மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
26.12.08
பள்ளிக்கூட நகைச்சுவைகள்
பள்ளிக்கூட நகைச்சுவைகள்
காட்சி 1
நகரப் பேருந்து. பள்ளிக்கூட வாத்தியார் ஒருவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே நல்ல கூட்டம். நெருக்கடி.
பல கல்லூரிக் காளைகள் படியில் தொற்றிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
படி எதிரே உள்ள ஒரு எழுத்து வாசகம் மிக அழகாக படிப்பயணத்தை
எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.
"படியில் பயணம்
நொடியில் மரணம்!
அதையும் மீறிப் படியில் பயணிப்பவர்களை, நடத்துனர் எச்சரிக்கை செய்தும்,
அவர்கள் கேட்டபாடில்லை. கோபம் கொண்ட அவர் கிண்டலாக இப்படிச்
சொன்னார்.
"என்னம்மா கண்ணுங்களா, எல்லாரும் வீட்டில சொல்லிட்டு வந்திட்டீங்களா?"
அவர்கள் சளைத்தவர்களா?
அதில் ஒருவன் சொன்னான்,"ஆ...சொல்லாம வருவமா? சொல்லிட்டுத்தான்
வந்திருக்கோம். பின்னாடிப் பாரு நம்மளை பாலோ பண்ணி வந்திக்கிட்டிருக்கில்ல
ஆம்புலன்ஸ் அதுவும் நாங்க சொல்லித்தான் பின்னாடி வந்திக்கிட்டிருக்கு!"
உடனே நடத்துனர் அதிரடியாக இப்ப்டிச் சொன்னார்:
"ஓ, அப்ப சங்கு ஊதுரவனுக்கு மட்டும் சொன்னாப் போதும் - இல்லையா?"
பேருந்தில் கொல்லென்று சிரிப்பு
அடடா! என்னே நகைச்சுவை உணர்வு.
---------------------------------
காட்சி 2
ஒவ்வொரு நாளும் காலையில், வகுப்புத் துவங்கு முன்பாக கரும்பலகையில்
பொன்மொழி ஒன்றை அல்லது மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வாசகம்
ஒன்றை எழுதி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் உத்தரவு
போட்டிருந்தார்.
தினம் ஒரு பொன்மொழியா - அதற்கு எங்கே போவது என்று வகுப்பு
ஆசிரியர் கவலையில் மூழ்கினார்.
அவர் வகுப்புக் கண்மணி ஒருவன், "சார் கவலைப் படாதீர்கள். உங்கள்
பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று புது மண்டபத்தில் உள்ள
பழைய புத்தகக் கடையில் இருந்து பொன்மொழிக்களஞ்சியம் என்ற புத்தகம்
ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அதிலிருந்து தினம் ஒன்றைப் படித்து
அல்லது பிடித்துக் கரும்பலகையில் எழுதிச் சமாளித்து விடுவதை
அவர் வழக்கமாக்கிக் கொண்டார்.
அன்று போதாத காலம் குறித்துக் கொண்டு வரவில்லை.
என்ன செய்யலாம் என்று வாத்தியார் யோசித்தார்
.
பேருந்தில் படித்த வாசகம் நினைவிற்கு வர, அதையே எழுதிவிட்டார்.
"படியில் பயணம்
நொடியில் மரணம்!
----------------------------
காட்சி 3
தலைமை ஆசிரியர் அழைத்திருந்ததால், அவரைப் பார்த்துவிட்டு ஐந்து
நிமிடங்களில் வகுப்பிற்குத் திரும்பி வந்தார் வாத்தியார்
.
என்ன நினைத்தாரோ அது நடந்து விட்டது!
எவனோ ஒரு கண்மணி, அவர் எழுதியிருந்த அந்த வாசகங்களுக்கு கீழே
அடிக்குறிப்பு ஒன்றை எழுதி விட்டான்!
நீங்களே பாருங்கள்:
"படியில் பயணம்
நொடியில் மரணம் :
"பிடியில் கவனம்
போகுமே மரணம்!"
அதாவது நல்லாக் கம்பியைக் கெட்டியாப் பிடித்துக்கொண்டு படியில் பயணம் செய்!
எப்படி மரணம் வரும்? வந்தாலும், பிடித்திருக்கும் பிடியைப் பார்த்துவிட்டு அது
ஓடிப்போய்விடும் என்று பொருள்பட மாணவன் எழுதியிருந்தான்.
இது போல எது செய்தாலும் அதுக்கொரு அடிக்குறிப்பு வைத்திருக்கிற
மாணவர்களை வைத்துக் கொண்டு ஒரு வாத்தியார் எப்படிப் பாடம் நடத்துவார்?
நீங்களே சொல்லுங்கள்!
காட்சி 4
தலைமை ஆசிரியர் சொன்ன தீர்ப்பு!
வகுப்பில் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, காச்சு மூச்சென்று
ஒரே சத்தம்!
அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அதைக்கேட்டு,
திடிரென்று வகுப்பிற்குள் நுழைந்து விட்டார்.
கப் சிப்பென்று சப்த நாடிகளும் ஒடுங்க, சப்தம் ஒரே வினாடியில் அடங்கி விட்டது
எல்லாப் பையன்களும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னார்கள்.
அதெல்லாம் சரியாகச் செய்து விடுவார்கள்.
கலாய்ப்பது வகுப்பு ஆசிரியரை மட்டும்தான்!
