மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.5.08

பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1


====================================================

ஜோதிடக் கட்டுரை 2

உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1

வியாபார நிமித்தமாக அடிக்கடி பேருந்திலும், ரயிலிலும் பயணிக்கும் பழக்கம் உண்டு.
இப்போதல்ல. அது முன்பு! பயணம் என்றால் பத்து மணி நேரம் முதல் இருபது மணி
நேரம் வரை பயணிக்க வேண்டும்

அவ்வாறு பயணிக்கும்போது,படிப்பதற்காக புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக்கொள்வேன்.

இளைஞனாக இருந்த காலத்தில், James Hadley Chase அல்லது Jeffery Archer புத்தகம்
ஒன்றை எடுத்துக் கொள்வேன். பெரும்பாலும் விலைக்கு வாங்கியதாகவோ அல்லது
நண்பர்கள் கொடுத்ததாகவோ இருக்கும். மணிக்கு முப்பது பக்கம் என்ற அளவில் அதை
முழுதாகப் படித்து விடுவேன். மேலோட்டமான படிப்பு அல்ல! முழுதாக உள்வாங்கி
ரசித்துப் படிக்கும் பழக்கம்.

பின்பு ஒரு காலகட்டத்தில், ஆன்மிகப் புத்தகங்களுக்கும், ஜோதிட நூல்களுக்கும் முக்கியம்
கொடுத்துப் படிக்க ஆரம்பித்தபோது, புதினங்கள் படிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டேன்.

ஜோதிட நூல்களைப்போலவே, ஜோதிட மாத இதழ்களையும் விரும்பி வாங்கிப் படிக்கத்
துவங்கினேன். Indian Expressன் Star Teller, Astrological Magazine ஆகிய ஜோதிட இதழ்களில்,
பிரபலமான ஜோதிட வல்லுனர்களான P.S Ayer, K.S.Rao, N.Sundararajan, Dr.V.P.Shukla,
V.S.Kalyanaraman போன்றோர்களின் கட்டுரைகள் அசத்தலாக இருக்கும் அதுபோல
அதன் ஆசிரியர் B.Venkatraman அவர்களின் கேள்வி பதில் பகுதி விறுவிறுப்பாக இருக்கும்.

Your Technical Difficulties Solved என்ற பகுதியில் ஜோதிடம் அறிந்த தங்களுடைய
வாசர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அனுப்பிய ஜாதகக் குறிப்பையும்
அருகிலேயே கொடுத்துப் பதிலையும் கச்சிதமாகச் சொல்லியிருப்பார் அவர். தொடர்ந்து
படிக்கும் வாசகர்கள், அந்தக்கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் என்று கொடுக்கப்
பட்டிருக்கும் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து பார்த்து யோசித்துவிட்டு, தங்கள் பதில்
அவருடைய பதிலுடன் ஒத்துப்போகிறதா என்று பார்ப்பது வழக்கம்.

சரியாக இருந்துவிட்டால் ஒரு சந்தோஷம் ஏற்படும் பாருங்கள், அதற்கு ஈடு இணையே
கிடையாது. சரியாக இல்லையென்றாலும், என்ன காரணத்தினால் அது தவறாகிவிட்டது
என்று நமது கணிப்பைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை அது ஏற்படுத்தும். அந்த
வகையிலும் அது மகிழ்வையே தரும். பல வாசகர்களின் ஜோதிட அறிவு வளர்ந்ததற்கு
அவருடைய எழுத்துக்களே காரணம்.

உதாரணத்திற்கு ஒன்றைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்:


=========================================================
இவ்வாறு மனம் ஒன்றியும், முனைப்புடனும் படிக்கும்போது நேரம் போவது தெரியாது.

பஸ்ஸில், அருகில் அமர்ந்திருப்பவரால் ஒன்றும் சிரமம் ஏற்படாது. ஆனால் ரயிலில்
பயணிக்கும்போது, உடன் பயணிக்கும் சக பயணிகள் சும்மா இருக்கமாட்டார்கள்.
ஆர்வத்துடன் பேச்சுக்கொடுப்பார்கள். அவர்களைத் தவிர்க்க முடியாது. புத்தகத்தை
மூடி வைத்துவிட்டு அவர்களுடன் தொடர்ந்து பேசும்படி ஆகிவிடும். அதிலும் ஒரு
லயிப்பு இருக்கும். ஆகவே சங்கடமின்றி அரட்டை அடிப்பது வழக்கம்.

அப்படி அரட்டை அடிப்பதிலும் பல சுவையான அனுபவங்களும், செய்திகளும்
கிடைக்கும். சில சமயம் நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களும் பயணிப்பார்கள். அவர்களுடன்
பல தகவல்களைக் கேட்டுப்பெற்ற அனுபவமும் எனக்கு உண்டு.

