBIAH YOU ARE OUT.////
நான் பெவிலியனுக்குத் திரும்பி வெகு நேரம் ஆகிவிட்டது!:-)))))
சுப்பையா செய்தியை கொடுக்கும் போது நம்பத்தன்மையுடன் கொடுக்க வேண்டும். தினமலரின் பார்ப்பனப்புத்தியை அறிந்தும் இப்படி செய்தி கொடுத்து உங்கள் மதிப்பை இழக்கலாமா?
ReplyDelete"தினமலர் ஏடு வீரமணி அவர்களைப்பற்றி எழுதிய விஷமச் செய்தி இதோ:
"இதுவரை கி.வீரமணி என இருந்த தன் பெயரை "நியூமராலஜி' அடிப்படையில் மீ.கி.வீரமணி என மாற்றிக் கொண்டுள்ள தி.க. தலைவர் வீரமணி"
இது குறித்து 26-12-2008 "விடுதலை" இதழ் எழுதியது இதோ:
"
அட, துப்புக்கெட்ட தினமலரே!
"தினமலர்" (26.12.2008) என்ற பார்ப்பன நஞ்சு கக்கும் ஏடு வழக்கம்போல தனது துப்புக்கெட்ட தனத்தை அரங்கேற்றி யுள்ளது.
சென்னை - பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி - திராவிடர் கழக மகளிரணி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் குழந்தைகளின் பெயர்களுக்குமுன் முன்னெழுத்து (Initial) தந்தையார் பெயரோடு, அம்மாவின் பெயரின் முன்னெழுத்தும் குறிக்கப்படவேண்டும் என்ற பெண்ணுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் - அதற்கு நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி, தமது தாயார் பெயரான மீனாட்சி அம்மையார் என்னும் பெயரில் உள்ள முதல் எழுத்தை யும், ஏற்கெனவே உள்ள "கி"யுடன் இணைத்து "மீ.கி. வீரமணி" என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
அந்த நேரத்திலேயே ஒரு விளக்கத்தையும் தெரிவித்தார். விஷமிகள் இது ஏதோ எண் சாஸ்திரம் (Numerology) என்று விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எச்சரித்திருந்தார்.
"தினமலர்" போன்ற பார்ப்பன நச்சரவங்கள் தனது உச்சிக் குடுமித் தனத்தைச் செய்யும் என்று தந்தை பெரியாரின் சீடரான அவருக்குத் தெரியாதா?
அவர் எதிர்பார்த்தபடியே பார்ப்பன விஷப்பாம்பு தனது பாஞ்சாலி வேலையைச் செய்திருக்கிறது.
பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடிக்கும் தமிழர் தலை வரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற கொழுப்பு "தினமலர்" கூட்டத்தின் தலையில் ஏறியிருப்பதாகத் தெரிகிறது.
நல்ல மாட்டுக்கு ஒரு "சூடு!" இன்னும் எத்தனைச் சூடு களைத்தான் தமிழர்கள் கொடுப்பார்களோ தெரியவில்லை."
நன்றி.
தினமலர் எப்போதுமே ஈழ விடுதலைக்கும் திராவிட இயக்கங்களுக்கும் எதிரானது. வழக்கம் போல பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளது.
ReplyDeleteஅணுயோகியின் புத்தி கூர்மையை கண்டு வியந்தேன்...
ReplyDeleteBlogger தமிழ் ஓவியா said...
ReplyDeleteசுப்பையா செய்தியை கொடுக்கும் போது நம்பத்தன்மையுடன் கொடுக்க வேண்டும். தினமலரின் பார்ப்பனப்புத்தியை அறிந்தும் இப்படி செய்தி கொடுத்து உங்கள் மதிப்பை இழக்கலாமா?
"தினமலர் ஏடு வீரமணி அவர்களைப்பற்றி எழுதிய விஷமச் செய்தி இதோ:
"இதுவரை கி.வீரமணி என இருந்த தன் பெயரை "நியூமராலஜி' அடிப்படையில் மீ.கி.வீரமணி என மாற்றிக் கொண்டுள்ள தி.க. தலைவர் வீரமணி"
இது குறித்து 26-12-2008 "விடுதலை" இதழ் எழுதியது இதோ:"
அட, துப்புக்கெட்ட தினமலரே!