தலைமை ஆசிரியர் கணீரென்று குரல் கொடுத்துக் கேட்டார்
"என்னய்யா சண்டை? ஒரே சத்தமாக இருக்கிறது?"
"அதெல்லாம் ஒரு சண்டையும் இல்லை சார்! விவாத மேடை வகுப்பு - அதான்
பிள்ளை களோடு சேர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தேன்" என்றார் வாத்தியார்
உடனே தலைமை ஆசிரியர் கேட்டார், "தலைப்பு என்ன?"
"தலைப்பு பெரிசா ஒன்னுமில்லை சார்! சண்டைங்கிற சொல்லிற்கு இரண்டு சுழி 'ன'
போடுவதா அல்லது மூன்று சுழி 'ண' என்பது பற்றித்தான் விவாதம்"
"இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது? சின்னச் சண்டையாக இருந்தால்
இரண்டு சுழி 'ன' போடுங்கள் - அதுவே பெரிய சண்டையாக இருந்தால் மூன்று
சுழி 'ண' போடுங்கள்!" என்று சொன்னவர், டக் கென்று வகுப்பை விட்டு
வெளியேறி விட்டார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெகு நாட்களுக்கு முன்பு எனது பல்சுவைப் பதிவில் பதிவிட்டது.
இன்று வகுப்பறையில் நிறையப் புதுமுகங்கள். அனைவரும் படித்து மகிழ
இங்கே பதிவிட்டுள்ளேன்
வாழ்க வளமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
தினமலரின் விரமணி பற்றிய செய்தி
ReplyDeleteஉங்கள் பதிவை சூடான பதிவாய் மாற்றியுள்ளது.
கழகp பதிவர்கள் அனைவரும் வந்துள்ளனர்.
ஒரே நாளில் இரண்டு பதிவா...
ReplyDeleteவகுப்பறை நகைச்சுவைகள் அனைத்தும் அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாத்தியாரே!
ReplyDeleteபள்ளிக்கூடம் என்கிறது..... சின்னப்பசங்க புத்தகத்தை தூக்கிக்கொண்டு காலையில போய்... அதுவா?
இப்படியெல்லாம் நடக்குமா...... தெரியமா போயிடுச்சு. அங்கே டீச்சரும் இருக்குங்களா???????????
புள்ளிராஜா
Blogger புரட்சித் தமிழன் said...
ReplyDeleteதினமலரின் விரமணி பற்றிய செய்தி
உங்கள் பதிவை சூடான பதிவாய் மாற்றியுள்ளது.
கழகp பதிவர்கள் அனைவரும் வந்துள்ளனர்.//////
கழகப் பதிவர்கள் அனைவரும் எனது நண்பர்களே! நன்றாக வரட்டும்
எனது சகோதரர் முரசொலி நாளிதழில் சுமார் 20 ஆண்டுகள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
எனக்கு அரசியலில் ஈடுபாடுகிடையாது. கழகத் தலைவர்களின் சொல்லாற்றலில் ஈடுபாடு உள்ளவன்
Blogger வேலன். said...
ReplyDeleteஒரே நாளில் இரண்டு பதிவா...
வகுப்பறை நகைச்சுவைகள் அனைத்தும் அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.///////
தவறு. இன்று மூன்று பதிவுகள்!
/////Blogger Pulliraj said...
ReplyDeleteவாத்தியாரே!
பள்ளிக்கூடம் என்கிறது..... சின்னப்பசங்க புத்தகத்தை தூக்கிக்கொண்டு காலையில போய்... அதுவா?
இப்படியெல்லாம் நடக்குமா...... தெரியமா போயிடுச்சு. அங்கே டீச்சரும் இருக்குங்களா???????????
புள்ளிராஜா////////
புள்ளி வந்ததில் எல்லாம் மறந்து விட்டதா?:-)))))
Super...why suddenly snacks with hot news with add on comedy!!!!
ReplyDelete-Shankar
வணக்கம் வாத்தியார் அய்யா
ReplyDeleteஉங்களது பதிவுகள் அனைத்தையும் படித்துள்ளேன். என் பெயரில் பிளாக் இல்லாததால் இதுவரை பின்னூட்டம் போடவில்லை.
நகைச்சுவைகள் அனைத்தும் அருமை அய்யா..
என்னுடைய blog
http://raghavannigeria.blogspot.com/
தங்களுக்கு நேரம் கிடைத்தால், வந்து வாழ்த்துங்களேன்
புது மண்டபம்?
ReplyDelete/////Blogger hotcat said...
ReplyDeleteSuper...why suddenly snacks with hot news with add on comedy!!!!
-Shankar////
To serve you with different dishes!:-))))))))
//////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் அய்யா
உங்களது பதிவுகள் அனைத்தையும் படித்துள்ளேன். என் பெயரில் பிளாக் இல்லாததால் இதுவரை பின்னூட்டம் போடவில்லை.
நகைச்சுவைகள் அனைத்தும் அருமை அய்யா..
என்னுடைய blog
http://raghavannigeria.blogspot.com/
தங்களுக்கு நேரம் கிடைத்தால், வந்து வாழ்த்துங்களேன்///////
நன்றி நண்பரே! பார்க்கிறேன்
வாழ்க உங்கள் தமிழ் ஆர்வம். வளர்க உங்கள் எழுத்துப் பணி!
//////Blogger ஆட்காட்டி1 said...
ReplyDeleteபுது மண்டபம்?////
பழைய மண்டபம்!
வர்ணத்துடன்!!!!!!!!:-)))))
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்