அப்படிக் கிடைத்ததுதான் நான் உங்களுக்கு விவரித்துச் சொன்ன சனீஸ்வரன் படித்த
பள்ளிக்கூடக் கதை!
--------------------------------------------------------------------------------------------------
பொதுவாக, ஜோதிடம் அறிந்தவர் நீங்கள் என்பது தெரிந்தால், அவர்களுக்கு உங்கள்
மேல் பத்து மடங்கு ஆர்வமும், மரியாதையும் டக்கென்று ஏற்பட்டுவிடும். இது நான்
பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (அதனால், பின்னால் பல அசெளகரியமும் ஏற்படும்
- அது தனிக்கதை!)

எல்லோரும் கேட்கக்கூடிய ஒரு பொதுக்கேள்வி உண்டு!

“நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். யார்தான் கஷ்டப்படவில்லை
என்று சொல்லாதீர்கள்! என் கஷ்டம் என்னைத் தொடர்ந்து வாட்டிக்கொண்டிருக்கிறது.
அது தீருமா? அல்லது தீராதா?”

என்று சொல்லியவாறு, தன் சட்டைப்பையில் தயாராக வைத்திருக்கும் தன்னுடைய
ஜாதகத்தை எடுத்து நீட்டிவிடுவார்கள்.

கஷ்டங்கள் இரண்டு வகைப்படும்.

சொத்துக்கள் இரண்டு வகைப்படுவதைப்போல - அதாவது அசையும் சொத்து, அசையாத
சொத்து என்று - இரண்டு வகைப்படுவதைப்போல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்

அவை என்னென்ன? அவைகளுக்குத் தீர்வு உண்டா? அவற்றின் தீர்வு காலத்தை - அதாவது
அவைகள் நீங்கும் காலத்தை நம் ஜாதகத்தைப் பார்த்து நாமே அறிய முடியுமா?

முடியும்!!!

அவற்றை உங்களுக்குச் சொல்லித் தருவதற்குத்தான் இந்தக் கட்டுரைத் தொடர். சற்று
நீண்ட தொடர். விவரமாக எழுத உள்ளேன்; பொறுமையாகப் படியுங்கள்!

(தொடரும்)
---------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

23 comments:

  1. அனானி நண்பரே!
    காத்துக்கொண்டிருக்கிறேனிற்குக் கீழே உங்கள் பெயரை எழுதியிருக்கலாமே?

    ReplyDelete
  2. முதல் வகுப்பு. உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  3. ஆஹா, அருமை.

    SKumar

    ReplyDelete
  4. பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் அய்யா. தொடருங்கள்.

    ReplyDelete
  5. /////திவா said...
    முதல் வகுப்பு. உள்ளேன் ஐயா!////

    அடுத்த வகுப்பு இன்று மாலை!

    ReplyDelete
  6. ////Anonymous said...
    ஆஹா, அருமை.
    SKumar//////

    எது தலைப்பா?

    ReplyDelete
  7. ///////அமர பாரதி said...
    பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் அய்யா. தொடருங்கள்./////

    பொறுமையைச் சோதிக்காமல் அடுத்த வகுப்பு இன்று மாலை!

    ReplyDelete
  8. /////aravindaan said...
    looking forward../////

    நன்றி மிஸ்டர் அரவிந்தன்!

    ReplyDelete
  9. சுப்பையா சார், மீண்டும் ஜோதிட வகுப்புக்கு வருவதில் சந்தோஷம். வெகு ஆதரவாக எழுதுகிறீர்கள்.
    எல்லாப் பதிவுகளையும் ஒழுங்காகப் படிக்க கடவுள் சித்தம் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  10. நேத்து ஸ்கூல் 'லீவ்'னு நேனைச்சி வராமல் இருந்துட்டேன்... என்ன விட்டுடிங்களே....

    ReplyDelete
  11. பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் அய்யா. தொடருங்கள்.

    //அடுத்த வகுப்பு இன்று மாலை!
    //

    குறித்து கொண்டேன்.

    ReplyDelete
  12. மாணவியாய் நானும் !

    (உங்களை என் கட்டுரைக்கதம்பசரத்தில் இணைத்தேனே படித்தீர்களா?) ஷைலஜா

    ReplyDelete
  13. நல்ல முயற்சி.தொடருங்கள்.
    என்னுடைய கேள்விகள் கிடைத்தனவா?
    நன்றி.

    ReplyDelete
  14. ///////Blogger வல்லிசிம்ஹன் said...
    சுப்பையா சார், மீண்டும் ஜோதிட வகுப்புக்கு வருவதில் சந்தோஷம். வெகு ஆதரவாக எழுதுகிறீர்கள்.
    எல்லாப் பதிவுகளையும் ஒழுங்காகப் படிக்க கடவுள் சித்தம் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.////

    ஆகா வாருங்கள் சகோதரி! உங்களுக்காகத்தான் வினாயகர் படத்தைப் போட்டிருக்கிறேன். அவர் பார்த்துக்கொள்வார். அவருடைய சித்தம் எழுதும் எனக்கும் உண்டு; படிக்கும் அனைவருக்கும் உண்டு!