"தினமலர்" (26.12.2008) என்ற பார்ப்பன நஞ்சு கக்கும் ஏடு வழக்கம்போல தனது துப்புக்கெட்ட தனத்தை அரங்கேற்றி யுள்ளது.
சென்னை - பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி - திராவிடர் கழக மகளிரணி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் குழந்தைகளின் பெயர்களுக்குமுன் முன்னெழுத்து (Initial) தந்தையார் பெயரோடு, அம்மாவின் பெயரின் முன்னெழுத்தும் குறிக்கப்படவேண்டும் என்ற பெண்ணுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் - அதற்கு நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி, தமது தாயார் பெயரான மீனாட்சி அம்மையார் என்னும் பெயரில் உள்ள முதல் எழுத்தையும், ஏற்கெனவே உள்ள "கி"யுடன் இணைத்து "மீ.கி. வீரமணி" என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
அந்த நேரத்திலேயே ஒரு விளக்கத்தையும் தெரிவித்தார். விஷமிகள் இது ஏதோ எண் சாஸ்திரம் (Numerology) என்று விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எச்சரித்திருந்தார்.
"தினமலர்" போன்ற பார்ப்பன நச்சரவங்கள் தனது உச்சிக் குடுமித் தனத்தைச் செய்யும் என்று தந்தை பெரியாரின் சீடரான அவருக்குத் தெரியாதா?
அவர் எதிர்பார்த்தபடியே பார்ப்பன விஷப்பாம்பு தனது பாஞ்சாலி வேலையைச் செய்திருக்கிறது.
பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடிக்கும் தமிழர் தலை வரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற கொழுப்பு "தினமலர்" கூட்டத்தின் தலையில் ஏறியிருப்பதாகத் தெரிகிறது.
நல்ல மாட்டுக்கு ஒரு "சூடு!" இன்னும் எத்தனைச் சூடு களைத்தான் தமிழர்கள் கொடுப்பார்களோ தெரியவில்லை."
நன்றி.
தகவலுக்கு நன்றி நண்பரே!
/////Blogger Manivannan said...
ReplyDeleteதினமலர் எப்போதுமே ஈழ விடுதலைக்கும் திராவிட இயக்கங்களுக்கும் எதிரானது. வழக்கம் போல பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளது.////
மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!
///Blogger செந்தழல் ரவி said...
ReplyDeleteஅணுயோகியின் புத்தி கூர்மையை கண்டு வியந்தேன்...//////
ஆமாம் சொல் விளையாட்டில் இறங்கினார். நானும் அதைக் கவனித்தேன் செந்தழலாரே!
அன்பு உடன் பிறப்பே,
ReplyDeleteநம்மை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த அருமை அண்ணா, படித்த திராவிடப் பள்ளியின் காவலராய்,கண்ணியத்துடன் திராவிடம் சாதிக்கும் செம்மல் அண்ணன் கி.வீரமணி,பெற்ற தாயை வாழ்த்த வேண்டும் என முடிவெடுத்து தாய் மீனாட்சி அம்மாளின் பேரினை இன்ஷியலாய்,சேர்த்து மீ,கி.வீரமணி என மாற்றியுள்ள செய்தியை,வழக்கம் போல் தினமலர் செய்தியை திரித்து எழுதியுள்ளதை,கண்ணுற்றதும்,நமது அன்பு உடன்பிறப்பு பதிவர்கள்,புயலென
புறப்பட்டு,போர்ப் பரணி பாடி புது வரலாறு படைத்ததை, பார்த்து ,நம் வீரத் தமிழினம் காக்கும் தமிழன்னை மகிழ்வு கொண்டதை ,கேட்டு
மீண்டும்
கண்கள் பணித்தன
நெஞ்சம் இனித்தன
இதே உத் வேகத்துடன் சுழன்று பணியாற்றும் நம் உயிரான கழகத் தொண்டர்கள்,திருமங்கலத் தேர்தல் வெற்றியை ,வரலாறாக்குவார்கள்.