    ReplyDelete
  15. //////Anonymous விக்னேஸ்வரன் said...
    நேத்து ஸ்கூல் 'லீவ்'னு நேனைச்சி வராமல் இருந்துட்டேன்... என்ன விட்டுடிங்களே..../////

    லீவு நாளில்தான் இங்கே சுறுசுறுப்பாகப் பாடம் நடக்கும் நண்பரே!

    ReplyDelete
  16. /////////Blogger ஷைலஜா said...
    மாணவியாய் நானும் !/////

    ஆகா வாருங்கள் கவிதாயினி! உங்களுக்கு இல்லாத இடமா?

    ///// (உங்களை என் கட்டுரைக்கதம்பசரத்தில் இணைத்தேனே படித்தீர்களா?) ஷைலஜா////

    இல்லை, பார்க்கவில்லையே சகோதரி! சுட்டியைக்கொடுங்களேன்!

    ReplyDelete
  17. ////////Blogger அறிவன்#11802717200764379909 said...
    நல்ல முயற்சி.தொடருங்கள்.
    என்னுடைய கேள்விகள் கிடைத்தனவா?
    நன்றி./////

    வாருங்கள் சிங்கைக்காரரே! உங்கள் கேள்விகள் கிடைக்கவில்லையே? எதைச் சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  18. /////Blogger ambi said...
    பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் அய்யா. தொடருங்கள்.

    //அடுத்த வகுப்பு இன்று மாலை!
    //

    குறித்து கொண்டேன்.////
    வாருங்கள் அம்பி! படத்தில் மிகவும் குட்டியாக இருக்கிறீர்களே!

    ReplyDelete
  19. தங்களின் பாடத்தை எதிர்பார்த்து காத்துள்ளேன்

    ReplyDelete
  20. Blogger SP.VR. SUBBIAH said...

    //////நெல்வேலி கார்த்திக் said...
    தங்களின் ஜோதிடப் பாடங்கள் மீண்டும் சுவையுடன் படிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு மாணவர்களுக்கு அருமை.தங்கள் வருகை பதிவில் என்னை சேர்த்தற்கு நன்றி./////

    சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவுகளுக்குத் தொடர்ந்து வந்தவர்களின் பெயரை வருகைப் பதிவேட்டில்
    சேர்த்துள்ளேன். இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியது உள்ளது! அவர்களாகத் தெரிவிப்பார்களா என்று பார்க்கிறேன்! பலர் இன்னும் சொல்லவில்லை

    Tuesday, May 13, 2008 9:48:00 AM
    அய்யா,
    நானும் உங்களுடைய சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவைப் படித்து மிக மகிழ்ந்தேன். தற்போது முழுமையையும் விடாது படித்ததால் சஸ்பென்ஸ் கவலை இல்லாது ரசித்துப் படிக்க முடிந்தது. இது மாதிரிப் பதிவுகளை தொடர்ந்து செய்யுங்கள்.
    அருணாசலம், கோட்டையூர்.

    ReplyDelete
  21. //////Blogger VCTALAR said...
    Blogger SP.VR. SUBBIAH said...
    //////நெல்வேலி கார்த்திக் said... தங்களின் ஜோதிடப் பாடங்கள் மீண்டும் சுவையுடன் படிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு மாணவர்களுக்கு அருமை.தங்கள் வருகை பதிவில் என்னை சேர்த்தற்கு நன்றி./////
    சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவுகளுக்குத் தொடர்ந்து வந்தவர்களின் பெயரை வருகைப் பதிவேட்டில்
    சேர்த்துள்ளேன். இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியது உள்ளது! அவர்களாகத் தெரிவிப்பார்களா என்று பார்க்கிறேன்! பலர் இன்னும் சொல்லவில்லை/////
    அய்யா,
    நானும் உங்களுடைய சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவைப் படித்து மிக மகிழ்ந்தேன். தற்போது முழுமையையும் விடாது படித்ததால் சஸ்பென்ஸ் கவலை இல்லாது ரசித்துப் படிக்க முடிந்தது. இது மாதிரிப் பதிவுகளை தொடர்ந்து செய்யுங்கள்.
    அருணாசலம், கோட்டையூர்.//////

    தொடர்ந்து விறுவிறுப்பான கதைகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இதுவரை 80 சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். அவற்றில் 60 சிறுகதைகளைத் தொகுத்து ‘செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்” என்ற தலைப்பில் 3 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளேன். அவற்றை எல்லாம் நேரம் கிடைக்கும் போது வாங்கிப் படியுங்கள். என்னுடைய வலைப்பதிவின் (Blog) சைடு பாரில் அதற்கான விவரங்கள் உள்ளன!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com