வாழ்க தமிழினம்
வெல்க ஒற்றுமை
40 ம் நமக்கே
234 ம் நம்மோடு இருப்பவர்க்கே
//சிறையில் கொடுக்கப்படும் களி என்கின்ற பொருளில்தான் மதிப்பிற்குரிய முதல்வர் கூறியிருக்கிறார்//
ReplyDeleteகளி என்ற வார்த்தையை முதல்வர் கலைஞர் நிச்சயம் பயன்படுத்த மாட்டார். தினமலரின் சில்லறைத்தனமான திரிப்பு தான் அந்தத்தலைப்பு.
கலைஞரின் கருத்தல்ல! தாய்மைக்கு அங்கீகாரம் சேர்க்கும் செயலை சிறுமைப் படுத்தும்.தினமலரின் கருத்து.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்.
/////Blogger vallarasu said...
ReplyDeleteஅன்பு உடன் பிறப்பே,
நம்மை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த அருமை அண்ணா, படித்த திராவிடப் பள்ளியின் காவலராய்,கண்ணியத்துடன் திராவிடம் சாதிக்கும் செம்மல் அண்ணன் கி.வீரமணி,பெற்ற தாயை வாழ்த்த வேண்டும் என முடிவெடுத்து தாய் மீனாட்சி அம்மாளின் பேரினை இன்ஷியலாய்,சேர்த்து மீ,கி.வீரமணி என மாற்றியுள்ள செய்தியை,வழக்கம் போல் தினமலர் செய்தியை திரித்து எழுதியுள்ளதை,கண்ணுற்றதும்,நமது அன்பு உடன்பிறப்பு பதிவர்கள்,புயலென
புறப்பட்டு,போர்ப் பரணி பாடி புது வரலாறு படைத்ததை, பார்த்து ,நம் வீரத் தமிழினம் காக்கும் தமிழன்னை மகிழ்வு கொண்டதை ,கேட்டு
மீண்டும்
கண்கள் பணித்தன
நெஞ்சம் இனித்தன
இதே உத் வேகத்துடன் சுழன்று பணியாற்றும் நம் உயிரான கழகத் தொண்டர்கள்,திருமங்கலத் தேர்தல் வெற்றியை ,வரலாறாக்குவார்கள்.
வாழ்க தமிழினம்
வெல்க ஒற்றுமை
40 ம் நமக்கே
234 ம் நம்மோடு இருப்பவர்க்கே//////////
ஆகா, அப்படியே ஆகட்டும்! உங்கள் எண்ணம் ஈடேறட்டும் நண்பரே!
Blogger ஜாலிஜம்பர் said...
ReplyDelete//சிறையில் கொடுக்கப்படும் களி என்கின்ற பொருளில்தான் மதிப்பிற்குரிய முதல்வர் கூறியிருக்கிறார்//
களி என்ற வார்த்தையை முதல்வர் கலைஞர் நிச்சயம் பயன்படுத்த மாட்டார். தினமலரின் சில்லறைத்தனமான திரிப்பு தான் அந்தத்தலைப்பு.//////
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger RAJA said...
ReplyDeleteகலைஞரின் கருத்தல்ல! தாய்மைக்கு அங்கீகாரம் சேர்க்கும் செயலை சிறுமைப் படுத்தும்.தினமலரின் கருத்து.
அன்புடன்
இராசகோபால்.//////
நன்றி கோபால்!
ஏன் வாத்தியாரே! எண்சோதிடத்தில புள்ளிராஜா பெயரை பள்ளிராஜா என மாத்தினா ப்லன் எப்படி இருக்கும்?
ReplyDeleteபுள்ளிராஜா
"பார்ப்பனையும் பாம்பையும் ஒருங்கே கண்டால் பாம்பை விடு பாப்பனை அடி" என பெரியார் சொன்னது எவ்வளவு உண்மையானது பெரியார் பெரியார்தான். அவர் சிந்தனைகள் பெரியவை, மணிதர்களை உய்த்து அறிந்தவர்.
ReplyDeleteதடை செய்த இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறல்ல என்பது, பொட சட்டத்தில் உச்ச நீதிமண்றத்தினால் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு சொல்லப்ட்ட காரணம். இது இந்த பெரியவருக்கு தெரியவில்லையா? அல்லது இந்திய உச்சநீதிமண்றையே இப்பெரியவர் அவமதிக்கிறாரா
ReplyDeleteசெய்திகளை திரித்துப் போடும்,
ReplyDeleteஅதில் தங்கள் விஷத்தைக் கலந்து கொடுக்கும்,முக்கியமாக ஈழம் பற்றிய,
தமிழ்,தமிழினத் தலைவர்கள் பற்றிய
செய்திகளை திரித்துக் கொடுக்கும்
தினமலர்,துக்ளக்,இந்து இவற்றில் சுப்பையா அய்யா போன்ற பல் தமிழர்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.
இந்து இது வரை பிரபாகரனை எத்தனை முறை கொன்று படம் போட்டிருக்கிறது தெரியுமா?
///Blogger pulliraaja said...
ReplyDeleteஏன் வாத்தியாரே! எண்சோதிடத்தில புள்ளிராஜா பெயரை பள்ளிராஜா என மாத்தினா பலன் எப்படி இருக்கும்?
புள்ளிராஜா/////
எப்படி மாற்றினாலும் விழுந்த புள்ளி போகாது:-)))))
////////Blogger Thamizhan said...
ReplyDeleteசெய்திகளை திரித்துப் போடும்,
அதில் தங்கள் விஷத்தைக் கலந்து கொடுக்கும்,முக்கியமாக ஈழம் பற்றிய,
தமிழ்,தமிழினத் தலைவர்கள் பற்றிய
செய்திகளை திரித்துக் கொடுக்கும்
தினமலர்,துக்ளக்,இந்து இவற்றில் சுப்பையா அய்யா போன்ற பல் தமிழர்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.
இந்து இது வரை பிரபாகரனை எத்தனை முறை கொன்று படம் போட்டிருக்கிறது தெரியுமா?///////
பயணத்தில் பேருந்தையும், ஓட்டுனரையும் நம்பித்தான் பயணிக்கிறோம்!
பத்திரிக்கைகளையும் அப்படித்தான் நம்பிப் படிக்கின்றோம் நண்பரே!
இப்போது பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் சார்புடையவை ஆகிவிட்டன!
அதுதான் சோகம்!
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்களை அறிகின்ற உங்களுக்கு அருகில் உள்ள தினமலரின் விசம் புரியவில்லை என்றால் இதுதான் சார் 2008 இன் சிறந்த ஜோக்.
ReplyDeleteஈழத் தமிழர்கள் குறித்து ஒரு பதிவுகூட நீங்கள் போட்டதில்லை. அது குறித்து யாரும் புகார் கூற வரவில்லை.
ஆனா தினமலரில் குளிர்காய நினைக்கும் உங்களை எப்படி அழைப்பது?
'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை ...............
////Blogger Q Branch said...
ReplyDeleteபல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்களை அறிகின்ற உங்களுக்கு அருகில் உள்ள தினமலரின் விசம் புரியவில்லை என்றால் இதுதான் சார் 2008 இன் சிறந்த ஜோக்.
ஈழத் தமிழர்கள் குறித்து ஒரு பதிவுகூட நீங்கள் போட்டதில்லை. அது குறித்து யாரும் புகார் கூற வரவில்லை.
ஆனா தினமலரில் குளிர்காய நினைக்கும் உங்களை எப்படி அழைப்பது?
'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை ...............//////
Q Branch என்கின்ற ஒற்றைச் சொல்லில் ஒளிந்து கொண்டு அடுத்தவரைக் கேள்வி கேட்காமல் முழு அடையாளத்துடன் வாருங்கள் பதில் சொல்கிறேன்....என் இனிய நண்பரே!:-)))))))))